Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பகுதி 29

மதுமிதா வை அவள் வீட்டில் இறக்கிவிட்ட ஆதித்யன் சந்தோஷ மனநிலையுடன் தன் இல்லம் நோக்கி சென்றான்.அயர்ந்து உறங்கும் தன் மகள் நிலாவின் அருகே படுத்தவன் நெடுநாட்களுக்கு பிறகு நிம்மதிமாக உறங்கினான்.

அடுத்த நாள் காலை மிக அழகாக விடிய நிலா உறங்கையில் அவளுக்கு தேவையான உணவை தயாரித்த ஆதி.அவளிடம் விரைந்தான் ," நிலா.....குட்டி.....எந்திரிங்க எந்திரிங்க இன்னைக்கு தான் கடைசி நாள் ஸ்கூல்....கம்ஆன் கம்ஆன்."

" ம்...அப்பா ஒரு ஐஞ்சு நிமிஷம் மட்டும் தூங்கிக்கறேனே....ப்ளீஸ்...."

" சரி ஐஞ்சு நிமிஷம் தான் " என்று கூறியவன் அவளுக்காக வெந்நீரை தயார் செய்தான்.

தன் மகளை கெஞ்சி கொஞ்சி ஒரு வழியாக பள்ளியில் இறக்கி விட்டவன் இடையில் அவள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் சொல்ல தவறவில்லை.

நிலாவை பள்ளியில் விட்டவன் அவள் பள்ளி அலுவலகத்திற்குள் நுழைந்தான் . நிலாவின் கோப்புகளை வாங்கி அவர்களிடமிருந்து விடைபெற்றவன் நிலாவின் வகுப்பறையில் இனிப்புகளை வழங்கிவிட்டு நிலாவை அழைத்துக்கொண்டு கிளம்பினான்.

" அப்பா...அப்பா...நான் கொஞ்ச நேரம் இந்த பார்க்ல விளையாடவா ? அடுத்து எப்ப இதை பார்க்க போறோம்னு தெரியலையே,"முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு பேசிய தன் பெண்ணை கண்டு சிரித்தவன்," ஏய் வாலு இந்தா இருக்கிற பெங்களூர் தான் போகப்போறோம் அதுக்கு எதுக்கு இவ்ளோ சோகம் ,அப்பா போய் பைக் எடுத்திட்டு வர்ற வரை நீ இங்க விளையாடு சரியா .நான் வந்து ஹார்ன் அடிக்கறேன்."

" தேங்கயூ டாடி...." என்றவாறு பார்க்கிற்குள் சென்றாள்.சிறிது நேரம் வரை விளையாட்டில் கவனமாக இருந்த நிலா மது உள்ளே நுழைந்ததையோ தன்னை கவனிக்க தொடங்கியதையோ உணரவில்லை.

" ஹாய்...பேபி" என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்த நிலா அங்கே தன் தாயை பார்த்து திகைத்தாள்." அம்மா......" என்று அழைத்து மதுமிதாவை கட்டிக்கொள்ள ஆவல் பிறந்த போதும் தன் தந்தையின் பேச்சு நினைவிற்கு வர தன்னை தன் தாயக்கு அடையாளம் தெரியவில்லை என்று புரிந்து கொண்டவள் " ஹாய்..."என்று கூறி புன்னகை பூத்தாள்.

"இங்க வாங்க....."மது கூப்பிட தயங்கி தயங்கி மதுவிடம் வந்த நிலா.மதுவை வைத்த கண் வாங்காமல் பார்த்து ," சொல்லுங்க...அம்....ஆண்டி." .வாய்வரை வந்த அம்மா என்ற செல்லை கஷ்டப்பட்டு ஆண்டி என்று மாற்றி கூறி புன்னகைத்காள்.

" நீங்க ஏன் தனியா விளையாடறீங்க உங்களுக்கு க்ளாஸ் இல்லையா??"

" எனக்கு க்ளாஸ் முடிஞ்சிடுச்சு எங்க அப்பா வந்துட்டாங்க பைக் எடுக்க போயிருக்காங்க அவங்களுக்காக இங்க காத்திருக்கேன்."

" ஓ.....ஒகே ஒகே டா.ஆனால் இப்படி தனியாலாம் வர கூடாது சரியா??"

"ம்...ஓகே அம்.ஆண்டி."
பேசிக்கொண்டிருக்கையில் பைக் ஹார்ன் கேட்க ," அப்பா வந்துட்டாங்க நான் போயிட்டு வரேன் ," என்று கூறியவள் மதுமிதா சுதாரிக்கும் முன் அவள் கண்ணத்தில் முத்தமிட்டு விட்டு ஓடி தன் தந்தையை விரைவில் அடைந்தவள்," அப்பா.....அப்பா...சீக்கிரம் சீக்கிரம் கிளம்புங்க கிளம்புங்க வேகம் வேகம்...."என்று கூறி துரிதப்படுத்தினாள்.

" என்னாச்சு நிலா " என்று வினவினாளும் பைகை விரைவாக ஓட்டி வெளியுறினான் ஆதித்யன்.

" நான் அம்மாவை பார்த்தேன்பா..." என்று நிலா கூற வண்டியை சடன் ப்ரேக் போட்டு ரோட்டின் ஓரத்தில் நிறுத்தினான்.

" என்ன??? அம்மாவையா ?மதுவையா??"

" ம்....ஆமாம்....அப்பா....ஆனால் அப்பா நிலா குட் கேர்ள் அம்மாவை நான் அம்மானே கூப்பிடலை...கஷ்டப்பட்டு ஆண்டினு கூப்டுடேன்."
நிலா கூறியதை கேட்ட ஆதியின் உள்ளம் வேதனை கொள்ள." நிலா சாரி மா சாரி நான் உன்னை தனியா விட்டுட்டு போயிருக்க கூடாது."

" ஏன்பா....அம்மாக்கு நிலா யாருனு தெரியாமலே போயிடுமா??"

" சே...சே....ஏன்டா பாப்பா அப்படி சொல்ற ? "

" எனக்கு அம்மா வேணும்பா.....ப்ளீஸ்பா நீங்க நம்ம அம்மாவை இங்க கூட்டிட்டு வந்திடுங்கபா ப்ளீஸ் பா."

பைகின் முன்னால் அமர்ந்திருந்த நிலா அழத்தொடங்க ஆதி அவளை தன்புறம் திருப்பி அமரவைத்து அணைத்துக்கொண்டான்.

" ஏன்பா இங்க நடு ரோட்ல நின்னுகிட்டு ரெண்டு பேரும் என்ன பண்றீங்க போங்க போங்க வீட்ல போய் அழகையை தொடருங்க." என கரகரப்பான குரல் கேட்டு இருவரும் நிமிர்ந்து பார்க்க அங்கே ஜீவா சிரித்துகொண்டு நின்றான் ," ஜீவா அங்கிள்.....," என்ற வாறு நிலா அவனிடம் தாவினாள்.

" நம்ம ஐஸ்கிரீம் சாப்பிடலாமா??"

" ஐ.....ஜாலி ஜாலி.." என்று கத்தியவள் பின்,"ச்சு.....ஆனால் அப்பா...."

" உங்க அப்பா தானே ஒன்னும் சொல்லமாட்டான."

" ஜீவா இப்பதான் அவளுக்கு காய்ச்சல் சரியாயிருக்கு,"

"அது வேற இது வேற .உங்கிட்ட யாரு இப்ப கேட்டா நானும் நிலாவும் ஐஸ்கிரீம் சாப்பிட போறோம் நீ வரியா??"

" இல்லை ஜீவா நீங்க இரண்டு பேரும் போங்க." என கூறியவன் ," ஆமா....உனக்கு இப்ப ட்யூட்டி இல்லையா ?"

"இல்லை ஆதி நீ இன்னைக்கு கிளம்பிறதால லீவ் போட்டுடேன்.சரி நீ எப்ப கிளம்புற??"

" பேக்கிங்கெல்லாம் முடிச்சிட்டேன்.மதியம் சாப்டுட்டு கிளம்பனும்.ஆனால்..."

" என்ன இழுக்குற நான் என்ன செய்யனும்?"

"ஒரு முக்கியமான வேலை நியாபகம் வந்துச்சு இப்பதான்.நீ ஐஸ்கிரீம் சாப்டுட்டு நிலாவோட வீட்டுக்கு போயிடறியா நான் வந்திடறேன்."

" இவ்ளோதானா ஒன்னும் அவசரமில்லை போயிட்டு வா ." என்று கூறியவனிடம் நிலாவையும் வீட்டு சாவியையும் ஒப்படைத்துவிட்டு பைகுடன் மீண்டும் நிலாவின் பள்ளி நோக்கி சென்றான்.

****************

"அக்கா......இங்க என்ன நடக்குதுனு.எனக்கு சொல்றியா?"

" அது எனக்கே தெரியலையே மதி."என்றாள் வேதனையுடன்.

" அக்கா....."அவள் அழைத்து முடிக்கவும் மதுமிதா தன் தங்கையின் தோளில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.

" கவலைபடாத கா எல்லாமே சீக்கிரம் சரியாகிடும் நீயும் பழையமாதிரி எந்த கவலையும் இல்லாம சந்தோஷமா இருக்கதான் போற,"

" எனக்கு அந்த நம்பிக்கை இல்லை."

" என்னகா இது நீ இப்படி மனச தளரவிடலாமா?"

" நான் வேற என்னதான் பண்றது மதி?என் முன்னாடி பல கேள்விகள் கொட்டி கிடக்குது அதுல ஒரு கேள்வியை தேடி.எடுத்து ரொம்ப நேரம் போராடி பதில கண்டுபிடிச்சா அது ஆதித்யன் அப்படீங்கிறவரை கை காட்டுது. சரினு வேற சம்பந்தமே இல்லாத கேள்வியை எடுத்து தேடி போனா அதுவும் ஆதிகிட்டதான் கொண்டுபோகுது.இப்ப புதுசா நிலாவும் அந்த பதிலோட சேர்ந்து வருது.இப்படியே போரா எனக்கு கூடிய சீக்கிரத்தில பைத்தியம் தான் பிடிக்கும்."

" அக்கா இந்த நிலா ஆதித்யன் யாரு?"

" எனக்கு தெரியலையே...அதானே பிரச்சினை .நிலா யாரு ? ஆதித்யன் யாரு? இவங்க ரெண்டு பேருக்கும் என்னோட நாலு வருஷத்துக்கும் என்ன சம்மந்தம் நிலாவுக்கும் ஆதித்யனுக்கும் என்ன சம்பந்தம்? இப்படி எதுவுமே எனக்கு நியாபகம் இல்லையே?"

" அதையேன்கா நீ தேடி போற ? நீ தேடி போனா உனக்கு காயம் தான் மிஞ்சுது?"

" என்னால முடியலையே மதி .அந்த நாலு வருஷம் என்ன நடந்துசுசனு தெரியாம என் மனசு சொல்றதையும் கேட்க முடியாம இரண்டுக்கும் நடுவுல மாட்டிகிட்டு முழிக்கறேன் மதி."என்று கூறியவள் பின் ஏதோ நினைவு வந்தவளாக ," அது இருக்கட்டும் நீ ஏன் என்னை இங்க கூட்டிட்டு வந்த?"

"அக்கா அது நாலு வருஷம் முந்தி நடந்த விஷயம்கா.நம்ம எல்லாரும் சென்னைக்கு வந்ததுக்கப்பறம் நீ உன்னை ரொம்ப தனிமை படுத்திக்கிட்ட.சாப்பிடகூட நீ உன் ரூமை விட்டு வெளியே வரலை அம்மாதான் உனக்கு சாப்பாடு ரூம்க்கு வந்து கொடுப்பாங்க."

" அப்படியா? ஏன் உன்கிட்ட கூட நான் பேசலையா??"

" என்கிட்ட மட்டுமில்லை நம்ம வீட்ல யாருகிட்டயும் நீ பேசவேயில்லை உன்னை அப்படியே விட்டா நீ ரொம்ப டிப்ரெஷன் ஆகிடுவனு அம்மா உன்னை ஒரு யோகா மெடிடேஷன்.க்ளாஸ் சேர்த்துவிட்டாங்க.."

" வாட்....ரியலி.....ஹா...ஹா.........ஹா... மதி நான் என்ன பாட்டியா என்னை யோகா க்ளாஸ் சேர்த்துவிட்ருக்காங்க??"

"அக்கா....உனக்காகதானே யோசிச்சு பண்ணாங்க நீ சிரிக்கறியே," என்று முகத்தை சோகமாக வைக்க ," ஹா.....ஹா.....மதி நீயே யோசிச்சு பாரு என்னை ஹாப்பியா வைக்கனும்னா அதுக்கு யோகா க்ளாஸ்லயா சேர்த்து விடனும்? எதாவது ஒரு ஆக்டிவிடி லைக் மியூசிக் டான்ஸ் இதெல்லாம் சேர்த்தா ஒரு அர்த்தம் இருக்கு....ஹா.....ஹா.....," என்று கூறியவள் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் விழுந்து விழுந்து சிரித்தாள்.அவள் சிரிப்பதையே வைத்த கண் எடுக்காமல் பாரத்த மதியின் மனம் நிறைந்தது ," அக்கா நீ இப்படி சிரிச்சு நான் பார்த்து எவ்ளோ நாளாச்சு நீ இப்படியே சந்தோஷமா இருக்கனும் எப்பவுமே."

" ம்.....எல்லாம் சரியாகிடும் சரி நீ மேல சொல்லு அப்பறம் என்னாச்சு நான் க்ளாஸீக்கு போனேனா??"

" ம்....ஒரு மாசம் ரெகுலரா போனகா ஆனால் அதுக்கபுறம் நீ க்ளாஸீக்கு வரலைனு யோகா சென்டர்ல இருந்து சொன்னாங்க ஆனால் நீ வீட்ல இருந்து எப்பவும் போல கிளம்பி இரண்டு மூனு மணி நேரம் கழிச்சுதான் வந்த அதனால அம்மா என்னை உன்னை ஃபாலோ பண்ண சொன்னாங்க," இதை கூறி நிறுத்தியவள் தன் தமக்கை தன்னை திட்டுவாளோ என்று எண்ணி அவளை நோக்க அவளோ மதி கூறும் கடந்த காலத்தை கவனிக்கும் ஆவலுடன் இருப்பதை கண்டு தைரியமாக மேலே கூற தொடங்கினாள்," நீ எப்பவும் போல வீட்ல இருந்து கிளம்பி நேரா இந்த இடத்துக்கு வந்த,"

" என்ன? இங்க வந்தேனா?"

"ஆமா அந்த யோகா சென்டர் இந்த பில்டிங்க்கு பக்கத்தில தான் இருக்கு ஆனால் நீ அங்க போகலை நீ நேரா இங்க வந்து இந்த பார்க்ல உட்காந்து இங்க விளையாடிட்டு இருந்த பசங்களை கவனிக்க ஆரம்பிச்ச , அதுக்கபுறம் உன்கிட்ட நிறைய மாற்றம் தெரிய ஆரம்பிச்சது .அதனால நாங்க யாரும் நீ இங்க வரது தெரிஞ்ச மாதிரி காட்டிக்கலை .நீ சந்தோஷமா இருந்தா அதே எங்களுக்கு போதுமானதா இருந்துச்சு, அதனால தான் நான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன்.சாரிகா இப்படி ஒரு சம்பவம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா உன்னை இங்க கூட்டிட்டு வந்திருக்கவே மாட்டேன்."

" ஹே.....நீ எதுக்கு சாரி கேட்குற இப்படி நடந்தது உன்னோட தப்பு இல்லை. இன் ஃபாக்ட் உன்னால நிறைய கேள்வாகளுக்கு விடை தெரிஞ்சிருக்கு."

" என்னகா சொல்ற என்னலாம் தெரிஞ்சுகிட்ட சொல்லுகா சொல்லுகா ப்ளீஸ்....ஶ்ரீ"

" ம் ....கூம்.நீ சின்ன பொண்ணு உனக்கு சொன்னாலாம் புரியாது.சரி மதி எனக்கு ஒரு சின்ன உதவி மட்டும் செய். நான் கொஞ்ச நேரம் இங்க தனியா இருக்கனும் னு நினைக்காறேன்.நீ கிளம்பு நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்."

" ஆனால் அக்கா உனக்கு வழி தெரியாதே அதெல்லாம் எனக்கு தெரியும் நீ கிளம்பு." அவளை அவ்விடம் விட்டு கிளப்பியவள் தனியாக அங்கே அமர்ந்து ஆளற்ற அந்த பார்கை வெறித்தவள் பின் ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து கிளம்பி அந்த காம்பவுண்ட் விட்டு வெளியேறினாள்.

சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்திருந்த அந்த இடம் உயர்தட்டு வாழும் வீடுகள் நிறைந்திருந்தது.இருபுறமும் பங்களா போன்ற வீடுகளும் இடையிடையே உயர்தர சிறிய வீடுகளும் நிறைந்திருக்க இருபுறமும் மரங்கள் அடர்ந்து காணப்பட்டன.அந்த இதமான சூழலில் மனதை பரிகொடுத்தவள் கால் போன போக்கில் நடக்கலானாள்.சிந்தனை முழுவதிலும் நிலாவும் ஆதியும் நிறைந்திருக்க திடீரென " மதும்மா......." என்ற குரல் கேட்டு திரும்பி பார்க்க அவள் நின்றிருந்த இடத்திற்கு எதிரே ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் செக்யூரிட்டி உடையில் முகத்தில் புன்னகையுடன் நின்றிருந்தார்.

அவளையும் அறியாமல் அவளது கால்கள் அவர் அருகே செல்ல அவரோ," நல்லா இருக்கீங்களா??? தம்பி நீங்க பாட்டி வீட்ல இருக்கீங்கனு சொன்னாரு இப்ப உடம்பு எப்படி இருக்கு?"என்று அவர் வினவ மதுமிதா வின் மனமோ ," மீண்டும் ஆதித்யனா????" என்று உறைந்தது.










Bạn đang đọc truyện trên: Truyen247.Pro