Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

14


சர்வேஷ் சஞ்ஜீவிற்கு அழைக்க அவனோ அப்பொழுது தான் பயிற்சி கூடத்திலிருந்து வெளியே வந்தவன் பல நாட்களிற்கு பின் வந்த தனது உயிர் நண்பனின் அழைப்பில் சற்று மகிழ்ந்தவன் எடுத்து காதில் வைத்து " டேய்ய் சர்வா என்னடா திடீர்னு கால் பண்ணிருக்க ?" என்று கேட்க

அவனோ சற்று தயங்கியவன் " மச்சான் சு.. சுபத்ராவை hospitalla பாத்தேன் " என்க

அவனோ தங்கைக்கு உடல் சுகவீனம் ஆகி விட்டதோ என்று பதறியவன் " என்னாச்சுடா சுபிக்கு ?அம்மா எனக்கு ஏதும் கால் பண்ணலையே நல்லா இருக்கா தான " என்று கேட்க

சர்வேஷோ சற்று தயங்கியவன் " இதை எப்படி சொல்றதுன்னு தெரியல மச்சான் ஆனா... சுபத்ரா இங்க abortionkaaga வந்துருந்தா ... அவ கர்பப்பை ரொம்ப பலவீனமா இருக்கு கருவை கலைச்சுட்டா அவ உயிரே கூட போகும் " என்று கூற

சஞ்ஜீவோ அவனது தங்கை கர்பமாக இருக்கிறாள் என்று கூறியதிலேயே முற்றும் உடைந்திருந்தான் .

சஞ்ஜீவ் சர்வேஷ் கூறியதை கிரஹிக்கவே சற்று நேரம் எடுத்துக்கொண்டவன் தொண்டை அடைப்பது போல் இருக்க சற்று தொண்டையை செருமிக்கொண்டவன் " நீ... நீ சரியா பார்த்திருக்க மாட்ட சர்வேஷ் " என்று கூற

அவனோ " ஏய்ய் உன் தங்கச்சிய எனக்கு தெரியாதா??? மச்சான் உன் நெலம எனக்கு புரியுது இதை எப்படி உன்கிட்ட சொல்றதுன்னு தெரியாம முழுச்சுட்டு இருந்தேன் ஆனா உண்மை இதான் ... இன்னும் லேட் பண்ணா... ரொம்ப கஷ்டம்... பார்த்துக்கோ " என்று கூற

சஞ்ஜீவோ அவன் கூறியதை உள்வாங்கியவன் மனதில் எழுந்த வலியை முழுங்கிவிட்டு அப்படியே வேரறுந்த கொடியாய் தனது இருசக்கர வாகனத்தின் மேல் சாய்ந்து விட்டான் . அந்த நிமிடம் அவனுக்கு இதை எப்படி கையாள்வது என்று சுத்தமாக தெரியவில்லை . அவனிற்கு இந்த பிரச்னைக்கான தீர்வு தேவை இல்லை அனால் இப்பொழுது இருந்த மனநிலைக்கு அவனை நிலைப்படுத்த ஒரு தோள் தேவைப்பட்டது ... ஒரு ஆறுதல் தேவைப்பட்டது . இதே மனநிலையில் ஊருக்கு சென்றால் அவன் பிரச்சனையை கை ஆளும் விதம் மோசமாக இருக்கும் என்று நன்றாகவே உணர்ந்திருந்தான் .

அவனிற்கு அப்பொழுது கண் முன் மின்னி மறைந்ததென்னவோ அத்துல்யாவின் முகம் தான் .

தனது மேல் அதிகாரிக்கு அழைத்து இரண்டு நாட்கள் விடுமுறை கேட்டவன் எதை பற்றியும் யோசியாமல் அதுல்யாவின் கல்லூரியை நோக்கி வாகனத்தை செலுத்தினான் .

அவளது கல்லூரியின் வாயிலிற்கு வந்து நின்றவன் அவளிற்கு தொடர்பு கொள்ள அவளோ அப்பொழுது தான் உணவு இடைவெளிக்காக வகுப்பறையை விட்டு வெளியே வந்தவள் சஞ்ஜீவின் அழைப்பை கண்டு புன்னகைத்தாள் .

புன்னகையுடன் அவனது அழைப்பை ஏற்றவள் " என்ன சார் ..திடீர்னு என் ஞாபகம் வந்துருக்கு ?" என்று கேட்க

அவனோ அவள் குரலை கேட்கும் வரை அவளை பார்ப்பது மட்டுமே குறியாக வைத்து வந்தவன் அவள் குரல் கேட்ட நொடி தயங்கினான் .... என்னவென்று கூறி அழைப்பது ? என்ன தான் அவள் அவனின் சரி பாதியாகப்போகிறவள் என்றாலும் தங்கையின் நடத்தையை குறித்து எவ்வாறு அவளிடம் பகிர்ந்து கொள்வது ? அவனது குடும்பத்தை பற்றி அவளிற்கு இருக்கும் மதிப்பை அவனே குறைப்பது போன்றதல்லவா அது அமையும் ... என்று சிந்தித்தவன் மௌனமாய் இருக்க

அவனின் மௌனத்திலேயே அவன் நல்ல மனநிலையில் இல்லை என்பதை உணர்ந்தவள் " ஜீவா என்னாச்சு பா ? ஆர் யு ஓகே ?" என்று கேட்க

அவனோ தொண்டையை செருமி " .... அம்மு ... " என்று கூற

அவன் குரல் கரகரத்த வெளியே வந்ததை உணர்ந்தவள் சற்றே பதற்றமடைந்து" என்னாச்சு ஜீவா ? எங்கே இருக்கீங்க நீங்க ?" என்று கேட்க

அவனோ தயக்கமாகவே " உன் காலேஜ்க்கு வெளிய தான் நிக்குறேன் .... உன்னால வெளிய ... " என்று கேட்க

அவளோ " கிவ் மீ 10 மினிட்ஸ் permission கேட்டுட்டு உடனே வரேன் " என்றவள் சிட்டாய் பறந்து சென்று தனக்கு உடல் உபாதை என்று பொய் கூறி அனுமதி வாங்கியவள் மூச்சு வாங்க வெளியே ஓடிவந்தாள் .

அவள் தவிப்புடன் ஓடி வந்ததை பார்த்தவன் அவள் அருகில் செல்ல போக அவளோ அதற்குள் அவனை நெருங்கி இருந்தவள் அவனின் கண்களையே தவிப்புடன் நோக்கினாள் .

அவனின் கலங்கிய முகமும் ஒளி இழந்த கண்களும் துடிக்கும் உதடுகளும் அவன் ஏதோ ஒரு பிரச்னையில் இருப்பதை உணர்த்த அவளோ சுற்றுப்புறத்தை பார்த்தவள் அவன் கையை அழுத்தி பிடித்து " வீட்டுக்கு போய் பேசலாம் " என்று கூறினாள்.

அவனோ அப்பொழுது இருக்கும் மன நிலைக்கு பொது இடத்தில இருப்பது சரி என்று தோன்றவில்லை என்றாலும் அவனது வீட்டிற்க்கு அழைத்து செலவு தயக்கமாக இருந்தது ... அவளின் அத்தையின் வீடல்லவா அது .

சஞ்ஜீவ் தயங்கி " இல்ல வேற எங்கயாவது ... " என்று கூற

அவளோ அவனை அழுத்தமாக பார்த்தவள் " அத்தை ஊருக்கு போய்ட்டாங்க அப்டியே யாரும் பார்த்து சொன்னாலும் எனக்கு எப்படி handle பண்ணனும்னு தெரியும் .... போங்க " என்று கூற அவன் ஒரு வித அலைபாயும் மனநிலையிலேயே சென்றான் .

அவர்கள் வீட்டிற்கு வந்து சேர அதுல்யாவோ எவ்வித தயக்கமுமின்றி மாடியேற துவங்க சஞ்சீவ் சுற்றி பார்த்தவன் யாரும் அவர்களை கவனிக்கவில்லை என்று உறுதிப்படுத்தியபடி மேலே சென்றான் .

அவள் அவனின் அந்த ஒற்றை அறைக்கு முன் நிற்க அதை திறந்து உள்ளே அழைத்தவன் அவள் உள்ளே நுழைந்ததும் உள்ளே வந்து தலை குனிந்தபடி நின்றான் .

அதுல்யா அவனின் அருகில் வந்து அவன் கன்னத்தை பற்றியவள் " என்ன பா ?" என்று கேட்க

அவனோ அவளை வாரி அணைத்துக்கொண்டவன் அவளின் தோள்வளைவில் முகம்புதைத்தபடி கண்ணீர்விட துவங்கி இருந்தான் .

அதுல்யாவோ அவனின் கண்ணீரில் பதறியவள் அவன் கன்னத்தை பற்றி முகத்தை பார்க்க முயல அவனோ அவளை மேலும் இறுக்கமாக கட்டிக்கொண்டவன் " please " என்று கூற அவளோ அவனை விளக்குவதை நிறுத்தி அவனின் பிடரி முடியை வருடிக்கொடுத்தாள் . அவளால் இன்னுமே தன்னவன் அழுகிறான் என்று நம்ப முடியவில்லை .

சற்று நேரத்தில் ஆசுவாசமானதும் அவளை விட்டு விலகியவன் முகத்தை அழுத்தி துடைத்தவன் அவளை பார்க்க அவளோ அவனை அங்கிருந்த அவனின் கட்டிலில் அமர்த்தியவள் அவனுக்கு சென்று தண்ணீர் எடுத்து வர எழ அவனோ அவள் கையை இறுக்கி பிடித்தவன் வேண்டாம் என்று தலை அசைக்க அவளும் அவன் அருகில் அமர்ந்தாள் .

சற்று நேரம் நிலவிய கனத்த மௌனத்தின் பின் அவள் புறம் திரும்பியவன் அவள் ஏதோ கேட்க வர " என்னாச்சுன்னு தயவு செஞ்சு கேக்காத அம்மு " என்று கூற அவளுக்கோ சிறிது சினம் துளிர்த்தது .

அவனின் முகத்தை பார்த்தவள் " என்ன பிரெச்சனைனு சொல்லாம எப்படி solution சொல்ல முடியும்னு நெனைக்குறீங்க ?" என்று கேட்க

அவனோ அவளை பார்த்தவன் "இந்த பிரச்சனைக்கு solution சொல்ற அளவுக்கு உனக்கு வயசில்லை அம்மு ... நான் பாத்துக்குறேன் " என்று கூற அவளோ முகம் சுருக்கினாள் .

சஞ்ஜீவ் விட்டத்தை பார்த்தவன் " இதை எப்படி சரி பண்றதுனு எனக்கு சத்தியமா தெரியல அம்மு .... பயமா இருக்கு ... நான் ஏதாச்சு தப்பா பண்ணா அது வாழ்க்கையவே திசை திருப்பிரும் ....இப்போ எப்படி இதை நான் சரி பண்ண போறேன் .. எப்படி இதுல இருந்து மீள போறேன் இதுல நா என்னென்ன இழக்கப்போறேன் எதுமே ...... " என்று கூற

அவளோ அவனின் கையை இருக்க பற்றியவள் அவன் வாயை கை கொண்டு மூடி " ஷூ .... கொஞ்சம் அமைதியா இருங்க "என்று கூற அவனோ அவளை கலக்கம் தீராத விழிகளுடன் தான் பார்த்தான் .

அவளின் கண்களை பார்க்க அவளோ அவனின் தலையை தனது மடியில் சாய்த்தாள் அவன் நெற்றியை நீவி விட்டபடி " solution இல்லாத problem இருக்கா என்ன அதும் என் ஜீவாவால solve பண்ண முடியாததுனு ?? ம்ம் ?? அமைதியா யோசிங்க ... சிலதை solve பண்ண நாம யோசிக்கணும் ஆனா சிலதுக்கு இதை மட்டும் தான் பண்ண முடியும்ன்ற ஒரு சூழ்நிலை இருக்கும் ... அதை accept பண்ணிட்டு போயிரணும் .... solve பண்ண உங்களுக்கு தேவை இருக்கானு பாருங்க .. இல்லையா ஒரு வழி தான் இருக்குன்னா அதை செய்ய மனசை prepare பண்ணிட்டு போங்க .... " என்று கூற

அவனோ தற்பொழுது எதையும் யோசித்து குழம்புவதற்கு அங்கே சென்று சுபத்ரா காதலிப்பவன் பற்றி தெரிந்து கொண்டு திருமணத்தை நடத்துவதற்கான ஆயத்தங்களை செய்ய வேண்டுமென்று மனதில் உருவேற்றிக்கொண்டவன் அதன் பின்னே நெற்றி சுருக்கங்கள் விரிய அதுல்யாவை நோக்கியவன் அவளை பார்த்து புன்னகைத்தான் .

அவன் புன்னகையில் அப்பொழுதே மனம் தெளிந்தவள் சற்று குறும்பு தலை தூக்க " அப்பறோம் பாஸ் உயிரை குடுத்து சொற்பொழிவு ஆத்து ஆத்துன்னு ஆத்துனதுல இப்போ எனக்கு வயிறு பசிக்குது சாப்பிட ஏதாச்சு கிடைக்குமா ?" என்று கேட்க

அவனோ மணியை பார்த்தவன் அப்பொழுதே அவள் சாப்பிடாமல் தான் அழைத்ததும் ஓடி வந்திருக்கிறாள் என்று புரிய அவள் மேல் இருந்த காதல் மென்மேலும் பெறுக அவளை புன்னகையுடன் தலையில் லேசாக தட்டியவன் " எப்போ பாரு சோறு சோறு ... வா " என்று கூற

அவளோ முகம் சுருக்கி " அப்போ எனக்கு பசிக்கும்ல " என்றபடி அவனை பின்தொடர அவனோ பின்னால் திரும்பி அவளை பார்த்தவன் அவள் குழம்பிய முகத்தை கண்டு அவளை நெருங்கியவன் சற்று குனிந்து மெருதுவாக அவள் நெற்றியில் முத்தமிட்டவன் அவளை ஒரு முறை அழுத்தமாக பார்த்துவிட்டு செல்ல அவளோ அவன் முத்தமிட்டது பிரம்மயோ என்று நினைத்து உறைந்தவள் அவனின் ஈர முத்தத்தின் மிச்சத்தை உணர்ந்து வெட்கம் மேலிட அவன் பின் சென்றாள் .

அவனோடு ஒரு உணவகத்திற்கு வந்தவள் அவனையும் உண்ண வைத்து மேலும் கொஞ்சம் மனதளவில் அவனை திடமாக்கிய பின்பே விடுதிக்கு அவனுடன் சென்றாள் . விடுதியின் வாசலில் அவன் இறக்கி விட்டதும் அவனை பார்த்தவள் அவன் தோளை பற்றி "தைரியமா போய்ட்டு வாங்க ஜீவா " என்று கூற

அவனும் தலை அசைத்தவன் வண்டியை திரும்பியபடி செல்ல அவளோ அவன் முன் தைரியமாக இருந்தவள் அவன் சென்றதும் அவன் சென்ற திசையில் பார்வையை பதித்தவள் ஒரு பெருமூச்சை விட்டு விடுதிக்கு சென்றாள் . சஞ்ஜீவோ தனது தாய்க்கு அழைத்தவன் " அம்மா நா சுபி கல்யாண விஷயமா ஊருக்கு வரேன் நாளைக்கு அவளை காலேஜ்க்கு அனுப்ப வேணாம் " என்றவன் சர்வேஷிடம் அவளுடன் வந்த ஆடவனின் தகவல்களை வாங்கியவன் அவனை பற்றி அவனது சில நண்பர்களை வைத்து செல்லும் வழியிலேயே விசாரித்து முடித்திருந்தான் .

என்ன தான் அவனை பற்றி நல்ல விதமாக தகவல்கள் வந்தாலும் அவனின் தாய் மற்றும் தந்தையின் குணாதிசயங்கள் அவனை உறுதியதென்னவோ உண்மை . பின் இப்பொழுது தனக்கு அவகாசமும் இல்லை என்று உணர்ந்தவன் நாளை சுபத்ராவை வெளியில் அழைத்து சென்று அவனுடன் பேச வேண்டும் என்று முடிவெடுத்தபடி அடுத்தடுத்த திட்டங்களை மனதில் வடித்தபடியே சென்றான் . 

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro