காதல்-48
அனைவரும் ஒன்றை எதிர்பார்த்து காத்திருக்க... அங்கு நடந்ததோ வேறு.... காக்கத்திய காளைகள் மூன்றும் விவேகத்துடன் ஓடோடி வர.... முக்கோக்கள் மூவரும்... சரி பார்த்துவிடுவோம்... என மண்ணை.... கைகளில் தட்டி.... வழுவழுப்பு இல்லாதிருக்க.... கை முழுவதும் பூசிக் கொண்டு அப்படியே நிற்க... முப்பெரும் அரசர்கள் ஏளனமான புன்னகையுடன் நிற்க... அக்காளைகளுக்கு முப்பெரும் அரசர்கள் தான் தெரிந்தனரோ என்னவோ.... நேர் எதிரில் நின்ற முக்கோக்களை சேட்டை செய்யாமல் அம்மூவரை தொரத்தி தொரத்தி முட்டியது...
அமைச்சர் : இதென்ன மாயமாக உள்ளது... காக்கத்திய காளைகளுக்கு நம் முப்பெரும் அரசர்களை தவிர்த்து வேறெவரும் தெரிவில்லை போலிருக்கிறதே....
அவர்களோ வழியை காணும்... பாதைத்தைக் காணும் என ஓடிக் கொண்டிருக்க.... ஓர் கட்டத்தில் மூவரும் ஓர் இடத்தில் ஓட முடியாமல் நிற்க....
அமைச்சர் : ஓடுங்கள்... அரசர்களே... குத்துப்பட்டால் மீண்டு எழ நாட்கள் ஆகும்... என எச்சிரிக்க...
அவர்கள் அப்போதும் அப்படியே நிற்க... காளைகள் மூன்றும்.. அதிவேகத்தில் வர... அனைவரின் பார்வையும் கூர்மையடைய... ஓர் குறிப்பிட்ட இடத்தில் தாண்ட முடியாமல் திண்டாடத் தொடங்கியது காளைகள்....
அமைச்சர் : இறைவா... ஏதோ ஒன்று நடந்துள்ளது... காளைகள் ஓர் எல்லையில் இருந்து நகராமல் திண்டாடிக் கொண்டிருக்கிறது....
காளைகள் மூன்றின் முன்னும் அதன் கொம்புகளை இருக்கி பிடித்து.... அதை முன்னேற விடாமல்.... பிடிக்காய்... தங்களின் இடது கால்களை பின் நோக்கி அழுத்தி.... வலது கால்களை முன் நோக்கி அழுத்தி வைத்திருக்க.... அவர்களின் அழுத்தத்தில் தடுமாறிய காளைகள் திமிற... முக்கோக்கள் கலத்தில் இறங்கியதை கண்டு..... கூடியிருந்த அனைவரும் மகிழ்ச்சியில் கரகோஷம் போட்டனர்....
அமைச்சர் : ஆஹா... நம் முக்கோக்கள் கலத்தில் இறங்கிவிட்டனர்... இனி காளைகலா... அல்லது நம் முக்கோக்களா என பார்த்துவிடுவோம்... என ஆர்பரிக்க.....
அனைவரின் பார்வையும் கூரானது.... ஆர்வம் டன்டன்னாய் வலிந்தது... தளபதிகள் அதே கர்வப்புன்னகையுடன் நிற்க.... ராஜமாத்தா தேவசேனையோ கம்பீரமாய் நிமிர்ந்து அமர்ந்தார்...
காளைகள் மூன்றும் நொடி தாளாமல் சகோதரன்கள் மூவரையும் தள்ளி நிருத்தி..... கொம்புகளை அவர்களை நோக்கி காட்டியவாறே வர....
அமைச்சர் : நம் முக்கோக்கள் அசையாமல் அதே இடத்தில் இருக்கின்றனர்.... காளைகள் அதிவேகத்தில் அவர்களை நெருங்கி வருகிறது... என்ன நடக்குமோ தெரியவில்லையே... என பதட்டமடைய....
காளைகளையே எதிர்பார்த்து காத்து நின்ற மூவரும்.... அது சரியாய் நெருங்கியதும்... மூவரும் அவரவர் முன் இருந்த கொம்புகளை பிடித்து... எம்பி... அது குத்தும் முன்னே நகர்ந்து.... கீழ் விழ.... காளைகள் ஒரு சுற்று சுற்றிவிட்டு மீண்டும் வந்தது..
அமைச்சர் : சரியான... பிடி... கச்சிதமாய் காளை குத்தும் முன்னே... ஒரே எம்பில் நகர்ந்து வந்துள்ளனர்... அர்ப்புதம்....
மூவரும் கண்ணசைத்துவிட்டு... வெவ்வேறு திசையில் பிரிந்து நின்றனர்.... தனி தனியாய் ஓடி வந்த காளைகள் அவர்களை முட்ட வர.... மக்கள் அனைவரும் மூச்சை கூட விடாமல் மிக ஆர்வமாய் கவனித்துக் கொண்டிருக்க.....
அமைச்சர் : இல்லை இல்லை....காளை முட்ட வருகிறதே.... என படபடக்க....
சேவன் : அமைச்சரே... சற்று அமைதியாய் தான் இருங்களேன்... எரிச்சலை கிளப்பிக் கொண்டு.... அனைவரின் ஆர்வத்திலும் மண்ணை கரைக்காதீர்கள்...
தீரா : நா இல்லாத கொறைய நீ தான் டா தீக்குர... நான் பேசுனாலும் இவனுங்களுக்கு இப்போ கேக்காது...
ஆனால் காளைகளோ தவறுதலாய் மூவரையும் சரியாய் இடித்தது... அதில் யுவனின் கழுத்தில் கொம்பு குத்தியிருக்க... சக்தியின் கழுத்திற்கும் தோளிற்கும் இடையில் குத்தியிருக்க... விஷ்னுவிற்கு தாடையில் லேசாய் கீரிவிட்டு நகர்ந்தது.... அனைவரும் இப்போது அந்த அமைச்சரை குரோதமாய் முறைக்க... அனைவருக்கும் முன்பாய் நின்றதோ நம் சேவனே.... பேந்த பேந்த முளித்தவர்... போட்டியில் தன் கவனத்தை திருப்பிக் கொண்டார்....
அமைச்சர் : யுவேந்திரன் கோவிற்கு கழுத்திலும்... சக்திவேந்திரன் கோவிற்கு தோளிலும் குத்துப்பட்டுள்ளது.... விஷ்னுவர்தேஷ்வரன் கோவிற்கு தாடையில் சிறு காயம் பட்டுள்ளது... என தெளிவு படுத்தி கூற....
ஒரு நொடி.... அனைவரும் பதறி போய் மூவரையும் நோக்க... கழுத்தில் குத்துப்பட்டுள்ளதா... என பதறினர்.... அதில் விஷ்னு தன் சகோதரன்களை நோக்க.... அவன்களோ இருவரும்... ஒரே போல் தலையை சுழற்றி... இரு பக்கமும் நெடித்து... நேராய் நிமிர்ந்தனர்.... அரசவை வைத்தியர்களே அவ்விருவரையும் ஆவென பார்க்க.... அதிலும்.... யுவனுக்கு தான்... சரியாக கழுத்தில் குத்து பட்டு.... மூச்சுக்குழாய் சேதமடைந்திருக்கும்... அல்லது... எழும்பு முறிந்திருக்கும்... என பார்த்தனர்.... அவனோ எளிதாய் சுளுக்கு முறிவதை போல் செய்து... மீண்டும் நிமிர்ந்து நோக்கியதில் அனைவரின் வாயுமே பிளந்துவிட்டது... ஏனெனில்... கழுத்தில் காளையின் கொம்பு குத்து பட்டால்... எழும்பு முறிவு... அல்லது... மூச்சுக்குழாயில் துளை ஏற்படும்... இவைகளுக்கு மருத்துவமளிக்க ஏறகுறைய அரை நாள் ஆவது தேவை படும்..
தன் இடக்கையை ஒரு முறை நன்கு சுழற்றிக் கொண்ட சக்தி... அதே கரத்தால் தலையை ஒரு முறை சாய்த்து திருப்பிக் கொண்டான்.... விஷ்னு அருகில் நெருங்கிய யுவன்... அவனின் காயம் ஆழமில்லை என்பதை அறிந்ததும் அடுத்த நொடி அவனின் காளையை தொரத்த தொடங்கினான்... சக்தி அவன் காளையையும் விஷ்னு அவன் காளையையும் தொரத்த தொடங்கினான்... இவையை கண்டு... மருத்துவதளபதிகள் நாழ்வரும் சிரித்துக் கொண்டனர்... அவர்களுடன் படைத்தளபதிகளும் இணைந்துக் கொண்டனர்....
தீரா : எவ்ளோ அடிப்பட்டாலும் இவனுங்க சிரிக்க மட்டும் தான் செய்வானுங்க போல...
இதில் நொடிக்கு நொடி துடித்து துடித்து அடங்கி கொண்டிருந்த மூன்று இதயங்களை அவரவர் உரிமையாளர்களே கவனிக்கவில்லை.... ஏனெனில் ஸ்ரீ தாரிணி ஆதன்யா மூவருமே வெகுவாய் போட்டியில் மூழ்கியிருந்தனர்...
அமைச்சர் : அர்ப்புதம்... நம் முக்கோக்கள் அசுர வேகத்தில் காளைகளை தொரத்தி ஓடுகின்றனர்... இத்துனை வேகத்தில் அவர்களின் காயங்களை சரி செய்வர் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை...
மூவரும் அவரவர் முன் ஓடிய காளையின் திடலை பிடித்து காலால் எம்பி.... காளை மேல் அமர்ந்தனர்...
அமைச்சர் : முக்கோக்கள் மூவருமே ஒரே நேரத்தில் காளைகளின் மேல் ஒரே போலான கலையால் அமர்ந்துவிட்டனர்.... அர்ப்புதம்...
காளைகள் மூன்றும் விடாமல் திமிற தொடங்கியது...
அமைச்சர் : காளைகள் விடாமல் திமிறுகின்றது... இதை காணும் போது... நம் முக்கோக்கள் கீழ் விழுந்துவிடுவர் என்று எண்ணுகிறேன்...
தீரா : யோ... நீ பேசவே வேணாம்.. போயா அந்த பக்கம்....
சேவன் : அமைச்சரே... மேலும் நீங்கள் வாயை திறந்தீர்கள்... மைதானத்தில் தங்களை தள்ளிவிட்டுவிடுவேன்... என எச்சரிக்க.... அடுத்த நிமிடத்திலிருந்து அவரின் மூச்சு சத்தம் கூட அவ்விடத்தில் எங்குமே கேட்கவில்லை.....
காளைகள் திமிற திமிற... அதை அடக்கும் பணியில் வீற்றிருந்த மூவரும்.... அதன் கொம்புகளை ஓர் கரத்தில் பிடித்து... தலையை இரு புறமும் திருப்ப... திடலில் அமர்ந்த சில நிமிடங்களிளே... மூன்றும் தானாய் அடங்கியது.... மூவரும் அதன் கழுத்தில் இருந்த மணியை கலட்டி.... மேல் நோக்கி காட்டினர்.... அதை கண்டு கூடியிருந்த அனைவரும் மாபெரும் ஓசை எழுப்பி..... முக்கோக்கள் வாழ்க.... முக்கோக்கள் வாழ்க... என கரகோஷம் எழுப்பினர்....
அங்குமிங்கும் சுற்றி பார்த்த சேவன்... கடைசியல் அந்த அமைச்சரை தேடி கண்டுபிடித்து... அவர் அறிவிக்க அனுமதி அளித்தான்....
அமைச்சர் : வென்றது நம் முக்கோக்களே..... என அறிவிக்க.... மூவரும் காளையை விட்டு குதித்து... பண முடிப்பை கொண்டு வர கூறி.... எடுத்து வந்த பண முடிப்பை... முதலில் வென்ற காளையின் பராமரிப்பாளருக்கு வளங்கிவிட்டு... இம்மூன்று காளைகளின் பராமரிப்பாளர்களுக்கும் வழங்கினர்....
அதன் பின்... அங்கு பரதனாட்டியம் நடைபெற... தங்கள் நாட்டு சார்பாக இந்துமதி நாட்டியமாடினாள்.... அவளின் ஒவ்வொரு அசைவிலும் ஓர் அர்த்தம் மறைந்திருக்க.... அவை அனைத்திலும் மூழ்கி முத்தெடுத்து கொண்டிருந்தான் மாரன்.... அவளின் நாட்டியத்திற்கு மயங்காத எவருமே இவ்வுலகில் இல்லை..... நாட்டிய நிகழ்ச்சி முடிவு பெற..... நாட்டவர்கள் பிரிந்து அவரவர் நாட்டிற்கு திரும்பினர்.... அதற்கு முன்னே.... யதுகுளத்து அரசரிடம்.... யதுகுளத்து இளவரசிகளும்... துணை தேவிகளும்... வேந்தன்யபுரத்திலே இருக்க வேண்டி கோரிக்கை வைத்தனர்... அதை ஏற்று.. பிரியா விடை பெற்று தங்கள் நாட்டை நோக்கி நகர்ந்தார் அரசர்....
அரசி தாரா தேவி : அரசே... ராஜகுருவின் மகள்கள் இன்று கூட வரவில்லையே...
அரசர் சூர்யவர்மர் : ம்ம்ம் அரசர்கள் வரும் போது அவர்களும் வருவர் என நினைத்தேன்... ஆனால் இல்லை தேவியாரே...
அரசி : உண்மையிலே அவர்கள் மிக துன்பப்பட்டு வாழ்கின்றனர் அரசே...
அரசர் : நம்மால் கவலை படவும் அவர்களுக்காய் பிரார்த்தித்துக் கொள்ள மட்டும் தான் முடியும்.... என கவலை பட்டார்...
தன் அறைக்கு சென்றுக் கொண்டிருந்த ராஜமாத்தா தேவசேனை அவரின் புத்திரன்களின் கூவலை கேட்டு திரும்பி பார்த்தார்.... அவர் பின் மூச்சு வாங்க ஓடி வந்திருந்த யுவன் சக்தி விஷ்னு... நின்று மூச்சை நன்கு இழுத்து சுவாசித்துவிட்டு.... மூவரும் ஒரே பார்வையுடன் அவர்களின் அன்னையை நோக்க... அவரோ புரியாது விழித்தார்...
தேவசேனை : என்னவானது மைந்தன்களா... ஏன் இந்த அவசரம்....
யுவன் : தாங்கள் அறியவில்லையா அன்னையே....
தேவசேனை : அறியேன் மகனே...
சக்தி : சரி நாங்களே வினவுகிறோம்....
தேவசேனை : வினவுங்கள்....
மூவரும் : தமக்கை வந்தார்களா.... என ஆர்வமாய் வினவ... ஆனால் அவர்கள் எதிர்பார்த்த பதிலோ அவர்களின் அன்னையிடம் இல்லை....
தேவசேனை : இல்லை முக்கோக்களே... தங்களின் தமக்கை வர இயலவில்லை... என்றார் கவலையாக....
விஷ்னு : என்று தான்... எங்களால் அவரை காண இயலுமே....
தேவசேனை : விரைவில் காண்பீர்கள் மகனே... கவவை கொள்ளாதே...
சக்தி : இதை தான் பல வருடமாய் கூறுகிறீர்கள் அன்னையே... ஆனால் தமக்கை தான் வந்த பாடில்லை....
தேவசேனை : என்ன செய்வது.... கலிங்க தேசத்தில் உள்ளவளை இங்கு வர வைப்பது கடினம்....
விஷ்னு : முடிசூட்டு விழாவிற்குமா????... தாங்கள் அனைத்து மக்களுக்கும் தானே அழைப்பு விடுத்தீர்கள்....
தேவசேனை : உண்மை தான்... ஆனால் கண்டீர்களல்லவா... கலிங்க தேசத்திலிருந்து முப்பெரும் அரசர்கள் உக்ரதேவன் கிரகதேவன் ரனதேவனை தவிர்த்து வேறாரும் வரவில்லை... இதிலே தெரியவில்லையா... என் அழைப்பை... அவர்கள் மக்களுக்கு தெரிவிக்கவில்லை... இதில் நாம் ஒன்றும் செய்ய இயலாது மகனே....
யுவன் : இல்லையெனில்... தமக்கையை நாங்கள் சென்று அழைத்து வந்து விடட்டுமா...
தேவசேனை : தங்களின் ஏக்கம் புரிகிறது மகனே... ஆனால் அவள் தாயற்றவள்... அவளின் தங்கைகளை வளர்ப்பதே அவளுக்கு ஒரே இலட்சியம்.... அம்மூவரும் அந்நாட்டை லிட்டு வெளியேறினால் மரணதண்டனை விதிக்கப்படும் என கலிங்க தேசத்தின் முன்னோர் அரசர் கூறிவிட்டார்.... இதில் அவளை வெளிவர வைப்பது அவள் உயிரை நாமே கொல்வதற்கு சமம்....
யுவன் : வேறு வழியே இல்லையா அன்னையே....
தேவசேனை : கலிங்க தேசத்தையே.... கொடூரமாய் ஆட்டிவைக்கும் முப்பெரும் அரசர்களை வீழ்த்தி.... அந்நாட்டை கை பற்றுவது தான் ஒரே வழி... என புலம்பி செல்ல... அது ஆணி அடித்தார் போல் நம் முக்கோக்களின் மனதில் நிலைத்தது....
கந்தர்வமலை அடிவாரத்தில்....
உக்ரதேவன் : காலனே.... இன்று அக்கோவன்களை நேரிலே கண்டோம்.... அதே சுடர் விடும் கண்கள்.... உருமாராத அவர்களின் அதே சக்தி....
காலன் : கோரனை (அச்சிங்கம்) கூட காயப்படுத்திவிட்டர்கள் போலவே...
ரனதேவன் : ஆம் காலதேவா.... அது ஒன்று தான் எரிச்சலை தூண்டுகிறது...
காலன் : அதுமட்டுமா.... அத்துனை ராஜ்ஜியங்களுக்கு முன் ஏற்பட்ட தங்களின் தோழ்வியை பற்றி கவலை இல்லையா...
உக்ரதேவன் : அதை நினைவு படுத்தாதீர்கள்... எங்களால் முடியாததை... ஒன்றுக்கு மூன்றாய் அம்மூவரும் செய்துவிட்டனர்.....
கிரகதேவன் : விரைவில் அம்மூவருக்கு முடிவை கட்டிவிட்டு.... இவ்வுலகை ஆள வேண்டும்... வேந்தன்யபுரத்தை கை பற்ற வேண்டும்....
உக்ரதேவன் : நிச்சயம் நிகழும்....
காலன் : அம்மூவருக்கும் ஒரு பலகீனமாவது இருக்காதா என்று பலாயிரம் வருடங்களாய் தேடிக் கொண்டிருக்கிறோம்... இன்று சிலவை தெரியவந்துள்ளது.... அவர்களை அழித்தாலும்... அவர்களின் பகை வெறியும் காதல் வலியும் மீண்டும் பிறப்பெடுக்க வைக்கிறது... அவர்களை முழுதாக அடக்க ஒரே வழி தான் இருக்கிறது.... அவர்களின் உடலில் இருக்கும் அதி சக்தியை முழுதாய் பறிக்க வேண்டும்.....
ரனதேவன் : இயலுமா....
காலன் : நிச்சயம்... அம்மூவரின் பலகீனத்தை கண்டறிந்து விட்டேன்... அவர்களின் குறுதி தான் அது...
உக்ரதேன் : என்ன கூறுகிறீர்கள்....
காலன் : ஆம்.... ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை யஜ்னுவர்தம் என்னும் மலர் ஓரிடத்தில் மலரும்.... அம்மலர் சாதாரண மலர் அல்ல..... அதிசக்தி நிறைந்த இவ்வுலகையே நொடியிலே அழித்துவிடும் மிக சக்தி வாய்ந்த மலர்.... கோவன்களின் சக்திக்கு பாதி ஈடாய் இருக்கும் ஒரே சக்தி.... அம்மலரை நாம் கை பற்றி விட்டால்... கோவன்களின் அதி சக்தியும் நமக்கே... அம்மலரின் சக்தியும் நமக்கே....
உக்ரதேவன் : அப்படியெனில் அம்மலரை முதலில் கை பற்றி விடவோம்...
காலன் : அது இயலாது.... ஏனெனில்... ஆயிரம் வருடங்கள் ஒரு முறை அது மலர்வதற்கான காரணமே கோவன்களின் மரணம் தான்..... இன்னும் எளிதாய் கூற வேண்டுமெனில்... எத்துனை வருடங்களுக்கு ஒரு முறை கோவன்கள் மரணித்தாலும்... அவர்களிள் மரணம் பின்... அம்மலர் மலரும்.... கோவன்கள் புவியை காக்க இயலாத வருடங்களில்... ஏதும் செய்யாமலே.... புவியை காக்கும்....
ரனதேவன் : அப்படியெனில் என்ன தான் செய்ய சொல்கிறீர்கள்...
காலன் : ஒரே வழி கோவன்களின் மரணம்.... கோவன்கள் மரணித்ததுமே அம்மலர் மலர்ந்திடும்.... அந்த நேரத்திலே அம்மலரை நாம் பறிக்க வேண்டும்....
உக்ரதேவன் : அது எங்கு மலரும்....
காலன் : என்னிடம் கேட்டால்....
கிரகதேவன் : என்ன காலதேவா இப்படி கூறுகிறீர்கள்....
காலன் : அதை நான் அறியேன்.... அம்மலர் எங்கு மலரும் என்பது கோவன்கள் மட்டுமே அறிந்த இரகசியம்.....
உக்ரதேவன் : அதை விரைவில் கண்டறியலாம்....
கிரகதேவன் ரனதேவன் : ம்ம்ம்ம்.....
இருள் நிறைந்த அவ்வறையில்.... நிலவை வெறித்தவாறு அமர்ந்திருந்தாள் அப்பேதை.... அவளின் மேடிட்ட வயிறை தடவிய அவள் கரங்கள்.... வயிற்றில் தெரிந்த சின்னஞ்சிறு கால்களின் அச்சை இரசித்து வருடியது... அவளை வேவு பார்த்தவாறு இருந்தது இரு கண்கள்.... அக்கண்களின் சொந்தக்காரி மேகலாயாவோ தன் குழந்தையை கற்பனையிலே அழகு படுத்தி பார்த்துக் கொண்டிருந்த மாயமோகினியை சுற்றி சுற்றி வந்தாள்.... அது தான் முப்பெரும் அரசர்கள் அவளுக்கு கொடுத்த பணி....
அவள் அருகில் வந்த மதுசூதனா....
மதுசூதனா : அவள் எங்கும் சென்றிட மாட்டாள்... என்னுடன் வா என்று எங்கோ அழைத்துச் சென்றாள்....
ஒன்பது மாத கர்பிணியான மாயமோகினி.... தன் வாழ்வில் நடந்த கசப்பான நினைவுகளை அசை போட்டபடி இருந்தாள்....
அவள் பிறந்த இரண்டு வருடங்கள் கடந்ததும் அடுத்தடுத்து பிறந்த குழந்தைகள் தான் மேகலாயா மற்றும் மதுசூதனா.... மாயாவின் பத்து வயதில் அவளின் தாய் இறந்து விட.... அவளின் தந்தை தந்திரா.... கலிங்கதேசத்தில் அமைச்சராய் இருந்து.... உக்ரதேவன் கிரகதேன் ரனதேவனின் பொய் சொல்லால் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கிறார்.... இது அவளும் உலகமும் நம்புவது... உண்மையோ வேறு.... அவர் கூண்டில் இருப்பதால்... அவரின் மகள்கள் இந்நாட்டை விட்டு செல்லக்கூடாதெனவும்... சென்றால் மரணதண்டனை என அறிவித்தார் அந்நாட்டு முதல் மன்னன்.... ஆம் நம் கோவன்களின் தமக்கை வேறாரும் அல்ல.... சாட்சாத் மாயமோகினியே தான்.... மாயமோகினியின் தாயார் தேவசேனையின் உடன் பிறந்த தமக்கை.... இந்நாட்டில் இப்படி ஒரு சட்டம் பிறப்பித்ததும்.... பத்து வயதிலிருந்து தன் ஆருயிர் தம்பிகளை பார்க்கவில்லை அவள்.... நாழ்வருக்கும் ஒருவருக்கு ஒருவர் உயிர்.... இந்த 16 வருடங்களில் மிகவும் மாறிப்போனாள் மாயமோகினி.... அன்றிலிருந்தே தன் தங்கைகளை தன் இரு கண்களாய் நினைத்து வளர்த்து வந்தாள்.... அவளின் அழகில் விழாத ஆண்மகன் அந்த கலிங்க தேசத்தில் எங்குமே இல்லை.... அதில் உக்ரதேவனும் ஒருவன்.... 1 வருடம் முன்பு.... கலிங்க தேசத்து ஒற்றர் படை தலைவன் வளவனை மாயமோகினி காதலிக்கிறாள் என அறிந்த அவன்.... இருவரையும் உடனடியே பிரித்து..... வலுக்கட்டாயமாய் மாயமோகினியை திருமணமும் செய்து.... அவளுக்கு போதை மருந்தளித்தான்... ஆனால் அவள் மேல் அவனது சுண்டு விரல் கூட படவில்லை.... அவள் மயக்கத்திலிருந்து எழும் முன்னே.... அவள் தன்னை காதலித்ததை போல் மாயை மாற்றி... அவள் மனதிலும் மூளையிலும் உள்ள நினைவுகளை அகற்றி மாற்றினான்... அதே மாயையை வளவனுக்கும் உபயோகித்து கலிங்க தேசத்தை விட்டு வீசி எறிந்தான்....
மறுநாள் எழுந்த மாயமோகினி.... வித்யாசமாய் இல்லாமல் சாதாரணமாகவே நடந்துக் கொண்டாள்... ஆனால் உக்ரதேவனிடம் மட்டும் தள்ளியே இருந்தாள்... அடுத்த இரண்டு மாதத்தில் மாயமோகினி கருதறித்தாள்.... இதை அறிந்த உக்ரதேவன் பேரதிர்ச்சியடைந்தான்.... அதன் பின்பே.... மாயமோகினியும் வளவனும் என்றோ மனமுடித்து வாழ்க்கையும் தொடங்கிவிட்டனர் என்ற உண்மையை அறிந்துக் கொண்டான்.... ஆனால் அச்சிசுவை உக்ரதேவனின் குழந்தையெனவே எண்ணினாள் மாயமோகினி....
வேந்தன்யபுரத்தின் கடற்கரையில் கிடந்த வளவனை அடையாளம் கண்டுக் கொண்ட கோவன்கள்... அவனை உயிர் பிழைக்க வைத்தனர்.... அவனின் உடல் இருந்த நிலையை கண்டே அவன் பிழைக்கமாட்டான் என அனைவரும் கூறிட.... அவனின் தோளில் பதிந்திருந்த பருந்து அச்சை வைத்து பருந்து வம்சத்தை சார்ந்தவன் என புரிந்துக் கொண்டு அவனை ஒரு பருந்தாய் உருவெடுக்க வைத்தனர்..... அதன் பின்.... உலகதிசயமாய் கண் விழித்தான் வளவன்.... அவன் கலிங்க தேசத்தை சார்ந்தவன் என அறிந்ததும்.... மீண்டும் அங்கேயே அனுப்பி... அவர்களின் தமக்கை மாயமோகினியை பாதுகாக்க வேண்டினர் கோவன்கள்.... தன் உயிரை காத்த அம்மூவரின் வேண்டுகோலை ஏற்று... அங்கேயே சென்றான் வளவன்....
மாயமோகினி : கண்ணா..... நீ உன் தந்தையை போல் வளர்ந்திட கூடாது... உன் தாய்மாமன்களை போல் உலகை காத்திடவே இருக்க வேண்டும்... உலகை காக்க முயல்கிறாயோ இல்லையோ... என்றும் உலக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.... அன்னையை மதித்திட வேண்டும்... யாருக்கும் தீங்கிழைக்க கூடாது... அன்னை பேச்சை தட்ட கூடாது... தங்களின் வரவுக்காய் மிக ஆவலாய் காத்துக் கொண்டிருக்கிறேன்.... அன்னையை காக்க வைக்காதே கண்ணா.... உம் கை விரல்கள் எத்துனை சிறிதாய் இருக்கும்... என் விரலுக்கு பாதி இருக்குமா... இருக்கும் இருக்கும்... நீ பார்க்க உன் தந்தையை போல் இருக்க கூடாது.... என்னை போலே பிறந்திடு... நீ பிறந்ததும்... எம் உயிர் நீங்கினாலும் சரி.... நிச்சயம் இந்நாட்டை விட்டு விலகி.... வேந்தன்யபுரத்திற்கு சென்றிடுவேன்.... இங்கு இருந்தால் உன் உயிருக்குக்கூட ஆபத்து நேரிடலாம்... நீ அன்னையுடன் வருவாய் தானே... உன் தாய்மாமன்களின் நாட்டிற்கு... என வினவ.... அவள் வயிற்றுள் இருந்த குழந்தை.... மெல்ல அவளின் வயிற்றில் எட்டி உதைத்தான்....
மாயமோகினி : அடடே... என் கண்ணனிற்கு சம்மதமா.... நிச்சயம் சென்றடலாம் கண்ணா.... என்றாள் சிரிப்பின் ஊடே....
தன் அறையில் உறக்கம் கிட்டாமல் குருக்கும் நெடுக்கும் நடை பயின்றுக் கொண்டிருந்தாள் ஆதன்யா.... அவளின் மனதை தேடிக் கொண்டிருந்தாளோ என்னவோ.... ஆனால் அவளின் இதயத்திடம் தொலைத்த தன் இதயத்தை தேடி... அவள் அறையின் வெளியே நின்றான் விஷ்னு......
விஷ்னு : போகலாமா வேண்டாமா.... தவறாய் நினைத்துவிட்டால்... ஆனால் நாம் தேடியது நிச்சயம் இங்கு தான் இருக்கும்.... சரி செல்வோம்... என கதவை தட்டிட..... உள் நுழையுங்கள்.... என்ற தேன்குரலை கேட்டு சிறிது மயங்கியவாறே உள்ளே நுழைந்தவன் அவளை கண்டு தள்ளாடித்தான் போனான்....
காதல் தொடரும்.....
கழுத்தில் குத்துப்பட்டதால் யுவனின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேருமா...??
மாயமோகினியின் ஆசைகள் நிறைவேறுமா??
தங்களின் கருத்திற்காய் காத்திருக்கிறேன்.... கதையை படிக்க எப்படி உள்ளதென்று கூறினால் நன்றாக இருக்கும்.... என் எழுத்திற்கு உதவும்...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro