6
என்ன அர்ஷா...அவ இப்படி சொல்லிட்டு போறா...நீ என்ன பன்ன போறே என்ற ஜராவிடம்...தெரியலே என உதட்டை பிதுக்கியவன்...சரி நான் வரேன் என்றபடி சென்றான்...
.
.
.
அபி மா...உனக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை வேண்டும் என அபியின் சித்தி கேட்க...
படிச்சவன் வேணுமா?? பணக்காரன் வேனுமா?? ஃபாரின் ல இருக்குறவன் வேணுமா என அத்தை கேட்க...
இருவரையும் மாறி மாறி பார்த்தவள்...
எனக்கு நல்லவனா இருக்கனும்...
என்னை அவன் நல்லா லவ் பன்னனும்..
என் பேரண்ட்ஸ் கிட்டயும் அன்பா இருக்கனும்...
அவன் படிக்காட்டாலும் பரவாயில்லை என்றாள்..
ஏன் மா...நீ டிக்ரி முடிச்சிருவே...அவன் மட்டும் படிக்காட்டா எப்படி ம்மா என கேட்ட அத்தையிடம்..
படிக்காதவன்ல நல்லவனும் இருக்கான்..
படிச்சவன்ல கெட்டவனும் இருக்கான்...
அதுக்காக படிச்சவன் கெட்டவனா இருந்தாலும் பரவாயில்லைனு கட்டிக்க முடியுமா என கேட்டவளை..
எவ்ளோ அறிவா பேசுறா என் செல்லம் என சொல்லி நெற்றியில் முத்தமிட்ட சித்தியிடம்..
அதான் சித்தி... எனக்குத் மாப்பிள்ளை பார்க்குறது என் அப்பா பொறுப்பு...எங்க அப்பா தான் எல்லா முடிவும் கரெக்ட்டா எடுப்பாங்க...
அப்பா பார்க்குற மாப்பிள்ளை நல்லவனா தான் இருப்பான் என கூறவும் வீட்டில் உள்ளவர்கள் சந்தோஷம் அடைந்தனர்..
.
.
.
அபி மா...எனக்கு தெரிஞ்சவங்க இவங்க...உன் கிட்ட கொஞ்சம் பேசனுமாம் என்ற சீதாவிடம் இருந்து கைபேசியை வாங்கியவள்..
வணக்கம் மா...நல்லா இருக்கீங்களா மா என ஒரு சில வார்த்தைகள் அன்பாக பேசியவள்..
சரிங்கம்மா... அம்மா கிட்ட குடுக்குறேன் என ஃபோனை குடுத்தாள்...
.
.
ம்ம்மா.. அபி.. இந்த ஃபோட்டோவ பாரு மா என சித்தி கூற...
யாரு சித்தி அது என்றபடி வந்தவளை...உனக்கு இந்த பையன தான் பேசிக்கிறோம்..வந்து பாரு என்க..
சின்னதாக வெட்கம் வந்தாலும்...இல்லை சித்தி...நீங்களாம் பார்த்துடீங்களே..அது போதும் என்றவளை ஹேய்...பாரு டி என எவ்வளவு கூறியும் பார்க்க மறுத்து விட்டாள்..
சரி...பையன பத்தி சொல்றேன்.. அதையாச்சிம் தெரிஞ்சிக்றியா என கேட்க..
சரி என சிறு புன்னகையுடன் தலையசைத்தாள்..
பையன் பேர் அக்ஸர்...ஆறு தான் படிச்சிக்றான்...குடும்ப சூழ்நிலைக்காக
சின்ன வயசுலயே சம்பாதிக்க பெங்களூர் போய்டான்...
படிக்காட்டாலும் பையன் நல்ல பையன்...பார்க்க ஹீரோ மாதிரி இருப்பான்..
அவன் பேரண்ட்ஸும் நல்லவங்க...அன்னைக்கு ஃபோன் பேசுனிலே..அவங்க தான்..அப்புறம் அவனுக்கு ஒரு தங்கை இருக்கு என்க...
சிறிதாக வெட்கத்துடன் புன்னகைத்தவள் சரி என தலையசைத்தாள்..
.
.
ஹேய் அபி... இது யாருனு பாரு என அவளின் ஃபோனை அவள் கையில் குடுக்க...
யாரு கா இது... யாருனு தெரியலயே என்றவளை பார்த்து சிரித்தவள் உன் ஃபியூச்சர் ஹஸ்பண்ட் என்றவளை அடிக்க துறத்தினாள்...
ஈஈஈஈ...இதுக்கு நான் பொறுப்பில்லை எல்லாம் அக்ஸரோட வேலை...
பொண்ணுக்கு பிடிச்சிருக்கானு டார்ச்சர் பன்றாங்களாம்...
அதுக்கு தான் இந்த ஃபோட்டோ என்றாள்....
ஆனால், அக்கா... இது சின்ன பையன் மாதிரி இருக்கே என்றாள் அபி...
அது பதினேழு வயசுல எடுத்த ஃபோட்டோ அதான் அப்படி இருக்கு... அடுத்த பிக் பாரு என கண்ணடித்து விட்டு சென்றாள்..
.
.
.
நாட்கள் நகர நகர...
பொண்ணு பார்த்து...
பிரமாண்டமாக நிச்சயம் செய்து...மூன்று வருடத்தில் கல்யாணம் செய்யலாம் என இரு வீட்டினரும் முடிவெடுத்தனர்...
.
.
.
.
அபியின் நிச்சயம் முடிந்ததும்...
வீட்டில் எல்லோரையும் சம்மதிக்க வைத்து கத்தார்க்கு போயிட்டு வந்து கல்யாணம் செய்வதாக கூறி...
கத்தார்க்கு சென்று விட்டான் அர்ஷா..
.
.
.
.
.
.
.
எந்தன் இதழ் மேல் இன்று வாழும் மௌனங்கள்...
என் மனம் பேசுதே நூறு எண்ணங்கள்..
சொன்ன சொல்லின் அர்த்தங்கள் என்னுள் வாழுதே..
தூரம் தள்ளி சென்றாலும் உயிர் தேடுதே..
ஆசை வார்த்தை எல்லாமே இன்று கீறலாய்...
எந்தன் நெஞ்சின் ஓரத்தில் பாய செய்கிறாய்..
என கைபேசி அழைப்பதை உணர்ந்து...
கண்ணீரை துடைத்து எழுந்தவள்..
கைபேசியை ஆண் செய்து.. அக்ஸர் என அழுகையுடனே கூறினாள்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro