அவன் 43
"என்ன டா இது கோவில் திருவிழான்னு கூட்டிட்டு வந்த. ஆனா இங்க ஒரு பிகரைக் கூட காணோம்..."எனக் கொஞ்சும் தமிழ் கேட்ட தன் நண்பனிடம் "டேய் இந்த டைம்ல எல்லாம் வர மாட்டாங்க டா. இப்போ வீட்டுல இருப்பாளுங்க நைட் ஆயிட்டா வருவாங்க பாரு.. அப்படி இருக்கும்..." எனக் கூறியவனை இடையிட்டான் சபரி
"அப்படியே எங்க ஊரு பொண்ணுங்களப் பாரு .. செத்துருவ.." என சபரிக் கூற அவனின் தலையில் அடித்த பார்த்தி
"டேய் கவி.. இப்போ எல்லாம் வீட்டுல வர சொந்தக்காரங்களுக்கு விருந்து போயிட்டு இருக்கும் இப்போ யாரும் வர மாட்டாங்க. நைட் விளக்கு மாவு எடுத்துட்டு வரும் போது நிறைய கூட்டமா இருக்கும் என்ற நண்பனிடம்
"என்னமோ சொல்றீங்க.. நானும் கேட்கற.. பட் ஐ ஸ்டீல் வைய்டிங் பார் தட் மூமெண்ட்..." என சொன்ன கவியின் அருகில் வந்த சபரி
"ஏன் மேன் உனக்கு ஒரு பொண்ணு போதும் தானே.. அதென்ன எல்லாப் பொண்ணுங்களையும் சைட் அடிக்கறது. வெரி பேட் மேன் நீ.." என்ற சபரியை இருவரும் சேர்ந்து முறைத்தனர்.
"என்ன டா இப்படி முறைச்சுட்டு நீக்கறீங்க..."
"இங்க பாரு சபரி.. இவன் அப்படிப்பட்டவன் இல்லை.. மும்பையில வளந்தவன் நம்ம ஊரு கல்சர், நோம்பு எப்படி இருக்கும்னு இவனுக்கு தெரியாது. இதெல்லாம் இவன் பாத்தது இல்லை. அதுக்காக தான் அப்படி சொன்னான். நீ ஏதும் மைன் பண்ணிக்க வேண்டாம்.." எனக் கூறிய பார்த்தி கவியை அழைத்து சென்றான்.
"என்ன சொல்லிட்டோம்னு இப்படி முறுக்கிட்டு போறான்..." என தன் தோளைக் குலுக்கிக் கொண்டவன் அவர்களின் பின்னாலே சென்றான்.
********
"பெரிய அத்தான்... மகேஷ் எங்க காணோம்.." என்றவாறே வந்து நின்றவளை கண் இமைக்காமல் பார்த்தான் கவின்.
"தெரிலயே குட்டி... இங்க தான் எங்காவது இருப்பான்.." என பார்த்தி கூற சிரித்தவாறே தலையை ஆட்டியவள் தன் பட்டு தாவணியை கையில் பிடித்தவாறே தன் தோழி பிரியாவுடன் மெல்ல நடந்தாள்.
"கார்ஜ்ஜியஸ்.. இந்த ஊருல இப்படி ஒரு பொண்ணா.."என வாய்விட்டே கேட்டு விட்டான் பார்த்தியின் நண்பன் கவின்.
"ஹாஹா.. என் அக்கா பொண்ணு. டாக்டர் படிக்கறா..." எனக் கூறியவன் அமைதியாகிவிட ஆனால் கவினோ அவளையே கண் இமைக்காமல் பார்த்தான். கவின் இலையினியை பார்க்க அருகிலிருந்த சபரியோ பிரியாவை வைத்தக் கண் மாறாமல் பார்த்துக் கொண்டிருப்பதை பூபதி பார்த்திப்பனும் கவனித்தான்.
******
"ஏன் கா.. நம்ம பழனி பொண்ணு மூத்தவன் பார்த்திக்கு சரியா இருப்பா தானே கா கேட்டு தான் பாக்கறது.." என்று கேட்ட தன் தங்கையிடம்
சிரித்த அன்னபூரணி "இப்போ தான் டாக்டர்கு சீட் கிடைச்சு இரண்டாவது வருஷம்போயி இருக்கா அதுக்குள்ள கல்யாணம் பண்ணி வைச்சா நல்லா இருக்காது. நம்ம பொண்ணு எங்க போயிடப் போகுது. பாத்துக்கலா..." என்ற தன் அக்காவின் சொல்லில் அமைதியானார் அன்னபூரணியின் தங்கை( நித்தியமதியோட அம்மா..) இவர்கள் பேசுவதை அந்த வழியாக சென்ற கவின் கேட்க அதை தெளிவு படுத்திக் கொள்ள விரும்பியவன் பார்த்தியிடம் கேட்டான்.
"பூபதி உனக்கு, உன் அக்கா பொண்ணு மேல லவ் இருக்கா.."எனப் பட்டென்று கேட்க பார்த்தி மட்டுமல்ல அருகிலிருந்த மகேஸும் அதிர்ச்சி அடைந்தான்.
சத்தமாக சிரித்தப் பார்த்தி... "யார் உன்கிட்ட இப்படி சொன்னது ஹாஹா.. அவ எனக்கு தங்கச்சி மாதிரி டா நான் அவளை அப்படியெல்லாம் நினைச்சது இல்லை..ஏன் தீடீர்னு இப்படி கேட்கற.." என சிரித்தவாறேக் கேட்டப் பார்த்தியிடம்
"நத்திங் டா.. சும்மா கேட்டேன்.." எனக் கூறியவனின் மனம் சிறக்கில்லாமல் பறந்தது. அதன் பின் இழையைப் பற்றி அடிக்கடி கேட்டாலும் சில விசாரிப்புகளுடன் மட்டுமே நிறுத்தி கொள்வான். அவனின் விசாரிப்பு சாதாரணமாக எடுத்துக்கொண்டது பார்த்தியின் தவறோ..
வருடாவருடம் கோவிலின் திருவிழாவிற்கு சரியாக வந்துவிடுவான் பார்த்தியின் நண்பன். முதல் வருடத்தில் இழையினி இருந்தாள் அடுத்தடுத்த இரண்டு வருடத்தில் காலேஜில் லீவ் கிடைக்கவில்லை என்று இழையினி வரவில்லை. அதை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதை போல் காட்டி கொண்டான் கவின்.
இரண்டு வருடங்கள் கடந்து நான்காம் வருடத்தில் இழையினி இருக்க மகேஸ்
தன் படிப்பை முடித்துவிட்டு போலீசில் தேர்ச்சிப் பெற்று ஆஸீஸ்டண்ட் இன்ஸ்பெக்டராக வேலை செய்து கொண்டிருந்த வேளை அது. இவர்களும் ஐடியில் கொடிக்கட்டி பறந்த வேளை எனக் கூட கூறலாம்.
*****
பத்து அடுக்குகொண்ட பெரிய கண்ணாடியிலான கம்பனியில் மூன்று பிரிவுகள் இருக்க அதில் பாதுகாப்பு பிரிவில் இருந்தனர் கவின் மற்றும் பார்த்தியும். சபரி அந்த கம்பெனியில் மற்றொரு பிரிவில் இருந்தான். மற்ற இருவரும் அடுத்தடுத்த ப்ரெஞ் என்பதால் பூபதி மற்றும் கவினை பற்றி அதிகம் அறியவில்லை. தீரனும் அதிகம் நைட் ஷிப்ட் வேலை செய்வதால் அவனிற்கும் அவர்களை பற்றி அறிய வாய்ப்பில்லை.
சுழற்றும் நாற்காலியில் அமர்ந்தவாறே
தன் நண்பர்களுடன் கதையலந்துக் கொண்டிருந்தான் பூபதி.. எப்போதும் நான்கு மணி இல்லையென்றால் ஐந்து மணி அளவில் டீ ப்ரேக் என்ற பெயரில் அனைவரும் சேர்ந்து மொக்கை போடும் நேரமும் கூட அதுவே தான்.சரியாக அந்த பத்து நிமிட இடைவெளியில் தான் அவன் அவளைப் பார்ப்பான். ஏதாவது பேசி கொண்டே இருப்பாள். இல்லையென்றால் அருகிலிருக்கும் அவனிடம் வம்பிழுக்க ஆரம்பித்து விடுவாள் அவள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில் அழகாக இருப்பாள்.
இது நாள் வரை அவள் மேக்கப் செய்து பார்த்தது இல்லை. மேக்கப் செய்தால் இன்னும் இன்னும் அழகாக இருப்பாள் என அடிக்கடி தோன்றும் பார்த்திக்கு. முதலில் அவளிடம் பேச இவனிற்கு சற்று பயம் அதற்கு பின் ஆரம்பித்து விட்டான். இவனின் லீலைகளை டெய்லி அவளை பார்ப்பது என்று இருந்தவன் ஒரு நாள் தன் காதலை கூறினான்.
அவள் ஒத்துக்கொள்ளவில்லை அடுத்தடுத்த நாட்கள் பிருந்தாவிடம் ஏதாவது ஒரு காரணத்தை வைத்து அவளிடம் பேச ஆரம்பித்தான் பார்த்தி. அவர்கள் வேலை செய்வது ஒரே இடத்தில் என்றாலும் இதுநாள் வரை பிருந்தாவிற்கும் சரி, தீரனிற்கு சரி பூபதி என்பவன் தன்னை காதலிக்க வற்புறுத்தும் ஒருவன் என்பது மட்டுமே அவர்களுக்கு தெரியும்.அதையும் மீறி பிருந்தாவிற்கு அவன் தங்களின் ஆஃபீஸ் என்று அறிந்து அவனைப் பற்றி அவன் அறியாமல் விசாரித்து வைத்து இருந்தாள்... வழக்கம் போல் டீ குடுத்து கொண்டிருந்த பிருந்தாவை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த பூபதியிடம் வந்தவன்
"என்னாச்சு.. பூபதி அவ சரின்னு சொல்லிட்டாளா..எத்தனை நாள்தான் சுத்தவா இதுக்கு ஒரு ஃபுள் ஸ்டாப் வைக்கக் கூடாதா..." என கொஞ்சும் தமிழில் கேட்டவனிடம்
"எங்க டா.. எது சொன்னாலும் பதில் இல்லை.. திரும்பி பார்த்து முறைச்சுட்டு நிக்கறா..என்ன பண்ண.. பாக்கலாம் எத்தனை நாளைக்கு தான் லவ்வை மறைக்க முடியும் கண்டிப்பா வெளிய வரும். அந்த நாளுக்கு நான் ரொம்ப வைட்டிங்...." என உணர்ச்சி பூர்வமாக பூபதி கூற
"அடப் போடா இப்படியே சொல்லிட்டு இரு அவ உன்னை விட்டுட்டு வேற ஒருத்தனை கட்டிக்கப் போறா..." என கவின் சொல்ல
"வாய்ப்பில்லை டா.. எனக்கு அவளை இரண்டு வருசமா தெரியும் அவ அப்படி பட்ட பொண்ணு இல்லை. அதே மாதிரி இரண்டு வருசமா பின்னாடியே சுத்தறேன் வேற பொண்ணா இருந்தா போலீஸ் வரைக்கு போயிருப்பா,..பட் இவ அப்படியெல்லாம் பண்ணல அப்போ இவளுக்கு என் மேல லவ் இருக்குன்னு தானே அர்த்தம். சோ அவ லவ்வை சொல்ற வரைக்கும் வெய்ட் பண்ண வேண்டியது தான்..." என்ற பூபதியின் தலையில் அடித்தவன்
"எல்லா பொண்ணுகளும் நேரில்ல அப்படி தான் டா இருபாங்க.. ஆனா போன்ல அப்படி இருக்க மாட்டாங்க.. நீ வேணும்னா அவ இன்ஸ்டாகிராம், எப்.பீ ல இருந்தா பாலோவ் பண்ணி பாறேன். அங்க இருந்து பேசு அவ பேசலாம்..." என கூறிய கவினை பார்த்தவன் அவன் கூறும் இந்த யோசனை சரியெனப் பட பிருந்தாவை முகப்புத்தகத்தில் பிரின்ட் ரெக்குவேஸ்ட் கொடுக்க அதை உடனே அக்ஸ்ப்ட் செய்தாள் பிருந்தா...
அவளின் அக்ஸ்ப்ட் இவனிற்கு எல்லையில்லா மகிழ்ச்சியை கொடுக்க அருகிலிருந்த தன் நண்பனை கட்டியணைத்து கொண்டான் பூபதி.
*********
அன்று மாலையே தன் நண்பனிடம் வந்தவன் "டேய் பூபதி அன்னைக்கு ஒரு ஆப் கிரீயேட் பண்ணோம் ஞாபகம் இருக்கா..." என ஆர்வமாக கேட்ட கவினிடம்
"என்ன ஆப் டா.. நம்ம சபரியை ஓட்ட ஒன்னு கிரீயேட் பண்ணி வைச்சோமே அதுவா சொல்ற..." எனக் கேட்டவனிடம்
"ஆமாம் பார்த்தி அது தான்..எனக்கு பெரிய ப்ரொஜெக்ட் வந்து இருக்கு.. சோ அந்த ப்ரொஜெக்ட்டை அந்த ஆப்ல பண்ணா கொஞ்சம் ஈஸியா இருக்கும்னு எனக்கு பீல் ஆகுது.. நீ என்ன சொல்ற... நம்ம அனுப்பற ஒவ்வொரு ப்ரொஜெக்ட்டும் அவங்க மணியில மில்லியன் டாலர்ஸ் தருவாங்க.. நம்ம எப்படி கொண்டு போறோமோ அப்படி இதை செய்யலாம்..." என சந்தோஷ மிகுதியில் கத்தியவனை கட்டியணைத்து கொண்டவன்..
"வாவ் சூப்பர் டா.. பட் அந்த ஆப் வைச்சு அப்படி என்ன பண்ண போற.. உன்னோட தாட் எனக்கு புரியல.. சபரி பிறந்தநாள் அப்போ நம்ம அவனை ஏமாத்த அவனோட செகண்ட் சிம் நம்பர்ல இருந்து அவனுக்கு கால் பண்ணி அவனை மண்டைய காய வைச்சோம். இதுல என்ன டா இருக்கு. என தன் சந்தேகத்தை கேட்ட பார்த்தியிடம்
"அது சிம்பிள் டா.. மச்சா.. எப்படி சொல்றதுனா...போர் எக்ஸாம்ப்ல்கு நம்ம கூட வேலை செய்யற அனிதா அண்ட் கவி, லீனா, இவங்க எல்லாரையும் முன்னாடி பிக் எடுத்து அனுப்பனும் அதாவது அவங்க சால் போடாம இருக்காங்க தானே அவங்க குனியும் போதோ இல்லை வேற ஏதாவது இல்லைன்னா அதுகூட வேண்டாம் அவங்களோட போட்டோ போதும் அதை நம்ம நீயுடா மாத்திடலாம். அது மாதிரி சைட்டை உன்னால ரெடி பண்ண முடியும். சோ நான் போட்டோ அண்ட் பொண்ணுங்களோட பாத்ரூம் சீன் எல்லாம் விடியோ எடுத்து அவங்க கிட்ட கொடுத்தா போதும் டா.. தென் இதை நம்ம மட்டும் பண்ண வேண்டாம் வேலையில்லாம இருக்கற பசங்களுக்கும் கொடுக்கலாம் கண்டிப்பா நல்ல காசு பாக்கலாம். இப்படி அனுப்பி விட்டுட்டே இருந்தா நமக்கு மில்லியன் டாலர் என்ன பில்லியன் டாலர்ஸ் கூட வாங்கலாம்..." என சந்தோஷத்தின் மிகுதியில் கத்தியவனை அருவெறுப்புடன் பார்த்தான் பூபதி..
"வாட்ட்... என்ன டா சொல்ற... லூசு பிடிச்சிருக்கா உனக்கு.. காசுக்காக அடுத்தவன் பெட் ரூமுக்குல்ல எட்டி பாக்க முடியுமா.. என்ன நான்சென்ஸ் இது.. இதோ பாரு.. இது மாதிரி ஆளுங்ககிட்ட நீ பேசக் கூட வேண்டாம். இன்னும் ஒரு வருஷம் போனா நமக்கு இங்கயே மாசம் ஒரு லட்சம் வரைக்கும் வாங்கலாம். இப்படி பண்ணி தான் பணம் சம்பாதிக்க வேணுமா.. வேண்டாம் விட்ரு டா.." என அவனிடம் கோபம் கலந்த குரலில் எடுத்து சொல்ல
"சரி பூபதி.. விடு உனக்கு இது தப்பா தெரியுது அப்படினா சரியா தான் இருக்கும். நான் அவங்களை ஸ்கிப் பண்ணிடறேன்.. தென் நான் மும்பையில வளந்ததுனால என்னவோ நம்ம பொண்ணங்க கல்சர் தெரியல டா..தப்பு பண்ண துணிஞ்சு இருப்பேன் சாரி டா..." என வாய் கூறினாலும் மனதில் வேறு திட்டம் தீட்டத் தயாராக நின்றான். "என்ன இவன் இப்படி சொல்றான். நம்மக்கூட இருந்தாலும் இவன் நம்மளை மாதிரி இருக்க மாட்டேன்னு சொல்றான் .. என்னை அவனோட கண்ட்ரோல்கு வைக்க பாக்கறா.. ஏதாவது பண்ணனும். இவனை தவற வேற யாரு என்ன பண்ணாலும் ஈஸியா மாட்டிக்குவோம். போகட்டும் கொஞ்ச நாள் போகட்டும்.." என யோசித்தவன் அந்த ஆப் பற்றிய பேச்சை விட்டான்.
********
தன் துணிகளை அனைத்தும் துவைத்து முடித்தவன் உணவருந்திவிட்டு கிச்சனைச் சுத்தம் செய்து விட்டுப் படுக்கையில் விழுந்தவனின் தொலைபேசி தன் இருப்பிடத்தை காட்டிட அதை எடுத்தவனின் முகத்தில் ஆயிரம் மகிழ்ச்சி ஆம் முகப்புத்தகத்தில் அவனை நண்பனாக ஏற்றுக் கொண்டாள் அல்லவா அது தான் இந்த மகிழ்ச்சிக்கான காரணம்.
உடனே அவளிற்கு குறுஞ்செய்தி அனுப்ப ஆரம்பித்து விட்டான் பூபதிபார்த்திபன்...
"ஹாய்..பிருந்தா. நீங்க என்னை பிரின்டா அக்ஸ்ப்ட் பண்ணுவீங்கன்னு நினைக்கவே இல்லங்க. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..." என பூபதி அனுப்பிய குறுஞ்செய்தியை பார்த்தும் அவள் பதில் அனுப்பவில்லை.
"என்னங்க நீங்க நேருல தான் பேச மாட்றீங்க.போன்ல கூடவா பேச மாட்டீங்க..." என இவன் சலித்துக் கொண்டாலும் அவளிடம் பதில் தான் இல்லை
"அடப் போங்க.. நீங்க ரொம்ப பண்றீங்க.. சரி இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க. என்னை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா..." என இம்முறை கேட்டவனின் பொறுமை பறந்து தான் போனது.
"என்ன இவ நம்ம மெசேஜ் பார்த்து கூட ரீஃபிளே பண்ணலை என நினைத்தவன் ஹாய்ய்.. என நான்கு , ஐந்துமுறை அனுப்பிய பின் ஒரு ஆடியோ வர அதை கேட்டவனிற்கு சந்தோஷம் கலந்த கோபம் வந்தது (29 அப்டேட்ல இருக்குங்க...)
"இவளை என்ன தான் பண்றது.." என நினைத்தவன் ஒரு முடிவெடுத்தவன் அடுத்த நாளே அவளின் முன் அவள் வீட்டில் நிற்க அதனை எதிர்பாராத அவளோ சட்டென்று தடுமாறி பின் சமாளித்தவளாய் "இப்போ..இ..இங்க .. நீங்க..." என திக்கியவளை பொருட்படுத்தாமல்
"உன் அண்ணனும், உன் அப்பாவும் வெளிய போயிருங்க, அவங்க எப்போ வந்தாலும் எனக்கு நோ ப்ரோப்ளேம்..." எனக் கூறியவன் அவளை தள்ளிவிட்டு உள்ளே நுழைய
"இப்போ எதுக்கு உள்ள வந்தீங்க. கொஞ்சம் கூட..." என ஆரம்பித்தவளின் பேச்சு அவனின் செய்கையில் நின்றிருந்தது. அவள் உள்ளே திரும்பிய அடுத்த நிமிடம் அவளின் சங்கு கழுத்தில் மூன்று முடிச்சுட்டு அவளை தன்னவளாக மாற்றி இருந்தான் பூபதி.
அவனை அடிக்க கை ஓங்கி நின்றவளை முறைத்தவன் அவன் கையில் இருந்த மொபைலில் அவளின் வாய்ஸை ஓடவிட்டு "என்ன டி நினைச்சுட்டு இருக்க. அதான் லவ் பண்றல்ல சொல்லி தொலைய வேண்டியது தானே. ஓவரா சீன் போடற ஜாதி, மதம், பேதம்னு சொல்லிட்டு ரொம்ப பண்ற பாத்துக்கோ. நீ எப்போ இந்த ரீசன் சொன்னயோ அப்பவே முடிவு பண்ணிட்டேன் டி. இந்த ஜென்மத்தில நீ தான், நீ மட்டும் தான் எல்லாமேன்னு..." என கூறியவனை முறைத்தவள்
"இந்த மச்சி எருமையை.. ச்சே நேத்து எடுத்து அனுப்பிட்டு நல்ல புள்ள மாதிரி அமைதியா இருந்துட்டான் இருக்கு அவனுக்கு..." என அவனை மனதில் திட்டிக் கொண்டவளிற்கு தெரியவில்லை அவனின் இந்த செயலில் கோபம் வரவில்லை, அழுகை வரவில்லை,
ஏன் கேள்விக் கூட கேட்க தோன்றவில்லை. என்பது இப்போது அவளின் மனதில் இருப்பது என்னவென்று கணிக்க முடியாத மனநிலையில் இருந்தவள் முயன்று வரவழைத்தக் கோபத்தை அவனிடம் காட்டினாள்.
"ஆமா எனக்கு லவ்வை விட ஜாதி தான் முக்கியம் போதுமா. இந்த பத்து ரூபா மஞ்சக் கயிறை கட்டிடா நான் உனக்கு பொண்டாட்டி ஆயிடுவேனா. இதை கழட்டி எறிய எனக்கு ஒரு செகண்ட் போதும்.." என கூறியது மட்டுமல்லாமல் அதனை கழட்டப் போனவளை விடாப்பிடியாக தன் புறம் இழுத்தவன் அவளின் இதழ்களை வன்மையாக சிறை செய்தான்.
"தாலி கட்டிடா பொண்டாட்டி இல்லையா..?? சரி அப்போ உண்மையாவே பொண்டாட்டி உரிமை எடுத்துகிறேன்.." எனக் கூறியவன் அவளின் இதழை மீண்டும் மீண்டும் சிறை செய்ய தடுமாறிப் போனாள் பெண்ணவள்.
இதழ் வழி அவன் காட்டிய ஆவேசத்தில் வேட்கை மட்டுமே நிறைந்திருக்க.. மனம் கொண்டவனின் இதழ்சிறை அவளுக்கு கசந்தாலும்.. வெறுக்கத் தோன்றவில்லை.. அந்த வன்மையிலும் அவனிடம் காதல் தேடித் தேடித் தோற்றுத் தான் போனாள் பிருந்தா.
அவளின் கண்களில் கண்டக் காதல் அவனை அடுத்த நிலைக்கு தள்ள அவளை முழுவதும் தன்னுடமை ஆக்கிக் கொண்டான் பார்த்தி.
"உனக்காக எப்பவும் வெய்ட் பண்ற இடத்துல நான் இருப்பேன். வந்தா என் பொண்டாட்டியா வா. அதே மாதிரி இப்போ பண்ணத்துக்கு மன்னிப்பு கேட்பேன்னு மட்டும் நினைச்சுக்காத நீ என் பொண்டாட்டி. எனக்கு மட்டும் தான் உன் மேல உரிமை இருக்கு. ஜாதி, மதம் அப்படி இப்படின்னு இனிமே உன்னால சொல்ல முடியாது. அப்படி பாக்கிறவனும் நான் இல்லை. அதன் என்னையே உன்கிட்ட கொடுத்தேன்.., என கூறியவனின் குரலில் அத்தனை உறுதி..
அவளிடம் அப்படி நடந்து கொண்டது சிறு உறுத்தல் இருந்தாலும் அவள் தன்னை ஏற்று கொள்வாள் என்பதில் உறுதியாக இருந்தான் பூபதி பார்த்திபன்.. ஆனால் அன்றோடு அவளை பார்ப்பது கடைசி என நினைத்து இருக்க மாட்டான் அவன்.
*******
இரவு தன்னவளின் நினைவில் படுத்தவனிற்கு தொலைபேசியின் ஓசைக் கேட்டு அதை எடுக்க "அப்பா" என்று இருந்தது. அழைப்பை ஏற்றவன் பவ்வியமாக "அப்பா..." என்றான் மறுமுனையில் என்ன கூறப்பட்டதோ
"அப்பா.. இப்பவே குட்டிக்கு என்னப்பா கல்யாணம்..." என கேட்க
.......
"அப்பா. இன்னுமா ஜாதகம். ஐதீகம்னு இருக்கீங்க.. என்ன ப்பா.. நீங்களும் இப்படி பேசிட்டு இருக்கீங்க... சரிப்பா நான் உடனே கிளம்பி வரேன்..." என கூறியவன் தொலைபேசியை வைத்துவிட்டு தன் அறைக்கு பக்கத்து அறையிலிருக்கும் கவினின் அறையை தட்டினான்.
தூக்கத்தில் இருப்பதை போல் கதவை திறந்தவனின் முகத்தை வைத்தே கண்டுப் பிடித்து விடலாம் அவன் நடிக்கிறான் என்று. இதை கவனிக்காத பார்த்தியோ.. "டேய்.. கவி.. ஒரு வாரத்தில இழையினிக்கு கல்யாணம் வைக்கணும்னு சொல்றாங்க டா.. என்னன்னு தெரியல.. அப்பா வேற ரொம்ப பதட்டமா பேசறாரு.. நான் அவங்க இருந்தா தான் குட்டி கல்யாணத்ததை நிறுத்த முடியும். சோ நான் இப்போ கிளம்பினா காலையில போக சரியாக இருக்கும்னு நினைக்கிறேன். சபரி நல்லா தூங்கிட்டான் அவங்கிட்ட சொல்லிடு.." என அவரசம் போல் கூற அவனின் வார்த்தைகளை உள் வாங்கவே நிமிடங்கள் ஆனது கவினிற்கு...
தன் அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் "சின்ன பொண்ணு டா இப்போ தானே இருபத்தி இரண்டு வயசு ஆகுது..அதுக்குள்ள என்ன..." எனக் கூறியவனிடம்
"அதான் டா நானும் சொல்றேன்... பாக்கலாம்.. ஊருக்கு போனதும் நிறுத்தப் பார்க்கறேன்..."என எரிச்சலை அடக்கியவாறு பார்த்திக் கூற
"சரி டா எப்படியாவது கல்யாணத்தை நிறுத்தப் பாரு.. பிரச்சினை அப்படின்னா சொல்லு டா.. நானும் வரேன்..." என அக்கறையோடு கூறியவனிடம் சிரிப்புடன் சரியென்று கிளம்பினான் பார்த்திபன்..
******
காலையில் வீடு வந்து சேர்ந்தவன் அங்கு மகேஷ் இருப்பதைக் கண்டு சற்றே அதிர்ச்சி தான் அடைந்தான்
"டேய்.. நீ எப்போ டா இங்க வந்த.." எனக் கேட்டவனை மேலிருந்து கீழாகப் பார்த்தவன்
"டேய்.. நான் இங்கயே தான் டா இருக்கேன்.."என கூற
"டேய் உன் போஸ்ட்டிங் வேற ஊரு தானே இங்க எப்படி வந்தன்னு கேட்டேன்.."என ஆராய்ச்சி பார்வை பார்க்க அவனின் பார்வையை ஒரு பொருட்டாக மதிக்காதவன் "அடுத்த வாரம் யூ. எஸ். போகணும். சோ இந்த வாரம் இங்க இருக்கலாம்னு வந்தேன்..." என்றான் பட்டும்ப்பாடாமல்
"என்ன பஞ்சாயத்து போயிட்டு இருக்கு என கிசுகிசுத்தக் குரலில் கேட்டான் பார்த்தி..
"குந்தாணிக்கு கல்யாணம்,.அதை பத்தித் தான் பேசிட்டு இருக்காங்க... நீ தான் மாப்பிள்ளை பிக்ஸ் பண்ணிட்டாங்க..." என்றான் அதேக் கிசுகிசுத்தக் குரலில்.
"ஐயோ..." என வாய்விட்டு கத்தியவனின் வாயில் கையை வைத்து அடைத்தவன் அருகிலிருந்த அறைக்குள் கூட்டி சென்றான்.
"டேய்... டேய்.. அண்ணா... அண்ணா.. நீ தான் எனக்கு ஹெல்ப் பண்ணணும் ப்ளீஸ் டா... இரண்டு நாள் எதுவும் பேசாமல் அமைதியா இரு மூணாவது நாள் எனக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்லு போதும்..." என்றவனைப் புரியாமல் பார்த்தான்.
"அண்ணா.. டேய்... ரொம்ப வருசமா லவ் பன்றேன் டா. என் லவ்க்கு ஹெல்ப் பண்ணு டா.. கல்யாணம் முடிஞ்சதும் உன்னோட கேள்வி எல்லாத்துக்கும் பதில் சொல்ற.." என்ற தம்பியை புன்னகையுடன் பார்த்தவன் சரியென தலையை ஆட்டிட ஆனந்தமாய் கட்டியணைத்துக் கொண்டான் மகேஷ்
அன்று இரவே கவினிற்கு அழைத்தவன் தன் தம்பியின் மாயலீலைகளை சொல்லி சிரிக்க பதிலிற்கு அவனிடம் எந்த பதிலும் இல்லை என கவனிக்காதவன் தன் தம்பியின் புராணத்தை பாட ஒரு நிலைக்கு மேல் அதை கேட்காதவன்
"பூபதி... பூபதி... அந்தப் பொண்ணுக் கிட்டப் பேசனையா.." எனக் கேட்க
"யாரு டா.." என புரியாதவன் போல் பார்த்தி கேட்க
சிரித்தவன் "ஹாஹா.. பூபதி.. மேட்டரை முடிச்சதும் அந்த பொண்ணை மறந்துட்டப் போல..." என்றவனின் குரல் ஏகத்திற்கும் மாறி இருந்தது. அதையெல்லாம் கவனிக்காத பார்த்தியோ
"பிருந்தா.. பிருந்தாவை எப்படி மறப்பேன் டா...ஐயோ. என கூறி தலையில் அடித்து கொண்டவன் நினைவு வந்தவனாய் "டேய் மறந்துட்டேன் அவளை என்னைப் பார்க்க வர சொல்லி இருந்தேன். மறந்தே போயிட்டேன்... ஐயோ என்னை அவ தப்பா எடுத்து இருப்பா.. நான் பண்ண காரியத்துக்கு வேற ஏதாவது தப்பா முடிவு எடுத்து இருந்தா என்ன பண்றது..." என புலம்பியவனிற்கு இப்போது தான் உரைத்தது "இவனுக்கு எப்படி தெரிஞ்சது நான் யார்கிட்டையும் இதை பத்தி சொல்லலயே.." என நினைத்தவனாய் "கவின் முதல்ல என்ன சொன்ன.."என அழுத்தமாய் கேட்ட பார்த்தியிடம்
"மேட்டரை முடிச்சதும் கழட்டி விட்டுடீயான்னு கேட்டேன்..." என ஏளன நிறைந்த குரலில் கேட்க
"எங்க இரண்டு பேருக்கும்.. நடந்த விஷயம்.. உனக்கு.. எப்படி தெரியும்.." பதட்டத்துடன் பார்த்தி கேட்க..
"கூல் பார்த்தி.. எதுக்கு இப்படி பதட்டப் படற.. என்னை தவிர.. வேற யாரும் பாக்கலை.. ஹிம்ம்.. நல்லா தான் இருக்கு.. அடுத்தவன் பெட் ரூம்மை எட்டி பாக்கல டா பார்த்தி. உன் பெட் ரூம்மை தான் எட்டிப் பார்த்தேன். எப்படின்னு யோசிக்கிறாயா உன் போன் தான் பூபதி. உன் போன் இருக்கற கேமராவை என் போன்ல இருந்து ஆன் பண்ணேன்.. அது எப்படின்னு உனக்கு சொல்லணும்னு அவசியம் இல்லைன்னு நினைக்கிறேன். நீ காலையில என்னை விட்டுட்டு போகும் போதே உன் கேமராவை என் போன்ல இருந்து ஆன் பண்ணிட்டேன்.. பாவம் நீ சார்ட் கழட்டி போடும் போது போன் எங்க இருக்கு அது எந்த இடத்தில இருக்குன்னு கூடவா பாக்க மாட்டேன்.. அப்படியே அச்சு பிசங்காம அழகா விடியோ வந்து இருக்கு.. லைவ்வா பார்த்தேன் பாக்கறையா..." எனக் கேட்டவனை இப்பவும் நம்புவதா வேண்டாமா என்று இருந்தது பார்த்திக்கு..
"டேய்.. கவின் ரொம்ப விளையாடத.. ப்ளீஸ்.. ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் டாக்ல்ஸ்.." என நம்பாமல் கூறிய பார்த்தியிடம்
"ஏய் பார்த்தி நம்பு... எங்கிட்ட விடியோ இருக்கு பாரு..." என்றவன் அந்த வீடியோவை அனுப்பிவிட்டு
"இந்த வீடியோவை வைச்சு நான் வேற பிளேன் பண்ணலாம்னு நினைச்சேன்.. ஆனா இப்போ அந்த வேலையை விட எனக்கு இழையினி தான் முக்கியம். டூ பீ பிரேங் எனக்கு இழையினி வேணும். நான் சொல்றதை நீ செய்யலைனா கண்டிப்பா இது உன் ஆளு அதான் அந்த பிருந்தாக்குபோகும். அவ உடனே தற்கொலை தான் பண்ணிப்பா.. நீ ஜெயிலுக்கு போவ.. நான் சொல்றதை நீ செஞ்சா கண்டிப்பா அம்மா மேல சத்தியமா இந்த வீடியோவை டெலிட் பண்ணிடுவேன்..." என நம்பிக்கையூட்டும் வகையில் சொல்ல செய்வதறியாது நின்றவனிடம் மீண்டும் பேசினான் கவின்
"இங்க பாரு பார்த்தி நீ கிரீயேட் பண்ண ஆஃப்ல இருந்து உன் தம்பிக்கு ஒரு ஓடிபி அனுப்பற அதை அவனுக்கு தெரியாம எங்கிட்ட சொல்லு போதும்.." எனக் கூற
"கவின்.. நீ ஏன் இப்படி பண்ற.. நல்லா தானே டா இருந்த. கவின் நீ என் பிரன்ட் டா.. நீ ஏன் டா.. இப்படி பண்ற ப்ளீஸ் டா இதெல்லாம் வேண்டாம் டா.. இழையினியும்,என் தம்பியும் காதலிக்கிறாங்க டா.. அவங்களை விட்ரு டா ப்ளீஸ் டா..."
"சரி அவங்களை விடறேன் ஆனா உன் ஆளுக்கு இந்த வீடியோ அனுப்பறேன்..
எனக்கே ஆள் இல்லை உனக்கு எதுக்கு அவ..." என வன்மத்துடன் கூறியவனை
எதுவும் செய்ய முடியாமல் தவித்தான் பார்த்திபன்.
"என்ன பதிலையே காணோம்.. செய்வீயா மாட்டாயா..." என மீண்டும் அழுத்தி கேட்க
"சரி.. பண்றேன்..." என கூறிய பார்த்தியிடம் "ஹிம்ம்.. குட்.." இப்போ நம்பர் அனுப்பிட்டேன் எப்படியாவது அந்த ஓடிபி நம்பரை அனுப்பி வை.." என கூறியவன் அழைப்பை துண்டித்தான்.
"ஐயோ.. கடவுளே இப்படி இருக்கொல்லி பாம்பா என்னை நிக்க வைச்சுட்டீயே.. இப்போ நான் என்ன பண்ணுவேன்.. என் பிருந்தாவுக்கா பாப்பேனா.. இல்லை என குட்டிமா வாழ்க்கையை பார்ப்பேனா.. ஒரு பொண்ணோட மானம் முக்கியமா.. இல்லை ஒரு பொண்ணோட வாழ்க்கை முக்கியமா..." என செய்வது அறியாது முழித்தவன் தன் தம்பியின் அறையை நோக்கி நடந்தான்
நன்றாக உறங்கி கொண்டிருந்த தன் தம்பியின் தொலைபேசியை கையில் எடுத்தவன் ஆன் செய்ய அதில் அழகாக இரண்டு பற்களைக் காட்டி சிரித்து கொண்டிருந்தாள் இரண்டு வயது இழையினி. தன் தம்பியை இமைக்காமல் பார்த்தவன்
"உன்மேல நம்பிக்கை இருக்கு டா.. நீ இழையினியை நல்லா பாத்துக்குவே.." என மனதில் நினைத்தவன் தன் தம்பியின் தொலைபேசியை எடுத்து அதில் வந்த ஓ.டி.பி நம்பரை அவனிற்கு அனுப்பிவிட்டு இந்த குறுஞ்செய்தியை அழித்து விட்டான்.
அதன் பிறகு இழையிடம் மகேஷின் நம்பரில் இருந்து பேசியது கவின் தான் என்ன பேசினான். எது கூறினான் என்று பார்த்திக்கு தெரியாது. ஆனால் கல்யாணத்திற்கு அவள் ஒப்புக்கொள்ளவில்லை மகேஸை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என கூறியவளை மிரட்டி உருட்டி ஒருவழியாக கல்யாணம் செய்து வைத்து விட்டார் இழையினியின் தாய்..
இழையினிற்கும், மகேஸிற்கும் கல்யாணம் முடிந்த பிறகு தான் மூச்சே வந்தது பார்த்திக்கு அதுவரை உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தான் பார்த்தி..
இழையின் கல்யாணம் நடக்க போவதில்லை.. என கற்பனை கோட்டை கட்டிய கவினிற்கு இது அதீத ஏமாற்றத்தைக் கொடுக்க.. அந்த ஏமாற்றம் கோபமாக மாற அவை அனைத்தும் இரண்டு நாட்களாக தன்னை கண்டுகொள்ளாமல் இருக்கும் பார்த்தியின் மேல் பாய்ந்தது. அடுத்த நிமிடமே விடாமல் கால் செய்து தொல்லை செய்தவன் பார்த்தி அழைப்பை ஏற்றதும்
"எப்படி... டா.. எப்படி.. உன் தம்பியை அந்தளவுக்கு கேவலமா அனுப்பி வைச்சும்.. எப்படி அவ ஒத்துக்கிட்டா.. எனக்கு அவ வேணும்.. எனக்கு அவ வேணும் டா... இப்படி நடக்கும்னு தெரிஞ்சு இருந்தா நானே வந்திருப்பேனே..." என புலம்பியவன் அடுத்த நிமிடமே
"கல்யாணம் ஆனா என்ன.. எனக்கு அவ வெர்ஜீன் இல்லைன்னாலும் எனக்கு பிரச்சினை இல்லை. அவளை நான் அடஞ்சே தீருவேன்... என கூறியவனை நினைத்தாலே அருவெறுப்பாக இருந்தது பார்த்திக்கு
"ஓகே பைன்.. எனக்கு நீ எதுவும் பண்ணலை. அதுக்காக நீ இதை செஞ்சு தான் ஆகணும் அது வரைக்கு இந்த வீடியோ எங்கிட்ட தான் இருக்கும்... சோ நீ நான் சொல்ற வேலையை செஞ்சு தான் ஆகணும் தென் என்னோட போனை அங்க இருந்தே ஹேக் பண்ணணும்னு ஏதாவது சில்லி தனமா யோசிக்காத ஏன்னா... எங்கிட்ட நிறையா விடியோ இருக்கு.. உன் ஒரு விடியோவை வெச்சு நிறையா விடியோ உருவாக்கிட்டேன். பிருந்தா ஒருத்தன் கிட்ட.. நீ ஒருத்தி கூட இருக்கற மாதிரி..சோ ஹேக் பண்ற அளவுக்கு இறங்க மாட்டேன்னு நினைக்கிறேன்..." எனக் கூறியவன் தன் அழைப்பை துண்டித்தான்.
பார்த்திக்கு தான் உலகமே நின்றது போல் ஒரு பிரம்மை தோன்றியது.. மூன்று வருட நட்பல்லவ்வா இவனின் நட்பு.. அத்தனை நம்பிக்கை வைத்து இருந்தான். அனைத்தையும் ஒரே ஒரு நொடியில் கண்ணாடி உடைப்பது போல் உடைத்து விட்டானே அவன். கேவலம் பணத்திற்காகவா இப்படி செய்கிறான். இழையினி வரவில்லை என்றாலும் ஏதாவதொரு வகையில் நம்மை தொல்லை செய்து இருப்பது உறுதி..என நினைத்தான் எங்கிட்ட இருக்கற நட்பை பாராட்டி அவன் வரலையா என்னோட இந்த அறிவை வைச்சு தான் எங்கிட்ட வந்தானா.. அப்போ நான் ஒரு பிரன்ட்ஸ்கே லாயக்கு இல்லாதவனா.. அப்போ என்னோட நட்பு இங்க தோத்து போயிருச்சா.. நான் தோத்து போயிட்டேனா..." என ஏதோதோ நினைத்தவன் அடுத்த நாளே சென்னை சென்றான்.ஆனால் அவன் அங்கில்லை. மும்பை சென்று விட்டான்.."
என சபரி கூற சபரியிடம் தனக்கு நடந்த அனைத்தையும் கூற முதலில் கோபப்பட்டு கத்தினாலும் பார்த்தியின் நிலைக் கண்டு வருந்தியவன் அவனிற்கு உறுதுணையாக இன்றுவரை நிற்கிறான். இரண்டு நாட்கள் சென்னையில் இருந்தவன் பிருந்தாவின் வீட்டிற்கு செல்ல வீடு பூட்டி இருக்க பக்கத்தில் விசாரிக்க அவளின் அப்பாவிற்கு வேறு இடத்தில் வேலை மாற்றம் செய்ததால் குடும்பத்துடன் சென்று விட்டதாகக் கூறிவிட ஒரு வாரத்திற்கு மேல் தாக்கு பிடிக்காதவன் மனமில்லாமல் வேலையை விட்டு நின்றான்.
**********
இப்பவரைக்கும் அந்த வீடியோவை வைச்சு என்னை ப்ளாக்மெயில் பண்ணிட்டு இருந்தவன் அடுத்தடுத்து இழையினி, பிரியா. எல்லார் போட்டாவையும் வெளியே விட்ருவேன்னு சொல்லி என்னை இப்பவரைக்கும் அவனோட கட்டுப்பாட்டுக்குள்ள வைச்சு இருக்கான்.
இப்ப கூட இதோ என் கையில இருக்கே இது என்ன தெரியுமா. நான் பண்றது எல்லாம் அவன் கேட்கற ஒரு ரெக்கார்ட். இதை கொஞ்ச நாளைக்கு ஹேக் பண்ணி ஒர்க் ஆகாமல் பண்ணிருக்கேன். இது தெரிஞ்சா உடனே என்னை அவன் ஏதாவது பண்ணிடுவான்..
அதனால என்ன. அவனுக்கு இருக்கு. கண்டிப்பா என் கையால தான் அவனுக்கு சாவு."
"அவன் இப்போ முன்ன மாதிரி இல்லை.. என்னை வைச்சே நிறைய நிறைய ஆப்ப் கிரீயேட் பண்ணிட்டா.. சைட் கிரீயேட் பண்ணி இருக்கான். இப்போ பெரிய பிஸினஸ் மேன் ஒன் ஆப் தான் மில்லியன்ஸ்ல ஒருத்தன். இப்போ அவனை அசைக்க கூட முடியாது. என் வாழ்க்கை இப்படியே போயிடுமோன்னு பயமா இருக்கு. அதை விட. என் குட்டிமா வாழ்க்கையை நினைச்சா ரொம்ப பயமா இருக்கு. மூணு வருஷம் ஆனாலும் அவனோட எண்ணம் இன்னும் மாறவே இல்லை.. கண்டிப்பா இழையினி தேடி அவன் வருவான்.. என் பிருந்தாவை நீ நல்லா பாத்துப்பியா.. நீ என் பிருந்தா கூட இருப்பல்ல..." என கேட்டவனிடம்
"இதோ பாரு பார்த்தி.. உன்னையும் பிருந்தாவையும் சேர்த்தி வைக்கறது என் பொறுப்பு.. அதே மாதிரி அந்த கவினையும் எங்கிட்ட விட்ரு நான் பாத்துக்கிற.." என கூறிய தீரனை பார்த்து சிரித்த பூபதிபார்த்திபனின் முதுகில் சரியாக பாய்ந்தது துப்பாக்கி சூடு அடுத்த குண்டு அவனின் மேல் பாய்வதற்குள் அதனை தன் தோளில் வாங்கி இருந்தான் மகேஷ் பூபதி..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro