Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

14. அவளிடம்

தன்னையறியாது சிரித்தபோது தன்னை அவன் ஒருகணம் பார்த்ததை உணர்ந்தாள் அவள். அவளும் திரும்பிப் பார்ப்பதற்குள், கூட்டத்தில் சட்டென ஒரு கேள்வி எழுந்தது.

"இந்தப் பொண்ணைப் பத்திதான் நேத்து உங்க ட்விட்டர் பேஜ்ல சொல்லிருந்தீங்களா சார்?"

'பொண்ணா... ஏன் டாக்டர்னு சொல்லாம அந்த ஆள் பொண்ணுன்னு சொல்றார்??'
குனிந்து தன்னைப் பார்த்துக் கொண்டவளுக்குத் தன் மடத்தனத்தை எண்ணிக் கோபம் வந்தது. அவசரத்தில் தன் வெள்ளைக் 'கோட்'டை அணியாமல் வந்திருந்தாள் அவள்.

'ப்ரகதி... அந்த வெண்ணிற மேற்சட்டைக்கு மட்டும்தான் மதிப்பு இங்கே. அது இல்லாமல் நீ வெறும் 'அந்த பொண்ணு' தான். எத்தனை முறை நினைத்திருப்போம்...உன் இரண்டாவது தோல் அது. அதை எப்படி நீ மறக்கலாம்? உன் முட்டாள்தனத்துக்கு இன்றைக்கு தண்டனை பெரிதாக இருக்கப் போகிறதுபோல...'

அவள் அவன்புறம் திரும்பிச் சினந்தாள் மறைமுகமாக.

"What have you told them about me?"

அவன் ஒரு நொடி அதிர்ந்தான்.

"Well... you can see that in your mobile..." மைக்கை மறைக்காமல் அவன் பேச, அவன் குரல் அறையெங்கும் எதிரொலித்தது.

கோபம் எரிமலையாகப் பொங்கினாலும், அவ்விடத்தில் அவனை எதுவும் பேசிவிடக் கூடாது என ஏனோ அவள் உள்மனம் எச்சரித்தது.

"நான் ட்விட்டர்ல இல்ல... so please.. என்னைப் பத்தி என்ன எழுதியிருந்தீங்க?"
முடிந்தவரையில் நாசூக்காக சன்னமான குரலில் கேட்டாள் அவள்.

கூட்டத்தில் சலசலப்பு அதிகமானது.

கேமராக்களை நோக்கி, "நான் சொல்லலை? ஒரு வித்தியாசமான டாக்டரை இங்க சந்திச்சேன்னு... அது இவங்க தான். நான் என்னோட ட்வீட்ல மென்ஷன் பண்ணின, 'strange person' இவங்கதான். Meet Surgeon Pragathi, the one who's responsible for my.... current wellbeing. " என்று புன்னகைத்தான் அவன்.

"டாக்டர், உங்ககிட்ட சில கேள்விகள்..."

"கேளுங்க கேளுங்க...  she is one hell of a doctor!"

அவளுக்கும் சேர்த்து அவனே பதில் சொல்ல, அவளுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. அவனை முறைத்துவிட்டு அரங்கத்தினரிடம் திரும்பினாள் அவள். கண்ணாடி அணிந்த நடுத்தர வயது மனிதர் கைதூக்கினார்.

"People's star Niveesh... லட்சம் லட்சமா அபிமானிகளை நாள்தோறும் சேர்க்கற நட்சத்திரம். அவர்மேல கத்தி வைக்கற அனுபவம்... எப்படி இருந்தது டாக்டர்?"

முதல் கேள்வியின் குதர்க்கத்திலேயே அவள் திகைத்து விழிவிரித்தாள்.

"என்னங்க...நான் என்ன அவரைக் கொலையா பண்ணினேன்? ஜஸ்ட் ஒரு சர்ஜரி. என் வேலையத் தானே நான் செஞ்சேன்? அவர் யாரா இருந்தாலும் சரி, எனக்கு, he's just a patient "

"ஓ..."
கூட்டத்தில் ஆச்சரியக் குரல்கள் கிளம்பின.

"அதெப்படி டாக்டர்... ஒரு நடிகர் தன் சொந்த ஊருல வைத்தியம் பாத்துக்காததுக்குக் காரணமே இதுதான். ஒண்ணு அந்த மருத்துவர் அவரோட ரசிகர், இல்லைன்னா எதிரி... ஒரு எமோஷனல் பேகேஜ் இருக்கும். அதுனால அவங்க சிகிச்சைல தப்பு நடக்க வாய்ப்புண்டு. எல்லா ஹீரோவும் அதனால்தான் ட்ரீட்மெண்ட்டுக்கு ஃபாரினுக்குப் போறாங்க."

அவள் ஆச்சரியமாக சிரித்தாள்.
"இதை நீங்க சொல்லித் தான் நான் முதல்முறை கேள்விப்படறேன்."

"சரி, நீங்க சொல்லுங்க, அவரோட லட்சக்கணக்கான பெண் ரசிகைகள்ல நீங்களும் ஒருத்தரா?"

"இல்லை.. அ.. அப்படில்லாம் இல்லை.."

"அப்போ உங்களுக்கு அவரைப் பிடிக்காதா?"

"Why is this interview session getting personal? அவருக்கு என்ன பிரச்சினை, என்ன ட்ரீட்மெண்ட், அதைப் பத்தியெல்லாம் கேட்க மாட்டீங்களா?"
அவள் கோபம் எல்லை மீறியது. அதில் லேசான தவிப்பும் இருந்தது.

"அதையெல்லாம் மெடிக்கல் ரிப்போர்ட் சொல்லும் மேடம்... நீங்க சொல்லுங்க.. நிவீஷுக்கு நீங்க யாரு? I mean, fan or hater?"

நிவீஷ் கூட ஆர்வத்தோடு அவளைப் பார்த்தது போலிருந்தது. கனத்த மௌனம் அறையில் நிலவியது. மேத்தா அதைக் கலைக்குமாறு, "It's getting late. Dr.Pragathi has a lot on her schedule. So, அவங்களைக் கிளம்ப சொல்றோம்" என்றார்.

ஆட்சேபக்குரல்கள் கூட்டத்தில் எழுந்தன.

"என்ன சார்? Why is she leaving? Does she have anything to hide?"

"எதாவது மறைக்கறீங்களா எங்ககிட்ட?"

"ஏன் அந்த டாக்டர் பேச மாட்டாங்க?"

பதபதைப்புடன் அவள் அமர்ந்திருக்க, அவளது முகத்தில் தெரிந்த உணர்வைக் கண்டு கொண்டவன் சத்தமாகக் குரல்கொடுத்தான்.

"அமைதி... ப்ளீஸ்...அமைதியா இருங்க"

அவனது கணீரென்ற குரலில் அந்த அறை அமைதியாக, அனைவரும் ப்ரகதியையே பார்த்தனர். தன்னை நிலைப்படுத்திக் கொண்டு அவள் பேசத் தொடங்கினாள்.

அவனை நேருக்கு நேராகப் பார்த்தவள், "Remember, you made me do it" என்றபடி,  திரும்பி மைக்கை உயிர்ப்பித்தாள்.
"நான் டாக்டர் ப்ரகதி. நான் ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் டில்லியில இருந்து சென்னைக்கு வந்தேன். I was studying at Lady Harding's."

கல்லூரி பெயரைக் கேட்ட மாத்திரத்தில், அறிந்தவர்கள் சிலர் ஆச்சரியக்குரல் எழுப்பினர்.

"மூணு வருஷமா டெல்லில இருந்தேன். எனக்கு டிவி, சினிமா பாக்குற பழக்கம் இல்லை. என்கிட்ட ஸ்மார்ஃபோனும் கிடையாது. இதுமாதிரி யாராவது இருப்பாங்களான்னு நீங்க பாக்குறது புரியுது.. ஆனா என்ன பண்ண, I'm here as a living example. எனக்கு நேத்து வரை நிவீஷ்னா யாருன்னு தெரியாது. அவர் ஒரு நடிகர்னு மட்டும் சர்ஜரிக்கு முன்னாடி தெரிஞ்சுது. ஆனா இவ்ளோ பெரிய ஆள்னு இப்ப வரைக்கும் தெரியாது."

நான்கைந்து இடங்களில் கேள்விகள் எழும்ப, அவள் கையசைத்துத் தடுத்தவாறே தொடர்ந்தாள்,
"எனக்கு அவர் நடிகர்னு தெரிஞ்சப்ப கொஞ்சம் ஆச்சரியமா இருந்தது. ஆனா அவர் எந்த வித ... ஆடம்பரமும் இல்லாம, என்னோட சரிசமமா ... பேசறதும் பழகறதும்... அவரோட நல்ல குணத்தைக் காட்டுது."

வேண்டுமென்றே நிறுத்தி நிறுத்திப் பேசினாலும் தன்னைப் பற்றி மோசமாக ஏதும் சொல்லாமல் விட்டதால் நிவீஷ் ஒரு பலத்த பெருமூச்சு விட்டான். அது அவள் காதுவரை எட்ட, அவள் ஒரு புன்சிரிப்புடன் மீண்டும் பேசினாள்.

"பேஷண்ட்டை கையாளத் தெரிஞ்ச எனக்குமே, ஒரு நடிகருக்கு சிகிச்சை பண்றது புது அனுபவமா தான் இருந்தது. ஒத்துக்கறேன். எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்த எங்க டீன், மிஸ்டர் ரவின் மேத்தா அவர்களுக்கு நன்றி. Thanks sir, for believing in me. Thanks for giving me a chance. Hope I didn't disappoint you."

"Not at all, doctor," மேத்தா முகமெங்கும் புன்னகை. அவள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் சமாளித்துவிட்டாள் என்பதில் அவர் பெருமகிழ்ச்சி அடைந்தார். அதுமட்டுமின்றி அவர்கள் மருத்துவமனைக்கும் இது பெரிய செய்தி, பெரிய விளம்பரம். உற்சாகம் பொங்கியது அவருக்கு.

எப்படியோ சீக்கரம் அந்தப் பத்திரிகை சந்திப்பு முடிவடைய, சங்கர் அவசரமாக நிவீஷை அழைத்துக் கொண்டு அவனறைக்கு விரைந்தார்.

மேத்தா அவளைத் தன் அலுவலகம் வரை வந்துவிட்டுப் போகுமாறு அழைக்க, அவளும் மறுக்காமல் கிளம்பினாள்.

"Well done, surgeon. I'm very happy. அவரோட இமேஜும் போகாம, நம்ம ஹாஸ்பிடல் பேரும் கெடாம.. நீங்க உங்க கோபம் எதையும் ப்ரஸ்மீட்ல காட்டாம நாசூக்கா டீல் பண்ணீங்க... தேங்க்ஸ் டாக்டர்"

" Thank you, sir. நான் வரேன்"

_______________________

நிவீஷ் தனது கட்டிலில் அமர வைக்கப் பட்டிருந்தான். சங்கர் தனது கைபேசியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தார்.

அவனது மனம் முழுக்க அவளே நிறைந்திருந்தாள்.

'நீ அவளை அவமானப்படுத்த வேண்டுமென நினைத்தாயே... ஆனால் அவள் உன்னையும் சேர்த்துக் காப்பாற்றிவிட்டாள். அவள் நீ நினைப்பது போல் இல்லை. அவளது எண்ணங்கள் எதுவும் தவறானதாக இல்லை. நீதான் தவறாகப் புரிந்துகொண்டு அவளையும் தப்பாக நினைத்துவிட்டாய்...'

அவனுக்கு என்றுமில்லாமல் அன்று கொஞ்சம் குற்ற உணர்வு வந்தது.

ஆனால் அவளிடம் போய் தான் மன்னிப்புக் கேட்க வேண்டுமா என அவனது தன்மானம் தடுத்தது.

அதேநேரம் அவள் உள்ளே நுழைய...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro