Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தேடல் 10

இந்த பதிவில் நாம் பரப்பரப்பாக பேசப்பட்ட சில உண்மை சம்பவங்களை காணலாம்.

1. க்ளாரா ஜெர்மானா சிலி ( clara germana cele)

1906 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் உள்ள செயின்ட் மைக்கேல் மிஷன் பள்ளியில் க்ளாரா என்ற 16 வயது கிறித்துவ பெண்ணை சாத்தான் பிடித்து கொண்டதாக கூறப்படுகிறது. அவள் ஆப்பரிக்க வம்சாவளியை சேர்ந்த ஒரு அனாதை. சிறு வயதில் அவளுக்கு ஞானஸ்நானமும் செய்யப்பட்டுள்ளது. அந்த பெண் விளையாட்டாக சாத்தானுடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டதாக கூறப்படுகிறது, அந்த காரணத்தினாலயே அவளுக்கு பேய் பிடித்ததாக கூறப்படுகிறது.

இவ்வாறு அவள் பாதிக்கப்பட்ட பொழுது வேறு பல மொழிகளை புரிந்து கொண்டு அந்த மொழிகளில் பேசியதாகவும் கூறப்படுகிறது( போலிஷ், ஜெர்மன், பிரஞ்ச் போன்ற மொழிகள்). அங்கு இருந்த கன்னியாஸ்திரிகள் கூறியதாவது " அவளுக்கு மற்றவருடைய இரகசியங்கள் மற்றும் அவர்களுக்கு பின்னால் நடக்கபோவதை முன்கூட்டியே கூறுவாள். புனிதமான பொருளை கண்டு அஞ்சுவாள், சில நேரம் அவள் சத்தம் மிகவும் விசித்திரமாக ஏன் எந்த மிருகமும் எழுப்பாத ஒரு பயங்கரமான ஒலியாக இருக்கும்". அதற்கு பின் இரண்டு நாட்கள் தொடர்ந்து அவளுக்கு பேய் ஒட்டும் நிகழ்வு நடந்ததாகவும் பின் அவள் பழைய நிலைக்கு திரும்பியதாகவும் கூறுகின்றனர்.

2. அன்னலியஸ் மைக்கேல் ( Anneliese michel)

1952 ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனியில் பிறந்தவள் அன்னெலியஸ். இவள் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவள். 1973 ஆம் ஆண்டு அவளது நோய் தீவிரமடைந்தது. மிகவும் சோர்வுடனும் ஆக்ரோஷமாகவும் மாற தொடங்கினாள், மதம் சார்ந்த பொருட்களை கண்டு அஞ்சினாள். தன்னை நரகத்திற்கு செல்லுமாறு ஒரு குரல் மிரட்டுவதாகவும் கூறியுல்லாள். அவளுடைய பெற்றோர் இவளுக்கு பேய் பிடித்திருப்பதாக நம்பினர். அவர்கள் ஜோசப் ஸ்டாங்க் என்ற கத்தோலிக்க ஆயரை உதவிக்கு அழைத்துள்ளனர். 1975 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் கிட்டத்தட்ட 70 பேய் ஒட்டும் சடங்குகள் நடத்தப்பட்டுள்ளன.

இறுதியில் இவை அவளின் சாவிற்கு வழிவகுத்தது. அவளின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவள் ஊட்ட சத்து குறைபாடாலும் உடல் வறட்சியாலும் இறந்ததாக கூறப்பட்டது. அவள் இறப்பிற்கு காரணமான அவள் பெற்றோருக்கும் கத்தோலிக்க ஆயர்களுக்கும் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை தழுவி எடுக்கப்பட்ட படம் 2005 இல் வெளியான the exorcism of Emily rose.

3. கலோனல் பரோக் ( colonel Barog )

1900 ஆம் ஆண்டு கல்கா-சிம்லா இடையே சுரங்கபாதை இரயில் வழித்தடம் அமைக்கும் பணி நடைப்பெற்றது. அந்த பணிக்கு தலைமை பொறியியலாளறே பரோக் ஆவார். அந்த வழித்தடத்தை விரைந்து முடிக்க இரு குழுக்களாக பிரித்து இரு பக்கங்களில் இருந்தும் சுரங்கப்பாதையை தோண்ட உத்தரவிட்டார். இரு குழுக்களும் வெடி வைத்தும் தோண்டியும் பாதையை அமைக்க துவங்கினர், அவர்களுக்கு எந்த வழி பின்பற்றுவது என்று தெரியாததால் பரோக் தன்னுடைய கணக்கீட்டின் படி தோண்ட சொன்னார். தோண்ட தோண்ட இரு பாதையும் நடுவில் சந்திக்க வாய்ப்பில்லை என்று அனைவருக்கும் புரிந்தது. பரோக்கின் கணக்கீடு மிகவும் தப்பாகி போனது.
அப்போதைய ஆங்கிலேய அரசு இதற்கு தண்டனையாக அவருக்கு 1 ரூபாய் அபராதம் விதித்தது. இதில் ஈடுப்பட்ட தொழிலாளர்களும் பரோக்கின் மீது மிகவும் கோபத்தில் இருந்தனர். இந்த அவமானங்களை தாங்க இயலாத பரோக் தன்னுடைய குதிரையில் ஏறி சென்று அந்த சுரங்கப்பாதையிலேயே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். பின் புது பொறியியலாளர் நியமிக்கப்பட்டு புதிய சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.

பரோக்கின் உடல் அந்த சுரங்கபாதைக்கு 1 கிமீ தொலைவில் புதைக்கப்பட்டது. பின் பரோக்கின் ஆன்மா இன்னும் அந்த வழித்தடத்திலேயே உலவுவதாக அங்கு வாழும் மக்கள் நம்புகின்றனர். அவர் அந்த பாதையில் இங்கும் அங்கும் குதிரையில் ஆக்ரோஷமாக பல நேரம் உலவுவதாக சொல்கின்றனர். அந்த வழித்தடத்தை இரும்புகதவு கொண்டு அடைத்துவிட்டனர், இருப்பினும் அது தற்போது திறந்த நிலையிலேயே உள்ளது. இங்கு சென்ற சிலர் அவரை கண்டதாக கூறுகின்றனர். அவருக்கு உங்களை பிடித்து இருந்தால் உங்களுடன் அவர் உரையாட வருவார்.. அவரை பார்த்தால் என் சார்பாக ஒரு ஹாய் தெரிவியுங்கள் 😉😉

4

. அம்போலி காட் ( Amboli ghat )

நம் இந்தியாவில் பல சாலைகள் அமானுஷ்யம் நிறைந்ததாக சொல்லப்படுகிறது, அதில் ஒன்று தான் இந்த அம்போலி காட். இங்கு இரவில் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒரு பெண்ணை அடிக்கடி பார்ப்பதாக கூறுகின்றனர். அப்படி ஒருவர் சொன்ன நிகழ்வு, அவர் ஒரு மர வியாபாரி. நள்ளிரவில் சுமையுந்தில் ( truck) அந்த சாலை வழியாக அவரும் ஓட்டுனரும் வந்துள்ளனர். அப்பொழுது சாலையில் ஒரு பெண் தன்னை ஏற்றி செல்ல கை நீட்டியுள்ளார். அந்த பெரியவர் ஓட்டுனரை நிறுத்த சொல்லியுள்ளார், ஆனால் அந்த ஓட்டுநர் வண்டியை நிறுத்தாமல் ஒட்டியுள்ளார். ஆனால் அந்த பெண் இவர்களின் வண்டி வேகத்திற்கு இவர்களுடன் ஓடி கையை காட்டி கொண்டு இருந்தாள். அந்த பெரியவர் பயந்து போய் உள்ளார். வண்டியை எங்கும் நிறுத்தாமல் அந்த ஓட்டுநர் அடுத்த உணவு விடுதியில் தான் நிறுத்தி உள்ளார்.

இவருக்கு மட்டுமல்ல இன்னும் பலரும் இதை அனுபவித்து உள்ளனர். இரு சக்கர வாகனத்தில் செல்வோர் அதிகம் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இங்கு நிறைய விபத்துகளும் உயிர் இழப்பும் ஏற்படுவதாக சொல்கின்றனர். வண்டியில் இரவில் சென்றால் இப்படி எங்கும் நிறுத்தாமல் செல்லுங்கள்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro