முயற்சி
அது ஒரு பெரிய மருத்துவமனை ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு ப்ளாக் என்று மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.அதனுள்ளே நூழைந்த மதுமிதாவின் கால்கள் நேராக ரிசப்ஷெனிற்குள் நுழைந்து," டாக்டர். ஷர்மிளா...எந்த ப்ளாக்?"
" அப்பாய்ன்மென்ட் இருக்கா மேம்?"
"இல்லை நான் அவங்க ப்ரெண்ட் அவங்களை பார்கனும் அல்ரெடி இன்ஃபார்ம் பண்ணிடேன்."
" ஓ ....ஓகே மேம் செகன்ட் ப்ளோர் மூனாவது ப்ளாக்."
" தேங்க்ஸ்."என்றவாறு லிப்டை நோக்கி சென்றாள் மது அவள் மனதில் அவளது செயல் சரிதானா என்று பல கேள்விகள் எழுந்த நிலையிலும் அவற்றை புறம் தள்ளியவள் டாக்டர்.ஷர்மிளா என்ற எழுத்துக்கள் மின்னிய கதவறுகே சென்றாள்.வாசலில் இருந்த பெண் அவளை கேள்வியாக நோக்க தன் விசிடிங் கார்டை எடுத்தவள் ," இத டாக்டர் கிட்ட கொடுங்க," என்று கூறி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.
சிறிது நேரத்தில் அவளை உள்ளே செல்லுமாறு அந்த பெண் கூற சிறு தலையசைப்புடன் உள்ளே நுழைந்தாள்.
" ஹாய்....மது வாட் அ ஸர்பரைஸ் ," என்று கூறிய ஷர்மிளா அவள் அமர இடத்தை காட்டினாள்.
ஒரு சிறு புன்னகை யுடன் அவளது அழைப்பை ஏற்றுக்கொண்ட மது அந்த இருக்கையில் அமர்ந்தவாறு,"எப்படி இருக்கிற ஷர்மி??"
" ம்...நான் ஃபைன் மது நீ எப்படி இருக்கிற என்ன திடீருனு ?இந்த பக்கம்?"
" ம் .....ஃபைன் ஷர்மி."
" சொல்லு மது வாட் இஸ் ஈடிங் யூ( what is eating you?),"
" நீ சைக்கியாட்ரிஸ்ட்னு ப்ரூவ் பண்றியா? இல்லை உன்னை பார்க்க வரவங்க ப்ராம்ளமோட தான் வரனுமா?"
" ஹா...ஹா...நல்லா ட்ரை பண்ற மது. நம்ம மீட் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு திடீருனு இன்னைக்கு மீட் பண்லாமானு கேட்குற அதுக்குமேல ஹாஸ்பிடல்ல மீட் பண்ணா கூட பரவாயில்லை னு சொல்ற , வந்ததுக்கு அப்பறமா கூட நீ எடுத்த முடிவு சரியானு யோசனை யிலயே இருக்க, இதெல்லாம் புரிய நான் சைக்கியாட்ரிஸ்டா இருக்கனும் னு அவசியம் இல்லை மது."
" தெய்வமே தெரியாம கேட்டுட்டேன்.." என்று இரு கைகளையும் மேலே தூக்கி கும்மிடுவது போல காட்டிய மது,"உன்னை ஐ மீன் ஒரு சைக்கியாட்ரிஸ்ட கண்டிப்பா பார்கனும்னுலாம் உன்னை பார்க்க வரலை சொல்லபோன உன் விசிடிங் கார்டையே இன்னைக்கு தான் பார்த்தேன் அப்பறம் மனசுல இருந்த குழப்பங்கள் சரி உன்கிட்ட பேசுனா கொஞ்சம் ரிலீஃப் கிடைக்குமேனு தோனுச்சு அவ்ளோதான்."
" குட் மது என்னாச்சு சொல்லு."
"ம்.......,"ஒரு பெருமூச்சுடன் தொடங்கிய மது நான்கறை வருடங்களுக்கு முன் நடந்த விபத்திலிருந்து இன்று வரை தனக்கு தெரிந்த அனைத்தையும் கூறி முடித்தாள்.
அவள் முடிப்பது வரை அமைதியாக காத்திருந்த ஷர்மி அவளை நோக்கி," இப்ப உனக்கு என்ன பிரச்சினை மது??"நிதானமாக வெளி வந்தது ஷர்மிளாவின் குரல்.
அவளை விட நிதானமாக ," பெருசா எதுவும் இல்லை எனக்கு அந்த நாலு வருஷத்தில நடந்தது எதுவும் நியாபகம் இல்லை அவ்ளோதான் சோ சிம்பிள்."
" ஹா..ஹா....ஹா...." உறக்க சிரித்த ஷர்மியை ஒரு மென்னகையுடன் பார்த்த மது," இவ்ளோ சிரிக்கிற அளவு இப்ப நான் என்ன சொல்லிட்டேன் ஷர்மி?"
" மது..மது...நீ மாறவேயில்லை ஸ்கூல் படிக்கும்போது எவ்ளோ கூல் கேர்ளா இருந்தியோ அதே மாதிரி இப்பவும் இருக்க."
" நீ பாராட்டுறியா இல்லை திட்டுறியா னு எனக்கு புரியலை ஷர்மி ," என்று கூறியவள் மேலும் தொடர்ந்தாள்," என்னோட கனவு பிசினஸ் தான் அப்பாவோட பிசினஸை அழகா திறம்பட நடத்தனும்.அதுக்கு நான் யூ.ஜி கோர்ஸ் படிச்சிகிட்டு இருந்தேன்.இரண்டாவது வருஷம் படிக்கும்போது தான் எனக்கு ஆக்ஸிடென்ட் ஆச்சு நாலு வருஷம் அப்பறமா ஞாபகம் வருது பார்த்தா நான் இண்டீரியர் டிசைன் கோர்ஸ் முடிச்சிட்டேனு சொல்றாங்க. இப்ப என் நினைவில இருக்கிறது யூ.ஜி கோர்ஸோட ஆரம்பம் மட்டும் தான்.ஆனா என் கைலயோ இண்டீரியல் டிசைனரோட சர்டிபிகேட். செம நிலைமைல???"என்று கூறிய தன் தோழியை ஆற்றாமையுடன் பார்த்த ஷர்மி அந்த பரிதாபம் தன் கண்களில் வெளிப்படா வண்ணம்," உனக்கு ஞாபகம் வரவே வராதுனு லாம் சொல்ல முடியாது மது.வரும் ஆனால் எப்ப வரும்னு தான் சொல்ல முடியாது."
" அது எனக்கு புரியுது ஷர்மி பட் என்னோட மனநிலை தான் ரொம்ப குழப்பமா இருக்கு யாரை நம்புறது எதுவும் புரியலை. எல்லாத்தைவிட முக்கியமா...."
" முக்கியமா......?? சொல்லு மது ஏன் தயங்குற?"
" ம்.........ஆதித்யன் யாருனு தெரியனும்.நான் அவனை காதலிச்சேனா? இல்லை சந்தர்ப்ப சூழ்நிலை காரணமா கல்யாணம் பண்ணிகிட்டேனா? எதுவும் புரியலை அவனை பத்தின எண்ணம்தான் மனச போட்டு குடையுது."
அவள் கூறி முடிக்கவும் அவளது கைபேசி அழைக்கவும் சரியாக இருந்தது.அதில் மின்னிய பெயரை பார்த்த மது நிமிர்ந்து ஷர்மியை நோக்கி தன் செல்பேசியை எடுத்து காட்ட அதில் விக்ரம் என்ற பெயர் மின்னியது.
" இந்த விக்ரம் தான் நீ சொன்ன உன் கம்பெனி யோட ஜி.எம் மா?"
" ம்...ஆமா இவரு யாரு என்னனு எனக்கு தெரியலை இரண்டு நாளாதான் தெரியும்.ஆனாலும் ரொம்ப நாள் பழகுன உணர்வு கொடுக்குது.அவரும் என்கிட்ட உரிமை எடுத்துக்கிறார் அதுவும் எனக்கு வித்தியாசமா படலை.எல்லார்கிட்டயும் எட்ட நிக்கிற நான் இவருகிட்ட அப்படி இருக்க முடியலை.ஏதோ ஒரு விதமா அவரோட சொல் என்னை கட்டுபடுத்துது.இதெல்லாம் ஏன்னு எனக்கு தெரியலை.லவ் அட் பர்ஸ்ட் சைட்லயும் எனக்கு பெருசா நம்பிக்கை இல்லை.இதுதான் ஷர்மி இப்ப என்னோட நிலை இதுக்கு நான் என்ன செய்யலாம்?"
" இதுக்கு இரண்டு ஆப்ஷன் சொல்லலாம் அதாவது உன்னை நான் ஹிப்னடைஸ் பண்ணி உனக்கு என்னாச்சுனு கேட்டு தெரிஞ்சுக்கிறது இல்லைனா உனக்கு எப்ப ஞாபகம் வருதுனு வெயிட் பண்ணுறது.நீ என்ன நினைக்கிற?"
" இல்லை ஷர்மி எனக்கா ஞாபகம் வரனும்.ஹிப்னடைஸ் பண்றது எனக்கு இஷ்டம் இல்லை."
" ம்...அப்ப ஒன்னு செய் நீயா உண்மையை தேடி போ."
" என்ன சொல்ற நீ நான் என்ன தேடனும் எங்க போய் தேடனும்?"
" உனக்கு ஆக்ஸிடென்ட் ஆன அன்னைக்கு என்னாச்சுனு ஞாபகம் இருக்கா? நீ எங்க போய்கிட்டு இருந்த உன்கூட யாரு இருந்தாங்க , இந்த மாதிரி?"
ஷர்மியின் கேள்வி மதுவை நான்கறை ஆண்டு பின்னோக்கி அவளுக்கு விபத்து நடந்த தினத்திற்கு கொண்டு சென்றது.
நான்கறை ஆண்டுகளுக்கு முன் விபத்து நடந்த காலை
கோயமுத்தூரின் பறநகர் பகுதியில் அமைந்திருந்த அந்த பெரிய மாளிகை போன்ற வீட்டின் லானில் சில பெண்கள் குழுமி யாருக்காகவோ காத்திருந்தனர்.அவர்களுக்குள் சிறு சலசலப்பும் பொறுமையின்னையும் தெரிய துவங்கிய நேரம் வீட்டினுள்ளே இருந்து.
" ஹாய்........குட் மார்னிங்....." என்று முகம் நிறைய பூர்ப்புடன் அவர்களை நோக்கி வந்த மது மெரூன் நிறத்தில் நீண்ட மேக்ஸி போன்ற உடை அணிந்திருந்தாள் அதன் விலை பல ஆயிரங்கள் என்று அதன் நேர்த்தி சொல்லாமல் சொல்லியது.தலை முடியை ஃப்ரியாக விட்டிருந்தவள் காதில் பிளாட்டின வளையம் சிறு வைரக்கல் பதித்து அவளது அந்தஸ்தை எடுத்துகாட்டியது.கழுத்தில் பிளாட்டனமும் வைரமும் கலந்த செயின் அவள் அழகை மேலும் கூட்டியது.அவர்கள் முன் வந்து ஒயிலாக இடுப்பை ஒரு புறம் வளைத்து நின்றவள் தேவதை போன்ற அழகில் இருந்தாள் என்பதை உணர்ந்த அந்த பெண்கள் கூட்டம் தங்களது கண்களில் அப்பட்டமான பொறாமையை வெளிப்படுத்தியது.
அங்கிருந்த அணைத்து பெண்களும் கோடீஸ்வரர்கள் தாம் என்கிற போதும் மதுமிதாவிடம் இருக்கும் கம்பீரம் கலந்த அழகு அவர்களிடம் இல்லாமல் இருந்தது.
" வாவ்...யூ லுக் கார்ஜியஸ், மார்வலஸ்....(Gorgeous, marvellous...)இன்னும் பல சொற்கள் அவர்கள் வாயிலிருந்த வர அனைத்தும் உதட்டளவான வார்த்தை களாகவே இருந்தது.அதைகண்டுகொள்ளாத மனநிவையில் இருந்தாள் மதுமிதா.இன்று அவளுக்கு இருபதாவது பிறந்த நாள் அந்த மகிழ்ச்சியில் இருந்தவள் அவற்றை கண்டுகொள்ள வில்லை.
அந்த பெண்களில் ஒருத்தி," ஹே..மது நம்மளோட போட்டி என்னாச்சு மறந்துட்டியா??"என்று வினவ
" அதை நான் எப்படி மறப்பேன் .நான் எப்பவுமே ரெடிதான்.ஆனால் இன்னைக்கு வேணாம்.எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு."
" இதெல்லாம் போங்காட்டம் நான் ஒத்துக்க மாட்டேன்."
" ஹே...உன் கூட கார் ரேசுல ஜெயிச்சு காட்டறேனு பெட் கட்டி இருக்கேன் அது எனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கு.ஆனால் இன்னைக்கு எனக்கு ரொம்ப முக்கியமான நாள்.சோ இன்னைக்கு முடியாது நாளைக்கு நம்மை பந்தயத்தை வைச்சுக்களாம்."
" நீ தோத்திடுவனு பயப்படற அதான் ஏதேதோ காரணம் சொல்ற ."என்றவளிடம் ," புரிஞ்சுக்கோ லீலா என்னோட இருபதாவது பிறந்தநாள்ல எங்க அப்பா ஆபிஸ்ல என்னை எல்லாருக்கும் அறிமுக படுத்துறதா என்கிட்ட சொல்லியிருக்காரு அதான் தயங்குறேன்."
" அதெல்லாம் முடியாது நம்ம பந்தயம் அரை மணி நேரத்தில முடிஞ்சிடும் சோ நோ மோர் எக்ஸ்கியூஸ்.." என்றவளை சமாதானப்படுத்தி தோற்றுப்போன மது பந்தயத்திற்கு சம்மதித்தாள்.
"பந்தயத்தின் சட்டங்கள் குறிப்பிட்ட தூரம் காரை ஓட்டி சென்று மீண்டும் வீட்டிற்கே வர வேண்டும் அதற்கு அதிக பட்சமாக ஒரு மணிநேரம் கொடுக்கப்படும்.யார் குறுகிய நேரத்தில் வந்து சேர்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்." வேறொரு பெண் நிபத்தனைகளை கூறி முடிக்க விருப்பமேயில்லாமல் மது அதற்கு சம்மதித்தாள்.அந்த பயனத்தினால் மாறப்போகும் நிலையை அறியாதவளாக தன் காரில் ஏறி கோவை சென்னை பைபாஸ் நோக்கி அதி வேகமாக விரைந்தாள்.
கிளம்பி பத்து நிமிடத்திற்குள் அசுர வேகத்தில் பாய்ந்தது மதுவின் கார்.சில நொடிகளில் அவளது காரை லீலாவின் கார் முந்தியது.அவள்.முந்திவிட்ட வெறியுடன் காரை ஓட்டிய மது தனக்கு முன்னே சென்ற அம்பாஸிடர் காரை முந்த முயன்ற பொழுது கார் தூக்கி எறியப்பட்டது.
இன்று
"இதான் நடந்துச்சு ஷர்மி, நான் மட்டும் அன்னைக்கு பிடிவாதமா வர.மாட்டேனு சொல்லிருந்தா கண்டிபபா இப்படி நடந்திருக்காது."
" நீ யாரு மேலயும் மோதுனியா இல்லை உன் மேல யாரும் மோதுனாங்களா இல்லை கார் கவுந்திடுச்சா??"
"இல்லை ஷர்மி எனக்கு வேற எதுவும் ஞாபகம் இல்லை முந்த முயற்சி பண்ணேன் அவ்ளோ தான் தெரியும்."
" ம்....மது நீ உண்மையை உன் ப்ரெண்ட்ஸ் கிட்ட இருந்து ஆரம்பி.அன்னைக்கு அப்படி ஆனதும் யார் ஹாஸ்பிடல்ல சேர்த்தா? வீட்டுக்கு யாரு தகவல் சொன்னா இப்படி ஒவ்வொரு கேள்வியா உன்னையே நீ கேளு அது உண்மைகிட்ட உன்னை கூட்டிட்டு போகும்."
" தேங்க்ஸ் ஷர்மி ஒரு தெளிவான வழி காட்டிருக்க"
" எனி டைம்(anytime) மது அப்பறம் ஒரு முக்கியமான விஷயத்தை மட்டும் மறந்துடாத...தயவு செஞ்சு யாரையும் நம்பாத விக்ரம் உட்பட .உனக்கு அவரு மேல ஒரு சாப்ட் கார்னர் இருக்கலாம் அதுக்காக எவ்லாதயும் அவருகிட்ட சொல்லனும் னு அவசியம் இல்லை அன்ட் எப்ப வேணும்னாலும் தமங்காம ஒரு.கால் பண்ணு."
" தேங்க்ஸ் அகெய்ன் ஷர்மி நான் கிளம்பறேன்." என்று கூறி மருத்துவமனையை விட்டு வெளியேறினாள் மது.உள்ளே வரும்பொழுதிருந்த குழப்ப நிலை மாறி புதிதாக தெம்பி கிடைத்தது போல இருந்தது. தன் கைபேசியை எடுத்தவள் விக்ரமின் எண்களை அழுத்தினாள்.
***********
தன் கழுத்தை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த நிலா சிறுது நேத்தில் கண் அயர்ந்து விட அவளை மெதுவாக மெத்தையில் கடத்தியவன் அவளுக்கு இரு புறமும் தலையணை வைத்துவிட்டு அங்கிருந்த நர்ஸை அருகிலே இருக்க செய்தான்.
தன் மொபைலை எடுத்து சுவிட்ச் ஆன் செய்தவன் அதிலிருந்து மதுவிற்கு அழைத்தான்.அவன் அழைப்பை அவள் ஏற்காது போக ஒரு பெருமூச்சுடன் உள்ளே வைத்தவன் பின் நேரே மருத்துவரை காண சென்றவனை தடுத்த ஜீவா," எங்க போற?"
"டாக்டர பார்க்க வேணாமா?"
" எதுக்கு பார்க்கனும்"
" நிலாக்கு எப்படி இருக்குனு கேட்கனும் அவளை வீட்டுக்கு கூட்டிட்டு போகனும்."என்றவனை புன்னகையுடன் பார்த்த ஜீவா ," மதுக்கு நீ வந்ததும் காய்ச்சல் குறைஞ்சிடுச்சு இப்ப சரியாகிட்டா டாக்டரும் வீட்டுக்கு போகலாம்னு சொல்லி டாரு." என்று அவனையும் அழைத்து கொண்டு நிலா இருந்த அறை நோக்கி சென்றான்.
அங்கே நிலா கண்கள் மூடியிருக்க கைகளை மெத்தையில் தூலாவுவதை கண்டவன் கண்கள் நிறைந்தது.இந்த பிஞ்சு குழந்தையை பிரிந்திருந்ததை எண்ணி ஆயிரமாவது முறையாக தன்னையே நொந்து கொண்டவன் வேகமாக சென்று அந்த பிஞ்சு கைகளில் தன் கைகளை நுழைத்து கொண்டான்.முகத்திலிருந்த சுழிப்பு மாறி ஒரு மென்னகை தவழ அந்த குழந்தை மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்தது.
அடுத்த ஒரு மணி நேரத்தில் எல்லா வேலைகளலயும் முடித்துவிட்டு அனைவரும் வீட்டை நோக்கி சென்றனர்.சென்னையில் அவர்கள் குடி பெயர்ந்து சில வருடங்கள் ஓடி விட்ட நிலையிலும் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஆதிக்கு இன்னும் வந்திருக்கவில்லை.
வீட்டில் யாரும் இல்லாமல் வீடே வெறிச்சோடி கிடக்க தங்கள் பழைய கலகலப்பான வீட்டையும் தற்போதிருக்கும் வீட்டு நிலையையும் பார்த்தவன் மனம் வருந்தினான்.
நிலாவிற்கு தேவையானவற்றை செய்தவன் ஹாலிற்கு வர அங்கே அவன் அன்னை சோஃபாவில் அமர்ந்திருப்பதை பார்தான் அவர் அருகே சென்றவன்," அம்மா நான் கொஞ்சம் உங்க மடியில படுக்கவா," கெஞ்சும் குரலில் கேட்ட மகனை கடித்துக்கொள்ள விரும்பாத அந்த தாய்.இருவரும் தங்கள் உணர்வுகளை கட்டுபடுத்த முடியாமல் அழுகையில் கரைய முதலில் தெளிந்த ஆதி ," அம்மா....அழாதீங்க மா....." ஈன தாயை தேற்றினான்.
" எப்படிடா அழாம இருக்க முடியும். நீயும் எங்களை புரிஞ்சுக்காம தனியா போயிட்ட யாருக்கு வாழறோம் எதுக்கு வாழறோம்னே தெரியாம ஒரு வாழ்கை எங்களுக்கு தேவையா?"
" அப்படியெல்லாம் சொல்லாதீங்கமா கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாகிடும்."
" அந்த கொஞ்ச நாள் எப்ப வரும் ஆதி?"
" கூடிய சீக்கிரம் நான் எல்லாதையும் சரி பண்ணிடறேன் மா ப்ளீஸ் என்னை நம்புங்க."
" உன்னை நம்புறது இருக்கட்டும் அந்த பொண்ணு கிட்ட எல்லாதையும் சொல்லிடியா??"
"........"
" என்ன பதிலே காணோம்.வேணாம் ஆதி நீ தப்பு மேல தப்பு பண்ற," என்று அவர் கூறிக்கொண்டிருக்கும் பொழுதே ஆதியின் கைபேசியில் மதுவின் பெயர் மின்ன ஆதியை கண்டிப்புடன் பார்த்தார் அவன் அன்னை.
அன்னையின் அனல் பார்வையை சந்திக்க முடியாத ஆதியோ தலை கவிழ்ந்து செல்லை எடுத்துக்கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro