Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

காதல் - 12

தன் முன் இரத்தம் தெரிக்க சரிந்து விழுந்த டாக்டர் கென்னை கண்கள் சிவக்க பார்த்துக் கொண்டிருந்தது அவ்வுருவம்... கண்கள் இதுவரை நாம் பார்த்திடாத அளவு சிவப்பு நிறத்தை தத்தெடுத்திருந்தது.... அவரின் அருகில் குத்துக்காலிட்டு அமர்ந்து அவரின் கையில் இருந்த போனில் டாக்டர் என பதிவு செய்திருந்த கான்டக்ட்டையே இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தது இன்னோறு உருவம்.. அப்போனை தன்னுடனே எடுத்துக் கொண்டு ஆட்கள் வருவதற்குள் அங்கிருந்து இரண்டும் மறைந்து சென்றது... இவ்விருவரையும் மர்மமான பார்வையுடன் நோக்கிய விழிகளை கவனிக்க தவறி சென்றது....

வீட்டை அடைந்த நாயகிகளை அழைத்துக் கொண்டு அனைவரும் கிராமத்தின் மையலுக்கு அழைத்து சென்றனர்... பஞ்சாயத்து என்பதால்....கிராம பஞ்சாயத்தில் அமர்ந்திருந்த அனைவரும்... என்ன பேச போகிறார்கள் என பார்த்திருக்க... தன் தொண்டையை செருமி பேச்சை தொடங்கினார் நம் வேலு தாத்தா....

வேலு தாத்தா " உங்க எல்லாருக்குமே தெரியும்...பதிநைந்து வருஷத்துக்கு ஒரு முறை கொண்டாடுர வயலி திருவாழாவும் வருடா வருடம் நாம கொண்டாடுர சமன் திருவாழாவும் அடுத்த வாரம் ஒரே நாள்ள தொடங்குது... இந்த வர்ஷம் ரொம்ப விமர்சயா இந்த திருவிழா நடக்கனும்... நடந்தாகனும்... வயலி திருவிழா வ நாம விற்றக்கூடாது..." என முடிக்க...

சங்கரன் தாத்தா : அதுமட்டு இல்லாம.... என்னைக்கு கால் நட்ரோமோ... அன்னைக்கே என் பேரன் ரித்விக்குக்கும்.... நம்ம ராணி பொண்ணு மதுரஞ்சனா க்கும் நிச்சயதார்த்தம்.... கிராமத்துல உள்ள எல்லாரும் சந்தோஷமா பங்கெடுக்கனும்... கல்யாணத்துக்கு முறைப்படி வந்து அழைக்கிறோம்.... என கூறி சபையை கழைத்தன....

வீட்டிற்கு வந்ததும் பெரியவர்கள் அனைவரும் சோர்வாய் அமர..நாயகர்கள் அனைவருக்கும் அளவில்லா மகிழ்ச்சி... ரித்விக் மற்றும் மதுரஞ்சனாவின் திருமணத்தை பற்றி பேச சென்ற பெரியவர்கள்...அடுத்த வாரமே நல்ல நாள் அன்று முடிவு செய்ததை இன்றே திருவிழாவின் நற்செய்தியுடன் இதையும் பகிர்ந்தளித்துவிட்டனர்.....நம் சந்தேக ஆராய்ச்சி செய்யும் நாயகி வீனா அவள் வேலையை தொடங்கினாள்....

வீனா : பாட்டி தாத்தா என்ன திருவிழா சொல்றீங்க ஒன்னுமே புரியல....

மற்ற நாயகர்கள் : ஆமா புரியல...

தெய்வானை பாட்டி : அது நம்ம கிராமத்துல பரம்பர பரம்பரையா இந்த திருவிழா நடக்கனும் னு சொல்லி வளத்தாங்க டா மா... அதான்..

அப்போதே வெளியிலிருந்து வீட்டுக்குள் நுழைந்த நிரு...

நிரு : அது ஓக்கே பாட்டி... அதான் எங்களுக்கே தெரியுமே... அது என்ன வயலி திருவிழா??? பேரே புதுசா இருக்கு...

காவியா : வயலி திருவிழா 15 வர்ஷத்துக்கு ஒரு முறை நடக்கும்... அப்போ ஒவ்வொரு வீட்லேந்தும் ஒரு படியோ இல்ல ஒரு மூட்ட அரசியோ தந்து கிராமம் முழுக்க ஒரே பானை ல பொங்கல் வைத்து அத அன்னைக்கே பரிமாரவும் செய்வாங்க... அவங்கவங்க வீட்லையும் குடும்ப பொண்ணுங்க மனதார பொங்கல் வச்சி சந்தோஷப் படுவாங்க...

முகில் : இப்டி லாம் இருக்கோ??? இதல்லா நமக்கு தெரியாம போச்சே...

இலக்கியா : கடைசியா இந்த பூஜை நடந்தப்போ நீங்க எல்லாருமே பதினோறு வயசுக்குள்ள தா இருந்தீங்க... நம்ம அஷ்வன்த்துக்கு அப்போ 12 அகி இருந்துச்சு... நாங்க எல்லாம் கெனடா ல இருந்தோம்....

அனைவரும் : ம்ம்ம்ம்

தான்யா : அத்த அத்த இன்னோறு டவ்ட்டு...

காவியா : இப்போ என்ன???

ரக்ஷா : சமன் திருவிழா னா என்ன???

வேலு தாத்தா : நம்ம கிராமத்துல இருந்து வெளிய போர மக்களும்... கிராாமத்துலையே வாழ்ரவங்களும்...ஒன்னா வருஷா வர்ஷம் கொண்டாடுவோம்... சமன் அப்டி னா சமம் னு அர்த்தம் அது ஏன்னா...???? நம்ம கிராமத்துல மத வேறுபாடு கிடையாது... இந்த திருவிழா வ நம்ம கிராம மக்கள் எல்லாருமே கொண்டாடுவோம்... ஹிந்து மதம் க்ரிஸ்த்துவ மதம் இஸ்லாம் மதம் னு யாரையும் ஒதுக்க மாட்டாங்க...

சங்கரன் தாத்தா : அதுக்கு ஒரு எக்ஸாம்பில் சொல்லனும் னா நம்ம ஊர் காட்ல ஆரம்பத்துலையே ஒரு கட்டிடம் இருக்கும்... ரொம்ப பழைய கட்டிடம்... அது என்னன்னு தெரில... ஆனா எல்லாரும் அத ரொம்ப மதிச்சு வலிபடுவாங்க.... அந்த கட்டிடத்த " ராஜ்ஜியமர்வதன மண்டபம் " ன்னு தான் டா சொல்லுவாங்க....அங்க நம்ம கிராம மக்கள் எல்லாரும் அங்க மதவேறுபாடே இல்லாம ஒற்றுமையா இருப்பாங்க... யாருமே அங்க ஒவ்வொருத்தரும் வேர ஒருத்தர ஒதுக்க மாட்டாங்க... எல்லா மதமுமே அங்க சம்மதம் தான்... ஆனா உண்மையான்னு சரியா தெரியல டா....

மாதவன் : அது உண்மைன்னு நீரூபிக்கதான் நாம எல்லாருமே ஒன்னா ஒற்றுமையா இருக்கோமோ என்னவோ...

அஷ்வன்த் : அங்க ஏன் இப்போ யாரும் போக மாற்றாங்க...தாத்தா...

நாயகிகள் ஒருவரை பார்த்து ஒருவர் திருட்டு முளி முளித்தனர்...

வேலு தாத்தா : அது ஏன்னே தெரியல டா... நா சின்னபையனா இருந்த போதே அந்த மண்டபம் பூட்டி தா இருக்கும்... உள்ள இறைவனா சிலர் ஒருத்தர மதிச்சு கும்பிட்ட ஒரு சிற்பம் இருக்குன்னு ஏன் தாத்தா வோட கொள்ளு தாத்தா வோட தாத்தா வோட...

சத்தீஷ் : தாத்தா என்ன லிஸ்ட் போய்ட்டே இருக்கு.... ????

வேலு தாத்தா : நா என்ன டா செய்ய... அந்த ஏடு இரண்டு லேந்து மூணு ஆயிரம் வர்ஷத்துக்கு முன்னாடி என்னோட அப்ரம் உங்களோட தாத்தா எழுதுனது ..... என கூற...

இளைஞர்கள் : என்னது இரண்டாயிரம் மூணாயிரம் வர்ஷத்துக்கு முன்னவா???? 😲😲

தெய்வானை பாட்டி : ஆமா பசங்களா... நம்ம கிராமத்த பத்தி என்ன நெனச்சீங்க..வேதபுரம் மிக மிக பழமையான கிராமங்கள்ள ஒன்னு... அது மட்டும் இல்லாம கிட்டதட்ட ஒரு 4000 வர்ஷத்துக்கு முன்ன இல்ல அதுக்கு முன்னாடி கூட இருக்களாம்... அப்போ வேதபுரம் பேரே வேற....

க்ரிஷ் : அப்டி என்ன பாட்டி பேர் வச்சிர்ந்தாங்க???

தெய்வானை பாட்டி: வேந்தன்யபுரம்

சட்டென ஒரு மின்னல் வெட்டியது நம் நாயகர்களின் மனதில்...

முகில் : அப்ரம் ஏன் பாட்டி வேதபுரம் னு ஆச்சு???

தெய்வானை பாட்டி : வேந்தன்ய புரம் ஆ இருந்தது இப்போ வேதபுரம் ஆய்டுச்சு... நா பொறக்குறதுக்கு முன்னாடி அதாவது மாமா (வேலு தாத்தா) வோட அப்பா பொறந்தப்போ தா வேதபுரமா மாறி இருக்கு...

இரமனன் : ஆமா பசங்களா... வேந்தன்யபுரம் தனி கிங்டம் னே சொல்லலாம்... அவ்ளோ செலிப்பான நாடு...

வீர் :நாடா???? என்ன ப்பா சொல்றீங்க???

மாதவன் : அப்போ நாடு டா... இப்போ கிராமம் ஆய்டுச்சு....தனி தனி குன்றமா பிரிஞ்சதால..

ரவி : ஓஹோ... அப்போ எதாவது ஒரு ராஜா பேரு சொல்லுங்க மாமா.... என இரமனனை நோக்க...

அவரோ மழுப்ப வேண்டி

இரமனன் : இலக்கியவர்மன்.... அதை கேட்டு இலக்கியா முளிக்க தொடங்கினார்....

அஷ்வன்த் : சித்தப்பு....இது ரொம்ப பெரிய தப்பு... ராஜா பேர சொல்ல சொன்னா... என் சித்தி பேர சொல்றீங்களே....

இரமனன் : என் பொண்டாட்டி தான் டா என் ராஜா ராணி எல்லாம்.... என்று பெருமையாய் சொல்ல...இலக்கியா அவரை பார்த்து வெட்கபுன்னகையை வீசினார்...

இந்திரன் : வாட்ட லவ்??? வாட்ட லவ்???? என கை தட்டினான் அனைவரும் ஒன்றாய் சிரிக்க...

பவி : சரி தாத்தா... நம்ம ரித்வி கல்யாணம் எப்போ??? என கேட்க...

மாதவன் : சஸ்பென்ஸ்... என கூறினார்... அடுத்த பதில் வரும் முன்னே...
காவியா : சரி சரி நேரமாச்சு... நாங்க போய் சமக்கிறோம்... என இலக்கியாவுடன் சமையல் அறைக்குள் புகுந்துக் கொள்ள மற்றறவர்களும் அவரவர் அறைக்கு சென்றனர்...

யார் அறிவார்???? இலக்கியவர்மன் என உண்மையில் அம்மண்ணை ஒரு அரசர் ஆண்டு வந்தார் என தெரியவந்தால் என்ன நேருமோ....????

தீரா : ( அத அப்போ பாத்துக்குவோம்... வாங்க நாம வேற எடத்துக்கு போவோம்... )

நம் நாயகர்கள் மட்டும் அப்படியே அமர்ந்திருக்க... ரித்விக்கின் மூலையில் ஒரு சந்தேகம் சுழலாய் சுழன்றுக் கொண்டிருந்தது...

அஷ்வன்த் : டேய் ரித்வி... என்னடா யோசனை ல இருக்க???

ரக்ஷா : என்ன அண்ணா அண்ணி நினைப்பா...

ரித்விக் : ஹிஹி கண்டுப்புடிச்சிட்டியே... உன் அண்ணிய பத்தி நினைகாம வேற யார பத்தி நினைக்க போறேன்... ஆனா வேற ஒரு விஷயத்தையும் யோசிச்சிட்டு இருந்தேன்... என்றான் யோசனையாகவே...

சத்தீஷ் : என்னடா யோசனை???

ரித்விக் : நான் நேராவே கேக்குறேன்... மலுப்பாம பதில் சொல்லுங்க... நா என் ரஞ்சுவ இங்கேந்து ஆஸ்ட்ரேலியா போரதுக்கு முன்னாடிலேந்து வல் பன்றேன்... அவளும் தான்... ஆனா எங்க லவ் அவ தங்கச்சி நிருக்கு கூட தெரியாது... உங்களுக்கு எப்டி தெரியவந்தது...

முகில் : முன்னாடியே கேப்பன்னு நெனச்சேன்... இப்போதா கேற்றுக்க...

ரித்விக் : சரி சரி பதில்..???

க்ரிஷ் : அதுடா... மது தங்கச்சி.... முன்னாடியே எங்கள்ட்ட சொல்லீட்டா... நீ ஆஸ்ட்ரேலியா பறக்குரதுக்கு முன்னாடியே உங்க இரெண்டு பேர் மேலையும் டௌட் இருந்துச்சு... ஆனா அத நாங்களே கன்பார்ம் பன்னிட்டு போய் மது கிட்ட கேட்டோம்.. அவளும் ஒத்துக்குட்டா... எங்களுக்கு தெரிஞ்ச மாரி உன்ட்ட காமிச்சிக்க வேண்டாம் னு சொன்னா... அதான் எங்களுக்கு எதுவுமே தெரியாத மாரி இருந்தோம்...

அனு : சரி சார் ஏன் எங்கள்ட்ட சொல்லல??? அத சொல்லுங்க... என ரித்வியை பார்த்து கேட்க...

ரித்விக் : நான் ஒரு நல்ல ஸ்டேட்டஸ் ல ஸெட்டில் ஆனதும் சொல்லலாம் னு இருந்தேன் அனுமா....

அவனை காரணம் கேட்டு அடித்து வெலுக்க காத்திருந்த அனைவரும்.. அவனின் இப்பதிலில்... அவனின் வெற்றிக்கு பின் இருந்த அவனின் விடாமுயற்சியையும் அவன் கனவான மிகப்பெரிய பிஸ்னஸ்மேன் என்ற பட்டத்திற்காகவும் அப்படியே விட்டுவிட்டனர்...

கந்தர்வமலை

குருக்கும் நெடுக்கும் நடந்துக் கொண்டிருந்தாள் கிழவி மோகினி... அவள் முன் ஓர் ஆலுயர முகம் பார்க்கும் கன்னாடி இருந்தது... அதன் முன் சென்றவளின் தோற்றம் வேறுவிதமாய் இருந்தது.... இளமையான தோற்றத்தில் இருந்தாள்.... அதே கன்னாடியில் ஒரு கருப்பு புகை சூழ தொடங்கியது... அதனை கண்ட மோகினி பேச தொடங்கினாள்...

மோகினி : கண்டீர்களா??? என் தோற்றத்தை... பேரழகியாய் இருந்த அழகு இன்று வயதடைந்துவிட்டது.... எல்லாம் அந்த சாபத்தால்... உங்களையும் காக்க முடியாமல்... என் அழகையும் இளமையையும் பெற முடியாமல் எரிச்சலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்... என்றாள் பல்லை கடித்தபடி...

அக்கன்னாடியில் தெரிந்த புகை.... ஒரு நிழல் போல் உருவாகி உறையாட தொடங்கியது...

அப்புகை : வீண் கவலை வேண்டாம் மோகினி... விரைவில் உன் இளமை திரும்பும்...

மோகினி : இதைத்தான்... அம்மாவாசை அன்றெல்லாம் கூறுகிரீர்கள்... ஆனால் நடந்த பாடில்லை....

அப்புகை : கொஞ்சம் பொருமை அவசியம் மோகினி.. நாம் இருப்பது எந்த சாபத்திலென அறிவாய் தானே...தவறான முறையில் யஜ்னுவர்தத்தை எடுக்க முயன்று இன்று இந்நிலையில் இருக்கிறோம்...

மோகினி : அனைத்திற்கும் தங்களின் அவசரபுத்தியே காரணம்... என்றாள் ஆவேசமாக...

அப்புகை : தவறுதான் மோகினி... ஆனால் நாங்கள் அவசரப்படாமல் இருந்திருந்தால் இன்று நாம் அனைவரும் அழிந்து 4000 வருடங்கள் கடந்திருக்கும்... எங்களின் அவசரத்தாலே நாம் இன்று அடைப்பட்டு மட்டுமே கிடக்கிறோம்...

மோகினி : அவசரத்தில் புத்தி மழுங்கி செய்ததை இன்று நியாயமாக்க பார்க்காதீர்கள்... என்றும் அது சரியாகாது...

அப்புகை : யாரிடம் உறையாடுகிறாய் என்பதை மறந்துவிடாதே மோகினி... சற்று காட்டமாய் வெளிவந்தது...

மோகினி : அவசரபுத்தியால் அவர்களின் வாளுக்கு இறையாகி இன்று மலை கடல் சுழல்காற்று மூன்றும் சங்கமிக்கும் பிரம்மாண்டமான நாக மலையில் அதிசக்திகளின் கண்காணிப்பில் 4000 வருடங்களாய் சிறைபட்டு கிடக்கும் ஆத்மாவான உங்கள் மூவரிடமும் தான் உறையாடிக் கொண்டிருக்கிறேன்.... என்றாள் மிக அகோரமாய்...

இவள் உறையாடுவதை ஓரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த துருவன்... குடுகுடுவென ஓடி வந்து அக்கன்னாடி முன் தலை வணங்கி...

துருவன் : மன்னித்துவிடுங்கள் தேவா... தாயார் சினத்தில் உறையாடுவதை கவனிக்காமல் உதிர்த்துவிடுகிறார்... அதை பற்றி கவனிக்க வேண்டாம்... தயவு கூர்ந்து மன்னித்துவிடுங்கள்... என கையெடுத்து கும்பிட... அவனை கண்ட அப்புகையோ அஷ்ட்டகோனலாய் முகத்தை சுழித்தது லேசாய் தெரிந்தது... அதை துருவன் கவனிக்கவில்லை... ஆனால் மோகினி கவனித்தாள்...

மோகினி : துருவா...வெளியே செல்....மன்னிப்பு வேண்டுவது எல்லாம் உன் வேலை அல்ல... செல் இங்கிருந்து...

துருவன் : அப்படியே ஆகட்டும் தாயே... என அங்கிருந்து சென்றான்...

மோகினி : சரி அதை விடுங்கள்... உங்களின் உடல்கள் மறுபிறப்பெடுத்துவிட்டது.... அவர்களின் குணமும் உங்களை ஒத்திருக்கிறது... ஆனால் நினைவுகள் திரும்ப உங்களின் விடுதலை மட்டுமே வழி...

அப்புகை : ம்ம் அறிவோம்... இன்னும் இரு நாட்களிள் வரும் முழு நிலவன்று.... எமக்கு இரத்த பலியிடு.... யாரை பலியிட வேண்டுமென்பதை விரைவிலே நீ அறிந்துக் கொள்வாய்... நேரம் முடிந்து விட்டது... யான் செல்கிறேன்....

மோகினி : அடுத்த அம்மாவாசைக்கு தாங்கள் இப்புவியில் இருப்பீர்கள்... என்று கூறியதோடு மறைந்தது அப்புகை....

அக்கன்னாடியை கண்டு ஏதோ முனுமுனுத்தவள்.... " யாரை பலியிட வேண்டும் " என கேட்க... அக்கன்னாடியிலோ.... ஒரு வெள்ளை புகை பரபரவென சூழ்ந்து மறைய... அடுத்த நொடி... ஒரு மாபெரும் சுழல் அதிவேகமாய் அக்கன்னாடியை தாக்க வர.... அதனை கண்ட மோகினி அதிர்ச்சியடந்து சற்று விழகி நிற்க.. அக்கன்னாடியில் அடுத்த நொடி தீ பற்றிக் கொண்டு எறிய தொடங்க.... நொடியில் வெடித்து தூள் தூளாய் உடைந்து நொருங்கியது அக்கன்னாடி.... அக்கன்னாடியிலோ நம் நாயகிகள் ஒவீனா மற்றும் மதுரஞ்சனாவின் முகமே வந்து சென்றது....

இவ்விருவரையும் கண்டவளின் இதழ் ஏளனமாய் புன்னகைத்தது.... அந்த கன்னாடிகளை அவளின் மந்திரத்தால் காற்றில் மிதக்க செய்தவள்... துருவனை அழைத்தாள்... பாவம் அவள் அறியவில்லை... அக்கன்னாடி துண்டுகளை சுற்றி மறைந்த ஒரு சிறிய இலையை....
அங்கே துருவன் ஓடி வந்து நிற்க... திரும்பி நின்றிருந்த அவள்... அக்கன்னாடி துண்டுகளை அவன் புறம் காட்டி...

மோகினி : துருவா.... நாளை மறுநாள் இரவு இக்கன்னாடியில் தெரியும் பெண்களை கடத்தி வா....எனகூறி அங்கிருந்து சென்றாள்.... அக்கன்னாடியில் தெரிந்த பெண்களை பார்த்துக் கொண்ட துருவன்... பலிக்கு தான் என புரிந்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்....

என்றும் இல்லாத அதிசயமாய் ப்ரியா மாலை நேரத்தில் உறங்கி இருக்க... அவளை சுற்றி அமர்ந்திருந்த பெண்கள் இவ மட்டும் எப்டி தான் படுத்த உடனே தூங்குராலோ என அவளையே கூரு குரு வென பார்த்துக் கொண்டிருந்தனர்...

தன்னை அரை மணி நேரமாக ஒரு கூட்டம் குரு குரு வென பார்த்தும் எவ்வித உணர்வும் இல்லாமல் நிம்மதியான உறக்கத்தில் இருந்தாள் ப்ரியா....

இவளையே பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு சலிப்பாக இருக்கவும் கீழே செல்ல முடிவெடுத்து இவளை மட்டும் விட்டு விட்டு சென்றனர்...

தாத்தாஸ் மற்றும் பாட்டி கூறிய விஷயத்தில் ஆர்வமடைந்த நம் சகோதரன்கள் மூவர் மட்டும் ராஜ்ஜியமர்வதனக் கட்டிடம் முன் வந்து நின்றனர்.... பார்ப்பதற்கே அதன் வயது 4000 தாண்டுவது உண்மை தான் போல என சிந்தித்துக் கொண்டே ஒன்றாய் அவர்களது இடது காலை ஆலயத்தின் வாயிலில் பதித்து முன் வர... அவர்களின் கால் அடி பதிந்த இடத்தில் இருந்த பாய்ந்த ஒளி நேராய் சென்று அன்று நம் நாயககிகள் கண்ட அதே இரும்பு கதவின் அடியில் சென்று மறைந்தது.... யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் மேகங்கள் மகிழ்ச்சியில் மழையை வாரி வழங்க.... காற்றோ தென்றலாய் அங்கங்கும் வீச... இயற்கை அன்னை மகிழ்ச்சியின் எல்லையில் இருந்தாள் போலும்... வானவில்லானது விண்ணில் அழகாய் கோலமிட தொடங்கியது....

சத்தீஷிற்கு அத்தென்றல் காற்று ஒரு வித சிலிர்ப்பை உடலில் ஏற்படுத்த இந்திரனுக்கோ மழையால் உடல் சிலிர்த்து அடங்க.... க்ரிஷின் உடல் தகதக வென எறியாத குறையாக நெருப்பாய் சுட்டு அடங்கியது.... மூவரின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை கண்டவாறே முன் நடந்தனர்....

உள்ளே மூன்று வழிகள் பிரிந்திருக்கும்... நேரே ஒரு பாதை.... அதன் அருகிலே இடதால் ஒரு பாதை... மற்றும் வலதில் ஒரு பாதை நம் நாயகிகள் ஆர்வத்தில் நடு பாதையில் சென்றிருக்க... நம் சகோதரன்களோ மண்டபத்தை பார்த்தவாறே வலது பக்க நுழைவாயிலில் நுழைந்தனர்...

சுற்றி இருட்டு... அங்கங்கு மட்டும் மெல்லிய வெளிச்சம் இருந்தது...செவுரெல்லாம் விரிசலிடாமல் இன்றும் தன் மேல் வரையப்பட்ட ஓவியங்களை காத்து நின்றது.... முதலில் சென்ற நம் சத்தீஷின் கண்ணில் பட்டது ஒரு குழந்தையின் ஓவியம்.... விழிகள் இரண்டிலும் குரும்பு நிறைந்து அழகாய் புன்னகைத்துக் கொண்டு தன் கைகளை பின் மடக்கி... மஞ்சள் வர்ண பாவாடை சட்டை அனிந்து தன் இரட்டை ஜடையை முன் இட்டு அவளின் கொலு கொலு கன்னங்கள் தெரிய நின்றுக் கொண்டிருந்தாள்....

அவனுக்கு அக்குழந்தை யாரை நினைவூட்டியதோ மெல்ல புன்னகைத்து விட்டு நகர்ந்தான்.... இந்திரனின் கண்ணில் சிக்கிய ஓவியதை நம்ப முடியாமல் அதிர்ச்சி பொங்க பார்த்துக் கொண்டிருந்தான்.... பாம்புகள் பல படை சூழ்ந்து நிற்க... அதன் முன் ஒரு பெண் அமர்ந்திருப்பதை போல் இருந்தது அவ்வோவியம்... ஆனால் அவள் வதனத்தில் சிகப்பு நிற மையால் காண தடை போடப்பட்டிருந்தது....

இந்திரன் " என்ன டா இது??? ஒரு பொண்ணு பாம்புக்கிட்ட உக்காந்து இருக்கு " என்று நினைத்துக் கொண்டு நின்றிருந்தான்.... க்ரிஷோ நடு பாதையில் பெண்கள் கண்ட அதே போல் ஆன ஒரு இரும்பு கதவை பார்த்துக் கொண்டிருந்தான்... ஏதோ ஒன்று அவனை ஈர்க்க... மெல்ல மற்ற இருவரும் அதே போல் ஈர்க்கப்பட்டு இங்கு வந்தனர்...

அக்கதவில் சூரியன் ஒரு புறமும் சந்திரன் ஒரு புறமும் இருக்க... அதன் நடுவில் மூவர் அந்தரத்தில் பறந்துக் கொண்டிருந்தனர்... அவர்களின் கீழ்... அதவாது தரையில் சில போர் வீரர்கள் விழியில் ரௌத்திரம் பொங்க அவர்களின் அருகில் வரும் எதிரிகளை வதம் செய்துக் கொண்டிருந்தனர்.... அக்கதவின் மற்றொரு ஓரத்தில் இரு பெண்கள் பாம்புகளின் நடுவில் அமர்ந்து கீழே இரத்தத்துடன் கிடந்த ஒரு உடலை கண்டு கதறி அழுதுக் கொண்டிருந்தனர்..அப்பெண்கள் மட்டுமல்லாது அவர்களை போலவே உடை உடுத்தியிருந்த சிலரும் அருகில் கதறிக் கொண்டிருந்தனர்.... அவ்வோவியத்தின் மேலோ ஒருவர் தன் மார்பில் ஈட்டியை தாங்கி நிற்பதை போல் இருந்தது....

இதனை கண்டு அவர்களையும் அறியாமல் கண்ணில் கண்ணீர் பொங்க அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர்..... அக்கதவின் கீழே இருந்த ஒவியத்தை காணாமல் சென்றது அவர்களின் அதிர்ஷ்ட்டமா ???

இமைகள் மூடி கண்ணீருக்கு அணை கட்டி மீண்டும் திறந்தவர்களின் கண்ணில் தெரிந்தது ஓர் ஓவியம்....

அன்று திவ்யா கண்ட ஆழி ஓவியத்தின் மறு பாதி.... ஒரு பக்கம் ஆழி கடல் எழுந்து சுனாமியாய் உருவெடுத்த வந்த பெரும் அலையின் மேல் ஓர் வாள் பறக்க.... நடுவில் ஓர் பெரிய எரிமலை வெடித்து வெளி வந்த அதிர்விலும் தீயிலும் எரிமலையின் வாயில் ஒரு வாள் சுழன்று கொண்டிருக்க... இன்னோறு புறம் சுழல் போன்ற மிகப்பெரிய புயல் சுழன்றடிக்க... அதன் மேல் ஒர் வாள் சுழன்றுக் கொண்டிருந்தது.... குழப்பத்திலும் ஆச்சர்யத்திலும் கண்கள் பிளந்தது மூவருக்கும்.... சட்டென இமை மூடியவர்களுக்குள் ஓர் காட்சி வர... அதில் அவ்வோயித்தில் இருந்தது போலவே அந்தரத்தில் மூன்று வாள்கள் அதனது இடத்தில் சுழல... அடுத்த நிமிடம் காண்பவர்களை நோக்கி அதி வேகத்தில் வர உடனே காட்சிகள் மறைய இமைகளை பிர்த்தனர்....

மூச்சு வாங்க மண்டபத்தில் இருந்து பின் கூட பார்க்காமல் வெளிவந்தனர்...

வெளிவந்த மூவரின் முன் மூச்சு வாங்க ஜீப்பில் வந்து நின்றான் முகில்.... அவனின் பதற்றம் நிறைந்த முகம் இவர்களுக்கு பதற்றத்தை தொத்தி விட...எதுவும் பேசாமல் மூவரையும் ஜீப்பில் இழுத்து போட்டு விட்டு மருத்துவமனையை நோக்கி சீரிப் பாய்ந்தான் முகில்....

மூன்றே நிமிடத்தில் அவனின் வேகம் அவர்களை மருத்துவமனையில் நிருத்தியது.... வேகவேகமாக ஓடியவர்களின் முன் முழு குடும்பமும் கண்ணீருடன் ஐசீயு முன் நிற்பதை கண்டு வேகவேகமாக கதவில் இருந்த கன்னாடி வட்டம் வழியே தவிப்புடன் நோக்க... அங்கோ நம் மருத்துவ நாயகர்கள் தீவிரமாய் சூழ்ந்து நின்று ஏதேதோ செய்துக் கொண்டிருக்க... அச்சிறிய வட்டத்தில் மூவராலும் பார்க்க முடியாமல் "எவன் இவ்ளோ சின்னதா கன்னாடி ய வச்சானோ??? " என முகம் தெரியா அந்நபரை வசை பாடிக் கொண்டே மீண்டும் முயற்ச்சிக்க... உள் நிற்கும் ஏழ்வரின் நடுவில் இருந்த சிறு இடைவேளையில் மூச்சற்று கிடந்த கயல் தெள்ளத் தெளிவாய் தெரிந்தாள்...

சொல்லாமலே புரிந்துக் கொண்டனர் மூவரும்... இருந்தும் திவ்யா கண்ணீருடன் விவரித்தாள்...
திவ்யா : நல்லா தா இருந்தா..ஆனா திடீர்னு உடம்பு தூக்கி தூக்கி போற்றுக்கு... ரக்ஷா என்னன்னா அவனுங்க கொடுத்த மயக்க மருந்தாலன்னு சொல்றா... உடம்பு முழுக்க பரவுனதுல... இதயம் துடிக்க மாட்டுது.... கொஞ்ச கொஞ்ச மா கொரையுது... என கூற... தங்களின் முழு முயற்சியையும் இறக்கிவிட்டு தோய்ந்த முகத்துடன் வெளியே வந்தனர் நம் நாயகர்கள்... அவர்களின் முகமே காலம் தான் பதில் கூறும் என்று கூறியது....

அனைவரும் ஐசீயு வின் வாசலிலே தவம் கிடந்தனர்... நேரம் கடக்க கடக்க... இரவும் வந்தது.... பெரியவர்களை வலுக்கட்டாயமாய் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு நம் நாயகர்கள் மட்டும் இருந்தனர்... அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ஏழ்வரும் மாற்றி மாற்றி சென்று அவளின் நிலையை சோதித்து வந்தனர்... ஆனால் எந்த அசைவும் இல்லாமல் அப்படியே தான் கிடந்தாள் கயல்...

வேரேதாவது வழி கிடைக்குமா என அனைத்து நாயகர்களும் ஓர் அறையில் கூட சிந்தித்துக் கொண்டிருக்க.... இன்று காலை டாக்டர் கென் ஐ போட்டுத்தள்ளிய அதே உருவம் தன் உடல் முழுவதையும் துணியால் மறைத்து முகமும் தெரியாதவாறு கருப்பு துணியால் சுற்றப்பட்டு யாரும் இல்லாத நேரத்தில் ஐசீயு வின் முன் இருக்கும் சீசிட்டீவி கேமராவை ஹக் செய்து யாருக்கும் தெரியாமல் கயல் இருக்கும் அறைக்குள் நுழைந்தது.... அங்கு கயலுக்கு ஆக்ஸிஜன் மாஸ்க் அனியப்பட்டு அருகில் இருந்த மிஷினில் சிறிது சிறிதாய் இதய துடிப்பு இறங்குவதை காண்பித்தது.... கயலை ஓர் எகத்தாளமான பார்வை பார்த்து அவளுக்கு ஏற்றபட்டிருந்த க்லூக்கோஸில் ஒரு சிரஞ்சியை இறக்க.. அதிலிருந்து வெளிவந்த நீர் போன்ற திரவம் க்லூக்கோஸுடன் கலக்க.... நிறம் மாறாமல் தன்னுள் கலந்த ஏதோ ஒன்றை மறைத்துக் கொண்டது க்லூக்கோஸ்....

அடுத்த வேலையாக ஆக்ஸிஜன் மாஸ்க்கின் ட்யூபை அருத்துவிட்டு வெளியேறியது... அதன் காதில் மாட்டப்பட்டிருந்த ப்லூட்டூத்திலோ " இவள மட்டும் உயிரோட இருக்க விற்றுவோமா " என்னும் அகோர சிரிப்பொலி கேட்டது.... கயலின் நிலையை சோதிக்க வந்தான் ரவி..... அவ்வழியில் யாரும் இல்லாத போது உடல் முழுவதும் மறைத்து தான் ஆணா பெண்ணா என காட்டிக் கொள்ளாமல் தலை குனிந்தவாரே ரவியை கடந்து சென்றது அதே உருவம்....
அவ்வுருவத்தை பொருட்படுத்தாத ரவி... திடீரென கேட்ட ஒரு ரிங்டோனில் அப்படியே நின்றான்....

பறவைகள் உங்களின் சந்திப்பை அறிந்து விண்ணில் ஓலமிட்டு பறக்க
சூரியனை கருமேகங்கள் மறைக்க
தீ சுடராய் எறிய
உன் முன் தோன்றுவான்
அவன்.....

என மாவீரன் பட டையலாக் கொஞ்சம் வேரு விதமாய் ஒலிக்க " என்னடா இது நம்ம கார்த்திகா அக்கா வோட ஓர் இரவு ஓர் தவறு உம் மரணம் ல சூர்யா வச்ச ரிங்டோன் மாரி இது டிப்ரன்டா இங்க கேக்குது??? " என குழப்பத்துடன் திரும்ப அங்கோ அவ்வுருவம் தன் மொபைல் போனை சேரில் மறந்து வைத்து விட்டு சென்றது....

ரவி : ஹலோ பாஸ்... இல்ல மேடம்... ஐய்யோ பொண்ணா பைனான்னு தெரியலையே... ஹலோ என்னங்க... எக்ஸ்க்யூஸ்மி.... அவனின் கடைசி அழைப்பிலே திரும்பி பார்த்தது அவ்வுருவம்....

அது திரும்பியதும் அப்போனை எடுத்தவன் அதில் டாக்டர் என சேவாகி அதன் அருகிலே க்ராஸ் சிம்பில் போட்டு சேவ் பன்ன நம்பரிலிருந்து கால் வர.... அவன் அதை கண்டதும் காலும் கட்டானது....

குழப்பத்துடனே அதை அதனிடம் கொடுத்ததும் திரும்பி பார்க்காமேல் சென்றது அவ்வுருவம்....

ரவி : வாய தொறந்து பேசுனா நான் அவங்களோட பல்லையா புடிங்கீட்டு ஓடப் போறேன்... இப்டி ஒன்னுமே பேசாம முகத்தையும் மூடிக்கிட்டு போறாங்களே என புலம்பிக் கொண்டே கயலின் அறைக்குள் நுழைந்தான்.....

அங்கு நிகழ்ந்த காட்ச்சியை கண்டவனது கண்கள் அகல விரிய.... கயல் என அம்மருத்துவமனையே நடுங்கும் அளவு கத்தினான்..... இவனின் அலரலில் அனைவரும் அங்கு ஓடி வர... கயலின் அருகில் ரவி நின்று அவள் மூச்சு விட சிரமப்படுவதை கண்டு அருந்து தொங்கிய ஆக்ஸிஜன் ட்யூபை சரி செய்ய போராடிக் கொண்டிருந்தான்....

போராட்டங்கள் மீண்டும் தொடர்ந்தது... கயலுக்கு மட்டும் ஏனிந்த சோதனைகள் என அனைவரும் கதறி அழாத குறையாக கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க.... தன் மூச்சை விடாமல் பிடித்திருந்த கயலுக்கே அலுத்து விட.... உயிர் வாழ ஆசையில்லாமல் தன் இதயதுடிப்பை நிறுத்திக் கொண்டாள்.... கீன்.... என்ற சத்தமே அந்த அறை முழுவதும் கேட்க..... ஹய்யோ என்று கதறி அழுதவாறே கீழே மடிந்து விழுந்தனர்.... ஆப்ரேஷன் தீயேட்டரின் வெளியில் நின்ற நாயகன்கள்.... நாயகிகள் பல்லை கடித்து அழ தொடங்கியிருந்தனர்.... மதுவிற்கு கயல் மேல் என்றும் தனிபாசம் இருக்க...அவள் எழுந்து வந்துவிட மாட்டாளா என்னும் ஏக்கத்தில் கண்ணீர் வடித்தாள்.... ஆனால் நடந்தாக வேண்டும் என்பதை மாற்ற முடியாதே....

காதல் தொடரும்....

DhiraDhi❤

Hiii idhayangale.... munnadiye.. sonnen.... mutrilum veru vithama thaa kadhai irukum nu.... palaiya kathaila iruntha silar ippo varamaatnga.... pona kathaila uyir petru thirumbi vanthavanga ithula varanmatanga.... ippave solliren....

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro