Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

15

நீயும் என்னை நீங்கினால்

சர்வேஸ்வரன் இருபத்தெட்டு வயதை எட்டியிருந்தார். அம்மா அன்னபூரணிக்கு மகனின் திருமணத்தைக் காண ஆசை வந்துவிட்டது.

'அவனும் எத்தனை வருடங்களுக்குத் தான் இந்தக் குடும்பத்துக்காவே உழைப்பான்? அவனுக்கும் கல்யாணம் காட்சி என்று ஆக வேண்டாமா?' என்பது அவர் எண்ணம். எனவே மகனுக்குத் திருமணம் செய்து வைக்க முயற்சிகள் தொடங்கிவிட்டார்.

சர்வேஸ்வரனுக்கு அதிலெல்லாம் நாட்டமில்லை என்றாலும், அம்மாவிடம் அதைச் சொல்லிக் காயப்படுத்த விரும்பவில்லை. அவர்கள் பாட்டுக்கு ஏதாவது செய்யட்டும் என்று விட்டுவிட்டார். அன்னபூரணியின் முயற்சியும் வேண்டுதலும் வீண்போகவில்லை. கோயில்கள், தரகர்கள், குழுக்கள், சமுதாயக் கூடங்கள் என்று எங்கெல்லாமோ பேசி, கடைசியாக திருநெல்வேலி காயர் மில் (coir mill) ஓனர் ஒருவரின் பெண்ணை சர்வேஸ்வரனுக்குப் பேசி முடித்துவிட்டார் அவர்.

மகனை அழைத்துக்கொண்டு ஒருநாள் திருநெல்வேலிக்குச் சென்று பெண்பார்க்கச் சென்றனர்.

மனமின்றி வந்தபோதிலும், பெண்ணைப் பார்த்ததும் சர்வேஸ்வரனுக்குப் பிடித்துப்போக, அடுத்த வாரமே மிக விமரிசையாக அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.


திருமணத்திற்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருந்தன. பத்திரிக்கைகள் அச்சடிக்க, மண்டபம் பார்க்க எனக் குடும்பத்தினர் மும்முரமாக இருக்க, விஷ்வா மட்டும் எந்த வேலையும் இல்லாமல் இருந்தான். அவனுக்குத்தான் அவனது மஹிமா இருந்தாளே!

கேண்ட்டீனில் அமர்ந்திருந்த இருவரும் அன்று அதைப்பற்றித் தான் பேசிக் கொண்டிருந்த போது, அவள் சாதாரணமாக அவனிடம் கேட்டாள்.

"ஏன் விஷ்வா... அண்ணனுக்கு கல்யாணம்... மத்த எல்லாரும் கால்ல சக்கரத்தை கட்டிகிட்டு சுத்திட்டிருப்பாங்க. நீ மட்டும் ஒரு வேலையும் செய்யாம வெட்டியாவே இருக்க?"

"வேலை தந்தா செய்யலாம்... என்கிட்ட யாரும் ஒரு வேலையும் சொல்றதில்லையே!" தனது கைபேசியைப் பார்த்தபடி பதிலளித்தான் அவன்.

"என்னது... அப்போ எல்லா வேலைகளும் அண்ணனே பாக்குறாரா? நீயா போய் கேட்டு எதாவது செய்ய வேண்டியதுதான? கேட்டா எதுவும் தரமாட்டாங்களா?"

"...."

"பொதுவா யாரும் வேலை தரலன்னா ரெண்டு ரீஸன் இருக்கலாம். ஒன்னு, அவங்களுக்கு நம்மள கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு அக்கறை. ரெண்டு, நமக்குப் பொறுப்பில்லன்னு அவங்களுக்குத் தெரியும். "

"......"

"உன் கேஸ் என்ன?"

"..."

"அக்கறை இருக்கலாம்...ஆனா அண்ணனோட கல்யாண வேலையவே உங்கிட்ட தரலன்னா, உனக்குப் பொறுப்பில்லன்னு தான அர்த்தம்?"

"...."

"ஒன்னும் சொல்லலன்னா ஒத்துக்கறதா அர்த்தம்... அப்ப நான் சொல்றது கரெக்டா?"

உற்சாகமாக அவனை சீண்டிக் கொண்டிருந்த மஹிமா அவளது குளிர்பானக் கோப்பையிலிருந்து கண்ணை அகற்றவில்லை. அவள் நிமிர்ந்து பார்த்திருந்தால் நிச்சயம் முதல் வாக்கியத்தோடு நிறுத்தியிருந்திருப்பாள்.

அவள் பேசப்பேச விஷ்வாவின் முகம் கன்றிக் கறுத்தது. கைகள் முஷ்டியாகிருந்தன.

அவனது sore spotஐத் தொட்டிருந்தாள் அவள். கடந்த சில நாட்களாக பட்டும் படாமலுமாய், ஜாடைமாடையாய், வீட்டிற்கு வந்த விருந்தினர் முதல் தன் சொந்தப் பெற்றோர் வரை அவ்வப்போது தங்களுக்குள் பேசிக்கொண்டது இளைய மகன் பொறுப்பில்லாம் இருப்பதைப் பற்றித்தான். மற்றவர் பேசும்போது அலட்சியமாக நினைக்க முடிந்தவனுக்கு, அதையே மஹிமா கேட்டபோது கோபம் தலைக்கேறியது.

வீட்டில் கடைக்குட்டி என்பதால் தனக்குப் பொறுப்புகள் ஏதுமின்றி இருத்தல் தனது தவறில்லையே..

அண்ணனே அனைத்தும் செய்வதால் விஷ்வாவுக்கு எதுவும் செய்வதற்கு இல்லாமல் போனது. அதற்காக?

விஷ்வா சடாரென்று எழுந்திருக்க, கேண்ட்டீன் டேபிள் அதிர்ந்து ஆடியது. அதில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள் அவள்.

"ஆமாங்க மேடம். எனக்கு பொறுப்பு ரொம்ப கம்மிதான். ஏன், சுத்தமாவே இல்ல. அதுக்கு என்னடி இப்ப?"

அவன் திடீரெனக் கத்தியதை அவள் எதிர்பார்க்கவில்லை. ஏனெனவும் சரியாகப் புரியவில்லை.

"விஷ்வா... என்னது இது? உட்கார் எல்லாரும் பாக்குறாங்க.."

அவள் எழுந்து அவன் தோளைப் பிடித்துப்பற்றி அவனை அமர்த்த முயன்றாள். அவனோ வேகமாக தோளைக் குலுக்கி அவள் கையை உதறிவிட்டு,
"பெரிசா பொறுப்பு பருப்புன்னு வந்தர்றது... போடி... பொறுப்பில்லன்னு தெரிஞ்சு தான லவ் பண்ணின? ஊர் சுத்தின? அப்ப தோணலயோ?" என ஆத்திரம் கண்ணை மறைக்க, சுற்றத்தைக் கவனிக்காமல் கத்தினான்.

மஹிமா அவமானத்தில் முகம்சுழித்தாள்.
"விஷ்வா.. ஸ்டாப்பிட். எல்லாரும் பாக்கறாங்க."

"பாத்தா என்னடி? ம்ம்?"

அவன் மீண்டும் மீண்டும் 'டி' போட்டு அழைக்க, அவளுக்கும் கோபம் வந்தது.
"விஷ்வா...mind your words. உன்ன லவ் பண்ணதுக்காக எல்லாம் நீ பண்ற இன்சல்ட்ஸ பொறுத்துக்க முடியாது. "

"ஏ! முடிலனா கிளம்பு, போ. போய்டு. போய் பொறுப்பானவனா தேடிப் பார்த்து லவ் பண்ணு!"

விஷ்வாவின் முன்கோபம் மஹிமா அறிந்ததுதான். ஆனால் அவன் தற்போது பேசுவதெல்லாம் தெரிந்தே பேசவதுபோலத் தான் தோன்றியது அவளுக்கு. உள்ளுக்குள் ஏதோ உடைவதுபோல வலித்தது அவளுக்கு.

"விஷ்வா...என்ன பேசறன்னு தெரிஞ்சுதான் பேசறயா?"
கடைசியாக ஒருமுறை அமைதியாகக் கேட்டாள் அவள்.

"எம்மா தாயே.. நான்தான வந்து உன்ன லவ் பண்றேன்னு சொன்னேன். நானே சொல்றேன் போயிடு"
கையெடுத்துக் கும்பிடுபோல் அவன் பாவனை காட்ட, கண்கள் குளமானது அவளுக்கு.

"இங்க பார் விஷ்வா... நீ வான்னா வர்றதுக்கும் போன்னா போறதுக்கும் நான் ஒண்ணும் உங்க வீட்டு வேலைக்காரி இல்ல. மைண்ட் இட்! ஆனா இவ்ளோ பேசின பிறகும், இதுக்கு மேல உன்னோட இருக்க என்னால முடியாது. ஐம் டன். நான் போறேன்."

அத்தோடு தன் பையைத் தூக்கிக்கொண்டு அவள் விரைந்தாள். அவள் நடக்க நடக்கவே கண்கள் மடைதிறந்தன. கண்ணீர் கண்களை மறைக்க, அவள் நிலைதெரியாமல் கண்களைத் துடைத்துக் கொண்டே ஓடினாள்.

போ...போயிடு...

'போறேன்.. உன்னை விட்டு போறேன். இனி நீ எனக்கு வேண்டாம் '

சிறுவயதில் இருந்து மஹிமாவை யாருமே அதட்டிப் பேசியதுகூட இல்லை. தாயில்லா பிள்ளை என்று அவள் தந்தை அவளைப் பாசம் கொட்டி வளர்த்தார். இதுவரை ஒரு சுடுசொல் கூடக் கேட்டிடாத அவளுக்கு அவன் கத்தியது அவள் இதயத்தைக் கீறியதுபோல் இருந்தது.

பேருந்தில் வரும் வழியில் கூட அழுதுகொண்டே வந்தாள் அவள். வீட்டுக்குள் நுழைந்ததும் பங்கஜம் அம்மாள் தான் அவளைப் பார்த்தார். நல்லவேளை தந்தை இல்லை வீட்டில்.

"என்ன மஹி... மதியமே வந்துட்ட? க்ளாஸ் இல்லையா?"

பதில் பேசாமல் விசும்பிக் கொண்டே செல்பவளைக் கண்டு பதறிப்போனவர் அவள் அறைக்கு அவளைப் பின்தொடர்ந்தார்.

விறுவிறுவெனச் சென்று கட்டிலில் படுத்து அவள் அழத் தொடங்கியதும் கலங்கிப்போன பங்கஜம் அம்மாள் அவளருகில் வந்து அமர்ந்தார். குரலில் உண்மையான கரிசனம் தெரிந்தது.

"என்ன பாப்பா... யாரு உன்னை என்ன சொன்னா? என்ன நடந்துச்சு? எனக்கு நினைவு இருக்கறவரை நீ இந்த மாதிரி எப்பவும் அழுததே இல்லயே... என்னம்மா ஆச்சு?"

"துரோகம்..."

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro