அவன் 16
ப்ரியாவுடன் சேர்த்து இழையையும் அவளிற்கு தெரியாமல் வேகேட் செய்தவன் சபரியையும், பிரியாவையும் வழியனுப்பி விட்டு வரவே பாதி இரவாகிருந்தது..!!
இரவின் ரம்மியமான வெளிச்சத்தில் தன் வாகனத்தை மிதமான வேகத்தில் செலுத்தி கொண்டிருந்தவனின் மனத்திலோ ஆயிரம் ஆயிரம் கேள்விகள்கள் இருந்தாலும்....!! தன்னவளின் மௌனம் அவனை கொல்லாமல் கொன்றது..!! மதியம் அவனிடம் காரில் வைத்து பேசியது தான்.. அதற்கு மேல் அவளும் பேசவில்லை... இவனும் ஏன் பேசவில்லை என கேட்கவுமில்லை..!! ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தபடியே அவன் இருக்க...!!
அவனை கவனிக்கும் நிலையில் அவள் தான் இல்லை..!! மதியம் நடந்த நிகழ்வுகளில் நின்று போனது இவளின் மனது..!!!அவன் சொன்ன அந்த வார்த்தை "யாரு போன்ல பேசி இருந்தாலும் சபரி (உன்னவனின்) குரல் உனக்கு தெரியாம இருக்குமா..." எனக் கேட்டவனின் குரல் மட்டும் அவள் மனதில் ஓட அன்றைய கசப்பான நிகழ்வுகள் அனைத்தும் அவளின் மனக்கண்ணில் தோன்றி மறைந்தது.! கண்மூடி சாய்ந்து கொண்டவளின் நினைவுகளை முழுவதும் ஆக்கிரமித்து இருந்தது இழையின் இனிமையான காதல் நினைவுகள்..
"அவளின் காதலின் ஆழத்தில் அவனின் பிம்ப நிகழ்வுகள்..
"சின்ன வயசுல இருந்தே நானும் மகேஸும் ஒரே பள்ளிக்கூடம் தான்.. போகும் போதும் சரி வரும் போது சரி எங்க இரண்டுப் பேரையும் கூட்டிட்டு வரதும், போறதும் என் பெரிய அத்தான் தான்..(பார்த்திபன்) எனக்கு எங்க பெரிய அத்தான்னா ரொம்ப பிடிக்கும்.. என்ன கொஞ்சம் அவரைப் பார்த்த பயம் ஏன்னா எனக்கும் ,இவனுக்கும் ஐஞ்சு வருஷம் முத்தவரு... பார்க்க பெரிய கிடாய் மாதிரி இருப்பாரு..!! நான் அவரோட இடுப்புக்கு தான் இருப்பேன் தெரியுமா.. கரடுமுரடான ஒரு ஆள் என் பெரிய அத்தான்...!! அதனால தான் என்னமோ அவர்கிட்ட நான் அதிகம் பழகினதும் இல்லை, அதிகம் பேசினதும் இல்லை...!! ஆனா என் செல்லம் பெரிய அத்தானுக்கு ஜஸ்ட் அப்போசிட்..!! அழகான கரடி பொம்மை மாதிரி இருப்பான் என் மகேஷ் என்னோட ஆசைக் கரடிக்குட்டி....!! எனக்கும் அவனுக்கு ஒரே வயசுங்கறதுனாலயோ என்னவோ சின்ன வயசுல இருந்தே எனக்கு அவனை ரொம்ப பிடிக்கும்.! ஒரே ஸ்கூல், ஒரே கிளாஸ்.. அப்படின்னு என் பக்கத்திலேயே இருப்பான்.! ஸ்கூல் முடிக்கற வரைக்குமே நான் என்ன பண்ணாலும் அந்த செயல்ல மகேஷ் இருப்பான்.. வீட்டில கூட நான் எங்காவது போறேன்னு சொன்னா போதும் அம்மா சொல்ற ஒரு வார்த்தை மகேஷ் கூட போ... மகேஷ் வா.. மகேஷ் கூட விளையாடு...!! மகேஸும், நீயும் கடைக்கு போயிட்டு வாங்க... மகேஸும், நீயும் உட்கார்ந்து படிங்க.. நான் எங்க எப்படி போனாலும்..மகேஷ்...மகேஷ்...
மகேஷ்... என் சந்தோஷம் ,என் துக்கம், என் நண்பன், என் காதலன் எல்லாமே அவன் மட்டும் தான்..!! சின்னவயசுல இருந்து இப்ப வரைக்கும் அவன் கூட மட்டும் தான் இருக்கேன்...!! அவன் பண்ற அலப்பறை கொஞ்சம் மட்டும் இல்லை ரொம்ப அதிகமா இருக்கும்...!! எனக்கு தெரிஞ்சு எட்டாவதுல இருந்தே லவ் பண்றன்னு சொல்லிட்டு சுத்தனவன்.. அவனோட லவ் எல்லாம் அந்தந்த வருஷம் ரிலீஸ் ஆகிற படத்தை பார்த்து தாங்க வரும்...
அப்போ சம்திங் சம்திங் படம் ரிலீஸ்னு நினைக்கிறேன் அதை பார்த்துட்டு வந்து அவன் பண்ண அலப்பற இருக்கே முடியல டா சாமி.. அப்போ என் கிளாஸ்ல கவின்னு ஒரு பொண்ணு இருந்தா அவகிட்ட லவ் சொல்றன்னு பேருல.. வீட்டில எனக்கு கட்டி வைச்சிருந்த மல்லிபூவை தூக்கிட்டு வந்து உனக்கு எனக்கும் சம்திங் சம்திங்னு அந்த புள்ளைக்கு கொடுத்துட்டா... அந்த ஒரு வாரம் fulla உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங்ன்னு சொல்லிட்டு அந்த புள்ளைப் பின்னாடியே சுத்தனா..!! நான், அவன் எல்லாம் 90கிட்ஸ் பா.. ஒரு மல்லியோ இல்லை, அல்லியோ எதை கொடுத்தாலும் அது எங்களுக்கு லவ் தான்..! அதே மாதிரி தான் இவனும்.. அதுக்காக இவன் பிலே பாய் எல்லாம் இல்லைங்க.!! சரியான லூசு பையன்.. எனக்கு தெரியும் இவனை பத்தி ஒரு பொண்ணுகிட்ட முழுசா பேச மாட்டான்..!! ஆனா பத்து பொண்ணை லவ் பண்ணன்னு ஊரு முழுக்க சொல்லிட்டு ஸீன் போடுவான் பொறுக்கி.. (என் அழகான பொறுக்கி.!! )
ஸ்கூல் முடிஞ்சுதுக்கு அதுக்கு அப்பறம் நான் வேற காலேஜ், அவன் வேற காலேஜ்ல சேர்ந்தோம்...!! என்னைவிட அவன் நல்லா படிப்பான்... சொல்லப்போனா அவனுக்கும் டாக்டர் சீட் கிடைச்சுது. ஆனா சூர்யா படம் பார்த்துட்டு வந்து போலீஸ் தான் ஆவேன்னு அடம்பிடிச்சு ஆர்ட்ஸ் ஜாய்ன் பண்ணிட்டான்.. அதுக்கு அப்பறம் நான் வேற காலேஜ், வேற ஊருன்னு எல்லாம் மாறி போச்சு.!! ஆனா என் மனசுல என் மகேஷ்கு இருந்த இடம் மட்டும் காலியாவே இருந்துச்சு..!! ஸ்கூல்ல படிக்கற வரைக்கும் அவன்கூட உலகம் பூரா சுத்தி வந்தவ அவனை விட்டு பிரிஞ்சு போன ஒவ்வொரு நாளும் என் மனசு அவனை தேடிச்சு.! ஏதோ அஃபக்ஷன்னு நினைச்சேன் விட்டுட்டேன். ஆனா அவன் காலேஜ்ல வேற ஒரு பொண்ணை லவ் பண்றன்னு சொல்லும் போது இனம் புரியாத கோபம் அதெப்படி அப்படி பண்ணலாம்னு கோபம் வந்துச்சு...!! ஆனால் அதுவும் இரண்டு நாளில்ல breakup பண்ணிடான்னு தெரிஞ்சதும் எனக்கு அத்தனை சந்தோஷம்...! அடுத்தடுத்த வந்த ஒவ்வொரு நாளும் எனக்கு அவனை நினைச்சு அவ்ளோ பெருமையா இருந்துச்சு.. அவன் சொன்ன மாதிரியே பத்தொன்பது வயசுலயே போலீஸ் எக்ஸாம் எழுதினான்... ஒரு வருஷம் தப்பி போச்சு ஆனால் அடுத்த வருஷம் செமயா பாஸ் ஆனா. சும்மா கெத்தா காலரை தூக்கிவிடுகிற மாதிரி பாஸ் பண்ணான்..!! அடுத்தடுத்து அவன் வளர்ச்சி அதிகமா ஆச்சு..! ஆனால் அவனுக்கும் எனக்கும் இருந்த அந்த இடைவெளி அதிகமாயிட்டே இருந்துச்சு.! அந்த இடைவெளி அவனை நான் பிரிஞ்சு இருந்த அந்த இடைவெளி தான் நான் செஞ்ச ரொம்ப பெரிய தப்பு..!! நானும் அவன் கூடயே இருந்து இருந்தா...!! இவன் இப்பவும் என்னோட மாகேஸா, நல்லவனா இருந்து இருப்பானோ என்னவோ..!!
கிட்டத்தட்ட நாலு வருஷம் கடகடன்னு போயிருச்சு..!! நான் ஊருக்கு போனா பார்த்தா சிரிப்பான். நானும் சிரிப்பேன் அவ்ளோதான்..என் வீட்டுக்கு வருவான் என்னைத் தவிர எல்லாரும் அவன் கூட சிரிச்சு சிரிச்சு பேசுவாங்க.. அவனும் அப்படித்தான் என் தங்கச்சி கிட்ட ரொம்ப வழிஞ்சு பேசுவான் இடியட்..!! இந்த நாலு வருஷ இடைவெளியில மித்து எங்க வீட்டுக்கு அடிக்கடி வந்து தங்கிட்டு இருக்கான்.. அப்படி ஒரு நாள் நானும், மித்துவும் ஊருக்கு வந்துட்டு திரும்பி போகும் போது எதற்சியா அவனை பார்த்தேன்.. யார்க்கிட்டையோ மும்மரமா பேசிட்டு இருந்தான்... நான் அவன் பக்கம் போகும் போது அவன் போயிட்டான்..!! அதுக்கு அப்பறம் ஒரு மாசம் அப்படி இப்படின்னு நல்லா தான் போச்சு... அந்த நாள் வரவரைக்கும்...!!
###################
கால்கள் இரண்டும் காற்றில் மிதக்க... கைகள் இரண்டும் தன்னாலேயே எதையோ பற்றிக்கொண்டது.. இடையில் ஒரு வலியக் கரமும்.. கால்களை பிடித்தது போல் ஒரு கரமும் இருக்க... ஏதோ பழக்கப்பட்ட வாசனை நாசியில் துளைக்க சட்டென்று தன் மான் விழிகளை திறந்தவள் அறை முழுவதும் இருட்டாக இருக்க... "அம்மமாமமமாம்ம்மா"என இழையினி கத்த...அவளின் கத்தலில் மிரண்டவன் பொத்தென்று கீழே அவளை போட்டவன்...
"ஐயோ என்ன டி ஆச்சு என்ன ஆச்சு..." என பதட்டத்துடன் மகேஸ் கேட்க..
"ஐயோ இடுப்பு போச்சே... ஐயோ வலிக்குதே... ஐயோ கால் எல்லாம் ஓடைஞ்ச மாதிரி வலிக்குதே..." என இழையினி கத்தவும்..
"ஐயோ என்ன டி...! என்ன வலிக்குது" என கூறிக்கொண்டே "இரு இரு லைட்டை போடறேன்..." என கூறியவன் இருட்டின் பிடியிலிருந்த அந்த வீடு மின் விளக்குகளால் வெளிச்சத்திற்கு வர.. தரையில் இடுப்பை பிடித்தவாறே இரு கண்களையும் இறுக்கி மூடிக்கொண்டு கத்தி கொண்டிருந்த தன்னவளின் அருகில் சென்றவன்..
"வினிமா ஏன் டி என்ன ஆச்சு ஏன் இப்படி கத்தற.. " என மென்மையாக கேட்க...
தன்னவனின் குரலில் இறுக மூடியிருந்த கண்களை திறந்தவள் வெளிச்சம் இருக்கவும் ஒரு கையால் இடிப்பை பிடித்து கொண்டே அவனை முறைத்தாள்...
"ஏன் டி கத்தனா..."
"நீ ஏன் டா கீழே போட்ட.."
"நீ கத்தனதும் நானும் பயந்து, நீ என் கையில இருக்கறது மறந்துட்டு கீழ போட்டுட்டே.." எனக் கூறியவனை முறைத்தவள்
"எதுக்கு டா என்னை தூக்கிட்டு வந்த."
"நீ காரிலேயே கும்பகர்ண மாதிரி தூங்கிட்டு இருந்த, எழுப்பி விட்டேன் நீ தூங்கிட்டே இருந்த அதான் தூக்கிட்டு வந்தேன்.."
"யூ இடியட்... எதுக்கு டா என்னை இங்க தூக்கிட்டு வந்த..."
"அதான் சொன்னனே நீ தூங்கிட்ட.. நான் தூக்கிட்டேன் அவ்ளோதான்.."
என மகேஷ் சொல்லவும்
"இனிமே என்னை தொட்ட.. அவ்ளோதான் பார்த்துக்கோ..." இடிப்பை கையில் பிடித்துக்கொண்டு வலியில் பேசுகிறாள் என தெளிவாக மகேஸிற்கு தெரிய சட்டென்று மீண்டும் அவளை தூக்கி கொண்டான்..
"டேய் பொறிக்கி விடுடா.. கழுத விடுடா.. என்னைத் தூக்கிட்டு போகிற அளவுக்கு யார் உனக்கு உரிமை கொடுத்தா விடுடா என்னை.." என இழையினி கத்த..
"உனக்கு எப்படி என்னை முத்தம் கொடுக்க உரிமை இருக்கோ, அதே உரிமை தான் எனக்கும் இருக்கு..." என மகேஷ் கூற கப்சிப்பேன அடங்கிப் போனாள் இழையினி..
படுக்கையில் படுக்க வைத்தவன் ப்பைன்கில்லர் ஜெல் எடுத்துக் கொண்டு அவளின் அருகில் அமர்ந்தவன் சுடியை மேல் தூக்கி அவளின் மெல்லிய இடைக்கு மருந்திட போக சட்டென்று அவனின் கையை பற்றியவள் "நீங்க ஆணியே புடுங்க வேணா கிளம்பலாம்" என கூற...
பின்னால் திரும்பி தன் தலையை கோதி கொண்டவன் தன்னை சமன் செய்து அவளிடம் மருந்தைக் கொடுக்க அதை பெற்று கொண்டவளை சட்டென்று தன் உயரத்திற்கு தூக்கியவன் அவனின் மடியில் கிடத்தி அவளின் கன்னத்தை கடித்து வைத்தான்..
"இங்க பாரு டி நான் பாட்டுக்கு மருந்தை போட்டதும் போயிருப்பேன். ஆனா நீ தான் இப்போ சீண்டி விட்ட.. இப்படியே அடுத்த தடவ பண்ண கன்னத்தை கடிக்க மாட்டேன்.. சொல்லிட்டேன்.."எனக் கூறியவனைப் பார்த்தவள் வழக்கம் போல் அவனை தன் மனதில் கழுவி ஊத்தி கொண்டாள்..!!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro