அவன் 29
"ஹாய்..பிருந்தா. நீங்க என்னை பிரன்டா அக்ஸ்ப்ட் பண்ணுவீங்கன்னு நினைக்கவே இல்லங்க. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..." என பூபதி அனுப்பிய குறுஞ்செய்தியைப் பார்த்தும் அவள் பதில் அனுப்பவில்லை.
"என்னங்க நீங்க நேருல தான் பேச மாட்றீங்க.போன்ல கூடவா பேச மாட்டீங்க..." என இவன் சலித்துக் கொண்டாலும் அவளிடம் பதில் தான் இல்லை
"அடப் போங்க.. நீங்க ரொம்ப பண்றீங்க.. சரி இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க. என்னை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா..." என இம்முறைக் கேட்டவனின் பொறுமை பறந்து தான் போனது. ஆனால் இவனவளோ அதெல்லாம் கண்டுகொள்ளாமல் தீரனிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்.
"டேய்... ஏன் டா இப்படி பண்ற.. மச்சி ஒழுங்கா போனை கொடு. எதுக்கு அவனையெல்லாம் அக்ஸ்ப்ட் பண்ண இப்போ பாரு அவன் பேசிட்டே போறான். ஏன் டா இப்படி பண்ற..." எனக் கேட்டவளிடம்
"முடியாது டி, நீயும் அவனை லவ் பண்றன்னு சொல்ல போறேன்.. அவனை நம்ம வீட்டுக்கு வர சொல்லி உன்னை பொண்ணு கேட்க சொல்ல போறேன். உனக்கு அவனை பிடிச்சு தானே இருக்கு. ஏன் வேண்டாம்னு சொல்ற..." என கேட்ட தீரனை முறைத்தவள்
"லவ் பண்ணா லவ்வை சொல்லனுமா என்ன...?? எனக்கு அவனை ரொம்ப பிடிக்கும். நீ அவனைப் பாத்தது இல்லை தானே. ரொம்ப அழகா இருப்பான். எப்பவும் கார்ல தான் வருவான் ஆனா நான் நடந்து போனா என் கூடயே நடந்து வருவான். என்னை வற்புறுத்தி பேச சொன்னதும் இல்லை லவ் சொல்லி டார்ச்சர் பண்ணதும் இல்லை..." என கூறி சிரித்தவள் மீண்டும் தொடர்ந்தாள்.
"யூ நோ ஒன் தின்க் நமக்கு அம்மாவே இல்லை.. ஆனா நம்ம அம்மாவுக்கு பிறந்தநாள்னு வந்து வாழ்த்து சொல்லும் போது சிரிப்பும் வந்துச்சு. அவனோட அந்த இன்னசெண்ட் கூட பிடிச்சு போச்சு. யாருன்னே தெரியாத எப்படி லவ் வரும் எனக்கும் முதலில வரல டா. ஆனா இந்த இரண்டு வருஷத்துல அவன் எனக்காக காத்து இருந்ததே எனக்கு அவன் மேல ஈர்ப்பு வந்துருச்சு டா..."என கூறியவளின் கண்களில் அத்தனை காதல்
"நானும் மறைமுகமா அவனை பத்தி விசாரிச்சு பார்த்தேன் ஊரு கோயம்புத்தூர் பக்கத்தில, வீட்டுக்கு முத்த பையன், ரொம்ப நல்லவன், ஆனா நம்ம சமூகம் வேற, அவங்க சமூகம் வேற. நம்ம வீட்டில அதெல்லாம் பாக்கா மாட்டாங்க. ஆனா அவரு வீட்டுல பாக்கலாம் சோ இதெல்லாம் நமக்கு வேண்டாம். இந்த காதல் எல்லாம் செட் ஆகாது டா. இப்படியே விடு அவனுக்கு ஒரு நல்ல பொண்ணு கிடைப்பா..கொஞ்ச நாளைக்கு எல்லா மறந்து போயிடும். இதுவும் கடந்து போகும்..." என கூறியவளின் வாய்ஸை ரெக்கார்ட் செய்தவன் பூபதி என்ற பூ இருந்த ப்ரொபைல்கு அனுப்பிவிட்டு உடனே டெலீட்டும் செய்தவன் நல்ல பிள்ளை போல்
" என்ன டி இன்னைக்கு தான் புதுசா ஐ. டி கிரீயேட் பண்ணிருப்பான் போல..." என கேட்டவனிடம் "தெரியல" என ஒற்றை பதில் கூறியவள் அவன் அசைந்த நேரம் பார்த்து தன் மொபைலை பிடிங்கி கொண்டு ஓடியவளை பார்த்து சிரித்தவன்
"அவனோட லவ் உண்மையா இருந்தா கண்டிப்பா உன்னை மட்டும் தான் டி கல்யாணம் பண்ணுவான். அப்பா,அம்மா இல்லாத அனாதையா இருந்த எனக்கு ஒரு தோழியா, ஒரு தங்கச்சியா, என் குடும்பமா, நீயும் உன் அப்பாவும் தான் டி இருக்கீங்க.. உனக்கு பிடிச்ச வாழ்க்கை அவன் தான்னு எனக்கு தெரியும் மச்சி. அதான் நான் அவனை பாக்கலைன்னாக் கூட உனக்கு சந்தோஷமான வாழ்க்கையக் கொடுக்க முயற்சி பன்றேன்..." என மானசீகமாக தன் தோழியிடம் கூறியவன் தன் வேளைகளில் மூழ்கினான்..
அவள் அனுப்பி வைத்த ரெக்கார்ட்டை கேட்டவனிற்கு ஒரு புறம் சந்தோசம், ஒரு புறம் கோபம் என அவனின் முகத்தில் தாண்டவம் ஆடியது.
ஒரு முடிவெடுத்தவன் அடுத்த நாளே அவளின் முன் அவள் வீட்டில் நிற்க அதனை எதிர்பாராத அவளோ சட்டென்று தடுமாறி "இப்போ..இ..இங்க .. நீங்க..." என திக்கியவளை பொருட்படுத்தாமல்
"உன் அண்ணனும், உன் அப்பாவும் வெளிய போயிருங்க, அவங்க எப்போ வந்தாலும் எனக்கு நோ ப்ரோப்ளேம்..." எனக் கூறியவன் அவளை தள்ளிவிட்டு உள்ளே நுழைய
"இப்போ எதுக்கு உள்ள வந்தீங்க. கொஞ்சம் கூட..." என ஆரம்பித்தவளின் பேச்சு அவனின் செய்கையில் நின்றிருந்தது. அவள் உள்ளே திரும்பிய அடுத்த நிமிடம் அவளின் சங்கு கழுத்தில் மூன்று முடிச்சுட்டு அவளை தன்னவளாக மாற்றி இருந்தான் பூபதி.
அவனை அடிக்க கை ஓங்கி நின்றவளை முறைத்தவன் அவன் கையில் இருந்த மொபைலில் அவளின் வாய்ஸை ஓடவிட்டு "என்ன டி நினைச்சுட்டு இருக்க. அதான் லவ் பண்றல்ல சொல்லி தொலைய வேண்டியது தானே. ஓவரா சீன் போடற ஜாதி, மதம், பேதம்னு சொல்லிட்டு ரொம்ப பண்ற பாத்துக்கோ. நீ எப்போ இந்த ரீசன் சொன்னயோ அப்பவே முடிவு பண்ணிட்டேன் டி. இந்த ஜென்மத்தில நீ தான், நீ மட்டும் தான் எல்லாமேன்னு..." என கூறியவனை முறைத்தவள்
"இந்த மச்சி எருமையை ச்சே நேத்து எடுத்து அனுப்பிட்டு நல்ல புள்ள மாதிரி அமைதியா இருந்துட்டான் இருக்கு அவனுக்கு..." என அவனை மனதில் திட்டிக் கொண்டவளிற்கு தெரியவில்லை அவனின் இந்த செயலில் கோபம் வரவில்லை, அழுகை வரவில்லை,
ஏன் கேள்வி கூட கேட்க தோன்றவில்லை. என்பது இப்போது அவளின் மனதில் இருப்பது என்னவென்று கணிக்க முடியாத மனநிலையில் இருந்தவள் முயன்று வரவழைத்த கோபத்தை அவனிடம் காட்டினாள்.
"ஆமா எனக்கு லவ்வை விட ஜாதி தான் முக்கியம் போதுமா. இந்த பத்து ரூபா மஞ்சக் கயிறை கட்டிடா நான் உனக்கு பொண்டாட்டி ஆயிடுவேனா. இதை கழட்டி எறிய எனக்கு ஒரு செகண்ட் போதும்.." என கூறியது மட்டுமல்லாமல் அதனை கழட்டப் போனவளை விடாப்பிடியாக தன் புறம் இழுத்தவன் அவளின் இதழ்களை வன்மையாக சிறை செய்தான்.
"தாலி கட்டிடா பொண்டாட்டி இல்லையா..?? சரி அப்போ உண்மையாவே பொண்டாட்டி உரிமை எடுத்துகிறேன்.." என கூறியவன் அவளின் இதழை மீண்டும் சிறை செய்ய தடுமாறிப் போனாள் பெண்ணவள்.
இதழ் வழி அவன் காட்டிய ஆவேசத்தில் வேட்கை மட்டுமே நிறைந்திருக்க.. மனம் கொண்டவனின் இதழ்சிறை அவளுக்கு கசந்தாலும்.. வெறுக்கத் தோன்றவில்லை.. அந்த வன்மையிலும் அவனிடம் காதல் தேடித் தேடித் தோற்றுத் தான் போனாள் பிருந்தா.
***
இரண்டு நாட்களுக்கு முன் நடந்த அனைத்தும் அவளால் ஜீரணிக்க கூட
முடியவில்லை. அவன் மேல் கோபம் வரவில்லை. பதிலுக்கு தன் மேல் தான் கோபம் வந்தது அவளிற்கு. ஏதோ இனம் புரியா குழப்பம், இருந்தும் தன்னவன் தானே என்ற சந்தோஷம். இருந்தாலும் எப்படி தன் பெண்மையை அவனிற்கு ஒப்படைத்தோம். என நம்பக் கூட முடியவில்லை பிருந்தாவாள். ஆனால் அன்று செல்லும் போது கடைசியாக கூறிய வார்த்தைகள் காதில் கேட்டு கொண்டே இருந்தது.
"உனக்காக எப்பவும் வெய்ட் பண்ற இடத்தில இருப்பேன். என் பொண்டாட்டியா வா.. நான் செஞ்சதுக்காக உன்கிட்ட மன்னிப்பு கேட்பன்னு கனவுல கூட நினைச்சிறாத. உன்னை எடுத்துக்கற முழு உரிமையும் எனக்கு மட்டும் இருக்கு..." என கூறிய வார்த்தைகள் அவளிற்கு ஞாபகம் வர ஒரு முடிவெடுத்தவளாய் பூபதியை காண நினைத்தவள் கிளம்பி புறப்படும் நேரம் அவளின் மொபைலில் சவுண்ட் கேட்க எடுத்துப் பார்த்தவள் தீரனின் குறுஞ்செய்தியை படித்தாள்.
"இங்க பாரு மச்சி, கூடயே இருக்கேன் நீ என்னை கவனிக்கற மாதிரி தெரியல, அதான் நானே கேட்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். ஒரு நாள் நான் சொல்ற இடத்துக்கு வா, இல்லைனா என் முடிவு வேற மாதிரி இருக்கும், வேணும்னா ஒரு சேம்ப்ள் கட்டவா..." என தீரன் அனுப்பி இருக்க. சட்டென்று வெறுறொரு நம்பரில் இருந்து அவளின் புகைப்படங்களும் வர அடுத்த நிமிடம் காலும் வர அதை ஏற்று கேட்டவளிற்கு தன் காதையே நம்ப முடியாது என்கிற போக. அடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் நின்றவளின்
கண்களில் கண்ணீர் குளம் போல் நிற்க அடுத்து அவள் எடுத்த முடிவு தான் தற்கொலை...!
ஆயிரம் தடவை தீரன் பேசவில்லை என மனம் கூறினாலும் போனில் பேசிய அந்த வக்கிரப் பேச்சை இவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதே உண்மை. தான் சேயாய் தானே நினைத்தோம், அப்படிப்பட்ட தன் நண்பனா தன்னை கேவலமாக புகைபிடித்து வைத்தது, அவனா பேசியது, இருக்காது, அவன் இல்லை என மனம் கூறிட, மீண்டும் மீண்டும் அந்த வக்கிர வார்த்தைகள் இவள் காதில் கேட்க அந்த ஒரே ஒரு நிமிடம் அவள் எடுத்த தவறான முடிவு அவளின் வாழ்க்கையே திசை திருப்பியது.
****
வாயில் ரத்தம் வழிந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிருந்தாவை பார்த்தவனுக்கு இதயம் ஒரு நிமிடம் நின்று துடிக்க "ஐயோ மச்சி என்ன டி ஆச்சு. நல்லா தானே டி இருந்த. மச்சி எழு, பிருந்தமா எழு மா. ஐயோ வாயெல்லாம் இரத்தம், பிருந்தா எழு டி. நான் தீரா பாரு டி. மச்சி எழு..." எனக் கதறினாலும் அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றான் தீரன். இரண்டு நாட்களுக்கு பிறகு தான் எதுவும் கூற முடியும் என்பதைப் போல் டாக்டர் கூறிவிட
சோர்ந்து போனவன் தங்களின் இல்லத்திற்கு வர அங்கு அவன் கண்டது சிதறிகிடைந்த அவளின் போன் தான். அனைத்தும் எடுத்து சரி செய்தவன் எதனால் தன் தோழி இப்படி செய்தாள். என நினைத்துக் கொண்டே அவளின் அறை, அவளின் கைபை என அனைத்தும் தேடிப் பார்த்தான். அதில் ஒன்றும் கிடைக்காது போக அடுத்து அவளின் போனை அலசிப் பார்த்தவனிற்கு கிடைத்தது அவனின் தொலைபேசி எண்ணிலிருந்து வந்த குறுஞ்செய்தியும், மற்றோரு பாரீன் நண்பரில் இருந்து வந்த பிருந்தாவின் ஆபாசப் போட்டோகளும் தான். முதலில் குழம்பியவன் தன் மொபைலில் குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறதா எனப் பார்க்க ஒன்றுமில்லாமல் போனது. அடுத்த நிமிடமே அவனின் ஹேக்கர் மூளை வேலை செய்ய அடுத்து அடுத்து அவன் செய்ய வேண்டியதை நிர்ணயித்தவன் அடுத்து தன் மொபைலிற்கு வந்த காலையும் ஓ,டி,பி. நம்பரையும் வைத்து அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்தான்.
மருத்துவமனைக்கு சென்று தன் தோழியின் நிலையை விசாரித்து கொண்டு பிருந்தாவின் தந்தைக்கு ஆறுதல் கூறியவன் பிருந்தா சரி ஆகும் வரை அங்கயே இருந்தான். யார் புண்ணியமோ பிருந்தா பிழைத்து கொண்டாள் ஆனால் மருந்தின் வீரியத்தில் அவளின் கைகால்கள் மரத்துப் போய் நடக்க முடியா சூழ்நிலை உருவானது.
அவள் முன் சொல்லாதவன் எட்டி நின்றே அவளைப் பார்த்துக் கொண்டான். அவளுக்கென்று நர்ஸை வரவழைத்தவன் அவளிடம் தன் பொறுப்பைக் கொடுத்துவிட்டு அன்றே கிளம்பினான் தன் தோழியின் நிலைக்கு காரணமானவனைத் தேடி.
முதல் ஒரு வருடம் எந்த க்லுவும் கிடைக்காமல் போக அடுத்து சந்தேகத்தின் பெயரில் கோபியில் உள்ள மகளிர் கல்லூரிக்கு ஆசிரியராக சென்றான்... விடா முயற்சியால் இதோ இன்று சீக்கிவிட்டான் ஆனால் ஒன்றுமே செய்யமுடியாது சூழ்நிலையில் இருந்தான் தீரன். அவனை பழி வாங்க கண்கொத்தி பாம்பை போல் காத்திருக்கிறான். அதற்கு முன் அவனை துடிக்க வைக்க வேண்டும் என முடிவெடுத்தான் தீரன்.
இன்றுவரை பூபதி என்ற ஒரு நபரை நினைக்காமல் விட்டது இவனின் குற்றமே, இல்லை தங்களுக்குள் நடந்ததை கூறாமல் விட்டது பிருந்தாவின் குற்றமோ. இல்லை இன்றுவரை தன்னவளை காணாமல் இருப்பது பூபதியின் குற்றமோ யார் அறிவார்..
****
"பூபதி யார்..??? இப்போ அவன் எங்க போனான்...??
பிருந்தா இப்போ எப்படி இருக்கா..??? தீரன், பிருந்தா நட்பு வழக்கம் போல் தொடருமா...??
"தீரன் அடுத்து என்ன செய்ய போறான்..??
"இழையினிக்கு கால் பண்ணது யார்..??
"மகேஸ் தேடற குற்றவாளியும், தீரன் கண்டு பிடிச்சவனும் ஒன்னா...??
இவங்க மூணு பேருக்கும் இடையில் இழையினி இருக்காளா..??
அப்பப்பா எத்தனை கேள்வி.. ஒன்னு ஒன்னா பாக்கலாம் இனிவரும் நாட்களில்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro