கவனித்துச் செல்
உன் கண்ணில் படும் வண்ண நிகழ்வுகளை
வாழ்வில் மாறும் எண்ண மாறுதல்களை
வயதில் தோன்றும் மாய ஜாலங்களை
வன்மை புகுக்கும் வலிய துயரங்களை
எழுச்சிப் படுத்தும் நல்ல இசைகளை
இனிமைத் தரும் நற்செயல்களை
கவர்ந்து செல்லும் காதல் அழகிகளை
காலம் கொடுக்கும் அன்பு காவியங்களை
மெல்ல கவனித்து செல்
ஊர்ந்து செல்லும் எறும்பின் இசைவுகளை
எழுத்தில் பிறக்கும் புதிய உணர்வுகளை
அரவணைக்கும் அன்பு இதயங்களை
அடம்பிடிக்கும் அபூர்வ ராகங்களை
பறந்து செல்லும் பறவையின் இறக்கைகளை
பார்த்து சீரும் பாம்பின் பண்புகளை
நாடகமாடும் நன்றியில்லா மனங்களை
நம்பிக்கை தரும் நல்ல நட்புகளை
என்றும் கவனித்துச் செல்
கவர்ந்தும் செல்
இருபது என்பது அறுபதும் ஆகலாம்
அறுபதிலும் நீ இருபதைக் காணலாம்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro