முள்ளும் மலரும் 12
ஹேய் ராம் நான் பாட்டுக்கு பேசிட்டேன் இருக்கேன்.. நீ ஏன் அமைதியா இருக்க.. எனக்கு எவ்ளோ ஹேப்பியா இருக்கு தெரியுமா.. நீ எங்க வீட்டுக்கு வந்தது.. வா உன்னை எங்க தாத்தா பாட்டிக்கி்ட்டயும் அறிமுகப் படுத்துறேன் " என புன்னகையுடன் தனு கூற,
மீராவின் கண்கள் கலங்குவதைப் பார்த்ததும் ராம்
" அனு அதுவந்து எனக்கு முக்கியமான வேலை இருக்குமா" என்றான். அவளது முகமாற்றத்தை கவனித்து தனது எண்ணம் நிறைவேறியதை உணர்ந்து" உன்பேரு அனுயில்லயா..உன்பேரு . ஞாபகமில்ல.சாரிப்பா.. . . கிளாஸ்ல பார்க்கலாம் " என்று அவள் முகத்தைக் கூட நேராக பார்க்காமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
அவளது பெயர்கூட இவனுக்குத் தெரியவில்லை என்பதால் தனுவிற்கு வருத்தமாக இருந்தது. " தனு அவன் அப்படித் தான்..வேணும்னே இப்படித்தான் வெறுப்பேத்துவான். நீ வொரிப் பண்ணிக்காத.. நீ இப்ப தான அவங்கோட பேசற, போகப் போக புரி்ஞ்சுக்குவ " என்று நிலா சொல்ல" சரி " என்று தலையசைத்தாள்.
நிலா மற்றும் தனுவும் பேசிக் கொண்டிருக்க கிருஷ் அருகே வந்து நின்று கொண்டான்.
மீராவின் அருகே வந்து அமர்ந்த ராம் அவள் கண்கள் கலங்கியிருப்பதைப் பார்த்ததும் " அக்கா அழாத இங்க உன்னையவே எல்லாரும் பார்க்குறாங்க " என்று கூறியதும் தன்னை சமன்படுத்தியவள் அமைதியாக அமர்ந்தாள்.
மீராவின் வாடிய முகத்தைப் பார்த்ததும் அவளை சகஜப் படுத்த,
" என்ன மீரா வந்து நீபாட்டுக்கு உக்கார்ந்துட்ட,இது நம்ப வீடு மீரா எல்லாருக்கும் இந்த ஜூஸ் ஊத்திக் கொடுமா " என்று கீதா சொன்னதும் வேறு வழியில்லாமல் எழுந்து சென்றாள்.
அவள் சென்றதும் எழ நினைத்த ராமைக் கைப்பிடித்து தடுத்த கிருஷ்
" டேய் அரை டிக்கெட் கொஞ்ச நேரம் அமைதியா இருக்க மாட்டியாடா.. எப்ப பார்த்தாலும் அக்கா அக்கானு பின்னாடியே போய்கிட்டு இருக்க " என்று ராமைப் பார்த்து கிருஷ் சிரித்துக் கொண்டே கேட்கவும்,
அவன் அந்தக் கேள்விக்கு பதிலளிக்காமல் " எங்க அக்கா உன்னை மதிக்கவே மாட்டீங்றாளே.. பின்ன ஏன் அவ பின்னாடி சுத்தி உயிர வாங்குற" என்றான் எரிச்சலுடன்..
" உனக்கு ஒன்னு தெரியுமா ராம். மீரா இப்போதான் என்மேல எரிஞ்சு விழுறா.. முன்ன எல்லாம் என்னோட பேசு கிருஷ் பேசு கிருஷ்னு கெஞ்சுவா தெரியுமா " என்று பெருமையாக அவன் கூறவும், அதை ராம் நம்பாத மாறி பார்க்கவும்
" உன்னை மாறி அரையணாக்கு எல்லாம் இது புரியாதுடா என் பாசக்கார சிடுமூஞ்சி மச்சான் " என்றவன் மீரா சமையலறைக்குச் செல்வதைப் பார்த்ததும் " மீரா எதுக்கு தோட்டத்துக்கு போரா.. இங்கயே இரு.. நான் போய் பேசிட்டு வந்தரேன் " என்று சொல்ல, அவ்வளவு தான் அவனுக்கு முன்னால் தோட்டத்திற்கு ஓடினான் ராம்.
மீரா பால் காய்த்துக் கொண்டிருக்க, " மீரா நான் உங்கிட்ட முக்கியமான விசயம் பேசனும்.. கொஞ்ச நேரம் அமைதியா நான் சொல்றத கேட்கிறியா ப்ளீஸ் " என்று கேட்டான் கிருஷ்.
அவள் அமைதியாக இருக்கவும் " நீ நினைக்கிற மாறி நான் உன் வாழ்க்கைய அழிச்சிருப்பனு நினைக்கிறியாடி.. நான் உன் கண்ணுக்கு அந்தளவுக்கு கெட்டவனா தெரிஞ்சனா மீரா " என்றதும் " ஆமா அதுக்கு இப்ப என்னடா " என்றாள் உணர்ச்சி துடைத்த குரலில்,
" மீரா அன்னைக்கு நான் உங்கிட்ட விளையாட்டா அப்படி சொன்னது மட்டும் தான் நான் பண்ண தப்பு மத்தபடி உன்னை பழி வாங்குனது நான் இல்ல மீரா.. அது வேற " என அவன் முடிப்பதற்குள்
" ஓஓஓ அடுத்த கதையா.. சொல்லு கிருஷ் கேட்க நல்லாயிருக்கு.. " என்று நக்கலாக கூறவும் " நீ புரிஞ்சுக்க மாட்ட.. உன்னை " என்று தலையில் கைவைத்தவன் பின்பு " ஓகே மீரா உனக்கு ரெண்டு ஆப்சன் தரேன்.. ரெண்டுல எதுனு நீயே சூஷ் பண்ணிக்கோ.. நீ நான் சொல்றத முழுசா கேட்டினா நீ கேட்டு முடிச்சப்பிறகு இனி உன்னை தொல்லைப் பண்ணவே மாட்டேன். ஒரு வேளை கேட்கலினா இப்படித் தான் தினமும் தொல்லைப் பண்ணுவேன் " என்று அவள் கன்னம் கிள்ளினான்.
' அவனிடம் தினமும் டார்ச்சரை அனுபவிப்பதற்கு பேசாமல் 2 நிமிடம் அவன் கூறும் கட்டுக்கதையைக் கேட்கலாம் ' என்று எண்ணியவள் " சரி " என்றாள்.
" ஓகே அப்போ பால்கனிக்கு வந்திடு.. உனக்காக நான் அங்க வெயிட் பண்ணறேன் " என்று சொல்லி மறைந்தான்.
அவன் அவ்வளவு உறுதியாக சொல்லவும் ஒருவேளை அவன் தவறிழைக்கவில்லையோ என யோசித்த மனம் தனது தாய் தந்தையரின் முகம் நினைவில் வர கண்டிப்பாக அவன் கெட்டவன்தான் என்று மனதில் நிலைப்படுத்திக் கொண்டது.
கிருஷின் நிலையோ வேறாக இருந்தது. உண்மை தெரிந்தும் மீரா தன்னை ஏற்றுக் கொள்வாளா இல்லை தன்னையே தண்டித்துக் கொள்வாளா என யோசித்துக் கொண்டிருந்தான்.
மீரா உண்மையை தெரி்ந்து கொள்வாளா? கிருஷைப் புரிந்து கொள்வாளா ?
தயவுசெய்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து எனக்கு உதவுங்கள் நண்பர்களே !
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro