Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

8

அந்த நொடிகள் நீள வேண்டி என்ன தான் அவன் மனம் வேண்டினாலும் வீடு வந்து தானே தீரும் . வீடு வந்ததும் அவன் மனதில் ஒரு வித தவிப்பு எழ அவளோ அவன் தொழில் அழுத்தம் கூடி இறங்கியவள் அவனை பார்த்து " பை ஜீவா " என்று கூறி திரும்ப அவனோ செல்லும் அவளின் பக்கவாட்டு தோற்றத்தை பார்த்தவன் என்னவோ தோன்ற " அதுல்யா" என்று அழைத்தான் .

அவள் அவன் அருகில் வர புன்னகைத்தவன் " நாளைக்கு நீ கெளம்பேல நா இங்க இருக்க மாட்டேன் .... ஊருக்கு போறேன் சோ.. " என்றவன் அவளின் கையை மென்மையாய் பற்றி குலுக்கியவன் " all the best for your future ." என்று கூற

அவளோ அவன் நாளை அவள் கிளம்பும் பொழுது இருக்க மாட்டான் என்றதிலேயே முகம் சற்று வாடியவள் " நாளைக்கு இருக்க மாட்டிங்களா? " என்று கேட்க அவனோ உருக துவங்கிய மனதை இழுத்து பிடித்தவன் தலையை இடம்வலமாய் ஆட்ட அவளோ முகம் சுருங்கியவாறு தனது கையில் இருந்த பையை பிரித்தவள் அதில் இருந்து ஒரு சிறிய காப்பை போன்ற ஒன்றை எடுத்தாள் .

அதன் முடிவில் ஒரு சிங்க முகம் போன்ற அமைப்பிருக்க அதை எடுத்தவள் " கைய நீட்டுங்க " என்றாள் . அவனோ அது வரை அவள் செய்வதை பார்த்துக்கொண்டிருந்தவன் அவள் கையை நீட்ட கேட்டதும் தனக்கென்று உணர்ந்தவன் அவளை பார்த்து முறைத்தான். அவளிடம் இருந்து எந்த பரிசும் வாங்க அவனிற்கு இஷ்டம் இல்லை . இன்று அவள் உணவிற்கு கொடுத்ததே அத்தனை உவப்பானதாக இல்லை .

அவள் கையை பற்றியவன் " இதெல்லாம் எதுக்கு அதுல்யா தேவ இல்லாம செலவு பண்ற? " என்று கேட்க

அவளோ அவனை முறைத்து அவன் பற்றி இருந்த கையிலேயே போட்டு விட்டவள் " என் பிரிஎண்டுக்கு எனக்கு போடணும்னு தோணுச்சு ஏன்? என்கிட்டே வாங்கிக்க மாட்டிங்களா அப்போ நானும் நீங்க வாங்கி தந்த bubbles , keychain எல்லாம் கொண்டு வந்து கொடுக்கவா ?" என்று கேட்க

அவனோ தன் பிடரி முடியை கோதியவன் " அது நா சம்பாதிச்சது அத்து இது உன் அப்பா அம்மா உன் செலவுக்கு கொடுக்குறது " என்று கூற அவளோ இத்தனை சுயமரியாதை பார்ப்பவனாக இருக்கிறானே என்று பார்த்தவள் " ஹே frienduku தான வாங்கி குடுத்தேன் அதுல என்ன இருக்கு ... என் அம்மா அப்பா யாருக்கு சம்பாதிக்குறாங்க எனக்கு தான ? யாருப்பா நீ .... இது என்னோட ஞாபகமா வச்சுக்கோங்க " என்று கூறி விடு விடு வென்று உள்ளே சென்று விட அவனோ அவள் கூறிய நண்பன் நண்பன் என்ற வார்த்தைகளிலேயே உழன்றுகொண்டிருந்தான் .

தனது கையில் இருந்த காப்பை வருடியவன் பைக்கில் இருந்து மேலே செல்ல சக்தி அவனின் வரவிற்காகவே காத்திருந்தான் . சஞ்சீவ் அவனை பார்த்தபடி சட்டையை கழற்றியவன் "என்னடா ஏதோ வேலை இருக்கு லேட்டா ஆகும்னு சொன்ன எனக்கு முன்ன வந்து நிக்குற " என்று கேட்க

சக்தியோ அவனை கூர்ந்து பார்த்தவன் " என்ன நெனச்சு வச்சுருக்க உன் மனசுல ?" என்று கேட்க

சஞ்ஜீவோ " நாளைக்கு ஊருக்கு போகேல அம்மா அப்பாக்கு போற வழில டிரஸ் எடுத்துட்டு போனும் , சுபி கு ஸ்வீட்ஸ் புடிக்கும் அது வாங்கிட்டு போகலைனா என்ன கொன்றுவா ....மேல படிக்குறாளா இல்ல மாப்பிள்ளை பாக்கலாமான்னு கேக்கணும் " என்று கூற

சக்தியோ பொறுமை இழந்தவன் " எப்பா உன் பொறுப்பு பருப்பை பத்தி நா கேக்கல அதுல்யா பத்தி என்ன நெனச்சுட்டு இருக்கன்னு கேட்டேன் "

சஞ்ஜீவ் அவன் கையில் இருந்த காப்பை வருடியவன் " நா நெனைக்குறது நடக்காதுனு மட்டும் தெரியுது. ஜஸ்ட் லைக் பாஸ்ஸிங் கிளவுட் அவளும் ஒரு அழகான அங்கம் என்னோட வாழ்க்கைல ... வந்தா இப்போ கெளம்பிட்டா " என்று கூறி புன்னகைக்க

சக்தியோ அவனை ஒரு வித இயலாமையுடன் பார்த்தவன் " எப்படி டா எதுவுமே உன்ன பாதிக்காத மாறியே நடந்துக்குற .. குடும்பத்தை பாத்துக்குறதுலாம் சரி தான் மச்சான் ஆனா உனக்குனும் ஒரு லைப் இருக்கு ..... சில விஷயத்தை அப்டியே போக விட்டுட்டா திரும்ப கெடைக்காது " என்று கூற

சஞ்ஜீவோ தனது பாயுடன் சேர்ந்த மெத்தையை விரித்து அதில் படுத்து கண்ணை கை கொண்டு மூடியவன் " தூங்கு டா சீக்ரம் நாளைக்கு நா கெளம்பனும் " என்று கூற சக்தியோ ஒரு வித இயலாமையுடனான தலை குலுக்கலுடன் படுத்து விட்டான் .

சஞ்ஜீவின் மனதோ ஆழிப்பேரலையின் அடங்காத பேரிரைச்சலாய் தவிப்புடன் இருந்தாலும் புத்தியோ " அது உனக்கானதாக இருந்தால் கண்டிப்பாக உன்னை வந்து சேரும் " என்று நினைத்து உறங்கினான் . அடுத்த நாள் அதிகாலை வேகமாக கிளம்பியவன் சற்று தாமதித்து கீழ் வீட்டின் திறவாத வாசலை பார்த்து ஒரு நொடி நிதானித்தவன் பின் அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் கோயம்பேடு சென்று விட்டான் .

இந்த முறை டிக்கெட் இல்லாத காரணத்தால் பேருந்தில் தான் செல்கிறான் . காலை 5 :30 மணிக்கு கிளம்பியவன் வீடு சென்று சேருகையில் மாலை 3 மணி ஆகி இருந்தது . செல்லும் வழியில் பெற்றோர் மற்றும் தங்கைக்கு பிடித்த அனைத்தையும் பார்த்து பார்த்து வாங்கிக்கொண்டான் .

அவர்கள் முதலில் தவிட்டு சந்தை என்னும் இடத்தில மிகவும் சிறிய வீட்டில் தான் இருந்து வந்தனர் . சஞ்ஜீவ் தலை எடுத்த பின் தான் இந்த மூன்று வருடமாக மாட்டுத்தாவணிக்கு மிகவும் அருகிலேயே சர்வேயர் காலனி என்னும் இடத்தில அபார்ட்மெண்டில் ஒத்திக்கு வசித்து வருகின்றனர் . அவன் தாய் கமலி ஒரு இல்லத்தரசி தந்தை ஆதிகேசவன் ஒரு தனியார் பள்ளியில் சொற்பமான வருமானத்தில் ஆசிரியர் பணியில் இருப்பவர் .

அவரிற்கு இருதயத்தில் பிளாக் ஏற்பட அறுவை சிகிச்சைக்கு பின் அவரால் அந்த பணியையும் செய்ய முடியாமல் போனது . ஒற்றை தங்கை சுபத்ரா இப்பொழுது பி.ஈ சிவில் இறுதி ஆண்டு பயில்கிறாள் . அவனின் குலதெய்வ கோவிலில் ஏதோ விஷேஷம் என்றும் சுபத்ராவை வழிய வந்து பலர் பெண் கேட்கிறார்கள் வந்து செல் என்று அவன் தாய் கூறி இருக்க தற்பொழுது 2 நாட்கள் விடுப்பெடுத்து வீட்டிற்கு வந்திருந்தான் . அவன் வீட்டை முன்னேற்றவும் தங்கையை படிக்க வைக்கவும் அவள் திருமணத்திற்கு நகைகள் சேர்க்கவும் என்று அவனின் மாத சம்பளமாக ஐம்பதாயிரத்தை மொத்தமாக தன் அன்னையின் accountirku மாற்றி விட்டு அவனது தேவைக்காக அந்த மாதம் எட்டாயிரம் தரும் கோச்சிங் சென்டரில் பணியாற்றிக்கொண்டிருக்கின்றான் .

அவன் உள்ளே வர அவனின் வீட்டில் ஈ எம் ஐ யில் வாங்கிய தொலைக்காட்சியிலிருந்து,மின்விசிறி , ஏ ஸீ வரை அனைத்தும் கேட்பாரற்று ஓடிக்கொண்டிருந்தது . வந்ததும் அதை கண்டு கோபமானவன் " அம்மா,சுபி" என்று குரல் உயர்த்தி அழிக்க கிட்சேனுள் வேலை செய்து கொண்டிருந்த தாயும் உள் அறையில் மொபைல் பார்த்துக்கொண்டிருந்த தங்கையும் வெளியே வந்தனர் .

தாய் அவனை கண்டு புன்னகைத்தவர் " வாடா கண்ணா அதுக்குள்ள வந்துட்டியா " என்று அவனை அணைக்க வர சுபியோ அய்யயோ இவனா என்பதை போல் பார்த்தாள் .

அவனோ அவரை ஒரு நொடி அணைத்தவன் பின் விலகி " ஹால்ல யாருமே இல்லேன்னா எதுக்கு இங்க பேன் , ஏ சி ,டீவி எல்லாம் ஓடுது ? பேன் போட்டாலே நல்லா தான இருக்கு எதுக்கு ஏ சி போட்டு விட்ருக்கீங்க " என்று கேட்க

அவனின் தாயோ " என்ன கேட்காத டா உன் அருமை தங்கச்சிய கேளு . வீட்ல இருக்கேலையாச்சு எனக்கு ஹெல்ப் பண்ணலாம்ல ... பொழுதன்னைக்கும் ஒன்னு அந்த போனேயே நோண்டுறா இல்லையா இதை பாக்குறா இல்லையா வெளிய கெளம்பி friendsa பாக்க போறேன்னு போயிருறா. எதையும் போடா அமத்துறது இல்ல படிக்குறதும் இல்ல " என்று

கூற அவனோ தங்கையின் புறம் பார்வையை திரும்பியவன் " இந்த தடவ மார்க்ஸ் எப்படி வந்துருக்கு ?" என்று கேட்க

அவளோ ஆரம்பிச்சுட்டான் என்று மனதிற்குள் சலித்தவள் " 65 percentage " என்று கூற

அவனோ புருவங்கள் நெருங்க அவளை பார்த்தவன்" ஏன் கொறஞ்சுட்டே வருது மார்க்ஸ் ?" என்று கேட்க

அவளோ எரிச்சல் அடைந்தவள்" வந்ததும் வராததுமா இதை தான் கேப்பியா ?டெய்லி தான் காலேஜ் போயிடு வரேன் சரி ரெண்டு நாள் லீவு னு கொஞ்சம் relaxedaa இருந்தா உடனே தப்பா . வர வர வீட்ல நிம்மதியே இல்ல " என்று கூறியபடி உள்ளே சென்று விட அவனோ செல்லும் தங்கையையே ஒரு முறை பெருமூச்சுடன் பார்த்தவன் அவரிடம் அல்லவா அடங்கிய பையை நீட்டி " அப்பாக்கும் உங்களுக்கும் டிரஸ் வாங்கிட்டு வந்துருக்கேன் மா சுபிக்கு நீங்களே இன்னைக்கு கூப்டு போய் டிரஸ் எடுத்துருங்க . அவளுக்கு புடிச்ச பிரேமாவிலாஸ் ஹல்வா இருக்கு இதுல . " என்று கூற

அவரோ பாசம் இருந்தும் அதை சரிவர காட்ட தெரியாமல் இருக்கும் மகனை பார்த்து பெருமூச்சு விட்டவர் " அவ பேசுனதுக்குலாம் பீல் பண்ணாத டா . எப்போ பாரு ஊற சுத்திகிட்டு தெரியுற " என்று கூறி அவன் கையில் தேநீர் கோப்பையை கொடுக்க

அவனோ " விடுங்கம்மா இந்த வயசுல தான ஊர் சுத்த முடியும் ... செலவுக்கு பணம் கேட்டா குடுங்க கேள்வி கேட்டுட்டே இருக்காதீங்க " என்று கூற அவரோ மகனை ஆதுரமாய் பார்த்தார் . இது தான் அவன் அவர்கள் முன்னாள் பாசத்தை கொட்டி கொடுக்க மாட்டான் அனால் ஒரு ஒருவர் மேலும் அவனிற்கு இருக்கும் பாசம் இவ்வாறு சிறு சிறு செயல்களை தான் வெளிவரும் . அதையும் அவர்கள் முன் காட்டிக்கொள்ள மாட்டான் .

அவன் அன்னை " ஏன்டா இதை அவ முன்னாடியே சொல்லிருந்தா அவளும் சந்தோஷப்பட்டுருப்பா ஏன் அவள்ட வில்லனாவே ஆகுற " என்று கேட்டால் ஒன்றும் பேசாமல் அமைதி ஆகி விடுவான் .

அவனின் தந்தை அப்பொழுது தான் உள்ளே வந்தவர் மகன் வந்திருப்பதை பார்த்து ஒரு ஆழ்ந்த பார்வையை மட்டும் அவன் புறம் வீசியவர் மகளை பார்க்க செல்ல அவளோ தந்தையின் தலை தெரிந்ததும் அவரிடம் கேவலுடன் சென்று அணைத்தவள் " வந்ததும் வராததுமா திட்றான் பா " என்று கூறி அழ

அவரோ ஏற்கனவே மகன் தலை எடுத்ததில் இருந்து அவன் சம்பாத்தியத்தில் அமர்ந்து தான் சாப்பிட அவன் குடும்பத்தின் தலைமையாக மாறியதை ஏற்க இயலா கழிவிரக்கத்தில் இருந்தவர் மகன் மேல் காரணம் இல்லா வஞ்சம் வைத்தபடி இருக்க அதை தன் மகளிர்க்கு அண்ணன் மேல் அலட்சியமாய் கடத்துகிறோம் என்றே தோன்றாமல் " எல்லாம் சம்பாதிக்கிற திமிரு பாப்பா விடு அப்பா பாத்துக்குறேன் " என்று கூறி அவள் மனதில் அண்ணன் மேல் மேலும் மேலும் எரிச்சலை விதைத்துக்கொண்டிருந்தார்.

அது அவள் வாழ்வில் புயலை தாக்க வைத்து சிறிது சிறிதாய் மகனை மொத்தமாக வேரற்று பிடிங்கி விடும் என்றறியாது போனதை என்னென்று கூற ?

இங்கே சஞ்சீவ் தங்கையின் வாழ்க்கையின் அடுத்த நிலையை பற்றி யோசித்துக்கொண்டிருக்க அங்கே அதுல்யாவோ தனது உடமைகளை தந்தை கொண்டு வந்த காரில் வைத்தவள் தன்னிச்சையாய் மேல் வீட்டை பார்த்தாள் . அங்கே அவன் இல்லை என்று உணர்ந்த நொடி ஏனோ ஒரு வித வெறுமை மனதை தாக்கியது . காரில் ஏறி அமர்ந்தவள் தனது அத்தையிடம் பிரிந்து அமர அங்கிருந்து கார் விலகி செல்ல செல்ல ஏனோ அவளால் நிலை கொள்ள முடியாமல் போனது ....

அவள் தந்தை " ரொம்ப பெருமையா இருக்கேன்டா அப்பா இப்போ . 12thla cbse ல 470 வாங்கிட்ட .... VIT சென்னை ஓர் வேலூர்னு நீயே முடிவு பண்ணிக்கலாம் . வேலூர்லயே இருப்ப தான டா ?" என்று கேட்டு அவள் கையில் அந்த படிவத்தை கொடுக்க அவளின் கைகளோ தன்னிச்சையாக சென்னை VIT கல்லூரியின் படிவத்தை வருடியது . அவளிற்கும் சென்னைக்குமான பந்தம் இன்னும் முடியவில்லையோ ? 

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro