12
பாத்திரங்களை எடுத்த சஞ்ஜீவ் அடுப்பறைக்கு சென்று அதை துலக்க செல்ல அதுல்யாவோ அவனை விளக்கி தான் செய்ய முனைய சஞ்ஜீவோ அவள் கையை தடுத்தவன் " என்ன நானா இருக்க விடு அம்மு " என்று கூறியபடி பாத்திரங்களை துலக்க துவங்கிவிட்டான் .
அதுல்யா அவனை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தபடி சிவத்தமிகாவிற்கு பாலை சூடு செய்தபடி சென்றுவிட்டாள் . சிவாத்மிகா பால் குடித்த சற்று நேரத்தில் தூக்கத்திற்கு கண்ணை கசக்க அதுல்யா அவளை படுக்கியரைக்கு தூக்கி செல்ல முனைய அவளோ " ப்பா " என்று முனங்க அடுப்படியிலிருந்து வந்த சஞ்ஜீவ் மகளை கைகளில் அள்ளிக்கொண்டு அவளது முதுகை தட்டிக்கொடுக்க துவங்கினான்.
அதுல்யா அவன் கையிலிருந்து மகளை தூக்க போக அவளோ சிணுங்கியபடி அதுல்யாவின் கையை விலக்கியவள் தந்தையின் கழுத்தை கட்டியபடி முகத்தை அவன் தோளில் புதைத்துக்கொண்டாள் செல்ல சிணுங்கலுடன் . தந்தை மற்றும் மகளை பார்த்த அதுல்யா மனதில் மகிழ்ச்சி எழுந்தாலும் இத்தனை வருடங்களாய் பெற்றவர்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமலும் அவர்களுடன் இருக்க முடியாமலும் தனியே ஆறு மாத குழந்தையுடன் வேலை பார்த்து அவளை கவனித்ததனைத்தும் மனக்கண் முன் வந்து செல்ல அவள் அறியாமலே வந்து விழுந்தது வார்த்தைகள் "கூடவே இருக்குறதால என் அருமை உனக்கும் தெரியலேல ? உன் அப்பா எப்போ போறார்னு சொல்லாம கொள்ளாம மறுபடி எங்கேயாச்சு போவார் அப்போ தெரியும் உனக்கு " என்று கூற
சஞ்ஜீவ் அவளை கூர்ந்து பார்த்தவன் ஏதும் கூறாமல் மகள் உறங்கியதும் அவளை படுக்கையில் விட்டுவிட்டு வர அவளோ அவனின் பார்வையில் முதுகுத்தண்டு சில்லிட அந்த இடத்திலேயே வேரூன்றி நின்றுவிட்டாள் . மகளின் இரண்டு பக்கமும் தலையணையை வைத்து விட்டு வெளியே வந்தவன் பார்த்ததென்னவோ அதே இடத்தில வேரூன்றியபடி நின்றிருந்த அதுல்யாவை தான்.
அவளின் கண்களில் தவிப்பும் குற்றவுணர்வும் சரிவிகிதமாக இருக்க அவனோ அவள் எதிரில் வந்து நின்றவன் " என்ன தான் டி உன் பிரச்சன ?"என்று கேட்க
அவளோ அவனை நிமிர்ந்து பார்க்காமல் திரும்ப பார்க்க அவனோ அவளை பற்றி திருப்பியவன் " பொறுமையை ரொம்ப சோதிக்குற அதுல்யா . நா பேசுனது , உன்ன கேக்காம agreement sign பண்ணிட்டு foreign போனது எல்லாமே தப்பு தான் ... வலிக்க வலிக்க மூணு வருஷமா போன் அட்டென்ட் பண்ணாலும் பேசாம என்ன வதைச்சுட்ட இப்போ குழந்தை முன்னாடி குத்தி காமிச்சு பேசிட்டு இருக்க ... என்ன தான் டி வேணும் உனக்கு ?" என்று கேட்க
அவளோ அவனை நிமிர்ந்து பார்த்தவள் சம்மந்தமே இல்லாமல் " திரும்பி வந்தது காதலுக்காகவா கடமைக்காகவா ஜீவா ?" என்று கேட்க
அவனோ அவளை குழப்பமாக பார்த்தவன் " புரியல ?" என்று கேட்க
அவளோ " நீங்க கடமை தவறாம இருக்குறதுக்காக எந்த extentkum போவீங்களே அதான் இப்போ திரும்பி வந்தது என் மேல இருக்குற காதல இல்ல கடமையானு கேட்டேன் " என்று கேட்க
அவனோ அவளை ஆயாசத்துடன் பார்த்தவன் " ஏன் அம்மு இப்டிலாம் கேக்குற ?" என்று கேட்க
அவளோ அவன் கையை விலக்கியவள் " ஏன் ஜீவா அப்டி பண்ணீங்க ?" என்று கேட்க
அவனோ தலையில் கையை வைத்தவன் " ஒரு கோவத்துல சொன்ன வார்த்தைக்கு இன்னும் எத்தனை வருஷம் தான் என்ன கொல்லுவ " என்று கேட்க
அவளோ அவனை பார்த்தவள் அவன் கண்களில் இருந்த யாசிப்பாய் பார்த்து அவன் கன்னத்தை பற்றியவள் தழுதழுத்த குரலுடன் " இதோ இப்போ கூட உங்க கண்ணை பார்த்தா எல்லாத்தையும் மறந்துட்டு ஏன் டா இப்டி பண்ண உன்ன எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமான்னு சொல்லி அழுக தோணுது .... ஆ... ஆனா... எங்க மறுபடி உங்கள எல்லாத்துலயும் சார்ந்து இருந்துட்டு மறுபடி இப்டி விட்டுட்டு போயிருவீங்களோனு ... ப ... பயமா இருக்கு " என்று சொல்ல
அவனோ அவள் தலையை தன் மார்பில் அழுத்தியவன்" விட்டுட்டு போக மாட்டேன் ... நம்பு அம்மு ப்ளீஸ் " என்று கூற அவளோ அவனை நிமிர்ந்து பார்த்தவள் தனது பிறவி குணமான ஒதுக்கி வைத்துவிட்ட ஒருவரை மீண்டும் வாழ்க்கைக்குள் என்றும் இணைக்க கூடாதென்ற ஒன்றை கைவிட முடியவில்லை . ஆழியை போன்றதொரு அடங்காத காதல் அவன் மேல் இருந்தாலும் அவன் அறியாது அவனை சார்ந்தவர்களால் அவள் கண்டா வலி மீண்டும் அவனோடு இயைந்து வாழ்வதை நினைத்தாலே அவளை அச்சப்படுத்தியது .
அவள் கண்கள் வழி அவள் மனதை படித்தவன் அவள் இமையில் முத்தமிட்டு " தடவை எடுத்துக்கோ வெயிட் பண்றேன் ஆனா உன் கூடவே உன் பக்கத்துலயே இப்டி கட்டிபிடிச்சுட்டு காத்திருக்கேன் " என்று கூற அவளோ வெளிவர துடித்த சிரிப்பை அடக்கியபடி அவனை பார்த்தவள் உள்ளே செல்ல அவனோ குறும்பு கொப்பளிக்கும் குரலில் " வேணுனா நீ நம்புற வரைக்கும் இந்த நீ ஒரு ரூம் நா ஒரு ரூம் ல படுக்குறது ... கீழ படுக்குறது இதெல்லாம் பண்ணலாமா ?" என்று கேட்க
அவளோ அவனை புறம் திரும்பாமல் சிரித்தபடி சென்றவள் படுக்கை அறை கதவை திறந்தபடி "உள்ளே வா என்னும் விதமாக சைகை காட்ட சிரிப்புடன் உள்ளே வந்தவன் சிவாதமிகாவின் ஒருபுறம் படுத்துக்கொள்ள அவளோ உடைமாற்றி வந்தவள் சிவாதமிகாவின் இன்னொருபுறம் படுத்துக்க்கொண்டாள் .
இருவரும் சிவாத்மிகாவின் மேல் ஒரு கையை வைக்க சஞ்ஜீவ் சிறிது நேரத்தில் அவள் கை மேல் தனது கையை வைக்க அவளோ அவன் கையை ஆழ்ந்து நோக்கினாள் . அதை உணர்ந்தவன் அவள் கையை இன்னும் இறுக்கி பற்றியபடி " தூங்கு ... இப்போ பிடிச்சதை என்னைக்கும் விட மாட்டேன் " என்று கூறியபடி கண்களை மூடிக்கொள்ள அவளோ அவனின் வரவில் எழுந்த நிம்மதியில் பல நாட்கள் கழித்து நிர்ச்சலனமாக உறங்கினாள் .
அவனோ அவள் நிம்மதியான முகத்தை பார்த்தபடி மெல்ல மெல்ல நித்திரைக்கு சென்றான் இனி கொஞ்சம் கொஞ்சமாக மனைவியுடன் மீண்டுமொரு காதல் வாழ்வை வாழ்ந்துவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் . அவனது அலைபேசியில் ஒரு குறுஞ்செய்தி வந்ததன் அடையாளமாய் மின்னி மறைய அவன் முகப்புப்பக்கத்தில் இருந்தது அவள் கண்ணில் பூரிப்புடன் ஒரு கோப்பையை பிடித்திருக்க அவள் அருகில் நின்றிருந்தான் அவளை ரசனையாக பார்த்துக்கொண்டிருந்த சஞ்ஜீவ் .
அன்று ....
சஞ்சீவும் அதுல்யாவும் அந்த வாரம் வழக்கம் போல பூங்காவில் சந்தித்திருக்க சஞ்ஜீவிடம் அதுல்யா ஒரு புகைப்படத்தை காட்டினாள் .
அதுல்யா " சஞ்ஜீவ் இந்த போட்டோ பாருங்களேன் இது தான் நான் முதல் முதல்ல ஒரு போட்டிக் கு பண்ண மோடெல்லிங் போட்டோ " என்று கூறி காட்ட அதை ஆர்வமாக வாங்கி பார்த்தவனின் முகம் ஒவ்வாமையை சுருங்கியது .
அதில் ஒரு இடுப்பிற்கு சற்று மேலிருந்த கிராப்டோப்பிலும் ஒரு பென்சில் பிட் முட்டிக்கு மேலான ஸ்கிர்ட்டில் நின்றிருந்தாள் அதுல்யா . அந்த உடை அவளிற்கு மிகவும் அழகாக தான் இருந்தது அனால் அவன் என்ன தான் நான்கு வருடமாக சிங்கார சென்னையில் படித்து 3 வருடமாக வேலை பார்த்தாலும் சிறு வயதிலுருந்து சற்று கட்டுப்பெட்டியான சூழலில் வளர்ந்து விட்டவனுக்கு இத்தகைய அரைகுறை ஆடை நாகரிகம் இன்னும் ஒவ்வாமையை கொடுப்பதாக தான் இருந்தது .
அதுல்யா அது போல் சில புகைப்படங்களை காட்ட சஞ்ஜீவோ அடக்க நினைத்தும் முடியாதவனாய் " இப்டி ட்ரேஸ்ல தான் மோடெல்லிங் பண்ணனுமா அம்மு ?" என்று கேட்க
அவளோ அது வரை இருந்த இலகுத்தன்மை மறைய அவனை நிமிர்ந்து பார்த்தவள் " இந்த மாதிரி ட்ரேஸ்ன்னா ?" என்று கேட்க
அவனோ முகத்தில் அப்பட்டமாய் பிடித்தமின்மையை காட்டி " இந்த மாதிரி இடுப்பு கால் எல்லாம் தெரியுற மாதிரி .... இப்டி வேணும்னே expose பண்ற மாதிரி டிரஸ் போடணுமா என்ன தேவையில்லாம attention grab பண்ற மாதிரி " என்று கேட்க
அவளோ அவனை கூர்மையாக பார்த்தவன் " போட்டா என்ன ? என் உங்க கண்ணுலாம் நல்லவிதமா பார்க்காதா ?" என்று கேட்க
அவனோ " ப்ச் இதோ feminism பேச ஆரம்பிச்சுட்ட . இப்டி எதுக்கு எஸ்பிஓசே பண்ற மாதிரி போடணும் அப்பறோம் என்ன cyber abuse பண்ணிட்டான் தப்ப பாத்துட்டான்னு சொல்லணும் . இதுக்கு மோடெல்லிங் அண்ட் மார்க்கெட்டிங் வேற " என்று சொல்ல
அவளோ கையை கட்டியபடி அவனை பார்த்தவள் " இப்போ இந்த டிரஸ் பிரச்னையா இல்ல நா இந்த டிரஸ் போட்டுட்டு மோடெல்லிங் பண்றது பிரெச்சனையா ?" என்று கேட்க
அவனோ தலையை அழுத்தி கோதியவன் " நா உன்ன இது பண்ணு பண்ணாதனு இது வர control பண்ணதில்ல அம்மு " என்று கூற
அவளோ அழுத்தமாய் நான் கேட்டதற்கு இது பதில் அல்ல என்னும் விதமாய் பார்க்க அவனோ அவள் கண்ணை தவிர்த்து வேறு பக்கம் பார்த்தவன் " எனக்கு இதுல அவ்ளோ இஷ்டம் இல்ல ...... maybe நான் வளர்ந்த சூழ்நிலையா இருக்கலாம் ..... வீட்டுக்குள்ள கூட சேலை காட்டியே இருக்குற அம்மாவை பார்த்து வளந்துட்டேன் சட்டுனு accept பண்ண முடியல " என்று கூற
அவளோ புருவம் உயர்த்தியவள் " சோ... நானும் சேலைய சுத்திட்டு உங்க பின்னாடியே சுத்தணும் ? எனக்குன்னு ஒரு ஆசை ,ambition எதுமே இருக்க கூடாது ?" என்று கூற
அவனோ அதில் கோபமுற்றவன் " ஏய்ய் இப்போ நான் என்ன மத்தவனை மாதிரி இதை போடாத அதை போடாத இதை பண்ணாத அதை பண்ணாதனு control பண்ணேனா ?" என்று கேட்க
அவள் சளைக்காத கோபத்துடன் " அப்டி சொல்லல ஆனா indirectaa அதை தான் expect பண்றீங்க சரியான backward திங்கிங் " என்று கூற
அவனோ " இன்னும் அந்த பழைய culture உன் பாஷைல சொல்லனும்னா பக்கவார்ட திங்கிங் or culturela ஊறிப்போனவன் தான் மா நான் . உன்ன நான் எதையும் விட சொல்லல மாறவும் சொல்லல என்னோட கருத்தை சொன்னேன் அவ்ளோ தான் கேக்க கஷ்டமா இருந்த கெளம்பு " என்று கூற
அவளோ அதன் பின் ஏதும் விவாதிக்கதொன்றாதவள் விறுவிறுவென்று அங்கிருந்து நடந்து வந்துவிட்டாள் . அவனோ காதலிக்க துவங்கிய ஆறு மாதத்தில் வந்த முதல் ஊடலில் சற்று சுணங்கியவன் அவளிற்கு தொடர்பு கொள்ள முயன்றாலும் முயற்சி என்னவோ தோல்வியை தான் தழுவியது. அவனிற்குமே தான் பேசியது அதிகப்படி என்று தெரியும் . அவன் அழைத்து பார்த்தான் எடுக்காமல் தவிர்த்தால் , மன்னிப்பு கேட்டு குறுஞ்செய்தி அனுப்பினான் படித்துவிட்டு பதில் சொல்லாமல் விட்டாள் , வேலைக்கு நடுவில் அவள் கல்லூரி முடியும் நேரத்திற்கு அவனால் வரவும் முடியாது போக ஒரு வாரமாக பேசாமல் மௌனத்தால் கொன்றவளால் துவண்டு தான் போனான் சஞ்ஜீவ் .
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro