முள்ளும் மலரும் 9
மாலை பள்ளி முடிந்ததும் ராம் நிலாவிற்காக காத்துக் கொண்டிருந்தான்.. அவள் வந்தததும் கைப் பிடித்து இழுத்துச் சென்றவனை "டேய் விடுடா.. இன்னைக்கு உனக்கு வேலையில்ல.. ஏன்டா எங்கூட வர " எனக் கத்திக் கொண்டே வந்தவளை முறைத்தவன் " உனக்கு புது வீட்டுக்கு போகத் தெரியாதுனு கூடவந்தா சீன் போடற,. பேசாம வந்திரு.. இல்லை சாக்கடைல தள்ளிவிட்ருவேன்" என்றான்..
அவனிடம் எப்படி பொய் சொல்வது என யோசித்தவள் " அது ரெண்டு தெரு தள்ளிதான இருக்கு.. நான் போயிக்குவேன்.. நீ கராத்தே கிளாஷ்க்கு விசாரிச்சிட்டு வா.." என்றாள் பதற்றமாக,
அவள் பதற்றத்தில் எதையோ புரிந்து கொண்டவன் " சரி போ " என்றான்.. அவள் சென்ற பிறகு தன்னிடம் எதையோ மறைக்கிறாள் என்பதை உணர்ந்தவன் அவளைப் பின் தொடர்ந்தான்.
அவள் செய்த செயலைப் பின்னிருந்து பார்த்தவனது கண்கள் சிவப்பைத் தத்தெடுத்தது.
புது பிளாட்டில் பொருட்களை ஓரமெடு்த்து வைத்தவள் சமைக்கத் துவங்கியிருந்தாள். நிலாவின் கைகளை தரதரவென்று இழுத்துவந்தவன் " அக்கா இங்க வா" எனக் கத்தினான்..
" டேய் ப்ளீஷ்டா மீராட்ட சொல்லாத " அவள் கெஞ்சியும் மனமிறங்காதவன் "ஓங்கி கன்னத்தில் அறைந்தான்.
" ராம் எதுக்குடா அவள அடிக்குற " என்று அதட்டிய மீராவின் இடுப்பை ஓடிச் சென்று கட்டிக் கொண்டவள் " அழுகாதடி நான் கேட்கிறேன்.. எனக்குத் தெரியும் என் நிலா தப்பு பண்ண மாட்டா " என்றதும் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.
"அப்போ நான் பொய் சொல்றனா அக்கா " என்றதும் அவனையும் தன் தோளின்மேல் சாய்த்துக் கொண்டு
" உன் மேலயும் எனக்கு நம்பிக்கை இருக்குடா. இருந்தாலும் நான் தலை குனியற மாறி நிலா எப்போதும் நடந்துக்க மாட்டா.. அப்படி தான நிலா " என்றாள் மீரா
ராம் அவர்களது பாசப்பிணைப்பைப் பார்த்ததும் கையில் வைத்திருந்த பேக்கைத் தூக்கிப் போட்டவன் சன்னலோரம் சென்று நின்றுகொண்டான்.
நிலா சிறிதுநேரம் கழித்து ராமிடம் சென்று அவன் தோள்களில் சாய்ந்து கொண்டு" சாரிடா.. இனி அப்படி பண்ணமாட்டேன். நீயும் மீராவும் இவ்ளோ கஷ்டப்படறப்போ நான் மட்டும் வீட்ல சும்மா இருந்தா எப்படினு தான்டா அந்த ஹோட்டல வேலைக்குப் போனேன். அதுவும் ஒரு வாரம் தானாச்சு..ப்ளீஸ்டா என்னை மன்னிச்சிடு " என்றாள்.
அவனும் "சாரி நானும் உன்னை அடிச்சிருக்கக் கூடாது.. " என்றான் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு
அவர்களின் அன்பைப் பார்த்து பூரித்துப் போனவள்,
" லூசு மாறி பேசாத நிலா.. அந்த ஹோட்டல் பக்கத்துல ஒயின்ஷாப் வேற இருக்கு.. உனக்கு எதாவது ஆகியிருந்தா அப்போ நாங்க ரெண்டு பேரும் சந்தோசமா இருப்பமா.. உங்க ரெண்டு பேருக்கும் சேர்த்துதான் சொல்றேன்.. இனி ரெண்டு பேரும் வேலைக்குப் போகாதீங்க.. எக்சாம் பக்கத்துல வந்திடுச்சு.. படிச்சு மெரிட்ல பாசாகுற வழிய பாருங்க.. இப்போ புது வீட்டுக்கு வந்திருக்குறோம் அதை என்ஜாய் பண்ண பாயசாம் வெச்சிருக்கிறேன் போய் குளிச்சிட்டு வாங்க," என்றாள்.
"ஐ பாயசமா..அப்போ நான் தான் பர்ஸ்ட் குளிக்கப் போவேன் " என்று கூறி ராம் சந்தோசமாக உள்ளே நுழைந்தான். " டேய் பாயசம் குடிக்க குளிக்கனும்னு அவசியமில்லடா" என சமையலறைக்குள் புகுந்து கொண்டாள் நிலா..
நாட்கள் ஓடத் துவங்கியது. கிருஷும் தனது அலுவலகத்தை சீரமைப்பதில் தனது கவனத்தை செலுத்தியிருந்தான். உதயாவும் மீராவும் புது ப்ராஜெக்ட் கைக்கு வந்ததால் பிசியாக இருந்தனர்.
விடுமுறை நாளான அன்று யாரோ கதவைத் தட்ட மீராக் கதவினைத் திறந்தாள். அங்கே வந்தவர்களைப் பார்த்ததும் திகைத்து நின்றாள்.
" என்ன மீராம்மா உள்ளக்கூட கூப்ட மாட்டியா " என்று கிருஷின் அன்னை கீதா சொன்னதும்.. " அச்சோ அப்படிலாம் இல்ல.. வாங்க ஆன்டி.. வாங்க அங்கிள் " என்று உள்ளே அழைத்தாள்..
கைகளைப் பிசைந்தவாறு அவள் நிற்கவும்,
" என்ன மீரா இப்படி இழைச்சிட்ட .. உன்னை தனியாப் பார்த்தா எனக்கே அடையாளம் தெரியாதுபோல" என்றவர் ராமையும் நிலாவையும் பார்த்து விட்டு " அடடே இதான் உன் தம்பி தங்கையா.. இங்க வாங்கப்பா ஏன் இப்படி ஏலியன் மாறி என்னை பார்க்கிறீங்க.. உங்க கிரிஷ் மாமா இருக்கான்ல.. அவனோட அம்மா தான் " என்று அவர் படபடவென்று பேச,
இருவரும் வலிந்து புன்னகைத்தனர்.
" மீரா இங்க தான் இருக்க என்னை வந்து பார்க்கனும்னு தோணுல இல்ல.. எங்க மாமாவும் அத்தையும் உன்னை கையோட கூட்டிட்டு வரச் சொன்னாங்க " என்றவரை, " ஏம்மா கொஞ்சமாச்சும் மூச்சு விடு.. அப்ரோ ஒரேடியா போயிடப் போர.. " என்று மனைவியை வாரியவர் " எப்படி இருக்க மீரா" என்று அவளது தலையை ஆதரவாக தடவிக் கொடுத்தார் கிருஷின் தந்தை ராஜன்.
"நல்லா இருக்கேன் அங்கிள்.. நீங்க இங்க உட்காருங்க சாப்பிட எதாவது கொண்டு வரேன் " என்று அவள் சொன்னதும் " ஆமா மீரா, உன் கையால மசாலா டீ குடிச்சு எவ்ளோ நாளாச்சு.. இன்னைக்கு தான் ரொம்ப நாள் கழிச்சு நல்ல டீ குடிக்கப் போறேன். " என்று சொன்னார் ராஜன்
அவள் சமையலறைக்கு சென்றதும் அவள் பின்னே வந்த ராம் "அக்கா நீயேன் அவங்களுக்கு அவ்ளோ மரியாதை தர, நீ அவங்க வீ்ட்டுக்கெலாம் போய் சமைக்குற அளவுக்கு அவ்ளோ குளோசா " என்று கோபமாகக் கேட்டான்.. அவனது சந்தேகமான கேள்வியில் துடிதுடித்துப் போனாள் மீரா..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro