பகுதி -12
தன்னையே குழப்பிய தன் நண்பன் ராமை சிறு புன்னகையுடன் ஏறிட்ட செழியன் ," நீ சொல்ற எல்லாமே சரிதான் ராம் ஆனால் சுதீபிற்கு கொடுக்கப்பட்டது சையனைட் விஷம் அது உடம்புக்குள்ள போயி வேலை செஞ்சு மனுஷனோட கடைசி மூச்சு அடங்க பதினெட்டு நிமிஷம் ஆகும்.
ஒரு மனுஷனோட உடம்புக்குள்ள சையனைட் போகுது அப்படீனா அது என்ன செய்யும் தெரியுமா முதல்ல ரத்தத்தோட கலந்திடும் , நம்முடைய ரத்தம் தான் உடம்பில இருக்குற எல்லா முக்கியமான உறுப்புகளுக்கும் ஆக்சிஜன் எடுத்துட்டு போகுது.இந்த சையனைட் ரத்தத்தில கலந்ததும் ஆக்சிஜன ப்ளாக் பண்ணிடும்.அதனால நமக்கு தேவையான உயிர் மூச்சு கிடைக்காம ஒவ்வொரு உறுப்பா இறக்க ஆரம்பிக்கும்.
முதல்ல விஷம் சாப்பிட்டதும் அவனோட தொண்டையில ஒரு வித எரிச்சல் ஏற்படும் அதுக்கப்பறம் தலை சுத்தல் வாந்தி மயக்கம் போன்ற அறிகுறி ஏற்படும் அப்பறம் மூச்சு விட கஷ்டமா இருக்கும் கடைசியா வலிப்பு வந்து இதயத்துக்கும் நுரையீரலுக்கும் தேவையான ஆக்சிஜன் தடைபட்டு மரணம் சம்பவிக்கும், இப்படிபட்ட போராட்டங்கள்ல இருக்கிற ஒருத்தனால தன்னுடைய லாப்டாப் ல ஒரு பட்டன கூட அழுத்த முடியாது, " என்று தன் பக்க வாதத்தை கூறினான்.
" செழியா சொன்னா அது தப்பாகாது ," என்று கூறியவாறு ," அடுத்த என்ன செய்யனும் செழியா இன்னைக்கு முழுக்க உன் கூட தான் இருக்கப்போறேன்,"
" தாராளமாடா அது என் பாக்கியம், சுதீபோட நண்பர்கள் மூனு பேர விசாரிக்கனும் , இவங்க மேல தான் கொஞ்சம் சந்தேகமா இருக்கு ,அதுகப்பறம் சுதீபோட காதலி நிலையை கேட்கனும் , " என்று கூறியவன் சித்தார்தை அழைத்தான்.
" என்ன சித்து சுதீபோட ப்ரெண்ட்ஸ் வந்துட்டாங்களா??"
" உதய் மட்டும் தான் வந்திருக்காரு சார் மத்த இரண்டு பேரும் இன்னும் வரலை," சித்து.
" சரி உதயை நீங்க விசாரிங்க முருகனோட உடலை போஸ்ட்மார்டத்திற்கு அனுப்பியாச்சா??செழியன்.
" ஆமா சார் எடுத்துட்டு போய்டாங்க,அப்பறம் சார் சுதீபோட காதலிக்கு நினைவு வந்திடுச்சு னு ஹாஸ்பிட்டல்ல இருந்து ஃபோன் பண்ணாங்க," என்று கூறினான்
" அப்படியா வெரிகுட் ...சரி அப்ப நீங்க சுதீபோட நண்பர்களை விசாரிங்க நான் ஹாஸ்பிட்டல் போய் சுதீபோட காதலியை விசாரிச்சிட்டு வந்திடறேன்," என்று கூறியவன் தன் நண்பனுடன் மருத்துவமனை நோக்கி சென்றான் .
**********
மருத்துவமனையின் பெயரை பார்த்த ராம் திடுக்கிட்டான்," டேய் மச்சான்.இங்க ஏன்டா வந்திருக்கோம்??"
" ம்...எனக்கு பொண்ணு பார்க்க மூடிட்டி வறியா ?" என்று கூறிக்கொண்டே முன்பே நடந்தான் செழியன்.
" இவன் கிண்டல் பண்றானா உண்மையா சொல்றானா னே தெரியலையே?? என்ன நடக்கப்போகுதோ?? என்று தனக்குள் புலம்பியவாறே அவனை தொடர்ந்தான் ராம்.
சுதீபின் காதலி மாலினியின் அறை எண்ணை ரிசப்ஷெனில் கேட்டு தெரிந்து கொண்டவர்கள் நேரே அந்த அறைக்குள் சென்றனர்.
மாலினியின் பெற்றோருக்கு முதலிலே செழியனை தெரியுமென்பதால் அவனை வரவேற்று அமர செய்தனர்.
மாலினி கட்டிலில் தலையணைகளை வைத்து அதில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தாள்.முகத்தில் சோர்வையும் மீறிய ஒரு சோகம் தெரிந்தது.
" இப்ப எப்படி இருக்கு மிஸ்.மாலினி??"செழியன்.
" பரவாயில்லை சார் கொஞ்சம் டயர்டா இருக்கு அவ்ளோதான்," என்று சோர்வுடனே கூறினாள்.
" உங்க வயித்துல ...."என்று தொடங்கிய செழியனின் குரலை " ஸ்டாப் இட் ......," என்ற பெண் குரல் வெட்டியது.
அந்த குரலை கேட்ட அணைவரும் குரல் வந்த திசையை நோக்க அங்கே பெண் புலி ஒன்று சினத்துடன் நின்றிருப்பதை கண்டனர்.
" ஆஹா.....ஆரம்பிச்சுட்டாங்கடா," என்று ராம் மனதிற்குள் புலம்ப அந்த பெண் நேராக செழியனிடம் வந்தாள்," உங்க மனசுல நீங்க என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க ??என் பேஷன்டை விசாரிக்க யார் உங்களை அனுமதித்தது?? அவங்களோட உடல் நிலை விசாரனைக்கு சரி வருமா வராதா அப்படீனுலாம் கேட்கனும் னு உங்களுக்கு தெரியாதா??," என்று ஆவேசத்துடன் கூறினாள்.
அவளிடம் இவ்வளவு சீற்றத்தை எதிர்பாராதவன்," ஹலோ மேடம் வார்த்தை யை அளந்து பேசுங்க நான் கமிஷனர் கேஸோட முக்கியதுவத்தினாலதான் உடனே விசாரிக்க வந்தேனே தவற நான் மனசாட்சி இல்லாத மிருகம் இல்லை ," என்று அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் கூறினான் செழியன்.
வேகமாக இருவருக்கும் இடையே வந்த ராம்," ப்ளீஸ்மா கொஞ்சம் பொறுமையா பேசு," என்று அவளிடம் கெஞ்ச ராமை ஆச்சரியமாக பார்தான் செழியன்.
அவனது ஆச்சரியத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக அந்த பெண்," ராம் அண்ணா இன்னைக்கு காலையில வரைக்கும் அந்த பொண்ணு கண்ணு திறக்கலை இப்படி திடீர்னு அவ முன்னாடி போய் கேள்வியா கேட்டா அவ திரும்ப கோமாகு போய்ட மாட்டாளா??இது சொன்னா உங்க ப்ரெண்ட் புரிஞ்சுக மாட்றாரு," என்று வருத்தத்துடன் கூறினாள்.
இப்பொழுது ராமை பார்த்த செழியன்," டேய்...இந்த பொண்ண உனக்கு முன்னிடியே தெரியுமா ??யாரு இவங்க??" என்று வினவினான்.
சரியாக அந்த நேரம் அறைக்குள் நுழைந்த ஒரு செவிலி," பூங்குழலி டாக்டர் பெரிய டாக்டர் உங்களை வரச்சொன்னாரு," ஏன்று கூறவும் அந்த பெண் யாரென்று உணர்ந்து கொண்ட செழியன் அவளை ஏறிட்டு நோக்கினான் , மாநிறத்தில் செதுக்கிய சிலை போன்று நின்றவளின் கண்களில் இன்னும் கோபம் தெரிய இமைகள் இரண்டும் படபடவென அடித்துக்கொண்டது.இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க இதற்கு மேல் இங்கே நின்றால் விபரீதமாகும் என்பதை புரிந்துகொண்ட ராம் வேகமாக செழியனை இழுத்துக்கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான்.
மந்திரத்திற்கு கட்டுபட்டவன் போல ராமின் பின் சென்ற செழியனின் மனதிலோ பல்வேறு குழப்பங்கள்.ராமின் பின் சென்றவன் வாகனங்கள் நிறுத்திமிடம் வரை அமைதியாகவே வந்தவன் தன் மௌனத்தை கலைத்து," குழலியை உனக்கு தெரியுமா??" என்று வினவினான்.
தன் நண்பனிடம் இதுவரை தான் மறைத்து வந்த உண்மையை கூறும் நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தவன்," ஆமா செழியா நீ உங்க வீட்டை பிரிஞ்சு வந்ததுல இருந்து உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு உன்னை நினைச்சு நினைச்சு அவங்க நிரந்திர நோயாளியாவே ஆகிட்டாங்க," என்று கூறியவனை இடைமறித்த செழியன்," ஓ...நான் வீட்டைவிட்டு வந்தது மட்டும் தான் உனக்கு தெரியும் போலீஸ் இன்ஸ்பெக்டரா இருந்த எங்க அப்பாவை சுட்டு கொன்னது உங்களுக்கு தெரியாது , அதனால என்னை போலீஸ் ஆகக்கூடாது னு ஒரு.குடும்பமே சதி செஞ்சது உங்களுக்கு தெரியாது , அதனால நான் வீட்டை விட்டு வெளிய வந்து ஒரு அனாதை மாதிரி வாழறது உங்களுக்கு தெரியாது எனக்கே எனக்கானவளை கூட பார்கமுடியாம நான் படுற அவஸ்தை உனக்கு தெரியாது அப்படிதானே," என்று தன் மனபாரத்தை இறக்கி வைத்தான்.
தன் நண்பனை அனைத்துக்கொண்டவன்," இல்லை செழியா எனக்கு என் நண்பனை பத்தி நல்லா தெரியும் , மத்தவங்க பார்க்குற நீ வேற ஆனால் உண்மையான இளஞ்செழியன வேற அப்படீனு எனக்கு மட்டும் தான் தெரியும்," என்று கூறியவன்," ஆனால் அவங்களுக்கும் உன்னை விட்டா யாரும் இல்லை மச்சான் அதான் அப்ப அப்ப உங்க அம்மாவையும் உன்னையே எண்ணி தவமிருக்குற குழலியையும் போய் பார்த்துட்டு வருவேன், உன்கிட்ட சொல்ல கூடாது னு இல்லை , உனக்கு பிடிக்காது னு தான் சொல்லலை," என்று கூறினான்.
தன் நண்பனை பற்றி அறிந்திருந்தாலும் அந்த நிமிட ஆதங்கத்தை கொட்டிய செழியன் அமைதியாக அவனை அழைத்துக்கொண்டு தெளிந்த மனதுடன் சுதீபின் காதலியை குறிந்து விசாரிக்க பூங்குழலியை காண தன் நண்பனுடன் சென்றான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro