15
அவசர அவசரமாக வீட்டிற்கு வந்தவன் கதவில் பதட்டத்தோடு தட்டப்பொகும் நொடி நிதானித்தான். இதை இவ்வாறே அவன் சென்று வீட்டில் உள்ளவர்களின் முன் உடைத்தால் அவன் வீட்டில் உள்ளவர்களின் நிலை என்ன ? அவன் தந்தை ? அவன் தாய் ? அவன் தங்கையின் மானம் ?
கண்களை இறுக மூடி கைகளை பின்னால் எடுத்தவன் அதுல்யாவின் வார்த்தைகளை மீண்டும் ஒரு முறை நினைதுப்பார்த்தான் ஒரு பெருமூச்சுடன் கதவை தட்டியவன் பதிலிற்கு காத்திருக்க அவனிற்கு கதவை திறந்து விட்டது என்னவோ அவன் தங்கை தான் .
அவளை அவன் கூர்ந்து பார்க்க அவளோ என்றும் இல்லாத திருநாளாய் கண்கள் வீங்கி அமைதியாக வழியை விட்டு நீங்கி நின்றவள் அவனின் கையில் இருந்த பையை வாங்கிக் கொண்டாள் . அவனோ அவளை பார்த்ததும் எழுந்த கோபத்தை அடக்கியபடி ஆராயும் பார்வையோடு உள்ளே சுற்றி பார்க்க வீடு வெற்றுக் கூடமாக காட்சி அளித்தது .
சஞ்சீவ் அவளின் புறம் திரும்பியவன் " வீட்ல யாரும் இல்லையா ?" என்று கேட்க அவளோ " I இல்ல அண்ணா ..... அம் அம்மாவும் அப்பாவும் கோவிலுக்கு போய் இருக்காங்க"
அவனுக்கு அதற்குப் பின் என்ன சொல்வது என்று தெரியவில்லை சிறிது நேரம் அப்படியே நின்றவன் தன் தங்கை மீண்டும் அறைக்குள் செல்ல திரும்புவதை உணர்ந்து அவளது கையைப் பற்றினான் .
சுபத்ரவின் கைகளோ பயத்தில் நடுங்க ஆரம்பித்துவிட சஞ்ஜீவோ அவளை திருப்பியவன் கோபத்துடன் கண்கள் சிவந்து " என்ன காரியம் பண்ணிக்க சுபா " என்று கேட்க
அவளோ முயன்று தன்னை கட்டுப்படுத்தியவள் வரவழைக்கப்பட்ட கோபத்துடன் " வந்த... வந்த ஒடனே ஆரம்பிக்காத என்ன உனக்கு பிரச்னை ?" என்று கேட்க சஞ்ஜீவ் அவளின் கையை விட்டவன் அவனின் அலைபேசியை அவள் கண் முன் நீட்டினான் . அதை கண்ட சுபத்ரவின் விழிகளோ அச்சத்தில் விரிந்து உதடு துடிக்க சிலையாய் சமைந்திருந்தாள் . அது அவள் அவளது காதலனுடன் மருத்துவமனையில் அமர்ந்திருந்தபொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் .
சுபத்திரா தலை குனிய சஞ்ஜீவோ " இதுக்கு தான் உன்ன படிக்க அனுப்புனேனா ? குடும்ப மானத்த மொத்தமா வாங்கிட்டியே "" என்று அருகில் இருந்த சுவற்றில் குத்தியதில் அவள் உடலோ வெளிப்படையாக நடுங்க துவங்கியது .
அவனோ அவள் சிலையென சமைந்து நிற்பதை பார்த்து எழுந்த கோபத்தை தனக்குள் புதைத்தவன் " அந்த பையன் கிட்ட நா பேசணும் " என்று
கூற சுபத்ரவோ " அது ... அண்ணா ... என்று தயங்க
அவனோ பெருமூச்சை விட்டவன் " இதுக்கு மேல ஆகுறதுக்கு எதுவும் இல்ல சுபா ... இப்போவே கெளம்பி ரிங்ரோடு கிட்ட வர சொல்லு பேசணும் "
சுபத்திராவோ அண்ணனின் அதிகாரத்தோரணை கோபத்தை கிளம்பினாலும் வேறு வழி இன்றி அவளின் காதலனான கார்த்திக்கிற்கு அழைத்தாள் .
மதுரை ரிங்ரோடு ,
இறுகிய முகத்துடன் சஞ்ஜீவ் அந்த ரிங்ரோட்டின் அருகே அமைந்திருந்த ஒரு தென்னந்தோப்பில் முன் நின்று கொண்டிருந்தான் . அவன் வந்து சேர்ந்த அடுத்த பத்து நிமிடத்தில் அவன் பின் ஒரு அரவத்தை உணர்ந்தவன் திரும்ப அங்கோ ஒரு இளைஞன் சஞ்சீவி நோக்கி வந்து கொண்டிருந்தான் . சஞ்ஜீவ் அவனை கண்டதும் தங்கையின் நிலை நினைவில் வர எழுந்த கோபத்தை காய் முஷ்டியை மடக்கி கட்டுப்படுத்தியவன் அவனை ஏறெடுத்து நக்க கார்த்திக்கோ அவனின் தீர்க்கமான பார்வையில் தன்னால் நிலம் நோக்கினான் .
செய்த காரியத்தின் வீரியம் இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்திருந்தது அவனிற்கு .
சஞ்சீவ் " சோ... மிஸ்டர் கார்த்திக் ரைட் ? "
கார்த்திக் அவனை பார்த்து " ம்ம் அது... சஞ்ஜீவ் .... " என்று கூற
அவனோ கையை உயர்த்தி நிறுத்து என்பதை போல் கூறியவன் " என் தங்கச்சி மேலயும் தப்பிருக்கேல உங்கள எதுவும் என்னால சொல்ல முடியாது.... இனி என்ன ?" என்று கேட்க
கார்த்திக் அவனின் குரலில் எச்சில் கூடி விழுங்கியவன் " அது.... abortion " என்று கூற
சஞ்ஜீவோ பொறுமை இழந்தவன் " அது பண்ணினா சுபாக்கு அதுகாப்புறோம் குழந்தையே பிறக்காது ஹாஸ்பிடல்ல சொன்னது கவனிச்சீங்களா இல்லையா ?" என்று கூற
அவனோ என்ன சொல்வதென்றே தெரியாமல் சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டிருந்தான் .
சஞ்சீவ் முகத்தை புறங்கையால் துடைத்தவன் ... " இன்னும் ஒரு மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ணனும்... உங்க அம்மா அப்பா கிட்ட நா பேசுறேன் வந்து " என்று கூற
கார்த்திக்கோ " அது.... அவங்க நிறைய சீர் எதிர்... " என்று கூற சஞ்சீவ் அவனை பார்த்த பார்வையில் தன்னால் வாயை மூடிக்கொண்டான் .
சஞ்சீவ் " உங்க அம்மா அப்பாகிட்ட நாளைக்கு என் அம்மா அப்பாவோட வந்து பேசுவேன் .... அதுக்கு முன்னாடி சொல்லி வச்சுருங்க "
என்று கூற
கார்த்திக் வேறு வழி இன்றி தலையை ஆட்ட சஞ்ஜீவோ நிறுத்தியவன் " எல்லாத்தையும் சொல்லி வைங்க " என்று கூற
கார்திக்கோ அவனை திகைப்புடன் நோக்கினான் " எல்லாத்தயுமா ?" என்று கூற
சஞ்ஜீவ் கண்ணை திறந்து மூடியவன் " 40 நாள் தாண்டிருச்சு தானே ? மறைச்சு கல்யாணம் பண்ணோம்னு சுபிய தொல்லை பண்ண மாட்டீங்கன்னு என்ன நிச்சயம் ? எனக்கு என் தங்கச்சியோட நிம்மதி முக்கியம் நீங்களே சொல்லிருங்க " என்று கூற கார்த்திக் எச்சில் கூட்டி விழுங்கிவிட்டு சென்றான்.
சஞ்சீவ் முகத்தை அழுத்த துடைத்தவாறு வண்டியை எடுத்தவன் வீட்டிற்கு வர அங்கே அவனது அன்னையும் தந்தையும் அவனை கண்டு குழம்பினர்.
வன்னி அன்னையோ " டேய்ய் என்னடா போன வாரம் தான வந்த மறுபடி... " என்று கேட்க
அவனோ அவரின் கையை பிடித்தவன் " மா.... கொஞ்சம் பேசணும் வாங்க " என்று கூறியவன் தந்தையின் அருகில் அன்னையை அமர வைத்துவிட்டு அவர்களின் அருகில் ஒரு கதிரையில் அமர்ந்தவன் " சுபத்ரா " என்று அழைக்க சுபத்திராவோ உடல் உதறியபடியே வந்து நின்றாள் .
அவனின் தந்தை மகளின் கலங்கிய முகத்தை கண்டு பதறியவர்" சுபி.. என்னமா ஆச்சு ? ஏன் இப்டி .. " என்று கேட்க அவளோ வார்த்தையின்றி தலை கவிழ்ந்தாள் .
சஞ்சீவ் " மா அப்பா ... சுபத்ரா ஒரு பையன லவ் பண்ணுறா .... நாளைக்கு அவங்க வீட்ல போய் நாம பேசணும் " என்று கூற
அவனின் தந்தையோ சட்டென்று முகம் இறுகியவர் கதிரையில் சாய்ந்து அமர்ந்துகொண்டு மகனையும் மகளையும் கண்களாலே பொசுக்கினார்,
அவனின் அன்னையோ மகளை முறைத்தவர் ' அடிப்பாவி ... காலேஜ்க்கு அனுப்பி படிக்க சொன்னா என்ன வேலை பாத்துருக்க .... " என்று வசவு பாடத்துவங்க
சஞ்ஜீவோ அவரை அடக்கியவன் " அம்மா.... திட்டுற நெலமைய எல்லாம் மீறி போயிருச்சு... நாளைக்கு அவங்க கிட்ட போய் பேசி இன்னும் ஒரு மாசத்துக்குள்ள கல்யாணத்த முடிக்கனும் " என்று கூற
அவனின் தந்தையோ " எல்லா முடிவையும் நீயே எடுத்தா பின்ன நா எதுக்கு இருக்கேன் ?எனக்கு என் பொண்ணு எவனையோ கல்யாணம் பண்றதுல இஷ்டம் இல்ல.... நா ஒரு பையன பார்த்து இன்னும் 1 இல்ல 2 வருஷத்துல அவ கல்யாணத்த நா நடத்திக்கிறேன் . என் பொண்ணு நா சொன்னா கேப்பா " என்று கூற
சஞ்ஜீவ் பொறுமையை இழுத்து பிடித்தவன் " அப்பா ப்ளீஸ் கொஞ்சம் நா சொல்றத பொறுமையா கேளுங்க " என்று கூற
அவரோ " ஓஒ நீ சொல்லி நான் கேட்கணுமா ? என்ன சம்பாதிக்கிற திமிர்ல பேசுறியா ? என் பொண்ணு நா சொன்ன கேப்பா டா அவனை மறந்துட்டு நா சொல்றவனை கல்யாணம் பண்ணுவா என் பொண்ணு வாழ்க்கையை நா பாத்துக்குறேன். சொல்லு சுபத்ரா " என்று கேட்க
அவனோ தலையில் அடித்தவன் " சரி அப்டியே அவ குழந்தைக்கான வழியையும் சொல்லிருங்க " என்று பொறுமை இழந்து கத்த அவரோ அதிர்ந்து விழித்தார் ....
இது வரை மகன் மற்றும் கணவனின் நடுவே வரப்போகும் ஊடலை எப்படி தடுக்க என்று யோசித்துக்கொண்டிருந்த அவனின் அன்னையோ இதை கேட்ட நொடி அதிர்ந்தவர் " என்னடா சொல்ற ?" என்று கேட்க சுபத்ராவோ அவமானத்தில் தலையை குனிந்தாள் அவனோ " சுபத்ரா pregnantaa இருக்கா மா ... என்று தொண்டை கறகறக்க அவளின் தற்பொழுதைய நிலையை சொல்ல அடுத்து அவ்வீட்டில் குண்டூசி விழுந்தாள் கூட கேட்கும் அளவிற்கொரு அமைதி நிலவியது.
அவளின் தந்தையோ தளர்ந்து போய் கதிரையில் அமர்ந்தவர் நெஞ்சு வலிப்பது போன்றிருக்க அதை நீவிவிட்டுக்கொண்டார் . சஞ்ஜீவின் அன்னையோ ஆத்திரத்தில் எழுந்தவர் சுபத்ராவை அடிக்க பாய சஞ்சீவ் அவரை தடுத்தே ஓய்ந்து போனான் .
'
அடுத்த 1 மணி நேரத்தில் அவர்கள் வீடே நிசப்தமாய் இருக்க சஞ்சீவ் அன்னை மற்றும் தந்தை இருவரின் கரத்தையும் பிடித்தவன் " இப்போ நம்மகிட்ட நேரம் இல்ல.... அவங்க வீட்ல 80 சவரன் நகை எதிர்பார்க்குறாங்க..... அவளுக்கு காலேஜீலேர்ந்து நா சம்பாதிச்சதை வச்சு என்னால இப்போதைக்கு சேர்க்க முடிஞ்சுது 30 சவரன் தான் .... அம்மா உங்க நகை எவ்ளோ மிச்சம் இருக்கு ? என்று கேட்க அவரோ " ஒரு 20 இருக்கு டா " என்று கூற
அவனோ மனதிற்குள் ஒரு கணக்கை போட்டவன் " செரிமா நா பாத்துக்குறேன் நாளைக்கு அவங்க கிட்ட போய் பேசிட்டு வந்துரலாம் என்றவன் தங்கையின் ஓய்ந்த தோற்றத்தை கண்டு தாள முடியாதவனாய் " அவளை சாப்பிட வைங்கமா .... மதியத்துல இருந்து அவ சாப்பிடல " என்று கூற அவரோ பெருமூச்சு விட்டபடி எழுந்து சென்றுவிட்டார்.
அவனோ தனது அறைக்கு வந்தவன் ஒரே நாளில் தனது வாழ்க்கையே மாறியதை நினைத்து என்ன செய்வதென்று புரியாமல் வருந்தினான் . கைபேசியை எடுத்தவன் கார்த்திக்கிடமிருந்து வந்த குறுஞ்செய்தியை வாசித்தான் ... வீடு விலாசத்தை அனுப்பியிருந்தவன் நாளை வருமாறும் தான் பேசிவிட்டதாகவும் கூறி இருந்தான் .
அதை பார்த்து அதற்கு பதில் அளித்தவன் அதுல்யாவின் எண்ணை நோக்க அவளோ சற்று நேரத்திற்கு முன் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள் " பேசிட்டிங்களா ? என்னாச்சு ? ஆல் ஓகே ? சாப்டீங்களா ?" என்று வரிசையாக குறுஞ்செய்தி வந்திருக்க அவனின் மனம் சற்று லேசானதை போல் இருந்தது . சிறிது யோசித்தவன் அவளின் எண்ணிற்கு அழைக்க அவளோ அடுத்த வினாடியே அவனின் அழைப்பை ஏற்றிருந்தாள் .
அதுல்யா " ஜீவா அங்க எல்லாம் ஓகேவா ? பிரெச்சனை ஏதும் இல்லையே ?" என்று கேட்க அவனிற்கு சற்று ஆசுவாசமாக தோன்றியதோ என்னவோ ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் அவளிடத்தில் ஒப்பித்திருந்தான் .
அந்த பக்கம் இருந்த அதுல்யாவிற்கோ என்ன சொல்வதென்றே தெரியவில்லை... அவளின் வயது அவனிற்கு இதில் ஆலோசனை சொல்வதற்கு உரிய வயதும் அல்ல.... அவளின் மௌனத்தை உணர்ந்தவன் " தேவை இல்லாம ஸ்ட்ரெஸ் ஏத்துறேனோ? "என்று கேட்க
அவளோ " என்னால தீர்வு எதுவும் சொல்ல முடியாது ஆனா கேட்க முடியும்... அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்கீங்க ? அவ்ளோ செய்ய முடியுமா ?" என்று கேட்க
அவனோ மனம்திறந்தான் " தெரியல மா....மிச்சம் 30 சவரன் வாங்கணும் , கல்யாண செலவு மட்டுமே 5 ல இருந்து 8 லட்சமாச்சு ஆகும் .... 20 லட்சம் வேணும்..... என்னோட சேவிங்ஸ் எல்லாமே அந்த 30 சவரன் நகை மட்டும் தான் ....... அதுவும் காலேஜ் சேர்ந்த நாள்லேர்ந்து பார்ட் டைம் பண்ண பணம்... friendoda அப்பா பைனான்சியரா இருக்காரு ...... அவர்கிட்ட வாங்கலாம்... ஆனா அவ்வளவு பெரிய அமௌன்ட் கட்டணும்னா என் salary பத்தாது பர்சனல் லோன் 5 lakhs போடணும் மிச்சது அவர்கிட்ட வாங்கணும் வட்டி ஜாஸ்தி .... என்ன பண்றதுனே புரியல " என்று கூற
அவளோ அவன் ஒரு வாரம் முன்பு onsite செல்வதற்கு நேர்காணல் சென்றதை நினைவு கூர்ந்தவள் .
அதுல்யா " onsite போகுறதுக்கு interview அட்டென்ட் பண்ணீங்க தான என்னாச்சு ?" என்று கேட்க அப்பொழுது தான் அவனிற்கு அது நினைவிற்கே வந்தது ...
சஞ்ஜீவ் " ஒரு நிமிஷம் இரு " என்று தனது மின்னஞ்சலிற்கு சென்றவன் அதை பார்க்க அவனை ஏமாற்றாமல் அவனிற்கு அந்த வேலை கிடைத்ததை உறுதி படுத்தும் மின்னஞ்சல் தலைமை செயலகத்திலிருந்து வந்திருந்தது அதை கண்டு பெருமூச்சு விட்டவன் உற்சாக குரலில்
சஞ்ஜீவ் " நீ சொன்னதுக்கு அப்பறம் தான் பார்த்தேன் அத்து .... கெடச்சுருக்கு ... டபுள் தி salary ... 1 lakh per month 3 years அங்க இருந்தேன் அப்டினா கடனை முடுச்சுட்டு ஓரளவுக்கு சேமிப்போட வரலாம் வரும்போது சம்பளம் அதிகமாவும் ஆயிருக்கும். " என்று கூற
அவளோ அவனுடைய நிலை புரிந்தாலும் 3 வருடங்கள் பார்க்காமல் இருக்க வேண்டுமே என்று நினைத்து கலங்க அவனோ அவளின் மௌனத்தை அப்பொழுதே உணர்ந்தவன் " என்னாச்சு அத்து ?" என்று கேட்க
அவளோ " ஒண்ணுமில்ல.... எப்போ இங்க வருவீங்க " என்று கேட்க
அவனோ அவளின் குரல் பேதத்தை உணர்ந்தவன் அங்கு சென்று பேசிக்கொள்ளலாம் என்று நினைத்தவன் " இன்னும் 3 நாள்ல எப்படியும் நா கெளம்பனும் அத்து .... onsite வேற confirm ஆகி இருக்கு வந்து பேசுறேன் " என்று கூற
அவளோ ஒரு சிரிப்புடன் " சரி ஜீவா வாங்க ஆனா அதுக்கு முதல்ல போய் சாப்பிடுங்க எப்படியும் சாப்ட்ருக்க மாட்டீங்க " என்று கூறி வைக்க அவனும் ஒரு இதமான மனநிலையுடன் வைத்தான் .
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro