43
காலையில் எழுந்ததிலிருந்தே அபி அர்ஷாவின் முகத்தை பார்ப்பதும், அர்ஷா பார்க்கும் போது அபி திரும்பி கொள்வதும் இப்படியே இருக்க,.."மகாராணி.. இப்ப தான் இறங்கி வந்திக்குறாங்க போலே.. இப்ப நாமளா பேசுனோம்னா முறுக்கிக்குவாங்க" என நினைத்து மனதிர்க்குள் சிரித்தவன்.. அவளை கண்டுக்காமள் சென்றான்..
அர்ஷா,. அவனின் ஆடையை எடுத்து இஸ்திரி போட ஆரம்பிக்க.. அதை பார்த்த அபி அர்ஷாவை நெருங்கி.. அர்ஷாவின் முறைப்பை பார்த்தவள்,. "ரொம்ப தான் ஓவரா பன்றான்.. பாவம், லேட் ஆகுதே.. அயர்ன் பன்னி குடுக்கலாம்னு நினைச்சா.. என்னையவே முறைக்கிறான்.. திமிரு பிடிச்சவன்" என மனதில் நினைத்து புலம்பியபடி தேநீரை எடுத்து வந்தவள் அவனிடம் நீட்ட,.. அர்ஷாவோ, அவளை கண்டுகொள்ளாதவாறு கோப்பையை எடுத்து கொண்டு டையை சரி செய்தவாரு வெளியே செல்ல.. அவன் போறதையே பார்த்து முறைத்து கொண்டிருந்தாள் அபி..
அவனோ,.. தன் காலணியை அணிந்து கொண்டிருக்க.. இது வரை எதிர் வீட்டில் அமர்ந்து கண்காணித்து கொண்டிருந்த ஷிவானி,.
அர்ஷா லிஃப்டிர்க்குள் நுழையவும்.. அப்பொழுது தான் வந்ததை போல ஷிவானி வேகமாக லிஃப்டிர்க்குள் நுழைய.. அர்ஷாவை மோதிக்கொண்டாள்..
கையை தேய்த்தவாரு ஷிவானியை பார்க்க.. "சாரி.. சாரி.." என தடுமாறி "சார்ர்ர்" என இழுக்கவும்... "இட்ஸ் ஓகே.. சார் லாம் வேணாம்.. கால் மீ அர்ஷா" என சிரிக்க.. "ஹான்.. அது" என இழுத்தவள்.. "இல்லை அர்ஷா.. காலேஜ்க்கு டைம் ஆச்சி" என இழுக்க.. இரு புருவங்களையும் சுருக்கி அர்ஷா கூர்ந்து பார்க்கவும்.. "லிஃப்ட்ல போகனும்" என ஷிவானி கூற.. "அதுக்கு என்ன... எனக்கும் ஆஃபிஸ் க்கு டைம் ஆச்சி.. அதான் இவ்வளவு இடமிர்க்குல்ல" என கூறவும்.. இவளும் சிரித்து தலையசைத்தவாரு லிஃப்டிர்க்குள் செல்ல.. அர்ஷாவும் சென்று பொத்தானை தட்டினான்..
இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த அபி,. "லிஃப்ட் க்குள்ள என்ன நடக்கும்?? அந்த ஷிவானி லவ்வ சொல்லிருவாலோ?? அப்டி சொன்னா அர்ஷா என்ன பன்னுவான்?? இல்லை.. அர்ஷா ஓகே சொல்ல மாட்டான்.. அவன் தான் என்னை லவ் பன்றானே.. அப்புறம் எப்படி?? ஆனா, நேத்து டிவோர்ஸ் பன்றேனு சொன்னான்லே.. அதுக்காக ஷிவானியோட லவ்வ அக்ஸப்ட் பன்னிருப்பானோ?? அப்ப என் அர்ஷூ என்னை விட்டு போயிருவானோ?? நோ.. போக கூடாது.. அவன் இல்லாம என்னால இருக்க முடியாது.. அர்ஷா ஷிவானி லவ்வ அக்ஸப்ட் பன்னிக்கிட்டானா இல்லையானு எப்படி தெரிஞ்சிக்கிறது?? ஹான்.. ஐடியா.. மொட்ட மாடிக்கு போய் பார்க்கலாம்.. அவுங்க சிரிச்சி பேசிட்டு போறாங்களா?? சாதாரணமா போறாங்களானு??" என பலவாறு யோசித்தவள்.. வேகமாக மாடியில் ஏறி நின்று பார்த்தாள்..
ஷிவானி,. தன் இரு சக்கர வண்டியின் பக்கம் சென்று வண்டியை எடுக்க.. அது மக்கர் செய்தது.. அந்த வண்டியுடன் மள்ளுக்கு நின்றவளிடம்,.. "என்ன ஆச்சி" என அர்ஷா கேட்க.. "என்னனு தெரியலே.. ஸ்டார்ட் ஆக மாட்டிக்குது.. இன்னைக்கு சும்மாவே லேட்.. என்ன செய்ய போறேனு தெரியலே" என புலம்பியவளை.. "இட்ஸ் ஓகே.. கார்ல ஏறு.. உங்க காலேஜ் தான்டி தானே எங்க ஆஃபிஸ் இருக்கு.. போற வழில ட்ராப் பன்றேன்" என அர்ஷா கூறவும்.. "தேங்க் யூ அர்ஷா.. தேங்க் யூ சோ மச்" என கூறி ஊர்தியில் ஏற.. ஊர்தியும் கிளம்பியது..
இவர்கள் கிளம்பியதை மேலே இருந்து பார்த்தவள்,.. கண்கள் கலங்க.. "ஏன் அர்ஷு.. ஏன்?? அவள உன் கூட கூட்டிட்டு போறா?? எனக்கு இதைலாம் பார்க்க கஷ்டமா இருக்கு டா.. ப்ளீஸ் டா.. என்னை இப்படி அழுக வைக்காதே" என அழுதவளிடம்.."ஏன் டி.. நீ தானே டி அவனை கஷ்ட படுத்துறே.. உன்னால தானே டி அவன் நொந்து போய் சுத்திட்டு இருக்குறான்.. இப்போ அவன் ஏதோ தப்பு பன்ன மாதிரி மொத்த பழியும் அவன் மேல போட்டுட்டு நீ அழுவறே" என அவளின் மனசாட்சி அவளிடம் கேட்க.. பேச்சற்று நின்றாள் அபி...
இன்னைக்கு அர்ஷாக்கு பிடிச்சதா சமைக்கனும் என்றென்னி.. தேங்காயை உடைத்து அரைத்து தேங்காய் பாலை எடுத்தவள், அரிசியை களைந்து தேவையான அளவு உப்பை போட்டு அதில் தேங்கை பாலை ஊற்றி அடுப்பில் ஏற்றினாள்.. பின்னர் ஒரு பத்து சிறிய வெங்காயம் எடுத்து பொடிசாக நறுக்கி,.. மற்றொரு அடுப்பில் பாத்திரத்தை வைத்து கமகமக்கும் நெய்யை ஊற்றி அதில் இரம்ப இலை, ஏலக்காய், பட்டை, கருவாபிள்ளை மற்றும் கிராம்பை போட்டு சிறிது வதக்கி பின்னர் நறுக்கி வைத்த பொடி வெங்காயத்தை போட்டு.. சிறிது வெந்தயம் மற்றும் வெள்ளைப்பூண்டிட்டு தாளித்து பின்னர் கொதிக்கும் அரிசியில் தாளிப்பை போட்டு அரை மணி நேரம் மூடி வைத்தாள்..
பிறகு,. இறாலில் இஞ்சி பூண்டு, மசாலா மற்றும் உப்பை கலந்து தேங்காய் எண்ணெய் ஊற்றி பொறித்தவள்.. நன்கு கட்டியான தேங்காய் பாலை ஊற்றி கிளறி விடவும்.. இறால் தயாரானது..
வீடே இறால் மணமாக இருக்க.. "வாவ்,.. செம்ம.. அர்ஷாக்கு பிடிச்ச தேங்காய் சோறும் இறாலும்.." " பக்கத்து வீட்டு பாட்டி சொல்லுவாங்க.. புருஷனுக்கு சமைச்சு போட்டு முந்தானில முடிச்சிக்கனும்.. உன் கைப் பக்குவத்துலயே உன் புருஷன் உன்னை சுத்தி சுத்தி வரனும்.. அந்த அளவுக்கு சமையல் கலைய தெரிஞ்சி வச்சிக்கனும்.. சும்மா ஏனோ தானோனு கடமைக்கேனு கத்துக்குட்டா சாப்பாடும் கடமைக்கேனு வரும்.. அதுல சுவையும் இருக்காது, அன்பும் இருக்காது.. முழு மனசோட சந்தோஷமா சமைச்சி பாரு.. உன் சமையலுலையே அன்பை புரிஞ்சிக்கிட்டு உன்னையே சுத்தி சுத்தி வருவான்" என என்றோ பாட்டி சொன்னது நியாபகம் வர.. அர்ஷா தன்னையே சுற்றி சுற்றி வருவது போல் தோன்ற வெட்கத்தில் முகம் சிவந்தாள்..
"இனி நான் உன்னை விட மாட்டேன் அர்ஷா.. நான் தான் உனக்கு.. நீ எனக்கு தான்" என நினைத்தவளின் கைப்பேசியில் குறுஞ்செய்தி வந்ததர்க்கு அறிகுறியாக ஒளியை எழுப்ப அதை எடுத்து பார்க்க..
அதில்,.
"ஹாய் டார்லிங்..
அர்ஷா உனக்கு டிவோர்ஸ் தர போரானாம்..
சரி.. டிவோர்ஸ் பன்னிட்டு என்னை கல்யாணம் பன்னிக்கோ.. நான் உன்னை உள்ளங்கைல வச்சி பார்த்துக்குறேன்" என வர.. அந்த குறுஞ்செய்தியை கண்களில் இருந்து கண்ணீர் வடிய பார்த்தவள்.. "ஹேய்.. இடியட்.. ஹூ ஆர் யூ " என பதிலுக்கு அபி அனுப்ப..
"யுவர் சோல்மேட்" என வந்தது..
தலையை கையில் ஏந்தியவள்,. "இந்த விஷயம் எனக்கும் அர்ஷாக்கும் தான் தெரியும்.. நான் யாரு கிட்டையும் சொல்லலே.. அர்ஷாவும் யாரு கிட்டையும் சொல்லிருக்க மாட்டான்.. அப்புறம் எப்படி??இது யாரா இருக்கும்" என யோசனையோடு கைப்பேசியை பார்த்தபடி இருக்க..
"என்ன மேடம்.. லைன்ல இருக்கீங்களா?? எனக்கு எப்படி தெரியும்னு யோசிக்கிறீங்களா?? உங்களுக்குள்ள இருக்குற வரை தான் நீங்க பேசுனது எல்லாம் பொக்கிஷமா இருக்கும்.. ஆனா, இப்ப உங்களை மீறி வெளியே வந்திருச்சி.. எப்படினு பார்க்குறியா?? உன் அர்ஷா.. டிவோர்ஸ்க்கு எந்த லாயர பிடிக்கலாம்னு சுத்திட்டு இருக்கான்" என அந்த புதிய நம்பரிலிருந்து தகவல் வர தலையில் இடி விழுந்ததை போல் அமர்ந்திருந்தாள் அபி..
அர்ஷாவிர்க்கு விஷ்வா ஒரு குறுஞ்செய்தி அனுப்ப.. அதை படித்தவனின் முகம் வெளிறியது.
"ச்சே.. இப்படியும் மனுசங்க இருக்காங்களே.. இவங்க வாழ்க்கை என்ன ஆக போகுதோ" என எண்ணியவன்.. தலையில் கை வைத்து.. சமாதானமாக குறுஞ்செய்தி அனுப்பி வைத்தான்..
அடுத்ததாக,. "எனக்கு என்ன நடக்க போதுனு தெரியலே.. ஸ்வேதாவ நினைச்சா தான் பயமா இருக்கு.. இந்த விஷயம் ஸ்வேதாக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னே தெரியலே.. இப்ப ஸ்வேதா கூட என்னால பேச முடியாதபடி பன்னிட்டாங்க.. அவள எப்படி தொடர்பு கொள்வேனு தெரியலே.. நீங்க தான் அபி கிட்ட சொல்லனும்.. அடிக்கடி ஸ்வேதா அப்பா நம்பர்க்கு ஃபோன் போட்டு ஸ்வேதா கிட்ட பேச சொல்லுங்க.. இது தெரியாத வர தான் அவ நிம்மதியா இருப்பா.." என வர.. "நீ கவலை படாதே.. நான் அபி கிட்ட சொல்லுறேன்.. அவ எப்பையும் ஸ்வேதா கூட பேசி அவள பத்தி உன் கிட்ட சொல்லுவா.." என ஒரு சில சமாதான வார்த்தை பேசி விஷ்வாவை அமைதி படுத்தினான்..
அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருக்க.. அபி வந்து கதவை திறக்கவும் உள்ளே வந்து அவளை பார்த்தவன்.. "இன்னைக்கு இவ்வளவு அழகா.. சேரி கட்டி.. தலை பின்னி.. அவ ட்ரெஸ்க்கு மேட்ச்சா கம்மல் வளையல்லாம் போட்டு அழகா ரெடியா இருக்கா.. அப்புறம் எதுக்கு இவ்வளவு சோகமா இருக்கா.. என்ன விஷயமா இருக்கும்" என யோசித்தவன்.. உள்ளே சென்று கை கால் கழுவிவிட்டு.. "என்ன அபி, லனச்சுக்கு வர சொல்லி மெஸேஜ் பன்னுனா.. இப்ப ஏன் சைலன்ட்டா நிக்கிறா?" என அர்ஷா கேட்க.. "இல்ல.. அப்படிலாம் இல்ல" என முகத்தில் செயற்கையான புண்ணகையை வைத்து கொண்டு.. கீழே பாயை விரித்தவள்.. அதன் மீது அவள் ஆசையாக செய்த சாப்பாடை சுறத்தே இல்லாமல் எடுத்து வைக்க.. அவள் முகத்தையே பார்த்து கொண்டிருந்தவன்.. "என்னவா இருக்கும்.. ஏன் இப்படி இருக்குறா??" என நினைத்தவன்... அவள் பரிமாறிய சாப்பாடை யோசனையுடனே சாப்பிட்டு முடித்தான்..
நாம்ம ஆசை ஆசையா அவனுக்கு பிடிச்சத சமைச்சி வச்சிக்கிறோம்.. அவன் ஒன்னுமே சொல்லலயே.. அவனுக்கு என்னை பிடிக்காம போச்சி.. அதான் நான் அவனுக்கு சமைச்சத கூட அவன் ரசிச்சி சாப்பிடல" என மனதிர்க்குளே வருந்தியவளை பார்த்தவனுக்கு ஒன்றும் புரியாமல் போனது..
அவளுக்கோ,. "உன்ன டிவோர்ஸ் பன்ன எந்த லாயர பிடிக்கலாம்னு சுத்திட்டு இருக்கான்" என அந்த புதிய நம்பரிலிருந்து தகவலே நினைவில் இருக்க..
"என்ன அர்ஷா.. டிவோர்ஸ்க்கு ஏற்பாடு பன்னிட்டியா??" என அபி கேட்க.. அதுவரை என்னவாக இருக்கும் என யோசித்து கொண்டிந்தவனுக்கு அவளின் கேள்வி கோவத்தை கிளப்ப. கையில் வைத்து தண்ணீர் குடித்து கொண்டிருந்த கண்ணாடி க்ளாஸை மேலே தூக்கி கீழே வீச.. அது சரியாக அபியின் இடது கால் மேல் விழுந்து உடைந்து தெறித்தது..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro