அவன் 31
"அடியே.. யோசிச்சு தான் சொல்றயா. அது ஜஸ்ட் நம்பர் அதுல பேரு அது இது ஒளரீட்டு இருக்க..." என ஏதோ வேகத்தில் சொல்லவும் அவனை முறைத்தவள்
"நான் என்ன லூசா பொய் சொல்ல.. வேணும்னா இந்த நம்பரை வைச்சு பார்த்தி வருதான்னு பாரு.அப்படியே அவரோட பிறந்தநாள் தேதில மட்டும் ஹைபண்ட் பண்ணி இருப்பாரு. டேய் மகேஸ் சொல்லு டா இவங்கிட்ட..." எனக் கூறியவள் மித்தரனை முறைத்தவாறே அங்கிருந்து நகர்ந்தாள்.
"பெரிய இவன் இவன்.... நான் சும்மா சொல்றேன்னு சொல்றான். அடிக்கடி விளையாடிட்டு இருந்த எங்களுக்கு தெரியாது பாரு.. காட்டெருமை, கழுதை, குரங்கு.." என திட்டியவாறே மாடிப்படிகளில் இறங்கியவளை. மேலிருந்து பார்த்த மித்தரன் அவள் சென்றுவிட்டதை உறுதி செய்துவிட்டு மகேஷிடம் வந்தவன் "என்ன டா சொல்லிட்டு போறா இவ.." எனக் கேள்வியுடன் கேட்டவனைப் பார்த்தவன்
"எனக்கும் ஒன்னும் புரில டா. இழை சொல்ற மாதிரி நானும் யோசிக்கல டா அந்த சீட் எங்க..." என கண்களால் தேடியப்படியே மித்தரனிடன் வினாவ
"நான் அப்படி சொன்னதும் என் மேல இருந்த கோபத்துல நசுக்கி தூக்கி போட்டுட்டு எறிஞ்சு இருக்கா பாரு..." என கூறியவன் மாடிப்படியில் இருந்த பேப்பரை எடுத்து மகேஷிடம் தர அதை வாங்கி பார்த்தவனின் முகம் கருத்தது.
அவனின் முகமாறுதலை கவனித்த மித்தரன் "என்ன ஆச்சு எருமை.. ஏன் மூஞ்சி இப்படி போகுது..." என புரியாமல் கேட்டவனிடம் திரும்பி பார்த்தவனின் விழிகளில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.
"ஏய் என்ன டா, என்ன ஆச்சு.. லூசு.. உன் அண்ணாவா இருக்க மாட்டாங்க. வேற யாரவது இருக்கும். நீயேன் இப்படிக் குழந்தை மாதிரி கண்ணை கசக்கிட்டு இருக்க. இதையேன் பேரா பாக்கற வேற நம்பரா பாரு..." என மித்திரன் கூறியும் சரியாகதவன்
"இல்லை டா.. அப்படி இல்லை.. இது என் அண்ணா பேர் தான் டா.. எனக்கு தெரியும் அவன் மட்டும் தான் இப்படி அவன் பிறந்த நாளைக்கு ஹைபண்ட் கொடுப்பான். அது மட்டும் இல்லடா. அவனும் ஐடி தான் டா... என் அண்ணாவான்னு எனக்கு தெரியாது, ஆனால் நம்ம தெளிவுப்படுத்திக்கிட்ட நெஸ்ட் மூவ் பண்ண சரியா இருக்கும். அது இல்லாம அன்னைக்கு இழை சொன்னா, என்னோடப் போனைப் பார்த்தி அத்தான் தான் வாங்கினாரு, கடைசியில இல்லைன்னு சொல்லிட்டாரு சொன்னாரு சொன்னா டா. எனக்கு இப்போதான் அதெல்லாம் ஞாபகம் வருது டா.. இப்போ இந்த நம்பர் அப்படியே என் அண்ணன் பேரு, அவனோட பிறந்தநாள் டேட்டை தனியா ஹபைண்ட் போட்டு காமிச்சு இருக்கான்.. நீ நினைக்கலாம் வேற யாராவது இருக்கலாம்னு .. ஆனா எல்லாருக்கும் இந்த மாதிரி தோனாது டா.. அப்படியே இருந்தாலும் என் அண்ணன் பேரு, என் பிறந்தநாள் இருக்குமா டா, சரி அது கூட வேண்டாம் இழையினி போனை ஏன் மறுபடியும் அவர் குடுக்கல.. அது எங்கே போச்சு.. இப்படி ஏகப்பட்ட குழப்பம் டா. என் அண்ணன் மேல சந்தேகப்பட்டது இல்லை டா. ஆனா இன்னைக்கு என்னால சந்தேகப்படாம இருக்க முடில டா.." என கூறியவனின் குரலில் ஏகத்துக்கும் வேதனை இருந்தது..
அப்போ அன்னைக்கு இழையினிக் கிட்ட பேசனது உன் அண்ணாவா இருக்குமா டா..ஆனா ஏன் உன்னை பத்தி தப்பா சொல்லணும். முதல்ல அவருக்கு தானே இழையினியை பொண்ணு கேட்டாங்க. அப்பவே சரின்னு சொல்லி இருக்கலாமே, ஏன் அப்படி பேசணும்..." என கேட்ட மித்தரனிடன் "எனக்கு ஒன்னும் புரில டா. கல்யாண பேச்சு ஆரம்பிக்கும் போதே அண்ணாகிட்ட சொல்லிட்டேன். நான் இலையினியை லவ் பண்றன்னு அதுக்கு அண்ணா ரொம்ப சந்தோஷப்பட்டான், அவனே சொன்னா.. எனக்கு இழை பொண்ணு மாதிரி டா. என்னால அவளை அப்படி பாக்க முடியாது, நீ அவளை லவ் பண்றன்னு சொல்லும் போது ரொம்ப சந்தோஷமா இருக்குன்னு சொன்னா. நான் கூட கேட்ட நீ யாராவது லவ் பண்றீயான்னு கேட்டேன். அதுக்கு ஒரு பார்வைப் பார்த்தான் டா. எனக்கு அப்போ ஒன்னும் புரில.. என்னவோ இருக்கு மச்சி, எனக்கு என்ன சொல்றதுன்னு தெரில, ஆனா கண்டிப்பா என் அண்ணாகிட்ட என்னமோ இருக்கு. அவனுக்கும் இந்த சைட்க்கும் கண்டிப்பா சம்பந்தம் இருக்கு..." குரலில் கரகரப்பு இருந்தாலும் தெளிவாக கூறினான்.
"உன் அண்ணான்னு முடிவே பண்ணிட்டியா..." என கேட்ட மித்தரனிடன்
"தெளிவா சொல்ல தெரில... ஆனா என் அண்ணன் மேலையும் ஒரு கண்ணை வைப்போம். அதே மாதிரி இந்த நம்பரை வைச்சு வேற என்னால இருக்கு, ஏதாவது ஏரியா நம்பர், போன் நம்பர் எல்லாத்தையும் பாக்கால, அப்பறம் என் அண்ணனை பாலோவ் பண்ண ஆளுங்களை போடறத விட நானே நேர்ல போயி பாக்க போறேன். நானே பார்த்ததா என் மனசு கொஞ்சம் நிம்மதியடையும் என கூறியனின் குரலில் இம்முறை தீவிரம் இருந்தது.
அடுத்த சிலநிமிடங்களில் அந்த எண்ணின் வேறு ஏதாவது இருக்கிறதா என ஆராய தொடங்கிவிட்டான் மகேஷ். என்னவெல்லாம் செய்து பார்த்தான் ஆனால் அந்த நம்பரில் ஒன்றுமே இல்லை, அதே போல் பின் கோடு, போன் நம்பர், ஆதார், ரேஷன், என அனைத்தும் தேடி பார்க்க ஒரு சில எண்களில் வித்தியாசத்தில் இருந்ததே தவிர அதுபோல் வராமல் போக இழையின் வார்த்தைகள் அவனின் காதிற்கு கேட்டு கொண்டே இருந்தது.
பார்த்தி அத்தான் தான் அவருடைய பேரை நம்பரால எழுதுவார் அது மட்டுமில்ல அவரோட பிறந்தநாள் டெட் ஹைபள்ண்ட் போட்டு காமிக்க மாட்டாங்க.. என இழையின் குரல் கேட்க கண்களை மூடி திறந்தவனின் காதில் தன் அண்ணனின் முகம் மட்டுமே வந்து போனது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro