Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மணாளன் யாரோ?

நாட்கள் நகர, அனைவரின் அன்றாட வாழ்க்கையும் சிறப்பாக சென்றது..... இருவரை தவிர..... சித்தார்த் மற்றும் யுவராஜ்....

இருவரும் அனன்யாவின் மனதை வெல்வதே குறிகோளாய் கொண்டு சுற்றியவண்ணம் திரிந்தனர்.......

அவர்களின் நட்பின் தற்காலிக விரிசலை சரி செய்ய இருவருமே முயலவில்லை...... ஒருவர் இறங்கினாலும் அவர்களின் தலையில் உள்ள பெருமை க்ரீடம் இறங்கிவிடும் போல.....

இருவரும் ஒருவனை கட்டிய மனைவிகள் போல, மல்லுக்கு நின்றனர்.....

கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றமென உப்பு, சப்பில்லா காரணங்களையெல்லாம் மலையளவு உருவகப்படுத்தி பனிப்போரை தொடர்ந்தனர்.....

யுவியோ அனன்யாவிடம் எவ்வாறு பேசி பழகுவது???? என யோசனையுடனே, அவள் பார்வை தீண்டலே போதுமென நினைத்து, அவளை ரசித்தபடி தன் நாட்களை நகர்த்தி சென்றான்....

காதலுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை, சித்தார்த்துடனான நட்புக்கு கொடுக்க தவறிவிட்டான், யுவராஜ்.....

ஆனால் சித்தார்த்தின் மனதோ யுவியின் பிரிவால் வாடத்துவங்கியது.... காலம் யுவியின் மீதான சித்தார்த்தின் கோபத்தை கரைத்து உருக்கியது..... 

யுவியின்  மறைமுக  பிரிவால்  சித்தார்த் மிகவும் துவண்டுபோனான்.... சரியாக உணர்வருந்தாமலும், அனைத்திலும் நாட்டம் குறைந்தும் காணப்பட்டான்....

  இதையாவையும் அனன்யா கவனித்துக்கொண்டிருந்தாள்.... சித்துவின்  வாட்டத்திற்கு  யுவியின் பாராமுகமே காரணம் என்பதையும் அவள் நன்கு அறிவாள்....

ஒரு  நாள்  அலுவலகத்தில் மிக முக்கிய மீட்டிங் ஒன்று இருப்பதால் சித்துவும், அனன்யாவும் சேர்ந்து வேலையில் மூழ்கியிருந்தனர்.....

அப்போது அங்கு யுவராஜ் வந்து சேர, அனுவும், சித்துவும் அப்படி ஒருவன் இருப்பதையே கண்டுகொள்ளாமல் கோப்பிலும், மடிக்கணினியுமிலே தங்கள் பார்வையை பொருத்தியிருந்தனர்...

யுவராஜ் தன் தொண்டையை "மக்குக்ம்ம்ம்ம் " என செரும்பி அவர்களின் கவனத்தை ஈர்க்க, அவர்களின் பார்வை ஒரு முறை யுவியை தீண்டி மறுமுறை  கோப்பில் பதிந்தது.....

அனு மற்றும் சித்துவின் அலட்சியம் யுவியின்  கோபதீப்பொறியை பற்றிக்கொள்ள செய்தது... மீட்டிங்கிற்காக கையை மடக்கியும், பற்களை கடித்தும் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான், யுவராஜ்....

மீட்டிங் முடிந்து, கான்பெரென்ஸ் ஹாலில் அனைவரும் கூடியிருக்க, அப்போதும் சித்தும், அனுவும் யுவி என்று ஒருவன் அங்கு இல்லாததை போன்று நடந்துகொண்டும், அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதையும்  கண்ட யுவி அடிநெஞ்சில் இருந்து பற்றிகொண்டுவந்தது.....

அது பொறாமை கனலா?? இல்லை அவர்களின் ஒதுக்கத்தால் வந்த வெதும்பல் கோபமா????  என்ற கேள்விக்கு யுவராஜின் மனதில் பதில் இல்லை....

அவர்கள் தன்னை ஒதுக்குவதை தாங்காத யுவி, வேகமாக அவ்விடத்தை விட்டு வெளியேறி காரிடெரில் நடக்க துவங்கினான்....

அப்போது "யுவராஜ் " என ஒரு பெண்ணின் குரல் தன்னை அழைக்க திரும்பினான், யுவராஜ்.....

திரும்பியவன் கண்களை அவனாலே நம்ப முடியவில்லை.... அழைத்தது அவன்  நெஞ்சை ஆளும் அனன்யாவே  தான்....  "பிரமையோ?? " என அவன் மீண்டும் யோசனையில் மூழ்க,  "யுவராஜ் கொஞ்சம் நில்லு.... "  என்றவாறு மூச்சு வாங்க ஓடிவந்து அவனின் அருகில் நின்றாள்....

அவளின் அருகாமையிலேயே  உண்மையென்றுணர்ந்த  யுவியின் இதயதுடிப்பு மாரத்தான் ஓட்டமெடுக்க, வியர்வை அழையா விருந்தாளியாய் அவன் உள்ளங்கையை நிறைத்தது....

அவற்றை யுவி, தன் அகத்தே மறைத்து, புறத்தில் வெளிப்படுத்தாமல் அனன்யாவை கேள்வியோடு நோக்கினான்....

"நீ ஏன் இப்போ சித்து கூட பேசமாட்டேங்குற???? பாவம் சித்து சரியா சாப்பிடமாட்டேங்குறான், தூங்கமாட்டேங்குறான், எப்போ பாத்தாலும் டல்லா இருக்கான்.... நீ அவன்கிட்ட பேசுனா சரி ஆகிடுவானு நினைக்குறேன்....சித்துகிட்ட  பழையபடி பேசு ப்ளீஸ்... அவனை இப்படி பாக்க சகிக்கல..."  என  அனன்யா யுவியிடம் கோரிக்கை வைக்க..

அனன்யா ஊரில் இருந்து வந்ததிலிருந்து ஒரே ஒரு முறை மட்டும்  தன்னிடம் தொழில் ரீதியாக  பேசியிருக்கிறாள்... அதுவும் நான்கு வார்த்தைகளே..... ஆனால் இன்றோ சித்துவிற்காக தன்னிடம்  நீண்ட சொற்பொழிவே நடத்துகிறாள் என நினைக்கையிலே யுவராஜிற்கு கோபம் நெஞ்சை முட்டியது.....

ஏற்கனவே அனன்யா  சித்துவுடன் சேர்ந்து தன்னை ஒதுக்கிய கோபத்தில் கொதித்தவன், சித்துவிற்காக தன்னிடம் அனன்யா கோரிக்கை வைப்பது, யுவியின்  உள்ளத்தில் ஒரு ஓரத்தில் தற்காலிகமாக அணைத்து வைக்கப்பட்டிருக்கும் பொறாமை தீயை  பற்றவைத்து சுவாலையாக மாற்றியது....

அனைத்தும் சேர்ந்து ஆத்திரமாய் உருபெற்று யுவியின் மனதை நிறைக்க, "சித்து சாப்பிட்டா எனக்கென்ன??? சாப்டிலானா எனக்கென்ன??? முதல நீ  யாரு எங்க ரெண்டு பேருக்கும் நடுவில... உன்னோட வேலை என்னவோ அதை மட்டும் பாரு..... தேவையில்லாத விசயத்துல மூக்கை நுழைக்காத....." என தன்னால் எவ்வளவு சத்தமாக கத்தமுடியுமோ, அவ்வளவு சத்தமாக அனன்யாவிடம் கத்திவிட்டு, தனது காரில் ஏறி நொடியில் அவ்விடத்தை விட்டு மறைந்துவிட்டான் யுவராஜ்.....

யுவராஜ் கத்தியதில் அனன்யாவின் கண்கள் விழி நீர் தேங்கி நின்றது..... அவன் சென்ற திசையை பார்த்தபடி நின்றிருந்த அனன்யாவின்  பார்வையை விழிநீர் மறைக்க, தனது தோளை யாரோ ஒரு கையால் பற்ற திரும்பியவளின் கண்ணில் இருந்த விழிநீர் வழிந்து கன்னத்தை தொட்டது.....

அனன்யா திரும்பி பார்க்க அங்கே சித்தார்த் அவளின் கண்ணீரை தன் கைகளால் துடைத்தபடி, "நீ  எதுக்கு அவன்கிட்ட போய் பேசுன????? " என  கேட்க....

அனன்யா விசும்பலோடு, "என்னால தானே நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சீங்க.... அதான் நானே பேசி சரி பண்ணலாம்னு நினச்சேன் " என்க....

" தப்பு எங்க ரெண்டு பேரு மேலையும் இருக்கு.... அவனும் அப்படி பேசியிருக்ககூடாது.... நானும் அவனை அடிச்சுருக்க கூடாது...... நாங்க தானே சண்டை போட்டோம்....  நாங்களே சமாதானம் ஆகிடுவோம்.... தேவையில்லாம நீ இதுல ஹர்ட் ஆகுறத நான் விரும்பல.... புரிஞ்சுதா??? விடு நான் பாத்துக்குறேன்.... ஓகே???? " என சித்து கேட்க, அனு  ஆமோதிப்பதாய் தலையை ஆட்டினாள்....

அன்று சென்ற யுவி இரு நாட்களாகியும் அலுவலகம் வரவில்லை.....

யுவியை காணாத சித்து, யுவி மற்றும் யுவியின் அப்பா வாசனின்  கைபேசிக்கு முயல இருவருமே சித்துவின் அழைப்பை ஏற்கவில்லை.... 

மூன்றாம் நாள் காலை அலுவலகம் வந்த சித்து, "இன்று யுவியின் வீட்டுக்கே சென்று பார்த்துவிடுவோம்" என்று எண்ணிய படி, அவன் அலுவலக வாசலை அடைய,  புதிய கருப்பு நிற ஆடி கார் ஒன்று  வந்து நின்றது.....

அதிலிருந்து புதிய கருப்புநிற ப்ளேசரை அணிந்தபடி, எப்போதும் இருக்கும் அரைகுறை தாடியை முழுவதும் சவரம் செய்து, கையில் ரோலக்ஸ் வாட்ச், தலைக்கு ஜெல் என இதுவரை சித்து கண்டிராத யுவராஜாய் அவன் முன் காரில் இருந்து இறங்கினான் யுவராஜ்..... 

யுவராஜின் புதிய தோற்ற வெளிப்பாடு அவனுக்கு நன்றாக இருந்த போதிலும், "எப்பொழுதும் எளிமையாய் தோற்றமளிக்கும் யுவி , எதற்காக இவ்வாறு நடந்துகொள்கிறான் " என சித்துவுக்கு ஒன்றும் விளங்கவில்லை.....

சித்துவை கண்டுகொள்ளாத யுவி, அலுவலகத்தின் உள்ளே செல்ல, அவனை பின் தொடர்ந்து சித்துவும் உள்ளே சென்றான்.....

அனைவரின் காலை வணக்கத்தையும் பெற்றுக்கொண்ட யுவி, எல்லோர் முன்னிலையிலும், "மிஸ் அனன்யா நீங்க என்னோட கேபினுக்கு வாங்க " என  சொல்லிவிட்டு அவன் அலுவலக அறையை அடைந்தான்...

யுவி அவனின் அறையில் இருக்க, சித்து அவனின் அறையில் நுழைந்தான்.....

உடனே யுவி, "நீ  மிஸ்  அனன்யாவா???.... " என அமைதியாய்   கேட்க.....

சித்து "எக்ஸ்க்யூஸ் மீ??? " என கேட்க...

"நீ மிஸ் அனன்யாவா??? இல்லை தானே.... போய் அனன்யாவை வர சொல்லு போ " என  யுவி அழுத்தமாக சொல்ல....

சித்து போய் அனன்யாவையும்  அழைத்துக்கொண்டு யுவியின் அறையை அடைந்தான்...

"மிஸ் அனன்யா ராஜன் கம்பெனி ப்ராஜெக்ட் ஏன் இன்னும் பெண்டிங்ல இருக்கு.... இன்னைக்கு ஈவினிங்குள்ள நீங்க முடிச்சுருங்க..... அப்புறம் இந்த  பைல்ஸ்ல  நிறையா  எரர் இருக்கு... அதையும் கிளியர் பண்ணிருங்க...... " என அவன் மேஜை மீது நிறைக்கப்பட்டிருக்கும் கோப்புகளை அவளிடம் காட்ட.....

சித்து "யுவி.... பாவம் அனன்யா தனியா எப்படி எல்லா வேலையும் செய்வா??? மத்த ஒர்க்கர்ஸ்லாம்  இருக்காங்களே..... அவங்ககிட்ட  சொன்னா செய்யப்போறாங்க...... " என  சொல்ல.....

யுவியோ ஏளனமாக சிரித்துக்கொண்டு "ஓ....அப்போ  நீ  இந்த வேலையெல்லாம் அனன்யாவுக்கு தனியா செய்யவராதுனு சொல்லுற அப்படி தானே... "என சித்துவை  கேட்க..... 

யுவியின் பேச்சு அனன்யாவின் தன்மானத்தை தீண்டிவிட, அனன்யா யுவியை காரப்புயலாய் நோக்கினாள்....

சித்து வாயை திறப்பதற்குள், "நானே தனியா எல்லா வேலையும் முடிச்சுருவேன்.... எனக்கு யாரோட ஹெல்பும் தேவையில்லை...... " சொல்லிய அனன்யா அனைத்து கோப்புகளையும் அள்ளிக்கொண்டு அவளின் கேபினை அடைந்தாள்....

அனைத்து வேலைகளையும் அனன்யா முடிக்க, இரவு 11:00 மணி ஆனது.....

அன்று சித்துவும், யுவியும் அனன்யாவுக்கு துணையாக  அலுவலகத்திலே இருந்தனர்..... அனன்யா வேலை செய்யும் நொடிகளில் யுவி மற்றும் சித்துவின் பார்வைகள் அனன்யாவை  வருட தவறவில்லை.....

"அன்று ஒருநாள் தான் யுவி அவ்வாறு நடந்து கொள்கிறான்..... போக போக சரியாகிவிடுவிடுவான்.... " என்று எண்ணியிருந்த சித்துவின் எண்ணம் பொய்த்து போனது.....

நாளுக்கு நாள் யுவி, அனன்யாவுக்கு வேலைகளை அடுக்கிக்கொண்டே சென்றான்..... அனன்யாவும் வேலை செய்வதற்கே பிறப்பெடுத்து போல் அவன் சொன்ன வேலைகளை சிரமப்பட்டு முடித்து வந்தாள்.....

பணிச்சுமையினால் அனன்யா உள்ளம் சோர்வுறுவதை  சித்து நன்கு தெரிந்து வைத்திருந்தான்....

அனன்யா -சித்தார்த் பேசிக்கொள்ளும் நேரமும் வெகுவாக குறைந்து போனது......

இதையெல்லாம் யுவி வேண்டுமென்றே செய்கிறான் என சித்து அறிந்தாலும், இதை யுவியிடம் கேட்டால், விரிசலுற்றிருக்கும் யுவியிடனான தன் நட்பில்  பிளவு  ஏற்படுமோ என்ற அச்சம் அவனை ஒன்றும் செய்யவிடாமல் ஆக்கியது.....

.
.
.
.
.
.
இதற்கிடையில் "எவ்வாறு முருகன் மாமாவிடம் தனது திருமணத்தை தள்ளிப்போட சொல்வது???? எவ்வாறு திருமணத்தை நிறுத்துவது???? மாமா இதற்கு சம்மதிப்பாரா???? " என்ற யோசனையிலே குழம்பி தவித்தான், சித்தார்த்... முருகனின் கோபத்தையும், பிடிவாதத்தையும் நினைக்கையிலே அவனுக்கு பயமெடுத்தது.......

இருந்தாலும் மாமாவிடம் இன்றாவது பேசிவிட வேண்டுமென முடிவெடுத்து முருகன் மற்றும் ராமின் கம்பெனிக்கு கிளம்பினான், சித்தார்த்...

அவர்களின் கம்பெனிக்கு சித்தார்த் செல்ல, சித்துவின் அப்பா அவனை பார்த்து...

"என்ன சித்து இங்க வந்துருக்க???.... என்ன விஷயம்???? " என வினவ.....

"அப்பா... நான் உங்ககிட்டயும், முருகன் மாமாகிட்டயும் பேசணும்.... வீட்ல பேசுனா சரியா வருமான்னு தெரில... அதான்பா இங்க வந்தேன்... " என சித்து சொல்ல....

"சரி.. உள்ள வா.... " என அவனை அழைத்து சென்றார், சித்துவின் அப்பா...

உள்ளே சென்றதும் முருகன், "என்ன சித்து அதிசயமா ஆபிஸ் வந்துருக்க??? நானே வானு கூப்பிட்டாலும் வரமாட்ட.... " என சிரித்த முகத்துடனே சொல்ல.....

பதிலுக்கு சிரித்த சித்து அவர் முன் அமர்ந்தான்......

"மாமா..... நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்..... அதான் இங்க கிளம்பி வந்துட்டேன்.... "
என சித்து சொல்ல.....

முருகன் ராமை ஒரு ஆழ்ந்த பார்வை நோக்கிவிட்டு, "சொல்லு சித்து என்ன விஷயம்????? " என கேட்க......

தண்ணீர் நிரப்பட்டு மேஜை மீது மூடி வைக்கப்பட்டுள்ள கண்ணாடி டம்ளரை கையில் எடுத்தவன் கண்ணை மூடி ஒரு வாயில் தண்ணீரை குடித்த, சித்தார்த் மேஜை மீது டம்பளரை வைத்துவிட்டு........

"அது ஒன்னும் இல்ல மாமா..... அது என்னனா??...... " என சொல்லிய சித்தார்த்..... மீண்டும் தன் அப்பாவை பார்க்க......

"சொல்லு சித்து..... எதுக்கு உங்க அப்பாவ பாத்து திருட்டுமுழி முழிக்குற???... சீக்கிரமா சொல்லு..... " என முருகன் சொல்ல.....

"அது ஒன்னும் இல்ல... அங்கிள்.... எனக்கும், அனன்யாவுக்கும் நடக்க போற கல்யாணத்த ஒரு டூ, த்ரீ இயர்ஸ்க்கு அப்புறம் வச்சுகுட்டா கொஞ்சம் நல்லா இருக்கும்னு பீல் பண்றேன் மாமா.... " என மனனம் செய்தது போல் சித்து ஒப்புவிக்க.....

"ஏய்... சித்து... என்ன பண்ணிட்டு இருக்க நீ..... அன்னைக்கு என்னனா யுவிக்கும், அனுவுக்கும் நடக்க இருந்த எங்கேஜ்மெண்ட்ல பிரச்சனை பண்ணி, நீ அனுவ எங்கேஜ்மெண்ட் பண்ண.... சரினு நாங்களும் ஒத்துக்கிட்டோம்..... இப்போ என்னனா இப்படி வந்து சொல்லுற????? என்ன நினைச்சுட்டு இருக்க???? நீ பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல????.... " என விடாது கத்திய ராமனை தன் கையுயர்த்தி நிறுத்தினார், முருகன்.....

முருகனின் கண்கள் சினத்தில் சிவந்தது...." நீ நல்லா இருக்கும்னு பீல் பண்றியா???? இல்ல அனன்யா அப்படி சொல்ல சொன்னாளா????? " என கோபம் ஒட்டிய முகத்துடனே முருகன் சித்துவை பார்த்து குரலை உயர்த்தி கேட்க.....

ஏசி அறையிலும் சித்துவிற்கு வியர்க்க துவங்கியது..... கைக்குட்டையால் தன் நெற்றி வியர்வையை அழுத்தி துடைத்த சித்து, "இல்ல மாமா.... நானும், அனன்யாவும் சேர்ந்து எடுத்த முடிவு தான் இது... நானும் இப்போ தான் கம்பெனி ஆரம்பிச்சுருக்கேன்..... இன்னும் கொஞ்சம் நான் என்னோட காரியர்ல ஸ்ட்ராங் ஆகணும்.... அனன்யாவும் இப்போ தான் படிப்பை முடிச்சுருக்கா..... அதான் சொல்றேன் மாமா " என முதல் முறை செமினார் எடுப்பது போல் படபடப்புடன் விளக்கிக்கொண்டிருந்தான்......

"அப்படினு அனு சொல்ல சொன்னாளா???? கத்தி பேசுனா வேலைக்கு ஆகலனு... உன்ன தூது அனுப்புனாளா????? இங்க பாரு சித்து கல்யாணம் செஞ்சுட்டு கூட, நீயும் அனுவும் உங்க கரியர ஸ்ட்ராங் பண்ணிக்கலாம்..... " என நிதானம் கலந்த கோப முகமுடியுடன் கூறிய முருகன் மீண்டும் சித்துவிடம் "புரிஞ்சுதா??????..... " என அழுத்தி கேட்க....

சித்து ஆம் என்று உணர்த்திட இடவலமாக சுற்றி ஒருவாறு தலையை ஆட்டினான்.....

"சரி மாமா.... நான் வரேன் " என சித்து அவர் கோபத்திலிருந்து தப்பி, கதவை திறக்கும் நொடி......

"இங்க பாரு சித்து..... நீ தான் இதை ஆரம்பிச்ச..... உனக்கும், அனன்யாவுக்கும் விருப்பம் இருந்தாலும் சரி, இல்லனாலும் சரி இந்த கல்யாணம் குறிச்ச தேதில கண்டிப்பா நடக்கும் " என முருகன் அழுத்தம் திருத்தமாக சொல்ல, சித்து அதை காதில் வாங்கியவாறு வெளியேறினான்.....

வெளியே சென்ற சித்து "கல்யாணத்தை தள்ளிப்போடலான அனு கத்துறா..... தள்ளிப்போட்டா மாமா கத்துறாரு....... ரெண்டு பேருக்கும் நடுவுல மாட்டிகிட்டு என்பாடு திண்டாட்டமா இருக்கே.... " என அலுத்துக்கொண்டு அவனின் அலுவலகத்திற்கு புறப்பட்டான்......

.

.

.

சித்து தன் அன்றைய நாள் வேலையை சரியாய் செய்துவிட்டு,  அனுவின் பணிச்சுமையினால் ஏற்படும் சோர்வை நீக்கும் பொருட்டு,  அனுவுடன் நேரம் செலவிட எண்ணினான்...

அனுவிற்கு அழைப்பு ஏற்படுத்தி , "ஹலோ அனு .......சீக்கிரம் வேலைய முடிச்சுட்டு ரெடியா இரு...... நாம வெளில போறோம் " என அவளுக்கு பேச வாய்பளிக்காமல் பேசிவிட்டு, அழைப்பை துண்டித்து, மீதமிருந்த வேலையில் மூழ்கினான் சித்து.....

வேலையை சீக்கிரமே முடித்த சித்து அனுவிடம் வந்து "வா அனு போலாம்..." என்க....

அனன்யாவோ "இல்ல சித்து இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு... அதை முடிச்சுட்டு வந்துறேன்..... " என சொல்ல....

"வேலை இருந்துட்டே தான் இருக்கும்..... ரிமைனிங் ஒர்க்க நாளைக்கு பாத்துக்கலாம் இப்போ கிளம்பு... " என கைப்பையை ஒரு கையில் எடுத்த சித்து, மறுபுறம் அவளின் கரம் பற்றி, அவளை இழுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு வெளியே செல்ல.... அக்காட்சியை அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரும் பார்த்தனர்..... 

யுவியும் அக்காட்சியை பார்த்து வயிறெரிந்துகொண்டான்..

காருக்குள் சித்தார்த்தின் அருகில் அனன்யா அமர்ந்திருக்க, சித்தார்த் காரை இயக்கிகொண்டிருந்தான்....

" எங்க சித்து போறோம்..... அதுவும் இவ்ளோ சீக்கிரமா ஆபிஸ்ல இருந்து கிளம்பி...... " என அனன்யா கேட்க....

"சர்பிரைஸ்...... " என சித்தார்த் சொல்ல.....

"என்ன சர்பிரைஸ்???.....சொல்லுலுலு...... " என அனன்யா கெஞ்சலாய் கேட்க.....

அவள் கெஞ்சிய விதத்தை கண்டு மெலிதாய் சிரித்த சித்தார்த், சிரித்தவாரே "கொஞ்சம் வெயிட் பண்ணி தெரிஞ்சுக்கோ..... " என்றிட.....

அனன்யா சாலையை வேடிக்கை பார்க்க துவங்கினாள்.....

அவன் அவர்கள் இருவரும் முன்பு வழக்கமாக செல்லும் பூங்காவிற்கு அழைத்து வந்திருந்தான், சித்தார்த்....

பூங்காவை பார்த்தவுடன் அனன்யாவின் முகம் மலர்ந்தது..... பச்சை பசேலென இருக்கும் புதர்களையும், செடிகளையும் பார்க்கும் போது அவள் நெஞ்சில் சந்தோச புத்துணர்வு தோன்றி, அவள் பழைய நினைவுகளை மலர செய்தது.....

மகிழ்வுடன் அங்கு சித்துவுடன் சென்றவள் புல் தரையில் அவனுடன் நடக்க துவங்கினாள்......

அவளின் முகமலர்ச்சியைக் கண்ட சித்து "என்ன அனு.... மலரும் நினைவுகளா????? " என கேட்க.....

"ஆமா சித்து எவ்ளோ நாளாச்சு... இங்க வந்து.... " என அனன்யா சொல்லிக்கொண்டே நடந்தாள்....

"இவ நல்ல மூட்ல இருக்கும் போதே மாமா சொன்ன விஷயத்தை சொல்லிருவோம்.... இல்லனா கொட்டு அடிக்காமலே சாமியாடுவா " என எண்ணிய சித்தார்த்....

"அனு நான் மாமாகிட்ட பேசுனேன்... நம்ம ரெண்டு பேருக்கும் த்ரீ இயர்ஸ் டைம் வேணும்னு சொன்னேன்.... பட் அவர் ஒதுக்கமாட்டேன்னு சொல்லிட்டாரு..... குறிச்ச தேதில கண்டிப்பா கல்யாணம் நடக்கும்னு சொல்றாரு..... எனக்கு என்ன பண்றதுனு தெரியல அனு... " என சித்து தன் இயலாமையை வெளிப்படுத்த...

" உண்மையிலே அப்பாகிட்ட பேசினியா.... இல்ல நீயே அடிச்சுவிடுறியா???? " என அனன்யா கோபம் கலந்த சந்தேகத்துடன் சித்துவை கேட்க....

அவளின் கோபத்தை கண்ட சித்து "ஹே..... நிஜமாவே பேசுனேன் அனு... மாமா ஒதுக்கல " என   உண்மையை சொல்ல.....

அவனின் முகமே அவன் பொய் சொல்லவில்லை என்றுணர்த்த அனு "அப்படியா சொன்னாரு அப்பா.... இருக்கட்டும்...... அவர் பொண்ணு தானே நான் அவருக்கே இவ்ளோ பிடிவாதம் இருந்தா அவர் பொண்ணு எனக்கு எவ்வளவு பிடிவாதம் இருக்கும்.... பாக்குறேன் எப்படி இந்த கல்யாணம் நடக்குதுன்னு..... "  சூளுரைத்த அனு சித்துவை விட்டு வேகமாக நடக்க துவக்குகினாள்...

அவள் வேகமாக நடப்பதை பார்த்த சித்து "இப்போ தான் தெரியுது... அனுவோட கோபம், பிடிவாதம்லாம் எங்க இருந்து வந்துச்சுனு.... அப்படியே மாமா மாதிரி " என எண்ணிய சித்துவை புன்னகை சூழ்ந்துகொண்டது....  அவன் அனுவை பார்க்க அதற்குள் அவள் கார் பார்க்கிங்கை நெருங்கியிருந்தாள்....

"ஹே.... அனு "  என மிதமான ஓட்டத்தோடு காரை அடைந்தான்.....
.
.
.
.
.

மறுநாள் காலை........

சித்தார்த்தும், அனன்யாவும் வழக்கம் போல் அலுவலகத்திற்கு தயாராகி கீழே சென்று உணவருந்திக்கொண்டிருந்தனர்......

அப்போது ஒருவர் வந்து பார்சல் தர, அதை முருகன் பெற்றுக்கொண்டார்.....

சித்துவும், அனுவும் அலுவலகம் கிளம்பும் நேரம் அனைவரும் ஹாலில் கூடியிருந்தனர்.... 

அவர்கள் கிளம்புவதை பார்த்த முருகன், "சித்து கொஞ்சம் இங்க வா... கல்யாண பத்திரிக்கை வந்துருச்சு பாரு.... " என அழைக்க.....

அனன்யா  பார்வையிலே சித்தார்த்தை சோளத்தை தீயில் பொரிப்பது போல், எரித்துக்கொண்டிருந்தாள்....

அவள் பார்வையிலே அனன்யாவின் கோபக்கனலை உணர்ந்த சித்து வழிந்து புன்னகைத்தான்.......

அப்போது  சித்துவின் அப்பா ராம், " டேய்.... என்னடா எப்பவும் சித்து.... சித்துனு சொல்லுற.... அனு... நீ  வாடா... வந்து பத்திரிக்கையை பாரு.... " என அழைக்க,  அனன்யா ராமிடம் சென்றாள்.....

முதலில் வாணி - கிருஷ்ணாவின் பத்திரிக்கையை பார்த்த அனன்யாவின் முகம் மகிழ்ச்சியில் மிளிர்ந்தது.....

பின் அனன்யா தன்னுடைய கல்யாண பத்திரிக்கையை  நோக்க,  அதிர்ச்சியில் அவள் கண்கள் விரிந்தது.... 

அனன்யாவின் முகத்தை பார்த்த சித்து  பத்திரிக்கையை  வாங்கி பார்க்க, அவன் கண்களோ கோபத்தில் மூன்று மடங்கு பெரிதாகி சுருங்கியது....

கோபத்தில் சித்து பத்திரிக்கையில் இருந்ததை படிக்க,  

      "யுவராஜ்  வெட்ஸ்  அனன்யா  " என்று இருந்தது......

சித்து படிப்பதை கேட்ட  ராம், முருகன் உட்பட அனைவரின்  முகத்திலும்  அதிர்ச்சி பரவியது...... 

......................................

Hi friends.....

Because  of my college & work stuffs  i didn't  update on time....Very very sorry  for late update... i will try to give 2 or  1 part in a week.....

Negative comments  are most welcome...

Intha part nan edit panala...Tharalamaga nengal en thavarugalai sutti katalam....

Catch u later on next update makkale 👋👋👋👋👋👋

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro