அது ஒரு கனா காலம்
அது ஒரு ரம்மியமான இரவு.....
காரிருள் கண்களை நிறைந்திருக்க......... ரோஜாவின் வாசம் சுவாசத்தை நிறைத்திருந்திருக்க..... வாசம் வந்த திசையினை நோக்கி அனிச்சையாக சென்றது அவள் கால்கள்......
மாடிப்படிகள் அவ்வாசனைக்கு வாயிலாய் அமைய.......சிறிதும் நிற்காமல் படிகளின் மேல் ஏறின அப்பாதங்கள்.....
வாசத்தின் மூலத்தை அடைந்தவுடன் நின்றன அப்பாதங்கள்.....
மெழுகுவர்த்திகள் மற்றும் முழுநிலா மட்டுமே அவ்விடத்திற்கு ஒளியூட்ட, கீழே முழுவதும் ரோஜா இதழ்கள் பரப்பப்பட்டிருந்தன. ஆங்காங்கே சிவப்பு நிற இதய வடிவிலான பலூன்கள் கட்டப்படும், தரையில் போடப்படும் இருந்தன. அங்கே ஒரு மேஜை மற்றும் இரு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.....
யாருக்காக இதெல்லாம் என அவள் யோசிக்கும் வேளையில்.... மெல்லிய இசை இசைக்கப்பட்டது..... வண்ணவிளக்குகளால் அவ்விடம் ஒளிர்ந்தது..... எங்கிருந்தோ வந்த இரு பெண்கள் அவளின் தலையில் மலர்வளையத்தை வைத்து அவளை முன்னே அழைத்து சென்றனர்.....
எங்கிருந்தோ வந்த நால்வர் அவ்விசைக்கு ஏற்ப நடனமாட துவங்கினர்......அந்நால்வர் விலக அவர்களின் பின்னிருந்து வந்தான் அவன்.... அந்நால்வரின் நடுவே நின்று அவர்களுடன் ஒரு சேர நடனமாட துவங்கினான்.......
பாடல் முடிந்ததும் சிலையென நின்ற அவளின் முன் , கைகளில் வைரம் பதித்த கணையாழியை ஏந்திய வண்ணம் மண்டியிட்டான் அவன்....
" என்ன கல்யாணம் பண்ணிக்குறியா??? அனன்யா " என்றான் அவன்...
"உன் மூஞ்சிய பாத்தாலே பத்திகுட்டு வருது சித்ததார்த், தயவுசெய்து இங்க இருந்து போயிரு " என கோபமாக கத்திவிட்டு சித்தார்த்தின் கையில் இருந்த கணையாழியை பறித்து வீசினாள் அனன்யா...... அவள் தலையில் இருந்த மலர்வளையத்தையும் அவன் முகத்தில் எரிந்துவிட்டு அவனை பார்வையினால் எரித்துவிட்டு வேகமாக வெளியேறினாள் அனன்யா.....
அவள் போவதையே பார்த்திருந்த சித்தார்த், ஒரு காலத்தில் தன்னையே சுத்தி வந்தவள்.... இன்று இவ்வாறு மாறியதேன்??? என்று எண்ணியபடி தன் கடந்த காலத்தை நினைவு கூர்ந்தான்...
சித்தார்த்தின் மனவோட்டம் :
அது ஒரு அழகான நாட்கள்..... இனிமையான தருணங்கள்..... திரும்ப பெற இயலாத பொக்கிஷங்கள்.....
எனது குடும்பமும், அனன்யாவின் குடும்பமும் நெருங்கிய நண்பர்கள்...... நாங்கள் இருவரும் சிறு வயதிலிருந்து நண்பர்கள்..... எனது அப்பாவும், அனன்யாவின் அப்பாவும் சேர்ந்தே தொழில் செய்கிறார்கள்.....
எங்கள் வீட்டில் நான், எனது அப்பா ராம், அம்மா சீதா, எனது அக்கா வாணி இவர்கள் மட்டுமே......
அனன்யாவின் வீட்டில் அனன்யாவின் அப்பா முருகன், அம்மா தேன்மொழி, அண்ணா கிருஷ்ணா.....
எங்கள் குடும்பமே நண்பர்கள் தான்..... எங்கப்பா ராம் - அனன்யா அப்பா முருகன்
எங்கம்மா சீதா -அனன்யாவின் அம்மா தேன்மொழி
என் அக்கா வாணி -அனன்யாவின் அண்ணன் கிருஷ்ணா
அப்புறம் நான் -அனன்யா (நாங்க எல்லாரும் ஒண்ணுக்குள்ள ஒன்னா இருப்போம் )
இதிலே சிறப்பு என்னவென்றால், எங்களின் இருவரின் வீடும் அருகருகே தான் உள்ளது...
ஆமாம், அவள் தவழ ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை அனன்யாவையை எனக்கு தெரியும்.... என் செல்ல அனு குட்டி..... அனன்யாவை நான் செல்லமா அப்படிதான் கூப்புடுவேன்.....
சரியான கோபக்காரி..... ரொம்ப ரொம்ப பிடிவாதக்காரி....
ஆனால் கொஞ்சம் குறும்புக்காரியும் கூட...
நான், எங்க குடும்பம் இது தான் அவள் உலகம்......
அவள் உலகத்தில் அவ்வளவு எளிதாக யாரும் நுழைந்து விடமுடியாது..... எங்களைதவிர அவள் உலகத்தில் யாருக்கும் அனுமதியே கிடையாது....எங்கள் வீட்டில் வேலை செய்பவர்களிடம் கூட பேசமாட்டாள்....இவள் இப்படி இருக்காளே என அனைவரும் பயந்தோம்....
சரி ஸ்கூலுக்கு போனாலாவது சரியாகிவிடும் என நினைத்தார்கள்....
ஆனால் எதுவும் மாறவில்லை....
ஒரு நல்ல நாள் பார்த்து அனுவை ஸ்கூல்ல சேர்த்தும் விட்டார்கள்.... அங்கே அவளுக்கு ஒரே நண்பன்.... அதுவும் வேற யாரு...... நானே தான்...... ஆமாம், நானும் அவளும் ஒரே ஸ்கூல் தான்....
அவளுக்கு என்னை தவிர வேறு நண்பர்கள் இல்லை.... எனக்கும் அவளை தவிர வேறு நண்பர்களில்லை.... (அனு யாரையும் இருக்க விட்டதில்லை... )
இப்படியே எங்களின் வாழ்க்கை நகர்ந்தது...... ஐந்தாம் வகுப்பின் முதல் நாள்.... நிறைய புது மாணவர்கள் சேர்ந்திருந்தார்கள்....ஆசிரியர் எல்லாமாணவர்களையும் சுயஅறிமுகம் செய்ய சொன்னார்...... ஒவ்வொருவராக அறிமுகம் செய்து கொண்டோம்.....நிறைய புதியவர்களை கண்டதால் என் மனம் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தது....
இப்படியே அறிமுகத்திலே அன்றைய நாள் சென்றது..... முதல் நாள் என்பதால் வகுப்புகள் எடுக்கபடவில்லை..... நானும் அனன்யாவும் மூவர் அமரும் இருக்கையில் இருவர் அமர்ந்திருந்தோம்..... மூன்றாவதாக யாரையும் அனு அமராவிட்டால் தானே.....
மாலை எங்களின் கார் வந்தது.... அதில் ஏறி நானும், அனுவும் எங்களின் வீட்டை நோக்கி பயணமானோம்..... என் வீட்டை நான் அடைந்தவுடன் வேறு உடைக்கு மாறி நான் அனன்யாவை அழைக்க அவளது வீட்டிற்கு சென்றேன்.........
அங்கு, அனுவின் அப்பா முருகன் மாமா அனுவிடம் "ஸ்கூல்ல இன்னைக்கு முதல் நாள் தானே.... எப்பிடிடா போய்ச்சு?? " என்றார்.....
"போச்சுப்பா " என்றாள் குரலில் சுரத்தையே இல்லாமல்....
"இவளை திருத்தவே முடியாது....." என்றவாறு நான் அவர்களிடம் சென்றேன்.....
"வாப்பா சித்தார்த்.....,,, உனக்கு ஸ்கூல் எப்படி போச்சுப்பா???? என்றார் முருகன் மாமா....
"சூப்பரா போச்சு மா......" என்று நான் முடிக்கும் வேளையில் அனுவின் முறைப்பில் அமைதியான நான் "போச்சு மாமா " என்றேன்....
"சரி ரெண்டு பேரும் போய் விளையாடுங்க " என்றார் முருகன் மாமா....
நாங்கள் இருவரும் விளையாடி விட்டு இரவு உணவு உண்டுவிட்டு உறங்க சென்றோம்..... அன்றைய நாள் இனிதாகவே கழிந்தது....
மறுநாள் விடியல் வழக்கமாகவே விடிந்தது....
வழக்கம்போல் நானும், அனுவும் ஸ்கூலுக்கு கிளம்ப என் அம்மா சீதா என் கன்னத்திலும், அனுவின் கன்னத்திலும் ஆசைக்கு ஒரு முத்தம் வைத்து வழியனுப்பினார்..... முருகன் மாமா எங்களை ஸ்கூலுக்கு காரில் அழைத்து சென்றார்....
நானும், அனுவும் வகுப்பறையில் அமர்ந்திருந்தோம்..... பெரும்பாலும் அனைத்து இருக்கைகளும் நிறைந்திருந்தன.... எங்களின் இருக்கையை தவிர....
முதல் வகுப்பு கணிதம்..... எனக்கு கணிதம் என்றால் மிகவும் விருப்பம்.....அனன்யாவுக்கு கணிதம் என்றாலே ஒவ்வாமை..... நான் ஆர்வாமாக கவனிக்க ஆரம்பித்தேன்.... அனன்யா குழப்பம் நிறைந்த முகத்துடன் என்னை பாவமாய் நோக்கினாள்..... வந்த சிரிப்பை மனதிலே புதைத்துவிட்டு பாடத்தில் கவனத்தை செலுத்தினேன்..... பின்னே சிரித்தால் அவளிடம் மாட்டி பலியாகவேண்டுமே......
பாடம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் பள்ளி தலைமையாசிரியர் எங்களின் வகுப்பில் நுழைந்தார்.... அவரை பின்தொடர்ந்து என் வயதையொத்த ஒரு சிறுவனும் நுழைந்தான்...அவன் தலை தரையை பார்த்த வண்ணம் இருந்தது ... பார்க்கவே மிகவும் அப்பாவியாக தெரிந்தான்.....
அப்போது தலைமையாசிரியர் இவன் "இனிமே உங்களோட தான் படிக்க போறான்..... இவன் பெயர் யுவராஜ் " என்றுவிட்டு கணித ஆசிரியரிடம் ஏதோ சொல்லிவிட்டு சென்றார்....
கணித ஆசிரியர் அவனை எல்லோர் முன்னிலையிலும் அறிமுகம் செய்ய சொன்னார்... அப்பொழுதும் அவன் தலை தரையை நோக்கி இருக்க "சரி நீ போய் உக்காரு "என்றார்.....
அவன் வேறெங்கும் இடம் இல்லாத காரணத்தினால் என்னருகே தரையை பார்த்தவாறே வந்தமர்ந்தான்.....அதுவரை அவனையே பார்த்திருந்த நான், அனன்யாவை கவனித்தேன்.... அவள் உக்கார்ந்தே கண்களை மூடியவாறு நித்திரையில் ஆழ்ந்திருந்தாள்..... ஒரு மெல்லிய சிரிப்பை உதிர்த்த நான் மீண்டும் பாடத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்......
உணவு இடைவேளை நேரம்....
"அவன் எதுக்கு இங்க வந்து உக்காந்தான்?? " வார்த்தையில் கோபம் கொப்பளிக்க அனு என்னிடம் கேட்டாள்...
"ஹே அனு வேற இடம் இல்லை பாரு..... விடு உக்காந்துட்டு போட்டும் "என்றவாறு அவனை நோக்கினேன்....
"ஹாய் ஐ அம் சித்ததார்த் "என்று அவனிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன்.....
அவன் மௌனமாய் தரையை நோக்கியவாறே அமர்ந்திருந்தான்....
"பாரு அவனுக்கு திமிர " என கோபமாய் அவனை நோக்கினாள்.... நான் அவளை அமைதியாக இருக்கும்படி சைகை செய்தேன்...
அப்போது நிமிர்ந்த அவன்... என்னை ஒரு முறை பார்த்துவிட்டு... அனுவையும் ஒரு முறை பார்த்துவிட்டு மீண்டும் தரையை நோக்கினான்.....
அவன் பேசாததை கவனித்த நான் அவனுக்கு பேசவிருப்பமில்லை என நினைத்து அமைதியாக இருந்துவிட்டேன்..... இப்படியே ஒரு வாரம் சென்றுவிட்டது...... இந்த ஒரு வாரமாய் அவனும் யாரிடமும் பேசாமல் இருப்பதையும், தரையை பார்ப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தான்....
அன்று ஒரு நாள் பள்ளியில் இடைவேளையின் போது, இரு மாணவர்கள் ஓடியாடி
விளையாடிக்கொண்டிருந்தார்கள்.... அவர்களில் ஒருவன் யுவராஜின் மீது மோதியதால் அவன் நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டான்.... நான் வேகமாக ஓடிச்சென்று அவனை தூக்கிவிட்டேன்....
"ஹே உனக்கு ஒன்னும் ஆகலையே... "என்றவாறு அவன் உடலை ஆராய்ந்தேன்.... அவனுக்கு சிராய்ப்பு ஏற்பட்டிருந்தது..... அவன் என் கையை எடுத்துவிட்டு அமைதியாக சென்றுவிட்டான்..... அவன் பேசாமல் இருப்பதை கண்ட நான் அவனால் பேசவே முடியாது என நினைத்து கொண்டேன்.....
அவனிடம் நான் பேசியதை கண்ட அனன்யா "நீ ஏன் அவன்கிட்ட பேசுற??? " என கோபமாய் கேட்டாள்....
"ஹே அவன் பாவம் அனு, அவனால பேசமுடியாது போல, அவனுக்கு கையில வேற அடி பற்றிற்க்கு " என்றேன்...
"பேசமுடியாதா?? .......!!!!"அவன் பாவம்..... நீ வா நம்ம போய் அவன பாப்போம் "என்றாள் அனு.....
அவள் பேசுவதை கேட்ட எனக்கு அனுவா இது?? என தோன்றியது...... நான் மேலும் யோசிக்காமல் அவள் பின்னே நடந்தேன்.....
நாங்கள் இருவரும் அவனை தேடினோம்.... அவன் ஒரு மரத்தின் கீழ் போடப்பட்டுள்ள பெஞ்சின் மீது தரையை பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தான்....
நாங்கள் இருவரும் அவனிடம் சென்றோம்.... அவன் கையில் காயத்தை பார்த்த அனன்யா... "ரொம்ப வலிக்குதா??? "என்றாள்..... அவன் இடவலமாக தலையை அசைத்து இல்லை என்று உணர்த்தினான்....
"நான் அனன்யா, இவன் சித்தார்த் உன் பேர் என்ன?? "என்றாள்......
அவன் மௌனமாகவே இருக்க, "அனு அவனால் பேசமுடியாது" என்றேன்....
அவள் சோகமாக என்னை நோக்க......
"யுவராஜ் " என்று கணீரென கேட்டது ஒரு குரல்...
நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஆச்சரியமாய் பார்த்துவிட்டு ஒருசேர அவனை நோக்கினோம்.....
இப்போது அவன் தரையை பார்க்கவில்லை..... எங்களை பார்த்தவாறு அமர்ந்திருந்தான்....
Author note:
Positive & Negative comments are always welcome....
The votes & comments are appreciated.....
Catch u later on next update guyzzzzzzz......
With love💞
💞sana......
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro