Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அவன் 20

"பூமா ... குழந்தம்மா.. என்ன டா ஆச்சு... ஏன் இரண்டு நாளா ஒரு மாதிரி இருக்க.. உங்கம்மா ஏதாவது  சொன்னாளா... சொல்லு டா நான் வேணா கேட்கட்டுமா." என பூவிழியின் தலையை தடவிக் கொண்டே  கேட்டவரை கண்களில் கண்ணீருடன் பார்த்தவள்  "அப்பா..ப்பா.... என தேம்பியவாறே ஆரம்பித்தவள் அனைத்தும் கூறி முடித்தாள்...

"மெல்லியதாக சிரித்தவர் "என்ன டா இவ்ளோதானா நானும் என்னமோ ஏதோன்னு நினைச்சேன்..பரிட்சையில பாஸ் ஆகலைன்னா..?? என் குட்டிமா அழுதுகிட்டு இருக்கிறீங்க..?? இப்போ இல்லைன்னா என்ன டா செல்லமா அடுத்த செம்ல எழுது அவ்ளோதான்... இதுக்கு போயி மூஞ்சியை இப்படி வைச்சுக்கிட்டு..." என கூறியவர் அவளின் முகத்தை அழுத்தி தேய்த்து கண் புழையை தன் வேஸ்டியால் அழுத்தி துடைத்தவர் மூக்கினை துடைக்க போக பக்கென்று சிரித்தாள் பூவிழி...

"எவ்ளோ அழகா சிரிக்கற குழந்தைம்மா.. இப்படி தான் எப்பவும் இருக்கணும்... புரிதா.." என கூறியவர் எழுந்து செல்ல அவரையே விழி நீருடன் பார்த்துக்கொண்டிருந்தாள் பூவிழி.

"என்னை மன்னிச்சுடுங்கப்பா... உங்க கிட்ட இதை எப்படி சொல்றதுன்னு தெரியல.. எனக்கு சொல்லவும் வாய் வரலப்பா.." என மனதில் தன் தந்தையிடம் கூறிக் கொண்டவள் தீரனின் முதல் சந்திப்பை  நினைக்க ஆரம்பித்தாள்...

"என்ன இந்த கூகுள் மேப் இவ்வளவு தூரம் நடக்க வைக்குது.. இனிமே இதை நம்ப கூடாது டா சாமி கொடுமையா இருக்கு.." என புலம்பியப்படியே நடந்து வந்தவன்  "ஏய் ப்போ.. ஏய் குரங்கு போ.. இப்போ என்ன வேணும். இந்த சோறு வேணுமா... ஐயோ இது வேற இன்னைக்குன்னு பார்த்து நல்லா இருக்கே.. இங்க பாரு குரங்கு இன்னைக்கு மட்டும் என்னை விட்டுடு பிலீஸ்.. நாளைக்கு உனக்கு சாப்பாடு கொண்டு வரேன்.. இன்னைக்கு கொஞ்சம் நல்லா இருக்கு சாப்பாடு.. நாளைக்கு என் அக்காவை உனக்காக சாப்பாடு செய்ய சொல்லி ஸ்பெஸல்ல கொண்டு வரேன்." என குரங்கிடம் வாதாடி கொண்டிருக்கும் பூவிழின் குரலில் நின்றான்.. சுற்றும் முற்றும் பார்த்தவனின் பார்வையில் பட்டது அவளின் வதனம்... ஐந்தடிக்கும் சற்றே உயரம்... மெல்லிய தேகம்... தோளோடு உரசும் கூந்தல் என நின்றிருந்தவளை பார்த்தவனிற்கு அவளது பேச்சில் சிரிப்பு தான் வந்தது...

"ஏய் குரங்கு ப்ளீஸ் புரிஞ்சுக்கோ. டெய்லியும் உனக்கு சோறு போடறேன். இன்னைக்கு மட்டும் கொஞ்சம் பொறுத்துக்கோ..ஐயோ இன்னைக்கு சாப்பாடு நல்லா இருக்கே.. எப்படியாவது இது கிட்ட இருந்து தப்பிச்சு போயிடனும் இல்லன்னா நமக்கு சோறு கிடைக்காம போயிரும்...'  என நினைத்தவள் குரங்கிடமிருந்து தப்பிக்க ஒரே ஓட்டமாக ஓட குரங்கும் அவளையே துரத்த "ஐயோ பூவிழி அதான் அன்னைக்கே சொன்னேன் கேட்டயா..இதுக்கு தான் டெய்லியும் சோறு வைக்க கூடாதுன்னு சொல்றது.. இந்த எருமை செய்யறது (இழை) நல்லா இல்லைன்னு இந்த எருமைக்கு (குரங்கு) வந்து கொடுத்தேன் பாரு என்னை சொல்லனும்.. "என புலம்பியப்படியே தன்னை நோக்கி ஓடி வந்தவளை பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது... ஏதோ பெரிய தூண்  ஒளிந்து கொள்ள கிடைத்தது போல தீரனின் பின்னால் ஒளிந்து கொண்டவளை பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தாலும்  அதை வெளியில் காட்டி கொள்ளாமல்  குரங்கினை துரத்திவிட்டு முன்னால் நடக்க...

"ஏய்..."

...."

"ஏய் தம்பி.. உன்னை தான்..." என்ற பூவிழியின் குரல் கேட்டும் கேட்காதவன் போல் முன்னால் நடந்தான் தீரன்..

"இந்தப்பா தம்பி..கொஞ்சம் நில்லு..உன்னை தான் " என கூறியவள் அவனிற்கு ஈடாக நடந்துக்கொண்டே "ரொம்ப தங்க்ஸ்.." என கூற அவனிடம் பதில் இல்லாமல் போக "மிக்க நன்றி"என மீண்டும் கூற திரும்பி பார்த்தவன் பதில் கூறாமல் மீண்டும் நடக்க.. "காது நல்லா தான் கேட்குது போல.அப்பறம் ஏன் பேசாமல் போறான்.. ஒரு வேளை ஊமையா இருக்குமோ..." என கூறும் போதே அவளை பார்த்து முறைத்தவன் "அதும் இல்லையா.. அப்ப ஏன் பேச மாட்டேங்கர.."என கேட்டவளை திரும்பி பார்த்தவன் "ஐயோ ரொம்ப பேசறா.. பேசமா அந்த குரங்கு கிட்டயே விட்டுட்டு வந்துருக்கனும்..!"  என நினைத்தவன் வேகமாக நடக்க..

"ஏய் கருப்பு கலர் பொட்டி.. நில்லு நானும் வரேன்.. நீ காலேஜ்கு தானே போற வெய்ட் நானு வரேன்.. தென் நானே உன்னையும் ட்ராப் பண்ணற.."பிஎன கூறியவளை பார்த்தவன் "எல்லாம் என் நேரம்.... சின்ன குரங்குக் கிட்ட இருந்து தப்பிச்சு வந்து...  பெரிய குரங்குக் கிட்ட மாட்டிக்கிட்டேன் போலயே..." என  தீரன் நினைக்க.

"இங்க பாரு.. நான் உனக்கு அக்காவா தான் இருப்பேன்.. நீ ஒன்னும் பயப்பட வேண்டாம்..நான் உன்னை பத்திரமா காலேஜ்ல விட்டறேன்..." என கூறவும் தலையில் அடித்து கொண்டவன் மீண்டும் நடக்க.. "ஆமா முதல் வருசமா நீ.. ஆனா பார்க்க பெரியவன் மாதிரி இருக்க... என்ன டீபார்ட்மெண்ட் எடுத்து இருக்க.. சரி அதெல்லாம் விடு எதுக்கு இந்த காலேஜில வந்த.. வேற நல்ல காலேஜ்ல போயி சேர்ந்திருக்கலாம்ல, இங்க எல்லாம் படிக்க சொல்லி கொடுமை பண்ணுவாங்க.. மாசம் ஒரு தடவை இன்டெர்னல் எக்ஸாம் வேற வைப்பாங்க... அது மட்டுமில்லை ஓவர் பீஸ் வாங்குவாங்க.. இந்த காலேஜ்ல இருக்கற எல்லா சொட்டை மண்டையிலயும் வெறும் மாசலா பூரி தான் இருக்கு.. வேற ஒன்னும் புதுசா இல்லை.. அரைச்ச மாவையே அரைப்பாங்க சுத்த வேஸ்ட் தெரியுமா..." என ஆரம்பித்தவள் தான் காலேஜ் வரும் வரை காலேஜின் அனைத்து விதமான நன்மைகளையும் கூறிக்கொண்டே வர அவளை ஓரக்கண்ணால் பார்த்தவாறே வந்தவன் காலேஜின் அட்மின் ரூமிக்குள்ளே நுழைந்தான்..

"ஒருத்தி உயிரை கொடுத்துட்டு கத்திட்டு இருக்கேன் இவன் பாட்டுக்கு போறான்.. எப்படி இருந்தா என்ன எங்கிட்ட தானே வரணும்..." என நினைத்தவள் தன் வகுப்பறையில் காலடி எடுத்து வைக்க ஒரு பீரியட் முடிந்து அடித்து பீரியட் ஆரம்பித்து இருந்தது.. அவர் அசைந்த நேரம் பார்த்து வகுப்பறையில் நுழைந்தவள் நித்தியின் அருகில் அமர்ந்து கொண்டாள்..

"எங்க டி போன ஏன் இவ்வளவு லேட்.." என நித்தி கேட்க "கொஞ்சம் வேலை இருந்துச்சு..." என கூற..

"அப்படி என்ன வேலையோ.ஆனா இன்னைக்கு புதுசா யாரோ கணக்கு வாத்தி வராங்களாம்.. பரவாயில்லை அதுக்குள்ள வந்துட்ட" என நித்தி கூறவும் தீரன் வரவும் சரியாக இருக்க...  பூவிழி பேயை கண்டது போல் விழி விரித்து பார்த்து கொண்டிருக்க அவளின் கையை பிடித்து இழுத்தவள் தன் அருகில் அமர வைத்தாள்... "என்னது சாரா.. கொஞ்சம் ஓவரா பேசிட்டேன். கடவுளே காப்பாத்து..' என மனதில் வேண்டிக்கொண்டாள். ஆனால் அவனோ இவளை கண்டால் கூட ஒதுங்கி விடுவான்.. அன்று மட்டுமல்ல இவளை பார்க்கும்போதெல்லாம் அமைதியாக கடந்த தீரனின் மேல் நல்மதிப்பு உண்டாகி காலப்போக்கில் காதலாக மாறியது என்னவோ உண்மை தான்..

இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று..... நம்ம கையில ஒண்ணும் இல்லை..!!

*******

மாலை கல்லூரியிலுருந்து வந்தவள் தன் கை பையை பெட்டின் மீது தூக்கி எறிந்துவிட்டு கதவை தாழ்ப்பாள் போட்டவாறே தன்னவனிற்கு அழைத்தாள்.

"ஹாய் மாமா... நம்ம எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்.."என நித்தி கேட்க

"அது இந்த ஜென்மத்தில நடக்காது.." என மித்து சொல்ல

"ஏன் நடக்காது..."

"இங்க பாரு மதி நான் உன்னை லவ் பண்ணலை... ஜூஸ்ட் உன்னை பார்த்தேன். அதுக்கு பேரு சைட் அடிக்கறதுன்னு கூட வைச்சுக்கலாம்.  ஆனா லவ் பண்ணலை. லவ் பண்ணா மட்டும் தான் கல்யாணம் பண்ணிக்க முடியும். சும்மா சும்மா என்னை தொந்தரவு பண்ணாம இரு.." என கூறியவனிடம்

"பொய் சொல்லாத மித்து பையா... உன்னை பத்தி எனக்கு நல்லாவே தெரியும்.  ஓவரா பொய் சொல்லி சமாளிக்காத.." என நித்தி கூற...

" நான் எதுக்கு சமாளிக்க வேணும் சொல்லு.. உண்மையை தான் சொல்றேன்..நான் உன்னை சைட் தான் அடிச்சேன்.. மத்தப்படி ஒன்னும் இல்லை" என மித்தரன் கூற

"நம்பிட்டேன் டா... பட் ஐ லவ் யூ... எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் சொல்லு.." 

"அதுக்கு வேற ஆள் பாரு. என்னை விட்ரு"என கூற..

"என்னை ஏன் டா புரிஞ்சுக்க மாட்டேன்னு சொல்ற... அப்பறம் ஏன் டா என் பின்னாடியே சுத்தி என் மனசை கெடுத்த.." என கூறியவள் கடைசி ஆயுதமான அழுகையை கையில் எடுக்க.. அதற்கும் அசராமல் பதில் கூறினான் மித்தரன்...

"இங்க பாரு நித்தி மா... ஓபனா சொல்றேன் எங்க அம்மாவுக்கு நான் எங்க சமுதாயத்தில தான் கல்யாணம் பண்ணிகனும் ஆசை புரியுதா..." என மித்திரன் சொல்ல..

"ஓகே நான் கம்யூனிஸ்டி சர்டிபிகேட் மாத்திட்டு வர..." என நித்தி கூற

"நீ திருந்தவே மாட்ட.. போனை வை டி.. நானும் கிளி பிள்ளைக்கு சொல்ற மாதிரி எடுத்து சொல்றேன் கேட்க முடியாதுன்னு இருக்கறவக் கிட்ட என்ன சொல்ல முடியும் போ டி எருமை..." என திட்டியவன் தன் போன் காலை கட் செய்தான்...

"அவனின் உரிமை பேச்சில் அழுது கொண்டிருந்தவளின் முகத்தில் சிறு புன்னகை பூசியது...."இரு டா உனக்கு இருக்கு... என்னை தவர வேற எவ கழுத்தில தாலி கட்டுவேன்னு நானும் பார்க்க தானே போறேன்..' என மனதில் தன்னவனிடம் கூறியவள் தன் படுக்கையில் விழுந்தாள்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro