பகுதி 33
அவள் கேட்ட அனைத்து கேள்விகளும் விக்ரமின் நிலையை மிகவும் மோசமாக்கியது.அவளின் கேள்வி கனைகளில் முதலில் திடுக்கிட்டவன் நொடிக்குள் தன்னை மீட்டெடுத்து ," இது ரொம்ப சின்ன பிள்ளைதனமான கேள்வியா இருக்கு மது."
"அது சின்னபிள்ளைதனமாகவே இருக்கட்டும் நீங்க பதில சொல்லுங்க முதல்ல."
"நான் பதில சொல்றேன் இந்த காஃபியை குடிச்சிட்டே கேளு,"என்று கூறியவன் அவள் கைகளில் காஃபியை கொடுக்க அவனின் அக்கறையில் கறைய தொடங்கிய மனதை சமநிலைக்கு கொண்டுவந்த மது காஃபியை சுவைத்தபடியே அவன் கூறப்போவதை கேட்கலானாள்.
" ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை பிடிச்சிருந்தா அவளைபத்தின எல்லா விஷயமும் அவனோட விரல் நுனியில இருக்கும்."
" அதெல்லாம் சரிதான் ஆனால் நான்தான் எங்க இருக்கேனே உங்களுக்கு தெரியாதே அப்பறம் எப்படி என்னை பத்தின விஷயங்களை சேகரிச்சீங்க?"
"உன்னை மறுபடியும் நான் சந்திச்சு கிட்டதட்ட ஒரு வாரம் ஆகுது மது.ஒரு வாரம் னா ஏழு நாள், 168 மணி நேரம் ஒரு நாட்டை பத்தியே விஷயத்தை சேகரிக்கிற நேரத்தில உன்னை பத்தி தெரிஞ்சுக்க முடியாதா என்ன?"
" ஏதோ சொல்றீங்க நானும் கேட்குறேன் இப்ப உங்ககூட வாக்குவாதம் பண்ற மனநிலையில நான் இல்லை.என் மனசுலயும் உடல்லையும் தெம்பும் இல்லை." என்ற வாறு தலையை இரு கைகளாலும் தாங்கிபிடிக்க அதே நேரத்தில் விக்ரமின் செல்பேசி அலைத்தது.அதில் மின்னிய ஜீவாவின் பெயரை கண்டவன் தயக்கத்துடன் மதுவின் மீது பார்வையை செலுத்தியவாறே அட்டெண்ட் செய்தான்.
" டேய்....எங்க இருக்குற? டியூட்டிக்கு நேரமாகிடுச்சு ,"
" இதோ மச்சி பத்தே நிமிஷம், "
" சீக்கிரம் வந்து சேரு,"என்றவாறு கால் ஐ கட் செய்தான்.
" என்னாச்சு அவசரமா எங்கேயாவது போக வேண்டியது இருக்கா?"
"போகணும் தான் ஆனா பரவாயில்ல கொஞ்சம் லேட்டானாலும் தப்பு இல்ல உனக்கு தலை வலி எப்படி இருக்கு பரவாயில்லையா சரியாயிடுச்சா போயிடுச்சா ?"
"அப்பா எத்தனை கேள்வி கொஞ்சம் கொஞ்சமாக கேளுங்க ஒன்னொன்னா கேளுங்க கேள்விக்கு பதிலை நாம் மறந்திட போறேன் "
மதுவின் கேள்விக்கு பதில் கூறாமல் அமைதியாக புன்னகைத்தான் ஆதித்தியன் என்ற விக்ரம்
"இதுக்கு ஒன்னும் பதிலே காணோம் அமைதியான சிரிப்பு மட்டும்தானா ஆனால் நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வந்த மாதிரி தெரியலையே?
"நான் பதில் சொன்னேன் நீ தான் கவனிக்கல"விக்ரமின் பதில் அவளுக்கு பெருமூச்சு கொடுத்தது ஆழ்ந்த பெருமூச்சு விட்டவள் பின்பு விக்ரமை நோக்கி கூறினாள்," நான் என்ன மனநிலையில் இருக்கிறேனு என்னாலேயே புரிஞ்சுக்க முடியல எனக்கு ஒரே குழப்பமா இருக்கு என்ன சுத்தி ஏதோ ஒரு மேகம் சூழ்ந்த மாதிரி மறைக்கிற மாதிரி எனக்கு தோணுது இப்ப என்னால எதுவும் சரியாக யோசிக்க கூட முடியவில்லை, "என்று கூறிய சிறு இடைவெளி விட்டவள் விக்ரம் ஏதோ கூற வருவதற்கு முன்பாகவே திரும்பவும் பேச தொடங்கினாள்," நீங்க எங்கேயோ வெளியே போகணும் என்று சொன்னீங்க ல சரி வாங்க கிளம்பலாம் ,"என்று கூறி அவ்விடத்தை விட்டு வெளியேறினாள் விக்ரம் பின்தொடர.
அமைதியாக மதுமிதாவை பின்தொடர்ந்தான் விக்ரம். தன் வண்டியை நிறுத்தி இருக்கும் இடம் வந்ததும் மதுமிதா விக்ரமிடம் ,"அவசரமா போகணும் சொன்னிங்களே நீங்க கிளம்புங்க நான் ஒரு கேப் ல போய்க்கிறேன் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை," என்று கூறினாள் அதற்கு விக்ரமுமோ ,"எவ்வளவு அவசரமாக இருந்தாலும் உன்னை விட முக்கியமானது எதுவும் இல்ல உன்னை நான் வீட்ல கொண்டு போய் விட்டுட்டு அதுக்கு அப்புறம் போகிறேன், " என்று கூறி அவனது கன்னத்தில் செல்லமாகத் தட்டினான் பின்பு தன் வண்டியில் ஏறி அமர்ந்து அவளை பின்புறம் அமருமாறு சைகை செய்தான் அதுவரை சூழ்ந்திருந்த மேகங்கள் மறைந்து தெளிவான சிந்தனை ஏற்பட்டது போல உணர்ந்த மதுமிதா புன்சிரிப்புடன் விக்ரமின் பின்னால் ஏறி அமர்ந்தாள்.
தன்னவள் பின்னே.அமர வேகமாக வண்டியை.செலுத்திய விக்ரம் மனது இறக்கை இல்லாமல் பறந்தது.மனதில் சந்தோஷம் மட்டுமே பொங்கி வழிய உலகை வென்ற உணர்வு கொண்டான்.அதற்கு நேர்மாறாக மதுவின்.மனமோ பல குழப்பங்களுக்கு ஆளானது.அவளுக்குள் ஏற்பட்ட உணர்வு ஆதியும் விக்ரமும் ஒருவரோ என்ற நினைக்க வைத்தது. அப்படி இருவரும் ஒருவராக இருந்தால் ஏன் தன்னிடம் உண்மை யை மறைக்க வேண்டும் ஏன் பெயரை மாற்றி கூற வேண்டும் என பலவாறு கேள்விகள் அவள் மூளையை குடைந்தது.
அவளது சிந்தனை அவளின் சுற்றுபுறத்தை மறக்க செய்தது.அவள் விக்ரமின் அருகே நெருங்கி அமர்ந்ததையோ அவளையும் அறியாமல் விக்ரமின் இடுப்பை அவள் கைகள் பிடித்ததையோ அவள் அறியவில்லை.
விக்ரமின் பைக் விரைவாகவே மதுவின் வீட்டை அடைய அவள் வீட்டை விட்டு சற்று தள்ளியே வண்டியை நிறுத்தியவன் தன்னை மறந்து அமர்ந்திருந்த மதுவிடம்,"மேடம் என்னை விட இன்னும் உங்களுக்கு மனசில்லையா?"என்று வினவ அப்பொழுது தான் சுயநினைவடைந்தவள் தன் செயலால் வெட்கப்பட்டு முகம் செந்நிறமாக மாற வேகமாக கீழே இறங்கி ஓட எத்தனித்தாள்.அவளை வைத்து கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த விக்ரமோ அவள் செயலை முன்பே யூகித்தது போல நொடிக்குள் அவள் கையை பிடித்து தன்னுடன் அடக்கினான்.
" விக்ரம் என்ன இது பட்டப்பகல் ல இப்படி நடு ரோட்டுல விடுங்க விக்ரம் ப்ளீஸ்."என்று கெஞ்ச," இதோ பாரு மது இந்த குட்டி மூளையை கசக்கி பிழியாம இரண்டு நாள் ரெஸ்ட் எடுத்திட்டு சீக்கிரமா வா நான் இன்னைக்கு மதியம் கிளம்பறேன் சரியா?"
அவன் அணைப்பும் அக்கறையான வார்த்தையும் மது மனதில் யானை பலம் கொடுக்க வேகமாக தலையை ஆட்டினாள்.
" சரி பத்திரமா போயிட்டு வா ," என்றவாறு மெலிதாக அவள் நெற்றியில் இதழ் ஒற்றி எடுத்து அவளை விடுவித்தான்.வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல வேகமாக வீட்டினுள் சென்று மறைந்தவளை கண்டு புன்னகை கொண்டவன் தன் இல்லம் நோக்கி விரைந்தான்.
வீட்டினுள் நுழைந்த மதுவை முகமெல்லாம் பூரிப்புடன் வரவேற்ற மதி," அக்கா அக்கா மாமா எங்க?? "
" மாமா வா??"
" ஆமா உன்னை அவுக்கதானே வீட்டுள்ள விட்டுட்டு போறதா சொன்னாங்க "
" ஏன் மதி யாருனே.தெரியாதவங்களை போய் மாமா னு கூப்பிடலாமா?"
" தெரியாதவங்களை யாராவது மாமானு கூப்பிடுவாங்களாகா? அவருதானே உன்னோடவர் அதனாலதான் தைரியமா மாமானு கூப்பிட்டேன்."
" ஹேய்...விட்டா கல்யாணமே பேசி முடிச்சிடுவ போலவே.அவரு என்னோட ப்ரெண்ட் வெல் விஷ்ஷர் அவ்ளோதான்."
" அக்கா உன்னை பத்தி எனக்கு தெரியாதா என்னதான் ப்ரெண்ட் வெல் விஷ்ஷர்னு சொன்னாலும் உன்னோட ஃபோன வாங்கி பேசுற அளவு நெருக்கமான உறவு தானே.என் கணிப்பு எப்பவும் தப்பாது மை டியர் சிஸ்டர்."
" மதி......"என்று கூறி அதற்கு மேல் வார்த்தை வராமல் தடுமாறிய தமக்கையை பார்த்த மதி," தோடா எங்க அக்காவுக்கு வெட்கப்பட கூட தெரியுதே,"
"சும்மா இரு மதி எனக்கு அவரு மேல ஒரு க்ரஷ் இருக்குதான் அதை நான் ஒத்துக்கறேன்.ஆனால் கொஞ்சம் பயமாவும் தயக்கமாவும் இருக்கு."
"எதுக்கு பயம் எதுக்கு தயக்கம்."
" உங்கிட்ட சொல்ல என்ன மதி கடந்த நாலு வருஷத்தில என் வாழ்கையில எந்த ஆணும் இல்லைனு எப்படி நம்புறது?"
" அட அக்கா இதுக்கா இவ்வளவு தயக்கம். ஒரு வேளை உன்னால மறக்கப்பட்ட நாலு வருஷத்தில ஒருத்தர் இருந்தாருனு அவரு உன்கிட்ட வந்திருக்கனுமே?"
"அவரு வந்திருக்களாம் ஆனாலு எனக்கு அடையாளம் தெரியாதே சோ அவரை நான் அவாய்ட் பண்ணியிருக்களாம்.அவரு என்மேல கோபப்பட்டு போயிருக்களாமே?"
" நீ அவரை அவாய்ட் பண்ணதால அவரு உன்கிட்ட வரலைனா அப்ப அந்த காதல் எப்படி ஆழமானதா இருக்கும்?"
" புரியாம பேசாத மதி என்னோட மறதியை நான் அவருகிட்ட சொல்லாம இருந்திருக்கலாம் அதனால என்னை அவரு தப்பா நினைச்சிருக்கிலாம்."
" அக்கா இப்படி உறுதியில்லாம எத்தனையோ விஷயங்கள் இருக்கு கா ஒவ்வொன்னுக்கும் நம்மை தயங்கினா வாழ்கையே வாழ முடியாது."
" அட என் குட்டி தங்கச்சி எப்ப பெரிய பெரிய விஷயமெல்லாம் பேச ஆரம்பிச்சாங்க?"
"பேச்சை மாத்தாத கா ,உனக்கு அவரை பிடிச்சிருக்கா?""
"பிடிச்சிருக்குதான்...ஆனால்,"
" இந்ந ஆனா ஆவன்னா லாம் வேணாம்.பிடிச்சிருக்குல அப்ப லவ் பண்ணு."
" அடியேய் என் செல்ல மதி . இப்ப அது இல்லை பிரச்சினை ஒரு வேளை எனக்கு பழசு நியாபகம் வந்தா? அப்ப நான் யாராயாவது லவ் பண்ணியிருந்தா?பிரச்சினையே அதான் மதி."
" அக்கா நான் இப்ப உன்கிட்ட ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோ உள்ளுணர்வு னு நம்ம எல்லாருக்கும் இருக்கும்.இப்போ நம்ம ஆனந்த் அத்தான் இருக்காரு அவர உனக்கு பிடிக்குமா?"
" ஆனந்தா??"
" ம் அவரு தான் உனக்கு அவரை பிடிக்குமா?"
" சே சே சுத்தமா பிடிக்காது ."
" ஏன் பிடிக்காது?"
" ஏன் பிடிக்காது னா பிடிக்காது அவ்ளோதான்."
" அவரு அழகா இருக்காரு நல்லா படிச்சிருக்காரு நமக்கு சரிசமமான ஸ்டேடஸ் ல இருக்காரு புத்திசாலியும் கூட கெட்ட பழக்கங்கள் கொஞ்சமும் இல்லை.இவ்வளவு நல்ல விஷயங்கள் இருந்தும் உனக்கு ஏன் அவரை பிடிக்காது?"
" என்ன மதி நீ இதெல்லாம் இருந்தா ஒருத்தரை பிடிக்கனுமா?என்னமோ அத்தான் மேல ஒரு பிடிப்பு இல்லை.காரணம் சொல்ல தெரியலை."
" கரெக்ட் இத தான் நான் எதிர்பார்த்தேன்.உனக்கு நியாபக மறதி இருந்த அந்த நாலு வருஷமும் நம்ம அப்பாவும் அம்மாவும் உனக்கு அவரை கல்யாணம் பண்ணி வைக்கனும் னு ரொம்ப ட்ரை பண்ணாங்க.ஆனால் நீ அவரை பிடிக்கலை னு சொன்ன.நம்ம அப்பா அப்போ நான் கேட்ட அதே கேள்வியை உன்கிட்ட கேட்டாங்க அதுக்கு நீ என்ன பதில் சொன்ன தெரியுமா?"
" என்ன பதில் சொன்னேன்?"
" இப்ப என்கிட்ட நீ என்ன பதில் சொன்னியோ அதே பதில தான் அப்போவும் சொன்ன.ஆனால்...."
" ஆனால்....என்ன ஏன் நிப்பாட்டிட?"
" உன்னை கட்டாயபடுத்தி உனக்கு அவரை நிச்சயம் பண்ணிட்டாங்க."
" என்ன சொல்ற மதி? எனக்கும் ஆனந்துக்கும் நிச்சயம் முடிஞ்சிடுச்சா?"மதி சொன்ன விஷயம் மதுவிற்கு அதிர்ச்சி யாக இருந்தது. முதல் நாள் ஆனந்த் வரம்பு மீறி நடந்துகொண்டதும் பாட்டி கம்பெனியில் ஆனந்த் ஐ தன் வருங்கால கணவன் என்று அறிமுக படுத்திய காரணமும் இப்பொழுது புரிந்தது மதுவிற்கு.
" சரி கா அது இப்ப நடக்காது அந்த கதையை விடு. நான் உன்கிட்ட என்ன சொல்ல வந்தேனா."என்றவளை இடைமறித்த மது ," இப்ப நடக்காது ஏன் இவ்வளவு உறுதியா சொல்ற?"
" அக்கா உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும். உனக்கு பிடிக்காததை செய்ய வைக்க யாராலும் முடியாது.அதனாலதான் உனக்கு நினைவு திரும்புறதுக்குள்ள கல்யாணம் முடிக்கனும்னு வீட்ல பேசுனாங்க."
" என்ன சொல்ற மதி அப்படி அவசரமா கல்யாணம் பண்ண என்ன அவசியம் வந்துச்சு?"
"அதை பத்தி எனக்கு எதுவும் தெரியலைகா, ஐயோ அக்கா அதை விடு அதெல்லாம் முடிஞ்சு போன விஷயம் இப்ப நான் சொல்ற முக்கியமான பாய்ண்ட் நோட் பண்ணு."
" இதுவரை நீ சொன்னதையே ஜீரணிக்க ஒரு வாரம் ஆகும் போலவே.சரி சொல்லு ,"
" உனக்கு எப்பவும் அத்தானை பிடிக்காது கொஞ்சம் எட்ட நின்னுதான் பேசுவ அதே மாதிரி தான் உனக்கு நியாபகம் மறந்து போனபோதும் நீ நடந்துகிட்ட.அதுக்கு காரணம் உள்ளுணர்வு. அதே மாதிரி ஒரு வேளை நீ யாரையாவது காதலிச்சிருந்தேனா அவங்களையே உன்னை திரும்ப நினைக்க வைக்கும் இப்ப மாமாவை உனக்கு பிடிச்சிருக்கு.ஒரு வேளை நீ ஏற்கனவே யாரையாவது விரும்பி இருந்தேனா அது மாமாவாதான் இருக்கனும்.இதுதான் என் யூகம்.சோ நீ தடையெல்லாம் தூக்கி போட்டு மனசு சொல்றதல கேட்டு சந்தோஷமா இரு."
தன் தமக்கை கூறிய விஷயங்களை கேட்ட மது ஒரு கணம் ஸ்தம்பித்தாள் ,தனக்கு உணர்வு பூர்வமாக தோன்றியது தன் தங்கைக்கு யதார்தமாக தோன்றியிருக்கிறது இதை தற்செயலானதாக என்னுவதா அல்லது உண்மை என்று நம்புவதா என்று குழம்பினாள் ,பின் தன் தங்கையிடம் ," சரி மதி நான் யோசிக்கிறேன் இப்போ ரொம்ப பசிக்குது நான் கை கால் கழுவிட்டு வரேன் சாப்பிடலாம்,"என்று கூறி தன் தமக்கையை தன் அறையிலிருந்து வெளியேற்றினாள்.
மதி அறையை விட்டு வெளியேறியவுடன் கதவை சாத்திய மது அதில் சாய்ந்து கண்கள் மூடி நின்றாள்.எல்லோருக்கும் சுகமாக இருக்கும் காதல் தனக்கு மட்டும் ஏன் சுமையானது என்று எண்ணியவள் கண்கள் கலங்கியது. தனது காதலை வெளிப்படுத்த முடியாத தன் நிலையை எண்ணி வருந்தியவள் பசி மறந்து படுக்கையில் விழுந்தாள்.கண்கள் தாமாக கண்ணீரை சிந்த அதை அமைதியாக அவளது தலையனை உள்வாங்கி கொண்டது.
எவ்வளவு நேரம் அவ்வாறு இருந்தாளோ அவள் அறியாள் செல்பேசி சத்தத்தில் கண் விழித்தவள் செல்லில் மின்னிய மதியின் பெயரை பார்த்து செல்லை உயிர்பித்தாள்.
" அக்கா...சீக்கிரம் வா உனக்காக நாங்க எல்லாம் காத்திருக்கோம்."என்றுரைக்க அப்பொழுது தான் பசி நினைவு வந்தவளாக ," இதோ மதி பத்தே நிமிஷம் ," என்றவாறு ஊடை மாற்ற சென்றாள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro