காதல்-5
மலைப்பகுதியின் ஆதி முதல் அந்தம் வரை நடுங்கி போனது அவளின் கோர சிரிப்பலைகளாள்.... அவள் அருகிலே துருவன் பம்மி பம்மி நிற்க... குள்ளநரி கூட்டம் முழுவதும் மலைகளை சுற்றி சுற்றி இவளை இறுதியில் வந்தடைந்தது....மோகினியின் கண்கள் இரண்டும் வெற்றியின் இலக்கை கண்டுவிட்டதாய் பலபலக்க... அவள் அருகில் நின்ற துருவனுக்கோ குழப்பம் மின்னி மின்னி மறைந்தது....
மோகினி : என்ன துருவா என் மகிழ்ச்சியின் காரணத்தை அறிய இயலவில்லையா???உமக்கு ஒன்று தெரியுமா??? இன்று அவர்கள் வேதபுரத்தில் கூடிவிட்டார்கள்.... யாரென பார்க்கிறாயா.??? அவர்கள் தான்... எம் உயிர் மாண்டுக்கொண்டதன் காரணமாய் இருந்தவர்கள்... என் காதல் அழிந்ததற்கு காரணமாய் இருந்தவர்கள்... எம் நிம்மதியை குழைத்தவர்கள்.... என் சக்திகளை பறித்தவர்கள்... அவர்கள் தான் .... என சினத்தில் கத்த....
துருவன் : தாயே....சினம் கொள்ளாதீர்கள்... அவர்களை வதம் செய்து தங்களின் சக்திகளை பெருவீர்கள் தாயே....பெருவீர்கள்... ஆனால் அதற்கும் சில யாகம் நடந்தாகவேண்டும்... அடைந்து கிடப்பவர்கள் விடுதலை பெற வேண்டும்....
மோகினி : அதை செய்ய எம்மால் முடியாது துருவா... அதற்கு சக்தி வேண்டும்... யான் சக்தி பெற... பல உயிர் பலி வேண்டும்... அவர்களையும் அழிக்க வேண்டும்... என் இளமை திரும்ப வேண்டும்.. பகையை முடிக்க வேண்டும்....
துருவன் : அவர்கள் விடுதலை பெருவதே பகையை வெல்லத்தான் தாயே... அவர்களை மீண்டும் எழ செய்ய தமக்கு சக்திகள் வேண்டும் தான்... ஆனால் இன்னும் சில திங்களிள் வர இருக்கும் " துர்வநட்ச்சத்திரத்தில் " பலி கொடுத்தாள்... அவர்களிள் எவரேனும் ஒருவர் விடுதலை பெறுவது நிச்சயமல்லவா..????
மோகினி : ஆம் துருவா... ஆனால் எமக்கு ஒருவர் மற்றும் விடுதலை பெற்றால் போதாது... எமக்கும் முழு விடுதலை வேண்டும்...அவர்களும் விடுதலை பெறவேண்டும்.... " யஜ்னுவர்தம் " வேண்டுமானால் நிச்சயம் அவர்களும் வர வேண்டும்.... யாகத்தினை தயார் செய்.... என முழக்கமிட.... குள்ளநரியாய் உருமாறிய துருவன் மலைகளின் இடுக்கில் புகுந்து அங்கு யாகம் வளர்க்க தொடங்கினான்.... அதன் முன் தன் தடியுடன் அமர்ந்த மோகினி... இமை மூடி சத்தமாக மந்திரம் உச்சரிக்க தொடங்கினாள்....
மோகினி : தரக்கெண் ரலம்மரே... சதரகிரணம் மதவலறக்கனம்... கிரூமநோஞிசமம்.... அன்ட்ட பேமம் யரவ் தளிட்ச...மாத்தூர்யவான்.... என பாகுபலி காலக்கேயனை விட மிக மோசமாய் ஏதோ ஒன்றை உலரிக்கொண்டிருந்தாள்....
குள்ளமானிடர்களாய் மாறிய அனைத்து குள்ளநரிகளும் அவளுடன் இனைந்து... அவள் ஒரு வாக்கியத்தின் முடிவில் இடைவெளி விடும் போது....ஒன்றாய் கோரசாக....
குள்ளமானிடர்கள் : தத்விரனமாஸ்ஸே.... என கோரஸ் பாடினர்...
யாகத்தின் தீயில் மாற்றம் தென்பட்டது....தீயாய் எறிந்தது சட்டென கருப்பு நிறத்தில் எறிய தொடங்கியது.... மெல்ல அத்தீயினுள் இருள் சூழ்ந்த ஏதோ ஒரு இடம் காட்சி அளித்தது....
பலர் அதிதீவிரமாய் சண்டை இட்டுக் கொண்டிருக்க... சிலர் உயிரை பிடித்துக் கொண்டு பயந்து ஓடிக் கொண்டிருக்க... அதில் மூவர் தனித்து தெரிந்தனர் அவர்களின் உடையால்.... அனைவரின் ஆடைகளும் ஆடம்பரமாய் இருக்க... மூவர் மட்டும் சாதாரண உடையில் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்... சற்று தொலைவிலும் சிலர் அம்மூவரை போலவே ஆடை அனிந்திருந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.... திடீரென வேறு ஒரு காட்சி.... பாம்புகள் பல ஒரே இடத்தில் குழுமி இருக்க... அதனை சுற்றி மலை கடல் இரண்டும் அரணாய் இருக்க.... காற்று புயலாய் வீச.... சந்திரனின் ஒளி மெல்ல மேகத்தை விடுத்து பூமியில் படற.... ஒரே ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதாவது... மலை கடல் காற்று ஆகாயம் நிலம் ஐந்தும் சங்கமிக்கும் ஓர் சமமான இடத்தில் நிலவொளி பட்ட அடுத்த நொடியே நீரிலிருந்து எழுந்த கடல் கண்ணிகளும்.... நெருப்பிலிருந்து எழுந்த நாககண்ணிகளும்... காற்றில் நெருங்கிய தேவகண்ணிகளும்.... ஒன்று கூட.. அவர்களுக்கெல்லாம் தலைமையாய் நின்ற மூவர் திரும்பி நின்று ஏதோ செய்ய... வெவ்வேறு ஒளிகள் படர்ந்து வண்ணமயமாக இருந்த அவ்விடத்தில் மூன்று விதவிதமான நிறங்களை கொண்ட அசுரஇரெக்கைகள் மட்டும் பறந்து வருவது புலுதியின் நடுவில் மங்கலாய் தெரிந்தது.... உடனே வேறு ஒரு காட்சி..... ஒரு பக்கம் முடிவில்லா ஆழிகடல்.... நடுவில் நெடுந்துயர்ந்த பழையமலை....அதன் மேல் அதிவேகத்தில் சுழன்றடித்துக் கொண்டிருந்த சுழல்கள்.... அவைகள் ஒவ்வொன்றிலும் 40 அடி உயர.... இரும்பு கதவு.... அமைதியாய் காத்து நிற்க.... அதன் உள்ளோ அடர்ந்த இருளுடன் கூடிய ஆழ்ந்த அமைதி.... சட்டென அக்காட்சியும் மறைய.... அவர்கள் முன் ஒரு பெண் தன் உடலை ஒரு வாள் துணை கொண்டு தாங்கி.... தன் கரத்தை மேலுயர்த்தி உயிர் போகும் நிலையிலும் கம்பீரமாய் நின்ருந்தாள்.... அடுத்த நொடி வேறு ஒரு காட்சி.... பறந்து விரிந்த வாணம்.... செம்மையுற்றிருக்க.... மெல்ல இருள் அதை கவ்வி... முழுதும் கருப்பான போது... எவரும் எதிர்பார்க்காத வகையில்.... நாள் ஒன்றிர்க்கு நடப்பது போலே... காலை நேரத்தில் வெள்ளையாய் இருக்கும் வாணமும்.... விடிந்த சில மணி நேத்தில் தெளிவுற்று நீலமாய் இருக்கும் வாணமும்....அந்தி வாணம் மறையும் நேரம் செக்கசிவப்பாய் இருக்கும் வாணமும்.... ஒன்றோடு ஒன்று அருகருகில் தோன்றி... முழு வாணமே பாதி வெள்ளையாகவும்... பாதி நீல நிறமாகவும்...பாதி செக்கசிவப்பாகவும் மீதி இருந்த சிறு பகுதி கருமையாகவும் காட்சி அளித்தது.... அந்த காட்சி மறைய.... திடீரென தோன்றிய காட்சியில் கண்ணிமைக்கும் நேரத்தில் அதிகஇடை மற்றும் பெரிய தோற்றம் கொண்ட மூவர் தூக்கி எறியப்பட்டு மறைவது தெரிந்ததும் நெருப்பு தானாய் அனைந்தது.....
மோகினி : கண்டாயா??? இதில் பல நடந்தவை... சில நடக்கயிருக்கவை.... இவைகளை தடுக்க.... விடுதலை விரைவிலே வேண்டும்...... செவிகளை தீட்டி கேட்டுக் கொள்ளுங்கள் குள்ளமானிடர்களே.... தங்களின் உலகை காக்க வேண்டுமெனில் விரைவிவே அவர்களை சிறை வையுங்கள்... உங்கள் சாபம் விமோட்சனம் பெற வேண்டுமானால் அம்மூவரை பலியிட அவர்களை கைப்பற்றுங்கள்....
அவளின் கடைசி வாக்கியதை கேட்டவர்களுக்கு மனம் திக்கென இருந்தது... உயிர் இல்லையெனினும் நிழல் ஆய் இருக்கும் அதுகளுக்கு உடல் நடுங்க தொடங்கியது....
காலை பொழுது அழகாய் விடிய.... நேரம் 10 ஐ தாண்டிய சமையம்... காவியா பரிதவிப்புடன் வீட்டை வளம் வந்தார்... அவரை கவனித்த இலக்கியா....
இலக்கியா : காவியா என்ன ஆச்சு??? ஏன் ஒரு மாரி இருக்கு...
காவியா : இந்த முகில ஆலையே காணும் இலக்கியா.... இவனுங்க எல்லாரும் தூங்குரானுங்க .... ஆனா அவன மட்டும் காணும்...வீடு முழுக்க தேடீட்டேன்...
இலக்கியா : இங்க தான் எங்ஙையாவது போயிர்ப்பான்... விடு..
அப்போது சரியாக இளைஞர் கூட்டம் மொத்தமும் கீழ் இறங்கி வர.. அதே நேரம் டீவி பார்த்துக் கொண்டிருந்த இரமனன் ந்யூஸ் சனலை வைத்தார்... அதில் ஓடிய செய்தி அனைவரையும் டீவியின் பக்கம் இழுத்தது.....
வணக்கம்.... இன்றைய முக்கிய செய்தி....
பத்து வருடங்களாய் வலைவீசி தேடிவரும் கொலைகாரன் xxx இன்று ஐபீஎஸ் முகிலன் அவர்களாள் சுட்டு பிடிக்கப்பட்டான்....இத்துனை வருடமாய் எந்த காவலாளியாலும் பிடிக்க முடியாதவனை வந்த ஆறே மாதங்களிள் கையும் கலவுமாய் பிடித்து... என்கௌன்டர் செய்த ஐபீஎஸ் முகிலன் அவர்களுக்கு கமிஷ்னர் மற்றும் ஹோம் மினிஸ்டர் அவர்களின் பாராட்டை தெரிவித்தனர்...
என நம் முகிலின் அருமை பெருமை எல்லாம் ஓட.... இளைஞர் கூட்டமும் பெரியவர்கள் அனைவரும் அவனின் பாராட்டுதலுக்கு மகிழ்ச்சி அடைய...தாயுள்ளம் பதறியது... அதே நேரம் பம்மி பம்மி வழியில் யாராவது இருக்கிரார்களா என நோட்டம் விட்டவாரே திருட்டுபூணை போல் காக்கி சட்டையில் வீட்டிற்குள் நுழைந்த முகில் தன் அருமை பெருமையை தான் தன் மொத்த குடும்பமும் டீவியல் பார்க்கிறதென தெரிந்ததும் தலையில் அடித்துக் கொண்டு உள் நுழைய போனவனை தொலைவில் இருந்து பறந்து வந்த செம்பு பதம் பார்க்க போக... கணநேரத்தில் அதை பிடித்து தன் தலையை காப்பாற்றி கொண்ட முகில் அடுத்த நொடி மூச்சுவிடுவதற்கும் நேரமில்லாமல் மரத்தான் ஓடத் தொடங்கினான்.... அவனின் பின் தோசை கரண்டியுடன் தொரத்த தொடங்கியிருந்தார் காவியா..... ஓரிடத்தீல் நம் அனைத்து நாயகன்களும் அவனுக்கு அணை கட்டிவிட... அவன் திட்டமிட்டு தப்பிக்கும் முன்னே...அவன் காதை பிடித்து திருகினார் காவியா.....
முகில் : கவிமா... வலிக்கிது வலிக்கிது வலிக்கிது.... என கத்த...
காவியா : உனக்கு எத்தன தடவ டா முகிலா சொல்றது??? 10000 தடவைக்கும் மேல சொல்லீட்டேன்... வெளிய போனா என்ட்ட சொல்லாம போகாத டான்னு... ஏன் கேக்கவே மாற்ற... போடா ஏன்ட்ட பேசாத...
முகில் : புரிஞ்சிக்க கவிமா... நேத்து உடனே போவேண்டிய நிலமை... அதா... நைட்டுல தான் அந்த கொலகாரன் இருக்குர இடம் தெரிஞ்சித... நீங்க எல்லாரும் தூங்கிகிட்டு இருந்தீங்க... அதா உங்க யார்ட்டையும் சொல்லல... ஆனா நா ஏன் டார்லிங் ட்ட சொல்லீட்டு தான் போனேன்.... என வனித்தாவிடம் கூறியதாக கூறினான்.... வனித்தாவை வைத்து இவன் பொய் கூற மாட்டான் என மலையளவு தெரியும் என்றாலும்.....
காவியா : போடா... உன் வேல அப்டி... டெய்லியும் உயிர புடிச்சிக்குட்டு உக்காந்துருக்குரது நான் டா...
தோ இதுனால தான்... என அவன் சட்டையை காட்ட.. அதில் இருந்த பட்ச்சில் முகிலன் IPS என பொரிக்கப் பட்டிருந்தது...
முகில் : கவிமா... உன் மகன் மேலையும் நம்பிக்கை வை ... ஓவரால் தமிழ்நாட்டோட ரௌடிக எல்லார் கண்ளையும் ஆறே மாசத்துல வெரலு விட்டு ஆட்டுன ஒரே போலீஸ்...
காவியா : அதான்டா எனக்கு பயமே... ஒரு ஒரு ரௌடியா நீ என்கௌன்ட்டர் பன்னி நல்லது செஞ்சாலும் அவனுங்களாள உனக்கு எதாவது ஆய்டுச்சுன்னா நா எப்டிடா தாங்குவேன்... நீ ஆசப்பட்டு போலீஸ் ஆகப் போரேன் னு கேக்கவும் வேண்டாம் னு சொல்ல முடியாம உன்ன படிக்கவச்சு நா அப்போ தப்பு பண்ணீட்டேன்...
முகில் : எனக்கு ஒன்னும் ஆகாது கவிமா... அப்டியே ஆனாலும் என் மச்சானுங்களும் ஏன் அண்ணணும் அவனுங்கள சும்மா விற்றுவானுங்களா??
காவியா : அவனுங்க பரவால்ல டா உனக்கு... உன்ன மொதல்ல ஒருத்தி கைல புடிச்சு குடுத்தாதா நீ அடங்குவ...
முகில் : மா எனக்கு ஹார்ட் அட்டக் லாம் வரவச்சிராத... நா கல்யாணமே பன்னிக்க மாட்டேன்... நா IPS தெரியும்ல...
காவியா : IPS க்கும் இதுக்கும் என்ன டா சம்மந்தம்???
முகில் : I Pure Single
காவியா : அட கிருக்கு புடிச்சவனே...என தலையில் அடித்துக்கொள்ள... அவன் சொன்னதை கேட்டு வீடே சிரித்தது...
க்ரிஷ் : டேய் உனக்கே இது ஓவரா இல்லையாடா????
முகில் : இல்ல டா...
பவி : இவ்ளோ சிங்கிள் பற்று ஆகாது டா உனக்கு....
முகில் : அதல்லா ஆகும் டி.... கவிமா....உண்மையா தா சொன்னேன்... நா கல்யாணம் பன்னிக்க மாட்டேன்...
காவியா : டேய் டேய் உனக்குன்னு ஒருத்தி வரும்போது நீ என்ன பன்னுரேன்னு பாக்குரேன்...
முகில் : வந்தாலும் என் கண்ணுக்கு தெரிய மாட்டா போ ... எனக்கு பசிக்கிது... சோறு போடுவியா மாட்டியா???
காவியா : அய்யோ என் மவன் சாப்புடாமயே இருக்கானே... அத மொதல்ல சொல்ல மாட்டியா டா... வா வக்கிறேன்... என அவனையும் இழுத்துக் கொண்டு மற்ற நாயகர்களையும் அழைத்து அமர வைத்து உணவு பரிமாறினார்....
சாப்பிட்டு முடித்து அனைவரும் எழ.... திடீரென முகிலின் போன் அடித்தது....நாயகன்கள் நாழ்வரும் அவரவர் துணையிடம் பேச நகரப்போன சரியான நேரம் ரித்விக்குடன் சேர்த்து அவர்களையும் இழுத்துக் கொண்டு எங்கோ வெளியே சென்றான் முகில்....
வேதபுரத்தின் எல்லையில் நின்றது அவர்களின் பைக்குகள்.... கான்ஸ்டெபில்ஸ் மக்களை உள்ளே விடாது தடோத்து வைத்திருந்தனர்... நடுவில் கட்டப்பட்டிருந்த கையிறை தூக்கி விட்டு உள்ளே நுழைந்தனர்... ஓர் குறிப்பிட்ட இடத்தில் காய்ந்த போன இரத்தத்துடன்.... கைகால்களிள் பல காயங்களுடன்.... கழுத்தில் கன்னாடி துண்டையை வைத்து கிழித்து வெட்டுடடன் கிடந்தது ஒரு ஆணின் உடல்... முகம் மிக கொடூரமாய் சிதைக்கப்பட்டிருந்தது... உடல் முழுவதுமே இரத்தத்தால் குளிப்பபாட்டப்பட்டிருந்தது.... உயிர் இல்லை என்பதை உருதிபடுத்திக் கொள்ள... அவனின் மூச்சும் அடங்கி கிடந்தது...
அவனை சுற்றி ஒரு காவலாளி சாக் பீஸால் கோடு போட்டுக் கொண்டிருந்தார்..... சிறிது நேரத்தில் அங்கு அம்புலன்ஸ் வர அதே நேரம் கதறிக்கொண்டே அப்பிணத்தின் அருகில் வந்து விழுந்தான் ஒருவன்.... வந்தவன்... இறந்து கிடந்தவனின் இடது கையை தூக்கி பார்க்க..உள்ளங்கையில் ஒரு தழும்பு இருந்தது... அதனை கண்ட புதியவன்.... " சரத் " என பெருங்குரலெடுத்து அலரினான்....
அவன் : டேய் அவ்ளோ சோன்னேன்ல ஏன் டா போன??? என்ன விட்டு ஏன் டா போன??? இனி நா என்ன டா பன்னுவேன்..??ஏன்டா என் பேச்ச கேக்காம போன???அய்யோ... சரத்.... ஏன் கிட்ட வந்துடு டா.... என கதறியவனின் அருகில் கணத்த இதயத்துடன் அருகில் சென்றனர்... நம் நாயகன்கள்....
முகில் : தம்பி...தம்பி... இது யாருன்னு உனக்கு தெரியுமா??? உனக்கு தெரிஞ்சவரா??? உன் பேரு என்ன???
அவன் : என் ப்ரெண்டு அண்ணா... ஏன் பேரு ராஜு... இவன் பேரு சரத்...
சத்தீஷ் : சரத் ஓட அப்பாமா??? என இழுக்க...
ராஜு : அவனுக்கு யாரும் இல்ல அண்ணே... நா மட்டும் தான்... எனக்கும் அவன் மட்டும் தான்... என கண்ணீர் சிந்தினான்....
ரித்விக் : உனக்கு யாரு மேலையாவது சந்தேகம் இருக்கா தம்பி???
ராஜு : எங்களுக்கு எதிரி மாரி லாம் யாரும் இல்ல அண்ணே...நேத்து இவன் தான் நான் சொல்ல சொல்ல கேக்காம காட்டுக்குள்ள இருக்குர மர்மத்த கண்டுபுடிக்க போறேன்னு போய்ட்டான்... திரும்ப அவன போன் பன்னி வர சொல்லியும் அவன் பிடிவாதம் பிடிச்சான்.... அவன தேடி நானும் கெளம்பி வெளிய வந்தேன்... கொஞ்ச தூரத்துல திடீருனு நான் பேசிகிட்டே இருக்கும் போது சத்தமா கத்துனான்... அப்ரம் போனே எடுக்கல அண்ணா... அதுக்கப்ரம் நா மயங்கீட்டேன்.... எழுந்த உடனே இவன தான் தேடி ஓடி வந்தான்.... ஆனா ஆ...னா....எ..ன்... ச..ரத்... என அழுகை தொண்டையை அடைத்தது....
சரத்தின் உடலுடன் ராஜுவையும் அம்புலன்ஸ் ஏற்றி அனுப்பிவிட்டு ஆழ்ந்த யோசனையுள் புகுந்தனர் நம் நாயகன்கள்...
சரத்தின் பிணம் கிடந்த இடத்தை சுற்றி வரையப்பட்டிருந்த கோட்டையே கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த சத்தீஷ்... அதன் அருகில் சென்று குத்துகாலிட்டு அமர்ந்தான்....அதே நேரம் தன் டெலெஸ்கோப் மைக்ரோஸ்கோப் என பலவிதமாக ஆராயும் விழிகளை அங்கும் இங்கும் சுழற்றிக் கொண்டிருந்த க்ரிஷின் விழிகள் ஓரிடத்தில் குத்தீட்டு நிலைத்தது.... காட்டுபகுதியின் தொடக்கத்திலே இருக்கும் ஒரு மரத்தின் அருகில் சென்றவன்....மரத்தின் வேர் அருகில் கிடந்த போனை எடுத்தான்... அதே நேரம் குத்துகாலிட்டு அமர்ந்த சத்தீஷ்.... தன் கையில் க்லௌஸ் மாட்டிக் கொண்டு சரத்தின் காய்ந்த இரத்தத்தின் அருகேயே கொட்டியிருந்த கருப்பு திரவத்தை தொட்டுப்பார்த்தான்.... கொஞ்சம் பிசுபிசுப்பாக இருந்தது... பார்க்க கருப்பும் சிவப்பும் கலந்த கலவை நிறத்தில் இருந்தது.... அதை நுகர்ந்தவனுக்கோ தலை சுற்றுவதைப் போல் இருக்க.... அடுத்த நொடி அதை நுகராமல் க்லௌஸை கலட்டினான்.... போலீஸ் ஒருவரிடம் அதை நுகராமல்... க்லௌஸ் அனிந்து தனியே சேகரிக்குமாரி பனித்தான்... அவரும் அவ்வேலையில் மூழ்கிவிட.... க்ரிஷ்ஷின் அருகில் சென்றான்... மற்றவர்களும் அவன் அருகில் தான் இருந்தனர்...
அதை சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்த க்ரிஷ்ஷை கண்டு...
சத்தீஷ் : அது என்ன தாஜ்மஹாலா??? சுத்தி சுத்தி பாத்துக்குட்டு இருக்க...ஆன் பன்னுடா..
க்ரிஷ் : எனக்கு தெரியாதா??? வேலை செய்யல டா.... ஸ்விட்ச்ட் ஆப்... அதுவும் இல்லாம ரொம்ப டமேஜ் ஆய்ருக்கு....
இந்திரன் : ம்.. சரி இங்க மொபைல் சென்டர் ல குடுக்கலாம்...
அஷ்வன்த் : இது காட்ல இருக்க மிருகங்கள் னால நடந்தது இல்ல டா...
ரித்விக் : இட்ஸ் கன்பார்ம் அ மர்டர்...
முகில் : ஆனா யாரு பன்னீர்ப்பா???
சத்தீஷ் : அதுவும் நட்ட நடு காட்ல???
அஷ்வன்த் : போஸ்ட்மார்ட்டம் ரிபோர்ட்ட பாத்தாத்தான் இனிமேலும் எதாவது சொல்ல முடியும்....
ரித்விக் : சரி வீட்டுக்கு கெளம்பலாம் வாங்க....
அவர்களின் பைக்குகள் அரண்மனை முன் நிற்க.... அரண்மனையின் வாயில் கதவும் டப் என்ற சத்தத்துடன் மூடப்பட்டது....
பைக்குகளிள் இருந்து இறங்கிய நாயகன்கள்....
முகில் : நாம வந்தத பாத்துட்டு கதவ சாத்துனாங்களா.... இல்ல பாக்கலையா...
சத்தீஷ் :ச ச்ச...பாத்துர்க்க மாட்டாங்க டா...வா உள்ள போவோம்....
கதவை தட்டிய மூன்றாவது நொடி " வரேன் " என்னும் கூவலுடன் கதவை திறந்தாள் பவி.... இவர்கள் ஆறுபேரையும் எதிர்பார்க்காதவள்.... பேந்த பேந்த முளித்துவிட்டு.... தன் அண்ணன்களை இத்தனை வருடங்களாய் காணாதது நினைவு வர... மூவரையும் அனைத்துக் கொண்டாள்.... கதவை திறந்த தங்களின் தங்கையை இத்துனை வருடம் ளித்து முதல் முறை நேரில் கண்டதில் உடல் சிலிர்த்து போய் நின்றிருந்த சகோதரன்கள் மூவரும் அவள் அனைத்ததும் ஆரதழுவிக் கொண்டனர்.... கண்களின் வழி ஆனந்த கண்ணீர் எட்டி பார்த்தது....
பவி : அண்ணாஸ்....
மூவரும் : பவி குட்டி.... என்ற அழைப்பில் பெரும் வெற்றியை அடைந்ததாய் உணர்ந்தாள் பவி...
இந்திரன் : எப்டி டா இருக்க???
பவி : நல்லா இருக்கேன் டா அண்ணா...நீங்க எப்டி டா இருக்கீங்க.???
சத்தீஷ் : எங்களுக்கு என்ன டி குட்டிசாத்தான்... என அவளை சிரிக்க வைக்கும் நோக்கில் அவளின் செல்ல பெயரை வைத்து அழைக்க....
பவி : போடா பெரிய சாத்தான்...என்றாள் கண்ணீரின் ஊடே..
க்ரிஷ் : குட்டி அழாத.... என கண்களை துடைத்து விட....
க்கும்... என செருமலிலே தங்களின் பின் மூவர் நிற்பது நினைவு வர.... ஈஈ என இழித்துக் கொண்டே திரும்பி நோக்கினர் உடன்பிறப்புகள் நாழ்வரும்...
ரித்விக் : பாசமலர்களே.... கொஞ்சொ உள்ள போய் உங்க மழைய பொழியுங்க..
இந்திரன் : உனக்கு பொராமை டா....
முகில் : ஏன் டி பவி...நான் லாம் உன் கண்ணுக்கு தெரியலையா???
பவி : டேய் மச்சான் ஹவ் ஆர் யூ டா??? என அவன் கையுடன் அவளின் கையை இடித்துக் கொண்டாள்....
முகில் : நல்லா சமாளிக்கிர மச்சி....
அடுத்ததாக அவளின் பார்வை அவளையே இவ்வளவு நேரமாய் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த அஷ்வன்த்தின் புறம் திரும்பியது....
நம் அஷ்வன்த்தோ.... செதிக்கிவைத்த தேகம்.... அளவான புருவம்...மீன் போன்ற கண்கள்... சில்லிட்ட மேனி.... மையிட்ட விழி.... என தன்னவளை நேரில் முதல் முறை கண்ட ஆனந்தத்தில் அனைத்தையும் மறந்து அவளை இரசித்துக் கொண்டிருக்க.... பவியோ அவனின் பார்வையில் செம்மையுற.... இருவரையும் கலைக்கும் விதமாய்.... மாடியில் இருந்த மற்ற நாயகிகள் சத்தத்தில் கீழ் இறங்கி வர... அனு திவ்யா ப்ரியா தங்கள் அண்ணன்களான அஷ்வன்த் மற்றும் முகிலை கண்டு.... " டேய் அண்ணாஸ் " என்ற கூவலுடன் ஓடி வந்து அனைத்துக் கொண்டனர்....
அதிலே தெளிந்த அஷ்வன்த்.... முகிலுடன் அவர்களை அன்பாய் அனைத்துக் கொண்டான்.... இம்மூவரையும் பிஞ்சு குழந்தைகளாய் கண்டது நினைவு வர... அஷ்வன்த்தின் கண்கள் தானாய் கண்ணீரில் நனைந்தது.... முகிலுக்கோ தன் தங்கைகள் மற்றுமான தோழிகளை கண்ட மகிழ்ச்சி அப்பட்டமாய் தெரிந்தது....
பவி : சரி சரி உள்ள வாங்க... என அனைவரையும் அழைத்து போக.... க்ரிஷ் இந்திரன் ஒரு சோபாவில் அமர... ரித்விக் முகில் அஷ்வன்த் ஒரு சோபாவில் அமர.... சத்தீஷ் நடுவில் இருந்த தனி சோபாவில் அமர்ந்துக் கொண்டான்..... அவன் அருகில் நாயகிகளும் அவர்களுக்கு எதீரில் இருந்த சோபாவில் அமர்ந்தனர்....வீட்டில் யாரையும் காணாது....
இந்திரன் : எங்க யாரையும் காணும்...வீட்ல இல்லையா???
இவ்வளவு நேரம் அதை மறந்திருந்த நாயகிகள்... அவனின் கேள்வியில் திருட்டு முளி முளிக்க... எப்படி சமாளிப்பதென தெரியாமல் இருந்த போது... ரித்விக் இன் மேல் இருந்த கோவம் நினைவு வர.... உடனே பெண்கள் நாழ்வரும்... எழுந்து அவன் தலையில் சராமரியாய் கொட்ட தொடங்கினர்.... " அம்மா " என்று அவன் அலரிய அலரலில் மற்றவர்கள் அவனை திரும்பி நோக்க...அவனோ தன் தலையை நாயகிகளிடமிருந்து பாதுகாக்க அருகே இருந்த ஒரு கூடையை எடுத்து தலையில் கவுத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்....
முகில் : ஏன் டி அவன அடிக்கிறீங்க???
அனு : நீங்க வர்ரத பத்தி இவன் எங்கள்ட்ட சொல்லவே இல்ல டா... அதான் என ஒரு கொட்டு வைக்க....
அஷ்வன்த் : எங்களுக்கும் தான் டி சொல்லல....
திவ்யா : டேய் அண்ணா... இவன காப்பாத்த பொய் சொல்லாத...நாங்க வர்ரது உங்களுக்கு தெரியாம இருந்துர்ந்தா.... நேத்து ஏன் டா எங்கள மாரி நீங்க அதிர்ச்சி ஆகல???
சத்தீஷ் : இதுலாம் ஒரு விஷியமா... சரி நீங்க தள்ளுங்க.... கை வலிக்கும்....நாங்க அவன அடிக்கிறோம்... என கையை முருக்க...
ரித்விக் : அடப்பாவி....உனக்கு நா என்னடா பாவம் பன்னேன்...
திடீரென ப்ரியா டேய் என கத்த.... இவ யார கூப்புர்ரா... என அனைவரும் அவளை நோக்க... அவளோ சத்தீஷை தான் டேய் என கத்தி அழைத்திருந்தாள்....
சத்தீஷ் Mind voice : இவ ஏன் இப்போ நம்மள கூப்புர்ரா....
அனு : எங்ளுக்கு மட்டும் தெரியுமா டா???
சத்தீஷ் : என் மைன்ட் வாய்ஸ் உனக்கு எப்டி டி கேட்டுச்சு???
அனு : மைன்ட் வாய்ஸ்ஸா???? சத்தமா தாண்டா சொன்ன....
ப்ரியா : டேய் நீ தான என்ன ரெஸ்டாரென்ட்ல தள்ளிவிட்ட...
இது எப்போ டா நடந்துச்சு என்று நாயகன்கள் அவனை நோக்க...
சத்தீஷ் : அப்போ நீ தானா டி அது??? ஓய்... நீ தான் டி திரும்பி பாக்காம என்ன தள்ளிவிட்ட....
ப்ரியா : ஆமா நானே தான் டா....ஏன் நீ திரும்பி பாக்க வேண்டியது தான....
சத்தீஷ் : நா தா வாங்கிக்கிட்டு இருந்தேன் ல...நீ பாக்க வேண்டியது தான...
ப்ரியா : நா தா தேடிகிட்டு இருந்தேன்ல டா..
சத்தீஷ் : யார தேடுன???
ப்ரியா : உன்ன தான்...
சத்தீஷ் : என்ன ஏன் நீ தேடுன???
ப்ரியா : என் மில்க்ஷேக்க நீ தான எனக்கு முன்னாடி ஆர்டர் பன்ன??
சத்தீஷ் : அதத்தான் நீ கௌத்துவிட்டியே டி....
ப்ரியா : நீ தான் டா.... கீழ கொட்டீட்ட....
சத்தீஷ் : நீ விழாம இருந்துர்ந்தா....நா அத புடிச்சிர்ப்பேன்....
ப்ரியா : நீ திரும்பாம இருந்துர்ந்தா நா விழுந்துர்க்கவே மாட்டேன்....
சத்தீஷ் : நீயும் தான டி திரும்புன....
முகில் அவர்களின் சண்டையை அக்ஷன் மூவி பார்ப்பதை போல் இன்ட்ரெஸ்ட்டாய் பார்த்துக் கொண்டிருக்க.... அஷ்வன்த் மற்றும் பவி கண்களாளே காதல் மொழியை பரிமாற்றியவாறிருக்க.... அனு மற்றும் க்ரிஷ் ப்ரியா மற்றும் சத்தீஷை கட்டுபடுத்த படாத பாடு பட்டுக் கொண்டிருக்க.... இந்திரன் இந்த இன்டியா பாக்கிஸ்தான் போரை கண்டுக்கொள்ளாமல் அவனவளைளே பார்த்துக்கொண்டிருக்க.... அவனவளோ அவளவனின் பார்வையை தாங்க முடியாமல் தரையை பார்த்துக் கொண்டிருந்தாள்....அப்போது அனுவின் செவிகளுக்கு கரகரப்பான ஒரு குரல் கேட்டது.... " வீட்டில் அவர்களை தவிர்த்து வேராரும் இல்லை.... இதுவே நமக்கு கிடைத்த வாய்ப்பு " இதை கேட்ட அவள்.... ப்ரியாவை சமாதானம் செய்வதை விட்டுவிட்டு சுற்றி எங்கிலும் நோட்டமிட....... அதே நேரம் எதர்ச்சயாய் தரையிலிருந்த தன் பார்வையை உயர்த்திய திவ்யாவின் கண்களுக்கு அரண்மனையின் முதல் தளத்தில் அரைஅடி உயரத்தில் கருப்பான உருவம் ஒன்று இரத்த விழிகளுடன் நிற்பதை கண்டவளுக்கு நா எழ மறுக்க.... அடுத்ததாக நடந்ததில் அவளின் இதயம் துடிக்க மறந்தது..... அனுவின் கண்கள் மெல்ல மேல் சுழலும் போது அரண்மனையின் முதல் தளத்தில் இரத்தவிழி மற்றும் தெரிவதை கண்டு அதிர்ச்சியுற.... அடுத்த நடந்ததில் அவளின் மூச்சே நின்றுவிட்டது..... அனுவும் திவ்யாவும் ஒரே நேரத்தில் அனு " யுவா " என கத்த... திவ்யா " க்ரிஷ் "என கத்தினாள்... தன்னவளின் அலரலை கேட்டது மட்டுமல்லாமல் அவளின் அழைப்பு அவனின் இதயத்தையும் தாண்டி உயர் வரை சென்று ஊடுருவ.... பெயரில்லா உணர்வில் க்ரிஷுடன் இந்திரனும் அதிர்ச்சியில் எழுந்து விட.....சடாரென எழுந்து நின்ற அடுத்த நொடிடே.... க்ரிஷின் தலை மேலும் வந்து விழ இருந்த கன்னாடி தொட்டி சோபாவில் விழுந்து சுக்கு நூராய் நொருங்கி செதரியது..... அனு க்ரிஷின் இடதில் நேராய் அமர்ந்ததாள் அவன் தலையிலே அது விழப்போதென அவள் நினைத்திருக்க.... திவ்யா இந்திரனின் வலப்புறம் அமர்ந்திருந்ததால் அவன் மேலே விழப்போவதை கண்டு கொண்டவள் அவனை கத்தி அழைத்தாள் அழைத்தாள்.......கண்களிள் முட்டிக் கொண்டு வந்தது கண்ணீர்.....
மற்றவர்கள் நடந்ததில் இருந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவராமலே இருக்க..... அனுவின் கண்ணீரை கண்ட க்ரிஷ் எதை பற்றியும் யோசிக்காமல் அவளை தன்னுள் புதைத்துக் கொண்டான்.....அவன் மார்பில் சாய்ந்தவள்.... யுவா என்று அழைத்தவாறே அழத்துடங்கினாள்....திவ்யா பட்டென மேல் அந்த உருவம் தெரிகிறதா என நோக்க.... அங்கோ ஒன்றுமே தென்படவில்லை.... மாடிக்கு ஓடினாள்.....முதல் தளம் முழுதும் தேடியவளுக்கு யாருமே கிடைக்காததால் கிழ் இறங்கி வந்தாள்....
அவள் அழுவதை தாங்க முடியாமல் நின்றான் க்ரிஷ்.... அவனின் மனம்... இவளின் அழுகைக்கு தன் இதயம் ஏன் வாடி தவிக்கிறதென சிந்தித்துக் கொண்டிருந்தது.... விடாமல் அழுதுகொண்டிருந்த அனு க்ரிஷ்ஷின் வலி நிறைந்த " ரது " என்னும் அழைப்பில் அவன் வலியை உணர்ந்துக் கொண்டவள் கடினப்பட்டு தன் அழுகையை கட்டுபடுத்தினாள்.....
க்ரிஷ் அவன் ஒரு கரம் கொண்டு அவள் தலையை கோதிவிட...
மற்றுமோர் கரம் அவளை வாகாய் அனைத்திருந்தது... மெல்ல அழுகையை நிருத்தியவள் அவன் முகத்தை நிமிர்ந்து நோக்க.... சிதரிய கன்னாடி துண்டுகளிள் ஒரு சிறிய துண்டு கிளித்து அவன் கழுத்தில் கோடாய் இரத்தம் வலிந்துக் கொண்டிருந்தது....
நம் மற்ற நாயகர்கள் அவனின் காயத்திற்கு மருந்திட முன் வர முயற்சிக்க.... அவனோ அவளை கட்டி கனைத்தவாறே அவர்களை விரல் நீட்ட வர வேண்டாம் என்றான்.... அவர்களும் புரிந்துக் கொண்டு அப்படியே இருக்க.... சண்டையை நிறுத்தியிருந்த சத்தீஷ் மற்றும் ப்ரியா தன் உடன்பிறப்புகள் படும் வேதனையை கண்டு கவலையுற்றனர்....
கோடாய் வவிந்த இரத்தத்தை கண்டு பதறி எழுந்த அனு.... பவி எடுத்த வந்த பர்ஸ்ட் ஏய்ட் பாக்ஸை எடுத்துக் கொண்டு அவனையும் இழுத்துக் கொண்டு ஒரு அறைக்குள் நுழைந்தாள்.... அவ்விடம் எங்கிலும் கன்னாடி தூள்கள் சிதறியிருந்ததாளோ என்னவோ....
கீழே வந்த திவ்யா பவி ப்ரியாவுடன் அந்த இடத்தை சுத்தம் செய்ய தொடங்கினாள்.... மற்றவர்களும் அவர்களுக்கு உதவ.... க்ரிஷ் இந்திரன் மற்றும் சத்தீஷின் மூலை மற்றும் நடந்ததையே சுற்றி சுற்றி வந்துக் கொண்டிருந்தது....
அனு நுழைந்தது அவளின் அறைக்குள் தான்.... அவனை அமர வைத்தவள்....முதலில் இரத்தத்தை சுத்தம் செய்தவள் டின்ஜரை வைத்து மருந்திட தொடங்கினாள்.... அவனுக்கு வலி இல்லாததால் அவன் அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க... அவளோ அவனுக்கு வலிக்குமோ என்று பட்டும் படாமல் வைத்துக் கொண்டிருந்தாள்.... க்ரிஷ் அவள் கையிலிருந்த டின்ஜரை அவள் கைமேல் அவன் கை வைத்து தன் காயத்தில் அழுத்த....வலியில் அவன் அலருவதற்கு முன்பே இவள் அலர தொடங்கினாள்.... வெளியே உள்ளவர்கள் அவள் அலருவதை கேட்டு என்ன நடந்திருக்கும் என சரியாய் யூகித்து விட்டு சிரித்தவாறே அவர்களின் வேலையை தொடர்ந்தனர்...
க்ரிஷ் : ரது....
அனு : ம்ம்...
க்ரிஷ் : ஏன் அழுகுர???
அப்போதே தான் மீண்டும் அழுவதை உணர்ந்தவள்.... பதில் வராது... மருந்து போடுவதில் கவணம் செலுத்த....
க்ரிஷ் : வலிக்கிது....
அனு : நா மெதுவாதான் வச்சேன்... நீ தான அழுத்துன.... என்றாள் தவிப்புடன்...
க்ரிஷ் : அது வலிக்கில...
அனு : பின்ன....
க்ரிஷ் : நீ அழுகுரது தான் வலிக்கிது....
அவனை நிமிர்ந்து நோக்கியவளின் கண்ணீர் தானாய் சுரப்பது தடையுற..... மருந்திட்டு முடிந்ததில் அவள் அந்த ஸ்பான்ஜை கீழ் வைத்துவிட.... காயத்தில் மெதுவாய் ஊதினாள்..... குளிர் காற்றை உணர்ந்தவன் மெதுவாய் இமை மூட..... தன்னவளின் அருகாமையை அனுவித்தவன் மெல்ல இமையை திறக்க...
ஆலை கொல்லும் காந்த மை விழியில் முத்து முத்தாய் கண்ணீர் இருக்க...விழி முழுவதும் வலி நிறைந்திருக்க..... நாசி அழுததில் சிவப்பாய் சிவத்ததிருக்க.... ரோஜா இதழ் டபடக்க.... இளஞ்சிவப்பு சுடியில்.....தேவதையென நின்றிருந்தாள் அவனின் ரது.... மெத்தையிலிருந்து எழுந்தவன் அவளுக்கு நேர் எதிரில் நிற்க..... அவனின் சுடர் விடும் கண்களை பார்க்க முடியாமல் அவள் தரையை நோக்கியவாறே பின் நடக்க....அவன் முன்னேற..... திடீரென எங்கிருந்தோ வந்த செவுரு அனுவை பின் நகர விடாமல் தடுக்க.... அவளை நெருங்கியவன் இரு பக்கமும் கைவைத்து கடிவாளம் போட..... இருவரின் மூச்சு காற்றும் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ள..... மெதுவாக
அனு : யுவா.... என அழைக்க.... அவனோ அவளின் இதழ் மேல் கைவைத்து தடுத்தவன்.... பேச தொடங்கினான்....
க்ரிஷ் : நா நேத்து தான் உன்ன முதல் முறை பாத்தேன்....அதே கண்ணு.... நெத்தியில விளையாடுர முடி.... பாத்த உடனே ஒரு வித உணர்வு.... வாய் வார்த்தைல சொல்ல தெரியல.... ஒரு எக்ஸாம்பில் சொல்லனும் னா.... என் இதயம்.... ஏதையோ பல வருஷம் களிச்சு பாத்த சத்ததோஷத்துல இப்போ துடிக்கிறத நின்னாலும் கவலை இல்லை ன்னு தோனுச்சு.....
தனக்கு தோன்றியதை அவன் அச்சு நிசகாமல் கூறுவதில் பிரமிப்புடன் நோக்கி கொண்டிருந்தாள்.... அவனே தொடர்ந்தான்...
க்ரிஷ் : இப்ப கூட நா ஏன் உன் கிட்ட இப்டிலாம் பேசி கிட்டு இருக்கேன்னு தெரியல....இரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வர... உன்ட்ட பேசுரப்ப எதுவும் தோனல.... ஆனா இந்த 24 மணி தேரத்துல என்ன என்னமோ பன்னீட்ட.... இது என்னனன்னு கூட எனக்கு ஆராய விருப்பம் இல்ல...ஏன்னா என் இதயம் அடிச்சு சொல்லுது இது அதுதான்னு.... ஆமா.... நா உன்ன காதலிக்கிறேன் டி.... எனக்கு நீ தான்.... உனக்கு என்ன பிடிக்கலனாலும் இந்த வாழ்க்கை முழுக்க எனக்கு நீ தான்.... நீ மட்டும் தான்... இந்த கண்ணு மனசும் காதல் ங்குர அர்த்தத்தோட உன்ன தவிற வேர யாரையும் பாக்காது... நினைக்காது..... என்ன ஏத்துக்குவியா???? என அவள் கண்களையே காண.. அதில் என்ன கண்டானோ.....முத்து முத்தாய் இருந்த கண்ணீரில் அவள் இரு கண்களிளும் அவன் முத்தத்தை பதித்தான்....
அவள் இமை மூடி இரசித்துக் கொண்டிருக்க.... அவளை விட்டு விலகியவனை பிடித்து இழுத்தவள்.... இமையை பிரித்து
அனு : ஏத்துக்குவியா ன்னு கேள்வி கேட்டுட்டு.... பதில் கேக்காமையே போர....
க்ரிஷ் : எனக்கு தான் பதில் தெரிஞ்சிருச்சே...
அனு : எப்டி என்ன பதில்???
க்ரிஷ் : என் யுவராணி என் இதயராணி ஆண மாரி.... அவளோட யுவா.... அவளுக்கு எப்பையோ யுவராஜன் ஆய்ட்டேனாம்...என்றான் கண்ணடித்து.....
அனு : அப்டி...லாம் இல்..ல...என தடுமாற....
க்ரிஷ் : ரது... உன் வாய் பொய் பேசுனாலும்.... உன் கண்ணு என் கிட்ட பொய் சொல்லாது.....அது சொல்லிடுச்சு உண்மைய...வேணா என் கண்ணுகிட்ட கேட்டு பாரு....
அவன் கண்ணை காண முடியாது.... கண்டால் தானே உண்மையை உலரிவிடுவோம் என்பதை அறிந்து..... நாணத்தை மறைக்க இயலாமல்
அனு : போடா கிருக்கா.... என குளியல் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.... அவளின் செம்மையுற்ற வதனத்தை நினைத்து இரசித்து சிரித்தவாறே வெளிறினான் அவளின் யுவா.....
இதுவரை அதே அறையின் பரன் மேல் அமர்ந்து...க்ரிஷ்ஷின் மேல் விழப்போன தொட்டிக்கு காரணமாய் இருந்த துருவன்.... பல்லை கடித்தவாறு.....
துருவன் : இவற்றை எல்லாம் காண வேண்டும் என என் தலையில் எழுதியிருக்கிறது.... என கடிந்துக் கொண்டே அவ்விடத்தை விட்டு மறைந்தான்.....
காதல் தொடரும்.....
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro