11
அந்த வாரம் அமைதியாக கழிந்தது . அதன் பின் அதுல்யா விடுதிக்கு கிளம்பி சென்று விட சஞ்ஜீவ்வும் தனது வேளைகளில் கவனமாகி இருந்தான் . இருவருக்குள்ளும் காதல் என்று கூறிவிட்டதால் ஒன்றும் இமாலய மாற்றம் நிகழ்ந்து விட வில்லை. எப்பொழுதும் போல பார்க்கும் பொழுதுஹ் பேசிக்கொண்டனர் நேரம் கிடைக்கும் நேரத்தில் குறுஜெய்தி அனுப்பிக்கொண்டனர் . அந்த ரகசிய ரசனைகள் கலந்த பார்வை மட்டுமே மாறி இருந்தது. .
அதுல்யா விடுதிக்கு சென்று நான்கு நாட்கள் கடந்திருக்க சஞ்ஜீவ் தனது அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான் . அப்பொழுது அவனது அலைபேசி அடிக்க அதை எடுத்தவன் அத்துலயாவின் எண்ணை பார்த்து ஒரு நொடி புருவம் சுருக்கியவன் எடுத்து காதில் வைத்து " வேலை பாத்துட்ருக்கேன் அப்புறம்... " என்று கூறி முடிப்பதற்குள் அவளின் விசும்பல் சத்தம் அவனது பேச்சை தடைப்படுத்தி இருந்தது .
அவளின் விசும்பலில் இருந்தே அவள் அழுகிறாள் என்று அறிந்து கொண்டவன் பதட்டம் எழுந்தாலும் தானும் பதற்றமடைந்தால் அவளை தேற்றுவார் யார் என்று எண்ணியவன் " ஏய்ய் அத்து என்னாச்சு மா ?" என்று கேட்க
அவளோ " எனக்கு... எனக்கு .... உங்கள பார்க்கணும் " என்று கூற
அவனோ என்ன ஆனதோ ஏதானதோ என்று பதறியவன் முயன்று குரலை நிதானமாக்கி " என்ன ஆச்சுன்னு சொல்லாம நீ அழுதுகிட்டே இருந்தா நா என்னனு நெனைக்குறது ? என்ன நடந்துச்சுனு சொல்லு மா "
என்று கூற
கொஞ்சம் கொஞ்சமாக விசும்பல் மட்டுப்பட " எனக்கு உங்கள பாக்கணும் ... " என்று மெல்லிய குரலில் மீண்டும் கூற
அவனோ நேரத்தை பார்த்தவன் அது ஒன்பது என்று காட்ட அடுத்த ஒரு மணி நேரம் உணவு நேரம் என்பதை உணர்ந்தவன் எனினும் தான் அவள் கூப்பிட்டவுடன் அங்கே சென்றால் எந்த பிரச்னை வந்தாலும் தன்னை தான் தேடுவாள் என்று நினைத்தவன் ஓட துடித்த கால்களை கட்டுப்படுத்தி "அம்மு ... என்ன நடந்துச்சுனு சொல்லு டா " என்று கூற
அவன் அவ்வப்பொழுது அவளை அமைதிப்படுத்த கூறும் அம்மு அப்பொழுதும் போல் அன்றும் அவளை அமைதிப்படுத்தியது .
விசும்பியவள் பின் " எனக்கு... எனக்கு.. சின்ன வயசுல இருந்தே மாடெல்லிங் பண்ண ரொம்ப ஆசை . இன்னைக்கு.. இன்னைக்கு... culturals கு பேர் எடுக்க வந்தாங்க . நான் fashion walk கு பேர் குடுத்தேன் . அவங்க... ஆடிஷன்க்கு கூப்பிட்டாங்க நான் போனேன் .. ஒழுங்கா தான் ஜீவா போஸ், வாக் எல்லாம் பண்ணேன் செலெக்ட்டும் ஆனேன் ஆனா அங்க இருக்குற சீனியர் ஒருத்தி ... நான் வாத்து மாதிரி குள்ளமா இருக்கேனாம் ... என் முகம் அழகா இல்லயாம் நான் .. நான் பேஷன் walk பண்ணேன்னா ஷோ பிளாப் ஆயருமாம் ... எப்படி தான் இப்டிலாம் செலக்ட் பண்றங்கனு தெரியலைன்னு சொல்லிட்டு போயிட்டா ஜீவா ... நான் ஏன் இப்டிலாம் பேசுறீங்கன்னு கேட்டதுக்கு நக்கலா சிரிச்சுட்டு போய்ட்டாங்க .... ரொம்ப கஷ்டமா இருக்கு " என்று கூற அவனிற்கோ கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது .
அவளிற்கு இந்த மோடெல்லிங் செய்வதில் இருக்கும் ஆர்வம் அவன் அறிந்தது தானே ... அது மட்டுமல்லாமல் அவள் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே சிறு சிறு மோடெல்லிங் வேலைகளும் செய்திருக்கிறாளே. அவனிற்கு இதில் அவ்வளவு ஈடுபாடும் இல்லை விருப்பமும் இல்லை எனில் அவளின் கனவு அவனிற்காக தடைபடுவதை அவன் விரும்பியதும் இல்லை .
அவள் மீண்டும் அழுவதை உணர்ந்தவன் தனது குரலை இலகுவாக்கி " ஹே ... எப்போ இருந்து என்னோட ஜான்சி ராணி இவ்வளவு பலவீனமா ஆனாங்க ? " என்று கேட்க
அவளோ மெல்லிய விசும்பலுடன் " நா பலவீனமா ஆகல " என்று கூற
அவனோ " அப்போ எதுக்கு இந்த கண்ணீர் ? உனக்கு உன் திறமை என்னனு தெரியும் .... இதுக்கு முன்ன மோடெல்லிங் பண்ணி இருக்க தான ? உன் திறமை மேல மட்டும் நம்பிக்கை வை மா . மத்தவங்க என்னவோ பேசட்டும் காதுலயே வங்கிக்காத . kill them with your success and bury them with your smile " என்று கூற
அவளோ ஒரு சிறு புன்னகையுடன் " என்ன மாஸ்டர் ஆடியோ லான்ச் பாத்தீங்களா ?" என்று கேட்க
அவனோ அவள் இலகுவாகி விட்டாள் என்று உணர்ந்தவன் " எதை பார்த்து சொன்னா என்ன சொல்றது செரியா இருக்கானு தான் பாக்கணும் " என்று கூற
அவளோ " எப்பாஆ ஏன் இப்டி தத்துவமணி மாதிரி பேசுறீங்க ?" என்று கேட்க
அவனோ பொய் கோபத்துடன் " ம்ம் இருக்குற வேலையெல்லாம் விட்டுட்டு ஐயோ பாவம் அழுறாளேனு ஆறுதல் சொன்னேன்ல எனக்கு தேவை தான் " என்று கூறி சிரிக்க
அவளும் சிரித்தவள் " நான் கொஞ்சம் வேற மாதிரி சமாதானம் எதிர்பார்த்தேன் " என்று கூற
அவனோ புருவம் சுருக்கியவன் " என்ன மாதிரி எதிர்பார்த்தீங்க மேடம் ?" என்று கேட்க
அவளோ " அப்டியே நான் அழுத உடனே ஆபீஸ்ல இருந்து வெளிய வந்து என்ன நேரா பார்த்து அப்டியே என்ன கட்டிப்புடுச்சு அழாத டா என் கண்ணுல பாரு நீ தான் பேரழகினு சொல்லுவீங்கன்னு நெனச்சேன் " என்று கூற
அவனோ அவள் கூறியதில் எதிர்பார்ப்பு ஒளிந்திருந்ததை உணராது " ஆமா இது என் மாமனார் கம்பெனி பாரு அவர் பொண்ணு கூப்பிட்ட உடனே வேலைய எல்லாம் ஒதுக்கி வச்சுட்டு ஓடி வரதுக்கு ... நான் உன் வாழ்க்கைல ஒரு துணை தான் அதுல்யா நீ தான் அதை வாழனும் எல்லாத்துக்கும் என்ன எதிர்பார்க்காத " என்று கூற
அவளோ சற்று சுற்றி இருக்கும் காதலர்களை பார்த்து எழுந்த ஆக்கத்தில் இவ்வாறு கெட்டவள் அவனின் பதிலில் மனம் சுணங்கினாலும் அவன் கூறுவதில் இருந்த உண்மையை உணர்ந்தவள் " எப்பாஆ லெக்ச்சர் லோகேஸ்வரா தெரியாம ஒரு ரொமான்ஸ் எதிர்பார்த்தது தப்பு தான் அதும் உங்க கிட்ட எதிர்பார்த்தது ஆகப்பெரும் தப்பு தான் . டின்னர் பிரேக் முடுஞ்சுர போகுது போய் நிம்மதியா சாப்பிடுங்க நான் இப்போ ஓகே தான் பை " என்று கூற
அவனோ அவளின் ஏமாற்றம் விரவிய குரலில் என்ன உணர்ந்தானோ " சரி பார்த்துக்கோ அப்புறம்... நான் சொல்லி தான் என் கண்ணுல நீ எவ்வளவு அழகுன்னு தெரியனுமா என்ன ?" என்று கேட்டுவிட்டு அவள் ஏதும் பதில் கூறும்முன் வைத்து விட்டான் .
அவளோ தனது அலைபேசியையே பார்த்தவள் நிஜமாகவே இவன் தன்னிடம் தான் இப்படி கூறினான் என்று சற்றே செம்மையுற்ற கன்னத்துடன் படுக்க செல்ல அங்கோ அவளுடன் அறையை பகிரும் இருவரும் NRI மாணவர்களாவர் . இரண்டு பெரும் நடுராத்திரி வரை விளக்கை ஒளிரவிட்டு கத்தி பேசிக்கொண்டும் இருந்ததில் உறக்கம் கெட்டாலும் கஷ்டப்பட்டு கண்ணை மூடியவள் தன்னை இந்த சூழலில் புகுத்திக்கொள்ள முயன்றாள் .
இவை எல்லாம் வரிசையாக நினைத்தபடி இருந்த சஞ்ஜீவின் எண்ண அலைகளை கலைத்தது குக்கரில் இருந்து வந்த சத்தம் . அந்த சத்தத்தில் உள்ளே வந்த சஞ்ஜீவ் அவளிற்கு அடுப்பில் இருந்து குக்கரை இறக்க பயம் இருப்பது அறிந்தவன் அவள் தூக்க போகும் முன் தான் இறக்கி வைத்து விட்டு " என்ன கூப்டருக்கலாம்ல அம்மு ... உனக்கு தான் குக்கரை இறக்க தெரியாதுல " என்று கூற
அவளோ அவனை பார்த்து ஒரு முறை பார்த்து இதழ்வளைத்து சிரித்தவள் " மூணு வருஷமா இதே குக்கரை நான் தான் அடுப்பிலிருந்து இறக்கிட்ருக்கேன் .எனக்கு எந்த உதவியோ துணையோ வேண்டாம். " என்று கூற
அவனோ அவளின் கூற்றில் அவளை அடிபட்ட பார்வை பார்த்தவன் " அம்மு .. " என்று கூற அவளோ அவனின் அடிபட்ட பார்வையில் மனம் பிசைய பாத்திரங்களை எடுத்து உணவுண்ணும் மேஜையில் வைக்கும் சாக்கில் அவனின் கண்ணை தவிர்த்து வெளியே சென்று விட்டாள் .
அவள் சென்ற திசையை பார்த்தவன் பின் தனக்கு தானே தைரியம் சொல்லி கொண்டான் "இதுக்கே சோர்ந்துட்டா எப்படி இனி என்னென்ன இருக்கு போ டா சஞ்ஜீவ் " என்று கூறியவன் வெளியே வந்து அவள் செய்த பதார்த்தங்களை அடுக்க உதவியபடி சிவாத்மிகாவை வாரி எடுத்துக்கொண்டு உணவுண்ணும் மேஜைக்கு வந்தவன் அங்கிருந்த பதார்த்தங்களை பார்த்தான் . அவனிற்கு பிடித்த சிறிய அளவிலான இட்லிகளும் பாசிப்பருப்பு சாம்பாரும் அதனுடன் தக்காளி கிட்னியும் செய்திருந்தாள் .
அதை கண்டு புன்னகைத்தவன் அவளை பார்க்க அவளோ அவன் பார்வையை தவிர்த்தவள் " பாப்பு அம்மா உங்களுக்கு புடுச்சி ஸ்மால் இட்லிஸ் பண்ணிருக்கேன் " என்று கூற சிவாத்மிகாவோ கண்கள் மின்ன " தூபேர் மம்மி லவ் யு " என்று கூறி அவள் கன்னத்தில் முத்தமிட அதுல்யாவோ சஞ்ஜீவி உனக்காக ஏதுமில்லை என் மக்களிற்காக செய்தேன் என்பதை போல் பார்த்து வைக்க
அவனோ அதை கண்டு எழுந்த புன்னகையை விழுங்கியவன் சிவத்மிகாவிடம் " அம்மு அம்மாக்கு ஏண்டா லவ் யு சொல்லி கிஸ் குடுத்தீங்க ?" என்று கேட்க
அவளோ தலையில் லேசாக அடித்தவள் " அச்சோ பா தெயியாதா பாப்பாக்கு புதுச்சது அம்மா பண்ணா மா கு பாப்பா இப்பீதி தா தேங்க்ஸ் சொல்லுவே " என்று கூற
சஞ்ஜீவ் அதுல்யாவை குறும்பாக பார்த்தான் . அவன் பார்வையின் பேதம் உணர்ந்தவள் அவள் நினைத்தது நடக்கக்கூடாது என்பதை போல் அவனை முறைக்க அவனோ " ஓஒ அப்போ அப்பாகும் இந்த சாப்பாடு புடிக்கும் அதுனால .... அம்மாக்கு தேங்க்ஸ் " என்று கூறி அதுல்யா அவன் செய்யவிருப்பதை உணரும் முன் அவள் கன்னத்தில் தன் முத்திரையை அழுத்தமாக பதித்தவன் அவள் அதிர்ந்து முழிக்கும் பொழுதே அவளை பார்த்து குறும்பாக சிரித்தவன் " லவ் யு அம்மு " என்று கூற
சிவாத்மிகா தந்தை தன்னை பார்த்து ஏதோ செய்வதாய் நினைத்து மகிழ்ந்தவள் அவனிற்கு ஒரு முத்தம் கொடுத்து " குட் அப்பா " என்று கூற சஞ்ஜீவ்வ் சாப்பிட தடுமாறியபடி அவனை கீழ்க்கண்ணால் நோட்டம் விட்டுக்கொண்டிருந்த மனைவியை பார்த்தபடி மகளிர்க்கு முத்தமிட்டவன் தானும் உண்ண துவங்கினான் . அவளோ ஆணை நெருங்கவும் முடியாது விளக்கவும் முடியாது தவித்தபடி உணவை உண்ணத்துவங்கினாள் . மனதில் அவன் செய்கைகளால் மெல்லிய சாரல் அடித்த உணர்வு எழுந்ததென்னவோ உண்மை . மெல்ல கண்ணை நிமிர்த்தி பார்க்க அவளின் கணவனோ அவளை தான் விழுங்குவதை போல் பார்த்தபடி மகளிர்க்கு ஓட்டியபடி தானும் சாப்பிட்டுக்கொண்டிருந்தான் . அவன் பார்வையில் தடுமாறியவள் தண்ணீர் எடுத்து குடித்துவிட்டு சாப்பிட்டும் சாப்பிடாமலும் எழுந்துகொண்டாள். அவன் அவள் சரியாக சாப்பிடாமல் எழுவதை பார்த்தவன் அவள் கையை பற்றிவிட்டான் .
அவள் அவன் கையை ஆஸ்த்து பார்க்க அவனோ அவளின் கையை பற்றி தன் அருகில் இருந்த இருக்கையில் அமர வைத்தவன் மகள் உண்டு முடித்திருக்க அவளை உள்ளே அழைத்து சென்று வாயை கழுவி கூட்டி வந்து விளையாட்டு சாமான்களுக்கு மத்தியில் விட்டு வந்தவன் மனைவியிடம் திரும்ப அவளோ நிலத்தையும் நகங்களையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்தாள் . அவளை பார்த்தவன் தனது தட்டில் ஒரு இட்லி துண்டை பிய்த்து சாம்பாரில் தோய்த்து அவள் வாய் புறம் நீட்ட அவளோ வெளிவர துடித்த கண்ணீரை விழுங்கியவள் " பழக்கப்படுத்தாதீங்க .... விட்டுட்டா என்னால திரும்ப மாத்திக்க முடியாது " என்று கூற
அவனோ " இனி வாழ்நாள் முழுக்க இந்த பழக்கத்தை விட போறதில்ல ... வாய திற டி ப்ளீஸ் " என்று கூற அவளோ இரண்டு நிமிடம் மௌனித்தவள் பின் வாயை திறந்து வாங்கிக்கொள்ள அவன் கண்கள் சட்டென்று பணித்தாலும் மனைவிக்கு ஓடியவன் தானும் உண்டு முடித்தான் . அவள் அவன் முகத்தை பார்க்காமல் கையை கழுவிவிட்டு செல்ல அவனோ செல்லும் அவளையே கண் அகலாமல் பார்க்க இன்னும் தான் சமாதான தூது செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்று உணர்ந்து பெருமூச்சொன்றை வெளியிட்டான் .
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro