Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மாயவன் 2

"மாப்பிள்ளை தம்பி என்ன யோசிக்கிறேள் அதான் தாலி கட்டியாச்சே பொண்ணைக் கூட்டிட்டு எழுங்கோ.." என ஐயர் சொல்ல தற்போது தன் நினைவை ஒதுக்கி வைத்துவிட்டு இருவரும் எழுந்து நின்றனர்...

பூபதி அவளை ஓரக்கண்ணால் பார்க்க அவளின் முகமோ பாறைப்போல் இறுகி இருந்தது..!!

"ரொம்பத்தான் ஸீன் போடறா..!!"என நினைத்தவன் அவளின் கையை விடாப்பிடியாக பிடித்து மணமேடையிலிருந்து கீழிறங்கி பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்க குனிய அவளோ மறுத்தாள்..

அவளின் கையை வலிக்குமளவிற்கு இறுக பிடித்து அவளின் காதில் "இப்போ நீ மட்டும் குனியளை இங்க வைச்சே கிஸ் பண்ணிடுவேன் டி...!'  என முணுமுணுக்க  அவன் செய்தாலும் செய்வான் என நினைத்தவள் எதுவும் பேசாமல் அவன் இழுப்பிற்கு சென்றாள்!!! அதன் பின் பெரியவர்களிடம் ஆசி வாங்கிக் கொண்டப் பிறகே அவளின் கையை விடுவித்தான் மகேஸ்பூபதி.!!!

"அக்கா.." என இழையின் தாயை அருகில் அழைத்து மெல்லிய குரலில் "அவளை போயி மாத்து துணியை போட்டுட்டு வர சொல்லுங்க!! இன்னும் பட்டுபாவாடை போட்டுட்டு இருக்கா!! கல்யாணப்பொண்ணு இப்படி பட்டுப்பாவாடை போட்டுட்டு இருந்ததை கேள்வி கூட பட்டு இருக்கேன் பட் இன்னைக்கு என் கல்யாணத்திலயே என் பொண்டாட்டியே இப்படி பார்ப்பேன்னு நினைக்கவே இல்லை.!! நாலு அடி இருந்தா குழந்தைன்னு நினைப்பு வேற உன்மவளுக்கு" என பூபதி கூற

"டேய் கொஞ்சமா பேசு டா!! ரொம்ப பேசாதை அவ காதுல மட்டும் விழுந்தது அப்பறம் அவ உன்னையும் என்னையும் கொலைக்கூட பண்ணாலும் பண்ணிடுவா!!!" என இழையின் தாய் சொல்ல

"அடேங்கப்பா நாங்க வாங்காத அடியா போ கா போ!! உன் புள்ளைக்கு துணியை மாத்தி அனுப்பிவிடு!! அப்பறம் எவனாவது பார்த்து பள்ளிக்கூடம் போற புள்ளையை கல்யாணம் பண்ணிடான்னு போலீஸ்ல கம்பலைன்ட் பண்ணி தொலைக்க போறான்..." என சிரிப்புடன் பூபதி சொல்ல

"உன் வாய்க்கு அவ தான் டா சரியா இருப்பா.. இரு நீ சொன்னதை அவகிட்ட போட்டுக் கொடுக்கிறேன்..."என இழையின் தாய் நகர பார்க்க..

"அக்கா உமம்ம்ம்ம்ம்மா.." என கூறி தன் அக்காவின் கன்னத்தை கிள்ளி முத்தம் கொடுத்து "பாவம் கா நானு..!!அவ சும்மாவே என்னை அடிப்பா ..நீ வேற போட்டு கொடுத்த அம்புட்டு தான் என் சோலி ..."என கூறிய மகேஸை நமட்டு சிரிப்புடன்"அடப்பாவி என்ன டா இப்படி போசுக்குன்னு மலையேறங்கிட்ட இப்பவே பொண்டாட்டி மேல அவ்வளவு பயமா டா" என கேட்டவரிடம்

"யாரு, யாருக்கு பயம் நான் யாரு தெரியும்ல்ல பூபதி"என கூறி இல்லாத மீசையை முறுக்குவது போல் பாவனை செய்தான் அவன்..

"போடா இவனே நான் போயி அவளுக்கு மாத்து துணி கொடுத்துவிட்டு வரேன் உன்கிட்ட பேசினா  பேசிட்டே இருக்கணும் நேரம் போறதே தெரியாது...!!! அங்கே நம்ம ஆத்தாகாரி. அதான் உன் அம்மா என்னையும்,உன்னையும் முறைச்சுட்டே இருக்கு நம்ம கையில் மாட்டனோம் உப்பு கண்டம் தான்.." என கூறியவர் இழையை அழைத்து கொண்டு மணமகளின் அறைக்கு சென்றார் இழையின் தாய்..!!!

(போறவளையே சைட் அடிக்காமல் இப்பவாது உங்களை இண்ட்ரோ தா டா

அப்பறம் எல்லாம் என்னைய கேட்பாங்க : its me)

"சாரி அக்க்கா இருங்க இண்ட்ரோ தரேன்..எல்லாம் இங்க வாங்க வாங்க" அனைவரையும் அருகில் அழைத்து ஒவ்வொருவராக கையைக் காட்டி அறிமுகம் செய்தான்

"நான் மகேஷ்பூபதி...!! இதோ இவன் என் அண்ணன் பூபதி பார்த்திபன்..இவரு என் அப்பா! பூபதிசெல்வன் இவங்க என் அம்மா!! அன்னபூரணி... இவங்க என் அக்கா (பெரியப்பா பொண்ணு ) இழையின் தாய் பழனி.. இவங்க என் மாமா குரு.. இவ என் சின்ன பொண்டாட்டி!!

'ச்சி' என் கொழுந்தியா அதாங்க என் பொண்டாட்டியோட தங்கச்சி பூவிழி  இவரு என் மச்சான் பூவரசன் ! இண்ட்ரோ கொடுத்துட்டேன்..

இனிமே எப்படி கல்யாணம் நடந்துசுன்னு


ரகசியமாக சொல்றேன் இப்போ இங்க வேனா நான் நெஸ்ட் அப்டேட்ல சொல்றேன் என ரகசிய குரலில்  சொல்ல..!!

"ஒன்னும் வேண நானே சொல்றேன்!! உங்களோட வன்டவாளத்தை சொல்றேன்.. "(இது புவனா))

எல்லாம் மேல பாருங்க.....நான் ஒரு குட்டி கதை சொல்ல போறேன்...

நம்ம இழையினிக்கு ஜாதகத்தில் ஒரு பிரச்சனைப்பா அப்படி என்ன பிரச்சனை அதானா கேட்க போறீங்க அவளுக்கு 23 வயசுக்குள்ள கல்யாணம் ஆகலைன்னா 30 வயசுல தான் கல்யாணம்னு ஜோசியர் சொல்லிட்டாரு பா... அதனால பழனி இருக்காங்களா அவங்க மாப்பிள்ளைத் தேட ஆரம்பிக்கலாம் சீக்கரம் கல்யாணம் முடிக்கணும்னு செல்வன்கிட்ட சொல்ல அவரும் சரி பார்க்கலாம்னு சொல்லிட்டாங்க.!!

ஆனால் ஏதாவது தடங்கல் வந்துட்டே இருந்துச்சு அந்த தடங்கலெல்லாம் பண்ணது நம்ம தலைவர் மகேஷ் பூபதி தான்.. கடைசியா ஒரு முடிவோட பெரிய பையன் பூபதி பார்த்திபனுக்கு கல்யாணம் பண்ணலாம்னு இருக்கும் போது தன் அண்ணனோட கையில, கால்ல, விழுந்து அவளை வேண்டாம்னு சொல்ல சொல்ல...!!! பார்த்திப்பனுக்கும் உண்மையாவே இஷ்டமில்லைன்னு சொல்லிட்டான்!

இப்போ என்ன பண்றதுன்னு 3 வாரத்துல அவளுக்கு இருபத்திரண்டு முடிய போகுது என பழனி அழுகவும் பெரிய மனசு பண்ணி நம்ம மகேஷ்பூபதி ஒத்துகிட்டாரு இதுல பெரிய ட்விஸ்ட் என்னான இதெல்லாம் நம்ம இழையினிக்கு தெரியாதுப்பா!! அவ காலேஜ்ல இருக்கா( கோயம்புத்தூர்ல டாக்டர் கடைசி வருஷம் படிச்சுட்டு இருக்க)) டாக்டர் படிக்கிறதுனால என்னவோ அவளுக்கு இந்த ஜாதகம் எல்லாம் நம்பிக்கை இல்லை!! அதான் அவகிட்ட ஜாதகத்தைபத்தி எதுவும் பழனி சொல்லல..!! பழனி பண்ண பெரிய தப்பே இது தான் பா!! கல்யாணம் அன்னைக்கே பொண்ண மண்டபத்துக்கு வரவைச்சு கல்யாணம்னு சொன்னா எந்த பொண்ணுப்பா ஒத்துக்குவா???!!

அதுவும் பாவம் புள்ளை வீட்டுக்கு போறோம்னு அடக்க ஒடுக்கமா பட்டுபாவாடை போட்டுட்டு

வந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னா!!! என்ன பண்ணுவா அவளும்!! (முகூர்த்தம் நேரம் முடிய போகுதுன்னு பஸ்ல தூங்கிட்டு வந்த புள்ளையை தூக்கிட்டு வந்து கல்யாணம் பண்ற குரூப் போல!!)

அதான் இழையும் ஹீரோவை கழுவி கழுவி ஊத்திட்டா!! எல்லாரும் இவ கழுவி ஊத்தறதை கேட்கலாம்!! ஆனால் மகேசை பெத்த அம்மா இவ பேசறதை கேட்டுட்டு இருப்பாங்களா சொல்லுங்க!! ஏதாவது கேட்கலாம்னு எழுந்து போன அன்னபூரணியை கண்ணாலேயே அடக்கிட்டாரு செல்வன்..!!

அதனால எல்லா கோபமும் இழை மேல திரும்பிடுச்சு.!!

அதே மாதிரி தான்னோட அந்தஸ்துல தான் பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணனும்னு ஆசை வேற அன்னபூரணிக்கு!! அதனால தன் புருஷன் மேலையும், தன் பையன் மேலையும், பழனி மேலையும் கோபமாக இருக்காங்க!! அதெல்லாம் விட இழையை தன் கண்ணாலயே எரிச்சு போடுவாங்க

போல!! அந்தளவுக்கு கோபமாக இருக்காங்க!!! தன் குழந்தையை என்னென்னவெல்லாம் சொல்லிட்டா இவ!! தீடிரென கல்யாணம் சொன்ன கொஞ்சம் இல்லை கொஞ்சம் அதிகமாவே கோபம் வரும் தான்!! அதுக்காக இப்படியெல்லாமா சொல்லுவாங்க!! இருக்கு என் வீட்டுக்கு தானே வருவா!!என நினைத்து கொண்டார்

(((இழைக்கு மட்டுமே தெரியும் அவனின் முழு சுயரூபமும்...!அவனின் பொய் முகத்தை அனைவருக்கும் நிரூபிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை அவன் தாய் அறியவில்லை!!! அதனால் இழையின் பாதிப்பு எவ்வளவு என்று அவளும் அறிந்திருக்க வாய்ப்பில்லை..!!)))

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro