Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மாயை

நான் கார் சாவியினை எடுத்துக்கொண்டு, ஒரு காரினை எடுக்க சென்ற நேரம்....

என் அம்மா, அப்பா,முருகன் மாமா, தேனு அத்தை, வாணி, கிருஷ்ணா என அனைவரும், இரு கார்களில் அமர்ந்து, அனன்யாவை அழைக்க, ஏர்போர்ட் கிளம்புமும் நேரம் சரியாக ஒரு கார் வீடு வந்து சேர்ந்தது.....

எங்களின் அனைவர் கண்களும் அக்காரையே நோக்கி இருந்தது..... அதிலிருந்து இறங்கினான், யுவி... இந்த ஐந்து வருடத்தில், என் கும்பத்திடமும், அனன்யாவின் குடும்பத்தோடும் மிக நெருங்கியவனாக மாறிவிட்டான்.... யுவி....

யுவியை பார்த்த உடனே.... "என்னடா இவ்ளோ காலைல வந்துருக்க???..... என நான் வினவ,

"இல்லடா....முக்கியமான பைல் ஒன்னு உன்கிட்ட கொடுத்தேனே.....இன்னைக்கு கண்டிப்பா அதை முடிக்கணும், நீ வேற ஆபீஸ் வரமாட்ட, அதான் அதைவாங்கிட்டு போலாம்னு வந்தேன்...." என யுவி முடிக்க...

"ஓ... அதுவா... இரு வரேன்... என..... " என யுவியிடம் சொல்லி சென்று, .... சிறிது நேரத்தில் ஒரு மஞ்சள் நிற பைலுடன் வந்தேன்...... அனைவரும் எனக்காக காரிலே காத்திருந்தனர்....

அதை பார்த்த யுவி, டேய் இது இல்லடா... ப்ளூ கலர்ல ஒரு பைல் இருக்குமே... மறந்துட்டியா?? என அவன் வினவ.....

சமாளித்து சிறிது சிரித்த நான்....பின்னே...நானே அனன்யாவை பார்க்கப்போகும் சந்தோஷத்தில் மிதக்கிறேன்..... "இருடா வரேன்.... "....என பைலை தேட சென்றேன்.......

கோப்பினை யுவியிடம் கொடுத்துவிட்டு..... யுவியும் கிளம்ப, நானும் காரின் கதவை திறக்கும் சமயம்.......

ஒரு ஹாரன் ஒலி கேட்டது...
நானும் யுவியும் ஒரு சேர திரும்ப........ எங்கள் வீட்டின் வாசலில் , ஒரு கேப் வந்து நின்றது....

முழங்காலின் கீழ்வரை ஜீன்ஸ் பான்ட், கையில்லா டி -ஷர்ட்...., இடைவரை வெட்டப்பட்ட முடி, வெய்யிலிருந்து...விழிகளை பாதுகாக்க கூலிங் கிளாஸ், ஏற்கனவே கோவைப் பழமென சிவந்திருந்துருக்கும் பூவிதழுக்கு... மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் , நிறமற்ற லிப் கிளாஸ்.....

இவற்றை உள்ளடக்கிய ஒல்லியும் அல்லாத, பருமனும் அல்லாத தேகத்துடன் காரிலிருந்து இறங்கினாள், ஒரு மாடர்ன் தேவதை...

" யாரடா..... இது..... "என நான் குழப்பத்துடன் என் நெற்றிசுருக்கி, நான் கூர்ந்து கவனித்த வேளை, அந்த மாடர்ன் தேவதை ,தன் கூலிங் கிளாசை கழட்டிய நொடி.... என் விழிகள் ஆச்சர்யத்தில் ஒரு முறை, விரிந்து சுருங்கியது......

அது வேறு யாருமல்ல.... என் அனு.... என் அனன்யாவே தான்.... ஒப்பனைகளை விரும்பாத அனு.... இன்று, கண்ணுக்கு காஜல், முகத்திற்கு கிரீம் என என ஒப்பனைகளின் மொத்த உருவமாய் மாறியிருந்தாள்........

அவளை ஆராய்ந்த நொடி, இது அனுவின் மாயையோ என தோன்றியது...

அனுவை பார்த்த அனைவரும் காரில் இருந்து இறங்க........நான், என் அருகே யுவி இருக்க....

நாங்கள் அந்த இடத்திலே இல்லாதவாறு எங்களை கடந்து சென்றுவிட்டாள்....

அதுவரை அவளை வெறித்திருந்த நான், அப்போது தான், அவள் என்னை கடந்து செல்வது என் மூளையில் உரைக்க....

"அனு " என எனக்கே கேட்காத குரலில் அழைத்த நான், அவளின் பின்னே சென்றேன்..... அவள் என்னை கண்டும், காணாதவாறு தேனு அத்தையை கட்டியணைத்துக்கொண்டாள்.....

"நல்லா இருக்கீங்களா மா "..... என அனு கேட்டிட....

என் அத்தையின் புத்திர பாசம் அவர் கண்களில், ஆனந்த கண்ணீராய் வெளியேறியது....

பேச்சு வராமல், மேலும், கீழும் தலையசைத்து ஆம் என உணர்த்தியவர், அனுவின் நெற்றியில் இதமாய், அழுத்தமான ஒரு முத்தத்தை பதித்தார்........

அனைவரும் அனுவிடம் பேசி, அனுவின் நலத்தினை வினவினர்.... என் அப்பா, அம்மா, வாணி, கிருஷ்ணா என அனைவரிடமும் கதையளந்து கொண்டிருந்தாள்.......

நானும், முருகன் மாமாவும் அனுவிடம் பேச முயற்சிக்க....

அதே சமயத்தில் அனுவின் கைபேசி ஒலிக்க.... "ஹலோ " என்றவாறு எங்கள் இருவரையும் காணாதவாறு, மாடிப்படியினில் ஏறி, அவள் அறையில் தஞ்சமடைந்துவிட்டாள்........

அவள் போனதும், மாமா கவலை தோய்ந்த முகத்துடன் தோற்றமளிக்க....

அவர் தோளில் கைவைத்த நான், "மாமா அவளுக்கு போன் வந்ததுனால... இங்க சிக்னல் கிடைச்சுருக்காது.... அதான் மாடிக்கு போய்ட்டா... மாமா " என ஆறுதல் பேச, அவர் ஒரு வலிமிகுந்தசிரிப்புடன் சென்றுவிட்டார்....

அவரை தொடர்ந்து, அனைவரும் வீட்டின் உள்ளே செல்ல..... நான் யுவியை நோக்க, யுவி எதுவும் பேசாமல் காரை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.....

நான் வேகமாக மாடிப்படியேறி, அனுவின் அறையின் வாசலில் நின்றேன்... வழக்கம்போலில்லாமல் அறையின் கதவு சாத்திவைக்கப்பட்டிருந்தது....

நான் கதவை திறந்து உள்ளே செல்ல..... அனு, கழுவிய முகத்தை துண்டினால் துடைத்து கொண்டிருந்தாள்.....

என்னை பார்த்தவுடன், "வா சித்து வந்து உக்காரு ".... என எவ்வித கோபத்தையும் காட்டாமல் அழைக்க.... நான் அங்கிருக்கும் சோபாவில் சென்று அமர்ந்தேன்....

நான் பேச ஆரம்பிக்கும் முன்பே, "எப்படி இருக்க சித்து?? " என பேசிய அனுவின் மொழியில், வழக்கமான உரிமை மரித்திருந்தது...

நான் சின்ன சிரிப்புடன்," நான் நல்லா இருக்கேன்.... அனு... நீ எப்படி இருக்க??? "என நான் சகஜமாய் வினவ.....

"எனக்கென்ன நான் நல்லா இருக்கேன்.... ப்ரண்ட்ஸ், காலேஜ், என்ஜாய்மேன்ட்.... லைப் சூப்பரா போது "......என கண்களில் ஒளி மின்ன சொன்னவளை பார்த்த நொடி,

இவள் என் அனு இல்லையோ என நினைக்க தூண்டியது..... அவ்வெண்ணத்தை ஓரமாக ஒதுக்கிய நான்.....

"இப்போ உனக்கு நிறைய பிரண்ட்ஸ் போல.... முன்னெல்லாம் என்னை தவிர யார்கூடவும் பேசமாட்ட, பழக்கமாட்ட.... " என நான் சிரித்துக்கொண்டே கேட்டாலும், என் பேச்சில் பொறாமை அப்பட்டமாய் வெளிப்பட்டது.....

"ஆமா எனக்கு நிறைய பிரண்ட்ஸ்..... இருக்காங்க..... "என அவள் அலைபேசியில் ஒவ்வொரு பெண்ணின் புகைப்படமாய் என்னிடம் காட்ட....

"அப்சரா " என்ற பெயருடைய அழைப்பு அனுவின் எண்ணுக்கு வந்தது....

"ஹாய் பேபி...." என அழைப்பை ஏற்ற, அனு..... சிறிதுநேரம் பேசி அழைப்பை துண்டித்துவிட்டு மீண்டும் என்னிடம் வந்தாள்....

"உனக்கு நிறைய கேர்ள்ஸ், பிரண்ட்ஸ் போல.... "என நான் பொறாமைப்பட்டு கேட்க...

"இல்ல....,.... "என அவள் முடிக்கும் முன்பே....... மனதின் ஒரு ஓரத்தில் சிறிய அளவில் நிம்மதி உதித்தது...

"பிரணவ் "என்ற பெயர் அவள் கைபேசி திரையில் ஒளிர்ந்து ஒலித்தது.........

புன்னைகை மாறா வண்ணம் அழைப்பை ஏற்று இங்கே வந்த சேர்ந்த விவரத்தை தெரிவித்து, அணைப்பை துண்டித்தாள்....

அவள் போனில், வேறுஒருவனுடன் சிரித்து பேசுவதை கண்ட, எனக்கு சற்று முன் தோன்றிய நிம்மதி மறைந்து, அடிவயிற்றில் அமிலம் சுரப்பது போல் பற்றிக்கொண்டு வந்தது....

உதட்டை கடித்து என் பொறாமை தீயை சிறிது குறைத்துக்கொண்டேன்.......

அவள் பேசிமுடித்து என்னிடம் திரும்பி........"சித்து எனக்கு நிறைய பாய்ஸும் பிரண்ட்சா இருக்காங்க.... நாங்க எல்லாருமே ஒரு கேங்.... " என மீண்டும் பல ஆண்கள் மற்றும் பெண்களின் புகைப்படத்தை என்னிடம் காட்ட......

என் வயிற்றில் தீயில்லாமல் பற்றிக்கொண்ட பொறாமை புகையானது.... என் காதின் வழியே சூடாய் வெளியேறுவதாய் உணர்ந்தேன்.....

"ஓ.... இவங்கலாம் இருக்கறதுனால தான்.... இந்த சித்து உனக்கு வேண்டாதவனா போய்ட்டேனா???..... இந்த அஞ்சு வருசமா எத்தனை தடவை உன்கிட்ட எப்படியெல்லாம் பேச ட்ரை பண்ணேன்..... நேர்ல கூட வந்தேன்...... ஆனா மேடம்க்கு என்ன பாக்க கூட பிடிக்கல.... அப்படித்தானே......" கோபக்கனலாய் அனுவிடம் நான் வெளிப்படுத்திய வார்த்தைகள், அனுவின் முகத்தில் கோபத்தின் சாயல் ஆரம்பித்ததை உணர்த்த, சிறிது என்னை கட்டுப்படுத்தி...

. "உன்கிட்ட சாரி கேட்கணும்.... பழைய மாதிரி உன்கிட்ட பேசணும்னு ரொம்ப முயற்சி பண்ணேன்.. அனு.... உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன் அனு "என வருத்தமாய் முடித்தேன்.....

"ஹே... சித்து ... இப்போ எதுக்கு இவ்ளோ பீல் பண்ற... நீ எதுக்கு இப்போ சாரி கேக்க.... நான் தான் சாரி கேக்கணும்..... நான் தான் தப்பு பண்ணேன்... ஆனா, அது எனக்கு லேட்டா தான் புரிஞ்சது... எனக்கு உன்கிட்ட சாரி கேக்க தைரியம் வரல... எனக்கு கொஞ்சம் டைம் தேவைபட்டுச்சு.... என்னை மாத்திக்க... அதான் உங்களயெல்லாம் விட்டு கொஞ்சம் நாள் ஒதுங்கி இருந்தேன்....., "என தொடர்ந்து பேசிய அனு ஒரு நொடி நிறுத்தி......

"ஓகே.... நடந்தது நடந்து போச்சு..... நடந்தத நம்மலால மாத்த முடியாது..... பழசயெல்லாம் மறந்துரலாம்..... புதுசா ஸ்டார்ட் பண்ணலாம்......" என சொன்னவள் "பிரண்ட்ஸ்???? "என அவள் கையை என் முன் நீட்ட....

நான் சிறிதும் யோசிக்காமல் என் கையை அவள் கையுடன் குலுக்கி, "பிரண்ட்ஸ் " என்றேன்....

அதை கேட்ட அனுவின் கருவிழிகள் மகிழ்ச்சியில் மின்ன, அது என் கண்களிலும் எதிரொலித்தது.....

அனுவிடம் சிறிது உரையாடிவிட்டு எனதறைக்கு சென்றேன்..... அங்கே சென்று, "பிரண்ட்சாம் பிரண்ட்ஸ் பொல்லாத பிரண்ட்ஸ்..... என்னைவிடவா??? "என வாய்விட்டு புலம்பியபடி, அனுவை நினைத்து அங்கலாய்த்துகொண்டேன்.......

போனை எடுத்து யுவியின் எண்ணுக்கு அழைத்தேன்..... அவனிடம் அனைத்தையும் சொல்லி, என் குமுறல்களை கொட்டினேன்....

அதன்பின்பே, மனமானது, லேசானதை போல் உணர்ந்தேன்........ ஆபீஸ்க்கு இன்று நான் விடுப்பு என்பதால் மெத்தையில் படுத்த நான் கண்ணயர்ந்துவிட்டேன்....

இந்த ஐந்து வருடத்தில் அனன்யாவின் வீடும், எங்களின் வீடும் ஒன்றாகி போனது.... அனைவரும் ஒரே வீட்டில் தான் வசிக்கிறோம்...

இரவு நேரம்............

நான் சாப்பிட கீழே இறங்கி செல்லும் சமயம், அனுவும் டைனிங் ஹாலில் அடைந்திருந்தாள்......

நான் இறங்கி டைனிங் ஹாலில் அமர, அவளும் அமர்ந்தாள்..... அனைவரும் அமைதியாக உணவருந்தி கொண்டிருந்தனர்......

எனக்கும், அனுவுக்கும் தட்டு வைக்கப்பட்டது..... அப்பொழுது தான் நான் இரவு உணவினை கவனித்தேன்....

அனைத்தும் அனுவிற்கு பிடித்த உணவு வகைகள்..... ஒரு குட்டி ஹோட்டல் ஒன்று மேஜை மீது இருந்தது போல் காட்சியளித்தது.......

அனுவின் தட்டில், என் அம்மா, தேனு அத்தை, வாணி என அனைவரும் மாறி மாறி பரிமாறினர்..... அனைத்து வகையான உணவுகளாலும், அவள் தட்டு நிறைக்கப்பட்டது....

என் அம்மா....."அனு இந்தா உனக்கு பிடிக்குமேனு லட்டு செஞ்சேன்.... "என அனுவிற்கு ஊட்டிவிட்டார்.....

இவை அனைத்தையும் கண்ட என் கண்கள் அனுவை முறைக்க துவங்கியது.......

சாப்பாட்டை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்த அனு, என் பார்வையை கண்ட நொடி என் அம்மாவிடம் "பாருங்க அத்தை இந்த சித்து என்னை கண்ணு வைக்குறான் " என சிணுங்கினாள்.....

உடனே, என் அம்மா "ஏன்டா பிள்ளைய கண்ணு வைக்குற.... நீ சாப்பிடு டா.... " என அனுவை கொஞ்ச, என் முறைப்பு மேலும் அதிகமாகியது.....

"மம்மி.. இது கொஞ்சம் கூட நல்லா இல்ல.... அவ தட்டு நிறைய சாப்பாடு...எனக்கு இன்னும் ஒன்னுமே வைக்கல " என நான் வெறும் தட்டை தூக்கி காட்ட.....

தேனு அத்தை எனக்கு சிரித்தபடி, பரிமாறினார்..... "அத்தைனா அத்தை தான் "என என் அத்தையை மெச்சியபடி சாப்பிட ஆரம்பித்தேன்......

சாப்பாட்டின் நடுவே, "அனு அடுத்து என்ன பண்ண போற,??? ".....என நான் வினவ.....

"ஏதாச்சும் ஒரு நல்ல கம்பெனில இன்டெர்ன்ஷிப் ஜாயின் பண்ணனும் " என அனு சொல்ல....

"ஏதோவொரு கம்பெனில ஜாயின் பண்றதுக்கு.... நம்ம சித்து,யுவியோட கம்பெனிலேயே ஜாயின் பண்ணலாமே அனு.... அதுவும் நல்ல கம்பெனி தான்" என என் அப்பா ராம் சொல்ல.....

யுவியின் பெயரை கேட்ட அனு, என்னசொல்வாளோ என சிறிய பதட்டம் கலந்த யோசனையோடு , நான் அனுவை நோக்கினேன்.....

அதுவரை அனுவின் முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்து, சாப்பிட வாய் அருகே கொண்டு போன கையை, ஒருகணம் நிறுத்தி, இறுகிய முகத்துடன் "அது வேணாம்..மாமா..... சரி வராது.. "....என அனு உணர்ச்சியற்ற குரலில், என் அப்பாவிடம் சொன்னாள்...

"இல்ல அனு" ... என என் அப்பா அனுவிடம் எதையோ சொல்ல தொடங்கும் முன்....

"விடு ராம்...... அவ தான் வேணாமுன்னு சொல்லறால....

அவளுக்கும், யுவிக்கும் சும்மாவே ஆகாது.... இவ வேற ஒரு முன்கோபி.... இவ அங்க போனா தேவையில்லாத பிரச்சனை தான் வரும் "என முருகன் மாமா சொல்லி முடிக்க...

"சித்து... நாளைக்கே நான் உன் கம்பெனில ஜாயின் பணிக்குறேன் " என அனு சற்று உரக்கமாக அழுத்தி சொல்ல.....

என் கண்கள் மட்டுமல்ல, அங்கிருந்த அனைவரின் கண்களும் ஆச்சர்யத்தில் விரிந்தது....

Author note :

Hai friends 👋...

Sorry for the late update....Konjam velai & sinna health problem..
athunala nerathuku update koduka mudiyala....

As usual the votes & comments are appreciated....

இக்கதையை பற்றிய தங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.....

Catch u later on next update makkale,👋👋👋👋

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro