புதுமுகங்கள்
பெங்களூரின் புறநகர் பகுதியில் அமைந்திருந்த அந்த அலுவலக வளாகம் மிகப்பெரிதாக இருந்தது. அந்த பெரிய வளாகத்திற்கு பொதுவானதொரு பெரிய இரும்பு கதவு பொருத்தப்பட்டிருக்க அதற்கு இரு காவலாளிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இளஞ்சூரியனின் இதம் மறைய தொடங்கி வெயிலின் தன்மை அதிகரிக்க தொடங்கும் காலை வேளையில் அந்த அலுவலக வளாகத்தின் காவலாளிகள் ஐடி கார்டை சரிபார்த்து அங்கே ஊழியம் செய்பவர்களை மட்டும் உள்ளே அனுப்பிய வண்ணம் இருந்தனர்.
பெரிய இரும்பு கதவை தாண்டியதும் இருபது அடி தார் சாலை ஐநூறு மீட்டர் நேராக சென்று பின் மூன்றாக பிரிந்தது. ஊழியர்கள் அனைவரும் இருபுறமும் செல்லாமல் நேரான பாதையில் சென்று நடுநாயகமாக அமர்ந்திருந்த அந்த அலுவலக கட்டிடத்தை அடைந்தனர்.
ஆறு தளங்களை தன்னகத்தே கொண்டு கம்பீரமாக நின்றிருந்த அந்த அலுவலக கட்டிடத்தில் A.K.HOMES என்று பெரிய எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது.
A.K. HOMES பல வருடங்களாக இயங்கி வரும் ஒரு புகழ் பெற்ற நிறுவனம்.இவர்களின் வேலை காலி மனையை வாங்குவதிலிருந்து தொடங்கி வாடிக்கையாளர்கள் மனதறிந்து அழகிய இல்லமாக அதனைமாற்றி அவர்களிடம் ஒப்படைத்ததும் முடிவடைந்துவிடும்.
ஒரு கட்டுமானத்திற்கு தேவையான அனைத்தையும் இவர்களே செய்து விடுவர்.தரை தளத்தில் வாகனங்கள் நிறுத்துமிடத்தை நிறுவியவர்கள் முதல் தளத்தை தங்களின் சேல்ஸ் டிபார்ட்மென்டாக வடிவமைத்திருந்தனர், வீடு கட்டுவதன் முதல் படி முதல் தளத்தில் அமைந்திருந்தது. அரசாங்கத்தொடர்புகள் , அனுமதிகள் போன்றவற்றை கவனிக்க தனி குழு இரண்டாவது தளத்திலும் , வீட்டின் ஃப்ளான் மற்றும் இன்டீரியர் டிசைனிங்(plan and interior designing) மூன்றாவது தளத்திலும், கட்டுமானத்திற்கு தேவையான பணியாளர்களை நியமிக்கும் அலுவலகம் நான்காவது தளத்தாலும், கட்டுமானம் நிறைவடைந்ததும் மின்சாரம் மற்றும் நீர்நிலைகளிருந்து நீரை எடுத்து செல்ல தேவையான குழாய்கள் அமைக்கும் (electrical and plumbing) பிரிவு ஐந்தாவது தளத்திலும்.இவை அனைத்தையும் முடிவு செய்யும் அக்கவுண்ட்ஸ் மற்றும் அட்மினிஸ்ட்ரேஷன்(administration) பிரிவு ஆறாவது தளத்திலும் அமையப்பெற்றிருந்தது.
ஆறு தளங்களுக்கும் தனி தனியே மேனேஜர் மற்றும் ஜி.எம்கள் இருக்க அனைத்து ஜி. எம் களுக்கும் தலைமை ஜி.எம்.ஆறாம் தளத்தில் இருந்தார்.அவருக்கு மேலே எம்.டி மற்றும் சேர்மன் இருந்தனர் .
அலுவலகம் ஒரே நிர்வாகத்தை சேர்ததாக இருந்தாலும் ஒவ்வோறு தளத்திலிருப்பவரும் அடுத்த தளத்திலுள்ளவரை உணவு இடைவேளையில் தான் காண முடியும்.தளத்திற்கும் தளத்திற்கும் எவ்வித தொடர்பும் இருக்காது.
அந்த நிறுவனத்தின் மூன்றாம் தளத்தினுள்ளே நுழைந்து கொண்டிருந்த ஜாக் உள்ளே அமர்ந்திருந்தவளை கண்டு கண்கள் விரிய," ஹே...மீரா.....வாட் எ ப்ளெசென்ட் சர்பரைஸ் நீ எப்படி இவ்ளோ சீக்கிரமே??" என்றுவினவியபடி வேகமாக வந்து மீராவை ஆரத்தழுவிக்கொண்டாள்.
" ஏய்....நீ நெக்ஸ்ட் வீக்தானே ஜாய்ன் பண்ணணும்? என்னை பார்க்காம இருக்க முடியாம இவ்வளவு சீக்கிரம் வந்துட்டியா?"
"ஆசைதான் உனக்கு ,அம்மா இந்த வீக் என்ட் (week end)வரதா இருந்துச்சு ஆனா நேத்தே வந்துட்டாங்க, அதான் நானும் இன்னைக்கே ஜாய்ன் பண்ணிட்டேன்,"
" மெடேர்னிட்டி(maternity )லீவ் மூனு மாசம் அதுல ஒரு வாரம் நீ எக்ஸ்ட்ரா கேட்டிருந்த அதுக்குள்ள என்னடி அவசரம் குட்டீஸ் கூட.இன்னும் ஒரு.வாரம் இருந்திருக்களாம்ல,"
" இருந்திருக்களாம் தான் ஆனால் நான் இல்லாமா ஒருத்தி மூனு மாசமா கஷ்டப்பட்டுகிட்டு இருக்கா அவளுக்காக தான் வந்தேன்," என்று கூறிய மீராவை நன்றி ததும்பும் பார்வை பார்த்த ஜாக்," தேங்க்ஸ் எ லாட் டியர், நீ வந்தது பத்து யானையோட.பலம் வந்த மாதிரி இருக்கு,"
இருவரும் பணியாற்றுவது ஆர்கிடெக்ட கிளையில் அந்த கிளையில் அனைவருமே ஆண் ஊழியர்கள் இவர்கள் இருவரை தவிர. அதனால் விடுப்பு எடுத்தால் இருவரும் சேர்த்தே எடுத்தனர். இம்முறை மட்டுமே மூன்று மாதங்கள் மீரா பேறுகால விடுமுறை எடுத்ததால் ஜாக் தனியாக இருக்க நேர்ந்தது.
" சரி நீ சீக்கிரம் வந்தத ரிப்போர்ட் பண்ணிட்டியா?"
"ம்...அதெல்லாம் பெரிய இடத்திலயே பேசியாச்சு,"
" யாரு.எம்.டியா?"
" எம்.டி கிட்ட லாம் நம்மால பேசமுடியாது பா சேர்மன் கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டேன்,"
"நீங்களாம் பெரிய ஆளு சேர்மன் கூடலாம் பேசுறீங்க," என்று நக்கலடித்த ஜாக்கிடம்,"ஏன் நீங்களும் தாராளமா பேசலாம் உனக்கு மெடர்ன்னிட்டி(maternity) லீவ் அவங்கதான் ஷாங்ஷன்(sanction) பண்ணணும்,"என்றாள் கண்களில் சிரிப்புடன்.
" அதுக்கு முதல்ல எனக்கு கல்யாணம் ஆகனும் மை ஸ்வீட் ப்ரெண்ட்,"என்று ஜாக் கூறி முடிக்கவும்," கரெக்ட் நீங்க மட்டும் ம் ..னு ஒரு வார்த்தை சொல்லுங்க அடுத்த வாரமே முடிச்சிடலாம்,"என்றபடி அங்கு வந்து ஆஜரானான் மனோஜ்.
" பெண்கள் பேசுற இடத்தில உங்களுக்கு என்ன வேலை, இது டீசன்சி இல்லை," உணர்ச்சியற்ற குரலில் கூறிய ஜாக்கிடம், " இரண்டு வருஷமா உன் சம்மதத்துக்காக காத்திருக்கிறேன் ஆனால் நீ நேத்து வந்தவன் பெருசா நினைக்கிற ஜாக்"
" ஹே...ஷ்டாப் ...ஷ்டாப்(stop stop) அது யாரு ஜாக் எனக்கு தெரியாத நேத்து வந்தவரு?"
ஒரு நிமிடம் ஜாக்கின் முகத்தில் வந்து போன மாற்றத்தை கண்டுகொண்ட மீரா அதை மனதில் பதிய வைத்துக்கொண்டாள்.
"ஜாக் பத்தி உங்களுக்கு தெரியாததா மீரா??"என்று வினவிய மனோஜை அனல் பார்வை பார்த்தவள்," மனோஜ் சார் ஃபார் யுவர் கைன்ட் ரிமெம்பரன்ஸ்(for ur kind rememberance) நான் லீவ் முடிஞ்சு இன்னைக்கு தான் வந்திருக்கேன்,நீங்க ரெண்டு பேரும் பேசுறது சத்தியமா புரியலை," என்றவளிடம் ," நம்ம டிபார்ட்மென்ட்க்கு புதுசா ஜி .எம் வந்திருக்காரு உங்களுக்கு தெரியுமா?" என்று வினவினான் மனோஜ்.
" புது ஜி.எம் மா??? நம்ம பழைய சார்க்கு என்னாச்சு? அவர் நல்லாதானே இருந்தாரு,"
" ம்.....நல்லாதான் இருந்தாரு விதி வேற என்ன சொல்றது அவரோட நேரம் நம்ம எம்.டி கிட்ட முறைச்சிகிட்டாரு அடுத்த வாரமே மனுஷன் ரிசைன் பண்ணிட்டு போய்டாரு,"மனோஜ்.
" என்ன சொல்றீங்க மனோஜ்?நம்ம சார் எம்.டி ய பார்க்க வாய்ப்பு ரொம்ப ரொம்ப கம்மியாச்சே. அப்பறம் எப்படி இரண்டே பேருக்கும் கிளாஷ் (clash) "புரியாமல் வினவிராள் மீரா.
ஏனென்றால் ஒவ்வொரு கிளைக்கும் ஒரு.ஜி.எம் நியமிக்கட்டிருந்தார்.எல்லா கிளைகளின் ஜி.எம் களும் தலைமை ஜி.எம் இடம் ரிப்போர்ட் செய்ய வேண்டும் அந்த தலைமை ஜி.எம் தான் எம்.டியுடனும் சேர்மனுடம் கலந்துரையாடல் செய்ய இயலும்.
மற்றபடி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும் ஜி.எம் மீட்டிங்கிலே அவர்களின் பங்களிப்பு இருக்கும்.அதனாலயே மீராவின் கேள்வி அமைந்தது.
" ம்....நம்ம எம்.டி ஜி.எம் மீட்டிங் ல தான் ஏதோ நடந்திருக்கு அது என்னனு யாருக்கும் தெரியலை அவரு பாவம் தான் அவரு மேல.தப்பு இருக்கும் னு எங்க யாருக்கும் தோனலை ,"
"அட பாவமே இப்ப புதுசா யாரு வந்திருக்காங்க மனோஜ் சார்?"
இந்த கேள்வியை மீரா சாதாரணமாக தான் கேட்டாள் ஆனால் மனோஜின் மனம் சொல்லொன்னா வேதனை கொண்டது , இரண்டு வருடங்களாக தன் மனதை திறந்து காட்டியும் தன்னை எட்ட நிறுத்தும் ஜாக். இரண்டே மாதத்தில் ஒருவனை பார்வையால் பின்தொடர்கிறாள் என்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதுவரை நடைபெற்று கொண்டிருந்த உரையாலின் நாயகன் அப்பொழுது வேக நடையுடன் உள் நுழைந்தான்.
" நீ கேட்ட கேள்விக்கு பதில் அதோ வராரு பார் அவருதான் மிஸ்டர்.விக்ரம்...அவர் நியு ஜி.எம்" ஈன்று கூறியபடி மனோஜ் அவ்விடம் விட்டு நகர்ந்தான்.
அவன் கைகாட்டிய திசையில் ஆறடி உயரத்தில் டக்இன் செய்த ஃபார்மல் ஷர்டுடன் முகத்தில் புன்னகை யுடன் தன்னை எதிர்பட்டவரின் வணக்கங்களை ஏற்று அவர்களுக்கு பதில் கூறி வந்துகொண்டிருந்தான், அனிச்சையாக இருவரும் எழுந்து நின்று வணங்க ஒரு நொடி மீராவை பாரத்து புருவம் உயர்த்தியவன்," மீரா....??"என்று வினவியனான்.
" எஸ் சார்...கு...கு...குட் மார்னிங்க,"
" ரிலாக்ஸ் கம் அன் மீட் மீ இன் மை காபின்(come and meet me in my cabin)"என்று கூறிவிட்டு அதே புன்னகையுடன் தனது கேபினை நோக்கி சென்றான்.
" இவர நீ சைட் அடிக்கிறனு சொல்றது தப்பே இல்லை ஜாக், ஹீ ஜஸ்டிஃபௌஸ் இட்( he justifies it)," என்ற மீராவை ," ஷட் அப் மீ....(shut up mee) எப்படி ஒரு பெண் அழகாவோ நல்லா பழகுறவளாவோ இருந்தா ஆண்கள் பார்கிறாங்களோ அதே மாதிரி ஒரு ஆண் கம்பீரமா இருந்தா பெண் பார்க்கதான் செய்வா அதுக்கு பேரு காதல்.இல்லை அவன்தான் உளருறானா நீயுமா?? ஐம் ஃபெட் அப் யா(I'm fed up ya)"
" ஓகே ஓகே...ரிலாக்ஸ்..., நான் உள்ள போய் சாரை பார்த்திட்டு வந்திடறேன்," என விக்ரமின் அறைக்குள் நுழைய உத்தரவு கேட்டு வெளியே நின்றாள்.
" எஸ் கம் இன்," என்ற ஒரு கம்பீர குரல் அவளை உள்ளே அழைத்து.அந்த விசாலமான அறையின் நடுவிலிருந்த பெரிய மேஜையின் பின்னே ரோலிங் சேரில் அமர்ந்திருந்தவன் அவளை நிமிர்ந்து பார்த்தான்," வெல்கம் மிஸஸ்.மீரா ...,"என்ற குரலில் இருந்த வரவேற்பு அவன் முகத்தில் இல்லை அதை உணர்ந்த மீரா ," தேங்க்யூ சார், என்னை வர சொல்லியிருந்தீங்க," திக்கி திக்கி கூறி அவனுக்கு தான் வந்த காரணத்தை நினைவுபடுத்தினாள்.
"ஓ......நீங்க இவ்ளோ நாள் லீவ்ல இருந்திருக்களாம் உங்களுக்கும் உங்க கோ வொர்கருக்கும் பேச ஆயிரம் விஷயம் இருக்களாம் பட் அது ஆப்டர் ஆஃபிஸ் ஆர்ஸ்( after office hours), நவ் யூ கேன் கோ அன்ட் வெய்ட் ஃபார் யவர் மெயில் விச் வில் சே அபௌட் யுவர் வோர்க்ஸ் டு பீ டன், (now you can go and wait for ur mail which will say about your works to be.done)," அத்துடன் பேச்சு முடிந்தது என்பதை உணர்த்தும் விதத்தில் கீழே குனிந்து ஃபைலை பார்க்க துவங்கிவிட்டான்.
" யெஸ் சார் , ஓகே சார், தாங்க்யூ சார்," என அத்தனை சாரையும் போட்டுவிட்டு விட்டால் போதும் என்று தப்பி வெளியே வந்து ஆசுவாசமூச்சு விட்டாள்.
சிங்கத்தை அதன் குகைக்குள் சென்று சந்தித்து வந்த உணர்வு அவளுள் ஏற்பட வெளிரிய முகத்துடன் தன் இருப்பிடம் வந்தமர்ந்தாள்.
" என்னாச்சு மீரா ஏன் முகமெல்லாம் ஒரு மாதிரியா இருக்கு,"என்று வினவிய ஜாக்கை எதிரியை பார்பது போல பார்த்து வைத்தவள்," ஏன் ஜாக் விக்ரம் சார் ரொம்ப ஸ்டிரிக்ட் ஆபிஸரா??" என அப்பாவியாக வினவினாள்.
" இல்லையே மீரா எல்லார்கிட்டயும் சிரிச்ச முகமாதான் பேசுவாரு வேலை கூட அப்படிதான் வாங்குவாரு யாருகிட்டயும் அளவுக்கு அதிகமா பேசவும் மாட்டாரு ஏன் என்னாச்சு,"
"என்னை கொஞ்சம் ஸ்டிரிக்டா ஹான்டில் பண்ண மாதிரி இருந்துச்சு அதான் பயந்துட்டேன்," என்று கூறிக்கொண்டிருக்கையில் அந்த ஆபிஸிருந்த ஸ்பீக்கர் உயிர்பெற்றது ," அன்று காலை பதினொன்று மணி அளவில் அவசர மீட்டிங் மேனேஜ்மென்டிலிருந்து ஏற்பாடாகியிருப்பதாகவும் அனைவரும் மேல் தளத்திலிருக்கும் கான்ஃபிரன்ஸ் ஹாலில் குழுமுமாரும் கூறப்பட அச் செய்தி அனைவரின் செவிகளிலும் சென்றடைந்து ஒவ்வொருவரின் மனநிலையையும் ஒவ்வொரு.விதமாக மாற்றியது.
நடைபெற போகும் மீட்டிங் தன் வாழ்வை புறட்டிப்போடபோவது தெரியாமல் விக்ரம் தன் கேபினில் ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டிருந்தான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro