Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பகுதி -10

தன் அறையின் சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்த செழியன் சித்தார்தின் குரல் கேட்டு தன் சிந்தனையிலிருந்து வெளி வந்தான்.

" சார்....நீங்க சொன்ன மாதிரி அந்த முருகன திரும்ப செல்ல வைச்சு பூட்டிடேன். அவன் மேல ஒரு கண்ணு வைச்சுக்க சொல்லி கான்ஸ்டபிள் செந்திலுக்கு உத்தரவு போட்டுடேன்."என்று கூறி பதிலுக்காக செழியனின் முகம் பார்த்து காத்திருந்தான்.

"நீங்க வீட்டுக்கு போகனுமா??இல்ல கொஞ்ச நேரம் கழிச்சு போகலாமா சித்து??" என்ற செழியனின் கேள்விக்கு, " இல்லை சார் அவசரம் இல்லை, சொல்லுங்க சார் ,"என்று பணிவுடன் கேட்டான்.

" முருகனோட  வாக்குமூலம் உங்களுக்கு ஞாபகம் இருக்கா??," என்று சித்தார்தை பார்த்து வினவினான்.

" ம்...இருக்கு சார் ,

சுதீப் இண்டர்காம் மூலமா கூல்டிரிங்க் கேட்டதாகவும் இவன் கொண்டு போய் கொடுக்கும்போது அது கீழ விழுந்துட்டதாகவும் முதல்ல சொன்னான்.

அப்பறம் சுதீப் கேட்டாரு ஆனால் கூல்டிரிங்க் வீட்ல இல்லை அதை சொன்னா திட்டுவாருனு பயந்து பயந்து போனேன் அப்போ அமைச்சர் தன் பையனோட பேசிக்கிட்டு இருந்ததாக சொன்னான். அப்பறம் அமைச்சர் கொடுத்த கூல்டிரிங்க் தான் இவன் கொண்டு போய் கொடுத்ததா சொன்னான் சார்." என்று கூறினான்.

" ம் முதல் விஷயமே தப்பு சித்து அமைச்சரோட வீட்ல இண்டர்காம் வேலை செய்யலை , இதை நம்ம நேரலயே பார்தோம், அப்பறம் அவன்கிட்டு ஒரு தடுமாற்றம் இருக்கு, கண்ணில ஒரு கள்ளத்தனம் தெரியுது,அதனால அவன் சொல்றது எல்லாதையுமே நம்ம நம்ப முடியாது , பார்களாம் நாளைக்கு கைரேகை அறிக்கை வந்திடும் அதையும் சேர்த்து வைச்சு பார்கனும்," என்று கூறியவன், அமைதியாக தன் இருக்கையில் கண் மூடி அமர்ந்திருந்தான்.

அவன் ஏதோ சிந்தனை வசப்பட்டிருக்கிறான் என்பதை அவனது சுருங்கியிருந்த நெற்றி உணர்ந்த சித்தார்த்," சார் நீங்க வீட்டுக்கு போகலையா??"என்று தயங்கி தயங்கி கேட்டான்.

ஒரு பெருமூச்சுடன் தன் இருக்கையிலிருந்து எழுந்தவன்," ஆமா சித்து கிளம்பிட்டேன், நாளைக்கு நிறைய வேலையிருக்கு சீக்கிரமா வந்திடுங்க," என்று கூறி தன் வழக்கமான மிடுக்குடன் தன் இல்லம் நோக்கி தன் பயணத்தை தொடர்ந்தான்.

**********

அந்த காவலர் குடியிருப்பில் தனக்கு கொடுக்கப்பட்ட தனி வீட்டின் முன் தன் வாகனத்தை நிறுத்திய செழியன் உள்ளே சென்று இருளில் மூழ்கியிருந்த அந்த வீட்டை ஒளி பெறச்செய்தான்.

என்றும் போல இன்றும் அவனை வரவேற்ற தனிமையை ஒதுக்கி தள்ளியவன் தன் களைப்பு தீர குழித்துவிட்டு பால்கனியில் ஒரு நாற்காலியை போட்டு அதில் வாகாக கண்களை மூடி அமர்ந்து கொண்டான்.

காலையிலிருந்து ஏற்பட்ட மனகுழப்பம் தீர அந்த டிசம்பர் இரவு அவனுக்கு சுகமளித்தது.

முருகனின் முன்னுக்கு பின் முரண்பாடான வாக்கு மூலம், சுதீப் இறந்த நேரம் , இவை அனைத்தையும் வைத்து சுதீப் மரணம் இப்படித்தான் ஏற்பட்டிருக்களாம் என்ற தனது யூகத்தை மனதில் வடித்துப் பார்தான்.

கண்களை மூடிய நிலையில் அமர்ந்திருந்த செழியனின் எண்ணங்கள் மெதுவாக நேற்று இரவை நோக்கி பயணம் செய்தது.

நேற்று இரவு பன்னிரெண்டு மணியளவில் சுதீபின் வீட்டிற்குள் மானசீகமாக நுழைந்தான் செழியன்.

நேறே வரவேற்பறையை கடந்து கிட்சனை அடைந்தவன் அங்கு முருகன் உறங்க தயார் படுத்துவதை கண்டான்.பின் பிரிட்ஜை திறந்த முருகன் அதிலுள்ள கூல்டிரிங்க்ஸ் பாட்டிலை எடுத்துக்கொண்டு நேரே சுதீபின் அறை நோக்கி செல்வதை கண்டவன் அவனை பின் தொடர்ந்தான்.

சுதீபின் அறையினுள் நுழைய அவனது அறை கதவை தட்ட அது திறந்து கொண்டது , திறந்திருந்த கதவை கண்டவன் குழப்பத்துடன் உள்ளே நுழைய அவனை தொடர்ந்து செழியனும் உள்ளே நுழைந்தான், அங்கு சுதீப் தன் குரல்வளைகளை இரு கைகளால் பிடித்துக்கொண்டு கட்டிலில் இப்புறமும் அப்புறமும் திரும்பிய வண்ணம் இருந்தான்.

அவனை அந்த நிலையில் கண்ட முருகனோ சிறிதும் பதட்டமில்லாமல் அவனை கண்டுகொண்டு இருந்தான், பின் சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு சுதீபிற்கு வலிப்பு ஏற்பட பற்றிக்கொள்ள ஏதேனும் பொருளை துளாவியவன் பின் மெதுவாக கண்களை மூடி உயிர் துறந்தான்.அப்பொழுது மணி சரியாக பன்னிரெண்டு முப்பது.

இவை அனைத்தையும் நோக்கிய முருகன் தன் சுற்றும் முற்றும் நோக்கினான்.பின் மெதுவாக சுதீபின் அருகே சென்று கீழே விழுந்திருந்த பொருட்களை நேராக வைத்துவிட்டு அவனது படுக்கை விரிப்பை சரி செய்து விட்டு தான் கொண்டுவந்த கூல்டிரிங்கை அங்கே அமர்ந்து குடிக்கத்துவங்கினான்.

குடித்துக்கொண்டிருக்கும் பொழுதே அவன் கண்கள் அந்த அறையை அலச துவங்க குடித்துக்கொண்டிருந்த கூல் டிரிங்கை வைத்துவிட்டு விலை உயர்வான சில சிறிய பொருட்களை எடுத்துக்கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான். அந்த அறை கதவு ஆண்டோமேடிக் லாக் சிஸ்டம் என்பதால் அவன் கதவை அடைத்ததும் தானாக பூட்டிக்கொண்டது.

கீழே வ்நத முருகன் தன் வழக்கமான இடத்தில் படுத்துக்கொண்டான்.

இவ்வாறு தோன்றியவுடன் வேகமாக எழுந்த செழியன் தன் நோட்பேடை எடுத்து இந்நிகழ்வுகளை குறித்துக்கொண்டு நிம்மதியான மனதுடன் உறங்கச்சென்றான்.

********

தனது ராயல் என்ஃபீல்டில் அதிரடியாக உள்ளே நுழைந்த செழியன் வேகமாக தனதறையை நோக்கி சென்றான்.

அங்கே அவனுக்காக காத்திருந்த கைரேகை நிபுணர் ," குட் மார்னிங் சார், உங்களை நேர்ல பார்து ரிப்போட் கொடுக்க சொன்னீங்க அதனால வெயிட் பண்றேன்,"என்று கூறினான்.

" நல்லது சார் எதாவது எவிடன்ஸ் கிடைச்சுதா??"

" சுதீபோட அறையில புதுசா எந்த கைரேகையும் கிடைக்கலை , உங்க லாக் அப்ல இருக்குற முருகனோட கைரேகை நிறைய இடத்தில இருந்தது, கூல்டிரிங்க டெஸாட் பண்ணி பார்ததுல அதுல எத்த வித கெமிக்கலோ, விஷமோ கலக்கப்படலை , ஆனால் அதுல உள்ள கைரேகையை யாரோ வேணும்னே அழிச்சிருக்காங்க, அதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தது. அப்பறம் அந்த லாப் டாப் மொபைல் இரண்டுலயும் சுதீபோட கைரேகை மட்டும் தான் இருக்கு," என்று தான் கூற வந்ததை கூறிமுடித்தான் அவன்.

சுதீபின் கைபேசியையும் லாப்டாபையும் கைரேகை அறிக்கையையும் செழியனிடம் ஒப்படைத்துவிட்டு விடைபெற்றான்.

அவன் சென்றவுடன் சித்தார்தை அழைத்த செழியன்," சித்தார்த் சுதீபோட நண்பர்கள் மூணு பேரையும் தனித்தனியா விசாரிக்கனும் அவக்களை இங்க வரவச்சு நீங்க உங்க ஸாடைலுல விசாரிங்க, சைபர் க்ரைம் ஆபிசரை பார்க்க வேண்டிய முக்கியமான வேலை இருக்கு நான் அழரை போய் பார்த்துட்டு வந்திடறேன், " ஏன்றூ வேக உத்தரவுகள் பிறப்பித்து வெளியே செல்ல ஆயத்தமான செழியனை தடுத்த சித்தார்த்," சார் என்ன நீங்க இவ்வளவு உற்சாகமா இருக்கீங்க?" என்று வினவினான்.

" நாம குற்றவாளியை நெருங்கிட்டோம் கூடிய சீக்கிரத்தில அவனை இங்க கூடாடிடாடு வரனும்," என்று கூறினான்.

" வேற எதுவும் எவிடன்ஸ் கிடைச்சுதா சார்??"

ஒரு சிறு அமைதிக்கு பிறகு நேற்று தான் யூகித்த விஷயங்களை கூறினான் செழியன்.

செழியன் கூறிய விஷயங்களை உள்வாங்கிய சித்தார்த்," ஆனால் ஏன் முருகன் சுதீப் கேட்காமலே கூல்டிரிங்க் எடுத்துகிட்டு போகனும், ரூம்ம நீட் பண்ணணும், அமைச்சரோட பெயர உள்ள இழுக்கனும்," என்று தன் சந்தேகத்தை கேட்டான்.

" குட் முருகனோட வாக்குமூலத்துல நிறைய முரண்பாடுகள் இருந்தாலும் ஒரு விஷயம் உறுதி , சுதீபிற்கு நைட் கூல்டிரிங்க் சாப்பிடுற பழக்கம் இருக்கு சோ வழக்கம்போல இவன் எடுத்துட்டு போயிருக்கனும் , அங்க சுதீப் உயிருக்கு போராடிகிட்டு இருந்திருக்கான் வெளிய போய் சொல்றதுகுள்ள செத்திடுவானு தெரிஞ்சிருக்கு சோ....வந்த வரைக்கும் லாபம் னு சில பொருட்களை எடுத்துகிட்டு அமைதியா திரும்பி வந்துட்டான்.அவனோட வேலைஸசுதீபோட அறையை சுத்தமா வச்சுக்கிறது அதனால அவன் தன்னோட.வேலையை கச்சிதமா செஞ்சிருக்கான். நம்மை சுதீபோட அறைக்குள்ள போகும் போது அந்த அறை ரொம்ப சுத்தமாவும் நேர்தியாவும் இருந்துச்சு , தினமும் அந்த வேலை செய்யுற.ஒருத்தனால தான் அதை செய்ய முடியும்.

ஆனால் ஏன் அமைச்சரோட பெயர இதுல இழுத்து விட்டானு தான் எனக்கு புரியலை, இது எல்லாமே என்னோட.யூகம் தான் , நமக்கு தெரியாத யாரோ Mr.x சுதீப கொலைசெய்யிற எண்ணத்துல உள்ளே வந்திருக்கனும் அவன் குடிச்ச கூல்டிரிங்கில சையனைட் கலந்து வச்சிட்டு அங்கயே அவன் கூட பேசிட்டி இருந்திருக்கனும்,  அப்போதான் முருகன் உள்ளே போயிருக்கனும் என்னோட எண்ணப்படி பார்தா முருகன் அந்த அறையில இருக்கும் போது அந்த Mr.x சும் உள்ள தான் இருந்திருக்கனும்."

" சார் எப்படி இவ்ளோ உறுதியா அந்த கொலைகாரன் உள்ள இருந்தானு சொல்றீங்க ??முருகன் தான் கதவை சாத்திட்டு போய்டானே அப்பறம் அவன் எப்படி வெளிய.போயிருக்க முடியும்??" என்று சித்தார்த் கேட்ட கேள்விக்கு, " ஏன்னா அந்த ரூம்ல இருந்த கூல்டிரிங்கில விஷம் இல்லை ஆனால் அதோட கைரேகை துணி வச்சி துடைக்கப்பட்டிருக்கு, அப்பறம்  உள்ள தான் ரூமோட சாவி இருந்துச்சே அதை யூஸ் பண்ணி கதவை திறந்து வச்சிட்டு மறுபடியும் பழையபடி அதை வெளிய இருந்து பூட்டி யிருக்களாம்." என்று நன் யூகங்களை கூறி முடித்தான்.

" சார் அந்த ஆளை நம்ம எப்படி கண்டு பிடிக்கிறது சார்?"

"அதுக்குதான்  சுதீபோட மூனு நண்பர்களை வரசொல்லி விசாரிக்கனும் னு சொன்னேன், அப்பறம் அந்த பொண்ணையும் விசாரனை செய்யனும்,"

" ஓகே சார் கண்டிப்பா , இதோ முதல்ல அவங்களை இங்க வர சொல்றேன்," என்று கூறி வெளியே சென்றான் சித்தார்த்.

வெளியே சென்ற சித்தார்த் போன வேகத்தில் ," சார் ....அந்த முருகனுக்கு வலிப்பு வந்திடுச்சு சார்...."என்று கூறிக்கொண்டு வேகமாக செழியனுடன் முருகனின் செல் நோக்கி சென்றான்.



Bạn đang đọc truyện trên: Truyen247.Pro