அலைபாயுதல்
தன்னவள் கண்விழிக்க இது நேரம்வரை காத்திருந்த ஆதித்யனின் மனம் அவள் கண் திறந்ததும் அமைதிக்கு பதில் குழப்பம் கொண்டது.அவளை மீண்டும் ஒரு முறை காண எண்ணியவன் தன் எண்ணத்தை ஜீவாவிடம் தெரிவிக்க அதை செவிமடுத்த ஜீவாவோ," வேண்டாம் ஆதி இந்நேரம் உண்மை தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு உன்னைதான் தேடிகிட்டு இருப்பாங்க நீயா போய் மாட்டிகிறாத," என்று எச்சரிக்கும் குரலில் கூற அதை மறுத்த ஆதியோ," டேய் நான் என்ன அவளை ஏமாத்தனும் னா கல்யாணம் பண்ணேன், வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணினாலும் அவளை ஏமாத்திற எண்ணம் எனக்கு இல்லை அதனால நான் ஓடி ஒளிய தேவையில்லை, நான் உள்ள போறேன் நீ வரியா வரலையா அதை மட்டும் எனக்கு சொல்லு போதும்," என்று கராராய் முடித்தான்.
" உனக்கு ஃபிரன்ட் ஆனதுக்கு என்னை தர்ம அடி வாங்க வைக்காம ஓயமாட்டேனு மட்டும் நல்லா புரியுது டா...., வா போகலாம்," என்று ஒரு நல்ல நண்பனாய் அவனுடன் இணைந்து மதுவை பார்க்க சென்றான்.
அவளை பார்க்க உள்ளே சென்ற ஆதியின் மனம் மதுவை முதன்முதலில் பார்த்த தருணத்தை நினைவு கூர்ந்தது.
ஆறு வருடங்களுக்கு முன்பு சென்னையில் தனது பட்டப்படிப்பை முடித்தவன் மேற்படிப்பிற்காக கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டியில் சேர்ந்த நேரம் அது, உடலை வாட்டும் குளிருக்கு இதமான கருப்பு நிற ஜெர்கின் அனிந்து கருநீல நிற ஜீன்ஸ் பேன்டுடன் கண்களில் கூலர்ஸ் மின்ன காதுகளுக்குள் குளிர் நுழையாத வண்ணம் காதுகளை மறைத்துக்கொண்டு அந்த உயர் ரக உணவுவிடுதிக்குள் தன் உடன் பயிலும் நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு மெட்ரோவில் சென்று கொண்டிருந்தான்.
தன் அருகே ஏதோ சத்தம் கேட்டு திரும்பிய அவன் அங்கே ஒரு சிறுமி தன் தாயுடன் வழக்காடி கொண்டிருப்பதை கண்டு புன்முறுவலோட திரும்புகையில் கைகளில் ரோஜா கொத்துடன் அழகிய பின்க் நிற சேலையில் கண்களை மூடி இருக்கையில் சாய்ந்துகொண்டிருந்த மங்கையை கண்டான்.
அவனால் தனது கண்களை அவளிடமிருந்து பிரித்து எடுக்க இயலவில்லை. இந்த அதீத குளிருக்க பின்க் நிற ஜெர்கினை மடியில் வைத்து மிதமான ஒப்பனையில் கண்கள் மூடிய தேவதையாக தெரிந்த அவளை பார்த்த நொடி தன்னை அவளிடம் தொலைத்துவிட்டான்.
அவளை பற்றி தெரிந்து கொள்ள மனம் ஏங்க ஆனால் தயக்கமும் கூட்டநெரிசலும் அவனை தடுத்தது.அவளிடமிருந்து பார்வையை மீட்டு எடுக்க முடியாமல் திண்டாடியவன் தான் இறங்கும் இடம் வர வேறு வழியின்றி இறங்கி சென்றான்.
அந்த எதிர்பாராத சந்திப்பிற்கு பிறகு அவளை எந்த காதலுனும் சந்திக்க விரும்பாத சூழலில் சந்திப்பான் என்பதனை அவன் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை.அன்றே தன் கடமையை மறந்து அவளது பின்னே சென்றிருந்தால் பின்னாலில் வரவிருந்த நிகழ்வை தடுத்திருக்களாமோ ??
இறந்தகால நினைவில் புதைந்திருந்த அவனை நிகழ்வுக்கு கொண்டுவந்தது யாருடனோ வாக்குவாதம் செய்யும் ஜீவாவின் குரல். மருந்துவமனைக்கு வெளியே நின்றிருந்த அவன் தற்பொழுது மது அனுமதிக்கப்பட்டிருந்த அறையின் வாயிலில் நின்றுகொண்டிருந்தான்.அவனின் அருகே நின்றிருந்த ஜீவா அந்த மருத்துவமனை ஊழியரிடம் ஏதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தான். இவ்வளவையும் உணர ஆதித்யனிற்கு ஒரு சில நொடிகள் தேவைப்பட்டது.வேகமாக தன்னை சுதாரித்து கொண்டவன் ," என்ன ஜீவா என்ன பிரச்சனை??" என்று விசாரிக்க ஆதித்யனை வேற்றுகிரகவாசி போல பார்த்த ஜீவா," இவ்வளவு நேரமும் என் பக்கத்தில தான நின்னுட்டு இருந்த ," என்று அவனிடம் கூறியவன் மேலும் தொடர்ந்தான்," இந்த வார்ட் பாய் நம்ம மதுவ பார்க்க கூடாது னு சொல்றான், கேட்டா பெரிய டாக்டரோட உத்தரவு, அனுமதியில்லாம யாரும் இந்த அறைக்குள்ள போகக்கூடாதுனு கதை விட்றான்," என்று சீறினான்.
அவனை தனியே அழைத்துசென்ற ஆதி அவன் காதுகளில் ஏதோ கூற , ஆதியை விசித்திமாக நோக்கினான் ஜீவா, பின் வேறு வழியில்லாமல் தலையை மேலும் கீழும் ஆட்டிவிட்டு மீண்டும் மதுவின் அறை நோக்கி சென்றான் , இந்த முறையும் அவனை தடுத்த அந்த வார்ட பாயின் அருகே சென்றவன்," தம்பி ஒரு இரண்டே நிமிஷம் பார்த்திட்டு போயிடுவோம், இல்லைனா நான் இப்படி உன் பக்கில நின்னு பேசறேன்என் ப்ரெண்ட் மட்டும் இரண்டு நிமிஷத்தில வந்திடுவான், ப்ளீஸ் புரிஞ்சுக்கோ வீட்ட எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிடாங்க இப்ப அந்த பொண்ணோட அப்பா இவனை அவன் மனைவிய பார்க்க கூட விடமாட்டேங்கிறாங்க , நீ தான் உதவி செய்யனும்," என்று தன்மையாக பேசியது வேலை செய்ய அவன் இவனுடன் நின்று பேசலானான்.அந்த இடைவெளியில் மதுவின் அறைக்குள் சென்ற ஆதி இரண்டு நிமிடத்தில் வெளியே வந்துவிட்டான்.அந்த வார்ட் பாயிடம் நன்றியை தெரிவித்துவிட்டு வேகமாக அவ்விடம்விட்டு தன் நண்பனை அழைத்துக்கொண்டு இல்லை இவ்லை இழுத்துக்கொண்டு மருத்துவமனையிலிருந்து வெளியேறினான்.
அவனது செயல் புதிராக இருக்க அதை பற்றி அவனிடம் கேட்டு தெளிவு பெற விரும்பிய ஜீவாவிற்கு கிடைத்த பதிலோ ஆதித்யனின் மௌனமே.தான் அறியாத விஷயங்கள் பலவும் ஆதித்யனின் வாழ்வில் நடந்துள்ளது என்பதை உணர்ந்தவன் இனி அடுத்து என்ன நடக்குமோ என்று எண்ணி தன் நண்பனிற்காக கவலை கொண்டான்.
ஜீவாவின் மனதில் தோன்றிய குழப்பத்தை கண்டுகொள்ளாத ஆதியோ தனது மனதுடன். போராடிக்கொண்டிருக்கிருந்தான். அவனது எண்ணங்கள் முழுவதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மதுமிதாவின் மீதே இருந்தது.தான் செய்த செயல் சரியா தவறா என்று எப்பொழும் போல் இப்பொழுதும் தாமதமாக எண்ணத்தொடங்கினான்.
*********
மருந்தவரின் அறையில்
"ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்...."என்று மதுமிதாவின் பெற்றோர்களை அமைதிப்படுத்திய டாக்டர்," நீங்க இரண்டு பேரும் கொஞ்சம் பதட்டப்படாம இருங்க, நான் ஏற்கனவே நான் என்ன நடந்துச்சுனு விசாரிக்கிறேன்," என்று கூறி அந்த செவிலியரின் புறம் திரும்பியவர் ," சிஸ்டர் என்ன நடந்துச்சுனு கொஞ்சம் விவரமா சொல்லுங்க," என்று கூற அந்த செவிலிப்பெண்ணோ," டாக்டர் அந்த பேஷன்ட ஒருதர் அவசர அவசரமா தலை முழுக்க இரத்தம் வழிய கார்ல கூட்டிட்டு வந்தாரு நான்தான் ஸ்டெச்சர்ல உள்ள கொண்டு வந்தேன். அவங்க அவரோட மனைவி அப்படீனும் ரோடுகிராஸ் பண்ணும்போது கார் மோதிடுச்சுனும் அப்படீனும் சொன்னாரு டாக்டர். நான் உடனே உள்ள கூட்டிட்டு வந்து உங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டேன்.அப்பறம் அவங்க போட்டிருந்த நகைகள கழட்டி அவர்கிட்ட கொடுத்தேன் அதுல அவங்களோட தாலியும் இருந்துச்சு, அதை அவர் கையில கொடுக்கும் பொழுது ரொம்ப அழுதாரு, " என்று கூறிமுடித்தாள்.
" சரி அவரு பேஷன்டோட டீடெய்ல்ஸ் ரிசப்ஷன்ல கொடுத்துதான் பணம் கட்டிருப்பாரு, நீங்க அங்களுக்கு கால் பண்ணி டீடெய்ல்ஸ் கேளுங்க ," என்று மருந்துவர் கூற அதை உடனே செயல்படுத்திய அந்த பெண் சிறிது நிமிடம் கழித்து ஒரு பேப்பரை மருந்துவரிடம் கொடுத்தார்,அந்த செவிலியர் கொடுத்த விவரங்கள் வாங்கிய மருத்துவர், அந்த பெண்ணிடம்," ஒரு வார்ட் பாய மதுவோட ரூம் வாசல் ல காவலுக்கு போடுங்க யாரும் என் அனுமதி இல்லாம உள்ள போக கூடாதுனு சொல்லிடுங்க,"என்று கூறியவர்அந்த பேப்பரை மதுவின் பெற்றோரிடம் கொடுத்தார்.அதில் மதுமிதா ஆதித்யன் என்ற பெயர் கொடுக்கப்பட்டிருக்க அதன் கீழே மதுவின் பெற்றோரது முகவரி இருந்தது.
குழப்பத்திற்கு பதில் கிடைக்கும் என்று எண்ணிய சிறு வழியும் அடைபட்டுவிட இருவரும் ஏமாற்றத்துடன் அமைதியாக அமர்ந்தனர்.அவர்களை பார்த்த மருத்துவர்," என்னாச்சு?? அந்த அட்ரஸ்ல போய்பார்த்த அந்த ஆள் யாருனு தெரிஞ்சிடுமில்லையா??"என வினவ.
" என்னனு சொல்றது டாக்டர் பேஷன்டோட பேருனு என் பொண்ணுபேரையும் அவன் பேரையும் கொடுத்திருக்கான், ஆனால் அட்ரஸ் எங்க வீட்டு அட்ரஸ கொடுத்திருக்கான்." என்று அந்த ஒரு வழஇயும் அடைப்பட்டுவிட்ட சோகத்தில் அவர் கூற ," அவரை இடைமறித்த மருந்துவர் ," நீங்க அதை ஏன் அப்படி பார்க்கறீங்க? அதை ஒரு நல்ல ஆதாரம்,"
" ஆதாரமா?? அது எப்படி ஆதாரம் ஆகும் டாக்டர்?"
"இங்கபாருங்க அந்த ஆதித்யனுக்கு உங்களை பத்தியும் உங்க குடும்பத்தை பத்தியும் நல்லா தெரிஞ்சிருக்கு அதனால தான் அவ்ளோ பதட்டமான சூழல்ல கூட உங்க வீட்டு அட்ரஸ கொடுத்திருக்கான், அதுமட்டுமில்லா நீங்க இங்க வர்ற வரைக்கும் மதுமிதாவோட அறை வாசல்ல இருந்த அவன் நீங்க வந்ததுக்கு அப்பறமா யார் கண்ணலயும் மாட்டல," என்று அவர் கூற கூற மதுமிதாவின் பெற்றோர் மனதில் ஆதித்யனின் பிம்பம் நல்லவனாக பதியவில்லை.அவனை பற்றிய உண்மை தெரியாத நிலையிலேயே அவன் எதிர்மறையாக அவர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டான்.
அவர்களின் எண்ண ஓட்டத்தை அறியாத அந்த மருத்துவர்," நீங்க ஏன் இவ்ளோ கவலைபடுறீங்க உங்க மகள் கண் முழிச்சதும் அவங்க கிட்டயே கேட்டு தெரிஞ்சுக்களாமே, இவ்ளோ குழப்பம் தேவையில்லாதது ," என்று கூறியவரிடம் மதுமிதாவின் தந்தை ," அதுக்கு வாய்பே இல்லை டாக்டர்," என்றுகூறிவிட்டு ஒரு சிறு இடைவேளிவிட்டு தற்போதைய நிலையை எடுத்து கூறினார்.
அவர் கூறியவற்றை உள்வாங்கவே மருத்துவருக்கு ஒரு சில நிமிடங்கள் தேவைப்பட்டது. அவரது அதிர்ச்சி அவரது முகம் அப்பட்டமாக பிரதிபலித்தது.
" சரி வாங்க இப்ப மது எப்படி இருக்காங்கனு பார்த்துட்டு வரலாம்," என்று கூறியவர் மதுவின் பெற்றோர் பின்தொடர மதுவின் அறைக்குள் சென்றார்.
அங்கே மதுவை பார்த்த மூவரும் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றன்ர.
(தொடரும்....)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro