பகுதி -41
தன் உடன் படிக்கும் தோழியின் அழைப்பின் பேரில் அந்த கண்காட்சிக்கு வந்திருந்த மது எதிர்பாராத விதமாகவே ஆதியை சந்தித்தாள். பார்த்த முதல் பார்வையிலேயே அவள் மனதை கொள்ளை கொண்டான் அந்த கள்வன்.அவளை கவர்ந்தது அவனது நடையோ உடையோ வசீகரமோ அல்ல அவனது தாய்மையுணர்வே.
மதுவை சற்றும் அந்த நேரத்தில் அங்கே எதிர்பாராதவன் மனம் சந்தோஷம் கொண்டது அந்த தேவதை அவனிடம் நன்றி கூறிவிட்டு விடைபெற அவனது இதயமும் அவளுடனே சென்றுது.
நிமிட நேர சந்தோஷம் தான் என்றாலும் மனம் சிறகில்லாமல் பறப்பதை உணர்ந்தவன் சிரித்துக்கொண்டே குழந்தையுடன் முன்னேறினான்.
இரவு மதுமிதா ஆதி இருவரும் மனதில் ஒரு வித சுகமான உணர்வுடனே உறங்கினர்.
ஞாயிற்றுக்கிழமை சோம்பலுடனும் அடுத்த வாரத்தின் எதிர்பார்புடனும் கழித்த மதுமிதா திங்களன்று காலை மிகவும் உற்சாகத்துடன் கிளம்பினாள்.
"என்ன கா ? இவ்வளவு சிரிப்போட யோகா கிளாஸ் போற?"
" அப்படியெல்லாம் ஒன்னுமில்லையே.."என்று கூறும்போதே அவள் மேலும் சிரிக்க," இவ்வளவு சந்தோஷமா யோகா கிளாஸ் போற ஒரே ஜீவன் நீயாதா இருக்கும்."
"ஏன் யாரும் சந்தோஷமா யோகா கிளாஸ் போக மாட்டாங்களா?? இன்னைக்கு வாரத்தோட முதல் நாள் ஏனோ எந்திரிக்கும் போதே மனசு லேசான மாதிரி இருந்துச்சு.அதான் வேற ஒன்னும் இல்லை."ஏனோஇதை கூறும்பொழும் ஆதியின் முகம் கண்முன் வந்து போனதை அவளால் தவிர்க்க முடியவில்லை.
" ம்....சரிக்கா என்னை அப்படியே வழியில ட்ராப் பணண்ணிடேன் ப்ளீஸ்...." என்று கூறி கண்ணடித்த தங்கையின் தலையில் செல்லமாக தட்டியவள் புன்னகையுடன் வண்டியை நோக்கி சென்றாள்.
சகோதரிகள் இருவரும் ஏதேதோ பேசியபடி செல்ல எதிரே வந்த பைக்கை கவனிக்க மறந்து அவர் மீது மோத கடைசி நொடியில் அவர் சடன் ப்ரேக் போட்டு வண்டியின் திசையை திருப்பியதால் விபத்து தடுத்து நிறுத்தப்பட்டது.
" சாரி சாரி சார்...தப்பு எங்க மேல தான்."என்று கூறிய மது வேகமாக வண்டியை நிறுத்தி அவனிடம் விரைந்தாள் .சடன் ப்ரேக் போட்டு வண்டியின்திசையை மாற்றியதால் அந்த நபர் தன் வண்டியை கட்டுப்படுத்த முடியாமல் வண்டியுடன் கீழே விழுந்திருந்தார்.
அவரிடம் விரைந்த மது அவர் எழுவதற்கு உதவியபடி "சாரி சார் ...சாரி சார்... அடி ஒன்னும் படலையே"என்று வினவ ,"பரவாயில்லை மா அடி எதுவும் படலை.இனி பார்த்து வண்டி ஓட்டுங்க.."என்று கூறி தன் கை கால்களில் ஒட்டியிருந்த மண்ணை தட்டிவிட்டார்.
"சார் எதுக்கும் பக்கத்தில இருக்கிற ஹாஸ்பிடல் போய் ஒரு.செக் அப் பண்ணிக்கலாம்."
"அட அதெல்லாம் வேண்டாம் மா எனக்கு எதுவும் இல்லை."என்று மறுத்தார். மேலும் மதுஏதோ கூற முயல ,"அட என்னக்கா நீ அவருதான் அய்யனார் மாதிரி நல்லா ஸ்ட்ராங்கா....நிக்குறாரு ல அப்பறம் ஏன் சும்மா ஹாஸ்பிடல் வாங்கனு கூப்பிட்ற? அதெல்லாம் அவரு நல்லாதான் இருக்காரு நமக்கு லேட் ஆகிடுச்சு வா..கா..."
"மதி...நீ சும்மா இரு. சாரி சார் அவ சின்ன பொண்ணு ஏதோ தெரியாம பேசிட்டா தப்பா எடுத்துக்காதீங்க.."
"அக்கா அந்த அங்கிள் தப்பாலாம் எடுத்துக்கலை நீ வா கா.."
அதுவரை அவர்கள் இருவரின் சம்பாஷனைகளை கேட்டுக்கொண்டிருந்தவன் அந்த சின்ன பெண்ணின் அங்கிள் என்ற அழைப்பால் சினம் கொண்டான்.
"யார பார்த்து அங்கிள் னு சொல்ற?"
" ஏன்அங்கிள் உங்களை பார்தது தான்."
காக்கி நிற பேன்டும் கரிய நிற முழுகை சட்டையும் அணிந்திருந்தவன் தலையை அழகாக வாரி இருந்தான்.கண்களின் கோபத்தை கூலர்ஸ் மறைக்க இருபதுகளில் இருந்த அந்த இளைஞனை அங்கிள் என்று அழைத்த தன் தங்கையின் தலையில் மானசீகமாக கொட்டிய மது,"மதி சும்மா இரு. அவரை பார்த்தா உனக்கு அங்கிள் மாதிரியா இருக்கு? சாரி கேளு."
"அக்கா உனக்கு அவரு அங்கிள் இல்லைகா நான் ப்ளஸ் ஒன் படிக்கிறேன் அவருக்கு எப்படியும் இருபத்தி ஐஞ்சு வயசு இருக்கும் அப்போ எனக்கு அவரு அங்கிள் தானே..."என்று சிரிக்காமல் அவன் காலை வார ,அந்த குறும்புகார சிறுமியை நிமிர்ந்து பார்த்தான் அவன், குண்டு கண்ணங்கள் சிறிது பூசினார் போல உடல் வாகுடன் இருந்தவள் பள்ளி சீறுடையில் இரண்டு பக்கமும் பின்னலியப்பட்டிருந்த முடியை கைகளை பிடித்து குறும்பு கொப்பளிக்கும் கண்களுடன் அவனை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள்.
அவளது குறும்பை நினைத்து தனக்குள் சிரித்துக்கொண்டவன் மதுவை பார்த்து," கவனமா போயிட்டு வாங்க ,"என்று கூறிய வண்ணம் தன் வண்டியில் ஏறி மின்னலென அவ்விடம் விட்டு மறைந்தான்.தனியே விடப்பட்ட சகோதரிகள் இருவரும் ஒருவரை பார்த்து மற்றவர் திகைத்து நின்றனர்.
"சாரி கா நான் அவர்கிட்ட அப்படி பேசியிருக்க கூடாது ல .ம்ச்....அவருரெண்டு திட்டு திட்டிருத்தா கூட ஒன்னும் தெரியாது கா அமைதியா போயிட்டாரு."
என்று பலவாறு புலம்பி தவித்த தன் தங்கையை கண்டு சிரித்தவள்," விடு.மதி நீ சின்ன பொண்ணு தானே அதனால அவரு அமைதியா போயிருப்பாரு. சரிசரி தோ உன் ஸ்கூல் வந்திடுச்சு,"என்று கூறி தங்கையை இறக்கி விட்டவள் மனமும் அந்த பெயர் தெரியாத நபரின் செயலிலே சுற்றி வந்தது.
மனம் அதன் போக்கில் யோசிக்க கைகள் வண்டியை வழமையான பாதையில் நடத்திக்கொண்டு வந்து நர்ஸரி முன் நிறுத்தியது.
வண்டியை பார்க் செய்தவள் வேகமாக நர்ஸரியினுள் நுழைந்தாள்.அங்கே நிலா தன் அழகிய கண்களை உருட்டி மதுவின் வரவை எதிர்நோக்கி இருக்க மதுவை கண்டவளின் கண்கள் சந்தோஷத்தில் விரிந்தது.அவள் செவ்விதழ்களோ ,"ஆ...உ...த....."என்று அர்த்தமற்ற கவிதைமொழிகளை கூற கைகள் இரண்டையும் மேலே தூக்கி மதுவை அழகாக வரவேற்றாள்.
பாதி நடந்தும் பாதி ஓடியும் வந்த மது நிலாவின் வரவேற்பை கண்டு நெஞ்சம் பூரித்த அவளை வாரி நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.
"செல்லக்குட்டி என்னை மிஸ் பண்ணீங்களா?"என்றவாறு அன்றைய பொழுதை துவங்கினாள்.நிலாவுடன் சிறிது நேரம் விளையாடியவள் அவளுக்கு ஆதி கொடுத்துவிட்டிருந்த உணவை கொஞ்சி கெஞ்சி புகட்டினாள் பின் நிலாவை உறங்கவைக்க அன்றைய தினம் முடிவடைந்தது.விடைபெறும் நேரம் நெருங்க தான் எடுத்து வைத்திருந்த பிரிண்ட் அவுட் ஐ பொறுப்பாளரிடம் ஒப்படைத்தாள்.
"என்ன மது இது?"
"நிலாவுக்கு ஆறு மாசம் ஆகிடுச்சு கொஞ்சம் ஊட்டச்சத்து அதிகம் இருக்கிற சாப்பாடு கொடுக்கனும்.அதான் என்ன என்ன சாப்பாடு கொடுக்கனும் னு இதுல அட்டவனை மாதிரி கொடுத்திருக்கேன்."
"ம்...நல்ல விஷயம் தான்.மத்த குழந்தைகளுக்கும்மே இதை நம்ம செய்யலாம்.அது இருக்கட்டும் இதை ஏன் என்கிட்ட கொடுக்கிற?"
"இதை நிலாவோட அப்பாகிட்ட கொடுத்திடுங்க மேடம்."
"இதை நீங்களே கொடுக்கிறது தானே மது? ஏன் தயக்கம்?"
"கொடுக்கலாம் தான் மேம்.முதல் காரணம் நான் அவங்க அப்பா வர்றதுக்கு முன்னாடியே கிளம்பிடுவேன்.இரண்டாவது காரணம் தயக்கம் தான்.அதனால இதை நர்ஸரிமூலமாவே கொடுத்திடுங்களேன்."
"ம்....நீ நிலாவோட அப்பா வ அவாய்ட் பண்றியா மது?"
"அப்படி யெல்லாம் எதுவும் இல்லை மேடம்."
"ம்..சரிமா நான் கொடுத்திடறேன்."
"சரி மேடம் நான் கிளம்பறேன் ."என்றவாறு விடை பெற்றாள் மதுமிதா.அவளது மனமோ பொறுப்பாளர் கூறியது போல தான் நிலாவின் தந்தையை அவாய்ட் செய்கிறோமா என்று ஒரு நொடி தோன்ற மறு நொடியே ,"சே. சே. அவருக்கும் எனக்கும் என்ன இருக்கு நான் ஏன் அவர் அவாயிட் பண்ணணும்,"என்று மனம் நெளிந்தவள் தன் கல்லூரியை நோக்கி சென்றாள்.
"ஹாய் தேவி என்ன பலத்த யோசனை போல?"என்று தன் உடன்படிக்கும் தோழியிடம் விசாரித்தவாறு அவள் அருகில் அமர்ந்தாள் மதுமிதா.
"ம்ச் எல்லாம் நம்ம ப்ராஜெக்ட் பத்தி தான் மது,"என்றவளை குழப்பத்துடன் பார்த்த மது,"ப்ராஜெக்ட் ஆ?? என்ன ப்ராஜெக்ட்?"
" சரியா போச்சு போ அதையே மறந்துட்டியா?"
" இல்லை தேவிமா எனக்கு தெரியாதே."
"ம்..போன வாரம் நம்ம சார் தமிழ் சங்ககால கட்டிட கலை பத்தி ஒரு அசெய்ன்மென்ட் எழுத சொன்னாரே?
"அப்படியா சொன்னாரா என்ன எனக்கு தெரியாதே.எப்ப சொன்னாரு."
" ம்...போன க்ளாஸ் ல சொன்னாரு.அதுவும் சும்மா கூகுள் ல தேடி எழுத கூடாது. நேர்ல போய் பார்த்து ஆராய்ச்சி பண்ணி அப்பறமா எழுதனும். அப்படியும் சொன்னாரு."
"ஹே.. சுத்தமா நியாபகம் இல்லை பா.இப்ப என்ன பண்றது.எப்ப சப்மிட் பண்ணணும்?"
" இந்த வாரம் வெள்ளிக்கிழமை தான் கடைசி நாள்."
"ஓ...நீ எந்த இடம் போகலாம்னு முடிவு பண்ணிட்டியா.?"
" இல்லை மது அதான் யோசிட்டு இருக்கேன்."
"ஹே.. இரண்டு பேரும் ஒரே இடத்தை எழுதுனா ஒன்னும் சொல்ல மாட்டாங்களா?"
"இல்லை இல்லை அதையும் அவரே சொல்லிட்டாரு.ஒரே இடத்தை போய் பார்க்கலாம் தப்பில்லை.ஆனால் ஒரே மாதிரி இரண்டு அசெய்ன்மென்ட் இருக்கக்கூடாது."
"ம்...இப்ப இருக்கிற டீச்சர்ஸ் எல்லாம் ரொம்ப தெளிவா தான் இருக்காங்க.சரி சொல்லு எங்க போகலாம்."தன் மோவாயில் விரல் வைத்து யோசித்த தோழியை கண்ட தேவி,"இருக்கவே இருக்கு நம்ம மாமல்லபுரம்."
"அட போபா எல்லாரும் அங்கதான் போவாங்க.நம்ம வேற எங்கேயாவது போலாம்."
" ம்... நரசிம்ம சக்கரவர்த்தி வந்து கட்டி தர சொல்லுவோமா இல்லை ராஜராஜ சோழன கட்டி தர சொல்லுவோமா?"
"என்ன கிண்டலா?"
"பின்ன இரண்டு நாள்ல நம்மால வேற எங்க போக முடியும் சொல்லு.நாளைக்கு காலேஜ் லீவ் போடறோம் மாமல்லபுரம் போறோம் கட்டுரை எழுதுறோம்.அவ்வளவுதான்"என்று கூறிய தோழியிடம் மறுப்பு சொல்ல முடியாமல் அடுத்ததடுத்து வகுப்புகள் தொடங்க வேறு வழியின்றி தோழியின் யோசனையை சரி என்று எண்ணினாள்.
அடுத்த நாள் மாமல்லபுரம் செல்ல இருப்பதால் நர்ஸரிக்கு வர இயலவில்லை என்று விடுப்பு கூறிய மது தனக்கு அங்கே காத்திருக்கும் அதிர்ச்சி அறியாமல் காலை மிக விரைவாகவே மாமல்லபுரம் நோக்கி தன் தோழியுடன் சென்றாள்.
*********
மது காலையில் கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருந்த அதே நேரத்தில் ஆதி தன் மகளை நர்ஸரியில் விட்டுவிட்டு அலுவலகம் நோக்கி சென்றான்.பெரிதும் அல்லாத சிறிதும் அல்லாத அந்த கட்டுமான அலுவலகத்தின் தலைமை ஆர்கிடெக்டாக வேலை செய்து கொண்டிருந்தான்.மிகவும் முக்கியமான அரசியல் பிரமுகர் ஒருவரின் நண்பருக்கு ஷாப்பிங் மால் கட்டுவதற்கான பணி அவன் பொருப்பில் இருக்க அதற்குறிய டிசைன் செய்து கொண்டிருந்தான்.
அவன் வேலைக்கு சேர்ந்து சில மாதங்களே ஆனாலும் தன் திறமையாலும் பொறுப்புணர்ச்சியாலும் அனைவருக்கும் அவன் மீது தனி மரியாதை ஏற்பட்டிருந்தது.
அவனுக்கு கீழே இரண்டு ஜீனியர் ஆர்கிடெக்ட் வேலை பார்க்க அவர்களிடம் ஏதோ முக்கிய தகவலை கூறிக்கொண்டிருந்தான்.அப்பொழுது அவன் இண்டர்காம் அழைக்க அதை உயிர்பித்தவன்,"வாட்?என்னை தேடி போலீஸா?"
"இதோ வந்திடறேன்."என்றவாறு கால் ஐ கட் செய்தவன் குழப்பத்துடன் கீழே சென்றான்.
இரண்டு தளங்கள் கொண்ட அந்த அலுவலகத்தில் ஆதியின் அறை முதல் தளத்தில் இருக்க தரை தளத்தை நோக்கி சென்றான் அவன்.வரவேற்பறையில் தனக்கு முதுகு காட்டி நின்றிருந்த அந்த மனிதர் காக்கி நிற கால்சட்டை மும் கருப்பு நிற சட்டையும் அணிந்திருந்தார்.அவரை அனுகியவன் ,"ஹலோ சார். நான் தான் ஆதித்யன்."என்று தன்னை அறிமுகம் செய்ய ,"அதான் எனக்கு தெரியுமே."என்றவாறு திரும்பியவரை கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்தவன்,'மச்சான்...எப்ப வந்த?"என்று கூறி அவனை கட்டி கொண்டான்.
"இப்போதான் நேரா உன்னை பார்க்க தான் வரேன்."
" சரி வா ரூமுக்கு போலாம்."என்று கூறிக்கொண்டே ஜீவாவை அழைத்துக்கொண்டு தன் அறை நோக்கி சென்றான்.
அறைக்குள் நுழைந்ததும் ஆதியின் கையில் ஒரு பேப்பரை கொடுத்த ஜீவா அதை பிரித்து படிக்குமாறு சைகை செய்ய அந்த பேப்பரை சாதாரணமாக பிரித்து படிக்க துவங்கிய ஆதி. படிக்க படிக்க அவனது முகம் பிரகாசமாவதையும் உதட்டில் சிரிப்பு உதிரப்போவதையும் புரிந்து கொண்ட ஜீவாவின் மனம் அமைதி அடைந்தது.
"டேய் மச்சான் கங்கிராட்ஸ்...டா,"என்று கூறிக்கொண்டே அவனை கட்டிக்கொண்டவன் ,"சாரி சாரி உன்னை இனி அப்படி கூப்பிட கூடாதுல .கங்கிராட்ஸ் ஐ.பி.எஸ் ஆபிஸர்." ஆம் ஜீவாவின் நீண்ட வருட கனவு ஐ.பி.எஸ் ஆபிஸர் ஆக வேண்டும் என்பது தான்.அதற்காக அவன் இரண்டு வருடங்களாக முயன்று கொண்டிருக்கிறான் . இதோ இப்போது பரீட்சையில் தேர்ச்சி பெற முதன் முதலில் தன் நண்பரிடம் நேரில் கூற வேண்டும் என்று விடிந்ததும் விடியாமலே கோயம்புத்தூரிலிருந்த தனது இரு சக்கர வாகனத்தில் சென்னைக்கு வந்து விட்டான்.
"நான் எப்பவுமே எந்த பதவி வந்தாலும் உன் ஜீவா தான்டா."என்று அவனுக்கு பதில் கூறிவிட்டு முகம் திடீரென யோசனைக்கு செல்ல,"என்னாச்சு ஜீவா?"என அக்கரையுடன் வினவிய ஆதியிடம் விஷயத்தை எப்படி கூறுவது என்று குழம்பினான் ஜீவா.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro