Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

17

சற்று நேரத்தில் கண்களை திறந்தவள் தலை சீவிவிட்டு வெளியில் வர சஞ்ஜீவ் சிவாத்மிகாவை அலம்பல் வள்ளத்தின்(washbasin ) முன் சிறிய முக்காலியில் நிற்க வைக்க அவளோ நான் பல் விலக்க மாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தாள் .

சஞ்ஜீவ் " குட்டிமா குட் கேர்ள் தான "

ஷிவு ''ஆமா"

சஞ்ஜீவ் " குட் girls brush பண்ணிட்டு தான் சாப்பிடுவாங்க " என்று கூற அவளோ அனைத்தையும் உன்னிப்பாக கேட்டு விட்டு அவன் பற்பசையை வாயின் அருகில் ஒண்டு வந்தாலே முகத்தை திருப்ப ஆரம்பித்து விட்டாள். அவனோ அவளுடன் போராடிக்கொன்டே இருந்தவன் ஒரு கட்டத்தில்

பொறுமை இழந்து " ஷிவு " என்று அழுத்தமாக அழைக்க அவனின் பெண்ணரசியோ அவனின் கடினமான குரலில் வாயை பிதுக்கி அழத்தயாராகி விட இவற்றை ஒரு வித சிரிப்புடன் கண்டுகொண்டிருந்த அதுல்யா மகள் அழுகைக்கு தயாராகவும் அவள் அருகில் வந்தவள் சஞ்ஜீவை விளக்கி விட்டு அவளை கைகளில் அள்ளிக்கொள்ள மகளோ அவளின் கழுத்தில் முகம் புதைத்து விசும்ப துவங்கிவிட்டாள். சஞ்ஜீவிற்கு மகளின் அழுகை மிரட்சியை கொடுக்க மனைவி மகளின் பின்னே சென்றவன் கண்டதென்னவோ உப்பரிகையில் மகளை இடுப்பில் தூக்கி வைத்தபடியே வேடிக்கை காட்டிக்கொண்டிருந்த மனைவியை தான் .

அதுல்யா " பேபி அம்மா காலைல எந்திரிச்சதும் என்ன பண்ணனும் சொல்லிருக்கேன் ?"

சிவு " காலைல எந்திரிச்சதும் ப்ரஷ் பால் குடிக்கணும் , குளிக்கணும் , சாப்பிடணும் "

அதுல்யா " ம்ம் அதுக்கு முன்னாடி என் dirty பேபி ப்ரஷ் பண்ணனும்னு சொல்லிருக்கேன்ல .... ப்ரஷ் பண்ணலேன்னா என்ன ஆகும் ?"

சிவு" பூச்சி வயித்துக்குள்ள போகும் " என்று சிறிய குரலில் கூற

அதுல்யா அவள் மூக்குடன் மூக்கு உரசியவள் " குட் இப்போ நாம பிரஷ் பண்ணி கிளீன் பேபியா ஆகலாமா இல்ல dirty பேபியாவே இருக்கலாமா ? " என்று ஏதேதோ கேட்டபடி அவளை பல் துலக்க அழைத்து வர சஞ்ஜீவிற்கு மனைவியின் பொறுமை பிரம்மிக்க வைத்ததென்னவோ உண்மை .

அடுத்து அவன் கண்டதென்னவோ சிரித்து விளையாண்டபடி பல்துலக்கும் மகளையும் அவளை சிரிக்க வைக்கும் மனைவியையும் தான் .

எங்கோ மனதில் பெரும் வலி சூழ்ந்து ஒரு தந்தையாகவும் கணவனாகவும் மொத்தமாக தோற்ற உணர்வை கொடுக்க சத்தமின்றி உப்பரிகைக்கு சென்று நின்றுவிட்டான் சஞ்ஜீவ் . மக்களிடம் விளையாடினாலும் கணவனின் செய்கைகளை கண்ணாடியின் மூலம் பார்த்துக்கொண்டிருந்த அதுல்யாவிற்கு அவனின் அடிவாங்கிய முகம் காண என்னவோ போல் ஆனது .

குழந்தையிடம் திரும்பியவள் " அம்மாக்கு லேட் ஆயிருச்சு அப்பாகிட்ட போறீங்களா? " என்று கேட்க வேண்டும் தலையை ஆட்டியபடி தந்தையை தேடி சென்றுவிட்டது .

சிவு " அப்பா " என்றபடி வந்து காலை கட்டிக்கொள்ள ஒரு வித இறுகிய மனநிலையில் நின்றிருந்த சஞ்ஜீவ் மகளை பார்த்து சிரித்தவன் தன் கைகளில் தூக்கி கொள்ள அவனின் கலங்கிய கண்களை கண்ட குழந்தையோ " கண் தூசி போய்ச்சா( போய் இருச்சா) பா" என்று அவன் கண்ணை விரித்து சிறிய வாயை குவித்து ஊத அவனோ மகளை அணைத்துக்கொண்டவன் மௌனமாய் அவள் முதுகில் தன் கண்ணீர் துளிகளை சிந்தினான் .

அதுல்யா அவனை பார்த்தபடி உப்பரிகையில் கதவின் அருகில் நின்றவள் அவனை சமாதானம் செய்ய எழுந்த மனதை அடக்கியபடி " சாப்பிட வாங்க " என்று கூற அவனும் அவளை பார்த்தபடி உள்ளே சென்றான் .

அவனிற்கு தட்டை வைத்தவள் இட்லியை அதில் வைத்துவிட்டு மகளை அவளின் சிறிய நாற்காலியில் அமரவைத்து அவள் முன் தட்டை வைக்க அவனோ " நான் பாப்பாக்கு ஊட்டி விட்டுக்குறேன் " என்று கூற

அதுல்யா அவனை பார்த்தவள் " அவளே சாப்பிட்டுக்குவா " என்று கூறி அவள் தட்டில் இட்லியை பிய்த்து போடா மகள் அழகாய் ஒரு ஒரு வாயை எடுத்து சட்னியில் தோய்த்து உண்ண துவங்கிவிட்டாள்.

சஞ்ஜீவிற்கு ஒரு ஒரு நிமிடமும் இத்தனை வருடங்களாய் மனைவி எப்படி சிறிய குழந்தையை வைத்துக்கொண்டு வேலைக்கும் சென்றுகொண்டு அவளை இப்படி சிறு சிறு விஷயங்களில் பழக்கி வைத்திருக்கிறாள் என்று ஒரு புறம் ப்ரம்மிப்பாகவும் இன்னொரு புறம் குற்றஉணர்வாகவும் இருந்தது . குழந்தையின் பழக்கவழக்கங்கள் பற்றியும் எதுவும் தெரியவில்லை , மனைவியின் நிலையும் தெரியவில்லை . அந்த ஒரு நிமிடம் அவன் வாழ்வில் தோற்றதாகவே உணர்ந்தான் . அவன் கைகள் இருகுவதையும் உண்ணாததையும் கவனித்த அதுல்யா அவன் மனதிற்குள் ஏதேதோ நினைத்து மருகுவதை உணர்ந்தவள் அவனின் கையை தயங்கியபடி பற்றிட அவனோ அவளின் முகத்தை கண்ணீர் திரையிட நிமிர்ந்து நோக்கினான் .

அதுல்யா " ப்ச் என்னப்பா இது ?" என்று கேட்க

அவனோ மகளை பார்த்து விட்டு அவளை பார்த்தவன் " சாரி அம்மு ..... ரொம்பப .......கஷ்டப்படுத்திட்டேன்ல ... வேணும்னு பண்ணலடி... " என்று குரல் உடைய கூற அ

வளின் கண்களோ கணவனின் இந்த நிலையை கண்டு கரிக்க துவங்கியது " முதல்ல சாப்பிடுங்க " என்று கூற அவனோ தட்டை வெறித்தபடி அமர்ந்து விட்டான் . அவனால் இன்னுமே இங்கு இருக்கும் எதையும் ஜீரணிக்க முடியவில்லை . அதுல்யாவிற்கோ அவனின் இந்த நிலையை காணவும் பிடிக்கவில்லை முன்பு போல் சமாதானம் செய்யவும் மனம் விழையவில்லை . அவன் நீண்டநேரமாக அப்படியே அமர்ந்திருப்பதை பார்த்தவள் ஒரு முடிவுடன் அவன் தட்டை தன புறம் இழுத்து ஒரு வில்லை உணவை அவன் வாயின் முன் நீட்ட அவனோ அவளை ஆச்சர்யத்துடன் நோக்கினான் .

அதுல்யா " லேட் ஆகுது ... ப்ளீஸ் " என்று கூற அவனோ மனைவியின் கையால் பல நாட்களுக்கு பின் உண்ண துவங்கினான் .

அவனிற்கு வேகவேகமாய் ஊட்டி முடித்தவள் " லஞ்ச் பண்ணல லேட் ஆயிருச்சு ஏதாவது வாங்கிக்கோங்க ... பாப்பாக்கு காரமா குடுக்க வேண்டாம் தயிர்சாதமோ சாம்பார்சாதமோ வாங்கிக்குடுங்க. ஸ்பூன் போட்டு குடுத்துட்டு அவளே சாப்பிட்டுப்பா .என்றவள் கைப்பையை எடுத்தபடி வெளியே சென்றுவிட்டாள் . கதவின் அருகில் சென்றவள் பின் நிதானித்து அவனை திரும்பி பார்த்தவள் அவனை பார்க்க அவனோ அவளை ஒரு வித எதிர்பார்ப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான்" வந்து.... பேசலாம் சஞ்ஜீவ் ... பாப்பாவை பாத்துக்கோங்க " என்று கூறிவிட்டு செல்ல அவனோ அவளின் பேசலாம் என்ற கூற்றில் சற்று அமைதி வரப்பெற்று குழந்தையுடன் அமர்ந்துவிட்டான்.

அவன் கதிரையில் அமர அவனின் மடியில் வந்த்து அமர்ந்த ஷிவுவோ வாய் ஓயாமல் பேசியபடி அவளின் colouring notebookai எடுத்து வந்து தந்தையுடன் ஐக்கியமாகிவிட்டாள். சிறிது நேரத்தில் இறுக்கம் தொலைந்த சஞ்ஜீவும் அவளுடன் அமர்ந்த்து வர்ணம் தீட்ட துவங்க அவனின் விழிகளில் அந்த நாடு சுவற்றின் மத்தியில் இருந்த புகைப்படம் விழுந்தது . அது .. சுபத்ராவின் திருமணத்தில் அயர்ந்த தோற்றத்தில் அவன் இருக்க அவனின் நெற்றியை அவள் சுற்றிமுற்றி பார்த்தபடி துடைக்குமாறு அமைந்த புகைப்படம் .

அவனின் நினைவுகளும் பின்னோக்கி பயணித்தது . அன்று அவளிடம் பேசிவிட்டு சென்றவன் அதன் பின் அலுவலக வேலைகளிலும் சுபத்ராவின் திருமணத்திற்கு கடன் வாங்குவதிலும் அதன் வேலைகளிலும் அவனது நேரம் மொத்தமும் இழுத்துக்கொண்டது . இதற்கு நடுவில் சுபத்ராவின் திருமணத்திற்கு ஜவுளிகள் எடுக்க அதுல்யாவின் மூலம் மேகாவின் தந்தையின் ஜவுளிக்கடையியிலேயே நல்ல விலைக்குறைப்புடன் கொடுக்க சஞ்ஜீவிற்கும் அது சற்று ஆசுவாசத்தை கொடுத்தது . அவனிற்கு விசாவிற்கான வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது இன்னும் இரண்டு மாதங்களில் அவன் கிளம்பவேண்டும் என்ற சூழல் இருந்தது .

சுபத்ராவின் திருமணத்திற்கே அவனால் முதல்நாள் இரவில் தான் சென்று இறங்க முடியும் என்ற நிலையில் இருந்தது. . சக்தி தான் அனைத்திற்கும் அவனிற்கு பக்கபலமாக இருந்தான் .

அன்றொரு நாள்,

சஞ்ஜீவ் " இப்போ என்னனு அம்மு நான் உன்னை கூட்டிட்டு போறது இப்டி அடம்பிடிச்சுட்டு இருக்க ?"

அதுல்யா" மேகாவை மட்டும் கூப்டு இருக்கீங்க ? உங்க தங்கச்சி கல்யாணத்துக்கு நா வர கூடாதா ? என்ன பேசுறீங்க நீங்க ?"

சஞ்ஜீவ் " மேகாவையும் அவங்க அப்பாவையும் எங்க வீட்ல எல்லாருக்கும் தெரியும் உன்ன என்னனு சொல்றது சொல்லு நீயே "

அதுல்யா " ஏன் நீங்க தான் தைரியமான ஆளாச்சே சொல்லுங்க .... "

சஞ்ஜீவ் " சும்மா என்னத்தையாவது உலராத அம்மு ... சொன்னா கேளு நீ வர வேண்டாம் .உன் அக்கா கல்யாணத்துக்கு என்ன கூப்பிடுவியா நீ ?" என்று கேட்க

அவளோ ஒரு நிமிடம் தாமதித்தவள் " கூப்பிடுவேன்" என்க

அவனோ " மாட்டிக்கிட்டா என்ன மேடம் செய்வீங்க ? practicallaa பேசு . தேவை இல்லாத ரிஸ்க் " என்று கூற

அதுல்யாவிற்கோ அவன் மறுக்க மறுக்க ஒரு வகையில் அவள் மனதில் கலக்கம் சூழ்ந்தபடி இருந்தது " இப்போ ஏன் என்ன கழட்டி விட்றதுலயே இருக்கீங்க? இது இந்த கல்யாணத்துக்கு மட்டுமா இல்ல எப்போவுமே கழட்டி விட்ற ideavaa ?" என்று கேட்க

அவனிற்கு வந்த ஆத்திரத்திற்கு அளவே இல்லை " சின்ன பொண்ணுன்னு prove பண்ணிக்கிட்டே இரு, என்ன சொன்னாலும் புருஞ்சுக்காத , அப்டி என்ன டி உனக்கு அடம்? இருக்குற பிரெச்சனை பத்தாதுன்னு நீ வேற ... வை அதுல்யா " என்று அழைப்பை துண்டித்தவன் அலுவலகம் சென்றுவிட்டான் .

அதுல்யாவோ அவன் துண்டித்த அழைப்பையே பார்த்தவள் கண்களில் விழவந்த கண்ணீரை அடக்கியபடி அவள் செய்தது தான் பிழையோ என்று மருகத்துவங்கி விட்டாள். ஏனோ அவன் வெளிநாடு சொல்லப்போகிறேன் என்று கூறியதிலிருந்து அவளிற்கு மனம் நிலையில்லாமல் அலைந்து கொண்டிருக்கிறது . ஏதோ ஒரு வகையில் அவன் மீதான உரிமையை நிலைநாட்டிக்கொள்ளவே விழைகிறாள் .இதை யோசித்தபடியே இருந்தவளால் அன்று பாடத்தில் சுத்தமாக கவனத்தை வைக்க முடியவில்லை ... கொஞ்சம் கொஞ்சமாக அவள் உணர்வுகளனைத்தும் அவனை சார்ந்தே சுழலத்துவங்கியதை அவளே அறியவில்லை .... அவனும் அறியவில்லை .

அன்று அதே கடுகடு மனநிலையுடன் சக்தியும் அவனும் அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்க சக்தியின் கைபேசி விடாமல் அடித்துக்கொண்டிருக்க அவனோ அழைப்பு வரும்போதெல்லாம் துண்டித்து விட்டு முகம் இருக்க வேலை பார்த்துக்கொண்டிருந்தான் .

அவனை சிறிது நேரமாகவே கவனித்துக்கொண்டிருந்த சஞ்ஜீவ் அவன் மீண்டும் மீண்டும் அழைப்பை துடிப்பதை பார்த்து அடுத்த அழைப்பு வந்ததும் அவனின் அலைபேசியை கைப்பற்றி இருந்தான் . அதில் ஒளிர்ந்ததென்னவோ மேகாவின் எண்.

சக்தியை புருவம் நெரித்து பார்த்தவன் அவன் சஞ்ஜீவின் முகத்தை பார்க்காமல் திரும்புவதில் புருவத்தை நெரித்து அந்த அழைப்பை ஏற்று காதில் வைக்க அந்தப்புரம் அவனிற்கு கேட்டதென்னவோ மேகலாவின் விசும்பும் குரல் தான் " எதுக்கு இப்டி avoid பண்றீங்க ? நீங்க பேசுனது பழகுனது எல்லாமே அப்டி தான் தெரிஞ்சுது .... கேட்டது தப்பா ?" என்று கேட்க சஞ்ஜீவால் ஓரளவிற்கு நிலைமையை யூகிக்க முடிந்தது .

அவள் மேலும் பேசும் முன் " மேகா நான் சஞ்ஜீவ் பேசுறேன் " என்று கூற

அவளோ " அண்ணா ... அவன்... அவன்... " என்று திக்க அவனிற்கு அவளின் அழுகை ஏதோ செய்தது . இடைப்பட்ட காலத்தில் அதுல்யாவின் மூலமாக சுபத்ராவின் திருமண வேலைகளில் உதவி கேட்டது தொடங்கி மேகாவிடம் சற்று அதிகமாகவே நெருங்கிவிட்டிருந்தவன் அவளை தன் தங்கையை போலவே பாவிக்க துவங்கி இருந்தான் .

இன்று அவளின் அழுகுரல் ஏதோ செய்தது அவனை . சக்தியை முறைத்தவன் " அழாம என்னாச்சுன்னு சொல்லு மா " என்று கூற

அவளோ " அவரையே கேட்டுகோங்கண்ணா " என்றுவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டாள்.

கைபேசியை ஒரு நிமிடம் வெறித்தவன் சக்தியை பார்க்க அவனின் உடலோ இறுகி இருந்தது . சஞ்ஜீவ் அவனின் தோளை தொட்டவன் " காபி பிரேக் எடுத்துக்கலாம் வா " என்று எழுப்பி கான்டீன் அழைத்து சென்று எதிரில் அமர வைக்க

சக்தியோ தனது காபியை கண்டவன் "flirt பண்ணி தான்டா ஆரம்பிச்சேன் ஆனா அதுக்கப்புறோம் அவளோட கேரக்டர் பார்த்து ஒரு பிரம்மிப்பு தான் வந்துச்சு . அதுக்கப்றம் சும்மா friendlyaa தான்டா பேசுனேன் . ஆனா லவ் பன்றேன்னு வந்து நிக்கிறா " என்று கூற

சஞ்ஜீவ் அவனின் அலைபேசியில் அவர்கள் பேசிய உரையாடல்களை பார்வையிட்டவன் " இது... ஜஸ்ட் friendlyaa இருக்குற மாதிரி தெரியலையே சக்தி ... எதுக்கு அவளோட friends , அவ வெளிய போற இடம் , அவளோட ஸ்லீப் schedules எல்லாத்துலயும் interfere ஆகி இருக்க ? அவளோட favouriteslaam அவ்ளோ நோட் பண்ணி பேசி இருக்க ?, அவளோட ஆசை கனவு எல்லாமே கேட்டு அதுல நீயும் ஒரு பார்த்தாக இருப்பன்றே மாறி பேசி இருக்க , loverku ஷேர் பண்ற எல்லா quotesum அனுப்பிற்க " என்று கேட்க

சக்தியோ " அது ..... அது வந்து ... ஆனா நான் relationship mean பண்ணி பண்ணல சஞ்ஜீவ் " என்று கூற சஞ்ஜீவ் முறைத்த முறைப்பில் தலைகுனிந்து அமர்ந்து விட்டான் .

சஞ்சீவிற்கோ அவனின் செயலில் ஆத்திரம் எல்லை கடந்தது " do you mean just treated her like a timepass ?சத்தியமா உன்கிட்ட இதை நான் எதிர்பார்க்கல சக்தி .... உண்மையை சொல்லு what 's in your mind ?" என்று கேட்க

அவனோ தலையை கையில் பிடித்தபடி அமர்ந்தவன் சிறிது நேரம் கழித்து " அவள் ஏன்டா அவ்ளோ பெரிய இடத்துல பிறந்தா ? " என்று கேட்க

சஞ்ஜீவோ அவனை குழப்பமாக நோக்கினான் " புரியல come again ?"

என்று கேட்க

அவனோ அவனை நிமிர்ந்து பார்த்தவன் " அவளோட ஸ்டேட்டஸ் எனக்கு inferiority குடுக்குது சஞ்ஜீவ் புடுச்சுருக்கு ஆனா அவளோட உயரம் என்ன பயமுறுத்துது ..... என்னை அறியாம நிறைய இடத்துல அவள் யூஸ் பண்ற or வாங்குற பொருள் வேலை அதிகமா இருந்தா ஒருமாதிரி நக்கலா.... எப்படி சொல்றதுன்னே தெரியல ... என்னோட இயலாமையை அவளை ஏதாவது சொல்லி காயப்படுத்திருறேன் சண்டை வந்துருது ..... லூசு மாதிரி behave பண்றேன் எனக்கே நான் அவளை எமோஷனலா யூஸ் பண்ணிக்கிறேன்னு தோணுது .... இது ... இது வேணாம் சஞ்ஜீவ்" என்று கூற

அவனோ அவனை பார்த்தவன் " லூசாடா நீ ? அம்மு கூட என்னைவிட ஸ்டேட்டஸ்ல அவ்ளோ ஜாஸ்தி தான் ... நான் அவளை லவ் பண்ணலயா ?" என்று கேட்க

சக்தியோ அவனை பார்த்தவன் " அதுல்யா கிட்ட அவ அம்மாவும் அப்பாவும் உங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கலேனா என்ன செய்வான்னு கேட்டு பாரு ..... அவ உன்னை தான் சூஸ் பண்ணுவா .... மேகா அப்படி இல்ல ... அவளுக்கு அம்மா இல்ல அவங்க அப்பா சொல்றது தான் அவளுக்கு .... கல்யாணத்துல முடியாதுனு தெரிஞ்சே காதலிக்க நா ரெடி இல்லடா " என்று கூற சஞ்சீவிற்கு மனம் அவனறியாது கலங்க துவங்கியது ..... அப்படி ஒரு நிலைமை வந்தால் அதுல்யா அவனை தான் தேர்ந்தெடுப்பாளா ?அவன் அவனின் எண்ணங்களில் சுழன்றுகொண்டிருக்க

சிறிது நேரம் அமைதியாய் இருந்த சக்தி முகத்தை அழுத்தி துடைத்தவனாய் " அவளுக்கு நா வேண்டாம்டா .... எனக்கு இந்த காதலும் அது தர வலியும் வேண்டாம் . வா வேலைய பார்க்கலாம் " என்று கூறி எழ அவனின் பின் எழுந்த சஞ்ஜீவிற்கோ அவனின் வெளிநாட்டு பயணம் , அன்று அதுல்யா கூறிய கம்யூனிகேஷன் கேப் இன்று அவர்களுக்குள் நடந்த என்று அனைத்தும் சேர்ந்து அலைக்கழிக்க துவங்க அவனின் கரங்கள் தன்னால் அலைபேசியை எடுத்து " சுபத்ரா கல்யாணத்துக்கு நீயும் மேகாவோட சேர்ந்து வா......" என்று குறுஞ்செய்தி அனுப்ப

அவளோ அடுத்த நொடியே அதை படித்துவிட்டு சந்தோஷமான ஒரு எமோஜியுடன் " ஒகே " என்று அனுப்ப

அவனிற்கோ அவளின் செய்கையில் சிரிப்பு தன்னால் துளிர்த்தது அவன் உதடுகளோ " என் மேல உனக்கு கோபமே வராதா அம்மு " என்று முணுமுணுத்தபடி வேலைபார்க்க துவங்க அவனிடம் யார் கூறுவது அவள் கோபம் எதையும் அவனிடம் காட்டாமல் இருக்க , அவனிற்கு இருக்கும் அழுத்தங்களில் தானும் கோபப்படுத்த வேண்டாம் என்று மிகவும் ப்ரயத்தனப்படுகிறாள் என்றும் தன் உணர்வுகளை மறைக்கின்றாள் என்றும் .....

Actually oru question iruku enaku en ivlooo kammiyaana votes ivlooo adhigamaana reads? Pudikalaya? is it slowpaced . It's really disheartening for me to look at such a ratio of votes being a writer and I lose interest to write this story . I will wrap this story within 10-15 more episodes pls do give away your comments or atleast votes .

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro