அவன் 7
ஏய், என் தலைக்கேறுற
பொன் தடம் போடுற
என் உயிர் ஆடுற...
என்னடி மாயாவி நீ..!!!
என் நெலம் மாத்துற...
அந்தரமாக்குற...
என் நெஞ்சம் காட்டுற..!!!
பட்டா கத்தி தூக்கி
இப்போ மிட்டாய் நறுக்குற.
விட்டா நெஞ்ச வாரி
உன் பட்டா கிறுக்குற...!!!
ஏய், என் தலைக்கேறுற
பொன் தடம் போடுற
என் உயிர் ஆடுற
என்னடி மாயாவி நீ
என் நெலம் மாத்துற
அந்தரமாக்குற
என் நெஞ்சம் காட்டுற.
வண்டா சுத்தம் காத்து
என்ன ரெண்டா உடைக்குதே
சும்மா நின்ன காதல்
உள்ள நண்டா துளைக்குதே
தெனம் கொட்டி தீக்கவா
ஒரு முட்டாள் மேகமா
உன்ன சுத்தி வாழவா
உன்ன கோட்டா காகமா......
சித் ஸ்ரீராமின் காந்த குரலில் மென்மையாக பாடலின் வரிகள் ஒலிக்க அதை மெய் மறந்துக் கேட்டு கொண்டிருந்தவனைக் தட்டி எழுப்பினான் மகேஷின் உயிர் நண்பன் இழையின் உடன்பிறவா சகோதரன் கோபிலன் என்கிற மித்திரன்.. கோபிலன் என்பது இழை வைத்த பெயர்... அவனை ஓட்டுவதற்காக வைத்தாள்.. நாளடைவில் அதனை வைத்து அனைவரும் அழைக்க அதில் மிகவும் கடுப்பாவது நம் கோபி தான்... சாரி மித்திரன் தான்.. ( உங்களுக்கு என்ன நேம் புடிக்குதோ அதை வைச்சுகொங்கப்பா)... இருபத்தி ஐந்து வயது இளைஞன். ஆண்களுக்கான மிடுக்குடன் இருப்பவன், ஆறு அடியிற்கும் மேல் சற்று உயரம் அதிகம்... என்றும் முகத்தில் ஒரு மென்மையை சுமந்திருப்பான்...!!! ஒரு வருடத்திற்கு முன் விபத்தில் தாய், தந்தையை இழந்தவனுக்கு பழனியே மற்றொரு தாய்...!! இழையின் சீனியர் என்ற முறையில் அறைமுகமானவன்... நாளைடவில் இழையின் அண்ணனாக வலம் வர...இவனையும் அழகானவன் என நினைத்து இவன் பின்னால் பல பெண்களும் வலம் வர அதை கண்டும் காணாமல் இருக்கும் ஆணழகன்....(( எல்லாம் நேரம்🤦🤦🤦🤦))))
****
"இப்போ எதுக்கு அலெக்ஸாண்டர் மாதிரி போஸ் கொடுத்துட்டு நிக்கற மச்சான்" என மகேஷ் கேட்கவும்
"கொஞ்சம் நேரம் இரு டா என்னோட இண்ட்ரோ முடியட்டும் அப்பறம் உன்கிட்ட பேசற" என கூறியவனை மேலும் கீழும் பார்த்து "அதை சொல்லி அரைமணி நேரம் ஆச்சு... நீ வந்து சிட் பண்ணு.." என மகேஷ் கூற..
ஜஸ்ட் நாலே நாலு லைன்ல என்னோட இண்ட்ரோவை முடிச்சுட்டாங்களா... என மித்து வருத்தம் கொள்ள
"உன்னை பத்தி இதுக்கு மேல சொல்ல வார்த்தை தேடிட்டு இருக்காங்களாம்! மெதுவாக சொல்லட்டும்.. சோ நீ... எதுக்கு இங்க வந்தன்னு காரணத்தை சொல்லு.." என மகேஷ் கேட்கவும் நினைவு வந்தவனாய்
"ஆமா எதுக்கு இப்போ அவசர கல்யாணம்..!!!யாரை கேட்டு என் தங்கச்சி கழுத்துல தாலியைக் கட்டின" என கேட்டவனை சிரித்துக்கொண்டே "ஐடியா கொடுத்த நீயே... எங்கிட்ட வந்து கேட்டா.. நான் என்னன்னு சொல்லுவேன்.. ஏதுன்னு சொல்லுவேன்..." என ராகம் பாடிக்கொண்டேயிருந்தவனின் வாயை அடைத்தவன் சுற்றும் முற்றும் பார்வையை திரும்பி
"டேய் போதும் டா...ரொம்ப கத்தாத உங்கம்மா மட்டும் கேட்டுச்சு நான் முடிஞ்சேன்!!..' என மெல்லிய குரலில் கூறியவனைப் பார்த்து சிரித்தவன்
"சரி சரி கையை எடு மருந்து வாசம் தாங்க முடியலை...!' என முனகல்கள் போல கூற டக்கென கையை எடுத்து தன் இருப்பிடத்திலயே அமர்ந்துக் கொண்டான்..
"எனக்கு இந்த ஹாஸ்பிடல் ஸ்மெல் சுத்தமா ஒத்துக்காது... ஆனா பாரேன் எனக்கு வாய்த்த அடிமைகள் இரண்டும் மருத்துவர்கள்... எல்லாம் என் விதியின் விளையாட்டு.. "என சலித்துக்கொண்டே மகேஷ் கூற....
"நாங்க உனக்கு அடிமையா டா.." என கூறி முறைத்தவனை கண்டுகொள்ளாமல் வேறெங்கோ பார்வையை திருப்பிக் கொண்டான் மகேஷ்..
"அவகிட்ட ஒரு நாள் கூட சண்டை போடாம இருக்க முடியல... எப்புடி வாழ்நாள் முழுக்க இருக்க போறீங்கன்னு தெரியல... இதுல அவ அங்க இருக்கா...நீ இங்க இருக்க... இப்படி இரண்டு பேரும் பிரிஞ்சு இருந்தா...எப்போ அவ உன்னை புரிஞ்சுக்க போறான்னு எனக்கு தெரியல..." என மித்தரன் புலம்ப..
" அட போ டா... கல்யாணம் பண்ணிக்கிட்டாத்துக்காக அவகிட்ட சண்டை போடமெல்லாம் என்னால இருக்க முடியாது...அதே மாதிரி அவளும் சண்டை போடமா இருக்கா மாட்டா...!! தென் அவ என்னை புரிஞ்சுகலன்னா என்ன டா... நான் புரிஞ்சு நடந்துகிட்டு போற...!!!! சோ சிம்பிள்.. டூ யூ நொ ஒன் தின்க்
நாங்க ஜாலியா தான் சண்டை போட்டுட்டு இருந்தோம்..!!!ஆனால் அங்க இருந்த கிழடுங்க தான் என் வாழ்க்கையில கும்மி அடிச்சுட்டாங்க.."என அங்கு நடந்ததை ஒன்றுவிடாமல் கூற
வயிற்றை பிடித்து சிரித்துக்கொண்டிருந்தவனை மூக்குமுட்ட முறைத்தான் மகேஷ்
தன் சிரிப்பை அடக்கியவறே.."வீட்டுல சித்தி நல்ல திட்டி விட்டுட்டாங்க போல... உடனை பொட்டிப் படுக்கையை தூக்கிட்டு அங்க வந்துட்டா அந்த குட்டி சாத்தான்.. அதான் என்னமோ ஏதோன்னு உன்னை பார்க்க வந்தா நீ என்னடானா... ஹாயா உட்கார்ந்துட்டு இருக்க"..
"அட போடா.... நானே அவளை பார்க்க முடியாம தான்... சோகமா சாங் கேட்டுட்டு இருக்க..." என கூறியவனை நம்பிட்டேன் என்பதை போல் பார்க்க....
அவனின் பார்வையை புரிந்தவன் போல்... "என்ன கோபி என்னை நம்பு.." என கூற அவனை முறைத்தான் மித்திரன்...(அதான் பா அவன் நேம் கோபின்னு கூப்பிட்டா பிடிக்காதுல சோ அதுக்காக முறைச்சிட்டு இருக்கு பையபுள்ள...)
"சரி சரி முறைக்காதா.. வந்த விஷயத்தை சொல்லு.." என மீண்டும் கேட்க..
"நீ ஊருக்கு போக போற.. அதான் கடைசியா உன்னை பார்த்துட்டு அப்படியே வழி அனுப்பி வைக்கலாம்ன்னு..." என இழுக்க...
"உன்னை பார்த்தா.. என்னை கடைசியா பார்க்க போறேன்னு வந்த மாதிரியே இல்லையே..!!!யாரையோ தேடி வந்த மாதிரி தானே இருக்கு" என ஒற்றை புருவத்தை தூக்கி மிரட்டல் போல் கேட்க....
"உன்னை போயி சென்டப் பண்ண வந்தேன் பாரு.. பே நான் போறேன்.." என கூறி எழுந்து சென்றான் ((ஐயோ டேய் திரும்ப கூப்பிடு டா என மனதில் ஆயிரமுறையாவது நினைத்திருப்பான்)))
"உன்னை எப்படி தடுத்து நிறுத்தணும்னு எனக்கு தெரியும் டா மச்சானே..." என மனதில் நினைத்தவன் வெளியில் சென்று கொண்டிருந்த மித்தரனைப் பார்த்து கொண்டே.."நித்தி... நித்தியா.." இரண்டு முறை மகேஷ் அழைக்கவும்
"டேய் இவ்வளவு தூரம் பார்க்க வந்ததே அவளுக்காக தான் வெட்கத்தைவிட்டு மறுபடியும் போ டா..இல்லன்னா இவன் வர வரைக்கும் இவளை பார்க்கவே முடியாது.." என அவனின் காதல் மனம் சொல்ல மீண்டும் மகேஷின் அருகில் வந்தமர்ந்தான்...
"அப்படி வா டா வழிக்கு.." என நினைத்து கொண்டே..."என்ன டா கிளம்பி போன ஏன் திரும்பி வந்துட்ட..." என மகேஷ் கேட்க "இல்லை டா இந்த மாதிரி சில்லி ரீஸினுக்காக உன்னை விட்டுப் போயிட்டா... யாருடா உன்னை வழியனுப்பி விடுவா... அதான் கொஞ்சம் யோசிச்சு பார்த்தேன் வந்துட்டேன்..."என அவனிடம் பதில் கூறினாலும் அவனின் பார்வை வாசலை நோக்கியே இருந்தது...!!! அவன் எதிர் பார்த்தது போலவே மெல்லிய கொலுசின் இசையில் மான்போல நடந்து வந்தாள் மித்தரனின் நித்தியமதி..!!!!
ஐந்தடிக்கும் சற்றே உயரம்... அளவான தேகம்... பாலும், மஞ்சளும் கலந்த கலவைப்போல் அவளின் நிறம்.. இடை வரை நீண்டு இருந்த கற்றை முடியை பாதியாக வெட்டியிருந்தாள். ஒற்றை புருவத்தூக்களில் அனைவரையும் கவரும் காந்தகண்ணழகி...இடத்திற்கு ஏற்பால் தன்னை மாற்றி கொள்ளும் கிராமத்து நவீன பெண்மகள்... பூவிழியின் தோழி... பூமாவும்... நித்தியாவும் ஒரு வயதுடையவர்கள் மகேஷின் சித்தி மகள்..( இப்போதைக்கு இது போதுன்னு நினைக்கிறேன்..)
"என்ன டா' என கத்திகொண்டே வந்தவள் மித்திரனைப் பார்த்ததும் கப்சிப்பேன அடங்கி போனாள்.. அமைதியாக வந்தவள் மகேஷிடம் என்னவென கேட்க...
அவன் மித்திரனை காட்டி காபி கொண்டு வர சொல்ல மகேஸை முறைத்த வண்ணம் அங்கிருந்து சென்றாள் நித்தியா...
சென்றவளையே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் மித்திரன்..
"போதும் போதும் ரொம்ப வலியுது தொடச்சுக்கோ..." எனும் மகேஷின் குரலில் தன்னிலைக்கு வந்தவன் பேச்சை மாற்றும் விதமாக
"ஆமா இழைகிட்ட எப்போ உன் லவ்வை சொல்ல போற" என கேட்க அவன் பேச்சை மாற்றுவது தெரிந்துகொண்டவன் " நான் சொல்றது இருக்கட்டும் நீ எப்போ சொல்லுவ என கேட்க...ஹலோ ... ஹலோ..." என வராத அழைப்பு ஏற்று அங்கிருந்து நகர்ந்தான் ...
கோபியும். ... மகேஸும் நண்பர்கள் என இழைக்கு இன்றுவரை தெரியாது.. இவர்களும் தெரியப்படுத்தியதில்லை..
அவளின் முன்னாள் அதிகம் பார்த்தது இல்லாததால் கூட அவளுக்கு இவர்களின் நட்பு தெரியாமலே இருக்கிறதோ என்னவோ...தான் வெளிநாடு சென்றால் தன்னவளுக்கு கல்யாணம் செய்துவிட்டால் என்ன செய்வது என எண்ணியவன் மித்திரனிடம் சொல்ல அவனும் இவனும் சேர்ந்தே அந்த கல்யாண கூத்தை அரங்கேற்றியது.. கல்யாணத்திற்கு மித்தரன் வந்தால் அவனுக்கும் இதற்கும் சம்பந்தமிருக்குமென இழை சந்தேகப்பட்டால் என்ன செய்வது என நினைத்தவன் கல்யாணத்திற்கு வரவில்லை...
இவர்களின் நட்பு எவ்வாறு அமைந்ததென கதையின் போக்கில் பார்க்கலாம்...!!
.......
மாலையே வெளிநாடு கிளம்பியவன் மறந்தும் கூட தன்னவளைப் பற்றி பழனியிடம் மட்டுமல்ல எவரிடமும் கேட்கவில்லை..!! ஒரு குடும்பமே அவனை வழியனுப்ப வந்திருக்க..!! தன்னவள் மட்டும் வராமலிருப்பதை நினைத்தவனுக்கு மனதின் ஒரு ஓரம் வலிக்க தான் செய்தது...!! காலம் பதில் சொல்லும் என நினைத்தவன் வெளிநாடு புறப்பட்டான்....
*********
குளிர் காற்று அவள் மேனியில் ஊர்வலம் செல்ல தலையிலிருந்து கால் வரை இழுத்து போர்த்தி தன் தோழியின் அருகில் அமர்ந்தாள் அவள்.... கண்களை சுழலவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவளை தன் தோழியின் பேச்சில் ஒருகணம் நின்றது...
"ஏய் இனியா (இழை) உனக்கு ஒன்னு தெரியுமா நேத்து அவன் எனக்கு ப்ரொபோஸ் பண்ண வந்தா....
நான் இக்னோர் பண்ணிட்டு வந்துட்டேன்... இப்போ வருவான்னு நினைக்கிறேன்.." என கூறியவளை மேலிருந்து கீழாக பார்த்தாள்..
மிடுக்கான தோற்றம்... அழகானவள் தான் நவீன மங்கை... பார்த்ததும் அவள் பின்னால் செல்ல தோன்றும் பெண்ணழகி தான் இழையின் தோழி..
அவளைப் பார்த்து சிரித்தவள் அவளின் பேச்சை பாதி கேட்டும் கேட்காமல் எங்கோ வெறித்து பார்த்துக்கொண்டிருந்தவளை அவனின் நிழல் உருவம் தன்னிலைக்கு வர செய்தது...
அவனின் நிழலை பார்த்துக்கொண்திருந்தவள் அவன் அருகில் வரவும் என்னவென்று தெரியாமல் இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது... தன் இதயத்தில் கை வைத்து கொண்டே ...,"இனியா கூல் பேபி... அவன் உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணலை... அவன் இதோ இவகிட்ட ப்ரொபோஸ் பண்ண வாரன்.. நீ ஏன் பயப்படற... கூல் டி கூல்" என தனக்குத்தானே தைரியம் சொல்லி கொண்டவள் அவனின் நிழலை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தாள்..
தன் தோழியை தான் பார்க்க வந்திருக்கிறான் என நினைத்தவள் நாகரிகம் கருதி அங்கிருந்து நகர பார்க்க அவள் சுதாரிக்கும் முன்பே அவளின் கையை பிடித்திலுத்தவன் அவளின் இதழில் தன் இதழை பொறுத்திருந்தான்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro