மாயவன் 6
"என்ன டி நினைச்சுட்டு இருக்க உன் மனதுல.. ரொம்ப ஓவரா பண்ற !!!... உன்னை பெத்ததுக்கு இப்போ இந்த நிமிஷம் வருத்தபடறேன் டி நான்!!!! ச்சே போ டி!! என் மூஞ்சியிலக்கூட முழிக்காத" என கன்னாபின்னாவென கத்திவிட்டு தன் அறைக்குள் நுழைந்த பழனியிடம்
"என்னமா இப்படி திட்டிட்டு வந்துட்டே!! புள்ளை மனசு என்ன பாடுபடும்" என தன் மகளுக்காக குரு பேச.
"யோ எல்லாம்...நீ பண்றது தான்யா இந்தளவுக்கு வந்து நிக்குது!!
வீட்டுக்கு முத வாரிசு மகாலட்சுமி குடும்ப குத்து விளக்கு! அப்படி இப்படின்னு சொல்லி சொல்லி சொல்லம் கொடுத்து வைச்சதுமில்லாம!!! நீ எது செஞ்சாலும் தப்பு இல்லை.. மனசு என்ன சொல்லுதோ அதை செய்!! தப்புன்னு தோணுச்சுன்னா அடி
எவன் வம்பு பண்ணாலும் நல்ல நாலு போட்டுட்டு வா...அப்படி இப்படின்னு உசுப்பேத்தி விட்டுட்ட அதான் அவ இப்போ ரொம்ப ஆடறா.. "
"பொட்ட புள்ளை வெளியில போன தையரியமா இருக்கதான் டி நான் சொல்லி கொடுத்தேன்..! இது என்னோட கடமை.. டி....!!! "
"தையரியமா இருக்க சொல்லி கொடுத்தல்ல அப்படியே போக போற இடத்தில எப்படி பேசணும்னு சொல்லி கொடுக்க வேண்டியது தானே..."
"அது நீ தான் டி போக போற வீட்டுல எப்படி இருக்கணும்..! எப்படி பேசணும் எப்படி நடந்துகனும்ன்னு..!! நீ தான் டி சொல்லி தரணும்..!
நானா இதெல்லாம் சொல்லி தர முடியும் சொல்லு..!! நீ தான் டி புள்ளைக்கு இது நல்லது... இது கெட்டதுன்னு சொல்லி தரணும்!! வீட்டு பொம்பளைன்னு எதுக்கு இருக்க!.. சொல்லி கொடுக்க வேண்டியது தானே...நான் பொட்ட புள்ளையை கை நீட்ட முடியமா..நீ தான் அடிச்சு வளக்கணும்..சோறு ஆக்கி போட்ட மட்டும் பாத்தாது டி..கண்டிக்கவும் வேணும்.. என் மவ பேசனது தப்பு தான் இல்லைன்னு சொல்லல!! ஆனால் அவ யாரு மேலையும் வீணா பழி போட மாட்டா வீணா யாரையும் தீட்டவும் மாட்டா..!!" என இனியின் மேல் தான் வைத்து இருக்கும் நம்பிக்கையையும் எடுத்து கூறினார்....
"ஓஒ அப்போ என் தம்பி தான் தப்பு பண்ணிடான்னு சொல்லாமல் சொல்றீங்க அப்படித்தானே..."
"இது என்ன டா வம்பா போச்சு.....
நான் எப்போ டி அப்படி சொன்ன..! நான் உன் தம்பியை எதுவும் சொல்லல டி"
"அப்போ என் பொண்ணு வளர்ப்பு சரியில்லனு சொல்றீங்க அப்படித்தானே.."
"ஐயோ அவங்க இரண்டு பேரும் நம்ம பசங்க டி...நம்ம வளர்ப்பு.... நீயேன் டி பைத்தியம் மாதிரி பேசற..."
"ஓஒ அப்போ நான் பைத்தியம் அப்பறம் எதுக்கு கல்யாணம் பண்ணி மூணு புள்ளையை பெத்துக்கிட்டிங்க..'
"ஐயோ இல்லைமா நான் அப்படி சொல்லுவேணா சொல்லு... நீ எப்பவும் அழகு தான் என் சமத்து பொண்டாட்டி என் அழகு பொண்டாட்டி.." என குரு சமாதானப்படுத்த முயன்று கொண்டு இருந்தார் அவரின் வழியில்....!!!!
ஐயோ என்ன இது பெரியவங்க ரெண்டு பேரும் எங்கயோ போறாங்க.. சரி என்னமோ பழனிக்கு கோபம் போன நம்ம இழைக்கு நல்லது தானே.. இவ்வளவு சண்டை போயிட்டு இருக்கு!!! எங்க நம்ம மகேஷ் பையனை காணோம் ..!!யாரை கேட்கலாம் ??? வாங்க நம்ம இழையை பார்த்தா என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்காலம் நம்ம பையபுள்ள அங்க கூட இருக்கலாம்.. சீதை இருக்கற இடமே ராமருக்கு அயோத்தி தானே அதான்ங்க அவ எங்க இருந்தாலும் மகேஷ் பையன் அங்க இருக்கும்ன்னு சொன்னே...
காலையில் நடந்த நிகழ்வுகளை எண்ணி எண்ணி மான்விழி கண்களிலிருந்து கண்ணீர் வந்துகொண்டே இருக்க அவனின் மேல் உள்ள கோபமும் அளவுக்கு மீறி அதிகமாகனதே தவிர குறைந்த பாடுயில்லை..!
'எப்படி மறந்தேன்..எப்படி இந்தளவுக்கு நான் மறந்து இருந்தேன்!!! அவன் பண்ணது எல்லாம் எப்படி ஒரே ஒரு நாள்ல மறந்தேன்..!!! ச்சி என்னை நினைச்சா எனக்கு கேவலமா இருக்கு!! எல்லா பொண்ணுகளை மாதிரி நானும் அவன் பார்வையில மயங்கிட்டேன்..!! இனிமே அவன் மூஞ்சியை கூட பார்க்க கூடாது..!!
" நீ அவனை பார்க்காம இருந்துடுவியா தண்ணில எழுதி வைக்கட்டுமா" என அவள் மனது ஏளன சிரிப்புடன் கேட்க..
"முடியும் கண்டிப்பா இருப்பேன்.."
"அவன் எவ்வளவு கேவலமானவன்னு நீ உனக்கே சொல்லிக்கிட்டாலும்.. ஏன்!! உன் காதாலே கேட்டாலும் சரி.. இல்லை பார்த்தாலும் சரி.. அவனை ஒரே ஒரு நிமிஷம் நினைக்கமா உன்னால இருக்க முடியுமா..!!!!என கேட்ட மனத்திடம்
"நான் ஏன் நினைக்கணும் நினைக்க மாட்டேன்.. பார்க்க கூட மாட்டேன்....
"யாரு நீயா ... அவன் உன்கூட ஒரு நிமிஷம் இருந்தா போதும் நீ எல்லாம் மறந்துடுவ டி..!"
"மாட்டேன்... நான்... அவனை பார்க்க மாட்டேன்..... நான் அவன் இருக்கிற திசைக்கு கூட போக மாட்டேன்..... நா.....ன்... நா..ன்...இப்பவே கிளம்பறேன்.." என தன் மனதிடம் கூறிக்கொண்டவள் கையில் கிடைத்த அனைத்து துணிகளையும் பையில் போட்டு தன் அறையைவிட்டு வெளியேறினாள்..
"பூமா நான் கிளம்புறேன்... ம்மா கிட்டையும்... ப்பா கிட்டையும் சொல்லிட்டு" என தன் தங்கையிடம் கூறியவள் அவள் மறுமொழி கூறும் முன்பே நில்லாமல் வெளியில் சென்றாள்...!!!!
அவளின் பழைய நினைவுகளை சுமந்தப்படி கனத்த மனத்துடன் வீட்டை விட்டு வெளியேறினாள்..!!!
*******
"என்ன பேச்சு பேசறா பாத்திங்களா அக்கா... என் மவன் அவளை ஏமாத்தி கல்யாணம் பண்ணிடான்னு சொல்றா கா... நேத்து என்னமோ என் பையனை பொம்பளை பொறுக்கினு சொன்னா... இன்னைக்கு என் புள்ளை அவளை ஏமாத்தி கல்யாணம் பண்ணிடான்னு சொல்றா.... எனக்கு வர கோவதுக்கு.." அன்னம் பல்லை கடிக்கும் சத்தம் மகேஷ் இருக்கும் இடம்வரை கேட்டது...!! "வாய்க்கு வந்தது எல்லாம் பேசறா....!! சின்ன புள்ளை அவளுக்கு இணையா நம்ம பேச்சு கொடுக்க கூடாதுன்னு பார்த்தா... ரொம்ப தான் பண்றா...!! அவ என்ன உலக அழகியா.. அவளை ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டு வர...ஊருல உலகத்தில என் பையனுக்குன்னு பொண்ணா இல்லை...!!! ஏதோ பழனி வந்து அழுதாலேன்னு இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாரு... என் புருஷன் இல்லன்னா..!! இந்த குழந்தை வயசுல பால் முகம் மாறாத என் குழந்தைக்கு கல்யாணம் பண்ணி வைப்பனா நானு... என் புள்ளை மூஞ்சியை பாருக்கா.. இன்னும் குழந்தை முகம் கூட மாறலை.. இவனை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டா... அந்த சிறுக்கி... மக... சிறுக்கி... வரட்டும் இங்க வந்து தானே ஆகாணும்.. அவங்களா வர வரைக்கும் நா போயி கூட்டிட்டு வர மாட்டேன் கா.. நானா அவளான்னு ஒரு கை பார்த்திருக்கிறேன்..பார்த்துக்கிறேன்.. என தன் போக்கில் தன் அக்காவிடம் கத்திக்கொண்டிருந்தவரை முகத்தை இரு கைகளிலும் ஏந்தியவாறு பார்த்து கொண்டு இருந்தான் மகேஷ்...
டேய் தடிமாடு.. டேய் மகேஷ்...டேய் என பலமுறை அழைத்து ஓய்ந்து போய் அவனை உலுக்கியவனை முறைத்து
" என்ன டா இப்ப" என எரிச்சலுடன் கேட்டவனை கண்டுகொள்ளாமல் "என்ன டா ஆச்சு காலையில..."என ஹஸ்கி வாய்ஸில்(voice)) கேட்க
"என்ன ஆச்சு ஒன்னும் ஆகலையே.."
"டேய் புழுவாத என்ன ஆச்சு...அம்மா ஏன் விடமா புலம்பிட்டு இருக்கு.. உன் பொண்டாட்டி என்ன டா பண்ணா.."என கேட்டவனை முறைத்தான் மகேஷ்
"ஏன் டா அப்படி பாக்கற சொல்லு... காலையில இரண்டு பேரும் சேர்ந்து தானே வந்திங்க..அவளும் சிரிச்ச முகமா தானே இருந்தா ஆனால் அதுக்குள்ள என்ன ஆச்சு அவ பாட்டுக்கு கத்தி ஊரையே கூட்டிட்டா" என கேட்ட தன் அண்ணனின் தோளில் கையை போட்டுபடி காலையில் நடந்ததை கூறினான்...
"அதுவா டா அண்ணா இன்னைக்கு காலையில நம்ம கவிதா இல்லை கவிதா..அவகிட்ட பேசிட்டு இருந்ததை கேட்டுட்டு தான் அந்த ஆட்டம் ஆடிட்டா"
"நம்ம கவிதாவா உன் கவிதான்னு சொல்லு டா.."
"டேய் அவ என் பிரண்டு டா தப்பா பேசாதே..."
"சரி விடு ...அப்படி என்ன டா பேசி தொலைஞ்ச அதை சொல்லு.."
"அதுவா எனக்கு கல்யாணம் ஆயிருச்சுன்னு சொன்னேன்"..
"அதுக்கு அவ ரொம்ப பீல் பண்ணா..ரொம்ப சின்ன வயசுலயே கல்யாணம் பண்ணிட்டன்னு கேட்டா... அப்பறம் எப்படி கல்யாணம் ஆச்சுன்னு கேட்டா.. லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்ன்னு சொன்னேன்..!!!அவ ரொம்ப ஷாக் ஆயி எப்போ..!!! எப்படி..!! லவ் எல்லாம் பண்ணனேன்னு கேட்டா..!!அதான் வரிசையா என் 8 வருசா லவ்வை சொன்னே.. அப்படியே இந்த கல்யாணம் எப்படி நடந்துச்சுன்னு சொல்லிட்டு இருந்தே.. இவ கேட்டுட்டா போல!!! அதான் அத்தனை கத்து கத்திட்டு ஊரையே கூட்டிட்டா..!!! கொஞ்சம் ஓவரா பேசிட்டா.. அம்மாவுக்கு கோபம் வந்து என்னை இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க .." என சோகத்தில் கூறியவனை மேலிருந்து கீழாக பார்த்தான் பார்த்தி..
"எத்தனை வருசா லவ்ன்னு சொன்னிங்க தம்பி... கொஞ்சம் அப்படியே எங்ககிட்ட சொல்லுங்க 8 வருஷ லவ்வா.... வருசம் என்னமோ எட்டு வருஷம் தான்...ஆனால் அது எத்தனை பேரை லவ் பண்ணன்னு கொஞ்சம் எண்ணி சொல்ல முடியுமா தம்பிங்க.."
"டே எத்தனை பேர்ன்னா என்ன டா... என்னோட லவ் 8 வருஷம் தெரிஞ்சுக்க......,"
"த்து" என துப்பினான் பார்த்தி
"எங்கிட்ட கர்சீப் இல்லைனா என்ன?? அவன் பாக்கேட்டிலிருந்த கர்சீப்பை கையில் எடுத்தவன் "உன் கர்சீப் இருக்கு ... த்துப்பானா துடச்சுக்குவேன்...அப்பறம் என்ன சொன்ன "என்னோட லவ் ட்ரு லவ்வுடா.... உனக்கு தெரியுமா எல்லா பொண்ணுங்களையும் நான் உண்மையா லவ் பண்ணேன்..!!"
"டேய் 8 வருஷம் 10 பொண்ணுங்களை லவ் பண்ணவன் தானே நீ... எட்டாவதுல இருந்து 12 வது வரைக்கும் 10 பொண்ணை லவ் பண்றனு பேருல அதுங்கக்கொண்டுவர சோத்தை சாப்பிட்டுட்டு அந்த சோறு நல்ல இல்லைன்னா அதை கழட்டி விட்டுட்டு அடுத்த பொண்ணை லவ் பண்றனு மறுபடியும் சுத்துவ.. சரியான சோத்து மூட்டை... ஆனால் அதெல்லாம் உண்மையான லவ் அப்படி இப்படின்னு சொல்லிட்டு அந்த கன்றாவி லவ்க்கு கன்றாவியான பிளாஷ்பேக் வேற சொல்லுவ பாரு கேட்கவறவன் காது பிச்சுட்டு போகும்..காலேஜ் போனத்துக்கு அப்பறம் வெட்கமில்லாம.. நான் மொராட்டு சிங்கிள்ன்னு சொல்லிட்டு 2 வருஷம் சுத்தன.. அடுத்த வருஷத்துலயே எங்க இருந்து புத்தி வந்துச்சின்னு தெரியல தீடிரென படிச்சு போலீஸ் ஆயிட்டேன்னு சொன்ன அதுக்கு அடுத்த வருசமே கல்யாணம்ன்னு பண்ணிக்கிறேன் வந்து கல்யாணமும் பண்ணிக்கிட்ட... ஆனால் எந்த கேப்ல நீ எப்போ இழையை லவ் பண்ணனேன்னு எனக்கு தெரியல டா...என கேட்ட தன் அண்ணனிடம்
"அதுவா 8 வருஷத்துல 5 வருஷம் தானே சொன்ன பேலன்ஸ் 3 வருஷம் என் வினியை மட்டும் தான் லவ் பண்ணேன் தெரியுமா..!!!!"
"உன் வினியா.அட கொடுமையே இது எப்போ..!!! சரி காலைல நடந்ததை சொல்லு டா பாதில நிறுத்திட்ட"
"நான் சொல்ல மாட்டேன்டா சொன்ன நீ தானே குறுக்க குறுக்க பேசன.." என மகேஷ் கேட்க
ஈஈஈ என பல்லைக் காட்டி கொண்டே "சரி சரி சொல்லு டா கொஞ்சம் ஆர்வமா இருக்குல்ல.." என கேட்டான் பார்த்தி..
"காலையில கவிதா கால் பண்ணா..!!! நானும் பேசிட்டு இருந்தேன்..!!!"
'ம்ம்ம்ம்...." கொட்டினான் பார்த்தி..
"சும்மா தான் டா பேசிட்டு இருந்தேன் ..!!"
"ஹும்ம்..."
"எப்படி கல்யாணம் நடந்துச்சுன்னு கேட்டா..!!!!"
"மம்ம்ம்ம்ம்"
"அடுத்த மாசம் வெளிநாடு போறேன் சோ நான் அங்க போன கேப்ல இழைக்கு கல்யாணம் நடந்தருச்சுன்னா... என்ன பண்றதுன்னு நினைச்சு.. ஜோசியர்க்கு ஒரு 10000 ஆயிரும் கொடுத்து கரெக்ட் பண்ணி... ஒரு வாரத்துலயே கல்யாணம் பண்ணலைன்னா... 30 வயசுல தான் ஆகும்ன்னு சொல்ல சொன்னேன்.... அவரும் அதே மாதிரி சொல்லிட்டாரு..அப்பறம் என் அண்ணனை தான் கல்யாணம் பண்ண சொன்னாங்க நான் அவன் கையில காலில்ல விழுந்து அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்ன்னு சொன்னேன்... அதுக்கு கவிதா இருந்துட்டு என்ன கேட்டானா..
"மம்ம்ம்ம்ம்ம்ம என்ன கேட்டா.... "
" அவ்ளோ பெரிய அழகியா????... இந்தளவுக்கு ரிஸ்க் எடுத்து பண்றனு கேட்டா..'
"அதுக்கு நான்..... என் வாய் நிக்காமல்.. உன்னை விட கொஞ்சம் கம்மி தான்.. அதான் முதலில் உன்கிட்ட சொன்னேன்... நீ தான் வேணாம்னு சொல்லிட்ட... அதான் அவளை கல்யாணம் பண்ணிக்க வேண்டியதா போச்சு.... நீ வேணும்னா வா இரண்டாம் தாரமா கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன்
அதுக்கு கவிதா இருந்துட்டு உன்னோட லவ்வர்ஸ் லிஸ்ட்ல என்னையும் சேர்க்க பாக்கறாயா...ன்னு கேட்டா...
அதுக்கு இல்லை டி லவ்வர்ஸ் லிஸ்ட் 10 பேர் தான் இருக்காங்க... wife லிஸ்ட்ல வினி மட்டும் தான் இருக்கான்னு சொல்லிட்டு இருக்க இருக்கவே....
டேய் பொறுக்கின்னு இவ கத்தன சத்தம் கேட்டுச்சு...என்ன டா திரும்பி பார்த்தா..ம் காளி மாதிரி கோவில இருந்த வேல தூக்கிட்டு நிக்கற அப்பறம் சொல்லவா வேணும் நான் ஓடவும் அவ தூரத்த ஆரம்பிச்சட்டா.. நானும் சந்து சந்தா சுத்திட்டு வரத்துக்குள்ள ஊருக்கே தெரிஞ்சு போயி எல்லாம் வந்துட்டாங்க..... சின்னசிறுசு ஏதாவது பண்ணிட்டு போகட்டும்ன்னு அங்க இருக்கிற கிழட்டு குரங்களுக்கு தெரிய வேணாம்... இவளை ஒரு கிழவி திட்டி. அந்த கிழவிக்கு இவ பதில் சொல்றேன்னு பேருல என் மானத்தை மறுபடியும் வாங்கிட்டா.... சும்மா இருந்தவளை நல்ல சொரிஞ்சு விட்டுட்டாங்க டா.. வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி திட்டனா...இந்த ஊரு கிழவிங்க எல்லோரும் சேர்ந்து என் வாழ்க்கையில கும்மி அடிச்சுட்டு போயிட்டாங்க..டா" என புலம்பியவனை பார்த்து சிரித்தான் பார்த்தி..
"டேய் சிரிக்காம இரு வர கோபத்துக்கு அப்பறம் நீ சட்னி ஆயிடுவ டா குண்டா"என கூற...
"பின்ன சிரிக்காமல் என்ன பண்ணுவாங்க சொல்லு... உன் வாய் தான் உனக்கு எமன் டா..!! ஐயோ என்னைல முடிலை...சிரித்து கொண்டே சரி சொல்லு அடுத்து என்ன பண்ணலாம்ன்னு இருக்க.." என பார்த்தி கேட்க.
"அடுத்து என்ன கிளம்பி வெளிநாடு போக வேண்டியது தான்" என மகேஷ் கூற..
"அவ உன்னை தப்பா நினைச்சுட்டு இருக்கா அவளுக்கு உன்னை நீ ப்ரூப் பண்ணமா கிளம்பி போறேன்னு சொல்ற .. ஏன் டா இப்படி பண்ற" என கேட்டவனை சிறு சிரிப்புடன் பார்த்தான்...
"அவளுக்கு இப்போதைக்கு நான் கெட்டவனாகவே இருந்துட்டு போறேன்.. டா... இந்த பிரிவு கண்டிப்பா இருக்கணும் டா" என கூறி சென்றவனை புரியாமல் பார்த்து கொண்டு இருந்தான் பார்த்தி..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro