பகுதி 44
தேவியுடன் இல்லம் நோக்கி சென்றுகொண்டிருந்த மதுவிற்கு ஆதியின் முகமே நெஞ்சமெங்கும் நிறைந்திருந்தது.அவனை இதற்கு முன்பு எங்கோ பார்த்த ஞாபகம் இருந்ததே தவிர எங்கு என்று புலப்படவில்லை.
அவளது அமைதியை கலைக்க விரும்பிய அவளது தோழி ,"ஏய்....மது உன்கிட்ட ஒரு சந்தேகம் கேட்கனும்,"
"ம்...என்ன சந்தேகம்?"
"இல்லை நம்ம இப்ப போன இடம் யாரு கட்டுனது?"
"இதுல என்ன சந்தேகம் இரண்டாம் மஹேந்திர பல்லவர் தான்."
"உனக்கு இந்த கோயிலோட வரலாறு தெரிஞ்சா சொல்லேன்"
"எனக்கு ஞாபகம் இல்லை தேவி.ஆமா நீதான் கூகுள் வெச்சிருக்கியே அது கிட்ட கேளு அதே சொல்லும்."
"அது கிட்ட நான் கேட்டுக்கறேன்.நீ என்ன பலமா யோசிக்கிற எந்த நாட்டை பிடிக்க ஃப்ளான் போடுற?"
"எந்த நாட்டையும் பிடிக்கலை . இப்ப நடந்த விஷயத்தை பத்தி தான் யோசிக்கிறேன்."
"இதுல யோசிக்க என்ன இருக்கு?"
"அவரு யாரா இருக்கும்.எப்படி என்னை பத்தி எல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்காரு?யோசிக்க யோசிக்க தலை தான் வலிக்குதே தவிர ஞாபகம் வரவேவில்லை."
"ரிலாக்ஸா இரு மது. உனக்கு தெரிய வேண்டிய விஷயம் கண்டிப்பா உனக்கு தெரியவரும்."
அதற்கு பின் அங்கு அமைதியே நிலவ தேவியை அவளது இல்லத்தில் இறக்கி விட்ட மதுவின் வாகனம் மதுவின் வீடு நோக்கி சென்றது. அங்கே காத்திருக்கும் ஆபத்து புரியாத மதுவும் ஆதியின் நினைவுகளோடு பயணப்பட்டாள்.
அவள் வீட்டினுள் நுழையும் நேரம் வீட்டினுள்ளே யாரோ வாக்குவாதம் செய்வது போல சப்தம் கேட்க அவசரமாக அந்த அறையினுள்ளே சென்ற மதுவிற்கு அந்த புதியவனை பார்த்ததும் நிலைமை சரியாக புரிந்தது.அவள் எதையும் பேசாமல் யாரையும் பார்காமல் தன் அறையை நோக்கி செல்ல துவங்க,"அங்கேயே நில்லு மது."என்ற குரல் அவளின் கால்களை தடுத்தது.
அதே இடத்தில் நின்றவள் நிதானமாக ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு மெதுவாக ஹாலை நோக்கி நடந்தாள்.
"சொல்லுங்க அப்பா எதுக்கு கூப்பிட்டீங்க?"
"பாருங்க மாமா இப்ப கூட எவ்வளவு தெனாவெட்டா நிக்கிறா பாருங்க."
"ஆனந்த் ப்ளீஸ் நான்தான் கேட்குறேன் ல பா.கொஞ்சம் பொறுமையா இரு."
"என்னாச்சு மது. அவ்வளவு பேரு முன்னாடி நீ இவரை அசிங்கப்படுத்திட்டனு சொல்றாரு?"
"யெஸ் டாடி."
"பார்த்தீங்களா??அவளே ஓத்துக்கிட்டு,"படபடவென பேசிய ஆனந்த் ஐ,"ப்ளீஸ் ஆனந்த் கொஞ்சம் என்னை பேசவிடு,"என்று கூறிய மதுவின் தந்தை,"மது என்ன நடந்தது னு கொஞ்சம் விளக்கமா சொல்லுமா,"
"அப்பா உங்கிட்ட பெர்மிஷன் கேட்டுதான் நான் மகாபலிபுரம் போனேன். அங்க நான் என்னோட வேலையை பார்த்துக்கிட்டு இருக்கும் போது.திடீருனு இவரு வந்து என்னை நல்லா தெரிஞ்சது மாதிரி பேச ஆரம்பிச்சாரு.ஆனால் இவரை எனக்கு அடையாளம் தெரியலை. அதனால் இவர யாருனு தெரியாதுனு சொல்லிட்டேன். நீங்க சொல்லுங்க நான் பண்ணது தப்பா?"
தன்னை கேள்விகேட்ட மகளை ஆதுரத்துடன் பார்த்த அந்த தகப்பன்,"தப்பில்லை மா,"என்று கூற மது மேலும் தொடர்ந்தாள்,"அப்பவாவது இவரு புரிஞ்சுக்கிட்டு விலகி போயிருக்கலாம் ஆனால் அப்பவும் இவரு விடாம என் கையை பிடிச்சு தரதரனு இழுத்துட்டு போறாரு.அங்க எல்லாரும் நின்னு வேடிக்கை பார்க்குறாங்க எனக்கு எவ்வளவு அவமானமா போச்சு தெரியுமா?"
"அப்பறம் என்னடா ஆச்சு?"
"நல்ல வேளையா யாருனு தெரியாத ஒருத்தர் வந்து இவரை அடிச்சு திட்டி என்னை காப்பாத்துனாரு." மது கூறி முடிக்க அங்கு குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் அளவு அமைதி நிலவியது.
"ஆனந்த் மது சொல்றது உண்மையா?"
"மாமா அது வந்து...."
"ஏன்பா நீ வந்து எங்க கிட்ட என்ன சொன்ன? மதுவை நான் வெளியில் பார்த்தேன் அவ என்னை மதிக்காம வேற ஒருத்தரோட போயிட்டா ,அப்படிதானே? ஆனால் மது சொல்றது வேற மாதிரி இருக்கே?"
"ம்.....ஆமா மாமா மது என்னை அரைஞச்சது உண்மை.வேற ஒரு ஆளுகூட போனதும் உண்மை."
"ஆனந்த் மதுவுக்கு சின்ன ஆக்சிடன்ட் ஆயிடுச்சு அதனால அவ பழச மறந்துட்டா. இப்போ உன்ன கூட அவளுக்கு யாருன்னு தெரியாது அதனால தான் அவ அப்படி உன்னிடம் நடந்து கிட்டிருக்கா. ஆனா நீ கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம அவளை கட்டாயப்படுத்தி இழுத்துட்டு போயிடுங்க .இப்போ இதுல யாரு மேல தப்புன்னு நீயே சொல்லு."
" என்ன மாமா சொல்றீங்க அவளுக்கு ஆக்சிடென்ட் எப்போ நடந்தது ? ஏன் எங்க யார்கிட்டயும் நீங்க எதுவும் சொல்லல. சாரி மாமா எனக்கு இத பத்தி எதுவும் தெரியாது என்ன மன்னிச்சிடுங்க .இப்ப எப்படி இருக்கா? ஏதாவது ஞாபகமா இருக்கா உடம்பு எப்படி இருக்கு?"
அடுக்கடுக்காய் கேள்வி கேட்க அவனது அக்கறை அனைவருக்கும் புரிந்தது.
" இப்ப கொஞ்சம் பரவாயில்லை ஆனா பழசு ஏதும் அவளுக்கு ஞாபகம் வரல அதனாலதான் நாங்க கோயம்புத்தூரில் விட்டு சென்னைக்கு வந்தோம்."
" அப்பா ப்ளீஸ் எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு நான் மாடியில் போய் ரெஸ்ட் எடுக்கிறேன் ."
"சரிம்மா நீ போ ஆனந்த நான் பாத்துக்குறேன்." என்றவாறு அவர் கூற மது மாடி நோக்கி சென்றாள்.
அவள் அப்பொழுது அறிந்திருக்கவில்லை பின்னாடி ஏற்பட போகும் புதிய குழப்பத்திற்கு அஸ்திவாரமே இன்றுதான் போடப்பட்டிருக்கிறது என்பதை.
*********
நிலாவை தனது தோளில் படுக்க வைத்தவன் அவளுக்கு தேவையான பால் பவுடர் கலந்திருந்த பால் ஐ அவளுக்கு ஊட்டினான். காலையிலிருந்து அழுதிருந்ததால் கலைத்திருந்த நிலா அவன் கொடுத்த பால் ஐ மறுப்பேதும் சொல்லாமல் வாங்கி பருகினாள்.தன் தந்தையின் தோல்களில் ஒய்யாரமாக சாய்ந்திருந்தவள் கலைப்பு மிகுதியாலும் பசி அடங்கியதாலும் கண்களை மூடி உறங்க துவங்கினாள்.அவள் உறங்கியபிறகே ஆதியின் கண்கள் தன்னை சுற்றி நோக்கியது. காரில் உள்ள அனைவரும் அவனையே பார்த்துக் கொண்டிருப்பதை புரிந்துகொண்டான்.அமைதியை முதலில் உடைத்த ஒலீவியா,"பேபியோட அம்மா கிட்ட கொடுக்கலாமே?"என்று வினவ
அவரை நோக்கி புன்னகை செய்த ஆதி ,"நான் ஒரு சிங்கள் பேரென்ட்,"என்று கூறி புன்னகைத்தான்.
அங்கு மேலும் அமைதியே ஆட்சி செய்யதது. அலுவலகத்தில் அரை நாள் விடுப்பு எடுத்துக்கொண்ட ஆதி டிரைவரிடம் தன் இல்லத்திற்கு செல்லும் வழியை கூறினான்.சிறிது நேரத்தில் கார் ஒரு சிறிய வீட்டின் முன்னே நிற்க நிலாவை தூக்கிக்கொண்டு ஆதி இறங்க முயல வேகமாக வந்த அங்கு நின்றிருந்த காவலாளி அவனுடைய கார் கதவை திறந்து விட்டு அவன் இறங்க உதவினார்.
"தேங்க்ஸ் பரமு ணா நீங்க கதவை திறக்க நான் வரேன்."என்று கூறி அவனை அனுப்பிவிட்டவன் காரினுள் திரும்பி ,"தேங்க்யூ சோ மச்.நாளைக்கு ஆபிஸ் ல மீட் பண்றேன்,"என்று கூறிவிட்டு அவர்களின் பரிதாப பார்வையை கண்டுகொள்ளாமல் தன் இல்லம் நோக்கி சென்றான்.
அந்த காரில் அமர்ந்திருந்த அனைவரும் அதுவரை அவனின் செயல் திறனையும் ஆற்றலையுமே பார்த்துள்ளால் அவனின் குடும்ப வாழ்வு அவர்களை சிறிது பாதித்தது.அனைவரையும் தன்னை குறித்து நினைக்க வைத்தவனோ நிலாவே உலகமாக வீட்டினுள்ளே சென்றான்.
வீட்டிற்குள் சென்று ஆதி உறங்கும் மகளை தூக்கம் கலையாதவாறு படுக்கவைத்தவன் தன் செல்பேசியில் நர்ஸரியின் பொறுப்பாளரை அழைத்தான்.இரண்டு மூன்று நொடிகளில் அழைப்பு ஏற்கப்பட ,"ஹலோ வணக்கம் நான் நிலாவோட அப்பா ஆதித்யன் பேசறேன்,"
"ஹலோ வணக்கம் சார் சொல்லுங்க."
" நல்லா இருக்கீங்களா மேடம்?"
"ரொம்ப நல்லா இருக்கேன் சார்.நீங்க எப்படி இருக்கீங்க?"
"நானும் நல்லா இருக்கேன் மேடம்.அப்பறம் உங்ககிட்ட ஒரு சின்ன சந்தேகம் கேட்குனும்."
"சொல்லுங்க சார்."
"நிலாவ இன்னைக்கு நான் சீக்கிரம் கூட்டிட்டு வந்துட்டேன்.உங்களுக்கு தெரியுமா?"
"ஆமா சார் நான் தான் உங்களுக்கு ஃபோன் பண்ணி சொல் சொன்னேன்."
"ஓ... தேங்க்ஸ் மேடம்.காலையில நல்லா தான் இருந்தா திடீர்னு அவ ஏன் அழ ஆரம்பிச்சா?அதுவும் அவ இந்த அளவு அழுது நான் பார்த்தது இல்லை. நர்ஸரியின் ஏதோ நடந்திருக்கு காரணம் இல்லாம அவ அழ மாட்டாளே?"
ஒரு நிமிடம் அவர் அமைதி காத்திட ,"சார் நர்ஸரியில எதுவுமே நடக்கலை. எப்பவும் நடக்கிற அதே விஷயம் தான் நடந்துச்சு.ம்....."
அவர் கூறும் பதில் முற்றுபெறாதது போல தோன்ற,"என்ன மேடம் உங்களுக்கே குழப்பமா இருக்கா?"
"இல்லை சார் நர்ஸரியில எந்த மாற்றமும் இல்லை ஆனால் வழக்கமா நிலா வ பாத்துக்கிறவங்க இன்னைக்கு லீவு அதனால் வேற ஒருத்தவங்களை நிலாவை பார்த்துக்க ஏற்பாடு பண்ணேன்.ஒரு வேளை புதுசா வந்தவங்க பிடிக்காம அழுதிருப்பாளோ னு யோசிக்கிறேன்."
"அது எப்படி மேடம். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு கேர் டேக்கர் வைப்பீங்களா??"
ஆதியின் கேள்வியினால் அந்த பொறுப்பாளர் அமைதியாகி விட்டார்.அவரிமிருந்து பதில் வராததால்,"ஹலோ.. மேடம்.லையன் ல இருக்கீங்களா??"என்று வினவ ஒரு பெருமூச்சுடன்,"யெஸ் மிஸ்டர் ஆதி. உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்.இவ்வளவு நாளும் அது உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டாம் னு விட்டுட்டேன்.ஆனால் இப்படி ஒரு சூழல் வரும்னு நான் எதிர் பார்க்கவே இல்லை."என்று நீண்ட விளக்கத்தை கூறியவர் நிலாவின் நிற்காத அழுகை குறித்தும் மதுவின் வரவு குறித்தும் சுருக்கமாக கூறி முடித்தார்.
"என்ன மேடம் இவ்வளவு நடந்திருக்கு என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லனும் னு உங்களுக்கு தேவையான?"
"இல்லை சார்.சொல்ல கூடாதுனு இல்லை.அவசியம் ஏற்படவில்லை."
"சரி அந்த கேர் டேக்கர் யாரு எப்படி பட்டவங்க? அவங்க நிலாவை பார்த்துக்கிறதுக்கு எதாவது உள் நோக்கம் இருக்கா?"
"இல்லை சார் நான் நல்லா விசாரிச்சு தான் நிலாவோட பொறுப்பை அவங்க கிட்ட ஒப்படச்சேன்.அவங்க பெரிய இடத்து பெண் ஏதோ மனக்கஷ்டத்தில இருந்தாங்க . அவங்க மனசுக்கு நிலா தான் மருந்து . நிலாவை அவங்க ஒருத்தவங்களை மட்டும் தான் சமாளிக்க முடியும்.சொல்ல போனா நிலாவோட சாப்பாடு பத்தி உங்ககிட்ட கொடுத்த லிஸ்ட் கூட அவங்க தான் கொடுத்தாங்க. நீங்க கவலைபட வேண்டாம்."
"ம்..... ஒரு வேளை அவங்களை காணோம் னு நிலா அழுதாளோ?"
"ம்...இருக்கலாம் சார்."
"ம்....அப்போ அவங்க ஒரு வேளை உங்க நர்ஸரியில வேலை செய்யுறது நிறுத்திட்டா நிலாவை உங்களால் பார்த்துக்க முடியாது அப்படிதானே?"
"சார் அப்படியெல்லாம் இல்லை."
"சரி மேடம் ரொம்ப தாங்கஸ். நான் தேவைபட்டா உங்களை திரும்ப கூப்பிடுறேன்."
"சார் ஒரு நிமிஷம் நான் ஒன்னு சொல்லலாமா?"
"ம்.. சொல்லுங்க மேடம்."
"சார் நிலா உங்க பொண்ணு அவளை எங்க படிக்க வைக்கனும் யார்கிட்ட இருந்தா பாதுகாப்பா இருப்பானு முடிவு பண்ண வேண்டியது நீங்க தான் .நாங்க எவ்வளவோ குழந்தைக்கும் பார்த்திருக்கோம் ஆனால் நிலா ரொம்ப வித்தியாசமான குழந்தை அவ யார்கிட்டயும் பழக விரும்பலை அந்த ஒருகேர் டேக்கர் கிட்ட மட்டும் தான் சோஃபா ஃபீல் பண்றா.அதனால நீங்க எந்த முடிவு எடுத்தாலும் இந்த ஒரு விஷயத்தை மனசுல வச்சுக்கிட்டு முடிவு பண்ணுங்க சார்."
அவர் கூறியதை அமைதியாக கேட்டவன்,"ம் ஒகே மேம் .எனிவே தாங்கஸ்," என்று கூறி கால் ஐ கட் செய்தான்.அவன் மனம் குழப்பத்தில் இருந்தது.அவனை மேலும் குழப்பும் விதமாக நிலா மீண்டும் அழ துவங்கினாள். அவன் எவ்வளவோ சமாதானம் செய்தும் பயனளிக்கவில்லை. மூடிய விழிகளை திறக்காமல் அழுத குழந்தையை காண ஆதியின் மனம் வலித்தது. அபூர்வா இருந்திருந்தால் நிலாவிற்கு இந்நிலை ஏற்பட்டிருக்காது என்று எண்ணியவன் நிலாவின் இந்த நிலைக்கு காரணமான நபரை அதிகமாக வெறுத்தது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro