பகுதி 16
" என்னடா சுதீப் சந்தர காணோம்.ஆனால் இவரு.இவ்ளோ உற்சாகமா பேசுறாரு அப்படீனு நீங்க நினைக்கிறது எனக்கு புரியுது. இந்த கேஸ் உண்மையிலயே எனக்கு ரொம்ப சவாலா இருந்துச்சு குற்றவாளியை நெருங்குற மாதிரி.இருக்கும் ஆனால் திடீரென தொடங்குன இடத்துலயே கொண்டு வந்து நிறுத்திடும், இப்ப இந்த கேஸை நான் ஸால்வ் பண்ணிட்டேன். " என்று நிறுத்திய செழியன் அங்கிருந்த அனைவரின் முகங்களையும் நோட்டமிட்டான்.
பின் மெதுவாக ரித்தீஷை நோக்கியவன்," ஏன் இப்படி செஞ்ச ?? பேசி தீர்க்க முடியாத விஷயம் னு எதுவுமே இல்லை அதைவிட்டு எதுக்காக இப்படி செஞ்ச??" என்று வினவினான்.
அங்கிருந்த அனைவரின் விழிகளும் ரித்தீஷை நோக்க , அமைச்சர் அவனை நோக்கி எழுந்ததை பார்த்த செழியன் வேகமாக அவரை தடுத்து," நான் சொல்ற வரைக்கும் யாரும்.பேசவோ இருக்கிற இடத்தில இருந்து அசையவோ கூடாது," இது என்னோட கட்டளை என்று கூறினான்.
இப்பொழுது ரித்தீஷை பார்த்தவன்," சொல்லு ரித்தீஷ் ஏன் இப்படி.பண்ண??" என்று மீண்டும் வினவினான்.
" சார் நீங்க என்ன சொல்றீங்கனு எனக்கு புரியலை , நான் என்ன பண்ணுணேன்??இங்க என்ன நடக்குது??" என்று குழப்பத்துடன் வினவினான்.
" புரியாத மாதிரி நடிக்கிறதால எந்த பிரயோஜனமும்.இல்லை ரித்தீஷ் சுதீபோட இந்த நிலைங்கு காரணம் நீதானு நிரூபிக்க என்கிட்ட எல்லா ஆதாரமும் இருக்கு,கமான்....."
" சார் ப்ளீஸ்.....சத்தியமா நீங்க என்ன சொல்றீங்க னு எனக்கு புரியலை நான் எந்த தப்பும் பண்ணலை இதை என்னால உறுதியா சொல்ல முடியும் , " என்று மீணடும் கூறினான் இம்முறை அவனது குரலில் சிறு நடுக்கம் இருந்தது.
அங்கிருந்த அனைவரும் நடப்பதை புரியாமல் பார்த்துக்கொண்டிருக்க செழியனோ," கான்ஸ்டபிள் இவரை.கொண்டு போய் லாக்அப்ல வைங்க நம்ம கேக்குற விதத்தில கேட்டா உண்மை தானா வெளிய வரும் ," என்று கூறினான்.
அந்த அறையின் ஓரத்தில் நின்றிருந்த காவலர் ஒருவர் ரித்தீஷை நோக்கி வர யாரும் எதிர்பாரா வண்ணம் வேகமாக.எழுந்த உமேஷ் ," சார் அவன் தான் எதுவும் பண்ணலை னு சொல்றான் ல அவனை விடுங்க உங்களுக்கு உங்க கேஸை முடிக்கனும் னா ஒரு நிரபராதிய குற்றவாளி ஆக்கலாமா??" என்று தன் நண்பனிற்காக பறிந்து பேசினான்.
" அவன் நிரபராதி அப்படீங்கிறதை முடிவு செய்ய வேண்டியது நீயோ நானோ இல்லை கோர்ட் , நான் அவனை கோர்ட் ல ஒப்படிச்சிடறேன் ," என்று கூறியவன் அந்த காவலருக்கு கண்ணை.காட்டினான்.
" ஐய்யோ சார் அவன் ஒன்னும் பண்ணலை அவன் மேல எந்த தப்பும் இல்லை அவன் ஏன் சார் சுதீப கொலை பண்ணணும் அதுக்கு என்ன.மோடிவ் இருக்க முடியும் அவன்.நிரபராதி சார்," என்று தன் கூற்றை தெளிவுபடுத்தும் பொருட்டு அனக்கெதிரான வாக்குமூலத்தை அவனே கொடுத்தான்.
அவனை நோக்கி புன்னகை செய்தான் செழியன் .அதே நேரம் அமைச்சரை தவிர மற்ற அனைவருக்கும் சுதீபின் மரணசெய்தி புதியதென்பதால் அனைவரைம் அந்த செய்தி அதிர்ச்சியடைம செய்தது.
எல்லோரும் தன்னையே நோக்குவதையும் செழியன்.தன்னை பார்த்து சிரிப்பதையும் கண்ட உமேஷ் அப்பொழுதுதான் பதட்டத்தில் தான் உண்மையை கூறிவிட்டோம் என்பதை.உணர்ந்தான்.அவனை நோக்கிய செழியன் ," ம்....குட் உண்மையை நீயே ஒத்துக்கிட்டதுக்கு நன்றி இப்ப சொல்லு எதுக்காக சுதீப கொலை பண்ண??"
" ஆமா...ஆமா...நான் தான் சுதீப கொலை பண்ணுணேன் நான் தான் சுதீப கொலை பண்ணேன்..." என்று கத்தினான். அவனது அருகில் வந்த ரித்தீஷ் அவனது கண்ணத்தில் அறைந்து," ஏன்டா இப்படி பண்ணுண?? அவனை கொல்ல உனக்கு எப்படி மனசு வந்துச்சு??அவன் நம்ம ப்ரென்டுடா..." என்று கூற அவனை இடைமறித்த உமேஷ் ," இல்லைடா இல்லை அவன் நல்லவன் இல்லை யாராவது சந்தோஷமா இருந்தா அவனுக்கு பிடிக்காது நீயும் நானும் மட்டும்தான் சின்ன வயசுல இருந்தே ஒன்னா இருந்தோம் நமக்கு நடுவுல புகுந்தான் உன்னை என்கிட்ட இருந்து பிரிச்சுட்டான்," என்று கூறியவனது சட்டையை பிடித்த ரித்தீஷ் ," டேய்... நம்மை எல்லாரும் தானடா க்ளோஸா இருந்தோம் இதுல ஏன்டா நீ பிரிச்சு பாக்குற??" என்று கேட்டதற்கு ," இல்லை உன்னை என்கிட்ட இருந்து பிரிச்சுட்டான் நீயும் அவன் பக்கமாவே போய்ட அப்பறம் மாலினியை ஒரு ஃபேஷன் ஷோல பாரத்தேன்.எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்திருச்சு அவகூட ஃபிரன்லியா பழக ஆரம்பிச்ச அப்ப தான் சுதீபோட.கம்பெனில.வேலைக்கு போனா.அப்பறம் அவளையும் எங்கிட்ட இருந்து பிரிச்சுட்டான் , அவளும் அவன் கூட.சேர்ந்ததுக்கப்பறமா என்னை ஒதுக்க ஆரம்பிச்சுட்டா , அதான் அவனை கொன்னுட்டேன்." என்று கூறியவன் சிரித்தான்.
இதுவரை அவன் கூறியதை கேட்ட செழியன் ," இன்னும் ஒரு.விஷயத்தை சொல்லாம விட்டுட போல.இருக்கு , ம்...அதையும் சொல்லிடு ," என்று கூறினான்.
செழியனை நோக்கியவன் ," இந்த இரண்டு சம்பவத்தையும் என்னால தாங்க முடியலை அதனால நான் குடிப்பழக்கத்துக்கு அடிமையா மாறுனேன் அப்பதான் பார் ல ஒருத்தரோட அறிமுகம் கிடைச்சது அவரும் சுதீபால பாதிக்கப்பட்டவரு னு.தெரிஞ்சது , அப்பதான் முடிவு செஞ்சேன் அவன் ஒருத்தன்.உயிரோட.இருக்கிறதால எத்தனை பேருக்கு கஷ்டம் அதனால.அவனை கொலை செய்யலாம் னு முடிவு செஞ்சேன்.ஆனால் அவனை கொலை பண்ணா பழி என்மேல விழுந்திடாம கவனமா இருக்கனும் முடிவு பண்ணுணேன். ஆனால் இப்ப மாட்டிக்கிட்டேன்." என்று கூறி முடித்தான்.
" யாரு அந்த இன்னொரு நபர்? நீ யே சொல்லிடறியா ?? இல்லை நான் சொல்லனுமா??" என்று கூறிய செழியனை பிரமிப்புடன் பார்த்த உமேஷ் ," சுதீபோட தம்பி சந்தீப் சந்தர் ,சுதீப் சந்தீபோட அப்பாவோட இரண்டாவது மனைவி யோட பையன் ஆனால் அவன் முதல்ல பிறந்ததால அவன் மூத்தவனாகிட்டான் , எல்லா முக்கியத்துவமும் அவனுக்கு போயிடுச்சு அப்படீனு சந்தீப் ரொம்ப வருந்தப்படான். அதனால.தான் தன்னையே அழிச்சுக்கிறதுக்கு குடிப்பழக்கத்துக்கு அடிமை ஆகிட்டான்.அவன்.ரொம்ப நல்ல நெருங்கிய.நண்பனா மாறிட்டான் அவனுக்கு நல்லது நடக்கனும் னா அதுக்கு சுதீப் உயிரோட இருக்க கூடாது, அதான் கொன்னுட்டேன்."
" கொலை பண்ண எவ்வளவோ வழி இருக்க ஏன் சையனைட தேர்ந்தெடுத்த??"
" சார் அதுவும் உங்களுக்கு தெரிஞ்சிடுச்சா?? என்று ஆச்சரியமாக வினவிய உமேஷை நோக்கிய செழியன்.அவனுக்கு புன்னகையை மட்டுமே பதிலாக தந்தான்.மீண்டும் தொடர்ந்த உமேஷ் ," சுதீப் கொலை.பண்ண என்ன வழினு பாத்தப்ப ஒரு வெப்சைட் ல.எதேச்சையா சையனைட் பத்தி படிச்சேன் , சையனைட் யாராலயும் அவ்வளவு சுலபமா வாங்க முடியாது அப்படீனும் தங்க நகை செய்றவங்க கிட்ட அது இருக்கும் னு தெரிஞ்சுகிட்டேன். சையனைட்.யூஸ் பண்ணி சுதீப கொலை பண்ணினா.ஆட்டோமெடிக்கா பழி மாலினி மேல விழுந்திடும் மாலினிக்கும் உதய்க்கும் தொடர்பு.இருக்கிறதா ஏற்கனவே வதந்தி இருக்கு அதனால உதயையும் மாலினியையும் அரெஸ்ட் பண்ணிடுவாங்க கம்பெனி சந்தீபுக்கு போய்டும் எனக்கு என் நண்பன் ரித்தீஷ் திரும்ப கிடைச்சிடுவானு தான் சையனைட்.யூஸ் பண்ணேன்," என்று தலையை குனிந்தவாறே கூறி முடித்தான்.
தனது இருக்கையிலிருந்து எழுந்த உதய் உமேஷிடம்," இந்த மாதிரி ஒரு.எண்ணம்.உன் மனசுல.இருக்கு னு எங்க யாருகிட்டயாவது சொல்லிருக்களாமே அநியாயாமா சுதீப கொலை பண்ணி ஒரு பொண்ணோட.வாழ்க்கைஅழிச்சிட்டியே ," என்று கூறி அவனை சரமாரியாக அடிக்கத்துவங்கினான்.
அவனை விலக்கிய செழியன்," காம் டவுன்.உதய் , மனசுவிட்டு பேசுனா தீராத பிரச்சனை எதுவுமே இல்லை , கண்ரோல் யுவர்செல்ஃப்," என்று கூறியவன் அங்கிருந்த காவலரிடம் உமேஷை அழைத்த போக கூறினான்.
அந்த.காவலரிடம் திரும்பிய உமேஷ்," ஒரு நிமிஷம் சார் ,"என்று கூறிவிட்டு செழியனிடம்," சார் நான் ரொம்ப ஜாக்கிரதையா ஒவ்வொன்னும் பண்ணுணேன் அப்படியிருந்தும் என்னை எப்படி கண்டுபிடிச்சீங்க?" என்று தன்சந்தேகத்தை வினவினான்.
" எவ்ளோ பெரிய க்ரிமினலா இருந்தாலும் ஏதாவது ஒரு இடத்தில கண்டிப்பா தப்பு பண்ணி இருப்பான் ஆனால் உண்மையிலயே உன்னை பாராட்டனும் நீ ரொம்ப புத்திசாலியா இருந்திருக்க, நீ.சொன்ன மாதிரி ஆரம்பத்தில நானும் மாலினிய தான் சந்தேகப்பட்டேன், ஆனால் மாலினியை பாரத்து விசாரணை நடத்துனதுக்கு அப்பறம் இரண்டு விஷயம் புரிஞ்சது ஒன்னு மாலினிக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை அப்பறம் அன்னைக்கு.ராத்திரி 11.30 வரை சுதீபும் மாலினியும் பேசிட்டு.இருந்திருக்காங்க அப்ப சுதீபோட அறையில யாரோ.இருந்திருக்காங்க அது யாரு.னு
மாலினிக்கு தெரியலை, சோ அங்க தான் கொலையாளி வீட்டுகுள்ள இருக்கிற.ஆள் னும் சுதீபோட.பெட்ரூம் வரை வர்ற அளவுக்கு நெருக்கம் அப்படீங்கிறது .உறுதியாகிடுச்சு , இரண்டாவது அந்த மெயில் சுதீபோட லாப்டாப் ல அவனோட.அறையில.இருந்து அனுப்பினதால கொலையாளி அங்க தான் இருந்தான் சுதீப் செத்திட்டதா உறுதி.படுத்திட்டு தான் போயிருக்கானும் முடிவு செஞ்சோம்.
சுதீபுக்கு.க்ளோஸ் னா.அது நீங்க மூனு.பேரும் தான் நேத்து.உங்களை விசாரிச்ச போது.உதய் கண்ணுல.உண்மை தன் நண்பனை.காணோம் னு கவலை இருந்ததுச்சு, ரித்தீஷ் கிட்ட ஒரு அலட்சியம் தெரிஞ்சது கடைசியா உங்கிட்ட எங்க உண்மை யை.உளறிடுவோமோ னு பயமும் நிதானமா யோசிச்சு பதில்.சொல்லாம டக் டக் னு மனப்பாடம் செஞ்ச.மாதிரியான உன் பதிலும் உன் மேல சந்தேகத்தை.தூண்டுச்சு.
கடைசியா உன் மொபைல் நெட்வொர்க் 11 மணில இருந்து 1 மணி வரைக்கும் சுதீபோட அறையில காட்டுச்சு , உனக்கு ரித்தீஷ் ரொம்ப பிடிக்கும் னு உன் பேச்சுல இருந்து தெரிஞ்சது அதான் உன் நண்பனை குற்றம் சாட்டுனேன் நீ உண்மையை ஒத்துக்கிட்ட , முருகனை ஏன் கொலை பண்ணுன , சுதீப எப்படி கொலை பண்ணுண இது.ரெண்டையும் உன் வாயால மத்தவங்களுக்கு சொல்லிட்டு நீ போலாம்," என்று கூறி தன்.இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.
தன் நிலையை குறித்து வெட்கிய உமேஷ் தலை யை குனிந்த வண்ணம்," சங்கீத் ஃபங்ஷன் முடிஞ்சு எல்லாரும் போனதுக்கு அப்பறம் நான் மட்டும் திரும்ப உள்ள வந்தேன் முருகன் தான் கதவை திறந்து விட்டான், என் மொபைல மறந்து வெச்சிட்டேனு சொல்லி சுதீபோட ரூம் குள்ள போனேன் அப்ப சுதீப் மாலினி கூட.பேசிட்டு இருந்தான். என்னை பார்த்ததும் இரண்டு நிமிஷத்தில ஃபோனை கட் பண்ணிட்டு என்கிட்ட பேச ஆரம்பிச்சான். பேசிட்டு இருக்கும் போது.ஏதோ கால் வர வேகமா பால்கனிக்கு போனான் அப்ப தான் முருகன் ஒரு கூல் டிரிங் கொண்டு வந்தான் அதை வாங்குன நான் அதுக்குள்ள சையனைடை போட்டுடேன் கொஞ்ச நேரத்தில வந்த சுதீப் அந்த கூல் டிரிங்க கொஞ்சம் கொஞ்சமா குடிக்க ஆரம்பிச்சான் நான் கிளம்ப முயற்சி பண்ணலை , அவன் பாதி குடிக்கும்போதே அவனுக்குள்ள சையனைட் வேலை செய்ய ஆரம்பிச்சது நான் அமைதியா அவன் சாகிற வரை காத்திருந்தேன் அவன் லாப்டாப் ஆன் ஆகி இருந்ததால அவங்க அப்பாவுக்கு தற்கொலை மெயில் அனுப்பிட்டு வெளிய வரும்போது திறந்த கதவு வழியா வாசல் ல காலி பாட்டில.வாங்க வந்த முருகன் சுதீப பார்த்துட்டான், அவன் கத்த போகும் போது அவனை சமாதானப்படுத்தி அவனுக்கு காசு கொடுத்தேன். அவனும் ஒத்துகிட்டான். ஆனால் போலீஸை நினைச்சு பயந்தான். அதுக்கு அவன் கையில ஒரு.மாத்திரை ய கொடுத்தேன் போலீஸ் ஸ்டேஷன் ல வச்சு வெளிய.விடலைனா இந்த மாத்திரை ய போட்டுக்கோ உனக்கு மயக்கம் வந்திடும்.அப்பறம் வெளிய.விட்டுவிங்க னு சொன்னேன்.அவனும் அதை நம்பி அதை எங்கிட்ட இருந்து வாங்கி பத்திரப்படுத்திக்கிட்டான்.அதே மாதரிஇரண்டாவது நாள் அந்த சையனைட் மாத்திரை ய சாப்டுட்டு.இறந்துட்டான்," என்று நீண்ட தன் விளக்கத்தை கூறி முடித்தான்.
அவனை.இழுத்துக்கொண்டு செல்ல.காவலருக்கு.உத்தரவிட்ட. செழியன் அமைச்சரிடம், " சார் நீங்க கொடுத்த கேஸை சால்வ் பண்ணி குற்றவாளி யை கண்டுபிடிச்சாச்சு , சுதீபோட உடல் பதப்படுத்தப்பட்டு மருத்துவமனை ல இருக்கு நீங்க அதை எப்ப வேனா வாங்கி இறுதி சடங்க நிறைவேற்றலாம்," எனறு கூறி முடித்தான்.
சோகத்துடன் தலையை மட்டுமே அசைத்துவிட்டு தளந்த நடையுடன்.சென்ற அமைச்சரை நோக்கிய செழியனின் சிந்தனையை தடைசெய்த ராம்," டேய் பாவம் டா பையனை பறிகொடுத்த சோகம்.முகதத்தில அப்பட்டமா தெரியுது இவரை போயா சந்தேகப்பட்ட ??" என வினவினான்.
" இல்லை ராம் நான்.ஒரு.பேச்சுக்கு.உங்க பையன்.இறந்த சோகத்தை இந்த.ரூம்க்கு வெளிய தெரியப்படுத்தாதீங்க னு சொன்னா உடனே மனுஷே அவ்ளோ கம்பீரமா.ஒரு உரை கொடுக்குறாரு அதான் போலீஸ் கண்ணுக்கு உடனே.தப்பா தெரிஞ்சிடுச்சு.அப்பறம் விசாரணை. ஆரம்பிச்சதுக்கு அப்பறம் அவரை நான் எங்கயுமே சந்தேகப்படலை " என தெளிவு படுத்தினான்.
அவன் முன்னே வந்த சித்தார்த் ," சார் சூப்பர் செமையா சால்வ் பண்ணீங்க வாழ்த்துக்கள் ," என கைகுழுக்க பதிலுக்கு செழியனோ ," நீங்க நிறைய உதவி செஞ்சீங்க சித்தார்த் அடுத்த கேஸை நீங்க தனியா வே ஹேன்டில் பண்ணலாம்," என கூறி சிரித்தான்.
அந்நேரம் ஒரு.காவலர்.உள்ளே.ஓடி வர ," சார் ஒரு பிரச்சனை உங்களை.உடனே பார்கனும் னு ஒருத்தன் தகறாரு பண்றான்," என்றுகூற இந்த கேஸை மறந்து அடுத்ததை காண விரைந்தான் அந்த காவலன்.
நாமும் அவனது அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற அவனை வாழ்த்தி விடைபெறுவோம்.
💐💐💐💐 சுபம் 💐💐💐💐💐
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro