மாயவன் 27
நெஞ்சோடு கலந்திடு உறவாலே...
காயங்கள் மறந்திடு அன்பே...நிலவோடு தென்றாலும் வரும் வேளை.. என பாடிக் கொண்டிருந்தவளின் நினைவில் தன்னவனை முதன்முதலில் பார்த்தது ஞாபகம் வர அன்றைய நினைவில் முழிக்கினாள் நித்தியமதி.
"எவனையோ ஒருத்தனைக் கூட்டிட்டு வந்து இருக்களா இந்த இழையினி.." எனக் கூறிய அன்னபூரணியிடம்
"நானும் தான் அக்கா பார்த்தேன். எவனைன்னு தெரியல அக்கா. நல்லா வாட்ட சாட்டமா தான் இருந்தா.. பேரு என்னமோ சொன்னாங்க மித்ரனோ, கித்ரனோ. அம்மா,அப்பா இல்லையாமா. ஒரே பையன் சொத்து நிறைய இருக்கு போல. இவனும் இவக் கூட தான் டாக்டர்க்கு தான் படிச்சுட்டு இருக்கானாம். அதான் இழுத்துட்டு வந்துட்டா போல. என்ன ஜாதியோ, என்ன கொலமோ தெரில அக்கா.. என்னமோ போங்க. நம்ம பசங்களை விட்டா போதும்..." என நித்யாவின் அன்னை, அன்னபூரணியிடம் (மகேஷ் அம்மா) கூறயதைக் கேட்டவளிற்கு கோபம் தான் வந்தது..
"மா... பெரியம்மா, நம்ம இழை அப்படி எல்லாம் பண்ண மாட்டான்னு தெரிஞ்சும் இப்படி பேச உங்களுக்கே நாக்கு கூசல. நானும் ஒரு பொண்ணு தான் மா. அப்ப நான் என் நண்பன்னு ஒருத்தனைக் கூட்டீட்டு வந்தா நீங்க இப்படி தான் சொல்லுவீங்களா மா.. சொல்லுங்க பெரியம்மா இப்படி தான் சொல்லுவீங்களா..." எனக் கேட்டவளிடம்
"இப்போ பெரியவங்க நாங்க பேசிட்டு இருக்கும் போது சின்னவ உனக்கு என்ன டி இங்க வேலை. ஒழுங்கா உன் வேலையை பாரு..." என கூறிய தன் அன்னையை முறைத்தவள்
'உங்களை எல்லாம் திருத்த முடியாது...' என மனதில் நினைத்தவள் "நான் அண்ணாவை போயி பார்த்துட்டு வரேன்..." எனக் கூறியவள் வேக வேகமாக தன் அண்ணனின் வீட்டிற்குள் செல்ல மகேஷின் அறையில் இரு ஆண்களின் பேச்சு சத்தம் நன்றாகவே கேட்டது அதில் ஒன்று தன் அண்ணனின் குரல் மற்றோரு குரல் யாரென்ற குழப்பத்துடன் அறைக்குள் செல்லாமல் வெளியே நின்றிருந்தாள் நித்யா..
"இது தான் உங்க வீடா மகேஸ். நல்லா இருக்கு. என்னை பார்த்ததும் உனக்கு அடையாளம் தெரிஞ்சது எனக்கு ஆச்சரியமா இருக்கு. நீ அப்போ ஒன்பதாவது தானே படிச்ச. அப்போ ரொம்ப குட்டியா இருந்த. இப்போ பாக்க ஆளே மாறி இருக்க. எனக்கு கூட உன்னை அடையாளம் தெரியல. நீ கண்டு பிடிச்சு பேசனது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆமா இழை உனக்கு என்ன சொந்தமா..." எனக் கேட்டவனிடம்
"ஆமா மித்ரா என் அக்கா பொண்ணு தான்..."
"அப்போ நீ எனக்கு மச்சானா..." என கேட்டு மித்திரன் சிரிக்க
"ஆமாம்..." என தலையை ஆட்டினான் மகேஸ்.
'ச்சே இழை அண்ணிய தங்கச்சியா பாக்கறான். இந்தம்மாங்க என்னடானா இப்படி கேவலமா பேசிட்டு இருக்காங்க. ஐம்பது வயசு ஆயிட்டா இப்படியெல்லம் பேச தோணும் போல. எல்லாம் காலக் கொடுமை...' என நினைத்தவள்
"டேய் மேக்ஸ் பாக்ஸ் யாரு டா இது...?? புது வரவு...? " என கேட்டுக்கொண்டே அவனின் அறைக்குள் நுழைந்தாள் நித்தியா
"என் பிரன்ட் மித்திரன். இவனும் நானும் கார் மெட்ஸ்..."
"என்ன.."என அதிர்ச்சியாக கேட்டவளிடம்
"ஆமா.. நான் ஒன்பதாவதுல டூர் போனேன். அப்ப என்னை எல்லாரும் விட்டுட்டு வந்துட்டாங்க. அங்க ஒரு பேமிலி கார்ல கூட்டிட்டு வந்து நம்ம ஊருல விட்டாங்கன்னு சொல்லி இருந்தன்ல. அது இவங்க பேமிலி தான். இவன் மித்திரன், டேய் இவ என் தங்கச்சி டா.. பாக்க மொக்கையா தான் இருப்பா. பேருக் கூட எண்ணமோ வருமே ஹான் மதி டா..." என மித்திரனிடம் கூற அதை காதில் வாங்கி கொள்ளும் நிலையில் தான் அவன் இல்லை.
இரட்டை சடைப் பிண்ணி ஒரு பக்க சடையில் மல்லிகை பூ வைத்து இருக்க அந்த மல்லி அவளின் குட்டி காதில் நர்த்தனம் ஆட. அதெல்லாம் கண்டு கொள்ளாமல் தன் கோழிக் குண்டு கண்களை விரித்து விரித்து கேள்வி கேட்டுக்கொண்டே தன் பட்டு தாவணியை எடுத்து இடுப்பில் சொருக அவளின் மெல்லிய இடையில் தன்னைத் தொலைத்தவன் தன் பார்வையை மாற்றிக் கொண்டாலும் அவனையே கேளாமல் அவளை விழுங்கியது அவனின் கருவிழிகள்.
"ஒஹ். அப்போ உன் வயசு தானா..."
"இல்ல. எனக்கு இவன் இரண்டு வருஷத்துக்கு மூத்தவன்..." என மகேஸ் பதில் கூற
"சரிண்ணா..." என கூறியவள்
'நமக்கு ஆறு வருஷத்துக்கு மேல மூத்தவன் போல' என நினைத்தவள் மித்திரன் பக்கம் திரும்ப அவனின் பார்வை வீச்சில் விழுந்தாள்..
இருவரின் கருவிழிகளும் ஒன்றை ஒன்று முட்டி மோதி சண்டையிட்டு கொள்ள இருவருமே தங்களின் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் விழியால் தங்களின் யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்க மகேஷின் குரலில் இருவரும் தங்களின் நிலைக்கு திரும்பினர்..
"டேய் மித்து இவ பாக்க அண்டா மாதிரி இருந்தாலும் இப்போ தான் பதினொன்னாவது படிக்கறா.." என மகேஷ் கூற அவனை மூக்குமூட்ட முறைத்தாள் நித்யா..
காத்து போனப் பலூன் போல
புஷ் என்றானது மித்திரனிற்கு "ரொம்ப குட்டிப் பொண்ணா. ச்சே தப்பு தப்பு. சின்ன பொண்ணு மனசைக் கெடுக்கக் கூடாது..." எனத் தனக்குத்தானேக் கூறி கொண்டாலும் அவனால் அவளைக் காண்பதை மட்டும் தடுக்க தான் முடியவில்லை.
சிறு பெண் அல்லவா அவனின் கண்ணின் மொழி புரியாமல் முழித்தாள் நித்தியமதி.
அதற்கு அடுத்தடுத்த நாட்கள் அவன் மகேஷின் வீட்டிற்கு வந்தாலும் அவனின் பார்வை என்னவென்றே கூற முடியாத புதிராக இருக்க குழம்பிப் போனாள் பெண்ணவள். இதெல்லாம் கவனித்தும் கவனிக்காமல் இருந்தான் மகேஷ்.
பள்ளிப் படிப்பை முடித்து, காலேஜின் தொடக்கத்தில் அவனின் பார்வையின் அர்த்தத்தை புரிந்துக்கொண்டவள் தன் கண்களால் காதலை சொல்ல. அவனோ அதை புரிந்தும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருக்க.இரண்டு வருடம் பொறுத்து இருந்தவள் தன் வெட்கத்தை விட்டு தன் காதலைக் கூற இவளின் காதலை வேண்டாம் எனக் கூறியதும் மட்டுமல்லாமல் மும்பைக்கு பறந்து சென்றான் அவளின் கள்வன்.
"எங்க போனாலும் நான் உன்னை விட மாட்டேன் டா..." விடாது சனி என்பது போல் தன் தொலைபேசியின் மூலம் தன்னவனிற்கு செல்லத் தொல்லைக் கொடுக்கத் தொடங்கி விட்டாள்.
இவள் வேண்டாம் என்று நினைப்பவன் ஏன் இவளின் நம்பரை ப்ளாக் செய்யவில்லை. இவள் அழைத்தால் உடனே அழைப்பை ஏற்பான். எவ்வளவு நேரம் என்றாலும் அவள் பேச இவனும் பதிலிற்கு திட்டுவான். ஆனால் இவனே போனை வைத்தது இல்லை.
இது மட்டுமல்ல அவனைப் பார்த்த அன்றிலிருந்து இவளும் கவனித்து கொண்டு தான் இருக்கிறாள். இவனின் ஒவ்வொரு செய்கையையும் சொல்லாமல் சொல்லியது இவனின் கண்ணியத்தை. விடுமுறை நாட்களில் மட்டுமே வருவான். வந்தால் இழை வீட்டில் இருப்பதை விட மகேஷின் தோட்டத்து வீட்டில் தான் அதிகம் இருப்பான். இது அன்னபூரணிக்கு தெரிந்தாலும் செல்வத்திற்கு பயந்து அதிகம் பேசிக் கொள்வதில்லை. அப்படியே வாய் திறந்தாலும் அதனை தன் பார்வையிலயே அடக்கி விடுவார் செல்வம்(மகேஷின் அப்பா)
********************
தன்னவனை சீண்டி விட்டு தன் அறைக்குள் நுழைந்தவளின் இடையில்
அழுத்தமான கரம் பதிய சிலிர்த்து போனாள் இழையினி.
கூச்சத்தில் நெளிந்தவள் அவனின் கையை எடுக்க முயன்று கொண்டிருக்க அவனின் கைவிரல் இடையை தாண்டி செல்ல, பித்து பிடித்தது போல் நின்றாள்.
என்ன தான் ஸீன் போட்டுக் கொண்டு தனித்தனி அறையில் இருந்தாலும் இரவில் இருவரும் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்து இருந்தது இல்லை. தன்னவனின் படர்ந்த மார்ப்பில் தலை வைத்து உறங்காவிட்டால் அவளிற்கும் உறக்கம் வருவதில்லை என்பதே உண்மை.அவளிற்கு தெரியாத என்ன தன்னவனின் அருகாமை. ஆனால் காலையில் எழுந்தாள் எதுவும் அறியாதவள் போல் "எதுக்கு என்கூட தூங்கன.."என சண்டையிட ஆரம்பித்து விடுவாள்.
"இழை... இழைமா..." என்ற தன்னவனின் அழைப்பில் தன்னிலைக்கு வந்தவள் சுற்றும் முற்றும் தன்னவனைத் தேட அவன் இல்லாமல் போக
"ச்சே பிரம்மையா...? பின்னாடியே வாருவான்னு நினைச்சேன். இப்படி பல்ப் கொடுத்துட்டா. நீ ரொம்ப ஆசை படற இழையினி. உன் நினைப்புல தீயை அள்ளி தான் வைக்கணும்..." என தன்னைத் தானே திட்டிக் கொண்டவள் தன்னவனை நோக்கி சென்றாள்.
தன் அறையிலிருந்து வெளியில் வந்தவளிற்கு ஹாலில் மூன்று பேர் அமர்ந்திருக்க அவர்களை நோக்கி சென்றவள் அவர்கள் யாரென்று தெரியாவிட்டாலும் பார்த்து சிரித்தவள் "இருங்க டீ கொண்டு வரேன்.." என கூறி நகர்ந்தவளின் கையைப் பிடித்து இழுத்தவன் அவளை தன் தோளோடு அணைத்துக் கொண்டவன்
"சார் இவ தான் என்னோட ஆல் இன் ஆல் ஹோம் ஸ்விட்ச். ஐ மீன் என் பொண்டாட்டி. நான் யூ.எஸ். போகறதுக்கு முன்னாடியே இவளை கல்யாணம் பண்ணிட்டு தான் சார் போனேன். இவ படிச்சுட்டு இருந்தான்னு தான் இவ என் கூட வரல, இல்லைன்னா இவளும் என்கூடயே வந்து இருப்பா. இப்போ எங்களுக்கு கல்யாணமாகி கூட மூணு வருஷம் ஆகப் போகுது. இவ பெரு இழையினி..." என வந்தவரிடம் கூறிவிட்டு இவளிடம் திரும்பி
"வினிமா இவங்க என் சீனியர் ஆஃபீஸர், தென் இவங்க சாரோட மனைவி, இவங்க சாரோட பொண்ணு நிஷா..." எனக் கூறி அறிமுகம் செய்ய மெல்ல சிரித்தவள் "வணக்கங்க.." என இழைக் கூற
" நிஷாவை கைகாட்டி இவங்க கூட டாக்டர் தான் இழையினி. என் மனைவியும் டாக்டர் தான் சார். இப்போ தான் காலேஜ் முடிச்சாங்க. ட்ரைனிங்காக இங்க வந்திருக்கா சார். சாரி சார் எனக்கு கல்யாணம் ஆயிருச்சுன்னு சொல்லாம விட்டுட்டேன். சொல்லி இருந்தா இப்படி நீங்களும் வந்திருக்க மாட்டீங்க. சாரி சார்..." என கூறியவன் தர்மசங்கடத்துடன் தலையைக் குனிந்துக் கொள்ள..
"தட்ஸ் ஓகே மை பாய். ஒரு நல்ல பையனை மிஸ் பண்ணிட்டோம்..." என கூறவும் தான் இழையினியின் டாக்டர் மண்டைக்கு உரைத்தது. அப்போது தான் நன்றாக கவனித்தாள் டீபாயில் பழங்கள், ட்ரெஸ், ஸ்வீட்ஸ், என அனைத்தும் இருக்க வந்தவர்களின் முகத்தை பார்க்க பியுள்(full) மேக்கப் போட்டு தான் இருந்தார்கள். அவர்களின் அருகில் ஐந்தரடி அழகி நிஷாவின் முகத்தில் ஈ ஆடவில்லை. ஏதோ பறிகொடுத்தது போல் இருந்தாள். அவளின் முகபாவனையே கூறியது இவள் தான் அடம் பிடித்து மாப்பிள்ளை கேட்க அழைத்து வந்திருப்பாள் என. பெரியவர்கள் இருவரின் முகத்திலும் சோக வாடை வீசியது ஓரளவிற்கு கண்டுப் பிடித்து இருந்தாள் இழையினி தன்னவனை மாப்பிள்ளை கேட்டு வந்து இருக்கிறார்கள் என்று.
சிறிது நேரத்தில் அவர்களிடம் பேசி வழியனுப்பி விட வெளியில் சென்றவனின் அருகில் வந்த நிஷா
"உன் பொண்டாட்டியை பாத்ரமா பாத்துக்கோ..."என இரு பொருள்பட கூறிவிட்டு செல்ல சிறு முகசுழிப்புடன் அதனை கடந்து வந்தவன்
"சோப்பா.... எத்தனைப் பேர தான் சமாளிக்கறது. ரொம்ப அழகா பொறந்தது என் தப்பா. என் ஒருத்தனால எத்தனை பேரைக் கட்டிக்க முடியும். விட்றா மகேஷ் கொஞ்சம் மேன்லியா இருந்தா இப்படி ஃபேன்ஸ்(fans) பாலோவர்ஸ் இருக்க தான் செய்வாங்க. என்ன பண்றது நம்ம முக ராசி அப்படி..." என தனக்குத்தானே சற்றே சத்தமாக கூறிக்கொண்டே தன்னவளின் அருகில் வர அவளோ முறைத்து கொண்டு நின்றிருந்தாள்.
"அடி ஆத்தி. இவ என்ன இப்படி முறைச்சுட்டு நிக்கறா. மால்ல ஒருத்தி உரசிட்டு நின்னதுக்கே போயி ஆட்டம் ஆடனா.. இன்னைக்கு மாப்பிள்ளையே பாக்க வந்து இருக்காங்க. என்ன சொல்ல போறாளோ..." என மனதில் நினைத்தாலும் வெளியில் காட்டிக் கொண்டால் அவன் மகேஷ் இல்லையே. கெத்தாக தன்னவளைப் பார்த்தவன் "வினிமா தலை வேற வலிக்குது. ஏற்கனவே ரொம்ப தலைவலி இப்போ இவங்க வேற.. கொஞ்சம் டீ எடுத்திட்டு வரையா..." என கூறியவனை முறைத்தவள் அவன் கேட்ட டீயைக் கொண்டுவந்து தர அதை வாங்கி குடிக்க போனவனை ஆர்வத்துடன் தன் கைவிரல் நகத்தை கடித்துக்கொண்டு அவனையே பார்த்து நின்றாள் இழையினி.
"என்ன இவ எதுவும் பேசாம இருக்கா.. ஒரு வேளை டீயில ஏதாவது கலக்கி வைச்சுட்டாளோ. இவளை நம்ம முடியாது பூபதி ஏதாவது பண்ணி இருப்பா..." என நினைத்தாலும் டீயை ஒரு துளிக் குடிக்க நன்றாக தான் இருந்தது டீ..
"டீ நல்லா தானே இருக்கு. என்ன டா இது அதிசயமா இருக்கு. எதுவும் பண்ணாம இருக்கா..." என நினைத்தவன் டீயை குடித்து விட்டு தன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
****************
நேற்று மாலை அவர்கள் வந்ததிலிருந்து இழையினி ஒரு வார்த்தை மகேசிடம் பேசவில்லை. அவனும் வேலை டென்ஷனில் கண்டு கொள்ளவில்லை.. காலையில் அவள் எழும் முன் ஆஃபீஸ் வந்தவனிற்கு நிஷாவின் வார்த்தைகள் நினைவு வர
"அவ என்ன பண்ணிடுவா..." என நினைத்தாலும் அவனின் நினைவு முழுவதும் அவளை சுற்றியே இருக்க. தன் நினைவைக் கட்டுப் படுத்த முடியாமல் தன்னவளைத் தேடி அவள் வேலை செய்யும் மருத்துவமனைக்கு செல்ல அவளோ அங்கில்லை எனத் தெரிந்ததும் நேராக தன் இல்லத்திற்கு வர ஹாலில், கிச்சன், மித்திரன் அறை, கடைசியாக அவளின் அறையைத் தேட அவளையும் காணவில்லை அவளின் பேக்கையும் காணவில்லை.
'எங்கிட்ட சொல்லாம கொள்ளாம எங்க போயிருப்பா. ஒருவேளை அந்த நிஷா ஏதாவது பண்ணி இருப்பாளா.. ச்சே இருக்காது அப்படி பண்ண வாய்ப்பில்லை. அப்போ எங்க போயி இருப்பா. ஒரு வேளை ஊருக்கு தான் போயிட்டாளா...? ஆமா பேக்கூட இல்லை. அப்போ ஊருக்கு தான் போயிட்டா...' என அவனே நினைத்துக் கொள்ள தன்னை அறியாமல் புலம்ப ஆரம்பித்தான்..
"அப்படி என்ன நடந்துச்சுன்னு என்னைவிட்டு போயிட்டா. அவங்க வந்து மாப்பிள்ளை கேட்டா நான் என்ன பண்ண முடியும். சரி போறவா சொல்லிட்டு போக வேண்டியது தானே. நானாவது அவள் இல்லாம இருக்க கத்துக்கிட்டு இருந்து இருப்பேன்ல. இரண்டு வருசமா தனியா இருந்த எனக்கு. இப்ப ஒரு நிமிஷம் கூட அவ இல்லாம, அவக்கிட்ட பேசம இருக்க முடியல.. இந்த ஒரு மாசமா அவ அரவணைப்பில் இருந்துட்டு இப்போ அவ இல்லாமல் இருக்க யோசிக்க கூட முடியல..." என பிதற்றியவன் அப்படியே அமர்ந்துக் கொண்டான் மூளை மழுங்கிவிட்டது போன்ற உணர்வு. எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்தவனோ அவனிற்கே வெளிச்சம். காலடி சத்தம் கேட்டு தன் நிலைக்கு வந்தவன் நிமிர்ந்து பார்க்க இழையினி தான் நின்றுகொண்டிருந்தாள். அவள் ஏதோ கூற வருவதற்குள்
"எங்க டி போன..." எனக் கேட்டவன்
குழந்தைப் போல் அழுதுகொண்டே தன்னவளை அள்ளி அணைத்துக் கொண்டான்.
"ஏய் என்ன டா பண்ற.. ஐயோ.. என்ன டா ஆச்சு. காலையில பெரிய இவன் மாதிரி சொல்லாம, கொள்ளாம போன. போனவன் அப்படியே போக வேண்டியது தானே. இப்போ எதுக்கு வந்த...!! மகி மகேஷ் வலிக்குது டா... டேய் ஏண்டா இப்படி இறுக்கமா கட்டிப் பிடிச்சு இருக்கற நாலு எலும்பையும் ஓடைச்சுட்டு இருக்க..." என அவள் கூறிய வார்த்தைகள் அனைத்தும் அவனின் இறுகிய அணைப்பில் தொலைந்து தான் போனது.
அவனின் இறுகிய அணைப்பில் கட்டுண்டு போக அவனின் அணைப்பில் மெல்ல மெல்ல கரைந்தவளின் காதிற்கு அவனின் பிதற்றல் நன்றாகவே கேட்டது..
"எங்க டி போன.. உன்னை எங்கயெல்லா தேடன தெரியுமா, உன் பையை கூட காணோம். நான் ரொம்ப பயந்துட்டேன்.நீ இல்லாம என்னால இருக்க முடியாது டி. நீ எனக்கு வேணும் இப்பவும், எப்பவும், வேணும், என்னை திட்ட, என்னை அடிக்க, ஏன் ஒவ்வொரு நிமிசமும் நீ இல்லமா நான் இல்லை டி..." என கூறியவன் அவளை மேலும் இறுக்கிக் கொள்ள..
அவனின் முதுகை ஆதரவாக தடவிக்
கொண்டே "உன்னோட ரூம்ல இருந்தேன் டா. என்னோட ட்ரெஸ் எல்லாத்தையும் உன் காபோர்ட்ல எடுத்து வைச்சுட்டு இருந்தேன்..." என கூறவும் தான் அவனிற்கு மூச்சே வந்தது. "இனிமே என்கூடயே இருப்ப தானே டி எங்கேயும் போகக் கூடாது..." என கூறியவன் அவளை தன் உயரத்திற்குத் தூக்கி அவள் சுதாரிக்கும் முன்பே அவளின் குண்டு மூக்கை கடித்து வைக்க, பதிலிற்கு இவளும் அவனின் மூக்கை கடிக்க வலியின் தாக்கத்தால் கீழே இறக்கி விட்டவன் "குந்தாணி உன்னை..." என முனகியவாறே அவளை மேலும் இறுக்கி கொண்டான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro