பகுதி -36
மதுவின் அலுவலகத்திலிருந்து வெளி வந்த விக்ரமின் மனம் அவன் செயலால் குற்ற உணர்வு கொண்டது.மதுவை முத்தமிட வேண்டும் என்று அவன் எண்ணவில்லை அவனையும் அறியாமல் அவன் அவ்வாறு செய்து விட்டான்.மது தன்னை பற்றி என்ன நினைப்பாளோ என்று அவன் மனம் பலவாறு குழம்பியது.
குழப்பத்துடன் தன் இருக்கையில் அமர்ந்திருந்த விக்ரமின் சிந்தனையை தடை செய்தது வாசலில் ஒலித்த அழைப்பு,"மே ஐ கம் இன் சார்?(May i come in sir?)" என்று வினவிய தாரிகாவை ,"யெஸ் கம் இன் ,"என்று உள் அழைத்தான்.
" சார் நீங்க அந்த சீஃப் ஆர்கிடெக்ட் டிசைன் பண்ண மத்த டிசைனெல்லாம் கேட்டிருந்தீங்க ,"என்ற வாறு அவன் கைகளில் சில காகிதங்களை அவள் கொடுக்க அதை வாங்கியவன் அதை புரட்டி நோக்கினான்.திடீரென கதவு தட்டும்.ஒலி மிக மெலிதாக கேட்க குழப்பத்துடன் ,"யெஸ்...,"என்று கூறிய விக்ரமின் குரலை தெடர்ந்து உள் நுழைந்த நபரை கண்ட விக்ரமும் தாரிகாவும் ஒரு சேர அதிர்ந்தனர்.
*********
விக்ரமின் இந்த எதிர்பாராத முத்தம் மதுவை வேறு உலகதிற்கு அழைத்து சென்றது.அவன் மீது வந்த ஆண்மையின் வாசமும் அவனது இதழ் ஒற்றலும் அவளுக்கு புதிது போல தெரியவில்லை மிகவும் பழகிய உணர்வு கொடுக்க அவள் கண்கள் தாமாக நிம்மதியுடன் மூடிக்கொண்டது.
மூடிய விழிகளுக்குள் மறக்கப்பட்ட அந்த நான்கு வருடங்கள் மெது மெதுவாக நினைவு பெட்டகத்தை நிறப்பியது.அந்த நினைவுகளின் தாக்கத்தை சுமக்க முடியாத மது அவற்றை தற்காலிகமாக ஒதுக்கி வைத்து இவ்வளவு நாள் ஏற்பட்டிருந்த குழப்பம் நீங்கப்பெற்றவளாக தன் காதல் கணவன் விக்ரமனை உணர்ந்து கொண்டவளாக நிம்மதி கொண்டாள்.
இன்னும் எவ்வளவு நேரம் அந்த இன்ப அவஸ்தையை அவன் நீடித்திருப்பானோ அவள் அறியாள் அவர்களை இவ்வுலகிற்கு அழைத்து வந்தது இண்டர்காம் சத்தமே,சட்டென மதுவிடமிருந்து விலகியவன் மதுவிற்கு எதிர்புறம் திரும்பி நிற்க ,நொடிக்குள் தன்னை மீட்டெடுத்த மது இண்டர்காமை உயிர்பித்தாள்.
" மேடம் ஆனந்த் சார் உங்களை பார்க்க வரவா னு கேட்டாரு மேடம்.ஏதோ பேசனுமாம்."
"ம்...நான் சாப்பிட்டு கிட்டு இருக்கேன் ஒரு பதினஞ்சு நிமிஷத்திற்கு அப்பறம் வர சொல்லு."
அமைதியாக மது பேசியதை கேட்ட விக்ரம் அவள் புறம் திரும்பாமலேயே,"நா...நான்....கிளம்பறேன் நீ சாப்பிட்டு முடிச்சிக்கோ "என்றவாற வெளியேற எத்தனிக்க ,"விக்ரம் ஒரு நிமிஷம் ,நீங்க சாப்பிடலயா?"
" நா...நான்...கேன்டீன் ல சாப்டுக்கறேன்."என்றவாறு மதுவின் பதிலுக்கு காத்திராமல் வேகமாக விரைந்தான்.அவன் குற்ற உணர்ச்சியில் தன்னை காணாமல் செல்கிறான் என்பதை உணர்ந்தவள் ,தனக்குள் சிரித்துக்கொண்டாள் ," இன்னும் எத்தனை நாளைக்கு என்கிட்ட இருந்து உண்மையை மறைக்க போறீங்கனு பாக்குறேன்."என்று கூறியவள் அவன் சமைத்து எடுத்து வந்த உணவை புதிய சொந்தத்துடன் உண்ணத்துவங்கினாள்.
விரைவாக உணவை உண்டவள் ஆனந்த் ஐ காண அவனது அலுவலகம் சென்றாள்.
" ஹாய் அத்தான்....சொல்லுங்க எதுக்கு என்னை பார்கனும் னு சொன்னீங்க?"என்றாள் உற்சாகத்துடன். அவளது உற்சாகம் அவனையும் தொற்றிக்கொள்ள ,"என்ன இவ்வளவு சந்தோஷம் முகத்தில? "
"அப்படியெல்லாம் எதுவும் இல்லை.சரி எதுக்கு என்னை வர சொன்னீங்க?"
"ம்..இந்த டாக்குமெண்டல உன்னோட சைன் வேணும்."என்றவாறு சில காகிதங்களை நீட்டினான்.அவற்றை வாங்கிய மது அதில் பல பக்கங்கள்.இருப்பதை பார்த்துவிட்டு ,"இது உடனே வேணுமா?"
"அவசரம் இல்லை ஆனால் வேணும்."
"சரி நான் இப்போ வீட்டுக்கு போறேன்.இதை பொறுமையா படிச்சு பாத்துட்டு சைன் பண்ணி நாளைக்கு தரேன்."
" வீட்டுக்கு போறியா ?ஏன் ?"
"கொஞ்சம் தலைவலியா இருக்கு"
"தலைவலியா?ஒன்னும் பிரச்சினை இல்லையே?டாக்டர் கிட்ட போலாமா?"அடுக்கடுக்காக கேள்வி கேட்டவனை ஒரு புன்னகையுடன் எதிர் கொண்டவள்," அதெல்லாம் வேணாம் கொஞ்சம் கண்ண மூடினாலே சரியாகிடும் ," என்றுகூறி விட்டு சிறு தலையசைப்புடன் வெளியேறினாள்.
தன் அலுவலகம் சென்று விக்ரமின் டிஃபன் பேகை கையில் எடுத்தவள் தீபாவிடம் உடல் நிலை சரியில்லை என்பதால் அன்றைய வேலைகளை அடுத்த நாளில் ஒத்தி வைக்க கூறிவிட்டு தன் அலுவலகத்தை விட்டு வெளியே வந்து விக்ரமின் அலுவலகம் நோக்கி சென்றாள்.
மூன்றாம் தளத்திலிருந்த அவன் அலுவலகத்தில் மது நுழையவும் அங்கு பணி புரிந்து கொண்டிருந்தோர் எழுந்து நின்று ,"குட் நூன் மேம்.." என வணக்கங்களை கூற தொடங்கினர்.அவர்களின் முகத்தில் இருந்தே அவளை அங்கு எதிர்பார்க்கவில்லை என்பது நன்கு புரிந்தது.அவளது வரவு குறித்து ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த காரணங்களை பரிமாறிக்கொள்ள மீராவும் ஜாக் கும் மதுவின் கையிலிருந்த பேகை கண்டு தங்களுக்குள் அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்துக்கொண்டனர்.
இவை எவை குறித்தும் கவலைபடாத மது நேரே சென்று விக்ரமின் கேபின் கதவை மெதுவாக தட்டினாள்.
"யெஸ் கம் இன்,"என்ற விக்ரமின் குரலை தொடர்ந்து உள் சென்றவளுக்கு அவனது திகைப்பை கண்டதும் மனதிற்கு இதமாக இருந்தது.
மதுவின் எதிர்பாரா வருகையால் ஒரு நொடி தடுமாறிய விக்ரம் தன்னை சமாளித்து கொண்டு தாரிகாவிடம்,"இந்த டிசைன் பேப்பர்ஸ் என்கிட்ட இருக்கட்டும் ,நீங்க போலாம்,"என்றுவிட்டு மதுவிடம்,"என்ன திடீர் விஜயம்?"என்று வினவினான்.
அவன் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்த மது,"வீட்டுக்கு போறேன் பா அதான் சொல்லிட்டு அப்படியே பேக் கொடுத்திட்டு போலாம் னு வந்தேன்,"
"ஏன் என்னாச்சு? உடம்பு எதுவும் சரியில்லையா?"என்று வினவியவாறு அவன் இருக்கையிலிருந்து எழுந்து அவளிடம் வந்தவன் அவள் நெற்றியில் கழுத்தில் கை வைத்து பார்த்தான்
"காய்ச்சல் லாம் இல்லை ரொம்ப தலைவலிக்குது அதான்."என்றவளை ,"அப்போ வா உன்னை வீட்ல.டிராப் பண்றேன்,"
"வேணாம் வேணாம் இது ஆஃபிஸ் டையம்."என்று மறுத்தவளை முறைத்தவன்,"உங்கிட்ட சஜஷன் கேட்டா சொல்லு,ஆனால் நான் பைக் ல.தான் வந்திருக்கேன் உனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே?"
"ஏன் எனக்கென்ன பிரச்சனை?"என்றவளை பார்த்து புன்னகைத்தவன் ,"இரு வரேன்,"என்று கூறி வெளியேறினான்.
வெளியே வந்தவன் தாரிகாவை பார்த்து,"வெளிய போறேன் ஒன்அவர் ல வந்திடுவேன்,"என்று கூறியவன் அவனது அறைக்குள் எட்டி பார்த்து தலையசைக்க அடுத்த நொடி மது வெளியே வந்தாள்.
இருவரும் ஒன்றாக நடந்து அந்த அலுவலகம் விட்டு ஏதோ தங்களுகக்குள் பேசி சிரித்தவண்ணம் வெளியேற அந்த அலுவலகம் மொத்தமும் திரும்பி நோக்கியது.
இதை எதையும் கண்டு கொள்ளாத அந்த இருவரும் தங்களது தனி உலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்தனர்.தனது பைகில் மதுவை அமர வைத்த விக்ரம் மனம் அமைதி கொண்டது.மதுவின் வீட்டு வாசலில் அவளை இறக்கி விட்டவன்,"உடம்ப பார்த்துக்கோ எதுனாலும் உடனே எனக்கு கால் பண்ணு ,"
"ம்......."என்று தலையாட்டியள் புன்னகையுடன் விடைபெற்றாள்.முகத்தில் சிரிப்பு மாறாமல் வீட்டினுள் நுழைந்த மது தன் அறையை அடைந்து வேறு உடை தரித்து புத்துணர்வு பெற்றாள்.கடந்த கால நினைவுகள் விழித்துக்கொண்ட போதிலும் அவை எதையும் அவளால் நினைவு படுத்திக்கொள்ள இயலாது போனது.இப்பொழுது அமைதியாக படுக்கையில் கண் மூடி படுத்தவள் கொஞ்சம் கொஞ்சமாக நினைவு படுத்தி பார்க்க துவங்கினாள் அவள் கண் முன்னே நான்கறை வருடங்களுக்கு முன் அவளது பிறந்த நாளின் போது ஏற்பட்ட விபத்து விரிந்தது.
***********
இன்றிலிருந்து நான்கறை வருடம் முன்பு மதுவின் பிறந்தநாள் அன்று
தன் பிறந்தநாளன்று தன் சக மாணவியுடன் ஏற்பட்ட கார் பந்தயத்தின் ஒரு கட்டணத்தில் தனக்கு எதிரே சென்று கொண்டிருந்த அம்பாசிடர் காரை முந்த முயன்ற போது மதுவின் கார் தூக்கி எறியப்பட்டது.என்ன நடக்கிறது தான் எப்படி தூக்கி எறியப்பட்டோம் என்றும் உணரும் முன்பாகவே அவள் சுயநினைவை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க துவங்கி இருந்தாள்.அரை உறக்க நிலையில் அவளை சுற்றி நடந்தவைகளை உணர முடிந்த பொழுதும் முழுவதுமாக புரிந்து கொள்ள அவளால் இயலவில்லை. சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் சத்தம் கேட்க அதில் தன்னை ஏறற்றாமல் வேறொரவரை ஏற்றேவதை உணர்ந்தவளின் மனம் குழம்பியது.
சில நிமிடங்கள் சலசலப்புக்கு பின் தன் தலையை யாரோ தூக்குவது போல உணர்ந்தவள் கண்களை கடினத்துடன் திறந்து நோக்கினாள்.திறந்த விழிகளுக்குள் விழுந்தது ஆதித்யனின் கலங்கிய முகம்.அவன் பதட்டமான முகத்தை பார்த்த வண்ணம் தன் நினைவிழந்து மயக்கமானாள்.
எவ்வளவு நேரம் மயக்கத்திலிருந்தாளோ அவள் அறியாள் அவளுக்கு நினைவு மெல்ல மெல்ல அவளது தலை பாரமாக இருப்பதை உணர்ந்தவள் கண்கள் திறக்க முயன்று தோற்றாள் கண்களின் மேல்.ஏதோ அழுத துவது போல உணர்ந்தவள் வலியில் மெலிதாக முனங்கினாள்.அப்பொழுது அவள் செவிகளில் ,"அம்மாடி....எந்திரிமா...உனக்கு ஒன்னுமில்லை கண்ணு திறந்து பாருமா நாங்களாம் ரொம்ப பயந்து போயிருக்கோம்," என்று யாரோ ஒருவர் கூறுவது கேட்டது.
அவரது பயம் கலந்த அக்கரை புரிந்தோ என்னவோ மது மெதுவாக தன் கண்களை திறந்து அந்த அறையை ஆராயத்துவங்கினாள்.அவள் கண்களில் வேதனையைவிட குழப்பம் மேலோங்கி இருக்க அதை புரிந்து கொண்ட அந்த தாய் ," என்னாச்சுடா..ஏன் அப்படி பார்குற?" என்று வினவ அதற்கு மதுவோ," என் மேல இவ்வளவு கரிசனம் காட்டுர நீங்க யாரு என்னை ஏன் இங்க கொண்டு வந்திருக்கீங்க??இது என்ன இடம்," என்று கேள்விகள் கேட்க துவங்க அந்த பெண்மணியும் அதே நேரத்தில் மருத்துவருடன் உள்ளே நுழைந்த ஒரு.நடுத்தர வயதுடைய ஆணும் ஒரு சேர அதிர்ச்சி அடைந்தனர்.
அவளது குழப்பமான கேள்வியை கேட்ட மருத்துவரோ," ஹலோ மிஸ்....குட் மார்னிங் ஒன்னும் பிரச்சினை இல்லை நீங்க கண்ண மூடி நல்லா ரெஸ்ட் எடுங்க உங்களுக்கு மயக்கமருந்து கொடுத்திருக்கிறதனால அப்படி தோணுது," என்று கூறியவர் அந்த பெற்றோர் இருவரையும் அழைத்துக்கொண்டு வெளியேறினார்.
அவர்கள் வெளியேறவும் அவள் தான் இருக்கும் இடத்தை ஆராய்ந்தாள்.பல வசதிகளை கொண்ட குளிரூட்டப்பட்ட அறையில் அவள் படுத்திருக்க அவளது இடது கையில் சலைன் ஏறிக்கொண்டிருந்தது.இதய துடிப்பையும் இரத்த அழுத்தத்தையும் கணக்கிடும் கருவி அவளது இடது ஆள்காட்டி விரலில் மாட்டியிருக்க இவையனைத்தும் ஒரு வித பயத்தை அவளுக்குள் உற்பத்தி செய்தது.ஆனால் அந்த பெண்மணி மற்றும் அந்த ஆண் யார் என்று எவ்வளவு யோசித்தாலும் விடை கண்டு பிடிக்க அவளால் இயலவில்லை.தன் மனக்குழப்பதினாலேயோ மருந்தின் வீரியத்தினாலயோ அவள் விரைவாக உறங்கலானாள்.
நல்ல அயர்ந்த நித்திரை அவளை ஆட்கொள்ள எந்த வித சிந்தனையுமில்லாமல் உறங்கினாள்.அவள் உறங்க தொடங்கிய சில நிமிடங்களிலே அவளது தந்தை திரு.சௌந்தரன் ஒரு காவல் அதிகாரியுடன் உள்ளே நுழைந்தார்.
" வாங்க சார் பாருங்க இவ தான் என் பொண்ணு மதுமிதா."
"ம்...இப்ப எப்படி இருக்காங்க?டாக்டர் என்ன சொல்றாரு?"
"மயக்கம் தெளிஞ்சு ஒரு தடவை கண்ண முழிச்சு பார்த்தா ஆனால் யாரையும் அடையாளம் தெரியல.டாக்டர் அவளுக்கு மறுமடியும் நினைவு வரும்போது சி.டி ஸ்கேன் பண்ணி பார்க்கனும் னு சொல்லிருக்காரு."
நல்ல உறக்கத்தில் இருந்த மதுமிதா பேச்சு குரல் கேட்டு விழித்துக்கொண்டாலும் கண்களை திறக்காமல் அவர்களின் உரையாடலை கவனிக்கலானாள்.
மதுவின் தந்தை கூறியதை கேட்ட அந்த காவல் அதிகாரி,"சார் நான் வெறும் இன்ஸ்பெக்டர் மட்டும் தான் .என்னோட கடமையை நான் செய்யறேன்."என்றார் கறாராக.
"இல்லை சார் நான் கமிஷனர்கிட்ட பேசிட்டேன்,"என்றவாறு தன் செல்பேசியை உயிர்பித்து அந்த இன்ஸ்பெக்டரிடம் கொடுக்க அவரோ மிக பவ்யமாக,"சரி சார் சரி சார் ஓகே சார் அப்படியே பண்றேன் சார்."
" நான் கமிஷனர் கிட்ட பேசிட்டேன் சார்.நீங்க அவரு சொன்ன மாதிரி அந்த காரை டிஸ்போஸ் பண்ணிடுங்க.உங்க டாட்டர வேற ஊருக்கு கூட்டிட்டு போயிடுங்க.முக்கியமா இந்த விஷயம் வெளிய யாருக்கும் தெரியாம பார்த்துக்கோங்க."என்றவாறு ,"அப்ப நான் வரேன் சார் ,"என்று அவர் வெளியேறினார்.அவரை வழி அனுப்பி வைக்க மதுவின் தந்தையும் வெளியேற மதுவின் தாய் அந்த அறையினுள் நுழைந்து மதுவின் அருகே அமர்ந்து அவளது தலையை கோதினார்.
உறக்கம் பாதியிலேயே கலலந்தமையால் ஏற்பட்ட சோர்வு அந்த தாயின் பரிவில் பறந்து போக.அந்த அறைக்குள் நடந்த சம்பாஷனைகளை யோசித்து பார்த்தாள் மதுமிதா.அவர்கள் எதையோ மறைக்கிறார்கள் என்பதை உணர்ந்தவளால் அது என்ன என்று யூகிக்க முடியவில்லை. அந்த நொடி முதல் தன் பெற்றோர் என்று கூறிக்கொண்டிருப்பவர்களை விட்டு அவள் விலக துவங்கினாள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro