காதல் -58
வனித்தா : டேய் என்ன டா அடிப்பற்றுக்கு...
மற்ற நாயகர்கள் : மாட்டிக்கிட்டானுங்க...
சத்தீஷ் :ஹா.. அதுவா மா... கண்ணுல மண்ணு போய்டுச்சு மா அதான்...
வனித்தா : தலையில தான் அடி...
சத்தீஷ் : எப்டி சொல்ற மா
வனித்தா : மண்ட குழம்பி போய் பேசுறியே அத வச்சி தான் சொல்றேன்... போ போய் நம்ம ஹாஸ்பிட்டல்ல ட்ரீட்மென்ட் எடு... என அங்கிருந்து பெரியவர்கள் அனைவரையும் அழைத்துச் சென்றுவிட்டார்....
வர்ஷி : சைடு கேப் ல கலாய்ச்சிட்டு போய்டுச்சு மம்மி...
பவி : சரி எல்லாம் மேல பாப்போமா...
முகில் : ஏன் டி...
பவி : எப்டியும்... ஃப்லஷ்பக் சொல்லுவீங்கல்ல டா.. அதான்..
க்ரிஷ் : சரி சரி வாங்க....
இங்கிருந்து மறைந்த கோவன்கள் மூவரும்... காட்டின் மையத்தில் தோன்றினர்....
க்ரிஷ் : என்ன டா குகைக்கு போவோம் னு பாத்தா... காட்டுக்கு வந்துருக்கோம்...
இந்திரன் : நாமலே குகைய தேடி போவோம்...
சத்தீஷ் : சரி ஓக்கே வாங்க....
மூவரும் கால் போன போக்கில் நகர... எப்படியோ இறுதியில் குகையை அடைய..... அங்கோ... விகாஷ் ஆகாஷ் நகாஷ் தங்களின் உடல் நடுங்குவதை காட்டாமல் முகத்தில் வெறுமையை கொண்டு நிற்க... மேகலாயா மதுசூதனா மற்றும் யோகனா ஒரு ஓரத்தில் ஏதோ மந்திரக்கட்டுக்குள் நிற்க.... மாயா மற்றும் மோகினி முளித்தவாறு நிற்க.... துருவன் அமைதியாய் நிற்க.... வளவன் பருந்து தீப்பார்வையுடன் நிற்க.... அவர்களருகில் நின்றனர் கோவன்கள்....
இந்திரன் : நம்ம இங்க இருக்கோம்... அப்போ அங்க இருக்குரது யாரு டா... 😲😲
சத்தீஷ் : இந்த மூணு மூதேவிகளும் பயந்துக்குட்டு நிக்கிரானுங்க டா.. ஆனா எப்டி டா...
க்ரிஷ்: துரு வ கவனிங்க டா.. அவன் அமைதியா நிக்கிற மாரி இருக்கான்.. ஆனா அவன் கண்ணுல இருந்து பாய்ர ஒளி தான் நம்ம அங்க உண்மையாவே நிக்கிற மாரி காமிக்கிது...
சத்தீஷ் : லைவ் டெலிக்கேஸ்ட்டு...
இந்திரன் : இப்போ என்ன பன்றது.... திடீரென " ஏ குட்டி சாத்தானே " என்று அலரும் சத்தம் கேட்க... இவர்களும் திரும்ப... அங்கோ சட்டென கேட்ட அலரலில் அரண்ட துருவன் இமைகளை இமைக்க.... முன் இருந்த கோவன்களின் பிம்பம் மறைந்து போனது... மாயாவும் மோகினியும் அதிர்ச்சியடைய... மாயா தான் செய்த அதே வேலையை தன் மகன் செய்திருக்கிறானே என்ற அர்த்தத்துடன் அவனையே நோக்க.... அனைவருக்கும் அது துருவனின் வேலை தான் என புரிந்தது...
விகாஷ் : குட்டி சாத்தானே... என்னையே ஏமாற்ற பார்க்கிறாயா... உமக்கு தக்க தண்டனை தருகிறேன் பார்... என அவன் கழுத்தை பிடித்து மேலே தூக்க.... திமிற தொடங்கினான் துருவன்.... கோவன்கள் மூவரும் கோவத்தில் குகையில் நுழைய... அதன் பின்னே.... ஏதோ தன்னை தாக்கி இரண்டடி தள்ளி போய் நின்றான் விகாஷ்... அவன் கரத்திலிருந்து துருவன் கீழ் விழ... இருமிக் கொண்டே எழுந்து நின்றான்... தன்னை எது தாக்கிது என்று சினம் தாளாமல் விகாஷ் நிமிர்ந்து நோக்க.... தன் செம்மை நீலம் மற்றும் வெண்மை படந்த இறகுகளை அசைத்து... கண்களில் கோவம் கொப்பளிக்க.... துருவனுக்கு அரணாய் முன் பறந்தான் வளவன் பருந்து...
வளவன் பருந்து : எம் உயிரை தொடும் முன்.... எம்மை தாண்ட வேண்டும் என்பதை மறவாதே விகாஷ்வரா... என கோவத்தில் கர்ஜிக்க....
மாயாவும் மோகினியும் வளவனின் இந்த புது அவதாரத்திலும் அவன் சொல்லிலும் பேரதிர்ச்சி அடைந்தனர்...
விகாஷ் :எத்துனை தைரியம் இருந்தால் சாதாரண ஒற்றன் நீ என்னை தாக்கியிருப்பாய்... ஓ உண்மையை அறிந்துக் கொண்டாயா.... உன் உயிருடன் சேர்த்து உன்னையும் அழிக்கிறேன்... என கத்த... அதே நேரம் மேகலாயா மதுசூதனா யோகனா ஆகாஷ் நகாஷ்ஷின் சக்திகள் அவன் சக்திகளுடன் இணைய.... அனைத்தும் ஒன்றிணைந்து....
மாபெரும் ஒளியாய் உருவெடுத்து.... வளவனை நோக்கி அதிவேகத்தில் பாய.... வளவன் அவ்விடித்திலிருந்து அசையாது... அங்கேயே இருக்க..... மாயாவும் மோகினியும் இல்லையென பெருங்குரலெடுத்து அலர..... அவ்வொளி வளவனை நெருங்கி.... பெரும் ஒலியுடன் அக்குகையே அதிரும் அளவு.... வெடித்து சிதற.... அவ்வதிர்வில் அனைவரும் தடுமாறி கீழ் விழுந்தனர்.... விகாஷ் ஆகாஷ் நகாஷ் அதிர்ச்சியுடன் வளவனை நோக்க.... வளவனுக்கு முன் அரணாய் தன் நீல விழி ஒளிர.... உடல் நீல நிறத்தில் சூழ்ந்திருக்க.... நிமிர்ந்து நின்றான் இந்திரன்.... அவனை கண்டு அனைவரும் அதிர.... அவன் அருகில்... சிகப்பு நிற விழியுடன்... உடல் முழுவதும் சிகப்பு நிறத்தில் சூழ்ந்திருக்க... வந்து நின்ற க்ரிஷ்ஷையும்... வெள்ளை நிற விழியுடன்... வெள்ளை ஒளி உடல் முழுவதும் சூழ்ந்திருக்க வந்து நின்ற சத்தீஷ்ஷையும் கண்டு பேரதிர்ச்சியுற்றனர்....
சத்தீஷ் : முன் வந்தது நிழலாய் இருக்கலாம்... இப்போது வந்துள்ளது சாட்சாத் ஆதிகோவன்களடா... என நிமிர்த்தலாய் கூற... அவன் சாதாரணமாய் கூறியதே.... பலமாய் எதிரொலித்தது அக்குகையில்....
க்ரிஷ் : நேற்று வரை நீ எது வேண்டுமானாலும் செய்திருக்கலாம்... ஆனால் இன்று முதல்.... எம் தமக்கைகள் மீதும்... வளவன் மீதும்... துருவனின் மீதும்.... சிறு துரும்பும் பட.... எங்களை தாண்டியாக வேண்டும்...
இந்திரன் : ஆனால் அது உம்மால் என்றுமே முடியாது....
ஆகாஷ் : இந்நொடி தங்களை எங்களால் ஏதும் செய்ய இயலாமல் இருக்கலாம்... ஆனால்.... நாளை மறுநாள்... போர்களத்தில்.... தங்களை எங்களிடமிருந்து எவராலும் காப்பாற்ற இயலாது... என அங்கிருந்து உடனே மறைந்தான்... அவனை அடுத்து... நகாஷ்ஷும் முறைத்து விட்டு அகிருந்து மறைந்தான்.... அதற்கடுத்து விகாஷ்ஷை தவிர்த்து அனைவரும் மறைய...
க்ரிஷ் : அன்று... கோழை என எங்களை கூறினாயே... தற்போது.. உன் இளவன்கள் செய்ததற்கு என்ன கூறுவாய்... அரண்மனையிலிருந்து அச்சத்தில் மறைந்தாய்... போர் களத்திலும்... இறந்து மறைந்தாய்... அன்று பலிபீடத்திலும்... நாங்கள் வரும் முன்னே மறைந்தாய்... அப்படியெனில் கோழை நீ தான டா...
விகாஷ் : கோழையாய் இருப்பின்... உன் முன்னே வந்திருக்கவே மாட்டேன்.... இத்துனை முறையும்... நாங்கள் மறைவது தாங்கள் உயிருடன் இருக்க வேண்டுமென்று தான டா யுவக்ரிஷ்ணா... அது இனி நடக்காது... இதுவே எங்கள் கடைசி மறைவு...
சத்தீஷ் : எத்துனை உண்மைகளை எங்கள் தமக்கைகளிடமிருந்து மறைத்திருப்பாய்.... இன்று அனைத்திர்கும் முற்றுப்புள்ளி வைக்கிறோம் பார்.....
விகாஷ் : தமக்கையா.. தமக்கை.... அவள் இங்கு இருந்தால் தான டா... நீ முழு உண்மையையும் கூறுவாய்... என சட்டென அங்கிருந்து மறைய... இவர்கள் மாயா மற்றும் மோகினியின் புறம் திரும்பும் முன்னே... இருவரும் " மன்னித்து விடுங்கள் இளன்களே " என கத்திக் கொண்டே.... வலுக்கட்டாயமாய் விகாஷ்ஷின் மாயையில் மறைந்தனர்....
கோவன்கள் : தமக்கையே... என கத்த.... அதை கேட்கத்தான் அங்கு யாரும் இல்லை......
வளவன் பருந்து : கோவன்களே... என அழைக்க....
அவர்ளும் இவன் புறம் திரும்பி....
கோவன்கள் : சொல் வளவா....
வளவன் பருந்து :நன்றி கோவன்களே...
இந்திரன் : நாங்கள் தான் நன்றி கூற வேண்டும்... தக்க தருணத்தில் துருவனை காப்பாறினீர்கள்.. என கூற.... துருவனோ... பீரிட்டு வலிந்த கண்ணீருடன்... மாமா... என கத்திக் கொண்டே மூவரின் கால்களையும் கட்டிக் கொண்டான்...
வளவன் பருந்து : அது என் கடமை....
கோவன்கள் மூவருக்கும் துருவன் பிறந்த போது... எப்படி அழுதானோ... அப்படியே இப்போதும் அழுவதாய் தோன்ற... அவனை மூவரும் தூக்கி.... அழுகையை துடைத்து விட்டு.. முத்தம் கொடுத்தனர்.... பிறந்து பல வருடமாயினும் துருவன் இன்றும் தாய் சொல்லை தட்ட தெரியாத குழந்தை தான்....
துருவன் : மன்னித்துவிடுங்கள் மாமா.... நிறைய தவறு செய்துவிட்டேன்...
க்ரிஷ் : இதில் மன்னிப்பு வினவியதே போதுமானது கண்ணா... நாங்கள் தான் உன்னை அன்று காயப்படுத்தியதற்காய் மன்னிப்பு கேட்க வேண்டும்...
துருவன் : என் தவறுக்கு கிடைத்த தண்டனை தான் மாமா... அதற்கு மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டி அவசியம் இல்லை...
சத்தீஷ் : சரி நீ அழாதே...
துருவன் : மாமா...
இந்திரன் : என்ன கண்ணா...
துருவன் : தந்தையிடம் செல்லவா... என தயங்கி தயங்கி கேட்க... டக்கென நிமிர்ந்து பார்த்தான் வளவன்....
இந்திரன் : உமக்காவது புரிந்ததே... செல்... என கீழிறக்கி விட்டான்... குடுகுடுவென ஓடி சென்ற துருவன் வளவனின் முன் தயங்கி நிற்க...
துருவன் : தாங்கள் தானே என் தந்தை...
வளவன் பருந்து : ம்ம்ம்
துருவன் : உக்ரதேவ அரசரை போல்... என்னை கடிந்துக்கொள்ள மாட்டீர்கள் அல்லவா... என ஆசையாய் கேட்க.... நாழ்வரின் கண்களில் இருந்தும் கண்ணீர் அருவியாய் கொட்டியது... சிறு குழந்தை எத்துனை துன்பத்தை அனுபவித்திருக்கிறான்... என்று....
தன் இறகுகளால் அவனை வாரி அணைத்துக் கொண்ட வளவன்....
வளவன் பருந்து : என்னை மன்னித்துவிடு கண்ணா... பெரும் தவறிழைத்து விட்டேன்...
துருவன் : தாங்கள் என்ன தவறு இழைத்தீர்கள்... எல்லாம் செய்தது அவர்கள் தானே.... தாயார்களுக்கும் தங்களுக்கும் நினைவை அகற்றிய அவரே மன்னிப்பு கேட்காதிருப்பின்... தாங்கள் ஏன் வினவ வேண்டும்...
வளவன் பருந்து : உமக்கு எப்படி இவை னைத்தும்...
துருவன் : நேற்றிரவு... ஷேஷ்வமலையில்... தாங்கள் அனைவரும் உறையாடியவையை நானும் கேட்டேன்... அதை வைத்து தான் அறிந்தேன்...
சத்தீஷ் : சரி... நாங்கள் வீட்டிற்கு திரும்பிகிறோம்... தாங்கள் இருவரும் ஜாக்கிரதையாக இருங்கள்... தமக்கையை விரைவிலே கண்டுப்பிடித்து விடலாம்..
வளவன் பருந்து : சரி கோவன்களே... என அங்கிருந்து விடைப்பெற்றனர்....
விகாஷ் : நகாஷ்... அந்த ரௌடிகளுக்கு போன் போட்டு... அவனுங்கள போட சொல்லு... என்னமா பொங்குரானுங்க... எல்லாரையும்... எப்டியும்... அவனுங்க எட்டு பேரும் வீட்ல தான் இருப்பானுங்க... வெளிய வராமையா போய்ட போரானுங்க...
நகாஷ் : ஓக்கே... பாய்... என இவன் சென்றிட....
சில நேரம் களித்தே.... வீட்டிலிருந்து கோவன்களை தேடி வெளியே வந்தனர் மற்ற நாயகர்கள்.... அவர்கள் நடந்தே காட்டிற்கு செல்ல.... அவர்களையே எட்டு கார்கள் பின் தொடர்ந்து வந்தது... ஒரு ஒரு காரிலும்... 5 பேர் இருந்தனர்... கத்தி அருவாள்... பெரிய தாடி என பெரிய பெரிய டான்கள் தான்...
தீரா : அடப்பாவிங்களா... 8 பேர புடிக்க 40 பேரா டா வருவீங்க....
இவர்கள் செல்ல செல்ல... அக்கார்களும் இவர்களையே பின் தொடர...
ரித்விக் : ம்ஹும்... ஏதோ சரி இல்ல...
சரண் : ஆமா டா.. நாமளும் சுத்தி சுத்தி ஒரே ரூட்ல தான் வந்துட்டு வந்துட்டு போறோம்... இந்த காருங்களும் பின்னாடியே வருதே...
அஷ்வன்த் : திரும்ப அந்த மூணு காண்டாமிருகங்களும்... நம்மள புடிக்க ஆளு அனுப்பிட்டானுங்களே...
ரவி : அதுக்குன்னு... நம்மள புடிக்க இவளோ பேராடா வருவானுங்க...
அர்ஜுன் : வந்தாலும் வருவானுங்க டா...
முகில் : ஆல்ரெடி... செல்லு புல்லாய்டுச்சே டா...
வீர் : இவனுங்களையும் ஒரு மூலைல போட்டு வச்சிக்கலாம் விடு டா....
முகில் : இவனுங்களுக்கு சாப்பாடு வாங்கி குடுத்தே என் சாலரி அழிஞ்சிடும் போல டா....
ரனீஷ் : நாங்க எதுக்கு இருக்கோம்... பாத்துக்கலாம் விடு டா...
என எட்டு பேரும் அவர்களை கலாய்த்தவாறு சென்று கொண்டிருக்க.... சரியாக அப்போது போன் அடிக்க... நடையை நிறுத்தாமல் தொடர்ந்தவாறே.... அனைவரின் காதிலும் உள்ள ப்லூட்டூத்தில் காளை கனெக்ட் செய்தான் வீர்....
ரனீஷ் : சொல்லுங்க டா... எங்க இருக்கீங்க...
அப்புறமோ இவர்களை போலே... நம்ம க்ரிஷ் இந்திரன் சத்தீஷ்.. மூவரும் காதுகளில் ப்லூட்டூத்தை மாட்டிக் கொண்டு.... ஒரு தெருவில் நடந்துக் கொண்டிருந்தனர்... அவர்களையும் மூன்று கார்கள் பின் தொடர்ந்தனர்....
க்ரிஷ் : வாக்கிங் மச்சான்...
ரித்விக் : அப்போ ஒரே வேலைய தான் எல்லாம் பன்றோமா...
இந்திரன் : ஏன் டா உங்களையும் கார் பாலோ பன்னுதா...
வீர் : டெஃபெனிட்லி மச்சான்...
அர்ஜுன் : எட்டு கார் எங்க போனாலும் பின்னாடியே வருது...
சத்தீஷ் : எங்களையும் மூனு கார்ல.. ஒரு பதினஞ்சு தடியனுங்க... பாலோ பன்றானுங்க டா... வெத்து டானு போல... பின்னாடியே வரானுங்க... ஒரு இடத்துல மடக்கி புடிக்காம...
அஷ்வன்த் : அப்போ நாம ஒரு இடத்துல மடக்கீடுவோம்...
ரவி : சரி அப்போ அங்க வந்துடுங்க டா....
சத்தீஷ் : எங்க டா...
சரண் : நம்ம இடத்துக்கு தான்...
இந்திரன் : ஓ... டன் டா... என போனை கட் செய்ய.... அட்ட டைமில்.... நாயகன்கள் அனைவரும் அதிவேகத்தில் ஓட தொடங்கினர்... கார்களும் அவர்களை பின் தொடர்ந்து வர.... அவர்களுக்கு போக்கு காட்டிய நம் நாயகன்கள்... சந்து பொந்திலெல்லாம் நுழைய... உங்களுக்கு நாங்களும் சலைத்தவர்கள் இல்லை டா... என்பதை போல் கார்களும் பின்னே வர.... ஒரு பத்து நிமிட ஓட்டத்தின் பின்.... மூன்று வழி சாலை ஒன்றில்... இடதில்... க்ரிஷ் இந்திரன் சத்தீஷ் ஓடி வர... வலதில் ரவி ரனீஷ் வீர் அஷ்வன்த் முகில் அர்ஜுன் சரண் ரித்விக் ஓடி வர.... அவர்களின் திட்டத்தை அறியாமல்.... கார்களும் வர.... எதிர் எதிரே ஓடி வந்த நாயகன்கள்.... திடீரென நேரே பிரிந்த சாலையில்... ஒன்றாய் ஓட... அதை கவனிக்காததால்... முன் வந்த கார்கள் ஒன்றோடொன்று மொத... மற்ற கார்கள் மீண்டும் அவர்களை தொரத்திட... இறுதியில் அவர்கள் நின்றதோ... முதல் அத்யாயத்தில் நாயகன்கள் பேருந்திலிருந்து இறங்கி.... தரையை வெறித்த அதே இடம் தான்... வேந்தன்புரத்தை விட்டு வெகு தொலைவில்.... பறந்து விரிந்திருந்த வேற்று நிலம்... மரம் செடி கொடி இல்லாமல் வெறுமையாய் இருந்தது....
தொடர்ந்து வந்த வண்டிகள் நில்லாமல்... நாயகன்கள் அனைவரையும்.... ஒரு பத்து முறை சுற்றிவிட்டு... போய் நின்றது.... அது நிற்பதற்காகவே காத்திருந்த நாயகன்கள்... நேரே சென்று... கார்களை ஓட்டிய டிரைவரை மட்டும் கீழே இறங்க வைத்து.... சராமரியாய் அறைந்தனர்.... ஒவ்வொரு அறையிலும் திக்கு திக்கு என்று இருந்தது மற்றவர்களுக்கு.... டிரைவர்களை மாற்றி மாற்றி அறைந்துக்கொண்டே....
க்ரிஷ் : ஏன் டா... பெட்ரோல் பெட்ரோல் வில எங்க இருக்கு...
சரண் : நீ என்னன்னா... வெட்டியா ரௌண்டு...ரௌண்டு ரௌண்டு போட்டு.... காச தண்ணியா செலவு பன்ற...
இந்திரன் : நீ யாடா பெட்ரோல் வர வைக்கிற.... ஒரு ஒரு லிட்டர் பெட்ரோல்க்கும்... இன்டியா... எவ்ளோ செலவு பன்னது... தெரியுமா... தெரியுமா.... என கேட்டுக்கொண்டே அடித்தனர்....
மற்றவன்களும் அதையே கேட்டு நங்கு நங்கென கொட்டி குத்தி அறைந்து வைத்தனர்... இறுதியில்.... அடி வாங்க முடியாமல்.... " இனிமே நாங்க காரு என்ன எந்த வண்டியுமே ஓட்ட மாட்டோம் இறைவா.. விற்றுங்க...." என ஒப்பாரி வைத்து அங்கிருந்து ஓடினர்....
மற்றவர்கள் அதிரடியாய் வண்டியிலிருந்து இறங்க.... வேறென்ன... அக்ஷனில் இறங்கினர் நம் நாயகன்கள்... அவர்களின் கத்தி அருவாளிலெல்லாம் லாவகமாய் தப்பித்து... போட்டு மொத்தி எடுத்துவிட்டனர்.... ஒருவன் மட்டும் க்ரிஷ்ஷின் கழுத்தில் லைட்டாய் கத்தியை வைத்து கிழித்து விட.... க்ரிஷ் முறைத்த முறையில்.... நடு நடுங்கி போனவன்.... உறைந்து நிற்க.... கோவத்தை பாடு பட்டு அடக்கிய க்ரிஷ்... அவனை தொட.... டொய்ன் என கீழே விழுந்தான் அவன்.... அதன் பின் அங்கே வந்த போலீஸ் ஜீப்புகளில்.... அவர்களை தினித்து விட்டு.... ஜெயிலில் அடைத்தனர்....
நாயகன்கள் : இதான் நடந்துச்சு....
ரக்ஷா : ம்ம்ம் அடிப்படாம இருந்தா சரி தான்....
நிரு : சரி சரி எல்லாம் கெளம்புங்க.... என அனுப்பி வைத்தனர்....
அனைவரும் கிளம்பி கீழ் வர.... நாயகிகள் லெஹங்காவில் வடநாட்டு அழகிகளாய் மிளிர.... நாயகன்களோ ஷெர்வாணியில் தேவலோக மங்கைகள் மயங்கும் கோபியர்களாய் இறங்கி வர... அர்ஜுனின் ஷெர்வாணியை கண்டு அனைவரும் அதிர்ந்தனர்... அவனோ சிரித்துக் கொண்டிருந்தான்...
ப்ரியா : டேய்... இது நிரு அன்னைக்கு செலெக்ட் பன்ன ஷெர்வாணி இல்ல....
அர்ஜுன் : ஆமா.... ஈஈஈ
நிரு : அது தான் காணாப்போச்சே டா....
அர்ஜுன் : நான் தான் தூக்கிட்டு போய்ட்டேனே...
முகில் : அத ஏன் டா ஆட்டயாப்போட்ட...
ஆர்ஜுன் : என் ஆளு செலக்ட் பன்னத... உன்ன போட விடுவேணா... அதான் நான் ஒவீ சொன்னப்பையே தூக்கிட்டு வன்ட்டேனே...
முகில் : அது எனக்கு செலக்ட் பன்னது டா...
அர்ஜுன் : நீ உனக்கு செலக்ட் பன்னத தான் டா போற்றுக்க...
மது : நாங்க யாரும் அத செலெக்ட் பன்னலையே அஜ்ஜு... அவனா தான் இத எடுத்துக்குறேன்னு சொன்னான்...
அர்ஜுன் : இல்ல டி... ஒவீ அத எப்பயோ செலெக்ட் பன்னீட்டா... பட் முகிலுக்காக இல்ல... அவளோட முகிக்காக....
ஒவீ : இப்போ தான் இரெண்டும் ஒன்னுன்னு தெரிஞ்சிருச்சே அத்தான்... என சொல்லிக் கொண்டே வந்தவள்... முகிலின் ஷெர்வாணியில் சரியாக குத்தப்படாமல் இருந்த ப்ரூச்சை சரியாய் குத்திவிட்டாள்.... அவளின் அடர் பச்சை நிற லெஹங்காவில்.... தேவைதையாய் காட்சி அளித்தவளை... காதல் பொங்கும் விழிகளால் இரசித்துக் கொண்டிருந்தான் அவளின் முகி....
இலக்கியா : என்ன பேச்சு.. இங்க... வாங்க சீக்கிரமா.... பொங்கல் பொங்க போகுது...
ரித்விக் : சரி சரி வாங்க டா.... என உடனே அனைவரும் பொங்க வைக்கும் இடத்திற்கு செல்ல.... சரியாய் அங்கு பொங்கலும் பொங்க..... நம் Mtk குடும்பத்தினர் அனைவரும் " பொங்கலோ பொங்கல் " என கூவினர்...
ப்ரியா : நம்மள மாரி யாருமே பொங்கல் முடிஞ்சு ஒரு வாரம் களிச்சு அதுவும் சாய்ந்திரம் பொங்கல் வைக்கவே மாட்டாங்க....
சத்தீஷ் : நம்ம புதுசா கொண்டாடுவோம் தேவி....
ரிஷப்ஷன் ஹாலில்... நடுநயமாய் அமைக்கப்பட்ட மேடையில்.... ரித்விக் கம்பீரமாக சிரித்துக் கொண்டு அமர்ந்திருக்க.... மது அவனருகில் அழகாய் சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.... நம் ஜோடிகள் ஒவ்வொன்றும் கண்களை பறிக்கும் அழகுடன் நடனமாட.... இறுதியில்... ரித்விக்கும் மதுவும் நடனமாடினர்...
விருந்தினர்களும்... உறவினர்களும் கலைந்து செல்ல.... மறுநாள் திருமணம் என்னும் காரணத்தால் அனைவரும் நேரமே உறங்க சென்றனர்.... ரித்விக் மற்றும் மது அழகழகான கனவுகளை தேக்கி.... அவ்விரவை வெகு சிரமப்பட்டு களித்தனர்....
அனைவரும் ஆவலாய் காத்திருந்த விடியலும்.... பனியுடன் அழகாய் விடிய.... பெரியோர்கள் உற்றார்உறவினரை நலமுடன் உபசரித்து நகர.... குட்டி குழுந்தைகள் அங்குமிங்கும் ஓடி கண்ணாமூச்சி விளையாட.... அதில் நம் கயல்குட்டியும் பச்சை மற்றும் ஊதா நிறம் கலந்த பாவாடை சட்டையில் இரெட்டை சடையிட்டு குட்டி தேவதையாய் வளம் வர..... இளம் பெண்களை இளஞர் கூட்டம் சத்தமில்லால் சைட்டடித்துக் கொண்டிருக்க.... அம்மாமார்களின் பார்வையும் அவரவர் மகனை துளைத்தெடுக்க.... விருந்தினர்கள் அவரவருக்கு தெரிந்தவர்களை அடையாளம் கண்டு கதையளந்துக் கொண்டிருக்க.... வீட்டின் வெளியிலிருந்த பெரிய பலகை..... அழகாய் அலங்கரிக்கப்பட்டிருந்தது....
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🌹 M .RITHVIK KARAN 🌹
🌹 🌹
🌹 🌹Weds🌹 🌹
🌹 🌹
🌹 M .MADHURANJAN. 🌹
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
தீரா : இதயங்களே... எல்லாரும் கல்யாணத்துக்கு வந்துடுங்க... அப்ரம் எனக்கு சொல்லல உனக்கு சொல்லல்ன்னு சொல்ல கூடாது.... ஆமா.... நாயகர்காள் ஒரு சைடு வில்லன்கள சமாளிக்கிறதுக்கும்.... ஒரு சைடு கல்யாணத்த பாக்குறதுனாலையும் சும்மா இருக்க டைமில்லாம ரொம்ப பிசியா சுத்திகிட்டு இருக்காங்க... அதனால பையனோட தங்கச்சியா... நா பத்திரிக்க வைக்க வந்துருக்கேன்.....
வேலு பாண்டி மற்றும் நாச்சியர் தம்பதியரின் கொள்ளு பேரனுமான.... சங்கரபாண்டி தெய்வானை தம்பதியரின் பேரனுமான..... முரளி தரன் காவியா தம்பதியரின் செல்வபுதல்வன் மு . ரித்விக்கரண் மணமகனுக்கும்.....
ராமையா அம்புஜத்தின் பேத்தியுமான....
திரு லக்ஷ்மி மற்றும் திரு. ராணி அவர்களின் செல்வி புதல்வி மா . மதுரஞ்சனா மனமகளுக்கும் நாளை திருமணம்....
சுற்றமும் நட்பும் வாசகபெருமக்களும் கூடி மனமக்களை மனமார வாழ்த்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்....
குறிப்பு : சைவ உணவு உண்ணுவோருக்கு... சைவ பிரிவும்... அசைவ உணவு உண்ணுவோருக்கு அசைவு பிரிவும் என பிரிக்கப்பட்டுள்ளது.... இதில் இரெண்டுமே விருப்பமென்றாலும்.... தேவையான மற்றும் விருப்பமான உணவை தாங்களே எடுத்துக்கொள்ளும் Buffet முறையும் அமைக்கைப்பட்டுள்ளது.....
தீரா : பத்திரிக்க வசாச்சு... எல்லாரும் மறக்காம வந்துருங்க.... நல்லா சாப்ட்டுட்டு போங்க பா.....
காதல் தொடரும்...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro