Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மாயவன் 5

"என்னமோ சரியில்லையே இரு டி அவளை கூட்டிட்டு வரேன் " என கூறி பழனி நகரவும் இழையின் அறை திறக்கவும் சரியாக இருந்தது!! அறையிலிருந்து வெளியில் வந்தவளை சற்றே அதிர்ச்சியுடன் பார்த்தனர் அனைவரும்..!!!

"அடி ஆத்தி!!!... சாச்சுப்புட்டா டா மகேசு... சாச்சுப்புட்டா.! ஒத்த நொடியில கௌவுத்துட்டா டா!!" நெஞ்சில் கை வைத்தவாறே நினைத்தவன் அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தான் இடைவரை நீண்டு இருக்கும் ஈர கூந்தலை ஒற்றை க்ளிப்பில் அடக்கி இருந்தாள் !! க்ளிப்பில் அடங்காத  முடிகள் அவளின் கண் இமைகளில் முத்தமிட்டுகொண்டே இருக்க அதை பார்த்தவனுக்கு  சற்று பொறாமைக் கூட வந்தது.!

காற்றில் பறக்கும் ஒற்றை
கூந்தல் கூட உன் இமைகளில் முத்தமிட்டு செல்ல..!! என் இதழ்கள் உன் இமை தீண்ட தவமிருக்க!!! என் இமையை காணாமல் இருக்கும் உன் இமையின் மௌனம் தான் என்னவோ!! என் தூயவளே..!!

மொழுமொழுவென இருந்த  மூக்கின் நுனியை பிடித்து இழுக்க தோன்றிய மனதைக் கட்டுப்படுத்த திணறித்தான் போனான்!!.!! அவனது பார்வை அவளின் செவ்விதழை காண அதில்  என்றும் ஒட்டி இருக்கும் புன்முறுவலில் மேலும் கிறங்கி போனான் அவன்!!..

மல்லிகையாய் மலர்ந்திருக்கும் உன் செவ்விதழை மென்மையாக வருடிய காற்றை சிறை பிடிக்க முயன்று உன் மூச்சு காற்றில் சிறைகைதியாகி தோற்றேனடி...

அடர் நீலநிற சட்டையும் வெள்ளைநிறத்தில் பட்டு பாவாடையை அணிந்திருந்தாள்...!! அவளின் வதனத்தை ரசித்துக் கொண்டிருந்தவனின் ரசிப்பு பழனியில் பேச்சில் நின்றது..!!!

"ஏய் என்ன டி இது கோலம்..."

"என்னமா நல்லாத்தானே இருக்கேன்"

"என்னது நல்ல இருக்கையா?? அடியே உனக்கு கல்யாணம் ஆயிருச்சு டி.. இன்னமும் பாவாடை சட்டை போட்டுட்டு சுத்திட்டு இருக்க..யாராவது பார்த்தா என்ன ஆகறது.." என்ற பழனியிடம்

"யாரு பார்த்தா எனக்கு என்ன.... என்னைய கேட்டா கல்யாணம் பண்ணி வைச்சிங்க!! நான் இதுதான் போடுவேன்..." என நக்கல் தோணியில் கூறிட
 

"கொன்றுவேன் டி ஒழுங்கா போயித் துணியை மாத்து இல்லை பிச்சுடுவேன்"

"என் இஷ்டத்துக்கு  துணிக்கூட போட முடியலை இந்த வீட்டுல!!"என கூறி ஒற்றைக்காலில் தரையை உதைத்தாள்

அவள் கூறியதை காதில் வாங்கி கொள்ளாமல் "நல்லவேளை எல்லாம் குலதெய்வ கோவிலுக்கு பொங்கல் வைக்கப் போயி இருக்காங்க!! இல்லைன்னா என்ன ஆகறது போ டி போ தாவணி எடுத்து கட்டு" என மீண்டும் கூற

ஓரக்கண்ணால் அவனைப் பார்த்து கொண்டே மெல்லிய சிரிப்புடன் "அவனை என்னை அக்கான்னு கூப்பிட சொல்லு தாவணி கட்டிட்டு வரேன்" என்க...

"அடியே அவன் உனக்கு புருஷன் டி.. லூசு மாதிரி பேசிட்டு..!!!உளறாம போ" என கூறிக்கொண்டு இருக்கவே மகேஷ் இடையில் நுழைந்தான்

"பட்டு பாவாடை சட்டையிலயே இந்த மூஞ்சியைப் பார்க்க முடியல!! இதுல தாவணி கட்டிட்டு வந்தா "ச்சை" நினைச்சுக்கூட பார்க்க முடியலை...
இந்த லட்சணத்தில இவ.....தாவணி கட்டிட்டு வரதுக்கு நான்...இவளை அக்கான்னு மரியாதையா வேற கூப்பிட வேணுமா!! திமிர பார்த்தியா உன் பொண்ணுக்கு!!"என மகேஷ் கூறவும் கடுப்பின் உச்சத்திற்கு சென்றாள் இழை..

"அம்மா அவனை அக்கான்னு கூப்பிட சொல்லு இல்லை!!! எனக்கு கெட்டக் கோபம் வரும் சொல்லிட்டேன்!!!"

"அக்கா அவளை சாரீ கட்ட சொல்லு.!! இல்லைனா இவளை பார்க்க பார்க்க எனக்கு வாந்தி வரும் சொல்லிட்டேன்.!"

"என்ன வாந்தி வருமா...டேய்ய் உன்னை.... என்ன பண்றன்னு பாரு டா!" என கூறிக்கொண்டே எதையோ தேடியவள்  எதுவும் இல்லாமல் போக அவள் கையில் இருந்த மொபைலை அவன் மீது தூக்கி எறிந்தாள் மொபைல் அவன் மீது படுவதற்குள் "ஐயோ என்னோட மொபைல்.." என இழை கத்த  கையில் பிடித்த  போனை மீண்டும் நழுவ விட்டான் மகேஷ்..!!

"ஐயோ போச்சே ஐம்பதாயிரம் போன் போச்சே போச்சே... ஏன் டா ஏன் டா கீழவிட்ட எருமை,கழுதை", என கத்திக்கொண்டே அவன் அருகில் சென்று  அடிக்க ஆரம்பித்தாள்...

"ஏய் அடிக்காத டி ராட்சசி அங்க பாரு ..அங்.. க பா...ரு டி சோபா ..சோ..பா..மேல தான் இருக்கு" என கூற அதை பார்த்தவள் டக்கென்று அதனை எடுத்துக்கொண்டு!....
ப்புஷ் ப்புஷ்யென மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிகொண்டே அவனை முறைத்தாள்...!!

"அக்கா...மாமா உன்னைக் கூப்டற மாதிரி இருக்கு!!... போயி பாரு" என மகேஷ் கூற

"எனக்கு எதுவும் கேட்கலையே டா.."

"அம்மா எனக்கு எதுவும் கேட்கலைம்மா இவன் சொல்றதை நம்பாதே..' என இழை சொல்லவும்

"அக்கா எனக்கு நல்லாக் கேட்குது!! உங்களுக்கு தான் காது கேட்கலை!! போ அக்கா, போயி பாரு.." என மீண்டும் மகேஷ் கூற

" நீ சொன்ன சரியா தான் இருக்கும்.. இரு பார்த்துட்டு வந்தறேன்!!"எனக் கூறி பழனி நகர!!.அவளின் அருகில் சென்றவன் சோபாவில் இரு கைகளையும் ஊன்றி எழ முடியாதவாறு சிறை செய்தான் "என்ன டி  நான் உன்னை  அக்கான்னு கூப்பிட வேணுமா..!"என மெல்லிய குரலில் கேட்க

அவனின் கண்களை பார்த்தவள் "ஆ...மா அக்கான்னு... கூ..ப்பி..டு" சற்றே திணறியவாறே சொல்ல

"ஹிம்மம்ம்......  அப்படியா!!!!. உனக்கு அந்தளவுக்கு திமிராயிருச்சா..!!! இப்படியே விட்டா நல்ல இருக்காதே.
அக்கான்னு கூப்பிட சொன்ன இந்த வாய்க்கு சின்னதா பனீஸ்மெண்ட் கொடுக்கலாமா" என கூறிக்கொண்டே இதழை மெல்ல நெருங்கினான்!! நூலிழை இடைவெளியில் இருவரின் இதழ்கள் இருக்க...!!! அவனின் மூச்சு காற்று அவளின் பன்னு கன்னத்தில் படறவும் கண்களை இறுக மூடி கொண்டாள்..

"என்ன இவ இன்னும் தடுக்காம கண்ணை மூடிட்டு  இருக்க"என நினைத்து அவளை உற்றுப் பார்த்தான்.!!! அவளோ ஒரு வித மையலுடன் கண்களை இறுக மூடியிருந்தாள்

"என்ன இவ இப்படி சிலையாகிட்டா..!! நமக்கு வேற கை, கால் எல்லாம் பிக்ஸ் வந்த மாதிரி நடுங்கி தொலையுதே.!! இவளும் நம்மளை தடுக்க மாட்ட போலயே.!! என்ன பண்ணலாம்..!" என  யோசித்தவன்  "அக்கா கூப்பிட்டியா?? இதோ வந்துட்டேன் அக்கா.." என அழைக்காத அக்காவிடம் பேச.!! பட்டென்று தன்னிலை வந்ததவள் அவனை தள்ளிவிட்டு தன் அறைக்குள் நுழைந்தாள்..

இமைமூடி ரசித்தேனடா
உன்  சுவாசக்காற்றை...!!!
உன் மூச்சு காற்றுபட்ட  என் கன்னங்கள் என் இதழைவிட செம்மையடைவதேனோ!!!...

உள்ளே சென்றவளை இமைக்காது பார்த்தவன் ஒரு பெருமூச்சுடன்
"நேத்திக்கு கூட இந்த நடுங்கு நடுங்களை இப்போ என்னடான்னா இப்படி கை, கால் எல்லாம் ஆடுது.!! இனிமே இவளை பார்க்கவேக் கூடாது டா சாமி முக்கியமா கிட்டக்கக்கூட போக கூடாது..!!!" என மனதில் நினைத்தவன் மற்றோரு அறைக்கு சென்றான்..!!

பின் மணமக்களை தவிர அனைவரும்  கிளம்பி குலதெய்வ கோவிலுக்கு செல்ல அங்கு அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே முடிந்து இருந்தது...

பழனி வீட்டின் முறைப்படி மாப்பிள்ளை வீட்டாரின் குலதெய்வத்திற்கு பொங்கல் வைத்து அதை மணமக்கள் கையால் படையலிட்டு.!  காளியம்மனுக்கு சிறப்பு பூஜையும் நடைபெறும்!!! இப்போது மணமகள் குடும்பத்திற்காக மற்ற அனைவரும் காத்திருந்தனர்..!!!

"பழனி நீ மட்டும் வந்து இருக்க அவங்க ரெண்டு பேரும் எங்க" என அன்னபூரணி  கேட்க

"சித்தி..அது வந்து இழை இன்னும் ரெடியாகமா இருந்தா  அதான் மகேஷ் கூட்டிட்டு வரேன்னு சொன்னா" என தயங்கி சொல்ல

"உன் பொண்ணுக்கு இப்போ கூட நேரமா வர தெரியாதா...இதெல்லாம் உன் புள்ளைக்கு சொல்லி தர மாட்டயா !! ஊரே இங்க இருக்கு, முதல் தலைமுறை கல்யாணம் அவங்க தன் இங்க இருக்கணும்!!! இதெல்லாம்  உன் புள்ளைக்கு தெரியாதா என்ன..!! நீ குடுக்கற செல்லம்!! டாக்டர்க்கு படிக்கறோம்ன்னு திமிரு.." என பூரணி கோபம் கொள்ள..

"சீக்கரம் வந்துருவாங்க அத்தை, நம்ம அதுக்குள்ள பூஜைக்கு ரெடி பண்ணலாம்!! அதுக்குள்ள புள்ளைங்க ரெண்டும் வந்துருவாங்க!!!" என குரு கூறவும் தன் கோபத்தை மறைத்தவர் "சரீங்க தம்பி நான் போயி ஆக வேண்டிய வேலையை பார்க்கிறேன்" என கூறி பழனியை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றார் பூரணி..!!

"அதெப்படி  திட்டி முடிக்கற வரைக்கும் சும்மா இருந்துட்டு திட்டி முடிச்சதும் அவங்களை சமாதனம் பண்ணி அனுப்பி வைக்கற!!!வீட்டுக்கு வா டி இருக்கு உனக்கு" என குருவிடம் மெல்லிய குரலில் பொரிந்து தள்ளிவிட்டு சென்றார் பழனி..

"என்னால தான்  முடியலை!! இப்படி யாரவது திட்டிவிட்டா தான் உண்டு.!! அதை நான் எப்படி டி மிஸ் பண்ணுவேன்.." என தனக்கு தானே முனகிக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தார்...!!!!!

***********

'ச்சே ச்சே... இழை ஏன் டி ஏன் இப்படி பண்ண உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா டி..!!! மானம் போச்சே,  இனிமே அந்த எருமை மூஞ்சியில எப்படி முழிப்பேன்..! அடியே இனியா இனிமே அவனை நீ பார்க்கவே கூடாது டி!!! அவனை நீ எப்ப பார்த்தாலும் வெட்கமே இல்லாம விழுந்தற... இனிமே அவனை பார்க்கவே கூடாது இனியா....என தனக்குத்தானே சபதம் ஏற்று கொண்டு தன்  துணியை மாற்றிக்கொண்டு அறையைவிட்டு வெளியில் வந்தவள்  கண்கள் இரண்டும் வெளியில் விழுந்து விடும் அளவிற்கு விரிந்தது...

"அடேங்கப்பா என்ன பையன்டா இவன்.." என கூறிய மனதை இரண்டு தட்டுத்தட்டி அடக்கினாள்...

எதுவும் பேசாமல் அவனின் அருகில் செல்ல அவளின் வருகையை அறிந்தவன் அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல்  "போலாம்"என கூறிவிட்டு வீட்டிற்கு வெளியில் நின்றான்..

அவன் பைக்குடன் நிற்க அவன் அருகில் சென்று தயங்கிக்கொண்டே நின்றவள் ஏறாமல் இருக்கவும் "சீக்கரம் ஏறு டைம் ஆயிருச்சு.." என அவசரப் படுத்த

"எனக்கு பைக்ல உட்கார தெரியாது!!"

"என்னது.." சற்றே அதிர்ச்சியுடன்  கேட்க

"இல்லை எனக்கு பைக்ல உட்கார தெரியாது. அப்படி ஏறி உட்கார்ந்த இறங்க தெரியாது.."என கூற

'இறங்க தெரியாத இல்லை.. கால் கீழ எட்டாதா" என நமட்டு சிரிப்புடன் கேட்டவனை முறைத்தவள் "இரண்டும் தான்!! ஒழுங்கா காரை எடு கார்ல போலாம்" என இழை கூற

சிரிப்புடன் பைக்கைவிட்டு இறங்கியவன் "வா போலாம்"என கூறி முன்னாள் நடந்தான்....

'அவ ஏன் எதுவும் சொல்லாமல் போறான்.!! என்னை சரியாகூட பார்க்கல!!!! ஒருவேளை நல்லாயில்லையோ!!" என அவளின் காதல்  மனம் நினைக்கவும்..

"சத்தியமா வெட்கமாவே இல்லையாடி உனக்கு' என இன்னொரு மனம் கேட்க

"அப்படியில்லை அப்போ முழுங்கற மாதிரி பார்த்துட்டு..!!இப்போ பார்க்க கூடயில்லையேன்னு நினைச்சேன் அவ்ளோதான்..!" என காதல்  மனம் சொல்ல

"அவன் உன்னை பார்த்தா 5 அடி வளந்துருவ பாரு.." என இன்னொரு மனம் கூற

இரண்டு மனதையும் அடக்கியவள் தன்னவனை நோக்கி சென்றாள்.!!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro