அவன் 41
கொஞ்சிடும் காட்டு குருவிகளின்
சத்தமும்..
வண்ண மயில்களின் திருட்டு தனமும்
அருவியாய் நீரை கொட்டிடும் பம்பு செட்டுகளும்....
அதில் குட்டி மீன்களாய் துள்ளி விளையாடும் குழந்தைகளும்..
வாய்க்கால் போல் ஓடும் வயல்வரப்புகளும்...
காற்றின் போக்கில் தலையை ஆட்டும் பச்சைப் பசையேன நெல்வயல்களின்
வயல்வெளிகளை காண காண சலிக்கவில்லை அவனிற்கு அதன் அழகை ரசித்தவாறே தூரத்தில் இருந்தவனை பார்த்தான்.
தூரத்தில் வயல் காட்டில் பாத்திக் கட்டிக் கொண்டிருந்த பார்த்தியை பார்த்தவன் "இவனை வைச்சு அவனை கண்டு பிடிக்கலாம்னு பார்த்தா இவன் மூலம் ஒன்னும் தெரியல இவன் பிரன்ட் ஒருத்தன் வரான். அவனை பிடிச்சாலும் அசைஞ்சு கொடுத்து வர மாட்டேன்னு சொல்றான். பேசமா பூவிழியை வைச்சு ஏதாவது பண்ணலாம்னு நினைச்சா என் மனசு கேட்க மாட்டேன்னு சொல்லுது..." என புலம்பியவாறே தூரத்தில் வேலை செய்து கொண்டிருந்தப் பார்த்தியைப் பார்க்க அவனோ அங்கில்லாமல் இருந்தான்.
"ஐயோ எங்க போனான்னு தெரியலயே இவனையே பாலோவ் பண்ணிட்டு இருந்தா என் பொழப்பு நாறி போயிடும் இன்னைக்கு இவனுக்கு ஏதாவது பியுள் ஸ்டாப் வைச்சு அடுத்தது கண்டு பிடிச்சு அவனை ஏதாவது பண்ணணும்..." என நினைத்தவன் அவனை தேடி சென்றான்.
************
ஆரம்பத்தில் தீரனைப் பார்த்த நாள் முதல் அவனின் மேல் காதல் கொண்ட பாவையின் மனம் அவனின் அன்றைய கேவலமானப் பேச்சை விசாரிப்புகளை முழுவதும் மறைந்து இருந்தது. ஆனால் அதை நினைவூட்டும் சமயமும் இன்றே வரும் என அவள் நினைத்து இருக்க மாட்டாள்.
சோபாவில் அமர்ந்திருந்த மகேஷின் அருகில் அமர்ந்த பூவிழியை முறைத்தவாறே அமர்ந்திருந்தாள் இழையினி.
"மாமா...என்ன மாமா இவ்ளோப் புகைய இருக்கு. ஏதோ கருகன வாசம் வேற வருது உங்களுக்கு ஏதாவது தோணுதா..." எனக் கேட்டவளைப் பார்த்தவன்
"எனக்கு அப்படி ஒன்னும் தோணலையே .." எனக் கூறி மொபைலை பார்த்தவனின் தோளில் இடித்தவள் தன் அக்காவை கண் காட்டிட அவளை பார்த்தவனின் இதழ்கள் மெல்ல விரிய கண்கள் இரண்டும் சிரித்தது.
"யோவ் மாமா.. இப்ப வரைக்கும் என்னமோ பெரிய வேலை பார்க்கற மாதிரி சீன் போட்ட... இப்போ அவளை பார்த்து சிரிக்கற இதெல்லாம் ஓவரா இல்ல.." எனக் கேட்டவளிடம் பதில் கூறாமல் இருக்க அவனை பார்த்தவள்
"ஆமா நீ எப்போ வந்த மாமா..." என அதிர்ச்சியாய் கேட்டவளின் தலையில் குட்டியவன்
"ச்சே ரொம்ப சீக்கிரமா கேட்டுட்ட சின்ன பொண்டாட்டி, ரொம்ப சமத்து நீ.. நான் நேத்து நைட்டே வந்துட்டேன். நீ தான் நல்லா தூங்கிட்டு இருந்த அதான் உன் அக்கா ரூம்க்கு போயிட்டேன். நீ முழிச்சுட்டு இருந்து தான் நான் உன்கிட்ட பேசி இருப்பேன்.." என அவனின் வாய் கூறினாலும் அவனின் கவனம் முழுவதும் தொலைபேசியில் மட்டுமே இருந்தது.
"அடேங்கப்பா..உன் பொண்டாட்டிக் கிட்டயே நல்ல பேச முடிலை இதுல எங்கிட்ட நீ பேச போற.. போ மாமா..." என அவனிடம் வம்பிழுக்க பூமாவை முறைத்த இலையினி முகத்தை திருப்பிக் கொண்டு அழகு காட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
இதெல்லாம் கண்டு கொள்ளாமல் தன் தொலைபேசியை வைத்து ஏதோ பார்த்து கொண்டிருந்தான் மாகேஸ்.
"அப்படி என்ன தான் அந்த போன்ல இருக்கு..." எனக் கேட்டவள் அந்த போனை பிடிங்கிப் பார்க்க சட்டென்று அவளின் முகம் சுருங்கியது. பழைய நினைவு அவளை வந்து தாக்க தனக்காக தன்னிடம் கூடக் கேட்காமல் அந்த பையனை விசாரணை செய்கிறார் என்று நினைத்தவளிற்கு சந்தோஷமாக இருந்தாலும் தன்னையே அறியாமல் ஒரு புறம் மனபாரம் ஏறியது அதை மறைக்க முயற்சி செய்தவளிடம்
"இவன் நம்ம ஊரு கடையில வேலை செய்யற பையன்.. இந்த ஊருலயே இவன் தான் பெரிய ஹேக்கர் அப்படி இப்படின்னு சொன்னாங்க அதான் இவனை விசாரணைக்கு கொண்டு வர பாக்கறேன்..இவனை உனக்கு தெரியுமா " என மகேஷ் கேட்க.
"எனக்கு இவனை தெரியும் மாமா... நீ எனக்காக பொய் சொல்லாத மாமா. நான் கண்டு பிடிச்சுட்டேன். நான் எப்பவோ சொன்னேன் இவனையும், எங்க சாரையும், ஆனா நீ இப்ப வரைக்கும் ஞாபகம் வைச்சுட்டு, எங்கிட்ட கூட கேட்காம நீயா இவனை கண்டு பிடிச்சு இருக்க.. சும்மா சொல்லக் கூடாது மாமா.. நீ கெத்து தான் போ.." என தன் சோகத்தை வெளிக்காட்டாமல் மகேஸை பாராட்டிப் பேச திருத்திருவென முழித்தான் மகேஷ்.. அவனை பார்க்காமல் மீண்டும் தொடர்ந்தாள்.
"அன்னைக்கு இவன் தான் எங்க காலேஜ்கு வந்தான். இவன்கிட்ட தான் தீரன் பேசிட்டு இருந்தாரு. அவரு கேட்க இவன் சரியா பதில் சொல்லவே இல்லை. அப்பறம் தீரன் ஒரு மாதிரி பேசனாரு.." என பூவிழி கூற கூற தான் இவனிற்கும் நினைவு வந்தது.. அன்று ஒருநாள் போனில் பூவிழியின் பொலம்பல் காதில் இன்றும் கேட்டது அவனிற்கு. "இதெப்படி மறந்து தொலைச்சேன்..." என நினைத்தவன்
"ம்ம்ம் இவன் போன் கடையில வேலை செய்யறவன் ஜஸ்ட் ஒரு சின்ன விசாரணை அவ்ளோதான் இவன் ரொம்ப ஒர்த் இல்லை.ஆனா இவங்கிட்ட ஏன் உங்க சார் விசாரணை பண்ணணும்..." எனக் குதற்கமாயிக் கேட்க
"அவரு அப்படி கேட்கலை மாமா.. ஹேக் பண்ற ஆப் இருக்கு தெரியுமா. தென் போட்டோஸ் வேற மாதிரி எடிட் பண்றது. தென் ஹேக்கிங் மாதிரி கேட்டாரு..." என யோசித்தவாறே பூவிழி சொல்ல
"ஹிம்ம் இந்த பையனை இதுக்கு முன்னாடி உன் காலேஜ்ல பாத்து இருக்கியா..." என அறிந்து கொள்ளும் வகையில் கேட்க
"ம்ம்ம் மாமா.. அதிகம் பாத்தது இல்லை. ஆனா மாசம் ஒரு தடவை ஒரு கிளாஸ் போகும் அதுல பொண்ணுகளோட போன் எல்லாம் எப்படி ஹேக் பண்றாங்க தென் அதை எப்படி தடுக்கலாம்னு நிறைய சொல்லி கொடுப்பாங்க... அப்போ பாத்து இருக்கேன் அவ்ளோதான்..." என தனக்கு தெரிந்ததை பூவிழி கூற
"இதை ஏன் முன்னாடியே சொல்லல.. அங்க வந்து இதை மட்டும் தான் பண்ணுவாங்களா இல்லை. சரி போன் நம்பர், இல்லை ஏதாவது ஓடிபி நம்பர் வாங்கிட்டு போவாங்களா..." என கேட்டவனின் குரலில் அத்தனை தீவிரம் இருந்தது.
"இல்லை மாமா.. அதெல்லாம் பண்ணது இல்லை. ஹேக் பத்தி பேசுவாங்க அது மட்டும் தான். எங்க சார் சொன்னாரு இதை ஒரு சேவை மாதிரி பணறாங்க சும்மா தெரிஞ்சுக்கோங்க.." என பூவிழி தன் ஆசிரியர் கூறியதை சொல்லவும்
"பொது சேவையா..." என கூறியவன் ஏதோ யோசித்தவன் போல்
"பொது சேவை செய்யறவங்கிட்ட எதுக்கு ஹேக் பண்றவனை பத்தி எதுக்கு உங்க சார் கேட்கணும்.." என அடுத்த கேள்வியை கேட்க.
"மொசைப் பிடிக்கற நாயை மூஞ்சியைப் பார்த்தா தெரியாது. ஹேக்கைத் தடுக்கற வழி தெரிஞ்சவனுக்கு அதை ஹேக் பண்ணா தெரியாத சோ அதுக்காக கேட்டு இருக்காலம்..." எனக் கூறியவள் எழுந்து செல்ல
"பூமா.. அப்போ அந்த வாத்தி இப்போ எங்க இருப்பாருன்னு உனக்கு தெரியுமா.." என பின்னால் தலையை மட்டும் திருப்பி கேட்க
"நம்ம தோட்டத்து பக்கத்துல தான் சுத்திட்டு இருக்கும் போயி பாருங்க.." என கூறியவள் அடுத்த எட்டு வைக்க
"அவருக்கு நம்ம தோட்டத்துல என்ன வேலை..." மீண்டும் கேள்வி கேட்க
"தெரில ஒரு இரண்டு மூன்று தடவை பாத்து இருக்கேன் அவ்ளோதான்..." எனக் கூறியவளின் மனம் எனோ தீயாய் சுட அதை மறைக்க முயன்று கொண்டிருந்தாள்.
"அங்க பார்த்தி இருந்தானா..." என கேட்டவனின் பார்வை அவளை ஆராய்ந்தது.
தன்னை பார்த்து கேட்டவனை முறைத்தவள் "இது என்ன கேள்வி மாமா.. பெரிய மாமா அங்க தானே இருப்பாரு..." என கூறியவள் அங்கிருந்து நகர்ந்தாள்
"ஒன்னுமில்லை.." என மகேஸ் சொல்லவும் தன் அறைக்குள் புகுந்து கொண்டவளின் கண்ணில் அடைக்கி வைத்திருந்த நீர் வெளி வந்தது. "அவன் நல்லவன் இல்லைன்னு தெரிஞ்சும் ஏன் டி அவன் கிட்ட பேசன.. இப்போ அவனை மாட்டி விட்டத்துக்கு அழுதுட்டு இருக்கியா இல்லை அவனை லவ் பண்ணத்துக்கு அழுகை வருதா.." எனக் கேட்ட மனத்திடம் "தெரியல"எனக் கூறியவள் படுக்கையில் விழுந்தாள்.
பூமாவின் குரல் மாற்றத்தை கவனிக்காதவன் மனமோ அண்ணனை சுற்றியே அவனின் இருந்தது.
"அப்போ உண்மை தான் இவன் நம்ம அண்ணனை தான் தேடி இருக்கான். ஆனா இவன் எதுக்கு தேடனும். இவனுக்கு எப்படி ஹேக் பண்ற ஆப் பத்தி தெரியும். அப்போ இவன் ஹேக் பண்றவனா.? இல்லை அதுனால பாதிக்க பட்டவனா.. ஹேக் பண்ணி யூஸ் பண்றவனா இருந்தா பின்னாடி பாலோவ் பண்ணா மாட்டான். உடனே தேடி போயிப் பேசி இருப்பான். அப்போ இவன் பாதிக்கப் பட்டவனா தான் இருக்கணும். என்னை மாதிரியே ஆப்ல இருக்கற பெயரை பார்த்து வந்துருப்பான்.. இல்லன்னா ஓடிபி நம்பர் வைச்சு கண்டு பிடிச்சு இருப்பான். அப்போ அவன் என் அண்ணனை நெருங்கிட்டான். நோ அப்படி ஆக கூடாது..." என நினைத்தவன் அடுத்த நொடி அங்கிருந்து புறப்பட்டான்.
போகும் வழியில் அன்று தன் அண்ணனின் போனில் கேட்ட விஷயங்கள் நிழலடியது.
"இல்லை.. நான். பன்றேன்.."
.....
"ப்ளீஸ்.. அவங்கள ஏதும் பண்ண வேண்டாம்.."
...
"இன்னைக்கு மதியம் ஆப் ரெடியா இருக்கும்.." என்பது மட்டுமே இருந்தது.
பார்த்தியின் முன்னாள் போன் கால்ஸ் எதுவும் கேட்க முடியவில்லை, ஆனால் அவன் இந்த ஒரு வார அழைப்பு அனைத்துமே கேட்டான். மகேஸிற்கு தெரிந்தது ஒன்று மட்டுமே தன் அண்ணன் மட்டும் இதை செய்யவில்லை அண்ணனிற்கு மேல் இதை செய்ய ஆள் இருக்கிறது என்று. அதற்கு மேல் அவனின் அழைப்புகளை அலசி பார்க்கும் அளவிற்கு ஒன்றுமில்லை. அவனின் மேல் தப்பு இருக்கிறதா இல்லையா என்றுகூட கணிக்க முடியவில்லை ஆனால். அவனின் செய்கை அனைத்தும் வேறொருவரின் கட்டளையின் பெயரில் செய்வது போன்று தான் இருக்கிறது. என்றும் போல் இருக்கிறான். ஆனால் சில சமயம் எங்கோ மறைந்து விடுகிறான். அவனின் நடவடிக்கை முழுவதும் கண்டுகொண்டு கூண்டோடு பிடிக்க காத்திருக்கும் நேரம் யாரோ ஒருவன் அதை கலைக்க பாக்கிறான் எனும் போது கோபம் தான் வந்தது. எத்தனை முயற்சி செய்திருப்பான் அவன். இதற்கென மூன்று மாதங்கள் போராடி இருக்கிறான். எத்தனை கேள்விகள், எத்தனை இழிவு பேச்சுக்கள் அனைத்தும் தாங்கி இவ்வளவு தூரம் வந்திருக்கிறான். நீங்கள் நினைக்கலாம் ஒரு போனை வைத்து ஒரு கிரைம் போலீஸ் செய்ய மாட்டானா என்று. ஏதோ கேஸை பிடித்து இவன் தான் காரணம் என்று சொல்லிவிட்டு இவனிற்கும் செல்ல தெரியும். அப்படி செய்தால் இந்த ஹேக்கிங் பிரச்சினை தொடரும். பல பெண்களின் உயிரும் போக கூடும். அதே போல் இது சாதாரண போன் ஹேக் என்று நினைத்து ஒதுங்கி போவர்களுக்கு உரக்க சொல்லலாம் இது வெறும் ஹேக்கிங் மட்டுமல்ல பெண்களின் மானபிரச்சனை. கற்பு, உயிர் போகும் பிரச்சினை தானே. தன் இல்லத்தில் பெண்களுடன் வளந்தவன் அல்லவா அதனால் தான் என்னவோ இந்த கேஸை எளிதில் முடித்துவிடாமல் ஆணி வேர் வரை செல்கிறான் மகேஷ்.
*******
பார்த்தியைத் தேடி சென்றவன் அருகிலிருந்த மோட்டார் ரூமில் சத்தம் கேட்க நேராக அவனிற்கு பின்னால் நின்றவன் "பின்னாடி ஒரே போடப் போட்டு நம்ம இடத்துக்கு தூக்கிட்டு போயிடாலம். அப்போ தான் இவன்கிட்ட நல்லா விசாரிக்க முடியும்.." என நினைத்து தரையில் ஏதாவது கட்டை கிடைக்கிறதா என பார்க்க பெரிய கருங்கல் கிடந்தது. "ஐயோ இதை மேல போட்ட மண்டை காலி ஆயிடும் என நினைத்து குச்சியை சாரி கட்டையை தேட எடுத்து மூங்கில் குச்சி தான் இருந்தது "கடவுளே அவரசத்துக்கு எதுவும் கிடைக்க மாட்டிங்குது என நினைத்தவன் அருகிலிருந்த மூங்கில் கட்டையை எடுக்க "யார் நீ" என்ற கம்பீரமானக் பூபதியின் குரலில் நிமிர்ந்து அவனை பார்க்க
"தீரன்...." என்று பூபதியின் இதழ் உச்சரித்து முடிப்பதற்குள் அடித்து இருந்தான் தீரன்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro