அவன் 13
"இன்னைக்கு என்ன ???? இந்த கொரில்லா கொஞ்சம் அழகா இருக்கற மாதிரி தெரியுது..!!! என் கண்ணுல ஏதாவது குறையா இருக்குமோ, சரி என்னமோ..!! நாம நம்ம வேலையை பார்ப்போம்..!! யாரு நம்மலை கேட்பாங்க..!! நீ பாரு பூ.. உன்னை யாரு கேள்வி கேட்பாங்க..கேட்கட்டும் நான் பேசிக்கிறேன்.." என தனக்குத்தானே கூறிக்கொண்டே அங்கிருந்து நடந்து வருப்பவனை வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டிருந்தாள்..!!
"ஜிம்கு போவான் போல தடிமாடு மாதிரியே இருக்கான்... இவன் ஏன் ராகி மாவு கலர்ல இருக்கான்... ச்சே ராகி மாவு பார்க்க ஒரு மாதிரி டார்க் ரெட் கலர்ல இருக்கும்...!!! அப்போ என்ன கலர் இது..!!! ஏதோ ஒரு கலர் ஆனால் , கருப்பில்லை, மாநிறமுமில்லை..!! ஏதாவது ஒன்னு வைச்சுப்போம்..!! கண்ண பாரு டா சாமி என்ன ஒரு திமிரு...!! கொஞ்சமாவது சிரிக்கிறானாப்பாரு கொரில்லா.. அந்த முடிக்கு அப்படி என்னத்த போட்டு வளர்ப்பானோ தெரியல இவ்வளவு அடர்த்தியா இருக்கு..!! பாவம் அந்த முடி வேற அவனுக்கு அடங்கவே மாட்டிங்குது கை நிக்காம கலைச்சு விட்டுட்டே வரான்".! என வாய்விட்டே கூறிக்கொண்டவளின் மனதில் அவளையும் அறியாமல் அவனை வர்ணித்தது...
ஆறடி ஆண் மகன்...
கருமைநிற கண்ணன்..
அழகிய திமிருடையவன்..
சிரிப்பு என்றால் என்ன விலை... எனக்கேட்கும் அழகிய கோபக்காரன் அவனே தீரன் என்கிற அதீரன்.. !!
அடடா கலக்கற பூவிழி உனக்குள்ள இவ்வளவு திறமையா..!! உன்னை அடிச்சுக்க ஆளே இல்லை...' என தன்னைத்தானே பாரட்டிக் கொண்டவள்
அவனையே வெறித்து ( அவ பாஷையில இதுக்கு பேரு சைட் அடிக்கிறது..)) பார்த்துக்கொண்டிருந்தவளை தலையில் தட்டினாள் நித்தியமதி...
தலையை தேய்த்துக்கொண்டே பின்னாடி திரும்பி முறைத்தவளைப் பார்த்து சிரித்தவள் " இப்போ எதுக்கு தீரன் சாரையே வெறுச்சு வெறுச்சு பார்த்துட்டு இருக்கவ..."என கேட்ட நித்தியாவிடம்
"என்னை பார்த்தா முறைக்கற மாதிரி இருக்கா.."
"அப்போ நீ முறைக்கலையா.."
"இல்லை சைட் அடிக்கிறேன்.." என கூறி நகத்தை கடித்துக்கொண்டே கீழே குனிந்தபடி சொல்ல
"கீழே என்னத்த டி தேடிட்டு இருக்க"
"ஏய் நான் வெட்க படறேன் டி.." எனக்கூறி மீண்டும் தரையை பார்க்க
" ஓஒ இதுக்கு பேரு தான் வெட்கமா.."
"ஆமா டி. இப்படி தான் வெட்க படுவாங்க..நீ மூவில பார்த்தது இல்லை."எனக்கூறி மீண்டும் கீழே குனிய...
"அடியே போதும் டி போதும் இதுக்கு மேல எதுவும் பண்ணவேணா..என்னால பார்க்க முடியல.."
"ஏன் டி நான் வெட்கப்படறது நல்லா இல்லையா" எனக் கேட்டவளை முறைத்தவள் "இதை வேற ஓப்பான சொல்லனுமா டி.. ஒழுங்கா கிளாஸ் வா டி' என கூறியது மட்டுமல்லாமல் வகுப்பறைக்கு அவளை இழுத்துக் கொண்டு சென்றாள் ..!!
********
தன் மடியில் தலை வைத்து உறங்கி கொண்டிருப்பவளின் தலையை மென்மையாக தடவியவன் "வினிமா எழு ..."என மென்மையாக காற்றிற்கும் கேட்காத குரலில் அழைக்க...
" ம்ம்ம்" .....!!
'ஐயோ என்ன இவ கூப்பிட்டதும் ம்ம்னு சொல்றா.. சீக்கரம் முழிச்சுடுவா போலயே.. இவ எழுந்து நம்மலை திட்டறதுக்குள்ள நம்ம எழுப்பி இவளை திட்டிட வேண்டியது தான்..." என மனதில் நினைத்தவன் அவளை எழுப்பினான்
"அடியே குந்தாணி உன் பிரண்ட்
icu ல முடியாம இருக்கா..!! ஆனா நீ இங்க குறட்டை விட்டுட்டு தூங்கிட்டு இருக்க..!!
"ம்ம்ம்" என தலையணையில் முகம் புதைப்பது போல் அவனின் மடியில் முகம் புதைத்துக் கொள்ள..
"ஐயோ படுத்தி எடுக்கறாளே..!! ஹாஸ்பிடல் பெஸ்ஸேஜ்ல உட்கார்ந்துட்டு இருக்கோம் டி.. பெட் ரூமில இல்லை.. என மனதில் நினைத்தவன் வெளியில்
"அட ச்சி எழு... உன் ஜலவாயால என் பேண்ட் எல்லாம் நலஞ்சு போச்சு டி..." என அவஸ்தை குரலில் கோபமாக கூற...
மெல்ல கண் விழித்து அன்னார்ந்து பார்த்தவள் அவன் திட்டியதை
காதில் விழாதவள் போல் " ஆமா அவ நார்மல் வார்டுல தானே இருக்கா.. icu ல இல்லையே "
"கின்னஸ் சாதனை டி.. அவ icu ல இல்லன்னு நீ கண்டுப்பிடிச்சது..!!" என மனதில் நினைத்து கொண்டவன்
"ஆமா நார்மல் வார்டுல தான் இருக்கா..!! உன்னை எழுப்பி விட அப்படி சொன்னேன்...!! ப்ரியா கண்ணை முழிச்சுட்டா..!! அவகிட்ட ஏன் இப்படி பண்ணனு விசாரிக்கணும் எழு..."
"விசாரணை பண்ணனும்னா நீ போடா..!!. என்னை ஏன் டா எழ சொல்ற.."
" அடியே குந்தாணி நீ எழுந்தா தான் டி என்னால எழ முடியும்..!"
"டேய் பூதி குரங்கு நான் பெஞ்சில தானே படுத்து இருக்கேன்.. என்னமோ உன் மடில தூங்கற மாதிரி ஸீன் க்கிரியேட் பண்ற.." என கண்ணை மூடிக்கொண்டே கத்த....
"யாரு ஸீன் க்கிரியேட் பண்றாங்க
சோத்து மூட்டை...!! உண்மையவே நீ என் மடிமேல தான் டி படுத்துட்டு இருக்க..!! எழுந்து தொலை டி. கால் வலிக்குது..!!!" என இவனும் அவளிற்கு இணையாக கத்த...
காது இரண்டையும் மூடிக்கொண்டவள்
"இப்போ என்ன அதுக்கு...!. நேத்து மால்ல அவளைக் கட்டிப்பிடிக்கும் போது மட்டும்"...என அவள் தொடங்கும் முன்னறே "அம்மா தாயே ஏதோ தெரியாம சொல்லிட்டேன் நீ தூங்கு.." என அவளை தட்டி விட... கண்களை இறுக மூடியவள் சட்டென்று எழுந்து "ஆமா நான் உன் தோள் மேல தானே சாஞ்சே எப்படி உன் மடிமேல படுத்தேன்..." என கேட்க..
"ஹிம்ம் என் தோள் மேலிருந்து தோப்புக்கடிர்ன்னு கீழ விழ போனயா..!! நான் அப்படியே உன்னை கேட்ச் பிடிச்சு என் மடிமேல படுக்க வைச்சுட்டேன்.." என கூறியவனை முறைத்தவள் கொட்டாவி விட்டுக்கொண்டே மீண்டும் அவன் மடியிலயே படுத்துக் கொண்டாள்..
"வேணும்னே இம்சை பண்றா குந்தாணி..!!! நான் இவ பக்கத்தில போனா ஏதோ இவளை கசமூச பண்ண போற மாதிரி கத்துவா... ஆனா இவ இப்படியெல்லாம் பண்ணலாமா..??? எனக்கும் கற்புன்னு ஒன்னு இருக்கு..!டேய் குந்தாணி புருஷா அவளை எழுப்பி விடு டா.. என நினைக்கவும் அவள் சட்டென்று எழுவும் சரியாக இருந்தது..!! எழுந்தவள் அவனை பார்த்து "டைம் என்ன" என கேட்க..
"10 மணி இருக்கும் ஏன் கேட்கற.. "
"என்னது 10 மணி இருக்குமா.. டேய் குரங்கு... முன்னாடியே எழுப்ப மாட்டாயா அறிவில்லையா உனக்கு..!" என கேட்டவளிடம்
"அது எப்படி டி லேட்டா எழுற எல்லாம் அரலூசுங்களும் இதுவே சொல்லி திட்டிட்டு இருக்கீங்க..!! நான் உன்னை எழுப்பன...!! ஆனால் நீ என் மடிமேல ஜம்னுப் படுத்து ஹாயா தூங்கிட்டு இருந்ததும் இல்லாம என்னை திட்ட வேற செய்யறயா.." என கூறியவனிடம்
"எதுக்கு டா என்னை உன் மடில படுக்க வைச்ச..!! அதான் நான் லேட்டா எழுந்தேன்.. இப்போ பாரு 10 மணி ஆயிருச்சு...!!" என கூறி கொண்டே எழுந்து நின்றவள் " எதுக்கு இப்போ இப்படி முழிச்சுட்டு இருக்க..!! எழுந்து வா டா..!! அவளுக்கு சாப்பாடு கொண்டு வரணும்" எனக்கூறி சென்றவளை முறைத்தவன்
"பஞ்சு மெத்தைல தூங்கற மாதிரி சுகமா தூங்கிட்டு...!! என்ன பேச்சு பேசுது பாரு குந்தாணி.!! எருமை இரு டி உனக்கு இருக்கு..!" என கூறிக்கொண்டே வலித்த கால்களை தடவியவன் அவளின் பின்னால் சென்று அவளின் கையை பற்றினான்..!!
"என்ன" என்பதை போல் பார்த்தவளிடம் பதில் கூறாமல் அவளின் களைந்திருந்த முடியை காதோரம் ஒதுக்கிவிட்டு "இப்படியே போனன்னு வை..!! வெளியில இருக்கற நாய்..!! உன்னை மட்டும் கடிக்காம உன் கூட வர பாவத்துக்கு என்னையும் சேர்த்து கடிக்கும்" என கூறிவனை முறைத்தவள் அவன் கையை தட்டி விட்டு களைந்திருந்த முடியை காதோரம் ஒதுக்கி விட்டு முன்னாள் நடந்தாள்...!!
"கார் சாவி கொடு...!! நானே டிரைவ் பன்றேன். நீ கொஞ்சம் நேரம் தூங்கிட்டு வா...!!! நான் எங்க ரூம்கு போயி ட்ரெஸ் எடுத்துட்டு வரேன்..!! நம்ம வீட்டுல போயி குளிச்சிட்டு சாப்பாடு செஞ்சுட்டு வரலாம்" என கூறியவளை இமைக்காது பார்த்தான்..!!
அவளின் "நம்ம வீடு..." எனும் சொல்லில் மகிழ்ந்தவன்.. இதழில் மெல்லிய புன்னகையுடன் சரியென தலையை ஆட்டினான்..!!
பின் ஏதோ யோசித்தவன் காரின் கதவை திறக்க போனவளை அவசரம் அவசரமாக நிறுத்தி "உனக்கு டிரைவ் பண்ண கால் எட்டுமா டி" எனக் கேட்டவனை மூக்குமுட்ட முறைத்தாள் இழையினி...அவளின் முறைப்பில் அமைதியானவன் காரில் ஏறி அமர சிறிது நேரத்தில் உறங்கிவிட இழையினி தங்கி இருந்த வீட்டிற்கு சென்று தனக்கு தேவையான அனைத்தும் எடுத்து கொண்டவள் அருகில் இருந்த மார்க்கெட்டில் உணவிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டவள் மணியை பார்க்க 11 மணி என காட்டியது..!!
மீண்டும் காரை மகேஷ் தங்கி இருக்கும் வீட்டிற்கு செலுத்தினாள்... நேற்று மாலில் அவனது முகவரியை வாங்கியதினாள் கூகுள் மேப்பை பயன்படுத்தி அவனின் வீட்டிற்கு காரை செலுத்தினாள்.. காலணியின் அருகில் வந்தவுடன் அவனை எழுப்ப தன்னவனை பார்க்க அவனோ அசந்து தூங்கிக் கொண்டிருக்க!! மெல்ல சிரித்தவளின் எண்ணத்தில் நேற்று இரவு நடந்தது நிழல் போல் காட்சியளித்தது...!!
குறிப்பிட்ட நேரத்தில் வந்தவன் பிரியாவை அருகிலிருந்த ஹாஸ்பிடலில் அவளை சேர்த்தனர்..மகேஷ் போலீஸ் என்பதால் எந்த கேள்வியும் கேட்காமல் சிகிச்சையை ஆரம்பித்தனர்..
காலையில் சிரித்த மல்லிக்கொடியாய் இருந்தவள் இப்போது கசங்கிய காகிதம் போல் இருந்தவளை பார்க்க துக்கம் தாளாமல் இழை கண்ணீர் வடிக்க அவளை தன் தோளோடு அணைத்து ஆறுதல் படுத்தினான் மகேஷ்..
"ஒன்னும் இல்லை இழை மா..ம் அவ நல்ல தான் இருக்க..!! என சாதுவாக ஆரம்பித்து "ஓகே இப்படியே அழுத்துட்டே இருந்தா..!! அவ கைல இருந்த காயம் சரியா போயிடுமா... இல்லை அவ எழுந்து தான் வருவாளா..!! சரி வா உட்காரு... இப்படியே நிக்கலாம்னு முடிவு பண்ணிட்டியா டி.. இந்த தண்ணியவது குடி டி.. ஏய் அப்படியே அரைஞ்சேன்னு வை. ஒழுங்க இந்த தண்ணியை குடி.. ஏதாவது பேசு டி.. இப்படியே இருக்கலாம்னு முடிவே பண்ணிட்டியா..." என கோபமாக கேட்டும் கூட அவை அனைத்தும் காற்றில் தான் போனது..!!! பொறுமையிழந்தவன் அவளை இழுத்து அருகில் இருந்த பெஞ்சில் அமர வைத்துவிட்டு தானும் அருகில் அமர அவன் தோளில் சாய்ந்து கொண்டவள்..."அவங்க அம்மா எங்கிட்ட ஒரு ஆயிரம் தடவ அவளைப் பார்த்துக்கோ.. பார்த்துக்கோன்னு.. சொல்லி அனுப்பானங்க..!! எனக்கூறி முடித்து தேம்பி அழும் சத்தத்துடன் "அவங்க வந்து இப்போ எங்கிட்ட கேட்டா...!! நான் என்னை பதில் சொல்லுவேன்..! நான் அவளை நல்ல பாத்துக்கல தானே..!! ஏன் இவ இப்படி பண்ணா.. !! அவ நல்லாயிடுவா தானே பூபதி.."எனக் கூறிக்கொண்டே தேம்பியவள் தன் மூக்கையில் வளியும் நீரை( சளியை) அவன் சட்டையில் தோய்த்து கொண்டாள்..! அந்த நிமிடத்தில் அவனின் முகம் போன போக்கைப் பார்த்தவள் கிளிக்கி சிரித்தாள்..!! இதழில் புன்முறுவலுடன் கண்மூடியவள் எப்போது உறங்கினாலேன அவளிற்கே தெரியவில்லை...!! அவனின் அருகாமையிற்கு ஏங்கிய உள்ளம் இன்று அவனின் அருகாமையில் மெய் மறந்து தூங்கினாள்.. சிறு வயதில் இருந்தே அவனைவிட்டு கொஞ்சம் கூட பிரிந்தது இல்லை.! இந்த இரண்டு வருடப்பிரிவே அவளை கொஞ்சம் மாற்றி இருந்தது..!!
அவனையே இமைக்காமல் பார்த்தவளின் கண்களில் அவன் மேலிருந்த வெறுப்பு மறைந்து காதல் மீண்டும் துளிர் விட்டது.. பாவம் இன்று துளிர் விட்ட காதலிற்கும் சில மணி நேரம் தான் என அவள் அறிந்திருக்க மாட்டாள்
"அடியே குந்தாணி எதுக்கு இப்போ என்னையே வைச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு இருக்கவ..!! நான் அழகு தான்..!! அத்துக்குன்னு இப்படியா விடாமல் சைட் அடிக்கிறது..!! எனக்கும் வெட்கமா இருக்காதா..! ஒரு இருபத்தி ஐஞ்சு வயசு பையனை இப்படியா முழுங்கற மாதிரி பார்ப்ப டி..! என்றவனின் கூற்றில் தன்னிலைக்கு வந்தவள் அவனை முறைத்துவிட்டு "இங்க எங்க நம்ம வீடு இருக்கு.." என கேட்க..வழியை கூறி அவளையே இமைக்காது பார்த்துக்கொண்டே வர.! அவளிற்கு தான் இம்சையாகி போனது அவனின் பார்வை.. "பச்சையா மாட்டிக்கிட்ட இனியா.. நீ அவனை இப்ப பார்த்த, உன்னை ஒட்டியே ஒரு வழி ஆக்கிடுவா..என நினைத்தவள் அவனை திரும்பி கூடப்பார்க்காமல் காரை ஒட்டினாள்.!
அழகான காலணி போன்று இருந்தது.!! சுற்றிலும் கட்டிடங்களின் மத்தியில் இருந்தது இவர்களின் ஓற்றை அடுக்கு மாடி வீடு வெளியே கார்டன் போல் இருந்தது..!! அதை ரசிக்கும் நிலையில் இவள் இல்லை என்பதால் கதவை திறந்ததும் உள்ளே நுழைந்தவளின் கண்ணில் பட்டது..பூமேக்ஸ் *poomex* உள்ளாடைகள் " டேய் நாயே நடு ஹாலில இதை ஏன் டா தொங்க விட்டு இருக்க...! அறிவுக்கெட்ட பன்னி, குரங்கு" என இவள் கத்த..! சட்டென்று அவளை தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தவன் அதனை கையில் எடுத்து கொண்டு "நீ ஏன் டி இதெல்லாம் பார்க்கற.. கண்ணை மூடிட்டு இதோ அங்க இருக்கற ரூம்க்கு போ..."என கூற
தலையில் அடித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்..!!
"டேய் பொறுக்கி சோப்பை ஏன் டா ஊற வைச்சு இருக்க..!!பாத்ரூம்ல ஏன் துணி இப்படி தொங்கிட்டு இருக்கு..?? பாத்ரூம்ல ஏன் ஸ்மெல் வருது...?? ஐயோ என்ன கருமம் டா இது... ஈ..யெ..க்கு....ச்சி..!!! .டேய் பொறிக்கி இது என்ன டா பியர் பாட்டலை கிச்சன்ல வைச்சு இருக்க...!!! ஐயோ கரப்பான் பூச்சி..!!" என கூறக்கூற தலையில் கை வைத்து "ஐயோ இவ என்ன படுத்தறா...." என நினைத்தவன் அவள் அலறி கத்தும் பக்கமெல்லாம் இவனும் ஓடினான்..!!
"ஒரு வேளை சாப்பாட செய்யறதுக்கு எவ்ளோ குறை சொல்றா இந்த குந்தாணி..." என நினைத்த அடுத்த நிமிடம் அவளின் கத்தல் கிச்சனில் கேட்க அங்கு சென்றான்... "குப்பை தொட்டியில குப்பை கொட்டி இருக்கு.. இந்த குப்பையை கொட்டிட்டு வா..!! ஆமா இது என்ன டா ப்லேட் எல்லாம் கருகி இருக்கு அதற்கு என்ன காரணம் என்று ஊகித்தவள் "சாப்பாட்டை கடையில வாங்கிட்டு வந்தா..!! உடனே சாப்பிட வேண்டியது தானே.. யாரு பிளேட்ல சூடு பண்ணி சாப்பிட சொன்னா. இங்க பாரு எல்லா சமானமும் அழுக்க இருக்கு. டேய் இதை நீ வாஸ் பண்ணு என்னால முடிலை...!! டேய் அதை கூட்டி விடு..!! ஹால தொடச்சு விடறேன் காத்தாடியை போட்டு விடு..!! சாப்பாடு அடுப்பில வைச்சு இருக்கேன் 2 விசில் வாந்தா ஆஃப் பண்ணு.. டேய் இந்த வெங்காயத்தை கட் பண்ணு..!!டேய் இந்த துணியை காய போடு..! அந்த டிபன் பாக்ஸ் எனக்கு எட்டளை நீயே எடுத்துக் கொடு..." என ஆயிரம் வேலைகளை வாங்கி ஒரு வழியாக சமையலை முடித்துவிட்டு ஹாஸ்பிடல் கிளம்ப மதியம் இரண்டை தாண்டிருந்தது...!!!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro