அவன் 39
" சார்... போஸ்ட்.." என்ற குரலில் வெளிவந்தாள் ஹேமா..(போன ud ல வந்த பொண்ணு தான் பா.. கதையோட போக்கிற்காக அறிமுக படுத்தி இருக்கேன். யாரும் குழப்பிக்க வேண்டாம்...)
"என்ன போஸ்ட்.. என்றவாறே.. வாங்கியவள் கையெழுத்திட்டு வாங்கிக்கொண்டாள். அதை வாங்கி பார்த்தவள் "என்ன அண்ணா.. பிரம்(from) அட்ரஸ் இல்லை.. எனக் கேட்டு கொண்டே திரும்பி பார்க்க அவர் சென்றிருந்தார். தோளைக் குலுக்கிக் கொண்டவள் அந்த பாக்ஸை கையில் எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
உடனே அவளின் போன் அலறியது. அதை எடுத்தவள் நேற்று வந்த நம்பரில் இருந்து மெசேஜ் வந்திருக்க அதை எடுத்து பார்க்க.
"ஹாய் ஹேமா செல்லம் நான் தான் உன்னோட உயிர் தோழன்...நான் நேத்து பேசும் போது என்னை உனக்கு ஞாபகம் வரல.. அதான் நீயும் நானும் அப்படி இருந்த போட்டோவை அனுப்பி இருக்கேன். பாரு.. ஞாபகம் வருதான்னு சொல்லு.. தென் இதெல்லாம் வெளிய தெரியாம இருக்கணும்னா.. நான் சொல்றத நீ செஞ்சு தான் ஆகணும்..." என்று இருந்தது.
"இந்த நாய்க்கு எதுல எல்லா விளையாடணும்னு அறிவே இல்ல. வேற வேலை ஏதும் இல்லையா இவனுக்கு. நாளைக்கு என் பிறந்த நாளுக்கு என்னன்ன மிரட்டி விடுவானோ. என்ன கிப்ட்டா இருக்கும்.."என தன் நண்பனை திட்டிக் கொண்டே அந்த பாக்ஸை ஓபன் செய்ய அந்த மெசேஜில் இருந்ததைப் போல் தான் இருந்தது. அனைத்து போட்டோக்களையும் பார்த்தவளிற்கு தலை சுற்றாத குறை தான்.
"எப்போது இப்படி நடந்து கொண்டோம்.
தன் நண்பன் இப்படி பட்டவனா. அப்போ நான் பதில் சொல்லாம விட்டா வெளிய ஏதாவது லீக் பண்ணிட்டா.. என்னை என்ன சொல்லுவாங்க.." என மனம் குமுறி அழுக.
"இல்லை. அழுகக் கூடாது வெளிய வந்தா என்ன ஆக போகுது. கண்ணால பார்த்தா கற்பு போயிடுமா..ஆனா இது நான் இல்லை. சோ.." அவசரப்பட்டு எதுவும் செய்யாத ஹேமா என்ற மூளையின் பேச்சிற்கு கட்டுபட்டாள். அவளின் மூளை துரிதமாக வேலை செய்தது. "தனக்கு தெரியாது ஏதாவது நடந்திருக்கலாம்." என நினத்தவள் நேராக சென்றது மருத்துவமனைக்கு தான். தன்னை பரிசோதித்து உறுதி செய்து கொண்டவள் அடுத்தடுத்து செய்ய வேண்டியதை செய்தாள்.
ஆயிரம் பெண்கள் ஒரு விஷயத்தில் தடுமாறலாம். ஆனால் நிச்சயமாக அதை துணிவுடன் எதிர்க்கும் பெண்களும் இருக்க தான் செய்கிறார்கள். சில சமயங்களில் மனம் சொல்லவதைக் காட்டிலும் மூளை சொல்வதும் கேட்பது நன்மைக்கே...
இவளின் பதிலிற்காகக் எதிர்பார்ப்புடன் காத்திருந்தான்.. ஆதி இவனின் இந்த செயலே இவன் மட்டுமல்லாமல் அனைவரும் கூண்டோடு மாட்டிக் கொள்ளப் போகிறோம் என அறியாமல் இவளின் பதிலிற்கு காத்திருந்தான்..
*******
"மச்சா என்ன டா ஆச்சு இப்போ ஒரு மணி நேரத்திற்கு முன்னாடி தானே பேசன அதுக்குள்ள என்ன டா... காலையில எட்டு மணிக்கு உன் தங்கச்சியை பார்க்க போகலன்னா நான் முடிஞ்சேன் டா... சும்மாவே எங்கிட்ட பேசாம இருக்கா. இதுல நாளைக்குப் பார்க்க போகலை என்னை கண்ணால எரிச்சுடுவா டா..." என்ற மகேஷின் புலம்பலை ஒதுகியவன்
"ஏன் மச்சா.. உங்கண்ணானுக்கு எத்தனை பிரன்ட்ஸ் இருக்காங்க..'என கேட்டவனை அருகில் இருந்து இருந்தால் நான்கு கொட்டு இலவசமாக வைத்து இருப்பான்.
"இப்போ தானே சொன்னேன் அது எத்தனை பேர்ன்னு தெரில ஆனா அன்னைக்கு வந்த அந்த சபரியும் என் அண்ணனோட பிரன்ட்டுனு..."
எனக் மகேஸ் தூக்க கலக்கத்தில் கூற
"அந்த சபரியை பத்தி என்ன நினைக்கற மச்சா..." என மித்தரன் கேட்க
"ஹான்.. சரியான பேக்குன்னு நினைக்கற.. ஏன் டா ஏன் அர்த்த ராத்திரியில கால் பண்ணி கொடுமை பண்ற. இங்க பாரு நம்ம வேலை பன்னிரண்டு மணிக்கு முடிஞ்சு போச்சு அதுக்கு மேல நீ ஏதாவது சொன்னா நான் கேட்க மாட்டேன்.. பன்னிரண்டு மணிக்கு மேல பத்து லட்சம் கொடுத்தாலும் நான் வேலை செய்ய மாட்டேன் டா. என்னை தூங்க விடு டா..." என கவுண்டமணி பாஷையில் கத்தியவனை கண்டுக் கொள்ளாமல்
"மச்சா.. அந்த சபரி மட்டும் தான் உன் அண்ணனுக்கு ரொம்ப கிலோஸ் பிரன்ட்டா. ஆனா எனக்கு தெரிஞ்சு உன் அண்ணன் இவன்கிட்ட அதிகம் போன்ல பேசிக்கறது இல்லை டா.. உன் அண்ணன் போன் நம்பரை வைச்சு எப்.பி, வாட்ஸாப்ல இருந்து அவன் உருவாக்கி வைச்ச எல்லாத்தையும் ஹேக் பண்ணி பார்த்தாச்சு.. ஆனா அதுல அந்தளவுக்கு எதுவும் கிடைக்கல. நமக்கு தெரிஞ்ச ஒரே விஷயம் உன் அண்ணன் தான் அந்த ஆப் எல்லாத்தையும் கிரீயேட் பண்ணதுன்னு அது தெள்ளத் தெளிவா தெரிஞ்சு போச்சு.
ஆனால் ஏன் இதெல்லாம் உன் அண்ணன் பண்ணணும். காசுக்காகவா.இல்லை பொண்ணுக்காகவா.. இல்லை வேற ஏதாவது இருக்குமா. எனக்கு தெரிஞ்சு உன் அண்ணன் உன் கல்யாணத்துக்கு முன்னாடி தான் இதெல்லாம் பண்ணா அப்படினா ஏன் அப்ப பண்ண வேணும். அப்போ இழைக்கு இதுல சம்பந்தம் இருக்குமோ..
அப்படி இல்லன்னா இழை மேல அவருக்கு ஒரு இது இருந்து இருக்கும் சோ உங்க கல்யாணத்த நிறுத்த வேற வழி தெரியாம ஒரு ஆப்பை உருவாக்கி உன்னைப் பத்தி அவகிட்ட தப்பா சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்த பாத்து இருக்காலம். அதுக்கு அப்பறம் அந்த ஆப் யூஸ் பண்ண பிரன்ட்லியா இருக்கறதுனால தன்னோட பிரன்ட்ஸ் கிட்ட விளையாட்டு போல யூஸ் பண்ணி இருப்பாங்க. அப்படியே இதோட ஐக்கியமாயிப் போயிடங்களா இருக்கும்..."என தனக்கு தோன்றிய அனைத்தையும் மித்தரன் கூற நன்றாக விழித்துக் கொண்டவன் படுக்கையில் சாய்ந்து அமர்ந்தவன்
(மித்தரன் ஏன் இதெல்லாம் செய்யறான்னு ரொம்ப யோசிக்க வேண்டாம் பிரின்ட்ஸ்.. அவனுக்கு கிரைம்ல ஓவர் இன்ட்ரெஸ்ட் சோ அடிக்கடி மகேஷ்கிட்ட ஏதாவது கேட்டு இவனும் பண்ணுவான். சொல்ல போன மும்பை வந்த கொஞ்ச நாள்லயே மித்தரன் கிட்ட தன்னோட வேலையும், வேலை டென்சனையும் சொல்ல. நானும் பாதி நேரம் வெட்டியா தான் இருக்கேன்னு சொல்லி மகேஸிக்கு இந்த கேஸ்ல ஹெல்ப் பண்ண ஆரம்பிச்சுட்டான்.) ((( இது வெறும் காரணம் தான் இந்த புள்ளை நித்தியமதிக்கு பயந்து தாங்க. தனக்கு பிடிச்ச இந்த வேலையும் சேர்த்தி செய்யறான்... ஓவர் பிசினு காட்டிக்க வேணும்ல..))
"இல்லை டா.. பண்ணது இழைக்காக மட்டும் பண்ணதுனு சொல்ல முடியாது. தென் இந்த கிரைம் எல்லாம் பண்றது என் அண்ணன் மட்டுமில்லை நிறையா இருக்காங்க. அது தான் எனக்கு குழப்பம்..என்னமோ நடக்குது டா. நல்லா யோசிச்சு பாரு. எங்கயோ இடிக்கற மாதிரி இல்லை. என் அண்ணனும் சபரியும் பிரன்ட் அப்போ என் அண்ணன் சபரியோட ஆளு கிட்ட பேசனா..?? இந்த சபரி கோபம் பட்டு இருக்கணும் ஆனா அவன் கோபப் படலை அதுக்கு நேர்மாறா நடந்துகிட்டான்.
தென் கிறீயேட் பண்ணது இவனா இருந்தாலும் இந்த ஆப் யூஸ் பண்றவங்க ரொம்ப அதிகம். அதே மாதிரி எல்லாருக்கும் இந்த ஆப் பத்தி தெரிய வாய்ப்பில்லை. அப்போ போன்ல பேசனது என் அண்ணன் இல்லைன்னு தெரிஞ்சுது தான் சபரி அன்னைக்கு எதுவும் பண்ணாம இருந்து இருக்கான். அன்னைக்கு போன்ல எல்லா டீடைல்ஸ்யும் டெலிட் பண்ணி கொடுத்து இருக்கான். தென் என் அண்ணனுக்கு இழை மேல அபிப்பிராயம் இருந்து இருந்தா அவனோட செய்கையிலயே நான் கண்டு பிடிச்சு இருப்ப.. ஆனா எனக்கு தெரிஞ்சு அவனோட பார்வைக் கூட என் பொண்டாட்டி மேலே படலை .." என மனவிட்டு வாய்மொழி கூறினாலும் மூளை தான் ஏதோ சரியில்லை என கூறியது.
"சரி டா.. எனக்கு உன் அண்ணன் பேசனை கால் எல்லாத்தையும் ட்ராக் பண்ணி ஒட்டுக் கேட்டன்னு சொன்னியே என்ன ஆச்சு...ஏதாவது கிடைச்சுதா..." என கேட்டவனிடம்
"அ...து.... கேட்டேன்... ஆனா சொல்ற அளவுக்கு இல்லை..." என கூறியவனின் குரலே கூறியது அவன் எதையோ கேட்டு இருக்கிறான் என..
அவனின் தயக்கத்தை புரிந்தவன் ம்..ம்ம்... சரி விடு.. பார்த்துக்கலாம். பட் நீ பேசறது கீ போர்ட் செல்லு தானே.. அப்பறம் ஏன் இந்தப்பதட்டம்..." என கேள்வியாய் கேட்டவனிடம்
"டேய்.. கீ போர்ட் செல்லுல பேசறனா இல்லை டச் செல்லுல பேசறான்னு கேட்கத்தான் இந்த நேரத்தில கால் பண்ணியா.. ஒழுங்கா போனை வை டா.. இதைக் காலையிலக் கேட்டு இருக்கலாம்.. நான் என்னவோ ஏதோணு நினைச்சேன் நாயே. சரி போனை வை..." என க்கூறியவன் போனைக் கட் செய்யும் முன்பே மித்தரனின் குரல் தடுக்க வேண்டா வெறுப்பாக காதில் வைத்தவன் அவனை திட்டுவதற்கு கத்தும் முன்பே மித்தரன் பேசினான்.
"டேய் உன் அண்ணன் மேல எனக்கு இன்னும் சந்தேகம் வரல.. நீ நாளைக்கு அவரு வேலை செய்யற ஐடி கம்பெனியை போயி பார்த்துட்டு வா.. போலீஸா போக வேண்டாம்.. பூபதி தம்பியா போ... தென் இழையை நல்லா பார்த்துக்கோ என மித்தரன் பொறுமையாக கூற
சரியென தலையை ஆட்டியவன் "குட் நைட்.... ஹவ் ஆஹ் மொக்கை நைட்..." என கூறி போனை வைத்து ஜன்னலில் எட்டிப் பார்த்த உருவத்தை மணியை பார்க்கும் சாக்கில் ஓரக்கண்ணால் பார்த்தவாறே அருகில் இருந்த பேப்பர் வைட்டை தூக்கி எறிய சரியாக அந்த உருவத்தின் தலையில் பட்டது. அந்த உருவம் அங்கிருந்து ஓடுவதற்குள் பிடித்து விடலாம் என நினைத்து தன் அறையை விட்டு வெளி வந்தவன் சுற்றி முற்றி அந்த உருவத்தைத் தேட அதுவோ சென்றிருந்தது. மகேஷ் அடித்த அடியில் மயங்கி விழுவான் என எதிர் பார்த்தான் ஆனால் அந்த உருவமோ அங்கிருந்து சென்றிருந்தது, யாராக இருக்கும் என யோசித்தவன் சத்தமில்லாமல் தன் அண்ணனின் அறையைக் காண அவனோ நன்றாக உறங்கி கொண்டிருந்தான்.
மகேஷின் அடிக்கு கண்டிப்பாக இரத்தம் வந்திருக்கும் ஆனால் பார்த்தியின் மேல் துளி காயமில்லை என்பதை உணர்ந்தவன். வந்தது யாராக இருக்கும் என்ற குழப்பதுடனே தன் அறையை நோக்கி நடந்தான்.
மஞ்சத்தில் விழுந்தவன் புரண்டு புரண்டு படுக்க உறக்கம் வர மறுத்தது. மாறாக இன்று வந்த அந்த உருவம் யார் என்றக் கேள்வி அவனின் மனதை ஒரு புறம் அறிக்க. மற்றோரு புறம் மித்தரன் கூறிய வார்த்தைகளும் காதில் விழுந்தது "இழையை கொஞ்சம் நல்லா பார்த்துக்கோ..." என்றவனின் குரல் மீண்டும் மீண்டும் காதில் ஒலிக்க தற்போது நடந்த நினைவுகளை மறந்தவன் சட்டென்று படுக்கையை விட்டு எழுந்து அமர்ந்தான்.
"யாரா இருக்கும்.. என் அண்ணன் இல்லை, ஆனா யாரோ என்னை வாட்ச் பண்றாங்க. யாரா இருக்கும்..." என தன்னை தானே கேள்வி கேட்டுக் கொண்டவன்.
மும்பையிலிருக்கும் மித்தரனை வறுக்க ஆரம்பித்தான் "இந்த மித்தி நாயி மட்டும் என் கையில கிடைச்சா.. பரதேசி.. சும்மா இருந்தவனை குழப்பி விட்டுட்டு போயிட்டான். இவனுக்கு ஹேக்கிங்ல இண்ட்ரெஸ்ட் அப்படினா தனியா போயி கத்துக்க வேண்டியது தானே.. இப்போ பாரு.. தெளிவா இருந்த என்னைக் குழப்பி விட்டுட்டான். இருந்தாலும் கெட்டதுல கூட ஒரு நல்லது நடந்து மாதிரி யாரோ நம்மளை வாட்ச் பண்றதும் தெரிஞ்சுகிட்டேன். ஆனா வந்தவன் எங்க போயி தொலைஞ்சான்னு தெரில. என் இழை.. அவ நல்லா தான் இருப்பா. இல்ல ஓரெட்டு நேரில போயி பார்த்துட்டு வருவோம்.." என நினைத்தவாறே தன் டீ சர்ட்டை எடுத்து மாட்டியவன் பூனை நடைபோட்டு தன் வீட்டை விட்டு வெளியே வந்தவன் தன்னவளைக் காண சென்றான். ஐந்து நிமிடத்தில் அவளின் வீட்டு முன்னாள் இருக்க சுவர் ஏறி குதித்தவன் தன் மாமனாருக்கு கால் செய்து கதவை திறக்க சொல்ல அவரும் வந்து கதவை திறக்க "யோவ் மாமா.. வரதுக்கு ஏன் இவ்ளோ லேட்.." என கிசுகிசுக் குரலில் திட்டியவன் வீட்டிற்குள் நுழைந்து
"என் பொண்டாட்டி எங்க மாமா.. தனியா தானே படுத்து இருக்கா.." எனக் கேட்க கொட்டாவி விட்டவாறே "ஆம்" என தலையை ஆட்டி ஏதோ சொல்ல வர அதை கண்டுகொள்ளாமல் ஒரே ஜம்பில் சோபாவை தாண்டி அதற்கு அடுத்த தன்னவளின் அறைக்குள் சத்தமில்லாமல் சென்றவன் கதவை மூடும் முன் தன் மாமனை பார்த்து பறக்கும் முத்தத்தைக் கொடுத்துவிட்டு அறைக் கதவை தாழிட்டு திரும்பியவன் சிலிர்த்து நின்றான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro