Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பகுதி 26

ஜீவாவிடம் பேசிய ஆதித்யன் குழப்பத்துடனே வீட்டை அடைந்தான்.

" வா...ஆதி ஏன் இவ்வளவு நேரம்? உன்னை காணாம நிலா ஒரே அடம்."

" ஐயோ....மறந்துட்டேன் மாஜீவாகிட்ட பேசிகிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியலை.எனக்கு ஒரு கால் பண்ணியிருக்கலாம் இல்லையா மா ? இப்ப நிலா எங்க?"

" உனக்கு கால் பண்ணேன் ஆனால் உன் செல் வீட்டிலயே வைச்சிட்டு போயிட்ட.அவளோட அழுகையை சமாளிக்க முடியாம இப்ப தான் அப்பா பக்கத்து கடைக்கு கூட்டிட்டு போயிருக்காங்க."

" ம்....."

" சரி நீ என்ன முடிவுல இருக்க??"

"எதைப்பத்தி கேட்கறீங்க??"டவலை வைத்து முகம் துடைத்தவாறே ஒரு கண் வாசல் புறம் இருக்க தன் அன்னையை கேட்டான் ஆதி.

அலைபாயும் அவன் கண்ணில் இருந்தே அவனது தேடலை புரிந்து கொண்டவர்," நிலாவை திரும்ப இங்கயே விட்டுட்டு போகபோறியா??"

அவர் கேள்விக்கு பதில் கூறி ஆதி எத்தனிக்க," இல்லை........நான் அப்பாகூடதான் இருப்பேன்," என்றவாறு வாசலில் இருந்து மூச்சு வாங்க ஓடி வந்து தன் தந்தையை அணைத்துக்கொண்டாள் நிலா.

" யாரு சொன்னா நான் நிலாவை விட்டுட்டு போகறேன்னு ?நம்ம எல்லாருமேதான் போக போறோம்."

" ஐயா......ஜாலி ஜாலி எல்லாருமேவாபா??"

" ஆமாடா எல்லாருமேதான் பாட்டி , தாத்தா, நிலா, நான் எல்லாரும் தான் போறோம்."

" ஆதி....நிலாவை அம்மாகிட்ட விட்டுட்டு வா உன்கிட்ட கொஞ்சம் பேசனும்," பெங்களுரிலிருந்து வந்ததிலிருந்து ஆதியிடம் ஒரு வார்த்தையும் பேசாத அவன் தந்தை ஆதியை அழைக்க ஆனந்தமாக அவருடன் சென்றான்.

ஆதியின் பெற்றோர் குடியிருந்த சென்னை வீடு பிரம்மாண்டமானதாய் இல்லாவிடினும் அதுவும் பெரிய வீடாகவே இருந்தது.அதன் இருபுறமும் சிறிய தோட்டம் அந்த வீட்டிற்கு மேலும் அழகு சேர்க்க அந்த தோட்டத்தில் நடப்பட்டிருந்த பல வகை பூக்களின் மனம் மனதிற்கு இதம் தருவதாக இருந்தது.அந்த தோட்டத்தின் அழகை ரசிப்பதுபோல பூக்களை பார்த்த வண்ணம் நின்றிருந்தார் ஆதியின் தந்தை.

" அப்பா....என்கிட்ட ஏதோ பேசனும்னு சொல்லிட்டு எதுவுமே பேசாம இருக்கீங்களே?" அங்கு நிலவிய அமைதியை கலைக்கும் விதமாக கேட்டான் ஆதி.

"ஹம்......நானும் உங்க அம்மாவும் திரும்ப கோயம்புத்தூர்க்கே போயிடலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்."

" ஏன்பா திடீர்னு இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கீங்க??"

" எங்களை வேற என்னபா செய்ய சொல்ற ? எங்களோட சொந்த ஊரான கோயம்புத்தூரை விட்டுட்டு சென்னைக்கு குடி வந்து நாலு வருஷத்திற்கு மேல ஆகுது.இந்த நாலு வருஷமா நீ எங்க கூட இல்லாடியும் ஒரே ஊருல பக்கத்தில இருந்த அதனால ஒன்னும் பெருசா தெரியலை.இப்ப நீயும் பெங்களூர் போற ஐடியாவில இருக்க .வயசான காலத்தில நாங்க ஏன் இந்த ஊருல தனியா கஷ்டப்படனும்? அதுக்கு பதிலா சொந்த ஊருக்கே போயிடலாமே"

" நீங்க ஏன் சென்னையில இருக்கனும் நம்ம எல்லாருமே பெங்களூர் போயிடலாம்பா."

" அது சரியா வராதுபா."

"ஏன்பா சரியா வராது?நீங்க இல்லாம நிலாவும் கஷ்டப்படுவா."

" இல்லை ஆதி இப்ப நிலாவுக்கு தேவை தாத்தா பாட்டி இல்லை.அவளுக்கு தேவை அம்மாவோட அன்பு தான்.நாங்க உங்க கூட.இருந்தா நீ நிலாவோட  அம்மாவை கூட்டிட்டு வரதுக்கு வேகம் காட்ட மாட்ட, அதனால நாங்க பெங்களூர் வரலை நீ நிலாவை கூட்டிட்டு  போ நாங்க நம்மோட பழைய வீட்டுட்டு போறோம்.இதான் என் முடிவு, " கூறியவர் ஆதியின் பதிலுக்கு காத்திராமல் வேகமாக வீட்டினுள் நுழைந்தார்.

தோட்டத்திலிருந்த மர நாற்காலியில் அமர்ந்த ஆதி தன் அப்பா கூறாயதை நினைவு கூர்ந்தான் மறந்தும் அவர் மதுவின் பெயரை சொல்லாதது, பெங்களூர் வர மறுப்பது எல்லாமும் மதுவின் மேல் இருக்கும் அதீத வெறுப்பினால் என்பதை உணர்ந்து கொண்ட ஆதியின் மனம் வேதனை கொண்டது.காலம் தான் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என எண்ணியவன் தான் கவனிக்க வேலைகள் நினைவு வர மெதுவாக எழுந்து வீட்டிற்குள் சென்றான்.

" அப்பா......" என்ற நிலாவின் குரல் வந்த திசையை பார்தவன் கேள்வியாக நிலாவை ஏறிட்டான்.அவனது கேள்வியை புரிந்து கொண்ட அந்த புத்திசாலி பெண்ணோ," அப்பா வாங்க நேரமாச்சு."என்றாள்.

" எங்க போக நேரமாச்சு நிலாகுட்டி?"

" என்னப்பா மறந்துட்டீங்களா? ஸ்கூல் போகனும்ல?"

" ஸ்கூலுக்கா..? வேண்டாம் குட்டி, உனக்கு இப்பதான் உடம்பு சரியாகிருக்கு  அது மட்டுமில்லாம நம்ம தான் வேற ஊருக்கு போக போறோமே புது ஸ்கூல்ல படிக்கலாம் இன்னைக்கு நல்லா ரெஸ்ட் எடுங்க. நாளைக்கு டிராவல் பண்ணணும்ல"

" அதான் பா நானும் சொல்றேன் நான் வேற ஸ்கூலுக்கு போக போறேன்ல  என் ப்ரெண்ஸெல்லாம் இனி பார்க்க முடியாதுல அதனால இன்னைக்கும் போறேன்பா...ப்ளீஸ்..."

" இன்னைக்கு அப்பாவுக்கு கொஞ்சம் வேலை இருக்கே மா,"

" ம்....."என்று ஒரு நொடி ஆள்காட்டி விரலை தாடையில் வைத்து கூறியவள் ," ஆ.....அப்ப இப்படி செய்யலாம் இன்னைக்கு என்னை ஸ்கூல்ல விட்டுட்டு நீங்க வெளிய போவீங்களாம் உங்க வேலையெல்லாம் முடிச்சிட்டு வீட்டுக்கு வரும்போது என்னை கூட்டிட்டு வருவீங்களாம்.நாளைக்கு இரண்டு பேரும் போய் ஷ்கூல்ல எல்லாருக்கும் பை சொல்லிட்டு வந்திடலாம், எப்படி சூப்பர்  ஐடியாலபா..???"என்று கூறிய அந்த குழந்தையை வாரி அணைத்துக்கொண்டவன்," நிலாவோட பேச்சுக்கு மறு பேச்சா??மூச் அப்படியே செஞ்சிடலாம்." என்று கூறிக்கொண்டே அவளை தூக்கிக்கொண்டு டைனிங் ஹால் சென்றவன்," நிலா சாப்டாச்சா??"

" ஓ....சாப்டாச்சே.....நீங்கதான் இன்னும் சாப்பிடலை."

" இரு குட்டி பத்தே நிமிஷம் அப்பா போய் குளிச்சிட்டு சாப்டுட்டு வந்திடறேன் ஸ்கூல் போலாம்,"என்றவாறு தன்னறை நோக்கி சென்றான்.

கூறியபடியே பத்து நிமிஷத்தில வந்தவன் கரு நீல நிற ஜீன்ஸும் வெளிர் நீல நிற டீ ஷேர்டுடனும் வந்தவன் கம்பீர அழகுடன் இருந்தான்.

" வாங்க வாங்க பா..சீக்கிரம் வாங்க," என்று துரிதப்படுத்த ஆதியோ,அப்படி என்ன சாப்புடு வரவேற்பெல்லாம் பலமா இருக்கு,"என்று வினவினான்.

" உனக்கு பிடிச்ச சப்பாத்தி கிழங்குதான் ஆதி," இம்முறை பேத்திக்கு பதில் பாட்டி பதில் கூறினார்.

" பாட்டி இந்த சாப்பாடு அப்பாவுக்கு பிடிக்காது."

" ஏய் பெரிய மனுஷி என் பையனுக்கு என்ன பிடிக்கும்னு எனக்கு தெரியாதா? ," லேசாக பேத்தியின் காதை திருவியபடி கூறினார் அவர்.

" நெஜமா பாட்டி," என கூறியவள் சிறு அமைதிக்கு பிறகு," அம்மா சொல்லியிருக்காங்க நிலாக்கு சப்பாத்தி கிழக்கு தனிதறியா தான் பிடிக்கும் ஆனா நிலாவோட அப்பாவுக்கு இரண்டும் சேர்த்து பண்ற ஆலு சப்பாத்தி தான் பிடிக்கும் அப்படீனு அதனால எப்பவுமே அம்மா அப்பாவுக்கு மட்டும் அப்படிதான் போட்டு கொடுப்பாங்க," என்று நிலா கூற அங்கு நின்றிருந்த இருவரின் மன நிலையும் ஒவ்வொரு விதத்தில் பாதிப்படைந்தது.

மதுமிதாவுடன் கழித்த பொழுதுகளை குறித்து ஆதியின் மனம் ஏங்க.தன் மகனின் விருப்பங்கள் தன்னைவிட ஆதியின் மனைவிக்கு தெரிந்திருப்பதை நினைத்து ஆதியின் அன்னை மனம் வருத்தம் கொண்டது.இருவரில் முதலில் சுதாரித்த ஆதி நிலாவை நெஞ்சோடு அனைத்துக்கொண்டு தன் தாயையும் தோளோடு அணைத்துக்கொண்டான்.

" அம்மா நிலா குழந்தை அவ ஏதோ தெரியாம சொல்றா எனக்கு சப்பாத்தி கிழங்கு ரொம்ப பிடிக்கும்.நீங்க எதையும் மனசுல வெச்சுகாதீங்க," என தைரியம் கூறினான்.

" நான் என்ன
சின்ன குழந்தையா ஆதி நீ சமாதானப்படுத்த? வா சாப்பிட நிலா கஅகு ஸ்கூல் போக லேட் ஆகிடுச்சு." என்றவாறு நிலைமையை சகஜமாக்கினார்.சிறிது நேரத்தில் அவளது பள்ளியில் விட்ட ஆதி நேரே தான் குடியிருந்த வீட்டை நோக்கி சென்றான்.

சென்னையில் தான் மதுவுடன் கழித்த நாட்களை எண்ணிக்கொண்டே தனது ராயல் என்ஃபீல்ட் பைகில் வேகமாக சென்றவன் புயல் வேகத்தில் தன் இல்லத்தை அடைந்தான்.வாசலில் நாற்காலியில் அமர்ந்த எஃப்.எம்மில் பழைய பாடல்களை ரசித்து கொண்டிருந்த செக்யூரிட்டி பரமு தன் முன்னே அசுர வேகத்தில் பார்க் செய்யப்பட்ட பைகை கண்டு திடுக்கிட்டு திட்ட வாய் திறந்தவர் அங்கே ஆதியை கண்டதும்," ஆதி தம்பி.....வாங்க வாங்க நல்லா  இருக்கீங்களா?? மதும்மா...நிலா பாப்பா எல்லாரும் எப்படி இருக்காங்க??" உற்சாகமாக வினவியவரை பார்த்து புன்னகைத்த ஆதி," ம்......எல்லாரும் நல்லா இருக்கோம் பரமு ணா நீங்க எப்படி இருக்கீங்க?? உங்க உடம்பு எப்படி இருக்கு?"

" எனக்கென்ன குறைச்சல் தம்பி மாசம் முதல் தேதி ஆனா நீங்க சம்பளம் போட்டுடுறீங்க ,நீங்க ஏற்பாடு பண்ண மாதிரி செல்வி மூனு வேளையும் சாப்பாடு கொடுத்திடுது.அப்பறம் எனக்கென்ன கஷ்டம் தம்பி?நம்ம மதும்மா க்கு உடம்பெல்லாம் நல்லா இருக்கா தலை காயமெல்லாம் ஆறிடுச்சா??"

" ம்....நான் பெருசா எதுவும் செய்யலை ணா நீங்க உழைக்கறீங்க அதுக்கு என்னால முடிஞ்ச உதவியை செய்றேன் அவ்ளோதான். மதுக்கு இப்ப பரவாயில்லை ணா .டாக்டர் ரெஸ்ட்ல இருக்க சொல்லிருக்காரு அதனால அவங்க பாட்டி வீட்ல இருக்காங்க, சரி ணா எனக்கு வீட்டில கொஞ்சம் வேலை இருக்கு நான் இதோ வந்திடறேன்," என்று அவரிடமிருந்து விடைபெற்றவன் தான் வாழ்ந்த வீட்டை ஆவலுடன் நெருங்கினான்.

வீட்டினுள்ளே நுழைந்ததும் ஒரு சிறிய வரவேற்பறை இருந்தது அதை கடந்த உள்ளே செல்ல விசாலமான ஹால் அவனை வரவேற்றது.அதன் சுவரில் மாட்டியிருந்த புகைப்படங்கள் அவனை அருகே அழைக்க அங்கே சென்றான்.

நடுவில் இருந்த புகைப்படத்தில் மதுவின் கண்ணத்தில் முத்தம் கொடுக்கும் நிலா அழகாக அவனை புன்னகை பூக்க செய்ய அதன் இடப்புறம் ஒரு வயது  நிலா ஆதியின் தோள்களை கட்டிக்கொண்டு சிரித்தாள்.வலப்புறமோ ஆதியின் வலது புறம் மது கண்மூடி தலை சாய்த்திருக்க இடது கையில்  நிலா கண்மூடி சாய்ந்திருந்தாள்.

அந்த மூன்று பொக்கிஷங்களையும் சிறிது நேரம் ரசித்தவன் அதல தன்னுடன் எடுத்துக்கொண்டு திரும்புகையில் கையில் மோருடன் நான் நின்றுகொண்டிருந்தார் பரமு.

" எதுக்கு பரமுணா இதெல்லாம்?"

" அட மோர் தான் தம்பி சும்மா குடிங்க.எப்படி தம்பி வீடெல்லாம் சுத்தமா இருக்கா??செல்வி வாரத்துக்கு இரண்டு நாள் வந்து சுத்தம் பண்ணி வெச்சிட்டு போகும் ."மேலும் ஏதேதோ பேசினார் அதை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த ஆதி சிறிது நேர்ததில் அங்கிருந்து கிளம்பினான்.

மேலும் சில வெளி வேலைகளை முடித்துக்கொண்டு நிலாவின் பள்ளிக்கு செல்ல இன்னும் பள்ளி முடிய சில நிமிடங்கள் இருப்பதை உணர்ந்தான்.அதனால் நிலாவின் வகுப்பாசிரியரை  சந்திக்க சென்றான்.

" வாங்க வாங்க சார்.எப்படி இருக்கீங்க?நாலாவோட அம்மா எப்படி இருக்காங்க? ரொம்ப நாள் நீங்க வரவேயில்லை."

" நாங்க  நல்லா இருக்கோம் மேம்.நீங்க எப்படி இருக்கீங்க.கொஞ்சம் வேலை விஷயமா வெளி ஊருக்கு போயிட்டேன் .அதான் வரலை."

" ஓகே ஓகே சார் .என்ன விஷயமா என்னை பார்க்க வந்தீங்க?"

" நான் நிலாக்கு டி.சி வாங்க வந்தேன்.டி.சி அப்ளை பண்ணிட்டேன் அதான் உங்ககிட்டையும் இன்ஃபார்ம் பண்ணிட்டு போலாம்னு நினைச்சேன் மேடம்."

" ஏன் சார் என்னாச்சு ஏன் டி.சி வாங்கறீங்க?"

" நாங்க ஊரை ஷிஃப்ட் பண்றோம்  சில பெர்சனல் ரீசனுக்காக அதான் மேம் வேற ஒன்னுமில்லை."

" ஓ...எப்ப கிளம்பறீங்க சார்?"

" நாளைக்கே கிளம்பனும் கொஞ்சம் அர்ஜென்ட்."

" சரி சரி சார்.நாங்க நிலாவை ரொம்ப மிஸ் பண்ணுவோம்.நல்ல சுட்டிபொண்ணு." அவர் கூறிக்கொண்டிருக்கையிலே ," அப்பா......ஒ" என்று நிலா ஓடி வர அவளை வாரி அனைத்துக்கொண்டான்.

" சரி மேம் நான் கிளம்பறேன்." என்றவாறு தன் மகளுடன் வீட்டை நோக்கி சென்றான்.வீட்டிற்குள் நுழைகையில் சிலர் வீட்டினுள் பொருட்களை அடக்கி வைத்துக்கொண்டிருப்பதை பார்த்தவன் தன் பெற்றோர் கிளம்ப தயாராகி கொண்டிருப்பது புரிய ஒரு பெருமூச்சுடன் நிலாவை தன் அன்னையிடம் ஒப்படைத்துவிட்டு அவர்களை மேற்பார்வை பார்க்க சென்றான்.

அன்று முழுவதும் பொருடக்ளை அட்டை பெட்டியினுள் அடுக்கி வைப்பதற்கே நேரம் சரியாக இருக்க எல்லாவற்றையும் டிரக்கில் ஏற்றிவிட்டு நிமிர்கையில் நேரம் இரவு ஏழை நெருங்கி கொண்டிருந்தது.அன்று இரவு ஆதியின் பெற்றோர் கிளம்ப ஏற்பாடகியிருக்க ," இன்னைக்கு நைட்டே போகனுமாமா??" ஆதியின் குரலில் வருத்தம் தெரிய  அவனை பிரியும் துயர் அவன் அன்னையையும் தொற்றி கொண்டது.கண்களில் வழிப்த கண்ணீரை அவனறியாது மறைத்தவர்,"நாளைக்கு நீயும் பெங்களூர் கிளம்புனும்ல ஆதி?"

"ம்....புரியுதுமா ஆனால் மனசு கொஞ்சம் கஷ்டமா இருக்கு."

" ஆதி நீ என்ன சின்ன குழந்தையா இப்படி வருத்தப்படற, பெங்களூர் ல இருந்து கோயம்புத்தூர் ரொம்ப பக்கம் நீ வண்டி ஓட்ற வேகத்துக்கு மூனே மணி நேரத்தில வந்திடலாம், எல்லா பிரச்சினையும் சீக்கிரமா முடி அப்பறம் எல்லாரும் சேர்ந்தே இருக்கலாம்.இப்ப போய் வண்டியை எடு நேரமாச்சு," என கூறி ஆதியை சமாதானப்படுத்தினார்.

ஆதியின் பெற்றோர் இருவரும் தூங்கும் தன் பேத்தியின் கண்ணத்தில் முத்தமிட்டவாறே தங்கள் சொந்த ஊருக்கு கிளம்பினர்.

********

விமானத்தில் கண்களை மூடி. அமர்ந்திருந்த மதுமிதா  குழந்தை அழும் சத்தம் கேட்டு கண்களை திறந்து பாரத்தாள்.முதலில் மெதுவாக தொடங்கிய அழுகையின் வீரியம் நேரம் செல்ல செல்ல அதிகரிக்க துவங்க  குழந்தை சத்தம் வந்த திக்கை நோக்கினாள்.அவள் அமர்ந்திருந்த இருக்கையின் மஉன்புறம் இரண்டு இருக்கைகள் தள்ளி தான் குழந்தையின் அழு குரல் கேட்டது.அங்கு யார் அமர்நிருக்கிறார்கள் என்று பார்க்க முடியாவிட்டாலும் ஒரு ஆண் மட்டும் கையில் குழந்தலயுடன் அமர்ந்திருப்பதை பார்க்க முடிந்தது.விமானத்தில் அமர்ந்திருந்த அனைவரின் கவனமும் அவன் மேல் திரும்ப ," எனி ப்ராப்ளம் சார்( any problem sir?)"என்று வினவிய விமான பணிப்பெண்ணிடம்," தெரியலை பாப்பா இந்த மாதிரி இதுவரை அழுதது இல்லை.இப்ப என்னாச்சுனு எனக்கு புரியலை," என்று அவன் கூற ," இங்க கொடுங்க சார் நான் வேணும்னா சமாதானம் பண்ண முயற்சி பண்றேன் ," என்ளு பதில் கூறிய அந்த பணிப்பெண் அந்த குழந்தையை வாங்க முயல இம்முறை மேலும் அக்குழந்தை வீரிட்டு அழுது தன் தந்தையின் சட்டையை இறுக பற்றியது.

அதற்கு மேல் பொறுக்க முடியாத மது எழுந்து அந்த குழந்தையை காண சென்றாள்.அந்த ஒரு வயது குழந்தையை கண்டவள் திடுக்கிட்டாள் மறுநொடி ,"நிலா......" என்று அவள் அழைக்க அவளது குரலை அடையாளம் தெரிந்தது போல அக்குழந்தை ஒரு நொடி அழுகையை நிறுத்தி சுற்றி முற்றி பார்த்த மதுவை கண்டதும் ," அம்மா.....' என்ற குரலுடன் அவளிடம் தாவி சென்றது.

அப்பொழுதுதான் தன் அருகே வந்த நின்ற பெண்ணை நிமிரந்து பாரத்த ஆதி திடுக்கிட அவன் உதடுகளோ ," மது..." என்னு சப்தம் வராமல் அசைந்தது.

அவனுக்கு எதிரே நின்ற மதுவோ அவனையும் கவனிக்கவில்லை அந்த விமானத்தில் இருக்கும் அனைவரும் அவளை வித்தியாசமாக பார்பதையும் கண்டுகொள்ளவில்லை.அவள் குழந்தையை சமாதானப்படுத்துவதிலே குறியாக இருந்தாள்.அவளிடம் வந்த குழந்தை அழுகையை ஓரறவு நிறுத்தியிருந்தாலும் முழுவதும் நிறுத்தவில்லை.தன் எதிரே நின்றிருந்த  ஆதியை நிமிர்ந்து பாராமலே ," பாப்பா எதாவது சாப்படாளா??" என வினவ ," இல்லை எதுவும் சாப்பிடலை பால் கலந்து வெச்சிருக்கேன் அவ குடிக்கலை ," என்றவாறு பால் பட்டிலை நீட்டினான்.

அதை அவனிடமிருந்து வாங்கியவள் நிலாவை தூக்கிக்கொண்டு தன் இருக்கையில் அமர்ந்தவள் நிலாவிற்கு பால் புகட்டினாள்.சிறிது நேரத்தில் நிலா அமைதியாகிவிட அவளை தன்னுடனே வைத்துக்கொண்டாள்.
நிலாவோ உரிமையாக மதுவின் தோள் மீது சாய்ந்துகொண்டு விளையாட துவங்கினாள்.

" மேம்....மேம்....," என்ற குரல் கேட்டு திடுக்கிட்ட மது தன்னை சுற்றி பார்க்க அங்கே விமான பணிப்பெண் நின்றிருந்தாள் ," மேம் சீட் பெல்ட் போட்டுகோங்க லேண்டிங் ஆகுறோம்," என்றவாறு நகர மதுவனின் கைகள் சீட் பெல்டை போடாமல தன் தோளிலி்ருந்த குழந்தையை தேடியது.அங்கே அவள் இல்லாது போக நிலாவின் தந்தை அமர்ந்திருந்த இருக்கையை எட்டி பார்தாள் அங்கே இரு பெண்கள் அமர்ந்திருக்க கண்டவள் தன்னை சுற்றி கண்களை சுழற்றி பின் கண்களை மூடிக்கொண்டு கைகளால் தலையை தாங்கி பிடித்துக்கொண்டாள்.

அமைதியாக யோசிக்க யோசிக்க தனது கோவை பயணமும் அதன் காரணமும் விளங்க ஆனால் இவ்வளவு நேரம் நடந்த நிகழ்வுகள் கனவோ என்று எண்ண தோன்றியது.ஆனால் அவை கனவு போன்று தோன்றாதது நடந்து முடிந்த நிகழ்வு போல தோன்றியது.மேலும் யோசிக்க யோசிக்க அவள் தலை வலிக்க துவங்கியதே தவிர அந்த காட்சியில் வந்த குழந்தையின் முகமோ அவளின் தந்தையின் முகமோ சிறிதும் நினைவில் இல்லை.

மனம் யோசித்து கொண்டிருக்க கால்கள் தன்னிசையாக விமானத்தைவிட்டு வெளிடயே இறங்கி வாசலை நோக்கி சென்றது.விமான நிலையத்தை விட்டு வெளியேற துவங்கியவள் கார் பார்க்கை நோக்கி சென்றாள் .அதிகமாக யோசித்ததாலும் குழப்பத்தினாலும் தலை சுற்ற தள்ளாடியபடி கீழே சரிய துவங்கியவளை இரு கரம் அனைத்துக்கொண்டது.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro