Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

2

10 வருடங்களுக்கு முன்பு.........

புதுப் பள்ளியில் என்னுடைய முதல் நாள் அன்று... 

அந்த பள்ளி முதல்வர் என்னை நன்கு படிக்கும் மாணவர்கள் பிரிவில் சேர்த்தார். எல்லாம் நன்கு படிப்பவர்கள் என்னை எவ்வாறு நடத்துவார்கள், நான் அவர்கள் அளவிற்குப் படிப்பேனா, நண்பர்கள் என சொல்லிக்கொள்ள யாராது கிடைப்பார்களா என்ற அச்சத்துடன் வகுப்புக்குள் நுழைந்தேன். அங்கு தான் அவளை முதன் முதலில் கண்டேன். அவள் அவளுடைய தோழிகளுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தாள். அவள் புன்னகை என்னை ஈர்த்தது. அவளை கண்டதும் எனக்கு பிடித்தது. அவளிடம் எப்படியாவது பேச வேண்டும் என்று நினைத்தேன். அவளை கண்ட பிறகு தான் பெண்களுடன் பேச வேண்டும் என்ற எண்ணமே வந்தது. என்னுள் இருந்த பயம் நீங்கி உற்சாகமாக மாறியது. அதே உற்சாகத்துடன் சென்று என் இடத்தில் அமர்ந்தேன். 

சிறிது நேரம் கழித்து வகுப்பு ஆசிரியை வந்தார். வந்ததும் அமரும் இடங்களை மாற்றினார். அதிஷ்டவசமாக, என்னை அவளுக்கு முன்பு அமர வைத்தார். எனக்குள்ளோ அளவில்லா ஆனந்தம். சென்று அமரும் போது, அவள் என்னை பார்த்து புன்னகைத்தாள். மனதிற்குள் மகிழ்ச்சியாக இருந்தாலும், சிரிது வெட்கமாக இருந்தது. இதுவரை எந்த பெண்ணிடமும் நான் பேசியது இல்லை. நானும் சிரித்து விட்டு அமைதியாக இடத்தில் அமர்ந்தேன். நாட்கள் மெல்ல நகர்ந்தது. என்னுடன் அமர்ந்து இருந்த இரண்டு பேர் அவளிடம் பேச ஆரமித்தார்கள். மெதுவாக நானும் பேசினேன். நாங்கள் மூவரும் அவளுடன் நெருங்கி பேசி பழகினோம். நிறைய சேட்டைகளை செய்தோம். அதிலும் நான் மிகவும் குறும்புத்தனம் செய்தேன். 

அவளிடம் பேச வேண்டும் என்பதற்காகவே எதை எதையோ செய்வேன். நான் செய்யும் சேட்டையை பார்த்து அவள் சிரித்துக் கொண்டே இருப்பாள். அதை பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கும். ஒரு நாள், ஆசிரியர் பாடம் எடுக்கும் பொழுது தூக்கமாக வந்தது. என்ன செய்வது என்று அறியாமல் திரும்பி பார்த்தேன். என் நண்பர்களும் தூங்கி வழிந்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால், அவள் மட்டும் மிகவும் தீவிரமாக பாடத்தை கவனித்து, புத்தகத்தில் எழுதிக் கொண்டு இருந்தாள். அப்போது சிறு யோசனை தோன்றியது. நல்ல யோசனை என்று மட்டும் நினைத்து விடாதீர்கள், குறும்புத்தனமான யோசனை அது. 

அவள் மேசையின் கீழ் வைத்து இருந்த அவள் புத்தகத்தை எடுத்து அவளிடம் இது வேண்டுமா என்று கேட்டேன். அது அவளுடையது என்று அறியாமல், தனக்கு வேண்டாம் என்றாள். அதை என்னுடன் வைத்து கொண்டு,  அதேப் போல் மூன்று புத்தகங்களை எடுத்தேன். நான் எடுப்பதை பார்த்துவிட்டு என் நண்பர்கள் சிரிக்க ஆரமித்தார்கள். திரும்பவும் அவளிடம் அதே புத்தகத்தை அவள் பெயர் தெரியும்படி காட்டினேன். அப்போது தான் அவளுக்கு எல்லாம் புரிந்தது. அவளும் எங்களுடன் சேர்ந்து சிரித்தாள். எனக்கு என் தூக்கமும் போனது, நேரம் முடிந்து ஆசிரியரும் சென்றார்.    

ஒவ்வொரு நாளும் அவளை சிரிக்க வைக்க, அவளுடன் பேச, காரணம் தேடிக்கொண்டே இருப்பேன். சில நேரம் நாங்கள் ஆசிரியர்களை கேலி செய்து சிரித்துக் கொண்டு இருப்போம். ஒரு நாள் அவ்வாறு சிரித்துக் கொண்டு இருக்கும் போது ஆசிரியரிடம் மாட்டிக் கொண்டோம். என் விதி, என்னை வேறு இடத்திற்கு மாற்றினார். ஆனால் நான் என்ன செய்தேன் தெரியுமா? அவர் சென்றதும் அதே இடத்துக்கு சென்று விட்டேன். அவர் வரும் பொழுது மட்டும் மாற்றிய இடத்துக்கு சென்று விடுவேன். 

சந்தோஷம் எப்போதும் நிரந்தரம் அல்ல. அதுபோல் நான் இப்படி சந்தோஷமாக இருந்த நாட்கள் மாறியது. தேர்வின் முடிவுகள் வந்தது. எதிர் பார்த்த படி நான் அனைவரையும் விட குறைந்த மதிப்பெண் எடுத்து இருந்தேன். அன்றிலிருந்து, நான் செய்யும் சேட்டைக்காகவும், நான் எடுக்கும் மதிப்பெண்களுக்காகவும் ஆசிரியர்களிடம் திட்டு வாங்கினேன். எப்படி திட்டு வாங்கினாலும் என் சேட்டை குறையவே இல்லை. ஆனால் முன்பு போல் இல்லாமல், இப்போது சிறு வருத்தமும் இருந்தது. 

திட்டு வாங்கும் போது வருத்தமாக இருக்கும். அதை யாரிடமும் சொல்ல முடியாமல் அமைதியாக அமர்ந்து இருப்பேன். அப்போது என் அருகில் அவள் இருப்பாள். எப்போதெல்லாம் நான் சோகமாக இருக்கிறேனோ அப்போதெல்லாம் ஆறுதல் சொல்ல அவள் என் அருகில் இருப்பாள். அவள் சொல்வதை கேட்டு மனமும் ஆறிவிடும், என் குறும்புத்தனமும் வந்துவிடும். அவள் மீது என் அன்பு அதிகமானது. அவளை இன்னும் அதிகமாக ரசிக்க ஆரமித்தேன். அவள் பள்ளிக்கு வித்யாசமான பொருட்கள் கொண்டு வருவாள். 

ஒரு நாள் அவள் கலர் பேனாக்கள் (sketch pens) கொண்டு வந்திருந்தாள். அதன் பின்புறம் அழகிய பொம்மை முகம் பதிந்திருந்தது. அதை நாம் அச்சிடுவதற்கு உபயோகிக்கலாம். நானும் என் நண்பர்களும் அதை கண்டதும் எடுத்து விளையாட ஆரமித்து விட்டோம். அந்த நாள் முழுதும் அவளுடைய பேனா அவளிடம் கொடுக்கவே இல்லை. நாங்கள் செல்லும் எல்லா இடத்திலும் எங்களுக்கு பிடித்த பொம்மை முகங்களை பதித்து கொண்டே சென்றோம். வகுப்பில் உள்ள மேசைகளிலும் சுவர்களிலும், அதைவிட அவளுடைய புத்தகத்திலும் அதை வைத்து கிறுக்கினோம். படாத பாடு பட்டு விட்டாள், ஏன்டா இதை கொண்டு வந்தோம் என்று நினைக்கும் அளவிற்கு நாங்கள் அவளை இம்சை செய்து விட்டோம். மறு நாளிலிருந்து அவள் அதை கொண்டு வரவே இல்லை.   

நாட்கள் வேகமாக சென்றது. எங்கள் நட்பும் நெருக்கமானது, அவள் மீது இருந்த என் நேசமும் அதிகமானது. எவ்வளவு நெருங்கிய நண்பர்கள் ஆனாலும் அவளிடம் இன்னும் நெருக்கமாக வேண்டும் என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது.


TO BE CONTINUED.................... 

THANK YOU FOR THE READS, VOTES AND COMMENTS... DO CONTINUE READING, VOTING AND COMMENTING... 

LOVE YOU ALL....

KYRA <3.....




Bạn đang đọc truyện trên: Truyen247.Pro