காதல் -52
அதை கண்டு அனைவரும் அரண்டு போக.... குழந்தையோ.... பயத்தில் வீரிட்டு அழ.... குழந்தையை அங்கிருந்த பணியாளர்களிடம் கொடுக்க.... அவர்களோ வாங்க மறுத்து... பின் நகர்ந்திட.... அவர்கள் அருகிலே நின்ற இந்து... குழந்தையை வாங்கி சமாதானம் செய்ய தொடங்கினாள்... மற்றவர்கள் மாயமோகினியை நெருங்க....
சத்யா : மாயமோகினி.. என்னவானது.. ஏன் இப்படி அலருகிறீர்கள்...
மாயமோகினி : ம்மா... என்னால் என் உடல் வலியை தாங்கிட இயலவில்லை....
வேல் : தமக்கையே.... கவலை கொள்ளாதீர்கள்... ஆண்களை விட இவ்வுலகிலே பலசாலி பெண்களான தாங்கள் தான்... உடலில் உள்ள எலும்புகல் அனைத்தும் நொருங்கும் அக்கொடிய பிரசவ வலி நேரத்தில்... அதை தாங்கி மறுப்பிறப்பெடுப்பது பெண்கள் தான்... இது அத்துனை பெரிய வலி எல்லாம் இல்லை.... நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள்... என தைரியமூட்ட... பல்லை கடித்து தன் வலியை பொருத்துக் கொண்ட மாயமோகினி....
மாயமோகினி : அனைவரும் நன்கு செவி சாய்த்துக்கொள்ளுங்கள்... எம்மாலே பெரும் ஆபத்து ஈடேரும்... அதை தடுக்க என் உயிரை எடுக்க வேண்டிய தருணம் வந்தாலும்... அதற்கு தயங்காமல் என்னை அழிக்க வேண்டும்...
கோவன்கள் : தமக்கையே.. என அதிர்ச்சியில் கத்த...
மாயமோகினி : புரிந்துக்கொள்ளுங்கள் கண்ணா... அக்கொடியவர்கள்... என்னை மாற்றிவிட்டனர்... என் நினைவுகள் மாறுகிறது.... யாரோ... யோகனா என்னும் பெண்ணவளின் நினைவையும்... குணத்தையும் என்னுள் மாற்றிவிட்டனர்... எது வேண்டுமானாலும் நடக்கலாம்... நிகழும் போர்... உங்களை எதிர்த்து நிகழும் என்பதை நான் அறியேன்.... என்ன நிகழ்ந்தாலும்... இப்போரில்.... அவர்கள் வெல்ல கூடாது... அப்பாவி வீரர்கள் அவர்களுக்காய் கட்டாயத்தின் பெயரில் உயிர் நீத்திருக்கின்றனர்.... இப்போரில் அவர்கள் வென்றுவிட்டால்.... நிச்சயம்.... மெல்ல மெல்ல... முழு உலகமும் அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும்.... ஆதி கோவன்கள்... நாகனிகள்... சஹாத்திய வம்ச சூரர்கள்... மற்றும் யாளி வம்சத்து வீராங்கனைகள் அது நிகழ என்றென்றுமே அனுமதிக்க கூடாது.... இது என் மைந்தன் துருவனின் மேல் ஆணை....
அனைவரும் : நிச்சயம் அனுமதிக்கமாட்டோம்...
ஆதன்யா : யோகனா... என்பவள் நம் இறுதி பிறவியில் ஓர் எதிரி.... அவளை நாகனிகளான நாங்கள் தான் அழித்தோம்.... அவள் மீண்டும் பிறப்பெடுக்க இயலாதவாறு... குரு தந்திரா... அடைத்து வைத்திருக்கிறார்.... இப்போது போரிட... மேகலாயா மதுசூதனா இருவர் மாத்திரமே இருப்பதால் போரில் நிச்சயம் தோழ்வியை தழுவோம் என்ற அச்சத்தில்... யோகனாவின் உதிரத்தை மாயையின் வழி மந்திரத்தால் மாயமோகினியின் உடலில் செழுத்தி யோகனாவை போல் அவளை மாற்ற திட்டம் தீட்டியிருக்கின்றனர்.... ஆனால்.... மாயமோகினியின் மனதிலும்.. உடலிலும்... தீமை என்னும் ஒரு சிறு கிளை கூட இல்லாத காரணத்தால்.... திட்டத்தை மாற்றி.... அவரை தீமை.... நன்மை என இரண்டாய் பிரிக்க முடிவெடுத்து... அவ்வேலையையும் முடித்துவிட்டனர்.... இப்போது இவர் அனுபவிக்கும் வலிக்கு காரணமே... அவரின் உடல் இரண்டாய் பிரிவதால் தான்... பிரியும் இருவரில்... நன்மையை உயிராய் கொண்ட அந்நபரை தீமையில் எளிதாய் மூழ்கடித்திடலாம் என்ற நோக்கத்துடனே இருக்கின்றனர்.... என கண்களை மூடி.... நிகழ்ந்த அனைத்தையும்.... பார்த்து கூற...
நந்தவேணி : தற்போது என்ன செய்வது....
யாமினி : ஏதேனும் செய்து நாம் மாயமோகினியை காப்பாற்றியே ஆக வேண்டும்....
சக்தி : தமக்கையே.... ஓர் வழி இருக்கிறது... முடிந்த வரை நாங்கள் உங்களை எங்களின் சக்திக்குள் வைக்கிறோம்.... அதில் அவர்களின் மாயை குறையும் அல்லவா....
மாயமோகினி : வேண்டாம் சக்தி.... இருவரையும் பழையதை போல் மாற்றுவதனால்.... உங்களின் சக்திகள் குறையக்கூடும்....
யுவன் : அதில் எங்களுக்கு கவலை இல்லை தமக்கையே... முழு சக்தியும் குறைந்தாலும்.... உயிரை கொடுத்தேனும்.. இப்புவியை காப்போம்....
என கோவன்கள் மூவரும் அவரவர் கரங்களை இணைத்து.... மற்றவர்களை தள்ளி நிற்க வைத்திட.... நொடியும் தாமதிக்காமல் மூவரும் அவரவர் மாயையை இணைத்து... அதிவேகத்தில் மாயமோகினியின் புறம் செழுத்தி... மாபெரும் பந்தை அவளை சூழ்ந்து உருவாக்க.... அவளின் கதறல் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்க..... அதை தாங்க இயலாத.... கோவன்களின் கண்கள்.... கண்ணீரை தானாக ஊற்றெடுக்க... அதை கண்டு... மூவரையும் தளரவிடாது அவரவர் துணைவிகள்.... நானகனிகள் அவர்களின் சக்தியுடன் இணைந்துக் கொள்ள..... உருவான பந்து... இப்போது விதவித நிறங்களுடுன் ஒளிர தொடங்க.... உள் இருந்த மாயமோகினிக்கு மாயையின் தகதகப்பில் வலி சற்றே குறைய..... நேரம் ஆக ஆக..... வீரியம் அதிகத்திரித்துக் கொண்டே இருக்க..... சட்டென எவருமே எதிர்பார்க்காத நேரம்.... அவர்களின் சக்திக்குள்ளே.... மிக பாடுப்பட்ட மாயமோகினி..... ஏதோ ஓர் பெரும் ஒளியில்.... மறைய..... மற்றவர்கள் காண முடியாமல் கண்களை மூட... இதில் தடுமாறிய கோவன்கள் அவர்களின் கண்களை மூடியதால்.... மாயை தடைப்பட்டு நாகனிகள் உருவாக்கிய வளையம் மட்டுமே இருக்க.... அதை உணர்ந்த நாகனிகள் மூவரும்.... பேரதிர்ச்சியில்..... " இல்லை " என பெருங்குரலெடுத்து அலர..... ஒளி மறைந்த நொடி.... அங்கோ.... நாகனிகள் மூவரின் வளையத்திலும்.... இரு மாயமோகினி இருந்தனர்.... அதை கண்டு அனைவரும் அதிர்ச்சியில் பேச்சற்று நிற்க...... அவர்களின் அதிர்ச்சியியை பலமடங்காக்கும் விதமாய்.... இரு மாயமோகினியும்... ஒரே நேரத்தில் கண்களை திறக்க.... அதில் ஒருத்தியின் கண்கள் மாத்திரம் கருப்பாய் இருக்க.... அவள் தான் தீயசக்திக்குள் சிக்கியவள் என உணர்ந்து..... கோவன்கள் மூவரும்... தங்களுக்குள்ளே ஏதோ கண்களால் கூறிவிட்டு.... ஒரே நேரத்தில்.... அவள் மீது... தங்களின் அதிசக்தியை செழுத்த.... அடுத்த நொடியே.... மயங்கி விழுந்தாள் அவள்.....
நாகனிகள் அவ்வட்டத்தை மறைய வைத்திட....
விஷ்னு : தமக்கையே.... தாங்கள் நலம் தானே...
மாயா : நான் நலம்... அதாவது தங்களின் கணிப்பு படி... அவள் தான் தீயெண்ணம் கொண்டவள்... மோகினி.... நான் மாயா.....
ரம்யா : சரி... இப்போது என்ன செய்ய வேண்டும்...
யாழ் : அதையே பின் தொடருங்கள்.... தங்களின் மூவர் சக்தியிலே... மோகினி இருக்கட்டும்.... அப்போதே அவரின் குணத்தை மாற்ற இயலும்....
சரி என மூவரும் அவளை சுற்றி அதே பந்தை மீண்டும் உருவாக்க..... நாகனிகளும் அவர்களுடன் இணைந்துக் கொள்ள.... அந்த நேரம் சட்டென கோட்டை அதிர தொடங்கியது.... நடுக்கத்தில் ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டு நிற்க.... கோவன்கள் மூவரும் அசையாது நிற்க.... சற்றே கண்ணயர்ந்திருந்த துருவன் எழுந்து வீரிட்டு அழ தொடங்கியிருந்தான்...
நாகனிகள் மூவரும் தங்கள் கவனம் செதறவிடாமல் இருக்க... மிக பாடுபட.... அவர்களை வெகுவாய் தள்ளாடவைக்கவே.... அங்கு சட்டென தோன்றினர் அங்கிருந்து மறைந்த அதே ஐவர்..... நட்ட நடுவில் நின்ற மூவரும்.... குழந்தையின் அழுகுரல் கேட்டு... சத்யாவின் கரத்தில் இருந்த துருவனை கண்டதும்.... முகத்தை சுழித்தனர்.... எழுந்த மாயா... நிற்க கடினப்பட...... மற்ற நாயகர்கள் தாமதிக்காமல் உடனே அவர்களுடன் சண்டையிட.... அதை சாதகமாய் வைத்து... கோவன்களும் நாகனிகளும்... அதிவேகமாய் மோகினியின் புறம் சக்திகளை செழுத்த..... திடீரென கோட்டையின் வீரர்களும்... அவ்விடத்தில் கூடிட..... மாற்றி மாற்றி கோவன்கள் நாகனிகளை தவிர்த்து மற்ற அனைவரையும் வெட்டி சாய்க்க..... அப்பந்தையும் மாயாவையும் கோவன்கள் மற்றும் நாகனிகளையும் சுற்றி நின்று.... அவர்களை மற்றவர்ள் நெருங்கவிடாமல் மற்ற நாயகர்கள் தீவிரமாய் எதிரிகளை தாக்க.... அவர்களின் எண்ணத்தை ஈடேர விடாது.... மாயாவை இழுத்து அவளின் கழுத்தில் கத்தியை வைத்தாள் மதுசூதனா... இதனை எதிர்பார்க்காத நேரம்.... அங்கிருந்த பணியால் ஒருவள்... இத்துனை நேரம் துருவனை ஒரு கரத்தில் வைத்து மறுகரத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்த சத்யாவிடமிருந்து துருவனை பிடிங்கி கிரகதேவனிடம் கொடுத்தாள்.... இதை எதிர்பார்க்காமல் அனைவரும் தினர.... கோவன்களோ மிக கடினப்பட்டு.... எதையும் கவனிக்காமல்.... மோகினி மேலே தங்கள் கவனத்தை செழுத்தினர்....
இவை அணைத்தையும் கண்டு மற்ற நாயகர்கள் சண்டையிடுவதை நிறுத்திட..... ஆனாலும் ஓர் அடிக்கூட நகராது அதே இடத்தில் நிற்க..... உடலில் வலு இல்லாத மாயா.... அவன் இழுத்து இழுப்பில் நகர.... ஒரு கட்டத்தில்... இல்லாத வலுவை வர வைத்து... அவனிடமிருந்து விலகி.... ஒரே எட்டில்.... மதுசூதனாவிடமிருந்த துருவனை அவள் அசந்த நேரம் தூக்கிக் கொண்டு.... நாயகர்கள் புறம் விழ.... அவள் கீழே விழும் முன்னே அவளை சரியாய் தாங்கியது கற்றை மந்திரம்... அனைவரும் எங்கிருந்தென பார்க்க.... வளையத்தை உருவாக்கிய நாகனிகள் மூவரின் இடது கரத்திலிருந்து வந்த மந்திரமே அவர்களை தாங்கி இருக்க.... அவள் எழுந்ததும் மீண்டும் இரு கரங்களை வைத்தும் மாயையில் இறங்கிட...
இதை எதிர்பார்க்காத அவர்கள்... ஒரு நொடி சிந்தித்துவிட்டு.... ஏதோ அறிந்தவர்களாய்... அங்கிருந்து மறைய.... அவர்கள் மறைந்த அதே நொடி.... அங்கு சட்டென தோன்றிய ஓர் மின்னல்..... பட்டென வெடிக்க.... அனைவரும் கண்களை திறக்கும் நொடி..... அவர்கள் இருந்ததோ போர் நிகழும் பாலை வணத்தில்.....
காதல் தொடரும்...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro