22
அதுல்யாவின் வீடு
அர்ஜுன் " அங்கிள் சாரி இப்டி திடீர்னு வந்து நிக்கிறது தப்பு தான் பட்... நான் காலேஜ்ல இருந்து அதுல்யாவை விரும்புறேன் .. இன்னும் ௧௦ நாள்ல மேற்படிப்புக்கு foreign போறேன் அதான் " என்று கூற அதுல்யாவின் தந்தையோ யோசனையிலேயே இருந்தார் .அவரின் சிந்தனை வயப்பட்ட முகத்தை பார்த்த அர்ஜுனின் தந்தையும் அதுல்யாவின் தந்தையின் நண்பருமான ராமகிருஷ்ணன் " டேய்ய் ஏன்டா இவ்வளவு யோசிக்கிற தெரிஞ்சோ தெரியாமலோ நம்ம பசங்களுக்கு புடிச்சிருக்கு எங்க குடும்பத்தை உனக்கு தெரியாதா என்ன ?" என்று கேட்க
அவரோ " அதில்லடா அதுல்யாவோட விருப்பம் தெரியனும்ல... அர்ஜுன் அவர் விரும்புனதா தான் சொல்றான் அதான் யோசிக்கிறேன் " என்று கூற
அர்ஜுனோஹ் சற்று முகம் இருகியவன் மற்றவர் அதை அவதானிக்கும் முன் " அவளுக்கும் என்ன புடிக்கும் அங்கிள் ... " என்று ஒரு பொய்யை அவிழ்த்து விட அதுல்யாவின் தந்தையோ ஆச்சர்யத்துடன் நோக்கினார் .
அர்ஜுன் " அவ என்கிட்டே வெளிப்படையா சொன்னதில்லை ஆனா அவளுக்கு என்ன புடிக்கும்னு தெரியும் அங்கிள் . maybe உங்க மேல இருக்குற மரியாதையால கூட சொல்லாம இருந்தர்களாம் ... நல்லா பாத்துப்பேன் அங்கிள் " என்று கூற
அதுல்யாவின் தந்தை இன்னும் தெளியாதிருக்க அவளின் அன்னையோ சிந்தனை தெளிந்தவராக " நீ மாஸ்டர்ஸ் பண்ண போய்ட்டு வா அர்ஜுன் . அதுல்யாவும் மாஸ்டர்ஸ் பண்ற இதில இருக்காள்னு கேட்டுட்டு நீ return ஆகும்போது கல்யாணத்த வச்சுக்கலாம் " என்று கூற
அதுல்யாவின் தந்தையோ மனைவியை நோக்கியவர் " கயல் என் அவசரப்படுற ? அதுல்யா லீவ்க்கு வரேல கெடுக்கலாம் " என்று கூற கயலோ
கணவன் மாற்றார் முன் தனது கருத்தை எதிர்த்து பேசியதில் முகம் கருத்தவர் " அவளுக்கு எது நல்லதுன்னு நமக்கு தெரியும் . " என்றவர் அவர்களிடம் திரும்பி தட்டை மாற்றிக்கொள்ள அதுல்யாவின் தந்தைக்கு ஏனோ இந்த நிகழ்வு நெருடலாக தான் இருந்தது .
அர்ஜுனின் வீட்டவர்கள் சென்றபின் அதுல்யாவின் தந்தை வெங்கட் அவரது மனைவியிடம் திரும்பியவர் " எதுக்காக கயல் இப்போ அவசர அவசரமா முடிவெடுக்குற ? என்ன தான் என் நண்பனோட பையன்னாலும் கேரக்டர் பாக்கணும் , அதுல்யாவுக்கு புடுச்சுருக்கானு தெரியணும் அம்மா நந்தினிக்கே இப்போ தான் வரன் செட் ஆகியிருக்கு . " என்று கூற
கயலோ அவரின் புறம் திரும்பியவர் " என்ன விசாரிக்கணுமா உங்களுக்கு ? அவங்க பேமிலி ஸ்டேட்டஸ் தெரியும் தான, எத்தனை நாலா அவரோட buisness டை up கு என்னனு கேக்குறதுனு 2 வருஷமா யோசிச்சுட்டு தான இருந்தீங்க இப்போ தான கிடைக்குது . ... இவ்வளவு நல்ல இடத்துல இருந்து அதுல்யாவுக்கு அமையுறதே அவ futureku ரொம்ப நல்லது . இதுல அவளை எப்படி கன்வின்ஸ் பண்ணனும்னு யோசிங்க என்ன கேள்வி கேக்குறதுக்கு பதில் " என்று கூற
அவரோ மனைவியின் பேச்சு பாதி மனதை சமாதானம் செய்தாலும் என்னவோ அவருக்கு மனதை நெருடியது . அதை அப்புறம் ஒதுக்கி வைத்தவர் இதை பற்றி அதுல்யாவிடம் அடுத்த வார இறுதியில் அவள் வீட்டிற்கு வரும் பொழுது பேச வேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டார்.
ந்த வாரம் அட்டகாசமாக சென்றது . இடையில் அதுல்யாவின் இருபத்தி இரண்டாவது பிறந்தநாளிற்கு சஞ்சீவ் மஹாபலிபுரம் அழைத்து சென்றது என்று வாழ்க்கை என்னவோ இந்த மூன்று வருடம் தொலைத்த காதலையும் துளி காமத்தையும் சேர்த்தே வாரி வழங்குவதற்கு அழகாகவே சென்றது . இரண்டாம் வார முடிவில் அதுல்யா காலை வீட்டிற்கு செல்வதற்கு சஞ்சீவுடன் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தாள் . அவன் ஏதோ ஒரு தீவிர சிந்தனையில் இருப்பதை அவதானித்தவள் அவனின் தோளை தொட்டு திரும்பியவள் " என்னப்பா ? ஏதோ யோசிகிட்டே இருக்கீங்க ?" என்று அவள் கேட்க அவன் பதில் சொல்வதற்குள் பேருந்து வந்திருந்தது .
பேருந்து வந்ததும் அவள் அவனையும் பேருந்தையும் மாற்றி மாற்றி பார்க்க அவனோ அவளை பேருந்தில் ஏற்றியவன் ஒரு நிமிடம் யோசித்து ஆவலுடன் அவனும் ஏறலானான் .
அதுல்யா அப்பொழுதே இருக்கையில் அமர்ந்தவள் அவனும் அருகில் வந்து ஆர்வது கண்டு " என்னாச்சு ஜீவா ? " என்று கேட்க அவனோ முகத்தை ஒரு வித குழப்பரேகைகளுடன் தாங்கி நின்றவன் " என்னவோ தெரியல மனசு ஒரு மாதிரி அடிச்சுக்குது ... எப்படியும் உன் அப்பாகிட்ட பேசணும்னு முடிவு பண்ணது தான .. இன்னைக்கே பேசிருறேன் " என்று கூற அவளிற்கு திடீரென்று அவன் இப்படி கூறவும் முகம் இருள் சூழ துவங்கியது . அவள் இன்னும் மனதளவில் தைரியத்தை வளர்த்துக்கொள்ள வில்லையே .. அவள் தந்தையை கூட சமாளித்து விடலாம் அவள் அன்னையை என்ன செய்வது என்று அவள் கலக்கமுற்றிருக்க அவனோ அவளின் கலங்கிய முகம் கண்டு மேலும் இதயத்துடிப்பு எகிற அவளை பார்த்தவன் " என்னாச்சு அம்மு ? நீ தான வந்து பேசுனு சொன்ன .. எப்போ பேசுனா என்ன ?" என்று கேட்க
அவளோ " அதெல்லாம் சரி தான் ஜீவா ஆனா நான் வீட்ல முதல்ல சொல்ல வேணாமா ? திடீர்னு நீங்க வந்து பேசுனா எப்படி react பண்ணுவாங்களோனு பயமா இருக்கு " என்று கலக்கக்குரலிலேயே கூறினாள் . அவளிற்கு தெரியுமே அவளவனை பற்றி சுயமரியாதைக்காக எதை வேண்டுமாயினும் தூக்கி எறிந்துவிடுவான் என்று .
அவனோ அவள் யோசிப்பதை உணர்ந்தவன் அவள் கையை பற்றி " எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம் ஆனா..... ஒரே ஒரு சத்தியம் மட்டும் பண்ணு ... " என்று கூற அவளோ அவனை நிமிர்ந்து நோக்கினாள் என்ன என்னும் விதமாய் . அவளின் கையை தன கையேடு கோர்த்துக்கொண்டு நெஞ்சில் வைத்துக்கொண்டவன் அவள் கண்ணை பார்த்து " எந்த சூழலையும் நான் உன்ன விட மாட்டேன் .. நீயும் என்ன விட்டுற மாட்ட தான அம்மு ?" என்று கேட்க அவன் கண்களில் தான் எத்தனை ஏக்கம் .
அவனின் கையை மேலும் இருகப்பற்றியவள் " நீங்க கூட இருந்தா போதும் . சமாளிச்சுருவேன் " என்று கூற அதில் சற்றே நிம்மதியுற்றவன் அவள் தலையை நெஞ்சோடு அழுத்திக்கொண்டான் அதில் இருந்த அழுத்தம் அவளிற்கு அவனின் எண்ணவோட்டத்தை தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்தது .
இரண்டு மணி நேர பயணம் முடிய அவளின் வீட்டிற்கு இருவருமாக ஒரு ஆட்டோவில் வந்து இறங்கினர் . அவர்கள் வீட்டில் ஆட்கள் நடமாட்டம் என்றும் விட அதிகமாக இருப்பதை போல் இருந்தது. அவர்கள் வீட்டிற்கு பிரதான நுழைவாயிலிலிருந்துஒரு 100 அடி நடந்து தான் செல்ல வேண்டும் இருபுறமும் தோட்டம் அமைத்திருப்பார்கள். மூன்று அடுக்குகள் கொண்ட வீடு அவர்களின் செல்வச்செழிப்பை பறைசாற்றுவதற்கு போதுமானதாக இருந்தது . சஞ்சீவ் அவளின் வீட்டின் பிரம்மாண்டத்தை பார்த்தே பாதி துவண்டிருந்தான் . அவள் தன்னை விட அந்தஸ்தில் உயர்ந்தவள் என்று தெரியும் ஆனால் எவ்வளவு என்று இன்று தான் அறிகின்றான் .அவர்கள் நடந்து செல்ல உள்ளே கேட்ட சலசலப்பினும் வாயிலின் அருகே அங்கிருந்த செருப்புகளை பார்த்தவள் பிரெச்சனை ஆகுமோ என்று மனது மணி அடிக்க
சஞ்சீவிடம் திரும்பியவள் " ஜீவா கண்டிப்பா இப்போ பேசணுமா ? எல்லாரும் இருக்குற மாதிரி இருக்கு .. " என்றுகூற அவனுமே சற்று சஞ்சலம் கொண்டு யோசித்தபடி இருக்க அவளின் அத்தையோ அதற்குள் வெளியே வந்தவர் அதுல்யாவுடன் சஞ்சீவ் நிற்பதை பார்த்து புருவன் நெறுக்கியவராய் " அதுல்யா ... வா வா ... அம்மா சஞ்சீவ் ... நீ என்ன இங்க ?" என்று கேட்க அவளோ திடீரென்று அவர் வெளியே வந்து கேட்டதில் திடுக்கிட்டவள் அனிச்சையாக அவன் கையை பிடிக்க அதற்குள் வீட்டிலிருந்து அவளின் மாமா மற்றும் சில பல சொந்தங்கள் வந்திருந்தனர் . அதில் அவளின் அன்னையும் அர்ஜுனும் அடக்கம் .
அவளை அன்னை அவளை பார்த்து முகம் விகசித்தவர் " அத்து... என்றவர் அதன் பின்னே அவள் ஒரு ஆடவனுடன் கோர்த்து நிற்பதை கண்டு முகம் இறுகினார் .
கயல் " அதுல்யா... யார் இது ?" என்று கேட்க
அவளோ " .. அது.. மா ... உள்ள போய் பேசலாமா ?" என்று கேட்க
அவரோ அங்கேயே கை கட்டி நின்றவர் " இது யாருனு சொல்லு உள்ள விடுறதா வேணாமான்னு நான் அப்புறமா சொல்றேன். என்று கூற அவளோ அவளின் தமக்கையை துணைக்கு அழைக்க பார்த்தாள் அவளிடம் முன்பே கூறி இருந்தாள் அவளின் காதல் விவகாரத்தை . நந்தினியோ அவள் பாவையை சந்திக்காமல் கூட்டத்திற்குள் மறைய அங்கே ஒரு சலசலப்பு எழத்துவங்கியது .
சஞ்ஜீவின் உடல் கொஞ்சம் கொஞ்சமாய் இறுகுவதை உணர்ந்தவள் ஒரு பெருமூச்சை விட்டு " இது சஞ்ஜீவ் ... நானும் இவரும் நாலு வருஷமா லவ் பண்றோம் .. " என்று கூற
சஞ்ஜீவின் அன்னையோ அதில் முற்றிலும் ஆத்திரம் அடைந்தவர் " என்ன காரியம் அதுல்யா பண்ணி இருக்க ?" என்று அவளிடம் பாய வர அவளை தடுத்த அதுல்யாவின் அத்தை சஞ்சீவிடம் உன்னிடம் இதை எதிர்பார்க்கவில்லை என்பதை போல் ஒரு பார்வையை வீசியவர் " கயல் அமைதியா இரு என்ன எதுன்னு கேப்போம் . உள்ள கூட்டிட்டு வா முதல்ல . குடும்ப மானம் ரோட்டுல போக வேணாம் " என்று கூற அவரோ அவனை முறைத்தபடியே உள்ளே சென்றுவிட சிறிது நேரத்திற்கெல்லாம் சஞ்ஜீவ் அந்த வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்திருந்தான் அவனின் எதிரே அதுல்யாவின் அன்னையும் அர்ஜுனின் தந்தையும் அமர்ந்திருந்தார் .
சஞ்சீவ் பேச துவங்கினான் " என் பேரு சஞ்ஜீவ் .. சொந்த ஊரு மதுரை . ஒரு தங்கச்சி இருக்க கல்யாணம் பண்ணி கொடுத்துட்டேன் . இங்க இன்போஸிஸ்ல ஒர்க் பண்ணிக்கிட்டு இருக்கேன் chief prograammer. மாசத்துக்கு 1.2 lakhs சம்பளம் foreignum போயிடு வந்துருக்கேன் 2 weeks முன்னாடி தான் return ஆனேன் . நாலு வருஷமா அதுல்யாவும் நானும் லவ் பண்றோம்... உங்ககிட்ட பேசிட்டு அப்பறமா வீட்டுல இருந்து பேச வரலாம்னு.. " என்று அவன் கூறிக்கொண்டிருக்க
அவளின் அன்னையோ அவனை நிறுத்த கூறியவர் " சொந்த வீடு இருக்கா ?" என்று கேட்க
அவனோ சற்று திணறியவன் " இப்போ தான் இடம் வாங்கலாம்னு சேர்த்துக்கிட்டு இருக்கேன் next yearகுள்ள கட்ட ஆரம்பிச்சுருவேன். " என்று கூற
அவரோ அடுத்தது " என்ன ஜாதி ?" என்று கேட்க
அவனோ சற்று அசூயையாய் உணர்ந்தவன் அவனின் ஜாதிப்பெயரை கூற அவரோ அடுத்து அவன் வயதை கேட்டார் . சஞ்ஜீவ் " 28 முடியப்போகுது"என்று கூற
அவரோ ஏளனமாய் இதழ் வளைத்தவர் " சோ... எதுலயும் எங்களுக்கு equallaa இல்ல .... உன்னோட ஒரு மாச சம்பளம் எங்களோட வீக்லி turnover ல 50 பெர்ஸன்ட் தான். எந்த தைரியத்துல வந்து பொண்ணு கேக்குற ? "என்று கேட்க
அங்கிருந்த சிலரோ நக்கலாக உதட்டை வளைக்க சஞ்ஜீவ் அவனது கை முஷ்டியை இருக்க அதுல்யாவோ அவனின் நிலை பொறுக்காமல் " அம்மா... எதுக்கு இப்போ அவரை இன்சுலேட் பண்றீங்க ?" என்று கேட்க
அவரோ அவளின் புறம் திரும்பி " வாய மூடுடி " என்று கர்ஜித்தவர் மீண்டும்
சஞ்சீவிடம் " சோ... சின்ன பொண்ண... எதையாவது சொல்லி ஆசை காமிச்சு மயக்கிடுவீங்க நாங்க உங்களுக்கு தூக்கி குடுத்துறணும் அப்படி தான ? உனக்கு என்ன தகுதி இருக்கு என் பொண்ண கல்யாணம் பண்ணிக்க ?" என்று கூற
அவனோ அவரை நிமிர்ந்து பார்த்தவன் " உங்க பொண்ண சந்தோஷமா பாத்துக்குவேன் அப்படின்ற தகுதி இருக்கு " என்று பல்லை கடித்தபடி கூற
அர்ஜுனோ எங்கே அதுல்யா அவனிற்கு கிடைக்க மாட்டாளோ என்ற பதைபதைப்பில் ஒரு படி மேலே சென்று என்னடா பல்ல கடிக்கிற என்று அவன் சட்டையை பிடிக்க அதுல்யாவோ " அர்ஜுன்.. " என்று கத்த சஞ்ஜீவோ அவனின் கண்ணை மேற்கொண்டு நோக்கியவன் அவனின் கையை உதற அர்ஜுனோ அவன் கையை வைத்தே தன்னை குத்துவது போல் செய்தவன் சற்று தள்ளி நின்று " ஏய்ய் என்ன எனக்கு நிச்சயம் பண்ண பொண்ண வந்து லவ் பன்றேன்னு சொல்லிட்டு நியாயம் கேட்டா என்னையே அடிக்கிறியா ?" என்று மேலும் நடிக்க அதில் திகைத்த
சஞ்ஜீவ் " நான்... " என்று கூறும் முன்னே அவளின் அண்ணன்கள் சிலர் சஞ்சீவி தாக்க துவங்க அதுல்யாவோ அவளின் அத்தையின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டவள் சஞ்சீவை நோக்கி சென்றவள் அவர்களை விளக்க கத்திய கத்தில் அந்த வீடே ஒரு நிமிடத்தில் நிசப்தம் ஆனது .
அதுல்யா " இப்போ என்ன ... இவரை அடிக்கிறீங்க ? எவனாச்சு இன்னும் ஒரு அடி மேல வச்சாலும் police கூப்பிட வேண்டி வரும் " என்று கூற சஞ்ஜீவோ கண்ணை இருக்க மூடி கையி இறுக்கி மூடி நின்றிருந்தான் . நெற்றியின் ஓரத்தில் அத்தம் வந்துகொண்டிருக்க அவனின் வாயிலும் சிறிது ரத்தம் எட்டிப்பார்க்க அதில் உயிர்வரை துடித்தவள் கண்ணில் நீர் நிறைய மெல்லிய குரலில் " சாரி. சாரி ஜீவா " என்று கூறியபடி அவளின் சுடிதார் துப்பட்டாவால் துடைக்க
அவள் கையை பிடித்தவன் " விடு அம்மு " என்று கூறியவன் ஒரு பெருமூச்சு விட்டு மீண்டும் அவளின் அன்னையிடம் " உங்க கவலை புரியுது பட் .. நான் உங்க பொண்ண நல்லா பாத்துப்பேன் .. .இப்போ நீங்க எதிர்பார்க்குற ஸ்டேட்டஸ் என்கிட்டே இல்லாம இருக்கலாம் ஆனா சம்பாதிச்சுருவேன் " என்று ஏதோ கூற வர
அவரோ கையை தூக்கி நிறுத்து என்னும்படி கூறியவர் " இவ்வளவு அசிங்கப்படுத்தியும் இன்னும் நின்னு பேசுறியே உனக்கு வெக்கமாவே இல்லையா? " என்று கேட்க வேறு
ஒருவனோ " உன் அம்மா உன்ன மட்டும் தான் இப்டி பெரிய இடத்துல வளச்சு போடுன்னு சொல்லி அனுப்பினங்களா இல்ல உன் தங்கச்சியையும்... " என்று மேலும் கீழ்த்தரமாக பேச அவனோ மனதளவில் மேலும் அடிவாங்கியவன் ரௌத்திரத்தின் உச்சியில் நிற்க
அதுல்யாவோ பொங்கி விட்டாள் " மா என்னோட ஒழுக்கத்தையும் கீழ்த்தரமான பேசிக்கிட்ருக்காங்க என்னம்மா அப்படியே நிக்கிற " என்று கேட்க அவரோ வாயை இறுக்கி மோடியபடி நின்றிருக்க அதுல்யா இரண்டு நிமிடம் பொறுத்தவள் மேலும் அர்ஜுன் எகிறிக்கொண்டு சஞ்ஜீவை அடிக்கவருவதை கண்டவள் இறுக்கமாக அவன் கையை பற்றினாள் .
அவளை கண்கள் சிவக்க ஆங்காங்கே ரத்தக்கறைகளுடன் பார்ப்பவனை கண்டவள் திடமான முடிவுடன் " சஞ்ஜீவ் போலாம் " என்று கூற மொத்த குடும்பமும் அவளை திகைப்பூண்டை மிதித்ததை போல் பார்த்தது .
கயல் " அதுல்யா ..." என்று கத்த
அவளோ அவரை நிதானமாக பார்த்தவள் " நான் ...... போறேன்... " என்று கூற
கயலோ பதட்டத்தில் " இப்போ போறதுனா அப்படியே நீ போக வேண்டியது இருக்கும் அதுல்யா .... அர்ஜுனஹ் கொஞ்சம் பாரு உங்க கல்யாணம் நடந்த அவங்க அப்பா நம்மளோட சூப்பர்மார்கெட்ட mallaa கட்ட போறோம் ... do யூ think this idiot can give you the luxury ? " என்று கேட்க
அவரை ஒரு கசந்த முறுவலுடன் ஏறிட்டவள் " சோ... நீ என்ன உன் பொண்ணா உன் பொண்ணோட வாழ்க்கை போயிடும்னு இவ்வளவு நேரம் பேசல .... உன்னோட buisness deal அதுக்கான இன்வெஸ்ட்மெண்டா தான் என்ன பார்த்திருக்க? ... எனக்கு எதுவுமே வேணாம் " என்று கூற
அவரோ சிறிது நேரத்திற்கெல்லாம் ஆங்காரம் எடுத்தவராய் " சொல்ல சொல்ல என்ன திமிரு உனக்கு " என்று அவள் முடியை பிடிக்க வர சஞ்ஜீவ் அவளின் முன் வந்து நின்றவன் பார்த்த பார்வையில் அவரின் முதுகுத்தண்டு சில்லிட்டு போனதென்னவோ உண்மை .
அதுல்யாவின் புறம் திரும்பியவன் தன கையை நீட்டி " உங்கம்மா சொன்ன எதுவுமே கெடைக்காது...ஆனா... " என்று ஏதோ கூற வர அவனின் வாயை பொத்தியவள் அவனுடன் கையை கோர்த்துக்கொண்டு " போகலாம் " என்று செல்ல அவளின் அண்ணன்மார்கள் முன்னாள் வருவதை பார்த்தவள் "இன்னும் ஒரு அடி முன்னாடி வச்சா போலீஸ் ஸ்டேஷன்ல தான் அடுத்து நிப்பீங்க " என்று சிம்மமாய் கர்ஜித்துவிட்டு அவனுடன் சென்றுவிட்டாள் பிறந்தகத்தை மொத்தமாக உதறி .
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro