45
தன் மனதில் இருக்கும் அனைத்தையும் கொட்டி தீர்த்த அபி... தன் முகத்தை மூடியவாரு அழுதுக்கொண்டிருக்க,.
அவளின் அருகில் சென்று அமர்ந்த அர்ஷா.. அவள் கையை முகத்திலிருந்து பிரித்து கண்ணத்தில் வடியும் கண்ணீரை துடைத்தவன்,. அமைதியாக அபியை பார்த்தபடி இருக்க.. அவளும் எதுவும் சொல்லாமல் அர்ஷாவை பார்த்தபடியே இருந்தாள்..
அர்ஷாவையே உற்று நோக்கியவள்,.. அர்ஷா ஏதோ கூற வருவதும், கூறாமல் தயங்கி இருப்பதையும் பார்த்தவள்,. "அப்போ உனக்கு அக்ஸர் மேலே லவ்வே இல்லயானு கேட்கவரியா??" என அபி கேட்க,. சிறிது தயங்கியவன் ஆம் என்பது போல் தலையசைத்தான்..
"நீ ஃபர்ஸ்ட் லவ் சொல்லும் போது எனக்கு அந்த ஃபீல் பெரிசா தெரிலே.. ஆனா, உன்னை எனக்கு பிடிக்கும்.. அது அந்த வயசுக்குரிய தடுமாற்றமா இருக்கலாம்.. அப்படி தான் நான் இருந்தேன்.. அப்புறம் அக்ஸர வீட்ல பேசுனதும், அது என் கணவன்.. அப்படின்ற ஒரு நினைப்பு.. நம்மளுக்குனு பேசியாச்சி.. நமக்கு அவன் தான் எல்லாமே.. அத எப்படி சொல்றதுனே தெரியலே.. அந்த மாதிரி மனசுல ஒரு உணர்வு.. அதை என்னன்னே சொல்ல தெரியலே.. நான் அவன் கிட்ட பேச ஆரம்பிக்கும் போது இதுக்கு பேரு தான் லவ்வுனு நானே என் மனசுல பதிய வச்சிக்கிட்டேன்.. நான் பதிய வச்சதயே முழுசா நம்பிட்டேன்.. ஆனா, அக்ஸர் ஒவ்வொரு தடவை என்னை ஹர்ட் பன்னும் போதும் உன் நியாபகம் வரும்... ரம்யாவும் ஜராவும் உன்னை பத்தியே என் கிட்ட சொல்லி காமிப்பாங்க.. ஸ்டார்டிங்ல சாதரணமா விட்டாலும் அப்புறம் நான் என்னை அறியாமலே அக்ஸரோட உன்னை வச்சி கம்பேர் பன்ன ஆரம்பிச்சேன்.. நாள் ஆக ஆக அவன் மேலே எனக்கு இருக்குறது லவ்வே இல்லைனு புரிஞ்சுக்கிட்டேன்.. எனக்கே தெரியாம உன் காதலுக்காக ஏங்க ஆரம்பிச்சிட்டேன்" எனக்கூறி ஓரக்கண்ணால் அர்ஷாவை பார்க்க.. அவனின் பார்வையில் எதையோ உணர்ந்தவள் தலை கவிழ்ந்தாள்..
அபியின் அமைதியை பார்த்தவன்.. மிக அருகில் அவளிடம் நெருங்கவும்,.. அவளுக்கு வியர்த்து விறுவிறுக்க.. தன்னுடைய துப்பட்டாவின் நுனியை கையில் வைத்து பிசைந்தவாரு இருக்க.. அவளின் கையை பிடித்து தன் கைக்குள் வைத்தவன்.. "ஆஹ, என் பொண்டாட்டி என்னை அந்த அளவுக்கு லவ் பன்றா" என கேட்க.. திருதிருவென விழித்தவள் மறுபடியும் தலை கவிழ்ந்தாள்..
"உனக்குள்ள இவ்வளவு காதல வச்சிட்டு.. ஏன் டி.. என்னை வெறுக்குறாப்ல நடிச்ச.."..
"யாரோ ஒருத்தி அப்படி சொன்னதுக்காக உன்னை உயிரா நினைச்சவனையும், நீ உயிரா நினைச்சவனையும் கஷ்டப்படுத்திட்டியே டி" என அர்ஷா வருத்தமாக கூற... அவனின் முகத்தை பார்த்தவள்.. "நான் கஷ்டப்படலையா??.. உன்னை ஒவ்வொரு தடவை நான் திட்டும் போதும், எடுத்தெரிஞ்சி பேசும் போதும்.. எனக்குள்ள எவ்வளவு வலிச்சிச்சி தெரியுமா?? நான் உன்னை திட்டும் போதுலாம் நீ என்னை திட்டினாலோ இல்லை கை நீட்டி அடிச்சிருந்தாலோ கூட அவ்வளவு வலிச்சிக்காது டா".."ஆனா,.. நான் சொல்றதைலாம் கேட்டுட்டு, எனக்கு ஏத்தமாதிரி நடந்துக்குட்டு அமைதியா போவிலே.. அப்போ அவ்வளவு கஷ்டமா இருக்கும்.. உன்னை கட்டிபிடிச்சி அழுகனும் போல இருக்கும்" என கண்ணீர் சிந்தியவளை..
"இப்பவும் ஒன்னும் கெட்டு போகலே.. தாராளமா கட்டிபிடிச்சிக்கலாம்.. நான் ஒன்னும் தடுக்க மாட்டேன்.. பட் அழுவ கூடாது" என கூறி கண்ணடிக்க.. சிரித்தவள், அவன் எதிர்பாரா நேரம் அவன் கழுத்தில் தன் முதல் முத்தத்தை பதித்து தோளில் சாய்ந்தாள்..
இதை எதிர்ப்பார்க்காதவன்.. சிரித்தவாரு அவளை சுற்றி கையை போட்டு அனைத்துக் கொண்டான்..
அமைதியாக அவன் அணைப்புக்குள் இருந்தவள்.. வேகமாக எழுந்து.. "ஷிவானி" என்க..அவள் வாயை பொற்றியவன்.. "எனக்கு எல்லாம் தெரியும்" "நீ அவ கிட்ட பேசுன அன்னைக்கு அவ குழப்பத்துல தான் இருந்தா.. ஆனா, அன்னைக்கே அவ எல்லாத்தையும் புரிஞ்சிக்கிட்டா" என அர்ஷா கூற.. புரியாமல் அவனை பார்த்தாள்..
"என்ன புரியலயா பேபி??" "வெய்ட் நான் சொல்றேன்" என கூறி சொல்ல ஆரம்பித்தான்..
அன்று அபி ஷிவானியிடம்.. "நீ என் அர்ஷாவை பார்த்துப்பியா? நாங்க பிரிஞ்சிறுவோம்.. அப்புறம் நீ அவனை மேரேஜ் பன்னிக்கிட்டு அவனை பார்த்துக்கனும்" என்று கூறிய நேரம் ஏதோ யோசித்துவிட்டு சரியென்று சென்றாள்..
அதே நாள்,.. "நான் தொட்டா உனக்கு கருப்பான் பூச்சி தொடுற மாதிரி இருக்கா" என அர்ஷாவின் உயர்ந்த குரலை கேட்ட ஷிவானி பதற்றத்துடன் அர்ஷாவின் ஃப்ளாட் வாசலில் நின்று.. அங்கே நடந்த சண்டையும், அர்ஷா அறைக்குள் போய் புகுந்து கொண்டதையும் பார்த்தவள்.. யோசனையுடனே நிற்க..
அப்பொழுது தான்,.
"ஏன் அர்ஷு?? ஏன்?? என்னை விட்டு போவியா?? என்ன டிவோர்ஸ் பன்னுவியா?? நீ அப்படிலாம் பன்ன மாட்டா தானே.. என்னை நீ உண்மையா லவ் பன்னிலே.. எனக்கு தெரியும்.. நான் இல்லாம உன்னால இருக்க முடியாதுனு.. ப்ளீஸ் அர்ஷு.. என்னை விட்டு போய்றாதே அருஷு.. ப்ளீஸ் டா" என அழுதவளை பார்த்த ஷிவானிக்கு அபியின் காதல் புரிந்தது..
இருவரின் காதலையும் தெள்ளத் தெளிவாய் புரிந்து கொண்ட ஷிவானி,. "கொஞ்ச நாட்களே நான் அர்ஷாவ லவ் பன்னாலும்.. அவன் இன்னொருத்திய மேரேஜ் பன்னிக்கிறதை தாங்கிக்க முடியல.. இத்தனைக்கும் நான் அர்ஷா கூட பேசுனதே இல்லை.. அப்படி இருந்துமே வலிய தாங்கிக்க முடியல..
ஆனா, இவங்க லவ்வ பார்க்கும் போது இவங்க மேரேஜே லவ் மேரேஜ் மாதிரி இருக்கு.. இவங்க எக்காரணத்தை கொண்டும் பிரிஞ்சிற கூடாது.. முக்கியமா இவங்க பிரியிரதுக்கு காரணம் நானா இருக்க கூடாது" என யோசித்தவள் ஒரு முடிவுடன் நகர்ந்தாள்..
அடுத்த நாட்களே,. தன்னிடம் அபி பேசியது.. அர்ஷா அறைக்குள் நுழைந்ததும் அழுது புலம்பியது என அனைத்தையும் அர்ஷாவிடம் கூற.. அர்ஷாவும் தான் அபியை காதலித்தது.. தங்களுக்கு நடந்த கல்யாணம் என அனைத்தையும் கூறினான் தவறியும் அக்ஸர் அபிக்குள் நடந்த பேச்சுவார்த்தையை கூறவில்லை..
அனைத்தையும் கேட்ட ஷிவானி.. "இவ்வளவு லவ்வா?? ச்சான்ஸே இல்லை.. உங்களை பார்க்க ரொம்ப ஹேப்பியா இருக்கு.. சொல்ல வார்த்தை இல்லை.. சீக்கிரம் உங்க ப்ராப்ளம சால்வ் பன்னிட்டு ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோஷம வாழுங்க" என சிரித்துவிட்டு கூறி தனக்குள் வைத்திருந்த ஒரு தலையான காதலை இறக்கி வைத்து விட்டு சந்தோஷமாக சென்றாள் ஷிவானி..
இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்த அபி,. "ஷிவானி பாவம்லேங்க.. ரொம்ப நல்ல பொண்ணுலே" என கூற.. "என்னங்க.. புதுசா ங்க லாம் போட்டு பேசுறீங்க" என அர்ஷா கேட்கவும் சிரித்தவள்.. அவனின் கையை இன்னும் இருக்கி பிடித்து கொண்டாள்..
"அபி மா.. உன் மொபைல்ல ஏதோ மெஸேஜ் வந்திக்குது போல.. நோட்டிஃபிக்கேஷன் வருது" என அர்ஷா கூற.. தன் கைப்பேசியை எடுத்து பார்த்தாள்..
"என்ன பேபி.. உன் ஹஸ்பண்டோட சேர்ந்துட்டீங்க போலே" என ஒரு குறுஞ்செய்தி வர.. "இங்கே பாரு அர்ஷா.. இது யாரு நம்பர்னே தெரியலே.. இங்கே நடக்குறதுலாம் அவங்களுக்கு தெரியுது போலே.. கரெக்ட்டா மெஸேஜ் பன்றாங்க.. யாருனு கேட்டா சோல்மேட்னு சொல்றாங்க.. கால் பன்னுனா ஸ்விட்ச் ஆஃப்னு வருது" என கூறி தன் கைப்பேசியை அர்ஷாவிடம் காண்பிக்க..
"இப்போ கால் பன்னி பாரு மா" என அர்ஷா கூறவும்.. "எப்படியும் ஸ்விட்ச் ஆஃப்னு தான் வரும்.. வேண்டாம்" என கூறி கைப்பேசியை கீழே வைக்க.. "இல்லை அபி மா.. கால் பன்னி பாரு" என மறுபடியும் அர்ஷா கூறவும்.. அவன் பேச்சிர்க்கு மறுக்க தோன்றாமல்.. அலைப்பேசியை எடுத்து அழைப்பு விடுக்க...
வேண்டும் உந்தன் மடி மீது உறக்கம் ..
இதுதான் அன்பே நான் ஏங்கும் ஸ்வர்கம் ..
ஆகாது இதுபோல் வேறெங்கும் உறவும் ..
நீதான் உயிரே என் தாயின் வடிவம் .
கனவெல்லாம் நினைவாகி நீ ஆனதே... .
உன்னாலே உன்னாலே நான் என்ன தொலைச்சேனே ..
கண்ணாலே கண்ணாலே சிறையில் அடெஞ்சேனே
பாடல் ஒளி மிக அருகில் எழுப்ப.. ஒன்றும் புரியாமல் அர்ஷாவை பார்த்தவள்.. அர்ஷா கண்ணடிக்கவும்.. "அட பக்கி.. அப்போ நீ தான் என் கிட்ட ச்சேட் பன்னி என்னை டென்ஷன் பன்னியா??" என கேட்க.. "ஈஈஈஈஈஈஈ.. நேரா தான் பேச முடியல.. அதான் ச்சேட்லயாவுது பேசலாம்னு" என அர்ஷா இழிக்க.. அவன் தோளில் செல்லமாக அடித்தவள்.. அப்படியே சாய்ந்து கொண்டாள்...
"அபி மா" என்க,.
"ஹ்ம்ம்"..
"பேபி".. என்க..
"ஹ்ம்ம்"..
"ச்செல்லோ" என்க..
"ஹ்ம்ம்"..
"அடி பொண்டாட்டிடிடிடிடிடிடி" என்க,.
"ஹ்ம்ம் சொல்லு" என கூறி அவள் சாய்ந்திருந்த அவன் தோலில் உதட்டை தேய்க்க.. அதில் நெளிந்தவன்.. "அபி மா" என்க..
"பசிக்குது அர்ஷு" என சாய்ந்தவளிடம்.. "எனக்கும் பசிக்குது டா" என அர்ஷா கூறவும்.. "நம்ம போட்ட சமாதானத்துல தோசையும் சமாதானமா காய்ஞ்சி போயிருச்சி" என அபி கூற,. "இது வயிறு பசியில்லை.." என அர்ஷா கூறவும் புரியாமல் பார்த்தவளிடம்.. "இந்த பசி" என அவளின் உதட்டை தன் கையால் வருடிக் கொண்டே நாடியை கடந்து கழுத்தின் கீழே வருடியபடி கொண்டு சென்ற அவன் கையை பிடித்து தடுத்தவள்,. "கால்ல கட்டு போட்ருக்கு" என கூற.. "அப்போ கால் சரியானா ஓகே வா??" என கண்ணடிக்கவும்.. "ச்சீ" என முகத்தை மூடிக்கொள்ள.. அவள் கையை விலக்கிவிட்டவன்.. அவளின் கண்ணத்தில் வருடியவாரு அவளின் உதடை நோக்கி குனிய,.
சரியாக அர்ஷாவிர்க்கு அழைப்பு வந்தது..
"ச்சே" என கைப்பேசியை எடுத்தவன்.. "எல்லோருடைய ரொமேன்ஸ்லயும் யாரு யாருலாமோ வில்லனா இருப்பாங்க.. ஆனா, நம்ம ரொமேன்ஸ்ல என் மாமனாரே வில்லனா வந்திருக்காங்க" என கூறியவன்.. அலைப்பேசியை ஏற்று.. "சொல்லுங்க மாமா" என்க.. அந்த பக்கம் சொன்ன பதில் கேட்டு கண்களில் இருந்து கண்ணீர் வடிய.. கைப்பேசியை தவறவிட்டவனை பார்த்தவள்..
"என்ன ஆச்சி அர்ஷா?? ஏன் அழுவுறா??என்ன ப்ராப்ளம்??" என அபி பதற்றமடைய.. "அட கடவுளே.. நமக்குள்ள நடந்த சண்டைல விஷ்வா சொன்னத உன் கிட்ட சொல்ல மறந்துட்டேனே டி" என கண்ணீர் வடித்தவனை பார்த்து பதற்றம் எழ.. "என்ன ஆச்சி டா.. ஃபர்ஸ்ட் அழுவாதே.. என்னனு சொல்லு" என அர்ஷாவை உழுக்க... "ஸ்வேதா சூசைட் பன்னிக்கிட்டா" என கூறிய அடுத்த நொடி அபி மயங்கி சரிந்தாள்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro